Monday, February 22, 2010

தி புக் ஆஃப் ஈலை


The Book of Eli


சில படங்கள் ட்ரையலர் பார்த்தவுடனே எப்ப படத்தை ரிலீஸ் பண்ணப் போறாங்கன்னு அரிக்க ஆரம்பித்துவிடும். இந்தப் படம் ட்ரயலரில் மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இருந்தார்கள். டென்சல் வாஷிங்டனும், பட்த்தின் செபியா டோன் கலர் க்ரேடிங்கும், கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான சினிமாடோகிராபியும் "சீக்கிரம் படத்த ரிலீஸ் பண்ணுங்கடா"ன்னு ஆர்வத்தை அதீதமாக தூண்டி இருந்தது.

கதையின் அவுட்லைன் இருப்பதால் தெரிய வேண்டாதவர்கள் இங்கேயே நிறுத்திக் கொள்ளவும். நியூக்கிள்யர் யுத்தற்கு பிறகு புல் பூண்டு கூட இல்லாமல் சீரழிந்து தண்ணிக்கு கூட கொலை வெறியோடு அலையும் ஒரு அபோக்ளிப்டிக் அமெரிக்காவில் டென்சல் வாஷிங்டன் லொங்கு லொங்கென்று முதுகு பையில் ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு அலைகிறார். அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாம இருக்கிற பஞ்சத்துக்கு அடிபட்ட ரவுடி கூட்டத்திலேர்ந்து படத்தில் வருகிற பத்துக்கு ஏழு பேர் இந்த என்னம்மோ இந்த புஸ்தகத்தை வைத்து தான் புள்ளக் குட்டிய படிக்க வைக்கப் போகிற மாதிரி இந்த புஸ்தகத்துக்கு அடி போடுகிறார்கள், டென்சலின் கையால் அடி படுகிறார்கள். புஸ்தகம் என்னாச்சு, டென்சல் போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்தாரா என்பதோடு கதை முடிகிறது.

படம் நெடுக இரண்டே விதமான காட்சிகள். ஒன்று வறண்ட அத்துவான காட்டில் பாலைவனமாய் காட்சியளிக்கும் ஒரு ரோட்டில் சண்டை போடுகிறார்கள், இல்லை தடவி தடவி அடியெடுத்து வைக்கும் இருட்டில் கொழ கொழவென்று பேசுகிறார்கள். சப்டைட்டில் இல்லாமல் சில இடங்களில் நாமும் தெவெங்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணும் டென்சலும் ஒரு காட்சியில் ஒரே அறையில் வேறு. அந்தப் பெண் கதவை மூடி விட்டு வருகிறது. அடடா ஒன்னுமே தெரியலையே ஒரே இருட்டா இருக்கே, கிறுக்குப்பயலுங்க மூஞ்சில மட்டும் லேசா லைட்டிங் குடுத்திருக்காங்களேன்னு நமக்கு பிரஷர் ஏறும் போது, வயற்றில் பாலை வார்க்கும் வண்ணம் டென்சல் அந்தப் பெண்ணை "போய் சமத்தா படுத்துக்கோ எதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்"ன்னு அனுப்பி விடுகிறார். அடத் தூ இதுக்கு இந்த லைட்டிங்கே அதிகம்ன்னு நமக்கும் நிம்மதி பிறக்கிறது.

நிற்க படத்தில் டெக்னிகல் சமாச்சரங்கள் மிகப் பிரமாதமாய் இருக்கின்றன. சினிமேட்டொகிராப்பி காட்சி அமைப்புகள் சூப்பராய் இருக்கின்றன. ஆனால் எனக்கு கதை என்னமோ ஓவர் பில்டபாய், கொஞ்சம் இழுவையாய் பட்டது. ஒன்றரை மணி நேர படத்துக்கு நாலு பாட்டு, அதுல ஒன்னு குத்து சாங், ரெண்டு பைட் என்று சப்பையாய் எதிர்பார்காவிட்டாலும் கதை சில இடங்களில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. படம் பிடித்திருக்கிறதா என்றால் படம் பிடிக்காமலில்லை என்று தான் சொல்லுவேன் எனக்கு இருந்த எதிர்பார்ப்பு பூர்தி ஆகாமல் வந்த ஏமாற்றத்தால் சிறிது பிடிக்காமல் இருக்கலாம், இது இல்லாமல் ஒரு வேளை உங்களுக்கும் பிடிக்கலாம். (தலீவா...இதெல்லாம் உங்கிட்டேர்ந்து வந்தது தலீவா...)

நிற்க சில சமயம் ஒரே விஷயங்கள் இரண்டு பேருக்கு ஒரே நேரத்தில் தோன்றலாம். சமீபத்தில் நம்ம கேபிள் சங்கர் எடுத்திருந்த ஒரு குறும் பட நாட் மற்றும் காட்சி அமைப்புடன் கூடிய ஒரு கதையை நான் வேறொரு களத்தில் அதே நாட்டுடன் எடுக்க இங்கே சில பேரிடம் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தேன். நல்லவேளை அதற்கு முன்னால் அவரின் அந்த படைப்பை பார்த்தால் ஒரு வாழ்த்துடன் மேட்டர் முடிந்துவிட்டது. சமீபத்தில் தமிழில் வந்த ஒரு படம் போர்க்களம். அதன் லைட்டிங் மற்றும் கலர் க்ரேடிங் மற்றும் ஒரு முக்கியமான நாட் இந்த புக் ஆஃப் ஈலை படத்திலும் இருக்கிறது. நல்லவேளை அந்தப் படம் இது வருவதற்கு முன்னால் வந்து விட்டது. இல்லை என்றால் போர்க்களம் இந்தப் படத்தின் தழுவல் வழுவல் என்று ஏதாவது பீதியைக் கிளப்பி இருப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை போர்க்களத்தில் அந்த நாட்டை நன்றாக எக்ஸ்சிக்யூட் செய்திருப்பார் டைரக்டர் பண்டி சரோஜ்குமார். புக் ஆப் ஈலையில் அந்த மேட்டர் முக்கிய நாட் இல்லை என்பதால் அது அவ்வளவு அழுத்தமாக சொல்லப் படவில்லை.

சில படங்களை பார்த்துவிட்டு IMDB-ல் போய் பார்த்தால் நிறைய விஷயங்கள் புரியும். இந்தப் படமும் அதே அதே.

21 comments:

Porkodi (பொற்கொடி) said...

as am suffering from severe fever, am taking my puliyodarai-vadai right away.

Porkodi (பொற்கொடி) said...

//நியூக்கிள்யர் யுத்தற்கு பிறகு புல் பூண்டு கூட இல்லாமல் சீரழிந்து//

அப்போ பூண்டு ரசம் வெக்க முடியாதுங்கறீங்க.. எனக்கு வேண்டாம்.

//அடடா ஒன்னுமே தெரியலையே ஒரே இருட்டா இருக்கே//

ஹிஹி.. கூலிங்கு க்ளாஸை கழட்டிட்டு பாருங்க தல.. இதுக்கு தான் வூட்டுக்குள்ளயே போடக் கூடாதுங்கறது. (நான் உங்களை மட்டும் தான் சொல்றேன்)

//தலீவா...இதெல்லாம் உங்கிட்டேர்ந்து வந்தது தலீவா...//

எச்சூஸ்மீ.. கொஞ்சம் தலீவா யாருனு விளக்க முடியுமா?

இப்போ என்ன உங்க மார்க் படி ஒரு தடவை பாக்கலாமா கூடாதா? இல்ல IMDB போதுமா?

sriram said...

இப்போ என்னா சொல்றீங்க, படம் பாக்கலாமா வேண்டாமா??

விக்ரம்லேருந்து ஆயிரத்தில் ஒருவன் வரை எனக்குத் தெரிந்த வரை மிரட்டலான ட்ரெய்லர் கொண்ட எந்த படமும் நல்லா இருந்ததில்ல.

அப்புறம் சில பல பேர் IMDB மட்டும் படிச்சிட்டு விமர்சனம் எழுதறாங்களாமே, அது பத்தி என்னா நெனைக்கிறீங்க...

கேடி : சத்தியமா உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குதுங்க..
இந்த பக்கத்தை ஹோம் பேஜா வச்சிருக்கீங்களா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

கண்ணு வெக்காதீக சாமி.. நானே என்னிக்கோ ஒரு நாள் வடை வாங்கறேன்.. படம் விக்கிலயே தெளிவா பாத்துட்டேன் நானு..

Anonymous said...

இந்தப்படத்துக்கு கொஞ்சம் பில்டப் இருக்கத்தான் செய்யுது. நீங்க பொசுக்குன்னு விமர்சனம் பண்ணியிருக்கீங்க. முடிஞ்சா பாக்கலாம் லிஸ்ட்ல வைச்சுக்கறேன் :)

தக்குடு said...

எதோ சொல்ல வரீங்கனு புரியுது, ஆனா நமக்கு இதெல்லாம் out of sybs . வந்ததுக்கு சுண்டலை குடுத்தீங்கன்னா, நான் போய் கிட்டே இருப்பேன்.....:)

Ananya Mahadevan said...

மீ ஆல்ஸோ, தாம்பூலம் குடுத்தா நானும் தக்குடு கூட கெளம்பிடுவேன்.ஒரு எழவும் புரியல. பொற்ஸ் சொன்ன கூலிங்க்ளாஸ் மேட்டரைத்தவிர!

sriram said...

ஆனாலும் நம்ம மக்களுக்கு இவ்வளவு சாப்பாட்டுப் பிரியம் கூடாது.
ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு ஒரு பதிவு போட்டா, ஒருத்தர் வடை கெட்ச்சாச்சுங்கறாங்க, ஒருத்தர் சுண்டல் கேக்கறார், ஒருத்தர் தாம்பூலம் கேக்கறாங்க, இங்க என்னா நடக்குது???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடு said...

பதிவுலக (பாஸ்டன்)சின்னக்கவுண்டரே! டுபுக்கு அண்ணா ப்ளாக் வரவர நவராத்ரி கொலு மாதிரி ஆயிடிச்சு!.....:)

ambi said...

பிளாக்ல நீங்க போட்ருக்கற படத்தை பாத்தே அட இது போர்க்களம் டெக்ஸ்சர் மாதிரி இருக்கே!னு சொல்லீட்டே வாசிச்சேன். :)

இப்படி தான் ஸ்டார் மூவிஸ்ல பல சீன்களை சட்டுனு பாதில முடிச்சுடுவாங்க. :))

Madhuram said...

Review ellam irukattum. Adhenna IMDB? Adhukku mudhala yaravadhu vilakam sollunga pa.

sriram said...

//பதிவுலக (பாஸ்டன்)சின்னக்கவுண்டரே! டுபுக்கு அண்ணா ப்ளாக் வரவர நவராத்ரி கொலு மாதிரி ஆயிடிச்சு!.....:)//

தக்குடு பாண்டி அவர்களே, என்னோட சிற்றறிவுக்கு இது புரியல, தயவு செய்து வெளக்கவும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடு said...

@ மதுரம்- அப்போ உங்களுக்கு (IMDB)அது மட்டும் தான் புரியலையா???...:)

@ சின்ன கவுண்டர் - வடை,சுண்டல்,தாம்பூலம் = நவராத்ரி கொலு. அனேகமா அடுத்து வரவா யாராவது, பச்சை கலர் ரவிக்கை ஏற்கனவே எங்கிட்ட இருக்கு, மாம்பழ கலர் ரவிக்கை வச்சு தாங்கோ!னு கேக்கப்போறா!!...:)

shubakutty said...

clap clap. happy to have such a intelectual guy as my frd. அச்சூ, இர்ருக்குற வேலையில இந்த படத்தை யெப்படி பார்க்க?????
you made me very curious

Porkodi (பொற்கொடி) said...

Madhuram, IMDB is internet movie database.. :) imdb.com poi parunga..

shubakutty said...

ok, da! porkodi

Porkodi (பொற்கொடி) said...

ada kadavule.. shubhakutty madhuram thaanaa? ennangada idhu pudhu kadhaiya irukku!

Dubukku said...

பொற்கொடி - (பாருங்க நான் மட்டும் தான் உங்க பெயர கரெக்டா சொல்றேன்) ஒக்கே வடை க்ராண்டட். ஓ கூலிங் க்ளாஸை கழட்டிட்டுதான் பார்க்கனுமா...தேங்க்யூ என்னோட அறிவுக் கண்ணை திறந்து வைச்ச பெருமையை இப்படி அநயாசமா தட்டிட்டு போய்ட்டீங்களே கங்ராஜுலேஷன்ஸ்

ஸ்ரீராம் - படம் பார்க்கலாம்ன்னா பார்க்லாம் வேண்டாம்னா வேண்டாம்ன்னு சொல்ல வரேன். //அப்புறம் சில பல பேர் ஈMDB மட்டும் படிச்சிட்டு விமர்சனம் எழுதறாங்களாமே, அது பத்தி என்னா நெனைக்கிறீங்க...// - இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க :)) //சத்தியமா உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குதுங்க..// - யோவ் கல்லால வர்ற ஒன்னு ரெண்டு கஸ்டமர் பிசினெஸ்ஸையும் கெடுக்காதீங்கையா !!!

சின்ன அம்மணி - //முடிஞ்சா பாக்கலாம் லிஸ்ட்ல வைச்சுக்கறேன் :)// அதே அதே அதத் தான் நானும் சொல்ல வந்தேன்...மிக்க டாங்க்ஸ்

தக்குடு - டேய் நீ இன்னும் அந்த சுண்டல் வாங்குரத நிப்பாட்டலையா?? :))

அநன்யா - ஆஹா நீங்களுமா...ச வர வர நம்ம ப்ளாக் நவராத்திரி கொலு மாதிரி ஆகிடிச்சு

ஸ்ரிர்ரம் - //ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு ஒரு பதிவு போட்டா, ஒருத்தர் வடை கெட்ச்சாச்சுங்கறாங்க, ஒருத்தர் சுண்டல் கேக்கறார், ஒருத்தர் தாம்பூலம் கேக்கறாங்க, இங்க என்னா நடக்குது???/// -அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க ஒருத்தர் தாங்க என் வருத்ததை கரெக்டா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க :)

அம்பி - ஓ ஸ்டார் மூவிஸ் இன்னும் திருந்தலையா...சை வாட அ பிட்டி

மதுரம் - யெக்கொவ் அது இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் ...எல்லா படத்தைப் பற்றிய்ம் ஒரு அத்தாரிட்டெட்டிவான சைட்

சுபாக்குட்டி- அவ்வ்வ்வ்வ்வ் என்ன புத்திசாலீன்னு சொல்லிட்டீங்க....ஓ.கே இத நான் அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கறேன் :))

பொற்கொடி - இதென்ன புதுக் குழப்பம்...எனக்குத் தெரிஞ்சு மதுரம் வேற சுபாக்குட்டி வேற. இவங்க அவங்க இல்லை... அவங்க சும்ம உங்களுக்கு ஓ.கே சொல்லியிருக்கலாம் :))

போகி - மிக்க நன்றி ஹை ...அப்படியே போஸ்டர் ஒட்டினதுக்கு காச வெட்றது :))

Dubukku said...

பொற்கொடி - //எச்சூஸ்மீ.. கொஞ்சம் தலீவா யாருனு விளக்க முடியுமா?
//
-என்னாது தலீவர் யாரா....தி ஒன் அன்ட் ஒன்லி கமலஹாசன்

Madhuram said...

Porkodi, I'm not shubhakutty. Aana enga veetula enna madhukutty nu koopiduvaanga.

ராம்ஜி_யாஹூ said...

தமிழ் படங்கள் தான் சரி இல்லை நினைச்சோம்.
இப்போ ஆங்கிலப் படங்களும் இப்படிதான

உங்க தலைவர் சிம்பு நடிச்ச விண்ணை தாண்டி வருவாயா பற்றி எழுதுங்க

Post a Comment

Related Posts