Sunday, February 07, 2010

அஞ்சு பைசா பைத்தியம்

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே அவர் எங்கள் ஊரில் தான் இருந்து வந்தார். மிக கசங்கி, ஏகப்பட்ட கறைகளோடு இரண்டே பட்டன்களோடு சட்டை. கலைந்து தாறுமாறாக இருக்கும் நரைத்த முடி. ஒரு வாரம் சவரம் செய்யாத வெள்ளை குறுந்தாடி. வேஷ்டியிலும் ஏகப்பட்ட காப்பி கறை இருக்கும். கோனலாய் கட்டியிருந்தாலும் முக்காவாசி நேரம் மடித்து தான் கட்டியிருப்பார். அவரோடு இயற்பெயர் தெரியாது, ஆனால் எல்லாரும் அவரை ஊரில் ‘அஞ்சு பைசா பைத்தியம்’ என்று தான் கூப்பிடுவார்கள்.

ரோட்டில் ஒருத்தரை விடமாட்டார். "சார் ஒரு அஞ்சு பைசா இருக்குமா...அஞ்சே பைசா தான்...இருக்குமா பாருங்க சார் அஞ்சே பைசா" கூடவே ரொம்ப நேரம் வருவார்.. தப்பிப்பதற்காக கடைக்குள் ஏதாவது ஏறினாலும் விடமாட்டார். திரும்ப திரும்ப இதையே சொல்லிக் கொண்டிருப்பார். இவரின் தொல்லை தாங்கமுடியாமல் வெளியூர்காரர்கள் எதாவது சில்லரையை குடுத்து அனுப்பிவிடுவார்கள். உள்ளூர்காரர்கள் சட்டையே செய்யமாட்டார்கள். அவரும் சளைக்காமல் அரை மைல் தூரம் வரை கூட வந்து பார்ப்பார். காலேஜ் மாணவர்களை கூட விட மாட்டார். கேட்பது தான் அஞ்சு பைசா கேட்பாரே தவிர எத்தனை பைசா குடுத்தாலும் வாங்கிக் கொள்வார்.

"டேய் அவர அவாய்ட் பண்ணன்னும்னா ஒரு ஈஸியான வழி இருக்கு...வெத்து பேப்பர்ல கையெழுத்து போடறீயான்னு கேளு அந்த ஆள் ஓடி போய்டுவான்"ன்னு ஒரு நண்பன் என்னிடம் சொன்னான். ஒரு வேளை அடித்துவிட்டால்...என்று கொஞ்சம் உள்ளூர பயத்தோட சொல்லிப் பார்த்தேன். ஓடியெல்லாம் போகவில்லை....ஒரு நிமிடம் அஞ்சு பைசா புராணத்தை விட்டுவிட்டு தீர்க்கமாய் என்னைப் பார்த்தார். அப்புறம் எதுவும் பேசாமல் நடந்து போய்விட்டார்.

"அம்பி அவர் கணக்குல பெரிய சூரப்புலி ஏதாவது சந்தேகம்னா கேட்டுகிடலாம்...போஸ்ட் ஆபிஸுல அக்கவுண்ட்லாம் வெச்சிருக்காரு தெரியுமா" என்று சிவா ஸ்டோர்ஸ்காரர் சொல்லுவார்.

"அந்த ஆள் ப்ராடு...பைத்தியமெல்லாம் இல்லை...சும்மா ஊர ஏமாத்திட்டு பைத்தியம் மாதிரி திரியறான். நல்லா இங்கிலீஷ்லாம் பேசுவான் .."

"சே... சே... அந்த ஆள் பாவம்..ரொம்ப பைத்தியம் இல்லாட்டியும்...ஏதோ சித்தபிரமை பிடிச்சு இப்படி அலயறார்...."

இரண்டு விதமாயும் அவரை பற்றி கருத்துகள் ஊரில் நிலவும். மாமாவுடன் செல்லும் போதெல்லாம் அந்த ஆள் தென்பட்டால் மாமா அவருக்கு விஷ் பண்ணுவார்.அவரும் மாமாவிற்கு திரும்பவும் விஷ் பண்ணுவார்.

"யாரோ அவர் கிட்ட வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி ஏமாத்திட்டா அதுனால தான் இப்படி ஆகிட்டார்ன்னு சொல்றாளே அப்பிடியா" என்று மாமாவிடம் ஒரு நாள் கேட்டேன்.

" தெரியலை ...நல்ல மனுஷன் பாவம் என்ன கஷ்டமோ இப்படி ஆகிட்டார்..அவரோட சொந்தக்கார்கள் சொத்து விஷயத்துல எமாத்திட்டான்னு சில பேர் சொல்றா...சில பேர் வியாபார நஷ்டத்துனால இப்படி ஆகிட்டார்ன்னு சொல்றா எது உண்மை தெரியலை...ஆனா நல்ல நாலெட்ஜிபிள் மேன்"

ஒரு நாள் ஹெட் போஸ்ட் ஆபிஸிற்கு வேலையாக சென்றிருந்த போது அங்கு அஞ்சு பைசா பைத்தியம் யாருக்கோ பாரம் பூர்த்தி செய்ய உதவி செய்து பைசா வாங்கிக் கொண்டதைப் பார்த்தேன். போஸ்டல் ஆர்டர் எடுக்க பாரம் எங்க இருக்குன்னு அவரிடம் போய் கேட்டேன். உடனே "அஞ்சு பைசா இருக்குமா"ன்னு ஆரம்பித்துவிட்டார்.

அதற்கடுத்த வாரம் மெயின் ரோடுக்கு போன போது மண்டையில் சின்ன கட்டுடன் அஞ்சு பைசா புராணம் பாடிக்கொண்டிருந்தார். பஸ்ஸ்டாண்டில் யாரோ அடித்துவிட்டதால் கட்டு என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். என்னவோ எனக்கு மனதில் ரொம்ப பதிந்துவிட்ட பெர்சனாலிட்டிகளில் ஒருவராய் இந்த அஞ்சு பைசா பைத்தியம் ஆகிவிட்டார்.

அதற்கப்புறம் நான் சென்னைக்கு படிக்க வந்து விட்டேன். அப்புறம் ஊருக்கு லீவுக்கு போன போதெல்லாம் அஞ்சு பைசா பைத்தியத்தைக் காணவில்லை. "யாரு கண்டா இங்க தான் எங்கயாவது சுத்திண்டு இருக்கும்"ன்னு யாருக்கும் தெரியவில்லை. சென்னையில் வேலை கிடைத்து ஒரு முறை லீவுக்கு போயிருந்த போது ரொம்ப நாள் கழித்து திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டில் அஞ்சு பைசா பைத்தியத்தைப் பார்த்தேன். அதே கோலத்தில் தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்த போது கிளம்பிக் கொண்டிருந்த பஸ்ஸில் "நல்லா படிம்மா என்ன" என்று யாரையோ வழி அனுப்பிக் கொண்டிருந்தார்.

எனக்கு ஆர்வம் கொப்பளிக்க அவரை நோக்கி வேகமாய் நடந்தேன். பெயர் தெரியாததினால் அவர் தோளைத் தொட்டு கூப்பிடலாமா என்று குழப்பமாய் இருநது. எப்படி அறிமுகப் படுத்திக் கொள்வது என்று தயக்கமாகவும் இருந்தது. சில விநாடிகளில் அவரே என் பக்கம் திரும்பினார்.

"... எப்படி இருக்கீங்க..?"

"..."

"நியாபகம் இருக்கா என்ன..."

"சார் ஒரு அஞ்சு பைசா இருக்குமா...அஞ்சே பைசா தான்...இருக்குமா பாருங்க சார் அஞ்சே பைசா தான் சார்....கொஞ்சம் பாருங்க சார்....."

40 comments:

sriram said...

நாந்தான் போணியா?? வியாபாரம் நல்லா போகுமா??
படிச்சிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன்

sriram said...

டுபுக்கு..
எப்படி இப்படியெல்லாம், நானும் கொஞ்ச நாளா கிறுக்கிப் பாக்கறேன் (நானெல்லாம் எழுதறேன்னு சொல்லக் கூடாது), இந்த மாதிரி - படிக்கறவங்க மனசத் தொடற மாதிரி - ஒரு Impact Create பண்ற மாதிரி - எழுதவே முடியலயே ஏன்?
ஆன்லைன் டியூஷன் எடுக்க முடியுமா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

sriram said...

இது நெஜமோ புனைவோ (அப்படின்னா என்னாங்க, எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் சொல்றேன்) எனக்குத் தெரியாது, நியாபகம் இருக்கா என்ற கேள்விக்கு அவர் தெளிவா பதில் சொல்லிட மாட்டாரான்னு எதிர் பார்த்தேன், ஏமாந்தேன்.. ஆனால் எழுத்தாளராக நீங்க வெற்றி அடைஞ்சிட்டீங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

கேடி.. இந்த பதிவ கலாய்க்க முடியுமா ஒங்களால

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

indha madhri ooruku 4 peru irupanga polarku.. :(

dubukku boss, paarunga naan paatuku padichutu silenta yosanaila moozhgi irundhen,

//இந்த பதிவ கலாய்க்க முடியுமா ஒங்களால// - nu indha aalu thaan ennai vambu izhukarar.. idhula kedi nu enaku pattam vera! :O

(sriram, ungluku munnadiye padichutten, ana eno comment poda thonala! enoda comment pottu posta dishonor paniduven nu oru bayam..)

dubukku, pona postla oruthar sonna madhri, neenga adikadi post panradhu romba sandhoshama iruku!

Porkodi (பொற்கொடி) said...

5 paisa paithiyathai edavadhu homela serka muyarchi panningla dubukku? illa avar andha categoryla sera maatara? enga areala oru pookara akka tsunamiku apram ipdi agitanga.. :'(

indha postoda speciality - unga usual "special vocabulary" edhuvume illa, still very touching! :)

பினாத்தல் சுரேஷ் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

அவரைப் பத்தி ஒரு ஃப்ளாஷ்பேக் வருமோன்னு பயந்துகிட்டிருந்தேன் :-) நல்லவேளை அவாய்டிட்டீங்க :)

Ananya Mahadevan said...

அருமையான பதிவு டுபுக்கு.. பஸ் ஸ்டாண்டு காட்சி நச்.

தக்குடு said...

எங்க ஊர்ல ஒரு 50 பைசா பைத்தியம் உண்டு M.A(Eng.lit)படுச்ச ஆளு வேற,எங்க அம்மாட்ட கூட பாத்தியா? English அதிகமா படுச்சா இப்படித்தான் ஆவா போலருக்கு!னு அலந்து விட்ருக்கேன். இவர் 50 பைசா தவிர எதுவும் வாங்க மாட்டர், ஒரு தடவை நான் ஒரு ரூவா கொடுத்ததுக்கு மிச்சம் 50 பைசா எனக்கு தந்துட்டார்...:) இதுல காமடி என்னன்னா? அவர் மிச்சம் தரும் போது எல்லாரும் பாத்துட்டு ஏன்டா!அவன்ட போய் ரூவாயெல்லாம் வாங்கரை?னு எனக்கு அட்வைஸ் வேர

Ramya said...

Hi,
I am also from Ambai and have been following your blog for quite a long time. Your style of writing is very good.

I've seen this 'anju paisa person' in library reading 'The Hindu' once or twice. Heard that his real name is Kasthoori;not sure about that though....

ambi said...

ம்ம், சில நேரங்களில் சில மனிதர்கள்.

அந்த நபர் தான் ஒரு மாறுவேட போட்டிக்கு உங்களுக்கு இன்ஸ்பிரேஷன்னு நினைக்கறேன், ரைட்டா? நெஜமா கலாய்க்கலை, ஒரு ஆர்வத்துல கேக்கறேன்.

ambi said...

//கேடி.. இந்த பதிவ கலாய்க்க முடியுமா ஒங்களால//

//indha madhri ooruku 4 peru irupanga polarku//

ஒன்னுமில்ல, சும்மா சேர்த்து படிச்சு பாத்தேன். அவ்ளோ தான். :p

ஸ்ரீராம், நீங்க இவ்ளோ அப்பாவியா? இப்பவும் சொல்றேன், கேடி கேடி தான். :))

Anonymous said...

ஒரு அஞ்சு பைசா இருக்குமா...அஞ்சே பைசா தான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டுபுக்கு சார்..

நல்ல பதிவு..
எப்படி சார் இதெல்லாம்?..
அடுத்த பதிவு எப்ப சார்..?

அப்புறம் சார்......
ஒரு 5 பைசா கிடைக்குமா ..?

Anonymous said...

But ena sola varenga..avalo va edupadle..sorry Dubuku

B o o said...

ennamo ponga! :(

Porkodi (பொற்கொடி) said...

Missssss! naan pesave illa miss! indha ambi thaan..! :P

துபாய் ராஜா said...

இன்றும் கல்லிடையில் ஐம்பது பைசா கேட்டும், வி.கே.புரத்தில் ஒரு ரூபாய் கேட்டும் இரண்டு பேர் சுற்றி கொண்டிருக்கிறார்கள். :((

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு.

சீரியசான சென்டிமென்டான பதிவும் எழுத தெரியும், பன்முக படைப்பாளி என்று மீண்டும் நிரூபித்து உள்ளீர்கள்.

பாரதிராஜா படம் போல, இறுதியில் மெசேஜ் வைத்து இருக்கலாமே.
வரும் தலைமுறை யாவது (வரும் காலங்களில்) இந்த மாதிரி மன நலம் பாதிக்க பட்ட மனிதர்களை பொது இடங்களில் கண்டால், மன நல காப்பகங்களில் சேர்க்க வலி செய்யலாம்.

ஆடுமாடு said...

அண்ணேன். இவரை எனக்கு நல்லா தெரியும். நீங்க சென்னைக்கு போன பிறகு, இவர் கேட்டது 'பத்து பைசா...'. பேங்க்ல நிறைய பணம் வச்சிருக்காருன்னும் சொல்வாங்க.

பரபரன்னு அவர் வேகமா வாரதை பார்த்தா பாவம் மாதிரியும் இருக்கும். சின்ன பையனா இருந்தப்பா, அம்மா கூட தாசிஸ்தார் ஆபிஸ் போகும் போதெல்லாம் (பென்சன் வாங்க) இவருதான் ஃபார்ம் பில் பண்ணி தருவார்.

நல்ல மனுஷன். இப்பலாம் அவரை பார்க்க முடியலை.

மன்மதக்குஞ்சு said...

எங்க மாமியார் ஊர்ல இதே மாதிரி ஒருத்தன் இருக்கான். அவன் பேரு "மணியாட்டி". நெறய ட்ரெஸ் போட்டிருந்தாலும், இடுப்புக்கு கீழ் பெயற்க்காரணத்திற்கேற்ப சேட்டை செய்து கொண்டிருப்பான். சின்னப்பசங்க அவனை சூழ்ந்து கொண்டு மணியாட்ட சொல்லவும், அவன் அவன் அதை 'கண்ணியமாக' செய்து முடித்து காசு கேட்பதும், வீட்டம்மைகள் ஜன்னல் வழியாகவும், வாசலுக்குள்ளிருந்தும் இருந்து பசங்களை விரட்டி விடுவதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

:))


அன்புடன்
கார்த்திக்

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

ரெண்டு said...

Hello Mr.Dubukku,
Find the compiled work on நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு in the following scribd page.

http://www.scribd.com/doc/26675267/Dubukku-Cricket

Pls provide your comments and objections if any.

Thanks,
ramanathan - xpotentialram@gmail.com

balutanjore said...

dear dubuks

onnang class

ambai suj....

vendam vendam neengathan romba

kochukarele.(any way fine work)

balu vellore

Porkodi (பொற்கொடி) said...

hahaha.. balu vellore, konjam unga kaiya kudunga.. :))

ambi said...

balu, kaiya kudukaatheenga, unga modhiram jaakradhai illaatti kodi kaiya kadichruvaa. :))

Boston sriram udane sombudan medaikku varavum. :)

sriram said...

யோவ், பிரச்சனை உங்களுக்குள்ள, இதில என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க???

நானும் சீனியர் ரங்காவும் உ.பி.ச க்கள், எங்களுக்குள்ள மூட்டி விடுற பாச்சா பலிக்காதுண்ணேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

அலாவ்வ்வ்.. யாராச்சும் இருக்கீங்களா?

Porkodi (பொற்கொடி) said...

அம்பி, கைய குடுத்தா மோதிரம் போட்டு அனுப்புற பரம்பரைல வந்தவ நான்.. என்ன பாத்து????

//நானும் சீனியர் ரங்காவும் உ.பி.ச க்கள்//

கிகிகி..! என்ன பாஸ்.. அது உங்க ஆசை, அதுக்காக சந்திரமுகி மாதிரி நீங்களாவே அதை உண்மைனு கற்பனை பண்ணிக்க கூடாது. :D

SurveySan said...

அருமையா வந்திருக்கு.

தக்குடு said...

//யோவ், பிரச்சனை உங்களுக்குள்ள, இதில என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க???//

இல்லை பாஸ்டன் தலைவா! இன்னிமே எங்க பிரச்சனை என்றாலும் பஞ்சாயத்து பண்ண உங்கள கூப்பிடுவதுனு முடிவு பண்ணியாச்சு! நீங்கதான் இனிமே பதிவுலக 'சின்னக்கவுண்டர்'...:)

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

Dubukku said...

ஸ்ரீராம் - அப்பாடி...இந்த் தரம் போணி கரெக்டா பண்ணியிருக்கீங்க :)) ஹி ஹீ நாட்டாமை வாயால பிரம்மரிஷி பட்டமா.,:))) சந்தோசமப்பூ. இது நிஜம் தான் புனைவு (பிக்க்ஷன்) அல்ல

பொற்கொடி - ஆமா இவர் எனக்கு ரொம்ப மனசுல பதிஞ்சிட்டார்... அடிக்கடி போஸ்ட் பண்ணனும்னு ரெசல்யூஷன் :))) மிக்க நன்றி. இப்போதைக்கு அவர நான் பார்க்கவே இல்லை. இது நடந்தது பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னால்

அநன்யா - மிக்க நன்றி ஹை

தக்குடு - கல்லிடைக்குறிச்சில பைத்தியங்களுக்கா குறைவு ;P ஏகப்பட்டது இருக்கு

ரம்யா - வாங்க வாங்க அம்பையா நீங்களும்...ரொம்ப சந்தோஷம். அவர் பெயர் கஸ்தூரியாய் இருக்கலாம்...எனக்கும் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு

அம்பி - அடுத்த பதிவே அதைப் பத்தி தான் கரெக்ட்டா நீயும் பாயிண்ட பிடிச்சிட்ட :)))

அனானி - :))

பட்டாபட்டி - வாங்க சார்...மிக்க நன்றி சார்..அடுத்த பதிவு இதோ போட்டாச்சு சார் :))

அனானி - கருத்து எதுவும் இல்லீங்கோவ்...சும்மா ஒரு பகிர்வு அவ்வளவு தான். என்னங்க உங்க மனசுல பட்டத பட்டுன்னு சொன்னீங்க...மிக்க நன்றி இங்க என் ப்ளாக்ல அதுக்கு கவலையே படாதீங்க...இதுக்கெல்லாம் சாரி தேவையே இல்லை :))

பூ - ஏங்க உங்களுக்கும் பதிவு பிடிக்கலையா :)

துபாய் ராஜா - சே..பாவம்...நீங்க அடிக்கடி ஊருக்கு போவீங்களா...

குப்பன் - பன்முக படைப்பாளிலாம் இல்ல...எனக்கும் பல்வேறு ஜெனரில் எழுத ஆசை அவ்வளவு தான். மெசேஜ் எதுவும் இந்தப் பதிவில் இல்லை ஆனால் நீங்க சொன்ன மெசேஜ் நன்றாக இருக்கிறது

ஆடுமாடு - அவரே தான். ஆமாம் நானும் இப்போதைக்கு அட்லீஸ்ட் ஒரு பத்து வருடங்களில் அவரைப் பார்த்தது இல்லை

மன்மதக் குஞ்சு - கொஞ்சம் விவகாரமான உதாரணம் தான் :))

அனானி - எல்லாத்துக்கும் ஸ்மைலியா இல்லை கட் அன்ட் பேஸ்டா :)))

ஹென்ரி - நன்றி ஹை

ராமனாதன் - மெயிலில் சொன்ன மாதிரி மிக்க நன்றி இந்த தன்னலம் இல்லாத உதவிக்கு. கடமைப்பட்டுள்ளேன்.

பாலு - மிக்க நன்றி ...பாருங்க நீங்க பாதி சொன்னதுக்கே இங்க எத்தனை நக்கல் நையாண்டி பாருங்க :))

பொற்கொடி - பாலு நான் அவருக்கும் முந்தைய பதிவுகள்ல சொன்னத வைச்சு அப்படி சொல்றார், நீங்க சொன்னத வைச்சு இல்லை :)))0

ஸ்ரீராம் - யாருப்பா ஸ்ரீராமை கலாய்க்கறது....அம்பி ஸ்டேன்ட் அப் ஆன் த பெஞ்ச்...

பொற்கொடி - இதோ இருக்கோம்

சர்வேசன் - மிக்க நன்றி தல

அன்புடன் அருணா - மிக்க நன்றி. (முதல் முறை வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்)

Unknown said...

Nice read! thx

தக்குடு said...

//கல்லிடைக்குறிச்சில பைத்தியங்களுக்கா குறைவு ;P ஏகப்பட்டது இருக்கு// 1 2 3 மைக் டெஸ்டிங்! Mrs.டுபுக்கு எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்!

துபாய் ராஜா said...

இந்த மாசக் கடைசியில் ஊருக்கு போறேன் அண்ணாச்சி... :))

Madhuram said...

Munnellam SUN TV la Kadhai Neram nu onnu varum gyabagam irukka? Andha series la vara madhiri irukku. Super.

yuvaraj said...

nice

Sh... said...

Inga oruthanga sonnanga - oorukku oruthar ipdi iruppangannu. Inda post paathu na shock aayitten. Chennai-la enga area la oruthar ide madiri than. Enga veetla avara 10 paisa paithiyam nu solluvanga aana avaru 10 paisa lam kekkamattaru. Enna kuduthalum vaangipparu. He was very intelligent and had good command over English. He always used to munch betal leaves/nuts. Elders at home used to say that he was one of the heirs of a property (may be the one where I lived) and his relatives cheated him on that and that was the reason for him to behave so.

ennamo ponga, ida padichu romba feel pannitten.

Post a Comment

Related Posts