Monday, February 01, 2010

வெட்டி பந்தா

ஸ்கூல் பருவமும் பந்தா விட்டுக்கொள்வதும் ரசவடை மாதிரி. ஊறிப் போன ஒரு விஷயம். அப்போது க்ரிகெட் வீட்டுக்கு வீடு வாசப்படி. எனக்கு க்ரிக்கெட் விளையாட பிடிக்குமே தவிர பார்ப்பது அவ்வளவாக வராது. நம்ம நியாபக சக்திக்கு பதினோரு பெயரை நியாபகம் வைத்துக் கொள்வதே பெரிய விஷயம் இதில் ஊர்பட்ட டீமில் உள்ள ஆளையெல்லாம் சென்சஸ் எடுக்க முடியாது என்பதால் 'இன்னிக்கு எனக்கு மேத்ஸ் போடனும்டா" என்று சொல்லிவிட்டு டி.டியில் போடும் ‘முஜே பச்சாவ்’ அரத ஹிந்தி படத்தை பார்க்க உட்கார்ந்துவிடுவேன்.

இருந்தாலும் அரட்டை கச்சேரிகளில் கூட்டத்தோட கோவிந்தா போடுவதற்காக, இந்தியா விளையாடும் ஏதாவது ஒன்னு ரெண்டு மேட்ச்சை பார்த்துவிட்டு "சேட்டன் ஷர்மா இருந்தாலும் யார்க்கர் போட்டிருக்கவேண்டாம்டா"ன்னு நம்ம கருத்தையும் ஆவணத்தில் ஏற்றிவிடுவேன். கிங்பெல் மட்டும் ப்ராட்மேன், சோபர்ஸ் கீபர்ஸ்ன்னு ஆதியிலிருந்து அந்தம் வரைக்கும் பிரித்து மேய்வான். அங்கேயும் " ஆமாமா அவங்களெல்லாம் க்ரேட் ப்ளேயர்ஸ்...சிறந்த திறமைசாலிகள்"ன்னு அதிலும் மேஜர் சுந்தராஜன் மாதிரி நம்ம கருத்தை ஏத்திவிடுவேன். இதற்கடுத்தகட்ட பைத்தியமாய் பையன்கள் விளையாட்டு வீரர்களின் ப்ளோ அப் படங்களை வீட்டில் மாட்டி வைப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழ்களில் வரும் வழ வழ பேபர் ப்ளோ அப் மிகப் பிரசித்தம். எங்கவீட்டில் நாங்க வாரமலர் மட்டும் தான் கடன் வாங்கிப் படிப்போம் என்பதால் இந்த ப்ளோஅப் எல்லாம் எட்டாக்கனி.

இந்த காலக் கட்டங்களில் நண்பன் ஒருவன் டென்னிஸை அறிமுகப் படுத்தினான். முதல் மேட்ச்சே விமன்ஸ் டென்னிஸ் செமிஃபைனல்ஸ். ஆகா என்னாமா விளையாடுகிறார்கள்...இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கேன்னு நானும் ஜோதியில் ஐய்க்கியமாகிவிட்டேன். அதிலும் நமக்கு பிடிச்ச ஒரு ஆளை சப்போர்ட் செய்யவேண்டும் என்று மோனிகா செலஸை இஷ்ட தெய்வமாகிக் கொண்டு விட்டேன். எனக்கு என்னவோ ஆண்கள் டென்னிஸ் அவ்வளவு பிடிக்கவில்லை. என்னைச் சொல்லி குற்றமில்லை...வீணாப் போனவர்கள் பெண்கள் மாதிரி அவ்வளவு விறுவிறுப்பாக விளையாடாததால் இருக்கலாம்.

"டேய் மோனிகா செலஸ் படம் கிடைச்சா ஒன்னு லவட்டி குடுடான்னு தெரிவில் சீனாதானா மாமா தவிர எல்லாரிடமும் நாயாய் பேயாய் கெஞ்சி டீல் போட்டு வைத்திருந்தேன். நம்ம யோகம் மோனிகா சிக்கவே இல்லை. "டேய் என்னோட கலெக்க்ஷன்ல கடைசியா இது ரெண்டு தான் இருக்கு வேணும்னா வெச்சிக்கோ ஏதோ புட்பால் ப்ளேயர்ஸ்ன்னு நினைக்கிறேன்"ன்னு கிங்பெல் உப்புக்கு ரெண்டு படத்தை குடுத்தான். மோனிகா வாழ வேண்டிய புக் ஷெல்பில் அரை ட்ராயரை போட்டுக்கொண்டு தொடையில் ரெண்டு கோழியை ஒளித்து வைத்துக் கொண்டது மாதிரி இருக்கும் இந்த காட்டான்களையா மாட்டுவது என்று எனக்கு ஏக வருத்தம். அதை விட கொடுமை அந்த படத்தில் இருப்பது யாரு என்பது கூட தெரியாமல் படத்தை பந்தாவாக மாட்டி வைத்திருந்தது தான்.

அடுத்த வாரம் சீனாதானா மாமா வீட்டிற்கு வந்த போது "சபாஷ் உன்னோட டேஸ்ட நான் ரொம்ப பாராட்டுறேன்...எல்லாரும் க்ரிக்கெட் க்ரிகெட்ன்னு பைத்தியமாய் அலையும் போது நீ வித்தியாசமாய் புட்பால் ரசிகனாய் இருக்க பாரு இது ரொம்ப பிடிச்சிருக்குன்னு " ஒரே பாராட்டு மழை. எங்க அவர் இந்த ஆளப் பத்தி சொல்லுன்னு சொல்லிவிடுவாரோன்னு எனக்கு ஒரே பயம். "ஹீ ஹீ ஆமாம் மாமா எனக்கு புட்பால்னா ரொம்ப ஆசை...நம்மூர்ல சரியான க்ரவுண்டே இல்லை எல்லாம் ஒரே குழியும் குட்டையுமா இருக்கு...கார்ப்பரேஷன்ல சொல்லனும்"ன்னு எதோ சமாளித்து கொண்டிருந்தேன். "ஓய் உம்ம பையனுக்கு நல்ல டேஸ்ட்... மாட்டி வைச்சிருக்கிறது யாரு தெரியுமோ....பீலே!!! லேசுப்பட்ட ஆளில்லை ஓய்....மிகப் பெரிய புட்பால் லெஜென்ட்...ப்ரெசிலியன்"ன்னு மாமாக்கு சினா தானா மாமா பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது தான் இது நாள் வரைக்கும் படம் காட்டி பீலா விட்டுக்கொண்டிருந்தது பீலேன்னு தெரிந்தது.

நான் மாடியிருந்த படத்திலிருந்த அந்த இன்னொரு ஆள் யாருன்னு இன்று வரை தெரியாது. டென்னிஸை அறிமுகப் படுத்திய நண்பன் என் பிறந்த நாளுக்கு மோனிகா செலஸ் ஸ்போர்ட் ஸ்டார் ப்ளோ அப்பை மனவுந்து தர, குட்டைப் பாவாடையை போட்டுக் கொண்டு மார்க்கமாய் இருக்கும் மோனிகா செலஸ் படத்தை நம்ம புக் ஷெல்பில் ஒட்டினால் மாமா ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோன்னு பயம். "டேய் நீ என்ன மோனிகா செலஸ மருமகளாவா ஏத்துக் கொள்ளச் சொல்லப் போற...இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேட்டுக்கிட்டு...புஸ்தகத்த வெச்சு மறைச்சிடுடா"ன்னு கூட இருந்த ஒரு ஐடியா மணி வாரி வழங்கி, மோனிகா புஸ்தகத்தின் பின்னாலிருந்து ரொம்ப நாள் அருள் பாலித்துக் கொண்டிருந்தாள்.

ஜப்பான்காரர்கள் எல்லாரும் ஜூடோவில் பெரிய ஆள், சைனாக்காரர்கள் எல்லாரும் கராத்தேவில் பெரிய ஆள் என்ற உலக கோட்பாடின் படி இந்தியாவில் இருப்பவர்களெல்லாம் கிரிகெட்டில் பிஸ்துன்னு இங்கு இங்கிலாந்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆபிஸில் கட்டிடம் மாறிய புதிதில் ஒரு பெரிய தலையின் செக்ரட்டரி பக்கத்தில் உட்கார்ந்திருந்ததால் சும்மா பேச்சு பழக்கம். "அப்போ நீ பெரிய க்ரிக்கெட் பைத்தியமாய் இருப்பாயே ஒரு மேட்ச் கூட விடாம பார்ப்பியே...ஒருத்தர் விடாம ஜாதகத்த நோட் பண்ணி வைச்சிருப்பியே...எனக்கு க்ரிகெட் சுத்தமா தெரியாது"ன்னு அந்த மகராசியே எடுத்துக் குடுக்க, காசா பணமா..."ஹீ...ஹீ...ஆமா பின்ன....இருக்காதா...உங்களுக்கு வேற க்ரிகெட் தெரியாது....அப்போ எனக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்கனும் ... க்ரிகெட்னா எனக்கு உயிரு.... இவ்வளவு ஏன் க்ரிகெட்ன்னு சொன்னாதான் நான் தண்ணியே குடிப்பேன்னா பார்த்துக்கோங்களேன்" ஏகத்துக்கு எடுத்துவிட்டிருந்தேன்.
முன்னொரு நாளில் இங்கே ட்ரெயினில் கபில் தேவை சந்திக்க நேர்ந்தது. எந்த பந்தாவுமில்லாமல் மனுஷன் சகஜமாய் பேசிக் கொண்டு வர...எதுக்கும் இருக்கட்டும்ன்னு அவருடன் நிறைய போட்டோ எடுத்து வைத்திருந்தேன். அதை ஊருக்கு போயிருந்த போது ஊரில் காட்டிய போது "ஐ....இவரா இவர எனக்குத் தெரியுமே...இவர் முன்னாடி பூஸ்ட் விளம்பரத்துக்கு வருவாரே அவர் தானே"ன்னு நான் காட்டிய கூட்டமெல்லாம் எனக்கு மேல் அப்பரசன்டியாய் இருந்தது. கபில் தேவை சந்தித்தது பற்றியும் அம்மணியிடம் அளந்து விட்டிருந்தேன்.


மிக சமீபத்தில் ஆபிஸில் இரண்டு நாள் ஆப்சைட். ஆபிஸ் செலவில் வெளியூரில் தங்கி, நல்ல சாப்பிட்டுவிட்டு, டீலெக்ஸ் ரூம் போட்டு யோசித்து ஆபிஸை முன்னேறுவது எப்படின்னு வொர்க் ஷாப். போவதற்கு முந்தின நாள் நம்ம பெரிய தலை செகரட்டரி வந்து "உனக்கு ஒரு சந்தோஷமான் செய்தி!!... கேட்ட மாத்திரத்தில் நீ துள்ளிக் குதிக்க போற...நம்ம ஆப்சைட் கெஸ்ட் ஸ்பீக்கர் யாருன்னு தெரியுமா....டேவிட் கோவர் !!!! ஆனா இந்த விஷயத்தை யாருட்டயும் சொல்லிடாத இட்ஸ் அ சீக்கிரெட் "ன்னு என் காதில் கிசுகிசுத்துவிட்டு போக, யாரது கோவர்...நம்ம ட்ரேடிங் டெஸ்க் ஹெட்டா? அந்த ஆளா இருக்காதே கெஸ்ட் ஸ்பீக்கர்னா வெளியிலேர்ந்து பிரபலத் தானே கூப்பிடுவாங்கன்னு எனக்கு ஏகக் குழப்பம். "எனக்கு தெரியும் நீ சும்மா என்ன கலாசறதுக்கு நடிக்கிறன்னு...நான் ஸ்பெஷலா உன்னை அந்த ஆள் கூட டின்னர் டேபிளில் போட்டிருக்கேன்...சும்மா என்ஜாய் பண்ணு”ன்னு அம்மணி சொல்லிவிட்டு போய்விட்டார். ஐயைய்யோ அந்த டேபிள்லயேவா...அங்க பெரிய தலைங்க தானே உட்காருவாங்கன்னு உதறலெடுத்து. இதென்ன பெரியா சீக்கிரட்டா இருக்கே இந்த ஆள் யாருன்னு கூகிள் செய்து பார்த்தால்....அன்னார் இங்கிலாந்தின் முன்னாள் பெரிய கேப்டன்னு தகவல்கள் கிடைத்தது. அடப்பாவிங்களா...இன்னுமாடா என்ன நம்புறீங்க...எடுத்துக்குடுக்க கூட அங்க சீனாதானா மாமா இருக்க மாட்டாரேன்னு பரீட்சைக்கு படிப்பது மாதிரி அன்னாரைப் பற்றி படிக்க வேண்டியதாய் போய்விட்டது. "நீங்க தான் இது வரைக்கும் ஒருதரம் கூட நேர்ல பார்காமலேயே தாஜ்மகாலை செங்கல் செங்கலா விவரிச்சி இந்த ஊர்ல நிறைய பேருக்கு வெர்ட்சுவல் டூர் குடுத்திருக்கீங்களே ..உங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி..."ன்னு தங்கமணி வேறு நம்பிக்கையளித்துக் கொண்டிருந்தார்.

ஆப்சட்டில் எங்கள் டேபிளில் எல்லாரும் என்னை பெரிய கிர்க்கெட் பிஸ்துன்னு கோவரிடம் அறிமுகம் செய்து வைக்க....எனக்கு ஏக உதறல். "நான் சென்னைக்கு வந்திருக்கேன்...அங்கே சிதம்பரம் ஸ்டேடியமில் விளையாடி இருக்கிறேன்"ன்னு அவர் சொல்ல..." ஆமாமா போன வருஷம் கூட கபில்தேவ் இங்க வந்திருந்தார்...மீட் பண்ணி ரொம்ப நேரம் பேசினோம்... சிதம்பரம் ஸ்டேடியமிலிருந்து நேரா வந்து லெப்ட்ல திரும்பினா மைலாப்பூர் வரும் அங்க டப்பா செட்டி கடைன்னு ஒன்னு இருக்கு"ன்னு நானும் சம்பந்தா சமபந்தம் இல்லாமல் உளறிக் கொட்டி...ஒருவழியாய் சமாளித்து வந்தேன்.

34 comments:

Porkodi (பொற்கொடி) said...

yaaaay!

Porkodi (பொற்கொடி) said...

// "நீங்க தான் இது வரைக்கும் ஒருதரம் கூட நேர்ல பார்காமலேயே தாஜ்மகாலை செங்கல் செங்கலா விவரிச்சி இந்த ஊர்ல நிறைய பேருக்கு வெர்ட்சுவல் டூர் குடுத்திருக்கீங்களே ..உங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி..."//

தங்கமன்னி இந்த அளவு கடிவாளம் போடும் போதே இந்த பந்தா..! :D வாழ்க அவர் தம் சேவை இல்லனா எங்க கதி என்னாகுறது..

இப்படி தான் ஸ்கூல்ல "extempore"னு போட்டி முதல் முறையா வெச்சாங்க. அதான், ஸ்டேஜ்லயே நமக்கு ஏதாவது ஒரு தலைப்பு குடுத்து 2 நிமிஷம் யோசிச்சுட்டு, 10 நிமிஷம் பேசனும்னு ஒரு போட்டி!!! நாம கலந்துக்காம ஒரு போட்டியாங்கற கெத்துல ஏறி, என்னா தலைப்புனு பாத்தா.. நம்புவீங்களோ நம்ப மாட்டீங்களோ "Pele"!!! நானோ 6th class.. அப்படின்னா யார்/எது/என்னனே தெரியல.. அதையே 10 நிமிஷம் பேசி ப்ரைஸையும் வாங்கிட்டு வந்துடோமுல்லே :D இதன் மூலம் தெரிவது யாதெனில், வெட்டி பந்தாவால் வெற்றியும் கிட்டும்! வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.

Porkodi (பொற்கொடி) said...

//போலி யாருனு தெரியுமா?//

என்னங்க இது வலையுலகமே அல்லோலகல்லோல படற கேள்வி இது.. சின்ன குழந்தை என்னை பாத்து கேட்டா? :D

யாரு இந்த போலி சாமியார்?! பயங்கர சஸ்பென்ஸ் வெக்கறீங்க.. என்னுடைய guess:

1. சக்ரா
2. அம்பி
3. பாஸ்டன்
4. நீங்களே தான்.

Porkodi (பொற்கொடி) said...

indha 4um illana, 5th - ambiyin thambi :D

sari, niraya vyabaram panirukken, discount kudunga!

அறிவிலி said...

மோனிகா செலெஸ்?????

அந்த பீரியட்ல ஸ்டெஃபி க்ராஃப், கேப்ரியலா சபாட்டினி போஸ்டர்லாம் ரொம்ப ஃபேமஸ்.போட்டிககு ஆளே இருக்க கூடாதுன்னு மோனிகாவா??

குப்பன்.யாஹூ said...

அருமை கலக்கல்.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், சீமாச்சு தெரு கூட கிரிகட் மேட்ச் ஞாபகம் வந்து விட்டது.

அடுத்த பதிவுகளிலும் அம்பை கிரிக்கெட் சரித்திரத்தை எழுதுங்கள்.

இங்கிலாந்து அமெரிக்கா கதைகளை விட அம்பை, கல்லிடை திண்ணை கதைகள் தான் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

அது ஒரு கனாக் காலம் said...

:-) back to form .....keep it up

அறிவிலி said...

/////Porkodi (பொற்கொடி) said...
//போலி யாருனு தெரியுமா?/////

இதுக்கும் இந்த போஸ்டுக்கும் ஏதாவது சம்பந்தம்????

Porkodi (பொற்கொடி) said...

Arivili,

pona padhivil podradhuku badhil inge potuten.. my bad.

நாடோடிப் பையன் said...

Very funny.
I too don't care much about Cricket. Similar reasons - too many players and too commercialized.

Anonymous said...

////போலி யாருனு தெரியுமா?//

என்னங்க இது வலையுலகமே அல்லோலகல்லோல படற கேள்வி இது.. சின்ன குழந்தை என்னை பாத்து கேட்டா? :D//

Dear Dubbukku anna, Pleeeeese sollathingooo! naan apadiyee vanthundu poiyundu irukken...:)

Polisamiyar

Anonymous said...

//yaaaay!// yamma kodi, ivloooo vettiyaa neenga???....:) ROFTL

Dubukku sir bloguthaan home page poolarukku!!!...:)

Polisamiyar

Anonymous said...

//இது ரெண்டு தான் இருக்கு வேணும்னா வெச்சிக்கோ ஏதோ புட்பால் ப்ளேயர்ஸ்ன்னு நினைக்கிறேன்"ன்னு கிங்பெல் உப்புக்கு ரெண்டு படத்தை குடுத்தான்// aamaa aamaa naanum pathurukken onga tablela. Nadailathaaney irukku?? ....;) naan kooda ungalukku avaala rooomba theriyum poolarukkunu nanchundu iruntheen!!!....:)

Polisamiyar

ambi said...

அடப்பாவமே, நான் கூட அண்ணன் ஸ்போர்ட்ஸ்ல பெரிய பிஸ்து போலிருக்குனு அம்பை விசிட் அடிக்கும்போதெல்லாம் நம்பிட்டு இருந்தேனே. கர்ர்ர். :))

மோனிகாவை நானும் டாவடித்து இருக்கிறேன். (நல்ல குடும்படா)

யேய் பொற்கேடி, யாரப் பாத்து போலின்னு சொன்ன? சுடசுட செட்டு செட்டா ஆறு போளி ஒரே மூச்சுல சாப்ட சொன்னா சாப்டுவேன். அது என் தம்பியுடையான் தான். :))

Anonymous said...

dubukku sir,
enjoyed the post.boris becker blow up ,ezhudura attaiyila ottti vachadukke ennoda patti enna sahasranaama rengirkku thittinar."ennadi,perumal photovaaa idhu,kandavan photollam ottivechundunnu"pattillerndhu,keerakari varaikkum poravangu varavangunnu advise vanginadhu nyabagam vandhadhu.ippo en pennarasi desktopill tendulkar zaheerkhan arambithu ranbirkappoor varaikkum ella photovum vaithukondirukkiral.kaalam maarinalum pazhakkam maaruvathillai!!!!
ungal desktopill verum umachipadam thaana!!!(thangamanikku bayandhu)

enjoyed every line of the post.
nivi.

Anonymous said...

I presume you keep Serena William's poster now - that too in the pose of the moment before she serves or at the time of waiting to take the opponent's serve! I saw the Australian Open finals 2 days back. Appadiyae pidhungi veliye vandhuttadhu - ennoda kannu thaan! - R. J.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது... இதுதான்........ டுபுக்கு டிரேட் மார்க்..

sriram said...

டேவிட் கோவர், கபில்தேவ் இவங்களைப் பாத்தேன் சொல்றதுக்கு இவ்வளவு பந்தாவா?? நீங்க ப்ராஜக்ட் மேனேஜர் வேலைக்குத்தான் லாயக்கு (வெறும் பேச்சுத்தான், பேச்சில் விஷயமே இல்ல)...:):)

Gabby யின் போட்டோவைத் தேடாம செலஸின் போட்டோவைத் தேடியது
கனியிருப்பக் காய் கவர்ந்ததைப் போல இருக்கு..

அப்புறம் David Gower இன் Lazy Elegance, cover drive வீடியோக்கள் தேடிப் பாருங்க.. ஆளும் அழகு, ஆட்டமும் அழகு..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

பொற்கேடி..
அல்ல்ல்ல்ல்லோ என் பேர் ஸ்ரீராம், பாஸ்டன் இல்ல.. நான் போலியும் இல்ல...

இந்த character assassination முயற்சிக்கு உங்களுக்கு சைனாக்காரனின் பின்னூட்ட வைரஸ் கிடைக்க சாபம் கொடுக்கறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Kavitha said...

"Washingtonil Thirumanam" padikkara madhiri irukku unga blog. Thanks for bringing in that long lost flavor!

ரெண்டு said...

Hello Mr. Dubukku,

I have compiled one of your greatest work "jolli thirindha kaalam" and have uploaded in Scribd with your blog address. I could not provide email as it was not available.

http://www.scribd.com/doc/26242872/Jolli-thirindha-kaalam

Do make a visit and hope that there will be no objections.

Thanks,
Ramanathan Sundaram.

Anonymous said...

டுபுக்கு ரசிகர் மன்றத்தை சேர்ந்த அல்லாருக்கும் தெரிவிச்சிகர்து என்னனா, நானே தனியா ஒரு வலை பதிவு தொடங்கியாச்சு, free timela வந்துட்டு போங்கப்பா!

www.thakkudupandi.blogspot.com

Polisamiyar

Porkodi (பொற்கொடி) said...

ஹப்பா..! ராமநாதன் சுந்தரம் புண்ணியத்தால ஜொள்ளி திரிந்த காலத்தை 27ஆவது தடவையா படிச்சு முடிச்சுட்டேன்.. :D ஃபுல்லா படிக்க ரொம்ப நேரம் ஆகுமே அதுக்குள்ள ஆணிய ஏன் பிடுங்கலனு யாரும் கேட்டுருவாங்களோனு ஒரு பயம் இருந்தாலும் பாதில விட முடிலியே? ஏற்கனவே நிறைய தடவை படிச்சதால, ரிவைஸ் பண்ணிக்க ரொம்ப சுலபமா இருந்துது, அடுத்து என்ன வரினு எனக்கே தெரிஞ்சு எக்ஸ்பிரஸ் வேகத்துல முடிச்சுட்டேன்.. அது உங்க மாஸ்டர்பீஸ் தல, அத அடிச்சுக்க இனிமே உங்களாலயே முடியாதுனு தோணுது :)

நன்றி ராமநாதன்.

Ashwin said...

haha..I remember running around like dowser pandi with a pen and paper to interview the only celebrity who visited munnirpallam (H.Ramakrishnan of DD News fame).

Reporteraye interview paninaan-nu sarithrathla idam pera oru muyarchi..

Cha..If only I had a chance to meet David Gover, I'd have made it a trending topic in twitter.

Sara Suresh said...

kapildev, david gover meet photos enge?

sriram said...

பொற்கேடி..
இப்போ மிகப் பெரிய ஜிங்சாக் யாருன்னு ஊருக்கே தெரிஞ்சிருச்சு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

balutanjore said...

romba aalunga ipdithan criket teriyamal kadhai vittundu irukka pole.

aamaam cricket na enna?

balasubramanyan vellore

Porkodi (பொற்கொடி) said...

பாஸ்டன், ஜிங்சக்னா ஏதோ கேவலமான பதவினு நீங்களா தப்புக் கணக்கு போட்டீங்க, கச்சேரில மெயின் பாடகருக்கு ஜிங்சக் - தம்பூரா இல்லனா டப்பா டான்ஸ் ஆடிடும் தெரியுமில்லே? அடிக்கடி க்ளோஸப் வேற காமிப்பாங்க.. இதையெல்லாம் யோசிக்காம, அவசர அவசரமா திட்டிடறீங்க.. =)) எனிவே, நீங்க இருக்கும் போது நான் ஜிங்சக் ஆக முடியாது.. அதனால உப ஜிங்சக்கா வேணா இருக்கேன்..

(அடப் பாவிகளா.. மனம் திறந்து பாராட்ட கூட வுட மாட்டேங்குறாங்களே.. ஏங்க ஒருத்தருமே படிக்கலியா ராமநாதன் போட்டப்புறம்.. :-| )

தக்குடு said...

//பொற்கேடி..
இப்போ மிகப் பெரிய ஜிங்சாக் யாருன்னு //

யாருப்பா அது? எங்க கேடியை பாத்து ஜிங்சாக்னு சொன்னது, கேடி ஒன்னும் ஜிங்சாக் கிடையாது. இனிமே யாராவது கேடிதான் ஜிங்சாக்! அப்படினு சொன்னா அவங்க வீட்டுக்கு ஆட்டோல ஆள் அனுப்பிவைக்கப்படும். கொடி உங்களுக்கு நான் சப்போர்டுதான் பண்ணியிருக்கேன்.....:)

Subramanian Vallinayagam said...

hello dubukku sir,

naanga kettu kondathirkinaga adikaddi post pannuvathu santhosham.

intha pathivum valakam pola , good flow & narration.

keep writing and keep us happy.

thanks,
Subramanian.V

துபாய் ராஜா said...

டுபுக்கு ரிட்டர்ன்ஸ்.... :))

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹா...சூப்பர். உங்க பழைய ஸ்டைல்-க்கு வந்துடிங்க.

அவரு புறாவுக்கே பெல் அடிச்சவரு மாதிரி, நீங்க பீலேவ வச்சே பீலாவா! :-௦)

Dubukku said...

பொற்கொடி - :)) ஆஹா நீங்களும் பீலே பீலா சங்க சக மெம்பரா :)) சூப்பர். அக்காக்கு ஒரு ஜோடா குடுங்கப்பா

அறிவிலி - அதெல்லாம் எனக்கு முன்னாடி பட்டா போட்டுட்டாங்க...அத்தோட இந்த அம்மணிய தான் எனக்கும் பிடிச்சிருந்தது :))

குப்பன் - //இங்கிலாந்து அமெரிக்கா கதைகளை விட அம்பை, கல்லிடை திண்ணை கதைகள் தான் சுவாரஸ்யமாக இருக்கின்றன.// ஹீ ஹீ இதுல ஏதோ உள்குத்து இருக்கிறாப்புல இருக்கே :)))

சுந்தர்ராமன் - மிக்க நன்றி சார் முயற்சி செய்கிறேன்

நாடோடி பையன் - நீங்களுமா...:)))

போலிசாமியார் - டேய் அது யாருன்னு கேட்டிருந்தா உனக்கு ஒரு க்ளாஸ் எடுத்திருப்பேனே டா...உனக்கு எதிரி உங்க வீட்டுலயே இருக்கார் :))

அம்பி - அடப்பாவி நீயும் மோனிகாவா...:))

நிவி - பார்த்தீங்களா.. தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க..:))) நீங்க வேற எங்க வீட்டுடெஸ்க்டாப்புல தங்கமணி போட்டோ தான் :))

ஆர்.ஜே - அண்ணாச்சி...செரீனா வில்லியம்ஸைப் பார்த்தால் பயமாத் தான் இருக்கு எனக்கு என்னாவோ..அக்காவும் தங்கச்சியும் சேர்த்து ஒரு அடி விட்டாங்கன்னா தாங்கக் கூடிய உடம்பா இது...

பட்டா பட்டி - சும்மா நக்கல் விடாதீங்க சார் :))

ஸ்ரீராம் - //டேவிட் கோவர், கபில்தேவ் இவங்களைப் பாத்தேன் சொல்றதுக்கு இவ்வளவு பந்தாவா// நீங்க அடிக்கடி என்ன வைச்சு காமெடி பண்றீங்க...மத்த பதிவுகள்லலாம் நான் என்னம்மோ வெட்டி பந்தா விடாத மாதிரி...அதெப்படிங்க...இப்படி

பொயட்ரீ - அந்த புக்க ரொம்ப நாளா படிக்கனும்னு தேடிக்கிட்டு இருக்கேன் கிடைக்கவே மாட்டேங்குது :((( இந்த தரம் இந்தியா போகும் போது வாங்கனும்

ராமனாதன் சுந்தரம் - ஸ்கரிப்டில் ஹால் ஆப் பேம்மில் என்னை சேர்த்த(சும்ம சொல்லிப்போம்ல) ஐய்யா நிங்கள் குலம் வாழ்க...நிங்கள் கொற்றம் வாழ்க... மிக்க நன்றி தல...நோ அப்ஜெக்ஷன்ஸ்... :)))

போலி - இனிமே பெயர தக்குடுபாண்டின்னு போடுடா கமெண்டுல எதுக்கு ஆயிரத்தெட்டு பெயர்? மக்கள் குழம்பிட போறாங்க

பொற்கொடி - //அத அடிச்சுக்க இனிமே உங்களாலயே முடியாதுனு தோணுது :) // எனக்கும் இந்த சீரிஸ் ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒன்னு தெரியுமா...வேறு சில பதிவுகள் எழுதி முடிச்ச போது நானும் அப்படி தான் நினைச்சேன்...பட் ஐ லைக் சேலஞ்சஸ்...தேங்க்ஸ்...பார்ப்போம் :)))

அஷ்வின் - ஹீ ஹீ இப்போ எனக்கு இருக்கிற ஆர்வக்கோளாறு துறை வேற...உங்க கடமை உணச்சி என்னை புல் அரிக்க வைக்குது

சாரா சுரேஷ் - கபில் தேவ் போட்டோஸ் ஊர்ல இருக்கு...கோவர் கூட எடுத்துக்கல... :))

பொற்கேடி - நான் சொல்லல...நம்ம பாஸ்டன் அண்ணனுக்கு பயங்கர கோவம்ன்னு ..பார்த்தீங்களா...

பாலு - ஹா ஹா கிரிக்கெட்னா என்னாவா...

சுப்ரமணியன் - பாராட்டிற்கு மிக்க நன்றி..கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்...

துபாய் ராஜா - சும்மா இருங்க தல...நீங்க வேற என்ன வைச்சு காமெடி பண்ணிக்கிட்டு :)))

சிங்கக்குட்டி - ஆமா...பிலேவ வைச்சு பீலாவிட்ட சிங்கமாச்சே :)))

sriram said...

//நான் சொல்லல...நம்ம பாஸ்டன் அண்ணனுக்கு பயங்கர கோவம்ன்னு ..பார்த்தீங்களா...//
டுபுக்கு அண்ணே மற்றும் கொடி யக்கா..
எனக்கு கோபமெல்லாம் ஒண்ணுமில்லன்னு எத்தினி வாட்டி சொல்றது?? என்ன பண்ணா நம்புவீங்கன்னு சொல்லுங்க - செய்றேன்...

என்றும் அன்புடன் (அன்புடன் மட்டுமே)
பாஸ்டன் ஸ்ரீராம்

Post a Comment

Related Posts