Sunday, January 24, 2010

தி மேன் ஃப்ரம் எர்த்



பல திரைப்படங்கள் நம்மை பல்வேறு காரணங்களுக்காக பாதிக்கின்றன, நமக்கு அவற்றை பிடித்திருக்கின்றது. நம்மூரில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சதம் அடித்த படங்களும் இருக்கின்றன. ஹாலிவுட்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எட்டே எட்டு முக்கியமான கதாபாத்திரங்களை ஒரே ஒரு ரூமில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம் தான் தி மேன் ஃப்ரம் எர்த்.

இந்தப் படம் அமெரிக்காவிலேயே குறைவான தியேட்டர்களில் மட்டுமே 2007ல் ரிலீஸ் ஆகியது. பின் டி.வி.டியில் ரிலீஸ் ஆகியது. அதையெல்லாம் தாண்டி இந்த படம் இன்டெர்நெட்டில் ரசிகர்களால் பல்வேறு ஃபைல் ஷேரிங் தளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டது (முக்கியமாக பிட் டாரெண்ட்டில்). திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி இன்டர்நெட்டில் ஷேர் செய்து இந்த படத்தின் பப்ளிசிட்டிக்கு உதவியதற்காக ரசிகர்களுக்கு இந்த படத்தின் ப்ரொடியூசர் நன்றி கூறினார்.

ஹாலிவுட்டின் பிரமாண்டமும், சி.ஜி எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் பிரதானமாய் வைத்து வரும் பெரும்பாலான சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு மத்தியில் வந்திருக்கும் மிக வித்தியாசமான ஒரு படம். பார்த்த பிறகு ஒரு மணிநேரம் பிரம்மை பிடித்த மாதிரி அசை போட வைத்த அற்புதமான படம். ஸ்க்ரீன் ப்ளேயையும் தாண்டி வசனத்தால் பார்பவரை கட்டிப் போட வைத்திருக்கும் படம்.

சில படங்களின் மேலோட்டமான கதை தெரிந்தாலும் அவற்றின் சுவாரசியம் கொஞ்சமும் குறையாது. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்தது என்பதால் கதையை மேலோட்டமாய் சொல்லி இருக்கிறேன். கதையை தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.

ஒரு ப்ரொபசர் ஒருவர் ஊரைக் காலி செய்து கொண்டு வேறு ஊர் போகப் புறப்படுகிறார். அவருக்கு சென்ட் ஆஃப் குடுக்க அவருடன் பணியாற்றிய சக ப்ரொபசர்களும், சில நண்பர்களும் விட்டிற்க்கு வருகின்றனர். "ஏன்யா திடீருன்னு இப்படி சொல்லாம கொள்ளாம ஊர காலி பண்ணிட்டு போற"ன்னு அவர்கள் ஆரம்பிக்க...கொஞ்ச நேரத்துக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார் ப்ரொபசர். அவர்கள் மேலும் காரணத்திற்காக வற்புறுத்த, மெதுவாய் விளையாட்டாய் ஒரு சயன்ஸ் பிக்க்ஷன் கதை சொல்ல ஆரம்பிப்பது போல் ஆரம்பித்து, கடைசியில் தான் பதினாலாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் கற்காலம், பனிக்காலாத்திற்கெல்லாம் முன் தோன்றிய மனிதன் என்றும், தனக்கு வயோதிகமே கிட்டாமலும் மரணமும் இல்லாமலும் இன்று வரை தொடர்வதாயும், இதை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று பத்து வருததிற்க்கு ஒரு தரம் ஊரை மாற்றி விடுவதாயும் சொல்ல கதை சூடு பிடிக்கிறது.

முதலில் விளையாட்டு என்று நம்பி எல்லாரும் சும்மா கிண்டிக் கொடுத்து கேள்விகள் ஆரம்பிக்க, அப்புறம் இது அவர் நம்பிக் கொண்டிருக்கும் மனோவியாதி என்று தியரியை உடைக்க வேண்டுமென்று கேள்விகள் தொடுக்க அதுவே மனித இனத்தின் பல்வேறு நம்பிக்கைகளின் அஸ்திவாரத்தை ஆட்டுகின்றது. இந்த இடங்களிலெல்லாம் கதை மற்றும் வசன கர்தா ஜெரோம் பிர்க்ஸ்பி பின்னி பெடெலெடுத்திருக்கிறார். கதை நெடுக அவரின் கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது. கதை இந்தியா வரை தொடுகின்றது.

ஒரே ஒரு ரூமில் காமிராவை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மற்றுமே மாற்றி எடுத்தால் அந்த கால சென்னை தூர்தர்ஷன் செவ்வாய் கிழமை நாடகம் என்ற எனது நையாண்டியை உடைதெரிந்து விட்டிருக்கிறது இந்த படம். ஸ்கிரீன் ப்ளேய் மிக சிறப்பாக இருந்தாலும் அதையும் தாண்டி வசனங்கள் நம்மை அப்படியே கட்டிப் போடுகின்றன.

கதை மிக மிக வித்தியாசமான ஒரிஜினாலிட்டி உள்ள கதை. ஒரு ப்யாலஜிஸ்ட், ஒரு ஆந்திரபோலஜிஸ்ட், ஒரு ஹிஸ்டோரியன், ஒரு சைக்கியாரிஸ்ட், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் மற்றும் ஒரு ஸ்டூடென்ட் என்று மிக அழகாய் பாத்திரங்களை செதுக்கி அவர்கள் செய்யும் தர்கத்திற்க்கு சரியான வலூட்டியிருக்கிறார் கதாசிரியர். அவர்கள் கேட்க்கும் கேள்விகளிலும், பதில்களிலும் லாஜிக் இடிபடாமல் ஆத்தென்டிக்காய் வடிவமைத்திருக்கிறார். கதாசிரியரின் தந்தையும் கதாசிரியரும், தந்தையின் காலத்தில் டிஸ்கஸ் செய்த கதைக் களமாம் இது. நடித்த அத்துனை நடிகர்களும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும், வசனமும் அதை குடுக்கிற விதமும் கரெக்டாய் இருதால் மேட்டர் மேட்டரே இல்லை என்று என்னைப் போன்றவர்களுக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் விதமாய் குடுத்திருக்கிறார் டைரக்டர் ரிச்சர்ட் ஷெங்மேன்.

துப்பாக்கி, குலுக்கு நடனம் மற்றும் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் படம் பார்க்க தயாராய் இருந்தால் - கண்டிப்பாய் பாருங்கள். வெரி ஹைலி ரெக்கமெண்டட்.

26 comments:

JustATravellingSoldier said...

me first..... :))))
comments pinnadi....

Sampath said...

I have seen this already ... good movie ...

have u ever seen "12 angry men" & "Reservoir dogs" ... இந்த படங்களும் வாயாலேயே வடை சுடுற படங்க தான் :) ...

Mahesh said...

எங்கேருந்துதான் தேடிப் புடிக்கிறீங்களோ?? இந்த வாரமே பாத்துடறேன்.. ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே,.,.,.,

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

படம் பார்த்துவிட்டு , எனது கருத்துக்களை
சொல்கிறேன் டுபுக்கு சார்..

sriram said...

டுபுக்கு சொல்லிட்டா அப்பீலேது, பாத்துடறேன், லிங்க் இருந்தா அனுப்புங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

// பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும், வசனமும் அதை குடுக்கிற விதமும் கரெக்டாய் இருதால் மேட்டர் மேட்டரே இல்லை என்று என்னைப் போன்றவர்களுக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் விதமாய் குடுத்திருக்கிறார் //

:)))))

okay, paathuduvom..!

Anonymous said...

//// பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும், வசனமும் அதை குடுக்கிற விதமும் கரெக்டாய் இருதால் மேட்டர் மேட்டரே இல்லை என்று என்னைப் போன்றவர்களுக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் விதமாய் குடுத்திருக்கிறார் //

:)))))
// dubukku anna, namba kodi thiruppi valaiya vrikkara maathiri irukku! usaaaruu!......:)

Polisamiyar

Porkodi (பொற்கொடி) said...

போலி, ஏனப்பா இந்த கொல வெறி? 25 கமென்டுக்கு முன்னாடி கும்மியை ஆரம்பிக்க கூடாதுனு controlledஆ இருந்தாலும் விட மாட்டீங்களே? வாங்க போய் 2 போளி சாப்பிட்டுட்டு வருவோம்.. நாட்டுல ஒரு ஸ்மைலி கூட நிம்மதியா போட வுட மாட்டேங்கறாங்களே.. :)

அறிவிலி said...

தோ.. ஒரு நிமிஷம்... டவுன் லோட் போட்டுட்டு வந்துர்றேன்...

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing, I will also comment after seeing the film.

I hope it would be nice especially after reading your interesting review.

ambi said...

ம்ம், வசனத்துக்கு சப் டைட்டில் போடறாங்களா?

பொற்கேடியின் உள்குத்து வில்லி சிரிப்பை பாராட்டுகிறேன். :)))

M.G.ரவிக்குமார்™..., said...

இந்த மாதிரிப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் தமிழிலும் இது போன்ற முயற்சிகள் வராதா எனும் ஏக்கம் வருகிறது!

M.G.ரவிக்குமார்™..., said...

இந்த மாதிரிப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் தமிழிலும் இது போன்ற முயற்சிகள் வராதா எனும் ஏக்கம் வருகிறது!

Porkodi (பொற்கொடி) said...

எப்புடி இருந்த நான்...

Porkodi (பொற்கொடி) said...

இப்புடி ஆயிட்டேன்.. :'(

அடப் பாவிங்களா.. இப்படி தனியா புலம்ப விட்டுட்டீங்களே.. ஒரு காலத்துல எப்படி ஜெகஜ்ஜோதியா இருந்துது இந்த இடம். யாரு கண்ணு பட்டுதோ இப்போ லைப்ரரிய விட அமைதியா இருக்கு.. எ.கொ.ச.இ?

*ஒரு வேள கட முதலாளி தான் எல்லாரையும் "கொன்டே புடுவேன்"னு மிரட்டி வெச்சுருப்பாரோ?* நான் தான் அநியாய அப்புரண்டிசா வந்து போயிட்டு இருக்கேனா..? மர்மமா இருக்குது.

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அக்கோவ்..
போன பதிவுல நீங்க போட்ட போடு-ல ,
டுபுக்கு சுதாரிச்சுட்டாரு..

அதனாலதான் "படத்த பார்த்துட்டு "வாங்க-னு சொல்லிட்டு , அவருக்கு Intervel"-ல் விட்டுட்டு
போயிட்டாருக்கா..

Anonymous said...

Watched the movie, very interesting. The screen play and the cast did an excellent job.
Thanks for bringing up.

Anonymous said...

//ஒரு வேள கட முதலாளி தான் எல்லாரையும் "கொன்டே புடுவேன்"னு மிரட்டி வெச்சுருப்பாரோ?* //

correctu kodi, yenakkum athuthaan doubtaa irukku!!!....:)

Polisamiyar

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு.

இதுவரை பார்க்கவில்லை இப்போது பார்க்க ஆர்வம் தூண்டுகிறது.

Dubukku said...

சோல்ஜர் - ஐய்யா அப்படீயே அப்பீட்டாயிட்டீங்க போல :)))

சம்பத் - இல்லை பார்க்கிறேன்..உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி. //வாயாலே வடை சுடறது// :))) அருமை

மகேஷ் - உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். எனக்கு ரொம்ப பிடிச்சது.

பட்டாபட்டி - கண்டிப்பா..பாருங்க...நல்லா இருக்கும்.

ஸ்ரீராம் - கூகிளாண்டவர் இருக்க பயமேது. எங்கிட்ட சாப்ட் காப்பி தான் இருக்கு.

பொற்கொடி - :)) நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது :))

போலி- டேய் அது என்ன அர்தம்னு எனக்குத் தெரியும் :)) நீ சிண்டு முடியாதடா :))

பொற்கொடி - போலி யாருன்னு தெரியுமா?

அறிவிலி - ஹா ஹா :))

குப்பன் - ரொம்ப வித்தியாசமான படம் குப்பன். உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன்

அம்பி - சப்டைட்டில் உண்டு :)))

நேசன் - எனக்கு உங்கள் ஆதங்கத்துக்கு ஆறுதலாய் ஒரு பதில் சொல்ல வேண்டும் என்று ஆர்வமாய் இருக்கு....ஆனாலும் அடக்கிக் கொள்கிறேன் :)))

பொற்கொடி -// ஒரு வேள கட முதலாளி தான் எல்லாரையும் "கொன்டே புடுவேன்"னு மிரட்டி வெச்சுருப்பாரோ?* // ஹா ஹா ஏங்க எனக்கு கமெண்ட் வர்றதுக்கு கசக்கவா செய்யுது நானே இங்க போணியாகலன்னு கல்லால துண்ட போட்டுக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருகேன்...நீங்க வேற :))))))

துபாய் ராஜா - மிக்க நன்றி படம் பாருங்க

பட்டாபட்டி - யெகோவ் பட்டாபட்டி ரொம்ப பேசறார்...கவனிங்க.

அனானி - மிக்க நன்றி என் பேச்சையும் மதிட்து படத்தை பார்த்தற்கு

போலி - டேய் நீயுமா வயத்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு :)))வியாபாரம் ஆகலைடா அதான்...:))

சிங்கக்குட்டி - உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் :))

emohansydney said...

thanks for the info......downloaded the film in torrentz and just now finished seeing it..... please continue this sort of posts, once in a while

Madhuram said...

Thamizh Padam partheengala?

Anonymous said...

Just read your heading for the post and watched the movie. Good one. I loved it thoroughly. Thanks for the recommendation. Appreciate that.

மங்கை said...

வோட்டிங்க் லிஸ்ட்ல பார்த்து வந்தேன்... நல்ல பகிர்வு

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கண்டிப்பாக படத்தை பார்க்கிறேன்..

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

Post a Comment

Related Posts