Tuesday, February 16, 2010

நடிகன்

பீலிங்க்ஸாய்...வாழ்க்கையை திரும்பிப் பார்க்காமல் சைட்லேர்ந்து எட்டிப் பார்த்தால், சின்ன வயதில் நான் என்னவெல்லாம் செய்ய மாட்டேன் என்று நினைத்தேனோ அத்தனை கோணாங்கித் தனங்களும் செய்திருக்கிறேன். சின்ன வயது என்றால் இப்ப இல்ல...இதை விட இன்னும் சின்ன வயது...சுமார் பத்து வயது :). கூச்சமும் பயந்த சுபாவமாய் இருந்த என்னை மாற்றியது வடக்குத் தெரு தான். கூட இருந்து என்னை குட்டிச்சுவராக்கிய சக வானரங்களும் அதன் கலகலப்பான நாட்களும் எனக்கு என்றும் அது மால்குடி தான்.

நான் வடக்குத் தெருவிற்கு வருவதற்கு முன்னால் செய்யவே மாட்டேன் என்று நினைத்திருந்த விஷயங்களில் ஒன்று நாடகங்களில் வேஷம் கட்டுவது. முதல் ஜோடி நடனம்...அனுமாராய் வேஷம் போட்டது எல்லாம் ரொம்ப முன்னாடி 2004ல் எழுதியிருக்கிறேன் ([பகுதி1 பகுதி2). இதெல்லாம் எங்கள் தெரு நாடக குழுவில் நடிக்கும் போது நான் போட்ட வேஷங்கள். அப்புறம் பதினோராம் ஆண்டு படிக்கும் போது ஸ்கூலில் திரும்பவும் நாடக வாய்ப்பு கிடைத்தது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்க்காக மருது பாண்டியர்களின் கதையை நாடகமாய் போட்டோம். இருந்த ரெண்டு மருதில் நானும் ஒரு மருது. கதைப் படி எனக்கு செகண்ட் ஹீரோ வாய்ப்பு தான். இருந்தாலும் இந்த மாதிரி நாடகத்தில் நடிப்பவர்களுக்கெல்லாம் எங்க ஸ்கூலில் பெண்கள் மத்தியில் ரொம்ப மரியாதை உண்டு என்பதால் விரும்பி நடித்தேன்.

ஏற்கனவே அனுமாராய் வேஷம் கட்டிய எக்ஸ்பீரியன்ஸ் வேறு இருந்ததால்...ப்ராக்டீஸ் ரவுண்டு போது நல்ல நடித்து வாத்தியாரை அசத்தி விட்டால் என்னை முக்கியமான மருதுவாய் ப்ரமோட் செய்துவிடுவார் என்று ரொம்ப துடித்துக் கொண்டிருந்தேன். ரிகர்சலின் போது ஒரு வெள்ளைக்கார துரையை எதிர்த்து நாலு வரி பேச வேண்டும். மத்த நேரமெல்லாம் பெரிய மருது வசனம் பேசுவார். நான் "ஆமாம ஆமாம் பெரியய்யா"ன்னு சிங்க்சக் போடவேண்டும். என் வசனத்தின் போது எங்களை சங்கிலியால் கட்டி ரெண்டு அல்லக்கைகள் பிடித்து கொண்டிருக்கும். நான் திமிறிக் கொண்டு பேச வேண்டும். என் வசன நேரம் வந்த போது எனக்கு கூத்துப் பட்டரை கலைராணி (முக்கால் வாசி படங்களில் நெஞ்சில் அடித்துக் கொண்டு உணர்ச்சிகரமாய் அழுவாரே....முதல்வனில் கூட அர்ஜுனின் அம்மாவாய் வருவாரே) மாதிரி வேகம் வந்துவிட்டது. "யூ ஆர் ட்ரையிங் டூ அப்ரஸ் அன்ட் சப்ரஸ் அன்ட் டிப்ரஸ் தி ஃபீலிங்ஸ் ஆப் எ தமிழியன்" என்று உணர்ச்சிவசப் பட்டு வசனம் பேசியதில் அல்லக்கை பிடித்திருந்த சங்கிலியெல்லாம் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது. "டேய் கலைராணி மாதிரி ஒரு ரூபாய் குடுத்தா ஒன்பது ரூபாய்க்கு நடிச்சா கூட பரவாயில்லை ஆனா நீ ஒன்பதாயிரம் ரூபாய்க்கு நடிக்கிற...? உனக்கு இந்த வேஷம் வேணுமா வேண்டாமா"ன்னு வாத்தியார் கொக்கி போட்டுவிட்டார். நம்ம நடிப்புத் திறனுக்கு இப்படி அணை கட்டிட்டாங்களேன்னு ஆதங்கம் எனக்கு ரொம்ப நாள் இருந்த போது தான் நான் என் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நிணைத்திருந்த இரண்டாவது விஷயம் நிகழ்ந்தது.

மாறுவேடப் போட்டி. அந்த வருட ஸ்போர்ட்ஸ் டேக்கு மாறுவேடப் போட்டியும் வைத்திருந்தார்கள். பொதுவாய் மாறுவேடப் போட்டி என்றாலே பரமசிவன், பாரத மாதா,பிள்ளையார், பசு, ஏசு, அகத்தியர் என்று ஒரு க்ளீஷே இருந்து வந்தது. இதையெல்லாம் உடைத்து ஏதாவது ஒரு வேஷம் போட்டு சரித்திரத்தில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று எனக்குள் கலைத் தாகம் நாபிக்கமலத்திலிருந்து பெருக்கெடுத்தது. வழக்கம் போல தெரு நண்பர்கள் அனயாசமாக ஐடியா குடுத்தார்கள். "உனக்குத் தான் மனசுல பெரிய மைக்கேல் ஜாக்ஸன்ன்னு நினைப்பே அவர மாதிரி வேஷம் போடேன்" என்று ஒறு ஐடியா மணி திருவாய் மலர்ந்தது. போடலாம் தான்...மாமி லவட்டி குடுக்குற நாலணாவை 'சேமிப்பே நாட்டின் சுகாதாரம்'ன்னு சேர்த்து வைக்காமல் ரூட்டு விட்ட பெண்ணுக்கு டெய்லி வடை வாங்கிக் குடுத்த வகையில் கோட்டை விட்டிருந்தேன். மைக்கேல் ஜாக்ஸன் வேஷத்துக்கு பட்ஜெட் இடித்தது. சிம்பிளாய் எந்த பட்ஜெட்டுமில்லாமல் ஐடியா கேட்டதில் பசங்கள் கையை விரித்து விட்டார்கள். கண்ணுக்குட்டி கணேசன் மட்டும் "ரயில் மாதிரி வேஷம் போடு, குயில் மாதிரி வேஷம் போடு”ன்னு அள்ளி விட்டுக் கொண்டிருந்தான்.

எந்த ஐடியாவும் தோன்றாமல் ஸ்போர்ட்ஸ் டே வேறு வந்துவிட்டது. பெயர் குடுத்தது குடுத்தது தான் வாபஸ்லாம் வாங்க முடியாது என்று பி.டி வாத்தியார் வேறு கறாராய் சொல்லிவிட்டார். "எந்த பிரப்பரேஷனும் இல்லாமல் லூசு மாதிரி அங்க போய் நிக்க போறோம்"னு எனக்கு பயமாய் இருந்த போது தான் கடைசி நிமிடத்தில் அந்த ஐடியா தோன்றியது. பேசாமல் லூசாகவே வேஷம் போடலாமே, செலவும் அதிகம் ஆகாது....என்ன வேண்டுமானாலும் தத்து பித்துவென்று உளறலாம் என்று வீட்டில் இருக்கும் மாமாவின் பழைய சட்டையை ஒன்றை எடுத்துப் போய் ஆஜரானேன். ரொம்ப மேக்கப் போடாமலே எல்லாரும் தத்பரூபமாய் இருக்கு என்று சொல்ல... ஒரு திரு திரு வள்ளுவருக்கு பின்னால் களத்தில் இறங்கி ஏக ரணகளம் செய்து இது தான் சாக்கு என்று அங்கே இருந்த பி.டி.வாத்தியாரையும் மொத்தமாய் கலாய்த்து, வந்திருந்த சிறப்பு விருந்தினர் இந்த மாதிரி ஒரு பைத்தியத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை இனிமேலும் பார்க்க முடியாது என்று ஏகத்துக்கு பாராட்டி முதல் பரிசு கப்பை கையில் குடுத்துவிட்டார்.
அடுத்த நாள் தினமலரில் ரெண்டாவது பக்கத்தில் அந்த புகைப்படம் பெயருடன் வந்திருந்தது. "உங்க பையன் பெரிய பைத்தியம்ன்னு பரிசு குடுத்திருக்காளே...தினமலர்ல போட்டோலாம் வந்திருக்காமே" என்று ஊரில் எல்லாரும் விசாரிக்க..."ஆமா இருக்காத பின்ன...எங்க குடும்பத்திலேயே இது ரத்தத்தில் ஊறி இருக்கே"ன்னு மாமாவுக்கும் ஏக பெருமை. ஸ்கூலில் அந்த கூத்து ரொம்ப பாப்புலர் ஆகி இன்னொரு அன்னையர் தின விழாவிலும் அதே வேஷத்தை ஆசிரியர்கள் உட்பட நிறைய பேர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேடையேற்றினேன் :)

பி.கு - தங்கமணிக்கு இந்த விஷயம் இது நாள் வரை தெரியாது..இப்போது தெரிந்துவிடும்...."ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாக...என்ன சப்பான்ல சாக்கிசான் கேட்டாக...ஒசாக்கால ஒபாமா கேட்டாகன்னு ஆரம்பித்துவிடுவார். தங்கமணி - ரெடி ஸ்டார்ட் மீசிக்

33 comments:

பிரதீப் said...

aiyyayo enna sir? ipo ellam adikkadi bloga aarambichiteenga..eppovaavathu super pathivu podubavarnu ennai mathiriye orutharndra ore aarthalai udachuteengale?

rapp said...

//நான் திமிறிக் கொண்டு பேச வேண்டும். என் வசன நேரம் வந்த போது எனக்கு கூத்துப் பட்டரை கலைராணி//
//டேய் கலைராணி மாதிரி ஒரு ரூபாய் குடுத்தா ஒன்பது ரூபாய்க்கு நடிச்சா கூட பரவாயில்லை ஆனா நீ ஒன்பதாயிரம் ரூபாய்க்கு நடிக்கிற...? //

anne, idhula peria sor kurram & porutkurram irukku:):):)

//மாமி லவட்டி குடுக்குற நாலணாவை 'சேமிப்பே நாட்டின் சுகாதாரம்'ன்னு சேர்த்து வைக்காமல் ரூட்டு விட்ட பெண்ணுக்கு டெய்லி வடை வாங்கிக் குடுத்த வகையில் கோட்டை விட்டிருந்தேன்//

andha seniorai thaana solreenga?:):):)

Porkodi (பொற்கொடி) said...

:)

Porkodi (பொற்கொடி) said...

//இருந்தாலும் இந்த மாதிரி நாடகத்தில் நடிப்பவர்களுக்கெல்லாம் எங்க ஸ்கூலில் பெண்கள் மத்தியில் ரொம்ப மரியாதை உண்டு என்பதால் விரும்பி நடித்தேன்//

Note this point your honor!

//மைக்கேல் ஜாக்ஸன் வேஷத்துக்கு பட்ஜெட் இடித்தது.//

பொழச்சது!

//"உங்க பையன் பெரிய பைத்தியம்ன்னு பரிசு குடுத்திருக்காளே...தினமலர்ல போட்டோலாம் வந்திருக்காமே"//...//"ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாக...என்ன சப்பான்ல சாக்கிசான் கேட்டாக...ஒசாக்கால ஒபாமா கேட்டாகன்னு ஆரம்பித்துவிடுவார்.//

இந்த ஒரு பாரா போதும். தின்னது எல்லாம் செரிச்சாச்சு. ம‌ன்னியை அடுத்த‌ ப‌ண்டிகைக்கு இந்த‌ பாட்டுக்கு ஆட‌ முய‌ற்சி செய்ய‌ சொல்ல‌வும்.. :))

Ananya Mahadevan said...

டுபுக்கு பேக் டு ஃபுல் ஃபார்ம்!!! கலக்கியுட்டேள் போங்கோ!!
note this paayint aalso your aanar - ரூட்டு விட்ட பெண்ணுக்கு டெய்லி வடை வாங்கிக் குடுத்த வகையில் கோட்டை விட்டிருந்தேன். ultimate!!!

sindhusubash said...

//நான் திமிறிக் கொண்டு பேச வேண்டும். என் வசன நேரம் வந்த போது எனக்கு கூத்துப் பட்டரை கலைராணி//
//டேய் கலைராணி மாதிரி ஒரு ரூபாய் குடுத்தா ஒன்பது ரூபாய்க்கு நடிச்சா கூட பரவாயில்லை ஆனா நீ ஒன்பதாயிரம் ரூபாய்க்கு நடிக்கிற...? //

Superb!! உங்க எல்லா பதிவுமே ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கு. அதிலும்..உங்க கல்யாணம், பிரசவம் மற்றும் நாய்பொழப்பு எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவுகள்.

CS. Mohan Kumar said...

கலக்கல் அடிக்கடி எழுதுங்க

முன்னாடி வெறும் பின்னோட்டம் போட்டுட்டுருந்த நான் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட நூறு பதிவு எழுதிட்டேன். முடியும் போது எட்டி பாருங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேரா சொல்றதை விட பதிவு மூலம் சொல்றது ஈசி இல்லயா ..:)

தக்குடு said...

//அடுத்த நாள் தினமலரில் ரெண்டாவது பக்கத்தில் அந்த புகைப்படம் பெயருடன் வந்திருந்தது. "உங்க பையன் பெரிய பைத்தியம்ன்னு பரிசு குடுத்திருக்காளே...தினமலர்ல போட்டோலாம் வந்திருக்காமே"//
ஆமாம், ஆமாம் எனக்கும் நல்லா ஞாபகம் இருக்கு! அந்த போட்டோல நீங்க தத்ரூபமா அந்த கதாபாத்திரமாவே இருந்தேள்!...:) LOL

emohansydney said...

change your name to "sagalakala vallavan" instead of "unnal mudiyum thambi"....... neenga podaha veshamae illa pola

saranya. said...

"ஆமா இருக்காத பின்ன...எங்க குடும்பத்திலேயே இது ரத்தத்தில் ஊறி இருக்கே"

God............, sariyana Kur Kure Family la mattikitena?
My Fate,ada yaaralayum maatha mudiyadhu.
Ungalukku Kadavul Anugraham romba jasti. ;)))

தக்குடு said...

//God............, sariyana Kur Kure Family la mattikitena?
My Fate,ada yaaralayum maatha mudiyadhu.
Ungalukku Kadavul Anugraham romba jasti. ;)))// ...)LOL

antha dinamalar photo paathuthaan neenga 'thopokadeel'nu dubukku valaiyil viluntheelnu nanachundu iruntheen, sheyyyy, therinjurintha naanaavathu oru vaarthai soliyiruppeney!!! yennathaan irunthaalum neenga namba uuru Ponnu!...:)

துபாய் ராஜா said...

எப்போ போடுவீங்க... எப்போ போடுவீங்க...அந்த "தினமலர்" போட்டோவை ஸ்கேன் பண்ணி எப்போ போடுவீங்க.... :))

saranya. said...

thakudu - anda photo edo xerox madiri irandadu,ada pathu naan vizhalai, en tasteeeeee unakku puriyalai,Vithi kannai maraithu vitadu ;))))

saranya said...

namma ooooru xerox lakshanam theriyume( x - ray )!!!!!!!!!!

தீபா said...

தூள் :-)

Unknown said...

வாசித்தோம் மகிழ்ச்சி

sriram said...

//அனுமாராய் வேஷம் போட்டது //
மேக்கப் செலவு மிச்சம்..

//இப்ப இல்ல...இதை விட இன்னும் சின்ன வயது//
இன்னும் அந்த நெனைப்பு இருக்கா??

//சுமார் பத்து வயது// long long ago so long ago, இந்தியா ஆங்கிலேயர்களிட்ம் அடிமைப் பட்டிருந்த போதுன்னு சொல்லுங்க..

//உங்க பையன் பெரிய பைத்தியம்ன்னு பரிசு குடுத்திருக்காளே// என்னே ஒரு தீர்க்கதரிசனம்??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//"யூ ஆர் ட்ரையிங் டூ அப்ரஸ் அன்ட் சப்ரஸ் அன்ட் டிப்ரஸ் தி ஃபீலிங்ஸ் ஆப் எ தமிழியன்"

ROTFL......

- Sab

தக்குடு said...

//anda photo edo xerox madiri irandadu,ada pathu naan vizhalai, en tasteeeeee unakku puriyalai// unmaithaan akka...:)

//Vithi kannai maraithu vitadu ;))))// onnum panna mudiyaathu innemey, namba thalila yenna yeluthi irukko athai yaaralum maathamudiyaathu!!...:) LOL (akka, ples poorum,mudiyalai dubukku postai vida unga commentai paathuttuthaan oreyyy ROFTL...:))

Kavitha said...

Vaai vittu siricha nooi(?) vittup pogum - appadi sirikkanumna ungal blog padiakkanum.

அறிவிலி said...

க(கொ)லை வெறி உங்களுக்கு அப்ப இருந்தே இருந்திருக்கு.:-)))

Anonymous said...

sir,anayasamaga asathi irukireergal.nadiganaga vendum enkira theeradha dhhagam seekirame theerum enru nambugiren.oru baghyaraj, oru t.r andha madhiri all in all azhagu rajava kalakkunga.appavum blog ezhudanum.rasigar manrathhai appappa gavanikkanum.ungal p.r.o padhavi,matrum international rights mattum engaludhu.
ps.unga photovandhadukkapuram dhhan dinamalar subscription vinnai thandiyathu.
varungala nadigar thilagam,varungala mudhalvar avargale vazhga vazhga......
abbadi...international rights enakku dhaan.
nivi.

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
பத்மநாபன் said...

/////காமெடிப்பதிவர்களின் கிங்கு - டுபுக்கின் வலைத்தளம் போய்ப்பாருங்கள் - சுஜாதாவின் உண்மையான சிஷ்யன் அவர்தான்னு எனக்கு தோணும் ////
இப்படி அநன்யா அவர்களின் மின்னஞ்சல் முலம் அறிமுகம் கிடைத்து நுழைஞ்சேன் ... என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை ... சுஜாதா சொர்க்கம் , அவர் இஷ்டப்படி நரகம் , எங்கேயும் போகவில்லை ...இங்கதான் எல்லார்கிட்டேயும் பரவி இருக்கார்...
கடைசியிலே உங்க தங்கமணியின் '' கண்னமனுர்'' பாட்டு ஓய்ந்ததா?

Subramanian Vallinayagam said...

"ஆமா இருக்காத பின்ன...எங்க குடும்பத்திலேயே இது ரத்தத்தில் ஊறி இருக்கே"ன்னு ROTFL ;)


//"யூ ஆர் ட்ரையிங் டூ அப்ரஸ் அன்ட் சப்ரஸ் அன்ட் டிப்ரஸ் தி ஃபீலிங்ஸ் ஆப் எ தமிழியன்"
super ;)

good post. laughed and enjoyed a lot. keep writing.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{"ஆமா இருக்காத பின்ன...எங்க குடும்பத்திலேயே இது ரத்தத்தில் ஊறி இருக்கே"}

என்ன இப்படி குடும்ப ரகசியத்தை எல்லாம வெளியில சொல்லிகிட்டு..சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு !

:))

Siva Sutty - m of n said...

வழக்கமான கலக்கல் அண்ணாத்தே சவுக்யமா

Dubukku said...

பிரதீப் - அடடா கண்ணு வைச்சிட்டீங்களா :))) ஆமா என்ன சொல்லறீங்க இப்போலாம் பதிவு நல்லா இல்லைங்கிறீங்களா??

ராப் - யெக்கொவ் அப்படி என்ன பொருட்குற்றம்ன்னு சொன்னா கேட்டுக்கிடுவோம்ல. ஆமா ஆமா அதே சீனியர் தான் நீங்க தங்கமணிக்கு மேல நியாபகம் வெச்சிருக்கீங்களே :))

பொற்கொடி - ஹலோ என்ன எல்லாரும் ஓவரா தங்கமணி கட்சிக்கு தாவிட்டீங்க??

அநன்யா - -ஹீ ஹீ எல்லாம் உங்க ஆதரவு தான் காரணம். உங்க பி.ஆர்.ஓ வேலைக்கு ரொம்ப நன்றி,

சிந்து - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ரொம்ப ஊக்கமா இருக்கு

மோகன் குமார் - வாங்க ரொம்ப நன்றி பாராட்டுக்கு. கண்டிப்பா வருகிறேன்.

முத்துலெட்சுமி - அட கரெக்டா பாயிண்ட பிடிச்சிட்டீங்களே :)) ரொம்ப சரி

தக்குடு - ஆமா இல்லையா பின்ன நம்ம ரத்தத்திலேயே ஊறி இருக்கே :P

சிட்னி மோகன் - ஹீ போங்க சார் ரொம்ப புகழறீங்க என்னை :))

சரண்யா - கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக !!

தக்குடு - டேய் போதும்டா டூ மச் கல்லிடை சிங்க்சக்ஸ்....

துபாய் - அஸ்கு புஸ்கு ஆம வடை

தீபா - மிக்க நன்றி ஹை

சங்கர் - என்னங்க ரொம்ப பார்மலா...இங்க அதெல்லாம் மறந்துடுங்க :))

ஸ்ரீராம் - இப்போ கணக்கு டேலி ஆகி இருக்கும்ன்னு நம்புறேன் :)) திர்ப்தியா??

சபரி - :)) நம்ம பெரிய தல கலக்கியிருப்பார்

தக்ஸ் - உனக்கு கல்லிடை சிங்க்சக்ஸ் ஆஸ்கர் பரிசை பரிந்துரைக்கிறேன் :))

பொயட்ரீ - ஹி ஹி...நீங்களும் ரொம்ப புகழறீங்க...உங்க ஊக்குவிற்பிற்கு மிக்க நன்றி

அறிவிலி - ஆமாம் அதே அதே :))

நிவி - வாங்க அய்யோ எனக்கு சத்தியமா நடிக்கிறதுக்கு ஆசையே இல்லீங்கோவ்...ஒன்றை தெளிவு படுத்திக் கொள்கிறேன்....நம்ம கவனம் எல்லாம் டைரடக்க்ஷன்ல மட்டும் தான் :)))) நடிக்காமல் உங்களை ஏமாற்றுவது பற்றி வருத்தமடைகிறேன் :)))))

பத்மநாபன் - அண்ணாச்சி வாங்க. அநன்யா மேடம் என் மேல் இருக்கும் அன்பினால் அப்படி சொல்லி இருப்பார்கள். நீங்களும் என்னை ரொம்ப புகழறீங்க...நான் சாதாரண பச்சு அவ்வளவே என்று சொல்லிக் கொள்கிறேன். தங்கமணி பாட்டு இன்னிக்கு நேத்திக்கா கேட்டுக்கிட்டு இருக்கேன் :))


சுப்பிரமணியன் - வாங்க மிக்க நன்றி ஹை

அறிவன் - என்ன பண்ண சில சமயம் சொல்ல வேண்டி இருக்கே :))

கால்கரி சிவ - அண்ணாச்சி வாங்க நலம் நலமறிய அவா..மிக்க நன்றி ஹை வந்து உங்க கால் தடத்தை பதித்தற்கு

Girl of Destiny said...

:-) Thanks for a LOL post. Had a good time laughing!!

Madhuram said...

Neenga romba periya nadigarnu othukkiren Dubukku Sir. Aana ki.mu. la annaiyar dhina vizha dhaan namba mudiyala.

R.Gopi said...

டுபுக்கு அண்ணா...

டக்கர் டகால்டிதான் போங்கோ...

கலக்கிட்டேள்ள்ள்ள்...........

இன்னிக்கு தான் மொத மொதலா ....வந்தேன்... படிச்சேன்.. ரசிச்சேன்... சிரிச்சேன்...

இங்கேயும் வாங்கோ...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

Post a Comment

Related Posts