Thursday, May 18, 2006

பேஷன்

பேஷன் என்றால் வெத்தலப் பாக்கு வைத்துக் கொடுக்கும் தட்டு என்று தான் சின்னவயதில் ரொம்ப நாள் வரை எனக்குத் தெரியும். நண்பன் ஒருவனுக்கு மெட்ராஸ் வரை உறவு. ஐந்தாவது படிக்கும் போதோ என்னமோ...ஒரு நாள் காலரை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு வந்தான். கேட்டதற்கு "இதான் இப்போ மெட்ராஸில் பேஷன்" என்று சொன்னபோது தான் வெத்தலப் பாக்குக்கு அப்பாற்பட்ட ஒரு சமாச்சாரம் இருக்கிறது என்று தெரியவந்தது. "ஆமாமா எங்க சித்தப்பா பையனும் அப்படித் தான் சொன்னான்" என்று இல்லாத சித்தப்பாவை மேற்கோள் காட்டி விட்டு அந்த நண்பனையே என்னுடைய பேஷன் குருவாக ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் வீட்டில் பேஷன் ஞானம் ரொம்பக் கம்மி. பள்ளி யூனிபார்மிலிருந்து விசேஷங்களுக்கு வாங்கும் கலர் துணி வரை எல்லாவற்றிலும் மிடில் க்ளாஸ் பேஷன் தான் தலையோங்கித் தழைக்கும். ஒட்டடைக் குச்சி மாதிரி இருந்தாலும் வளர்ற பையன் என்ற பட்டம் துணி தைக்க டெய்லர் கடைக்குப் போகும் போது கண்டிப்பாக கிடைக்கும். "வளர்ற பையன்..டிராயர் ரெண்டு ஹெம்மிங் உள்ளே மடிச்சுத் தைச்சு..நல்ல பெரிசாத் தைச்சிடு மணி...தைக்கிறதெல்லாம் சீக்கிரமே சின்னதாய் போயிடறது"- மாமா சங்கு ஊதாமல் டெய்லர் மணி அளவு எடுக்கவே முடியாது. மணிக்கு ஏற்கனவே தாராள மனசு..மாமாவின் கோரிக்கையும் சேர்ந்து பாவடைக்கு கொஞ்சம் நீளம் கம்மியாக டிராயரைத் தைத்துவிடுவார். குலேபகாவல்லி எம்.ஜியார் மாதிரி ரொம்பவே தாராளமாக இருக்கும். அளவு எடுக்கும் போது "ப்ளீஸ் டைட்டாக தையுங்க" என்று மாமாக்கு தெரியாமல் என்ன தான் கெஞ்சினாலும் மணி கண்டுகொள்ளவே மாட்டார். டைட்டாக தைத்தால் தானே சீக்கிரம் சின்னதாகப் போகும் அடுத்த துணி தைக்க வருவார்கள் என்று மணிக்குப் பொழைக்கவே தெரியாது. மணி காட்டும் கைவண்ணத்தில் தயிர்வடை தேசிகன் மாதிரி இருக்கும் என் பெர்சனாலிட்டி ஓமக் குச்சி நரசிம்மனுக்கு அப்கிரேட் ஆகிவிடும். ஊரில் ஒரு குசும்பு பிடித்த மாமி "டேய் உன் டிராயரக் கொஞ்சம் தாயேன் எங்காத்து நிம்மிக்கு பாவாடை தைக்க டெய்லர் அளவு துணி கேக்கறான்" என்று ரவுசு விடும்போதெல்லாம்...மணி சீகிரம் கடையை மூட வேண்டும் என்று மனதில் கோபம் வரும். அந்த மாதிரி டவுசரெல்லாம் காலத்தாலும் அழியாது என்பதால் வேண்டுமென்றே சிமிண்ட் தரையில் பிட்டியைத் தேய்த்துக் கிழித்து விடுவேன். "மீட்டர் அறுபது ரூபாய் குடுத்து விமல் சூட்டிங்ஸ்ல எடுத்தால் அடியில அருவாமனை வைச்சுண்டிருக்கிற மாதிரி எப்பிடித் தான் கிழிக்கிறயோ..." என்று மாமி அய்யோப் பாவமாய் புலம்புவார்.

துணி தைக்க மாமா வரமுடியாமல் மாமி அளவு கொடுக்க கூட வந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம். மாமி ரொம்ப அப்பிராணி. மணிக்கு ஒரு அஸிஸ்டென்ட் உண்டு. இளைஞன். அவனிடம் தான் கடையில் இருக்கும் புஸ்தகத்திலுள்ள மீசையில்லா ஹிந்திப் பட மைனர்களைக் காட்டி சிலாகித்துக் கொண்டிருப்பேன். ஒரு தரம் அவனோடு பார்ட்னர்ஷிப் போட்டுக் காட்டிய டகால்டி வேலையில் தீபாவளிப் பேண்ட் சீக்கிரமே சின்னதாகப் போய்விட்டது. அன்றைக்கு என் புண்ணியத்தில் மணிக்கு வீட்டில் ஸ்பெஷல் அர்சனை டிக்கட்.

தொளதொளவென்று தைக்காமல் டைட்டாக இருக்கும் டைட்ஸ் கொஞ்ச நாள் தான் இருந்தது. அப்புறம் என் பேஷன் குரு "இப்போ லேட்டஸ்ட் பேஷன் பேகி பேண்ட் தான்" என்று மெட்ராஸ் பேஷனை இறக்குமதி செய்துவிட்டான். அதுவரை டைட்டாகத் தைக்கச் சொல்லி கழுத்தறுத்த மணியிடம் லூஸாகத் தைக்கச் சொல்லி பல்லவியை மாற்றியதில் மணி தான் கொஞ்சம் லூஸாகி விட்டார். பேகியில் பாக்கெட் பக்கத்தில் எத்தனை ப்ளீட்ஸ் இருக்கு என்பது மிக முக்கியம். பையன்கள் அதைத் தான் முதலில் பார்ப்பார்கள். "பொம்பளங்க புடவை கட்டுற மாதிரி...இதெல்லாம் எதுக்குப்பா" என்று மணி ரொம்பவே புலம்புவார். ஏழு ப்ளீட்ஸும் பயங்கர லூஸாக பேகியும் போட்டுக்கொண்டு கண்ணாடியில் ஸ்டைலாகப் பார்த்துக் கொண்டு தெருவில் நடந்தால் "ஸூலேர்ந்து தப்பிச்சு வந்த தேவாங்கு மாதிரி இருக்கு...இருக்கிற உடம்புக்கு இது ஒன்னு தான் குறைச்சல்...பார்த்துடா கூண்டுல பிடிச்சிண்டு போயிடப் போறான்" - ஏகப்பட்ட திருஷ்டி கழியும்.

அப்புறம் அஞ்சலி படத்தில் அந்தப் பையன்கள் எல்லோரும் சஸ்பென்டர் பெல்ட் வைத்து போட்டு வந்த ட்ரெஸ் ரொம்ப பிரபலமாயிற்று. மணியிடம் அதை விளக்குவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. மணியிடம் ஒரு குணாதிசயம் உண்டு. விஷயம் தெரியவில்லை என்று மட்டும் சொல்லவே மாட்டார். என்னை மாமா முன்னாடி எப்படி மடக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். "இந்த சஸ்பென்டர் கிஸ்பென்டர் இதெல்லாம் மூக்கு ஒழுகிற சின்னப் பசங்க டவுசர் அவுந்திரக் கூடாதுன்னு ஒரு பெல்ட பொட்டு வைச்சு தைக்கிறது...வளர்ந்த புள்ளங்க உங்களுக்கு எதுக்குப்பா...சரி எனக்கென்ன...ஆனா அதுக்கு இருபது ரூபாய் கூட ஆகும்.." என்று கரெக்டாக கத்தரி போட்டுவிடுவார். அதைக் கேட்ட மாத்திரத்தில் மாமாக்கு சஸ்பென்டர் பிடிக்காமல் போய்விடும். "அதான் இடுப்புக்கு ஜோரா பெல்ட் வாங்கிக் குடுத்திருக்கிறேனே இப்போ அதப் போட்டுக்கோ போறும் ...இதெல்லாம் அடுத்த தரம் பார்த்துக்கலாம்" என்று ஒரே போடாக போட்டுவிடுவார். "நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு" என்று எனக்கு கத்தவேண்டும் போல இருக்கும்.."சரி மாமா" என்று தலையாட்டிவிட்டு அடுத்த தரம் வருவதற்குள் சஸ்பென்டர் பேஷன் மாறி இருக்கும்.

ஜீன்ஸ் வந்த போது அது வித்த விலைக்கு வீட்டில் சமாளிப்பது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது. "சாயம் போன சாக்குத் துணிய இவ்வளவு விலை குடுத்து எவனாவது வாங்குவானா?" என்று ரொம்ப நாளாக கிடைக்கவேஇல்லை. ஊரிலிருந்து வரும் போது யாராவது வாங்கிக் கொடுத்தால் தான் உண்டு. எனக்கு பிடித்த பேஷன் மாறுதல்களிலேயே ஜீன்ஸுக்குத் தான் முதலிடம். அடிக்கடி தோய்க்க வேண்டாம், சீகிரம் அழுக்காகாது, ஆனாலும் தெரியாது, எந்த சட்டையோடு வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் எலி செத்த வாடை வந்தாலே எங்கள் வீட்டில் என் ஜீன்ஸை தோய்க்கப் போட்டுவிடுவார்கள். ஆனால் இந்தக் கிழித்து விட்டுக் கொண்ட ஜீன்ஸெல்லாம் பிடிக்காது.

ஜீன்ஸ், ரெடிமேட் என்று வந்த பிறகு கொஞ்சம் தைரியமாகி அப்புறம் மணி கடைக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.

சின்ன வயதில் பேஷன் பேஷன் என்று அவ்வளவு அலைந்ததற்கு..இப்பொழுது அவ்வளவு நாட்டமில்லை. "உங்களுக்கு பேஷன் சென்ஸ் சுத்தமா இல்லை" என்று தலமைச் செயலகம் சொல்லி துணியெடுக்கப் புறப்படும் போதெல்லாம்..."யாரு எனக்கா...ஹ... மணி கடையில கேட்டுப் பாரு நம்ம பேஷன் சென்ஸ" என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

28 comments:

துளசி கோபால் said...

டுபுக்ஸ்,

வழக்கம்போல 'தூள்' கிளப்பிட்டீங்க.

நன்றி ஃபேஷன் குருவே!
:-))))

Pavals said...

அந்த சஸ்பென்டர் பெல்ட் வேதனை உங்களுக்கும் இருக்கா.. ஸ்கூல் படிக்கும் போது ஒரு சான்ஸ் கிடைக்க வீட்டுல விடுலை.. அதை மனசுல வச்சுகிட்டு காலேஜ்ல வந்து சஸ்பென்டர் பெல்ட் போட்டு சுத்துனதெல்லாம் உண்டு.. :)

Chakra said...

suspender belt - adhu pathi theriyaadha ella tailors-um mothama pesi vechu adhe dialogue vitrukaanga.

enna daan irundaalum 7 fleets romba over daan..

btw, mani pathi sollitte.. namma Esakki pathi eppo solla pore? ;)

யாத்ரீகன் said...

>>>> அடியில அருவாமனை வைச்சுண்டிருக்கிற மாதிரி

:-)))) எங்கூட்டுல மட்டும்தேன் இப்படியெல்லாம் திட்டுவாகனு நெனைச்சேன்..

கூத்தா இருக்குங்னா :-))) எல்லோரும் அடிச்ச கூத்தெல்லாம் நெயாபகத்துக்கு கொண்டுவந்துட்டீக... டேங்க்ஸ்..

வானம்பாடி said...

//ஆனால் எலி செத்த வாடை வந்தாலே எங்கள் வீட்டில் என் ஜீன்ஸை தோய்க்கப் போட்டுவிடுவார்கள்.//

:))

என்னுடைய பேன்டுக்கு 5 ப்ளீட்ஸ் வைக்க சொன்னபோது அந்த டெய்லர் "உன் இடுப்பு சைஸுக்கு 5 ப்ளீட் எல்லாம் வைக்க முடியதுப்பா" என்று சொல்லி விட, ஹி ஹி ஹி என்று வழிந்துவிட்டு வழியெல்லாம் திட்டிக் கோண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

Anonymous said...

nalla vellai unga fashion guru komanam podrathu than fashionnu sollala

Anonymous said...

Sooper post as usual

Anonymous said...

/வளர்ற பையன்..டிராயர் ரெண்டு ஹெம்மிங் உள்ளே மடிச்சுத் தைச்சு..நல்ல பெரிசாத் தைச்சிடு /

/அடியில அருவாமனை வைச்சுண்டிருக்கிற மாதிரி எப்பிடித் தான் கிழிக்கிறயோ/

i also have heard all these funny dialogues. but that was in telugu. thats even funnier. i don't know, what those tailors are doing now a days? still people are going to them while ready-made clothes are much cheaper than them? i feel kind of soory for them.

post is really funny. i can't help but just laughed :-)))

kuttichuvaru said...

soober appu!! usual dubukku touch irukku :-)

Syam said...

aiya wonderpull...itha padichitu inga opice laye vilundhu vilundhu sirika aaramchichuten...appuram asusual makkal enna oru maathiri paarka...

Sasiprabha said...

sir mani paavam sir...

Paavai said...

rishi kapoor bell bottom fashion thaan kodumai - 42, 43 nu bottom flairoda oru belt eagle bommai vechu kanravi

baggyrandhu indha prabhu deva podrare adhu thane .. sorry - karpanai panni pathen thevangunu sonnadu thappe illai ... :)-

Anonymous said...

Capri illaama kai odanjaa maadhiri irukku, hope she comes back soon.

கைப்புள்ள said...

//"வளர்ற பையன்..டிராயர் ரெண்டு ஹெம்மிங் உள்ளே மடிச்சுத் தைச்சு..நல்ல பெரிசாத் தைச்சிடு மணி...தைக்கிறதெல்லாம் சீக்கிரமே சின்னதாய் போயிடறது"- மாமா சங்கு ஊதாமல் டெய்லர் மணி அளவு எடுக்கவே முடியாது.//

...இங்கே ஆரம்பிச்ச சிரிப்பு கடைசி வரைக்கும் நிக்கவே இல்லை. சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியா நிக்குது. கலக்கல்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வழக்கம் போல் நகையுணர்வு மிஞ்சி நிற்கிறது. கல்லூரி செல்லும் வரை ஜீன்ஸ் போட்டு அறியாதவனுக்கு நீங்கள் சொல்வது புரிகிறது.

எங்க ஊரிலயும் இப்படி ஒரு தையல்காரர் இருந்தார். தீபாவளிக்குத் துணி தைத்து அவரிடம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

நெல்லைக் கிறுக்கன் said...

Ovvaru Diwali, Pongalukkum, Tirunelvelila ulla mukiamana tailor kadaila pant thaikka kuduthu bandha panninathellam oru kalam... Palayamkottai Samathanpurathila Chaplin apdinnu oru tailor kadai. anga bell bottom panta "barell baggy" apdinnu thachu potrukom... hmmmm ippo ready made pant vanthathla irunthu neraya thayyal kadai peru kooda maranthu pochu.. Palasellam niyabaga padutheeteengaleeyyyyyyy dubukku

Usha said...

aiyo paavame...adenna fashion oda avlo sandai unga veetil. Pengalellam azhagazhaga dreaa potukarappo naan nenaichuppen en inda ambilai pasangalukku maathiram fashion sense eh illainu. Idukulle ithanai vishayam irukka? anaalum paavam neenga. adu sari, ippo adukellam pariharam panna koodado - ippo enna sanyasam? inda maadiri panna vendiyadu apram aiyo namkellam vaychadu avlodaan nu polamba vendiyadu - idane routine?

Dubukku said...

யக்கா நன்றி. உங்களுக்கு நான் பேஷன் குருவா....என்ன தவம் செய்தனை...

ராசா - அட நீங்களுமா? நான் காலேஜ் வந்தும் அத போட முடியலை...:(

Chakra - ethana irukko athana level katalam Esaki kadai - shhhhh :))

யாத்திரீகன் - ஹீ ஹீ உங்க வீட்டுலயுமா?? சொல்றதப் பார்த்தா நீங்களும் நிறைய கூத்தடிச்சிருப்பீங்க போல இருக்கே :))

சுதர்சன் - நல்ல வேளை எங்க மணி அப்பிடி சொல்லலை....(ஆனா சொல்ற மாதிரி தான் என் இடுப்பு இருந்தது)

Dubukku said...

anonymous - yes...sollala :)

WA - danks ...enna neenga puhazhareenga :p

Guru - Isit? Post it if you can.Will learn something. Yeah self employed tailors life has become difficult after readymade days hmmm I too feel sorry for them.

Uma - danks. Unga veetulayum neengalum ippidi thaan unga hubby jeans a thokka podareengala? :P

Dubukku said...

kuttichuvaru - danks appu :)

syam - danksnga...parthunga...officela prechanaina enna sollatheenga :)

Sangeetha - danks for dropping by and your compliments

sasiprabha - aamanaga mani paavamnga...ippo nenaicha appidi than irukku

paavai - haiyooo andha bell bottom mattum enakku ennamo pidikave pidikathu :). Thevangu - arrgh grrrrrrrr

WA - ennada amma puhazharangalenu parthen...kilambitangaiya kilambitanga....Aama Capri ennachu aale kanom?

கைப்புள்ள -அண்ணே வாங்கண்ணே...ரொம்ப நன்றி. நல்ல இருக்கீயளா? பொழப்பெல்லாம் நல்லாப் போகுதா? உங்க கடை பக்கம் இன்னிகுத் தான் வந்தேன்...நிறைய போஸ்ட் போட்டுட்டீங்க போல இருக்க்கே...சரி அங்க கமெண்ட் அடிக்கிறேன்...

Dubukku said...

செல்வராஜ் - மிக்க நன்றி. கல்லூரி வரை நானும் ஜீன்ஸ் போட்டதே இல்லை. ஹூம்...அது பெரிய சோகம் போங்க....

nellai kirukkan - annaa tirunelvelikku vandhu thuni edukarathee periya vishayam enakku appo. local kadaila thaan thuni edukka mudiyum mostly :) ithula nellai membalathula famous tailorgal ellam waiting list vechirupanga...enga thaikka kudukarathu :)

Usha - aamanga paiyanga padu romba kashtam. Ippo naan try pannikitu thaan irukken. ana ellam workout aha mattenguthu. Namma structure appidi :)

Anonymous said...

Capri leavela keerango, maapilai paaka poirukaangannu nenekiren. Kavala padaadheenga, ungala otturadhukku seekiram vandhuduvaanga in the meantime I shall do my best

Jeevan said...

enakku eppavuma naraiya pocket vachirukura pant thaan vandum.

இராமச்சந்திரன் said...

"எலி செத்த வாடை வந்தாலே எங்கள் வீட்டில் என் ஜீன்ஸை தோய்க்கப் போட்டுவிடுவார்கள்" - அசத்தல் போங்க...

மங்கையர் திலகம் சின்ன வயது சிவாஜி மாதிரிதான் எனக்கும் டிரவுசர் தைப்பாங்க. இடுப்புல தொப்புளுக்கு மேல ஆரம்பிச்சு கால் முட்டிக்கு கீழ வரைக்கும் இருக்கும். இன்னும் 3 வருஷத்துக்கு போடணும்னு கண்டிஷன் வேற. உங்கள மாதிரி பர்ப்போஸா கிழிக்க முடியாது. கிழிச்சாலும் ஆக்சுவல் ட்யூ டேட் வரைக்கும் கிழிஞ்சததான் தெச்சு போடனும். பின்னாடி பிட்டி பக்கம் சதுரமா ஒட்டு துணி தைச்சு பசங்க் எல்லாம் போஸ்ட் பாக்ஸ்னு கிண்டல் வேற...ஆனாலும் அந்த பிராயம் ஒரு தனி சுகம் தான். பட் எனக்கு ஒரு ஜீன்ஸ் 6th படிக்கும்போதே கிடைத்தது...என் டெல்லி மாமா உபயத்தில்...அதுக்கு அப்புறம் நம்ம வேலை பாத்த அப்புறம்தான்..

பழூர் கார்த்தி said...

பெரியண்ணண் டுபுக்கு அவர்களே, வழக்கம்போல் கலக்கி விட்டீர்கள்.. ஒரே சிரிப்புதான் போங்க.. மேலும் பல பேஷன் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்...

Dubukku said...

இராமச்சந்திரன்- அந்த போஸ்ட் பாக்ஸ் தையலும் நல்ல காமெடியா இருக்கும். பசங்க தொல்லை தாங்காதே..:)

சோம்பேறி பையன் - நன்றி தல.

expertdabbler said...

கலக்கல் தலை:))

My days(Gops) said...

arumaiaaana post'nga...nalla irrundhuchi...
btw, me sachingops=> first time here...

எலி செத்த வாடை வந்தாலே எங்கள் வீட்டில் என் ஜீன்ஸை தோய்க்கப் போட்டுவிடுவார்கள்:) jeans'ku kidaikum respect'thaaney?

Post a Comment

Related Posts