Wednesday, May 03, 2006

Party again in London(Hemel Hempstead)

லண்டனில் மீண்டும் பார்ட்டி. இந்த முறை charityக்காக fund raising event-ஆக நடக்க இருக்கிறது. பார்ட்டியில் குத்தாட்டம்,பாம்பு டான்ஸ், பல்லி டான்ஸ் என்று வழக்கமான கலக்கல்களைத் தவிர மேலும் சில ஸ்டால்கள், ஏலம் என்று களை கட்டப்போகிறது. போன தடவை சுஜாதா அம்மணி தலைமையில் பெண்களெல்லாம் சூப்பராக ஆடி ஆண்கள் நடனத்தையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஊதித் தள்ளிவிட்டார்கள். இந்த முறை ஒரு கைப்பார்த்துவிட வேண்டும் என்று "பத்தே நாளில் ப்ரேக் டான்ஸ்" க்ளாஸ் சேர்ந்திருக்கிறேன். இதோடு கும்மியும் குத்தாட்டமும் கொசுறாக சொல்லித் தருகிறார்கள். பார்ட்டி நுழைவு கட்டணம் தலைக்கு £12. அருமையான சாப்பாடு உண்டு. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ப்ரீ. என்னைப் போன்ற குழந்தை மனது கொண்டவர்களுக்கும் £12 தான் என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த முறை சங்கராபரணம் டான்ஸ் ஆடலாமா சலங்கை ஒலி டான்ஸ் ஆடலாமா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கு. எது ஆடினாலும் சந்திரமுகி ஜோதிகா டான்ஸை விட கேவலமாகத் தான் இருக்கும் என்று வீட்டு அம்மணி க்யாரண்ட்டி தருகிறார். சலங்கை ஒலி கமல் மாதிரி மனதில் வேகமெல்லாம் இருக்கிறது ஆனால் அதை அபிநயமாக மாற்றும் போது தான் எங்கேயோ மிஸ்ஸாகிறது (ஜெயப்பிரதா கூட ஆடினால் தான் ஆட்டமெல்லாம் கரெக்டாக வரும் என்று சொல்லி திரும்பவும் பட்டினி கிடக்க என்னால முடியாதுப்பா)

லண்டன் அருகிலுள்ள Hemel Hempstead-ல் மே இருபதாம் தேதி நடக்க இருக்கிறது. விழா பொறுப்புக்களை "பாட்ஷா" பாலன் கவனிக்கிறார். எதாவது தேறுமா என்று "உன்னால் முடியும் தம்பி" அடியேனும் உதவுகிற மாதிரி நடித்துவருகிறேன். வலைப்பதிபவர்கள் தான் என்று இல்லை, இதில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். r_ramn அட் யாகூ.டாட்.காம்-ல் விருப்பமிருப்பவர்கள் தொடர்பு கொண்டால் மேலும் விபரங்களைத் தருகிறேன்.

10 comments:

KC! said...
This comment has been removed by a blog administrator.
Dubukku said...
This comment has been removed by the author.
இராமச்சந்திரன் said...

கூத்து ஆரம்பிச்சாச்சா ?

£12 என்ன ? £100 தர கூட ரெடி...US to UK டிக்கெட் (இதுவும் ஒருவகையான charity தான்)அனுப்புங்க சார்....

ambi said...

பார்ட்டியா? நான் நன்னா பறிமாறுவேன். விசாவும், டிக்கெட்டும் (பிளைட் டிக்கெட்ட சொன்னேன்) அனுப்பி வைங்கோ அண்ணா. :)
btw, அண்ணா, உஷா நன்னா பாடுவா.(புலம்புவானு வாசிக்கவும்). 15 நிமிஷம் ஸ்லாட் குடுத்து பாருங்கோ. பிச்சு உதறிடுவா. :) LOL.
@usha, my annachi mail id athu thaan. poi nannaa saptutu vaa thayi.

daydreamer said...

nalla dance aaduven nalla paatu paaduven.. oru chance kuduthu parungalen... he he he..chennai london chennai tkt podhu.. meedhiya naan paathukaren

Anonymous said...

பார்ட்டி சரி.
சாப்பாடு சரி.

ஆட்டம் ஆட £12ஆ அல்லது
ஆட்டம் பார்க்க £12ஆ?

எனக்கு பார்க்கத்தான் தெரியும். டிக்கெட் விலையை குறைச்சுக்கிறீங்களா?

I will mail you soon

Balaji S Rajan said...

ஐயா நான் ரெடி.... நீங்க ரெடியா.... சலங்கை ஒலி கமல் வேற நினைப்பா.... அன்பே சிவம் ஆகி விட போறீங்க.... ஜாக்கிரதை....

Jeevan said...

namba Dubukku kalthula erangaporarupa, enna nadakapoguthunu thariella. All the Best Dubukku, nalla adunga:)

Dubukku said...

Ramachandran - //£12 என்ன ? £100 தர கூட ரெடி//

appo £700 pound anupunga..udane ticket ready panniruvom

Ambi - hehe nee athellam nalla pannuvanu theriyum. Visa and Ticket scan panni mail la anupattuma? ;P

daydreamer - adada..neengalellam partyku varanume ...
ticket scan panni email la anupava?

injey - haiii nalla kathaiya irukke...partku vanga aatam thannaala varum

Dubukku said...

Balaji - என்ன சார்....கவுத்திறீங்களே !!

Jeevan - danks Jeevan. Neenga oruthar thaan support panni irukeenga...:)

Post a Comment

Related Posts