"நேத்திக்கு மேட்ச் பார்த்தியா..."
திங்கட் கிழமையுமாய் அதுவுமாய் காலையிலேயே பக்கத்திலிருப்பவன் ஆரம்பித்துவிட்டான். சம்பளம் குடுத்து ஆபிஸுக்கு வரச் சொன்னா, கரெக்ட்டா டைமுக்கு வந்தோமா, காப்பியக் குடிச்சோமா இண்டர்நெட்ட ப்ரவுசர ஓபன் பண்ணினோமான்னு வேலையில் இறங்காமல் ... பொறுப்பில்லாத ஜென்மங்கள்.
என்ன மேட்ச் என்றே எனக்குத் தெரியவில்லை. ரவிசாஸ்திரி மாதிரி என்னையே ஏண்டா கேக்கிறீங்க...எத்தன நாள் தான் நானும் நடிக்கிறது. ஒரு மேட்சும் பார்க்க மாட்டேன் என்று ஒத்துக்கொள்ள மனம் ஒப்பாது. ஓப்பினாலும் ராயபுரம் ரவுடி மாதிரி கத்தியைக் கீழே வைக்க விடமாட்டார்கள்.
"ஜலகண்டேஸ்வரா....ஸப்பா என்னா வெய்யிலு என்னா வெய்யிலு. பார்க்கிற நமக்கே இவ்வளவு வியர்க்கிறதே விளையாடுகிற அவர்களுக்கு எவ்வளவு வியர்க்கும்" - நானும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்ப்பேன்.
"நேத்திக்கு மேட்ச் பார்த்தியா..." - விடமாட்டான் விடாக்கண்டன்
வழக்கமாக "ஆமா என்னா மேட்ச் இல்ல என்னமா விளையாடினாங்க அதுவும் செகண்ட் ஹாப்....அடடா" என்று நானும் பேச்சு கொடுத்துக் கொண்டே நைஸா ஸ்போர்ட்ஸ் பேஜில் நோட்டம் விடுவேன். க்ளூ கிடைக்கும். மானமுள்ள மனுஷனா இருந்தா க்ரிக்கெட் அல்லது வுமன்ஸ் டென்னிஸ்ன்னு ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருக்க வேண்டும். ஆனால் நம்ம பயபுள்ள செகண்டரி ஸ்கூலில் பி.டி. மாஸ்டர் ஆகப் போகிற மாதிரி புட்பால், கால்ஃப், ரக்பி, பாஸ்கட் பால், பேஸ்பால்ன்னு ஒன்றையும் விடமாட்டான். அதிலும் உள்ளூர் திருவிழா ஆட்டத்தில் தொடங்கி உசிலம்பட்டி கவுண்டி, லீக், சேம்பியன்ஸ் லீக், ப்ரீமியர் லீக், எப்.ஏ கப்புன்னு எல்லாவற்றையும் பார்த்தாகவேண்டும்.
சன் டிவி, கே.டி.வி, விஜய் டி.வி, ராஜ் டி.வின்னு சிம்பிளான லைப் நம்புளுது. சூப்பர் பவுல் பார்த்தியான்னு ஒரு நாள் கேட்டு, இங்க தானே இருந்தது நேத்து பார்த்தேனே எங்க காணும், எடுத்தத எடுத்த இடத்துல வைக்கணும்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்கன்னு நான் தேட அப்புறம் தான் சூப்பு குடிக்கிற பவுல் வேற அமெரிக்கன் சூப்பர் பவுல் வேறன்னு ... ஹும் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அப்பவாவது அந்தப் பயபுள்ள திருந்தியிருக்க வேண்டாமோ
ரொம்ப டி.வி பார்த்தா கண்ணு அவிஞ்சிரும்ன்னு எங்க மாமா சொல்லியிருக்கார்டான்னா புரியாது. சேம்பியன்ஸ் லீக்க்கும் எப்.ஏ கப்புக்கும் வித்தியாசம் தெரியாது எனக்கு. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சூப்பர் சிங்கர் பைனல்ஸ், அவுட் ஆப் தெ வேர்ல்ட் பெர்பார்மன்ஸ், எஸ்.எம்.எஸ் வோட்டிங், contestant number
இவன் மட்டுமல்ல, ஆபிஸில் கிச்சன் பக்கம் உட்கார்திருப்பதால், கெட்டிலில் வெந்நீரைப் போட்டு கொதிக்கவிட்டுவிட்டு ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என்று நாட்டுக்கு ஒருத்தர் டீக்கடை பெஞ்ச் மாதிரி க்ரிக்கெட் பற்றி அரட்டை அடிக்க வந்துவிடுவார்கள். இப்படி பல பேரை சமாளித்து இப்போதெல்லாம் போஸ்டரைப் பார்த்தே படத்தோடு மொத்தக் கதையையும் சொல்ல நிறைய தேர்ச்சி பெற்றுவிட்டேன்.
மேட்ச்சு மேட்ச்சுன்னு யாரு பெத்த புள்ளையோ இப்படி வந்து அசிங்கப் படுதேன்னு இளகிய மனது என்னுது. பழகிய மனது அவனுது. கடன் பட்டார் நெஞ்சம் போல பயபுள்ள கலங்கவிடக்கூடாது என்று நானே பலவழிகளை கடைபிடித்து ஈடுகொடுக்க ஆரம்பித்தேன்.
"சூப்பர் மேட்ச்...என்னா ஸ்கோர் இல்ல"ன்னு சில சமயம் கொக்கியப் போட்டா "ஆமா 47-17லாம் சான்ஸே இல்லை"ன்னு பல்லவி எடுத்துக் கொடுப்பான். ரக்பின்னு கூகிளாண்டவர் அனுபல்லவி எடுத்துக் கொடுத்தால் 1942ல ஒன் ஃபைன் டே இப்படித் தான் ஒரு மேட்சுலன்னு மீதியை நானே சரணம் பாடிவிடுவேன்.
"க்ரவுண்ட்ல மாய்ஸ்சர் நிறைய இருந்தது போல இருந்ததே" என்று கோடு போட்டால், டோட்டன்ஹாம் ஸ்டேடியம் அப்படித் தான்னு அவனே ரோடு போட்டு நடுவில் வெள்ளைக் கோடும் போட்டுவிடுவான்.
கம்பெனியில் நாங்கள் எல்லாரும் நிறைய வேலை பார்த்து லாபம் கொழிக்க வேண்டும் என்று முதலாளி இருபது பேருக்கு ஒரு எல்.ஈ.டி டி.வியை வாங்கி சுவற்றில் தொங்க விட்டு கேபிள் கனெக்ஷன் கொடுத்திருக்கிறார். எப்போதாவது ப்ளூம்பர்க்கும், எப்போதும் ஸ்போர்ஸ் சேனலும் ஓடிக்கொண்டிருக்கும். பிரகஸ்பதிகள் ரிமோட்டை என் டெஸ்க் பக்கத்தில் வைத்துவிடுவார்கள். 12 மணிக்கு மேட்ச் இருக்கு மறந்துராதீங்க நம்ம டுபுக்கு தான் கரெக்ட்டா இருப்பார் அதுனால அவர்ட்டயே பொறுப்ப குடுப்போம்ன்னு நம்பிக்கை தீர்மானம் போட்டுவிடுவார்கள். நம்ப ராயபுரம் ரவுடி ராசி அப்படி. பன்னிரெண்டு மணிக்கு மிட் நைட் மசாலாவே நான் கரெக்டா பார்க்க மாட்டேன் சேனலை மாத்தும் போது ப்ரோக்ராம் ஆரம்பித்து பத்து நிமிஷம் தாண்டி நிஜாம் பாக்கு விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கும்.
இந்த டி.விகாரனும் இவ்ளோ படுத்தக் கூடாது. நான் ஒரு தரம் கரெக்டா சேனலைப் போட்டுவிட்டு பாத்ரூம் போய்ட்டு வந்தால் மேட்ச் ஆரம்பித்திருந்தது. நானாவது வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம் - மெனுபாக்சரிங் டிபக்ட். என்னமா ஆடறான் இல்லன்னு சிலாகித்து ஆட்டக்காரன் நெஞ்சுல நூறு ரூபாயை சொருக அப்புறம் தான் அன்றைய மேட்ச் டிலே இது போன வருஷம் நடந்த மேட்ச்ன்னு இவர்கள் விளக்க "போன வருஷ மேட்ச்ன்னா அது நல்ல ஆட்டம் இல்லையா...என்னாங்கடா உங்க ரூல்ஸ்"ன்னு சபையை விட்டு வெளியேறி விட்டேன்.
ஆபிஸில் தான் இப்படி என்றால் தங்கமணி இதே மாதிரி மாடல் பரீட்சைகள் வெவ்வேறு சப்ஜெக்ட்டில் வைப்பார். இந்த புடவை நியாபகம் இருக்கா என்பதே அதிகம் மார்க் வாங்கும் கேள்வியாய் இருக்கும். "என்னம்மா நீ இது கூட நியாபகம் இருக்காதா, என்னா ஸ்பெஷல் டே அன்னிக்கு கூட நீ பால் பாயாசம் செஞ்சியே...ஓ மை காட் பால் பாயசம்னோடனே தான் நியாபகம் வருது பால் கேன் வாங்கனும்னு சொன்ன இல்ல இரு உடனே நல்ல கேனா பார்த்து வாங்கிட்டு வந்துடறேன் நல்ல ஸ்டாக்லாம் டக்குன்னு தீர்ந்துடும்" லாம் வேகாது. வந்ததுக்கப்புறம் பரோட்டா சூரி மாதிரி கோட்டை அழித்து திரும்பவும் முதல்லேர்ந்து ஆரம்பிப்பார்.
சமீபத்திய குரு பெயர்ச்சியிலிருந்து இப்போதெல்லாம் சிலபஸ் மாறி விட்டது.
அன்றைக்கு "ம்ம்...எப்படியிருந்தது..."ன்னு மொட்டையா அரம்பித்தார்.
"பின்னிட்டான் இன்னிக்கு பின்னாடியிருந்து ஒரு கிக் விட்டான் பாரு நேரா கோல்" - அன்றைக்கு நிஜமாகவே அந்த மேட்ச்சிற்கு பன்னிரெண்டு மணி ஆப்பரேட்டர் உத்தியோகம் பார்த்திருந்தேன்.
"ப்ச்ச் நான் அதக் கேக்கல ... சாப்பாடைக் கேட்டேன்"
குரு பெயர்ச்சி அன்றைக்குத் அமோகமாய் இருந்தது. என்ன சாப்பிட்டேன்னு சுத்தமாக நினைவு இல்லை. மேட்ச்சைப் பார்த்துக் கொண்டே ஏதோ விலுக்கு விலுக்கென்று அள்ளிப் போட்டுக்கொண்டு வந்திருந்தேன். கற்றுக் கொண்ட அனுபவங்களை தக்க சமயத்தில் பயன் படுத்திக்கொள்வீர்கள் என்று தினமலரில் போட்டிருந்தார்கள்.
"அதெல்லாம் நீ செஞ்சா எப்படியிருக்கும். டப்பாவ தொறந்தவுடனேயே வெள்ளக்கார மொட்டை மோப்பம் பிடிச்சுண்டு ஓடி வந்துட்டான். போடா அந்தாண்டன்னு விரட்டிட்டேன். சும்மா சொல்லக் கூடாது சூப்பரா இருந்தது. நம்ம படேல் திரும்பத் திரும்ப ரெசிபி கேட்டான், நான் உன்கிட்ட வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கேன்" - நரசிம்மா மாதிரி நானும் ஏதாவது சொல்லி கரெண்டுக்கே ஷாக் குடுக்கலாம்ன்னு ட்ரை பண்ணிப் பார்த்தேன்.
தங்கமணி அசரவில்லை நேராக பாயிண்டுக்கு வந்துவிட்டார். "சமாளிக்கறதப் பார்த்தா....என்ன சாப்பாடு சொல்லுங்க பார்ப்போம்"
"ஓ நான் சமாளிக்கறேன்னு நினைக்கிறயா.. so..sad.. இரு தாகமா இருக்கு ஒரு நிமிஷம் இங்கியே நில்லு தண்ணியக் குடிச்சுட்டு வந்து விலாவாரியா சொல்றேன்"
ப்ரிஜ்ட்ஜை தொறந்தால் கண்டிப்பாக கொஞ்சம் டப்பாவில் மிச்சம் இருக்கும் க்ளூ கிடைக்கும்ன்னு திறந்து பார்த்தால் சின்ன வெங்காய சாம்பார் டப்பாவில் சமர்த்தாய் உட்கார்ந்து கொண்டிருந்தது. செய்யச் சொல்லி கொஞ்ச நாளாகவே நச்சரித்துக் கொண்டிருந்தேன். எப்படி இப்படி சாப்பிட்டதே தெரியாமல் எனக்கே என் மீது கொஞ்சம் வெட்கமாய் இருந்தது.
"என்னம்மா இப்படி கேட்டுட்ட... உன்னோட சின்ன வெங்காய சாம்பார் எவ்ளோ சூப்பர், பக்கத்து சீட் மொட்டைக்கு சின்ன வெங்காயத்த எப்படி மூக்கை நறுக்கி வதக்கணும்ங்கிறது வரைக்கும் சொல்லியிருக்கேன்"
தங்கமணி பேசாமலேயே போய்விட்டார். அன்றைக்கு கடையில் சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டேன் என்பதும் வெங்காய சாம்பார் அடுத்த நாளுக்கு என்பதும் எனக்கு நியாபகத்துக்கு வந்தபோது "சூப்பர் மேட்ச்...என்னா ஸ்கோர் இல்ல"ன்னு மொட்டையுடன் மாட்ச் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.
பை தி வே.....நேத்திக்கு மேட்ச் பார்த்தீங்களா...? என்னா மேட்ச் இல்ல என்னமா விளையாடினாங்க அதுவும் செகண்ட் ஹாப்....அடடா

10 comments:
வாள்க்கைக்கு சின்ன வெங்காய சாம்பார் தான் தல முக்கியம் இவனுங்க கெடக்குறானுங்க பர்கர்தின்னி பசங்க..
Super 😊😊😊💐
ஹைய்யோ ஹைய்யோ!!!!
வீட்டுக்கு வீடு வாசப்படின்னாலும் எங்கவீட்டு வாசப்படி கொஞ்சம் சின்னது!!!
அதுவும் அஷ்வினோட அந்த ப்ளிப்பர் பார்த்தீங்களா இல்லியா? சான்சே இல்ல.....
எல்லாருமே இப்படித்தான் டோண்ட் வொர்ரி. பி ஹாப்பி.
அதிலும் எப்.ஏ கப்பு மேட்சில மேன் யுக்கு எதிரா டோனி அடிச்ச ஹோம் ரன் சூப்பர், சரிதானே.
தலைப்பே ரொம்ப அட்டகாசம் போங்க!
இந்த Games ரசிகர்கள் எல்லாம் சேர்ந்துட்டு பண்ணுற அட்டகாசம் தாங்க முடியல தலீவா. "இந்த நல்லவர் இதைப் பத்தி என்ன சொல்லுரார் பாருங்கப்பா.."னு இந்த Blogpost-ஐ இனிமே அவங்களோட reference-க்கு குடுக்கணும்!!!
Chinna vengaaya sambar maadhiri 2 maadathirku oru murai post pOttAlum, taste is authentic:-))) Enna suvai, enna maNam...
NejammAvE world cup follow paNNalaya? Super singer kooda mudinchu pOchE:-)
Shubha
Porkodi - அதானே அது எவ்ளோ முக்கியம் :)))
Poetry - danku danku as always
துள்சியக்கா - என்னுது உங்கூட்டு வாசப்படி சின்னுதா...ஆஹா அப்போ பாதி மேட்ச் பார்ப்பாரா அத்திம்பேர் ;)
அறிவிலி - பின்ன என்னம்மா விளையாடினான் அஷ்வின் ;)))
வல்லியம்மா - ஹி ஹி பின்ன உலகத்த சந்தோஷமா வச்சிகிறது தான் நம்ம வேலை ;)
அரசு - ஆமாம் ஆமாம் இல்லியா பின்ன நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்
கோபிகா - ஹீ ஹீ குடுங்க ஆனா இந்த நல்லவர்ன்னு சொன்னீங்க பாருங்க...வாங்க காபி குடிக்கிறீங்களா சாப்ட்டுத் தான் போகணும்
சுபா - ஹஹா டேங்க்யூ. இந்த நிஜமாவேன்னு கட்டவிரல்ல அழுத்தறீங்க பார்த்தீங்களா அப்போட்த் தான் 1992ல இப்படித் தான் அசாருதீன்னு ஒரு பையன் பிரில்லியண்ட்டா :P
:)
Post a Comment