Sunday, March 15, 2015

The Imitation Game

சமீபத்தில் ஆபிஸில் ஒரு சந்தர்ப்பத்தில் க்ளீஷே கேள்வி ஒன்று கேட்டிருந்தார்கள். யாராவது மூன்று பேரை தனித் தனித்தனியாக டின்னருக்கு அழைத்துப் போவதாய் இருந்தால் (to spend an evening together) யாரை அழைத்துப் போவீர்கள் என்று. என் பதிலும் க்ளீஷே தனமாய் இருந்தாலும் நான் உண்மையிலேயே சந்திக்க நினைத்த மூன்று பேரில் ஒருவர் ஹிட்லர்.

அவர் செய்த கொடுமையை ஒரு புறம்  வையுங்கள், ஆனால் என்னளவில் சர்வாதிகாரம் என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதிலும் பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் எதிர் கேள்வி கேட்காமல் மலையிலிருந்து குதி என்றால் கூட  சொன்னதை சிரமேற்று செய்யுமளவிற்கு ஒரு ஆளுமையாக இருந்தவர் என்பதாலேயே எனக்கு இவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஈர்ப்பு. இவர் கோலோச்சிக் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் இவரின் தோல்விக்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. அப்பேற்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்று எனிக்மா.

ஓரு பெரிய சைஸ் டைப்ரைட்டரை ஒரு மரப் பெட்டியில் வைத்த மாதிரி இருக்கும் எனிக்மா  - ஜெர்மானியர்களின் பொறியியல் விந்தை.  டைப்ரைட்டர் மாதிரி இருக்கும் இந்த சின்ன மெஷின் அடிக்கும் வார்த்தைகளை சங்கேத வார்த்தகைளாக மாற்றும். ஓரே மெஷின் என்கோடராகவும் டீகோடராகவும் வேலை செய்யும் அவ்வளவே. ஆனால் அப்போது ஹிட்லரை எப்படியாவது மண்டியிடச் செய்ய துடித்துக் கொண்டிருந்த அமெரிக்க, பிரெஞ்சு இங்கிலாந்து கூட்டணி கண்ணில் இந்த எனிக்மா விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது. ஒரு சின்ன எனிக்மாவில் ஒரு எழுத்தை வேறொரு சங்கேத எழுத்தாக மாற்ற 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக் கூறுகள் இருந்ததே காரணம்.  ஜெர்மன் படை இந்த எனிக்மாவை வைத்துக் கொண்டு போர் பற்றிய அனைத்து உத்தரவுகளையும் என்கோட் செய்து அனுப்ப,  இங்கே  அச்சு கூட்டணி (Allies) டம்பள்கீ  நிம்பள்கீ டும்பள்கீ  என்று கோட் செய்யப்பட வாக்கியத்தை வைத்துக்கொண்டு என்னய்யா சொல்றான் இந்தாள் ஹிட்லர்  என்று மண்டையைப்  பிய்த்துக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஒரு எனிக்மா வேறு இருந்தது. ஆனாலும் இந்த 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக் கூறுகள் காரணமாக கைப்பற்றிய மெஷினை வைத்துக் கொண்டு பிரிட்டிஷாரால் ஒரு லீவு லெட்டர் கூட அடிக்க முடியவில்லை

இது சரி பட்டு வராது என்று மேத்தமெட்டீஷியன்ஸ், ஸ்டஸ்டீஷியன்ஸ், கிரிப்டாலஜிஸ்ட், கோட் ப்ரேக்கேர்ஸ்  என்று வத வதவென்று கொஞ்சபேரை  ப்லீட்ச்லீ பார்க் என்னும் இடத்தில் "கண்ணுங்களா இந்தாங்க இந்த எனிக்மா மெஷின் என்ன செய்வீங்க்களோ  தெரியாது இத பிரிச்சு மேய்ஞ்சு இந்த கோடை உடைத்து சீக்கிரம் டீகோட் பண்ணுங்கப்பா" என்று வேலைக்கமர்த்திவிட்டார்கள். இவர்களும் டம்பள்ககீனா  ஒன்றரை டண் குண்டு என்று ஒரு வழியாய் டீகோட்  செய்தபோது லண்டனில் ஒன்றரை டண்  குண்டு விழுந்து  ஒரு வரமாகியிருந்தது. இந்த  லட்சணத்தில் ஜெர்மானியர்கள் எனிக்மாவின்  செட்டிங்கை வேறு டெய்லி ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து மாற்றிக்கொண்டிருந்தார்கள். செட்டிங் மாறிவிட்டால் என்கோடிங் லாஜிக் மாறிவிடும். இங்கே இவர்கள் கஷ்டப்பட்டு "அ"னாக்கு அனுஷ்கான்னா "ஷ"னாக்கு "ஷகீலா" என்று கண்டுபிடிக்கும் போது அங்கே ஜெர்மனியில் "ஷ"னாக்கு "வடிவுக்கரசி" என்று மாற்றிவிடுவார்கள்.  ஆக அதுவரை செய்த டீகோடிங்கை தூக்கி தேம்ஸில் போட்டுவிட்டு புதிதாய் ஆரம்பிப்பார்கள். அதற்குள் ஜெர்மனி படைகள் ஏகப்பட்ட பேரை துவம்சமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இப்பேற்பட்ட இந்த எனிக்மாவை ஆலன் ட்யூரிங் எப்படி உடைத்தார் என்பது தான் இந்த இமிடேஷன் கேம் படத்தின் சாரம்சம். அவர் இந்த எனிக்மாவை உடைக்க செய்த சயன்ஸ் சித்து வேலையே இன்றைய கம்ப்யூட்டருக்கு அடிப்படையாக இருநதது. இந்த மாதிரி படம் பார்த்து முடிக்கும் போது சிந்துபைரவியில் வரும் ஏழை மீனவன் மாதிரி "சாமீய்ய் நல்லா பாடீனீங்க சாமி"ன்னு சங்கு மாலையை கொடுக்கத் தோன்றவேண்டும். தோன்றுகிறது. படம் கிரிப்பிங்காய் இருக்கிறது. எனிக்மா இவ்ளோ பெரிய விஷயமா என்று தோண்டித் துருவத் தோன்றுகிறது. படத்தில் சில பல factuall errors இருப்பதாய் தெரிய வருகிறது. போலிஷ் தான் முதலில் இதை உடைத்தார்கள் ஆனால் அதன் பிறகு ஜெர்மானியர் இதை மாற்றி வடிவமைத்து 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக் கூறுகளைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவருகிறது.  ஆனால் படம் அதையெல்லாம் தாண்டி அட போட வைக்கிறது. Benedict Cumberbatch நடிப்பில் அசத்தியிருக்கிறார். Keira Knightleyயும் செவ்வனே செய்திருக்கிறார். படம் என்ற நினைப்பே வராமல் வரலாற்றில் கலந்து ஆலன் ட்யூரிங்கை பின்தொடர்வது தான் டைரக்டரின் வெற்றி.


நிஜத்தில் ஆலன் ட்யூரிங் எனிக்மாவை உடைக்க ஆள் எடுக்கும் போது பேப்பரில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வைத்திருப்பார். அதே போல் இந்த படத்தின் ட்ரையலரில் ஆலன் ட்யூரிங் "Are you paying Attention" என்று கேட்கும் போது (0:04) ஒரு வெப்சைட் அட்ரஸை ஐ.பி. நம்பராக புதைத்திருப்பார்கள்.(146.148.62.204). அந்த வெப்சைட்டிற்கு போனால் அங்கே அதே மாதிரி ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வைத்திருந்தார்களாம். கலக்கல்ஸ். ஆனால் அந்த மாதிரி ஒரு போட்டி இன்னும் படத்தின் வெப்சைட்டில் இருக்கிறது. பல் இருப்பவர்கள் பக்கோடா சாப்பிடலாம். --> http://theimitationgamemovie.com/


நிற்க மற்றபடி இது விமர்சனமெல்லாம் அல்ல. ஒரு ரெக்கமெண்டேஷன் அவ்வளவே. அதுவும் ஸ்ட்ராங் ;)




7 comments:

Subhashini said...

watched the movie. It is excellent.

Gopikaa said...

அருமையான போஸ்ட் தல. ஒரு வாட்டி ஆபீஸில் 'Book Review Contest ' நடக்க அதற்கு 'மென் கெம்ப்ஃப்' பற்றி எழுதியிருந்தேன். அப்புத்தகத்தில் ஏகப்பட்ட controversies இருப்பினும் எல்லாத்தையும் தாண்டி, நீங்கள் இங்கே சொன்ன மாதிரி அந்த தனி மனிதனின் ஆளுமைத் திறன் ரொம்பவே வியக்கச் செய்கிறது நம்மளை.
மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகத்திலும் ஹிட்லர் என்பவனின் காதல் ரொம்ப சுவாரசியமாய் இருக்கும். முடிந்தால் படித்து பாருங்கள். உங்களின் இந்த Film Introduction, இப்படத்தைப் பார்க்கத்தூண்டுகிறது.
பை தி வே, நீங்கள் உங்கள் ஈவிநிங் பொழுதைக் கழிக்க தேர்ந்தெடுத்த மற்ற இரண்டு பேர் யாருன்னு தெரிஞ்சிக்க க்யூரியஸ் ஆ இருக்கு!

Anonymous said...

Idu idu idhudaan true dubukku post - leave letter kooda adikka mudiyala - highlight of the post -

I remember reading on FB where they claim everything as Newton said, Vivekananda said and even Buddha said with utmost confidence that they wont come to life and say - naana sollave illaye -(cut to the chase sorry) ,effective communication is the ability to convert the most complex information to simple form - you have achieved it ... superb ... Paavai

Karthik Nilagiri said...

வாவ்...

மேலும், இதைப்போலவே புதிர்களை அவிழ்ப்பதில் ஆர்வம் இருந்தால் www.jaor.net சென்றும் பார்க்கலாம்... அட்டகாசமான தளம்...

மனம் திறந்து ...(மதி) said...

கலக்கல் பதிவு தலைவரே... படம் பார்க்கும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள். ஹிட்லரின் சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தலை தூக்குகிறது! :-) :-) :-)

Dubukku said...

Subhashini - Yes I too liked it very much

Gopikaa - You know what just realised I have watched too many movies of Hitler offlate :) The other two personalities were Peter Jackson(ofcourse) and Alexander The Great. Thanks for asking. மனிதனுக்குள் ஓரு மிருகம் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக வாசிக்கிறேன்

பாவை - நீங்க ரொம்ப புகழறீங்க. இவ்ளோவுக்கு நான் தகுதியான்னு தெரியாது. பட்..ஜில்லுன்னு இருந்தது நீங்க எழுதினதப் படிக்கும் போது. மிக்க நன்றி. I owe you a treat when we meet :)

Karthik - மிக்க நன்றி சாரே. அட்ரெஸ் கரெக்ட்டா...Under construction please try laternnu varuthu or is that the puzzle itself ? :)

மனம் திறந்து ...(மதி) - நன்றி சாரே. கண்டிப்பாக பாருங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.



Anonymous said...

Since the birth of replica watch thirty years since, Parker Fenuo watch family in the swiss replica watches has been occupying a pivotal position. Located in the fake rolex Italian harbor city of Genoa (Genoa) near the former fishing village of Park Tao Feno

Post a Comment

Related Posts