பீட்டர் ஜாக்ஸன் மேல் மிகுந்த மரியாதையும் எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு இந்த படம் ஈடுகொடுக்கவில்லை. க்ராபிக்ஸ் மாயையில் மனுஷன் கொஞ்சம் சிக்கி விட்டரோ என்று தான் தோன்றியது. ஆனால் அவர் மீது இருக்கும் மரியாதை இன்னும் குறையவில்லை. "லார்ட் ஆப் த ரிங்ஸ்" ஒன்று போதாதா? இன்னும் இருபது வருஷத்துக்குத் தாக்குப் பிடிக்கும். இந்த படம் அவ்வளவகப் பிடிக்காததற்குக் காரணம் வேறு ஒரு படம் பார்த்தேன் அதுவாக இருக்கலாம். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
படம் அருமையாக ஆரம்பிக்கிறது. கதாநாயகியை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார். நிதானமாக அதே சமயம் தொய்வில்லாமல் முதல் முக்கால் மணிநேரத்துக்கு கதை அழகாக நகர்கிறது. கிங் காங் இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று நம்மை ஆவலோடு எதிர்பார்க்கவைக்கிறார். திடீரென்று கிங் காங்குக்கு பதிலாக பழங்குடி மக்கள் வருகிறார்கள். சரி இவர்கள் எல்லோரும் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று பார்த்தால் நம்க்குப் பூச்சாண்டி காட்டிவிட்டு கதாநாயகியை கிங்க் காங்குக்கு தாரை வார்த்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.
கதாநாயகனை (கிங் காங்) அறிமுகப் படுத்துவதிலும் நேர்த்தி இருந்தது. ஆனால் அதற்கப்புறம் சொதப்பல் ஆரம்பிக்கிறது. திடீரென்று டைனோஸர்களெல்லாம் வர ஆரம்பிக்கின்றன. என் மகளுக்கு நான் டைனோசர் வரும் என்று சொல்லவே இல்லையே என்று கோபம். எனக்கே தெரியாது என்று சொன்னால் நம்பினால் தானே. அதற்கப்புறம் டைனோஸ்ர், பாச்சா, பல்லி, புழு என்று எல்லாக் கழுதைகளும் வருகின்றன - கிங் காங் மாதிரி எல்லாமே மெகா சைசில் இருக்கின்றன. அப்புறம் டைனோஸர்களுக்கும் கிங் காங்குக்கும் சண்டைக் காட்சி வேறு. ராம நாராயணன் படத்தை உல்டா பண்ணுவதற்கு ரொம்ப மெனெக்கெட வேண்டாம். கிங் காங்கை பால் குடம் தூக்க விட்டு, காட்டில் அம்மன் கோவில் முன்னே "ஊஊ" என்ற குலவையுடன் ஒரு கரகாட்டம் போட விட்டால் "காட்டைக் காத்த காளியம்மன்" ரெடி. பி,சி சென்டர்களில் பிச்சுக் கொண்டு ஓடும். ஹாலிவுட் என்பதால் கதாநாயகி பதவிசாக அழுகிறார். க்ராபிக்ஸின் பாதிப்பு கதையின் ஓட்டத்தை தடை செய்கிறது. அங்கங்கே கதை அவுட் ஆப் போகஸாகிறது. இந்த பிரம்மாண்டம் மட்டும் இல்லாவிட்டால் பாதிக்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக பேசாமல் சீரியலில் அப்பா வேஷம் கட்டப் போய்விடலாம் (ஒன்றரை வயசுக் குழந்தைக்கு).
கதநாயகி நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் கிங் காங்கைத் தான் எனக்குப் பிடித்தது.அவர் நடிப்புக்கோ அழக்குகோ ஒன்னும் குறைசல் இல்லையென்றாலும் என்னம்மோ மனதில் ஓட்டவில்லை. அசின், திரிஷாவையெல்லாம் பார்க்கும் போது எனக்கென்னமோ வீட்டுக்கு கூப்பிட்டு ரெண்டு வேளை வயிறார சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும் என்று தான் தோன்றும் எனக்கு.இந்தக் கதாநாயகியும் அது மாதிரி தான். (ஏன்ஞ்ஜீ அம்பாள் மட்டும் இதில் சேர்த்தி இல்லை). அந்த உடம்பை வைத்துக் கொண்டு கோணக்கால் ஆட்டமெல்லாம் என்னம்மாய் ஆடுகிறார்கள்? உடம்பில் பிடித்துக் கொள்ளாதோ?
கடைசிக் காட்சியில் கிங் காங் இறந்துபோகும் போது என் மகள் அழுது விட்டாள். "டாடி நாமும் ஒரு கிங்க் காங் வைத்துக் கொள்ளலாமா ப்ளீஸ்" என்று அவள் கேட்ட போது யார் காதில் விழக்கூடாது என்று நினைத்தேனோ அவர் காதில் விழுந்துவிட்டது. இன்ஸ்டென்ட்டாக ரிப்ளை வந்தது - "வேண்டாண்டா செல்லம்...நான் இங்க ஒன்ன கல்யாணம் பண்ணிக் கொண்டு கஷ்டப்படறது போறாதா..."
எனக்கும் பயங்கர கோபம் வந்து விட்டது. பின்ன இதையெல்லாம் கேட்டால் வராதா? ஒரு அளவில்லை? "கூடக் கொஞ்சம் வெங்காய சாம்பார் விடும்மா ப்ளீஸ்" என்று பயங்கரமாக கன்னா பின்னாவென்று திட்டிவிட்டேன்.
Monday, February 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
டுபுக்கு,
என்ன இருந்தாலும் தலைவரின் படத்தைப் பற்றி இவ்வளவு மட்டமாக சொல்லக்கூடாது. ஒரிஜினலோடு கம்பேர் பண்ணறச்சே, எனக்கு புது வர்ஷன் ரொம்பப் பிடிச்சது.
முக்கியமா, naomi கிங் காங்கிற்காக பண்ணும் சர்க்கஸ் வித்தைகள் போன்ற காட்சிகள். இன்னும் நிறைய இருக்கு!
//"கூடக் கொஞ்சம் வெங்காய சாம்பார் விடும்மா ப்ளீஸ்" என்று பயங்கரமாக கன்னா பின்னாவென்று திட்டிவிட்டேன்.//
உங்க கோவத்தை பார்த்தா எனக்கே பயமா இருக்குப்பா! :)
--
மட்டுறுத்தல் வந்தப்புறமாவது வர்ட் வெரிபிகேஷன எடுப்பீங்களா? இல்ல நானும் உங்க சாம்பார் பத்தி கமெண்ட் விடணுமா?
kovathile varthayai alandhu pesunga.
for eg. innum oru karandi vengaya sambhar pls.
ippadi:)
படத்தை சரியாக விமரிசிக்கவில்லையே என திட்டலாம் என பார்த்தால், கடைசியில் ஏதோ சொல்லி திட்டு வாங்காமல் தப்பித்துக் கொண்டீர்!
முதல் பாதி படத்தில் எந்தக் குறையும் இல்லை. இரண்டாவது பாதி தொய்ந்து போகக் காரணம் டைரக்டர் இல்லை, கதை அப்படி.
'திரிசா, சிம்ரன்' விசயம் எல்லாம் வூட்டு அம்மணிக்கு தெரியுமா? தெரிஞசா, ரசம் கேட்பீங்களோ?
Y only trisha, asin..? what abt jothika, Aish kutti, chechi(not for me) gopika and malayala bagavathi meera jasmin..?
manniku sambaar kodaa seyaa theriyumaa enna?
Good review. So paaka vendaam.
amam inda Trisha mele enna appadi oru "brother" ly affection. samaika poradu yaaru?
aiyo aanalum neenga ivalo kovakarara. kekave bayama irukke..Sharanya paavam!
Enna thaan irundhaalum Lord of the Rings maaadhiri varuma? Anaa onnu, Peter Jackson thanakku pidicha vishayangala (LoTR books, older version of King Kong) nalla azhaga, bramandama padama eduthudarar. I respect him a lot for that.
Andha kadaisi rendu paragraph bayangara vedikkaiya irundhahdu. (Solla marandhuten hehe)
king kong vechukalamaanu kuzhandai kettadu - choo chweeth ..
malayala bhagavathikku enna poduveenga tifanaa?
"வேண்டாண்டா செல்லம்...நான் இங்க ஒன்ன கல்யாணம் பண்ணிக் கொண்டு கஷ்டப்படறது போறாதா..."
unmaiya sonne konjam kovam vara thaan seiyum enna pannaradhunga....
But kovatha vengaaya sambaarulaathaane kaata mudiyum...
What your daughter said was cute.
What your wife said was cool. Lol.
Ramanathan - வாங்க வாங்க...தன்யனானேன்..கரெக்ட்தாங்க...இதையே ஸ்பீல்பெர்க் டைரக்ட் பண்ணியிருக்கார்ன்னு சொல்லியிருந்தா படம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லியிருப்பேன். நம்ம தலைவர்ங்கறதால எதிர்பார்ப்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.மட்டுறுத்தல் செயல்படுத்தலை...ஆனா வேர்ட் வெரிபிக்கேஷன் தூக்கிருவேன்னு நினைக்கிறேன்...
PK - ada...inime alanthu pesarenga...tips lam neraya vechurukeenga...paravalla pozhachuruveenga :P
Sri - danks for dropping by. you made my day :)
dubaivaasi - எதோ சின்னப் பைய்யன்...மன்னிச்சுருங்கண்ணா... திரிஷா, சிம்ரன் எல்லாரையும் பிடிக்காதுன்னு தானே சொல்லியிருக்கேன்...வீட்டு அம்மணிக்கு தாராளமா தெரியும். :)
Ambi - Trisha and Asin rendu perum saapittu naalana maathiri irukangale athanala thaan avanga rendu per mattum. Sambhar mattum illapa...ella samayalsum kalakals theriyuma? adutha tharam unna parkkum pothu semaiya uthai vila pohuthu unakku
Usha - illa ila padam kandippa parkalam. But dont have too much expectations. brotherly affection hehehe..
Krithika - certainly....I do respect him a lot prbly I had too much expectations on him before watching the movie...On a second thought postla romba kalasittennu nenaikaren hmm
Paavai - yes she is very attached. When Kingkong was put down she really cried. Malayala bhavatheeku tiffin ---OH YES!!
neighbour - amanga...ennamo anga exeption maathiri sound kudukareenga?
Raj - danks. Adhutha postla podaren :)
thewoman - coola aargh...:))
Uma Krishna - hehe yesss :) (you blog links are not working?)
My comment on your previous comment on my comment:
just 'dropping by' ellam illeengna. i'm visiting your blog for a long time. but i never commented. after sometime i felt guilty about not commenting. pinna naanga manam vittu sirikka daily "BLOGGI" kalachi veedu thirumbara ungala encourage pannalenna epdi? adhaan "kovam vanthu nalla pudichi" comment pannitten.
comment on this post:
really superb. Mr.Ramanathan, Dubaivaasi, usha's comments on the way of expressing your 'kovam' are as funny as your post. summa sollappadaathu. ennaama kovap padaringa. dubukkunna dubukku than.
usha, sharanya ethukku paavam? manni than romba paavam. manushan kovaththula saambaara kudichi theerthuttu, innum neraya vaikka solli kodumai paduthi iruppar. magalir kaaval nilayaththula complaint pannanum.( onga oorla MKN irukkaangna?)
[P.S: Alma mater series super. archives-ya kooda catch up panren. aana athukku ippo comment panna naan dubukku aayiduven]
Guru, Onga manni peyar daan sharanya! Avangalaithaan nanum paavamnu sonnen!!
usha,sorry-nga naan oorukku pudhusu,adhaan theriyama pochu.
(nalla samalippu dialogue-la idhuvum onnu). appo manni peru 'thangamani' illaiya? pazhaya post-la apdi padichatha dhaane nyabagam.
chinna ponnu peru than sharanya-va irukkum-nu nenachen.
aaha, Guru ippidi confuse ayittaaney....
தலைவா ரொம்ப தாங்க்ஸ். உங்களையே...அப்படீன்னு சொல்லிட்டாங்கன்னு ரொம்ப வருத்த படாதீங்க... உம்ம்.... வாழ்க்கையில் சில நேரம் அப்படி தான். உண்மை இன்னும் கொஞ்சம் வெங்காய சாம்பார் கேட்க வைக்கும்.....
Guru - hehe danks. MKN lam venamga naan aiyoo pavam. :).
haiiyooo Saranya(Sharanya) thanga Manni/ Anni
Thangamani is just agninakshathram Janakaraj way of addressing "wife".
This is a global term. Enga veetu thangamani naa my wife. Unga veetu thangamani naa unga wife. All cleara?? Kudumbathula kuzhapatha undu panniratheega :)))
Usha - nalla velai doubt clear pannineenga.Aamaa avanga paavam. Naan aiyooo paavam :P
Sri- heyyyyy ennathu Ambasamudram theriyumava????? kilinjuthu ponga...Naan born and brought up ee Ambasamudram thaanga...Aaama nearby to Ambasamudram enga? who knows we might know each other
Balaji - என்ன பாலாஜி நீங்களும் கவுத்துறீங்களே...ஆனா இப்போல்லாம் பழகிடுச்சு...ஹீ ஹீ
UngaLukku aanaalum ivvLo kovam vara koodaadhu, adhuvum thangamaNi kitta. Avanga sonnaa correct-aa dhaan irukkum. "Manaivi sol mikka mandhiram illai"-nu periyavangaLe solli irukkaanga. Yoga, meditation ellam practice paNNi kovatha konjam korachukonga :))))
Yours tuly - Thanthai sol mikka mandhiram illai thaan kelvi pattu irukken ...maathitangala? :P Irundhalum ketukkarenga...amanga yoga classes lam pohanum :))
Sri - aiyaiyooo...seri neenga entha therunu sollidunga..mail me at r_ramn at yahoo dot com. konjam carefula irukkanum....kallidaikurichila neraya chettai panni irukken. I/my wife may know you/your family.
padatha vida sambarvimarsanam than theriyuthu.
Post a Comment