இதுவும் அம்மபாட்டுத் தேங்....:)
தாமிரபரணி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி இல்லை பக்கத்தூர்களின் பெயர்களைக் கேட்டாலே உடம்பெங்கும் பரவசம் பரவும் எனக்கு. இருக்காதா பின்ன? பிறந்து வளர்ந்து இருபது ஆண்டுகள் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமா? இதில் தாமிரபரணியின் சிறப்புகள் என்னவென்று முன்னால் ஒரு பதிவிலேயே (ஆறு) சொல்லிவிட்டேன். இதற்குமேலும் பிற ஜில்லாக்காரர்களின் பேரன்பை தாங்க முடியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன். பொதிகை மலையில் உருவாகி பிரவாகமாக ஓடும் தாமிரபரணி பாபநாச மலயடிவாரத்தில் ஆரவாரமாக ஓடுவதைப் பார்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதில் தாமிரச் சத்து அதிகமிருப்பதால் இந்தப் பெயர் என்று ஒரு வழக்கும் உண்டு. தாமிரச் சத்து அதிகமாய் இருபதனால் இதில் குளித்தால் தோல் கொஞ்சம் கருக்கும் என்றும் நீச்சல் தெரியாத கூட்டம் சரடு விடும்.
இந்த வற்றாத ஜீவநதியின் தண்ணிரில் விழும் பொதிகை மலை அகத்தியர் அருவியும் ஜில்லாவில் மிகவும் பிரசித்தம். குற்றால அருவிகள் மாதிரி அகத்தியர் அருவிக்கு உயரம் கிடையாது. ஆனால் பொதிகை மலையில் நிறைந்திருக்கும் "சித்த வேர்களின்" குணங்களைத் தாங்கி வருவதால் இதில் குளித்தால் ஹெர்பல் பாத்துக்கு சமம் என்று சொல்லுவார்கள். உணமை தானா என்று மலைக்கு மேல் ஏறி அந்த சித்த வேர்களின் வாசத்தை முகர்ந்து பார்த்துவிடுவது என்று சோதிக்க கிளம்பி, வழியில் வழுக்கி விழுந்து வேறு ஏதோ ஒரு சித்த புருஷர் விட்டுச் சென்ற சாயம் போன அண்டர் வேரைப் பார்த்துவிட்டு வேரைப் பார்த்தது போதும் என்று நொண்டிக் கொண்டே திரும்பி வந்துவிட்டேன். அதிலிருந்து நானும் இதே மாதிரி சித்த வேர், பித்த தேர் என்று சங்கு ஊதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கப்புறம் அகத்தியர் அருவியில் உண்மையான சித்த வேர் சமாச்சாரம் இருக்கிறதா என்று நான் ரொம்ப ஆராய்ச்சி செய்யவில்லை. நான் வழுக்கிவிழுந்த இடத்துக்கு மேலே காட்டில் இருக்கலாம்...நக்கல் விட்டாலும் இந்த அருவில் குளித்தால் புத்துணர்ச்சியாய் இருக்கும். அருவியிலிருந்து வெளியே வரவே மனசு வராது.
ஓவ்வொரு ஊர் தண்ணிக்கும் ஒரு பெருமை இருக்கு என்று அந்தந்த ஊர்காரர்கள் மார்தட்டிக் கொள்வது மாதிரி எங்க ஊர் தண்ணியக் குடிச்சா வீரம் வரும் என்று சீவலப்பேரி பாண்டியில் நெப்போலிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். எல்லா ஊர் தண்ணிக்கும் இந்த மாதிரி "இந்தத் தண்ணியக் குடிச்சா வீரம் வரும். ஞானம் வரும், குசும்பு வரும்" என்று உசுப்பேத்துற வசனங்கள் நிறைய இருக்கும். விஜய்குமார் தாலி, தாய் மாமா, சீர் பெருமைகளை பேசாத சமயத்தில் இந்த மாதிரி ட்யலாக் நிறைய பேசுவார். விஜய்காந்தும் நிறைய படங்களில் பேசியிருக்கிறார். நானும் இவர்களையெல்லாம் நம்பி, ஊறவைத்த கொண்டக் கடலையை மென்று, கர்லா கட்டையை சுத்தி எக்சர்சைஸ் செய்து ப்ரொபைல் ஏத்தி, நிறைய தண்ணி குடித்திருக்கிறேன். வீரம் வந்ததா தெரியாது ஆனால் நிறைய தண்ணி குடித்ததின் பலனாக அன்றெல்லாம் வேறொன்று நிறைய வந்தது.
ஆண்டாளுக்கு மார்கழி மாதிரி எங்களுக்கு ஏப்ரல் மே, ஜூன். காலை ஆறு மணிக்கே "நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்" என்று கிளம்பி விடுவோம். ஆறு மணிக்கு கிளம்பி ஆறேமுக்கால் வரை குற்றாலத் துண்டு, சோப்புப் பெட்டி சகிதமாக தெரு முக்கில் வானரப் படையுடன் ஒரு அரட்டையைப் போடுவது, ஏப்ரல் மே சூடுக்கு காலை குளிர்ந்த நீரில் கால் வைக்கும் போது ஏற்படும் ஜில்லிப்பு இவற்றின் சுகமே தனி. நான் சொல்லும் இந்த ஆற்றங்கரையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். புது நெல்லு புது நாத்து, ஜென்டில்மேன், டும் டும் டும், சாமி மற்றும் இன்ன பிற நாற்பது சொச்ச படஙகளில் விஸ்தீரணமாக காட்டிவிட்டார்கள்.திவ்ய பாரதி, பானுப் ப்ரியா, த்ரிஷா போன்றோர் நீராடிய புண்ய ஸ்தலம்.
மலையடிவாரத்தில் பச்சைப் பசேலென்று வயல் சூழ இருபக்கமும் ஆலமரம் தழைத்து வளர்ந்து, ஜிலு ஜிலுவென்று காற்றில் ஆற்றங்கரைக்கு போகும் பாதையே ரொம்ப ரம்மியமாக இருக்கும். டும் டும் டும்-ல் விவேக் அன்ட் கோ மாதவன் கல்யாணத்திற்கு பஸ்ஸிலிருந்து வந்திறங்குமே அந்தப் பாதை தான் இது. முதல்வனில் அர்ஜுன் மாறுவேஷத்தில் மணிஷா மாமியைப் பார்க்கப் போகும் போது பூ வாங்குவாரே அதே பாதை தான் இது. ஜலக்கிரீடை செய்யப் புறப்படும் குரங்குகளின் அட்டகாசம் இந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.
-இன்னும் வரும்
Tuesday, June 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
Excellent Post ! Keep up such posts for the sheer nostalgia it brings. I can relate to this post soo much.. Though did not have the luxury of such things thru out the year, we did have our share of fun when we visited our maternal / paternal villages during summer hols... Those are days which I feel my kids will never get to experience :-( Isnt it true that even our parents feel that they had much more fun than what we had in our childhood. Hmmm... adhu oru azhagiya nilaakaalam... kanavinil dhinam dhinam ula pogum...this song holds good for anyone at any point of time :-)
//ஜலக்கிரீடை செய்யப் புறப்படும் குரங்குகளின் அட்டகாசம் இந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.//
ஒய், அப்ப அப்ப உண்மையும் பேசுறிர் ஒய்.
நான் தாமிரபரணி தண்ணி குடிச்சவன் ஆக்கும் என பெரும் பேச்சு பேசவனை நாங்க எல்லா தண்ணியையும் கலந்து அடிச்சவங்கனு மண்டையில் தட்டுனது எல்லாம் உங்க பதிவ பாத்தவுடன் ஞாபகத்துக்கு வரது.
என்னலே இப்படி போட்டுத்தாக்கிட்ட. நம்ம ஊரு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே . போன தடவை போனபோது சென்னையைக் கூடத் தாண்டலை. அடுத்த முறையாவது குடுத்து வச்சுருக்கான்னு பார்ப்போம். அது வரை உம்ம பதிவை படிச்சுதான் மனசைத் தேத்திக்கணும்.
//வேறு ஏதோ ஒரு சித்த புருஷர் விட்டுச் சென்ற சாயம் போன அண்டர் வேரைப் பார்த்துவிட்டு வேரைப் பார்த்தது போதும் என்று நொண்டிக் கொண்டே திரும்பி வந்துவிட்டேன்//
//திவ்ய பாரதி, பானுப் ப்ரியா, த்ரிஷா போன்றோர் நீராடிய புண்ய ஸ்தலம்.//
:)) Laugh riot.
Enakku ithai padicha udane azhugachchiya varuthu :( Evlo thaan ulagam suththinaalum, namma ooru azhagukku eedagathu.
Naan kutraalam ponadhillai. Aana, "Aan Pavathula" Pandiyanum Seethavum oru aruvi mela nadappangale, andha aruviyile kulichirukken.
Vayal parappu vazhiya nadanthu, talkies poi, Periya murukku sagitham Captain padam parthirukkom :) Ithukku thaan oorukku ponum ponumnu, adichhu solren :D
Konjam seekiram adutha pathivai podunga :)
andha aruvila vara thanni-oda ragasiyathukku all-in-all azhaguraja had an explanation in vaidhegi kaathirundhaal...:)
யே ஐய்யா திரிசா,மனிசா எல்லாம் காலடி எடுத்து வச்ச புன்னிய பூமியா அது தெரியாம போச்சே, அடுத்த தடவ போகும் போது கண்டிப்பா அங்கன போய் அந்த மண்ண தொட்டு கும்பிட்டு வரணும்
WA சொல்லீட்டு இருக்கும் capriciously_me இவுக தான நல்லாதேன் போட்டு தாக்கராக...
//இதில் குளித்தால் தோல் கொஞ்சம் கருக்கும் என்றும் நீச்சல் தெரியாத கூட்டம் சரடு விடும்.//
he hee, ROTFL.. annachi, naama ellam fair&lovely podamaleye evloo complexionaa irukkomm? (manni nakkalaa sirikara sound inga varaikkum kekkuthu!)
btw, satha vum recentaaa anniyanukkuga namma Ooru athangaraiyila kala nanachu irukkaa. (randakka randakka ppatula vara paalam)adutha postla solidunga makkalukku!
Hmm...its good...but general katturai madhiri irukku...Neenga solra idangalai paakaathavanga, unga vaarthaigalla thaan adhaiellam paapanga...so, if u make it more interesting it will be great.
hi dubukku, i'm a silent admirer of ur posts..will send some recent tveli photos from my work
give me ur mail id pls..
Inema ellorum ivara Nellai Veerar Dubukkunu thaan kupedanum. Naanum Papanasam Agathiya aruvikku poierukan, anna kulikala:( Nenga Karaiyar Damla boatla poie, Roja Falls parthu irukkengala? naan pakkla. Nalla nalla informations tharinga.. thodaratum.....:)
இப்படி ஆறு, ஊர் தண்ணி-னு சொல்லி எங்கள மாதிரி தண்ணி இல்லாத காட்டு (சென்னை) ஆளுங்கள கடுப்பேத்தாதீங்கப்பா. எங்க ஊர்ல குளிக்கிறதே பெரிய விஷயம்-னு த்ரிஷா பாத்ரூம்-ல குளிக்கறதையெல்லாம் படம் பிடிக்கறானுங்க.
போனாப்போவுது, தமாசா எழுதியிருக்கீங்க, விட்டுர்றேன்.
Cheers
SLN
Gayathri- danks for dropping by and the comments. Same here. I too feel kids these days miss all these experiences inside the concrete jungle..//this song holds good for anyone at any point of time // - can't agree more :)
நாகை சிவா- பார்த்தீங்களா...எங்கூர்காரன் மண்டையில தட்டினதப் பத்தி என்கிட்டயே சொல்றீங்க :)))
கொத்ஸ்-நான் உம்ம வயத்தெரிச்சல கிளப்பறதுக்குன்னே அடுத்த மாசம் போறேம்லா...போய் ஆத்தங்கரையில் ஒரு ஆட்டத்தப் போட்டுட்டு சைவ ரொட்டி சால்னா சாப்பிட்டு வந்தாத் தான் கட்டை வேகும்
சுதர்சன் - நன்றி :)
Kumari - ஆண்பாவம் அது எந்த இடம்ங்க?? ரொம்ப நல்லா இருக்கும் அந்த இடம். பெரிய முறுக்கு நானும் நிறைய சாப்பிட்டு இருக்கேன்...மைசூர்பா, முறுக்கு தின்னுக்கிட்டே டாக்கீஸ்ல படம் பார்க்கிற சுகமே தனி ஹூம்ம்ம்
Uma Krishna - romba thanks for your encouraging words. defntly motivates me :)
Capri - ஆஹா என்ன சொன்னார்ன்னு மறந்து போச்சே :P ஆனா நீங்க சொன்னதால எதோ நக்கலாத் தான் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன்
Syam - ஆமாமா அடுத்த தரம் டிக்கெட் வாங்கி போய் பார்த்துட்டு வந்திருங்க...நவராத்திரி காலங்கள்ல தரிசனம் செய்யறது ரொம்ப விசேஷம்
ஆமா அதே Capri தான் இவுக...ரொம்ப சேட்டைக்கார பொண்ணு..என்னம்மோ இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டன்ணி அமைச்சு இந்த நல்லவன ரொம்ப ஓட்டறாங்க...
Ambi - அடேடே அதுவும் நம்ப ஊர்தானா...படம் பார்த்து இங்க நான் சொல்லிக்கிட்டே இருந்தேன்...ஆனா அத ஒருத்தரும் நம்பல...சொல்லிடுவோம் தகவலுக்கு நன்றி
Nithya - isit? Ok will try to make it more interesting. Thanks for the feedback
Nathan - danks for dropping by. You can email me to r_ramn at yahoo dot com thanks again.
Jeevan - Danks mate.Yes Karaiyar, Papanasam, Banatheertham(Roja falls) are all beautiful places...
Londonkaran - danksga...parpom evlo episode pohuthunu :)
SLN - ஆமாங்க...சென்னை காரங்களப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கும். ஆனா உங்களுக்கு தான் வேற நிறைய விஷயங்கள் இருக்கே...எனக்கு சென்னையையும் ரொம்ப பிடிக்கும்.
ஏதோ பெரிய மனசு பண்ணி மன்னிச்சதுக்கு நன்றி
jollithirantha kaalam madiri .. oori thirindha kaalamaa??? nice post
Dubukku,
Great article once again. I was thinking about plants underwear when you are writing about sithars underwear.
More than Papanasam.. bathing in Bana theertham is a great experience. I happened to be fortunate to visit Banatheertham more than once during my posting in that area.
After reading your post.. feel like visiting once again.
Once again.. great post. Keep it up.
Venkat.
ரொம்பத் தான் அலட்டிக்காதீங்க டுபுக்கு. எங்கூர்லயும் இதே மாதிரி ஒரு வற்றாத ஜீவநதி இருக்கு. இன்னைக்கெல்லாம் அதப் பத்தி எழுதலாம். பொழச்சிப் போங்கன்னு விட்டுடறேன்.
எங்க ஆறு பேரு...
...
...
கூவம்
பேரைக் கேட்டதும் நடுங்கிட்டீங்களா? அந்த பயம் இருக்கட்டும்.
Anbulla dubuku avargalay!
chancey illainga unga blog. awesome. romba rasichu padichain. Esp. the bit about ambasamudram. Etho punyam senja mathiri nanum antha oorla oru 3 varusham vaalnthainga! Enna idam.. superb !! Athellam antha oor kaatha swasichavangalukku than puriyum.. Aana enga oor unga oorku konjamum salaichathu ilanga!! Aama enga ooru Madurai!!
priyamana,
deekshanya
Hi,
1st time here.. Nice write up and nice blog too :)
Paavai -danks. ennaga aalee kanom konja naala??
Venkat - Danks.yes Banatheertham is breathtaking and I too like it. I like Agasthiyar falls too. Naanum seekiram oru tharam poi varuven :)
கைப்புள்ள - ஆத்தி உங்க ஊர் ஆத்த நான் குறை சொல்லுவேனா?...அதுவும் வற்றாத ஜீவநதிதாங்க :)
Deekshanya - romba danks for dropping by and taking time to comment. 3 varusham ambasamudrathula irudheengala?? haiyoo eppo?? Maduraiyum nammoor pakkam thanenga :))
Ponnarasi - danks for dropping by and your compliments. Glad that you enjoyed :)
Hmm Aama, 3 varusham VKPuram-la irunthom.Ambas-la vikaasa schoola padichitu irunthain.Appa madurai coats la irunthanga appo.Aama aama maduraiyum, ambaiyum romba pakam than oru 6 mani neram than ...:-)
I have enjoyed karaiyar,pana theertham, servalar dam, agasthiyar,manimuthar falls... awesome time..too good.
take care and if time permits visit my blog too...
ahhaa dubukuu ! piniteenga!! enaku avolava tamizh padika varaadhu..aana tamil mela enaku patru jaasthi..appa amma va kuptu thaan idha padichen!! super appu...internet la englishkaarangu..chumma thames pathiyum ..america kaaranunga..niagra va pathiyum..scene podumbothu... orey kadupaa irukum!Namma tamizh naata pathi padichona naa orey kuthu kalama aagitaen!!
mudinja..neenga wikipedia la..tamil contents ah yeatharthuku try panunga!!!
Awesome post..I lived in Kadalaikurichi for 4 years and studied in AVRmV school. I can totally relate to whatever you have said.
Andha vaazhkai marupadiyum varaadhaanu iurkku...hmmmm
apo, namma thanni la kulichaa karukomngra unmai, unmai illayaa annan. unmai ninaichu la pala per ta use panniten
Post a Comment