Wednesday, July 05, 2006

ஆத்தங்கரை மரமே...2

Previous Parts --> Part 1

ஆத்தங்கரை பாதையின் ஆரம்பத்தில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கிறது. அதற்கு எதிரிலே பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு. மிகவும் பிரசித்தமான கோயில். அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு. பயிர் பாசனத்திற்காக ஓடும் இந்த வாய்க்கால், ஊரில் இருக்கும் எல்லா ஆஸ்பத்திரிகளையும் தொட்டுக் கொண்டு ஓடும். எல்லா ஆஸ்பத்திரி மருந்துக் கழிவுகளும் இந்த வாய்க்காலில் தான் கலக்கும். இதனாலேயே உள்ளூர் டாக்டர்கள் ஏதாவது வியாதியை தீர்க்க முடியாமல் திணறினால் இந்த வாய்காலிலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீரை மருந்தாக குடுத்துவிடுவார்கள், எல்லா ஆஸ்பத்திரி மருந்தும் இதில் கலந்திருப்பதால் தீராத வியாதியும் உடனே குணமாகிவிடும் என்று ஊரிலே ஒரு பலத்த நம்பிக்கை உண்டு.

சர்வரோக நிவாரணி தவிர ஆஸ்பத்திரிக்கு வரும் விசிட்டர் கூட்டத்திற்கு காலைக் கடன் சேவையும் இந்த வாய்க்கால் தான். காலை ஆறு டூ ஏழு காலைக் கடன் மற்றும் இலவச "திவ்ய தரிசன" சர்விஸ். மேற்சொன்ன காரணங்களினால் இந்த வாய்க்கால் சில இடங்களில் கூவத்திற்கு கூவிக் கூவி சவால் விடும். வானரப் படையின் சேட்டை இங்கேயே ஆரம்பித்துவிடும். ஆஸ்பத்திரி வந்ததுமே...பரபரவென்று ஆகிவிடுவார்கள். காலைக் கடன் பார்ட்டிகள் மறைவாக "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல் வருமா" என்று அக்கடா என்று உட்கார்ந்திருப்பார்கள். அது வானரப் படைக்குப் பொறுக்காது. வெறி நாய் மாதிரி கத்திக் கொண்டே அரக்கப் பரக்க ஓடிப் போவார்கள். காலைக் கடன் பார்ட்டி எதோ நாய் தான் தறிகெட்டு வருகிறது போல என்று அடித்துப் பிடித்து எழுந்திருப்பார்கள். வானரப் படை அவர்கள் பக்கத்தில் ஓடிப் போய் "வள்" என்று குலைத்து விட்டு பாதுகாப்பான தூரத்திலிருந்து சிரித்து மகிழும்.

பார்ட்டிக்கு மட்டும் கொஞ்சம் அவசரமாயிருந்து பூஜையில் கரடி மாதிரி புகுந்திருந்தோம் என்றால் அவ்வளவு தான். "வெரவாக்கிலம் கெட்ட நாய்களா...மனுஷன நிம்மதியா போகக் கூட விடமாடேங்கிறேங்களேடா.." என்று சொறிநாயை கல்லெடுத்து அடிப்பது மாதிரி விரட்ட ஆரம்பித்து விடுவார்கள். கல்லடியிலிருந்து தப்பிக்க நிறைய தரம் தலைதெறிக்க ஓடியிருக்கிறோம். சில மரத்தடி மகானுபாவர்கள் பாதி பூஜையில் தவத்தைக் கலைக்க முடியாது என்பதால் "இந்த பாவத்துக்கு நீங்களெல்லாம் மலச்சிக்கல் வந்து முக்கி மண்டைவெடிச்சுத் தான் போகப்போறீங்கன்னு" ரேஞ்சுக்கு இந்தா பிடி சாபமெல்லாம் குடுப்பார்கள்.

எங்க ஊர் ஆற்றங்கரையில் இரண்டு துறைகள் உண்டு. கல்துறை மற்றும் மண் துறை. கல் துறையில் தண்ணீரின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும். தண்ணீருக்கடியில் மணலில்லாமல் கருங்கல்லும் பாறைகள் இருக்கும். இந்த துறையில் குளிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் அடி பட்டு தண்ணீர் அடித்துக் கொண்டு போய்விடும். மணல் துறையில் சுகமாக இருக்கும். கடற்கரை மாதிரி தண்ணீருக்கடியில் மணல் இருப்பதால் அடிபடாது. ஆனால் மணலாற்றங்கரையிலும் இழுப்பு இருக்கும். இட்லி பாறை, தோசை பாறை என்று இரண்டு பெரிய பாறைகள் உண்டு. இட்லி மாதிரியும், தோசை மாதிரியும் இருப்பதால் காரணப் பெயர். இது போக சிவன் பாறை ஒன்று உண்டு. அது ஒரு மினி குன்று மாதிரி இருக்கும். மேலே பாறையில் ஒரு அழகான சிவலிங்கம் ஒன்று இருக்கும். சிவன் பாறைக்கு கீழே ஆழம் மிகவும் அதிகம். அதனால் இட்லி பாறை, தோசை பாறையில் எக்ஸ்பீரியன்ஸ் போட்டவர்கள் மட்டும் தான் சிவன் பாறைக்கு பிரமோஷன் வாங்கிப் போவார்கள். மற்றவர்களெல்லாம் அங்கிருந்து குதித்தால் சிவலோகப் பிரமோஷன் தான் என்று பயமுறுத்தி வைத்திருந்ததால் நாங்கள் முதலில் அந்தப் பக்கம் போக மாட்டோம். வெறும் இட்லி, தோசை பாறைகளோடு சாகசங்களை நிறுத்திக் கொள்வோம்.

குளிக்கும் போது இட்லி பாறைக்கும் தோசைப் பாறைக்கும் நடுவில் நீச்சல் அடித்து தொட்டுப் பிடித்து விளையாடுவது மிக சுவாரசியமாக இருக்கும். நீச்சல் தெரியாமல் இதற்கெல்லாம் பயந்தால் "பேசாமல் போய் கல்லிடைக்குறிச்சியில் குளிக்கப் போ" என்று விரட்டிவிடுவோம்.

கோவில் இருக்கிற ஊர்ல எல்லாரும் கோவிலுக்குப் போகிறார்களா என்ன? அது மாதிரி எங்க ஊர்லயும் ஆத்தங்கரைக்கு வராத சில ஜென்மங்கள் உண்டு. எங்கள் தெருவிலும் ஒரு பிரகஸ்பதி இருந்தான். அவனைப் பொறுத்த மட்டில் "குளிப்பது" என்பது சினிமாவில் நாயகர்கள் முன்னால் கதாநாயகிகள் புடவை உடுத்திக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டு மிட் நைட் மசாலாவில் வருவது. "டேய் குளிச்சியாடா" என்றால் "ஓ...முந்தாநேத்திக்கே குளிச்சாச்சு" என்று கூசாமல் பதில் சொல்லுவான். என் போறாத வேளை, "உன்னால் முடியும் தம்பி" கமல் மாதிரி நான் சும்மா இராமல் குளிப்பதினால் வரும் நன்மைகளை எடுத்துச் சொல்லி அவனை ஒரு நாள் ஆத்தங்கரைக்கு கூட்டிப் போனேன்.

-இன்னும் வரும்

17 comments:

நாகை சிவா said...

ஹ்ம்! சேட்டை பலமா தான் இருக்கு.

கதிர் said...

படிக்கும்போது நல்ல நகைச்சுவையா இருந்தது.

அடுத்து பதிவு எப்போ போட போறிங்க டுபுக்கு?

அன்புடன்
தம்பி

Anonymous said...

Hi,

This is my first visit to your blog and I'm here for more than an hour. Its already 3.00 AM here n so I got to check back later.
It was a sweet suprise when I saw tamirabarani in your life line. But I was completely flattered when I came across 'Ambai'/ambasamudram in your post.
Your post juz took me back to ambai n your writings brought the hospital in front of my eyes.
Will sure check back later and comment again.

Anonymous said...

Quality kuraiyuthu boss...izhuthu pudichu ezhuthra mathri irku...gavaninga..

Anonymous said...

Hey,

Indha padhivu suuper...nalla vizhundhu vizhundhu sirichen.

Jeevan said...

ennama aatam potuirukuraar namba dubukkum china pothula. antha vaikalludaiya marutuva kunatha solitu, kalai kadanum athula thaan lalakuthunu solle, unga kusumbu thaanatha katetingala:))

கத்திக் கொண்டே அரக்கப் பரக்க ஓடிப் போவார்கள், ithum sema comedya iruntherukkum:)) kalthurai is a Murugar temple know?

SLN said...

Much more funny than Part I, கொஞ்சம் கப்-அடித்தாலும் :))

Cheers
SLN

Anonymous said...

hilarious as usual, but why has your post frequency gone down? pls post frequently na

Syam said...

நானும் Nat சொன்னதை வழிமொழிகிறேன்... :-)

ambi said...

//இதற்கெல்லாம் பயந்தால் "பேசாமல் போய் கல்லிடைக்குறிச்சியில் குளிக்கப் போ" என்று விரட்டிவிடுவோம்.//

"துடிக்கிறது மீசை! அதை அடக்கு! அடக்கு! என்கிறது நம் உறவு!"

இதுக்காகவாது கல்லிடையின் மகிமையை பற்றி நான் போட்டி தவில் வாசிக்கறேனா இல்லையானு பாருங்கோ அண்ணா!

Note: இங்கு அடக்கு! என்பது கோபத்தை குறிக்கிறது, வேற எதையும் நான் அடக்க வில்லை, அதேல்லாம் காலையிலேயே சுகமா போயாச்சு!

frequency thaan kurayathu! btw, quality nalla thaan irukku! oru vela six sigma standards expect pannraangaloo ennavoo?

Dubukku said...

ஆமாங்க சேட்டை நிறைய பண்ணியிருக்கேன் ஆனா நல்ல பையன் பேரும் வாங்கியிருக்கேன் :)))

தம்பி - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு...போட்டாச்சு. :)

Unicorn - you have a amazing site.
Kalakareenga. Have emailed you.

All - Checkout Unicorns site...ehap patta downloadable cinemas irukku. He also has that Kakka Kakka remake version which many people were asking here before.

Nat/Syam - Romba danks for your honest feedback. I too felt that a little and it might be because of the timeline pressures. Currently stressed up a lot here and that might be the reason. Will address this in the future.

Nithya - :)) danks. Glad that you enjoyed this post

Dubukku said...

Jeevan - hehe :)) Murugan templeaa? anga sivan periya sivan temple irukku (neenga entha oora solreenga?)

SLN - danks...romba gappu adikutho?? :P

anon - danks. I am a bit stressed up here with too many tasks. Thats the reason for the reduced number of posts.sorry.

Dubukku said...

Uma - yes naan illama oru vanara padaiya...naanum undu :) Regarding post vs. frequency - yes have to balance them. Inga konjam velai jaasthiya irukarathala ozhunga nimmathiya post ezhutha mudiyala and that shows up in the quality :)

Ambi - danks dude.
//கல்லிடையின் மகிமையை பற்றி நான் போட்டி தவில் வாசிக்கறேனா இல்லையானு பாருங்கோ//

bring it on. romba unarchi vasa padatha..udambukku ahathu :P appuram naan unnoda soap kathaiya eduthu vida vendi irukkum :))

கைப்புள்ள said...

//bring it on. romba unarchi vasa padatha..udambukku ahathu :P appuram naan unnoda soap kathaiya eduthu vida vendi irukkum :))
//

நான் கேக்க ரெடி...சொல்லுங்க.
:)

Anonymous said...

Your blog is really great. Padichukitae sirikiraen. Then I look around to see whether anybody has noticed me smiling :-) U r kindling my nostalgic memories at Ambai.
- Sankar

Anonymous said...

kallidaikurichi melanthangarai keelanthangarai rendaiyum kan munnadi soopera kan munnadi kondu niruthitteenga .......
kuthukkal theru munnal vasi adhi

Anonymous said...

kallidaikurichi melanthangarai keelanthangarai rendaiyum kan munnadi soopera kan munnadi kondu niruthitteenga .......
kuthukkal theru munnal vasi adhi

Post a Comment