Monday, June 26, 2006

நன்றி

தேன்கூட்டில் எனக்கு வோட்டுப் போட்ட பதினெட்டுப் பட்டி சனங்களுக்கும் நன்றி. (அதில ஒரு வோட்டு என்னோடது).எல்லோருக்கும் நாகில் சனின்னா நமக்கு டைப் அடிக்கிற விரல்ல சனி. ஏற்கனவே தமிழ்வாத்தியாரை இந்த தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். போட்டிப் பதிவுகளை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழி என்று இல்லாத சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு, ஊருக்கு போய் பார்த்து அவருக்கு பெண் இல்லை என்று கன்பர்ம் செய்தால் தான் வோட்டு என்று வீட்டிலேயே இந்த தரம் வோட்டு கிடைக்கவில்லை.

போட்டியில ஜெயிச்சவங்களுக்குப் போய் வாழ்த்துச் சொல்லாம "என்ன போட்டில (இந்த தரமும்) தோத்துப் போயிட்டீங்க போல இருக்கு...வாழ்த்துக்கள்" என்று தோற்றதுக்கு முதல் ஆளாய் ஓடி வந்து வாழ்த்துச் சொல்லும் இந்தப் பாசக்கார பயலுவ கூட்டம் - நான் ப்ளாக் எழுதி சமபாதித்திருக்கும் மிகப் பெரிய சொத்து. மெய்சிலிர்க்கிறது எனக்கு.

சும்மா மேம்போக்காய் எழுதுவது ப்ளாக்குக்கு வேணா ஒத்துவரும் போட்டிக்குப் போனா பிரிச்சு மேய்ஞ்சிருவாங்கன்னு நன்றாகவே உரைத்திருக்கிறது. ரூம் போட்டு யோசிச்சு அடுத்த தரம் "தரம்" ட்ரை பண்ணுகிறேன். நெக்ஸ்டு மீட் பண்றேன்.

முடிப்பதற்கு முன்னால் "ஜெயிக்கிறதா முக்கியம்...இன்டிப்ளாகீஸாகட்டும், தேன்கூடு போட்டியாகட்டும்...போட்டி போட்டியா போய் பதிவெழுதி அடிபட்டு, கடிபட்டு வருஷா வருஷம் தோத்து மாவீரனா நிக்கிறான் பாரு அவந்தான்டா மனுஷன்...அவனுக்குத் தான்டா கப்பு" என்று தல பாணியில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

23 comments:

மணியன் said...

என் மீசையிலும் மண் ஒட்டவில்லை, நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் :))

மஞ்சூர் ராசா said...

போனா போறது. இதுக்கு போய் கவலைப்படலாமா?

அடுத்தமுறை உமக்குத்தான் கிடைக்கப்போகுது. தைரியமா இருக்கவும். (ஒவ்வொருமுறை தோற்கும் போதும் இதை மறக்காமல் படிக்கவும்.)

நாகை சிவா said...

விடுங்க பங்காளி, என்ன தான் உடம்பு முழுக்க எண்ணெய தேச்சிகிட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும்.
இது எல்லாம் நமக்கு புதுசா என்ன. ஹம் போ... போ...

பினாத்தல் சுரேஷ் said...

உண்மையாகச் சொல்வதென்றால், என்ன்னுடைய ஐந்து தேர்வுகளில் உங்களுடையதும் ஒன்று. அந்தப்பதினெட்டில் பினாத்தலும் ஒன்று. ஜெயித்தவை எல்லாமே என் தேர்வில் இருந்தவை என நினைக்கும்போது:-((

ilavanji said...

// "ஜெயிக்கிறதா முக்கியம்...இன்டிப்ளாகீஸாகட்டும், தேன்கூடு போட்டியாகட்டும்...போட்டி போட்டியா போய் பதிவெழுதி அடிபட்டு, கடிபட்டு வருஷா வருஷம் தோத்து மாவீரனா நிக்கிறான் பாரு அவந்தான்டா மனுஷன்...அவனுக்குத் தான்டா கப்பு" //

தலயோட இந்த மனப்பக்குவம் இருந்தா எதனையும் சாதிக்கலாம்! :)))

போனாப்போகுது விடுங்க!

அடுத்தமுறை ரூம்போட்டு மறக்காம "தண்ணியப்போடாம" எழுதி அடிப்பின்னிடுங்க! :)))

ambi said...

"தோற்க வில்லை என் உடன்பிறப்பே!
வெற்றி வாய்ப்பை இழந்திருகிறாய்.
அயராது உழை!
அதோ தெரியுது பார் இமயம்!
நாளை நமதே!"

இப்படி தான் தேற்றனும்னு நினைத்தேன்.
"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்! ரொம்ம்ம்ப நல்ல்லவன்ன்னா இருகீங்க அண்ணா!"
(மன்னி, அந்த தமிழ் வாத்தியார் வீடு எனக்கு தெரியும், நான் கூட்டிட்டு போறேன்! he hee,அவருக்கு இரண்டு பொண்ணுங்க!)

இலவசக்கொத்தனார் said...

சும்மா இலவச டீவி, கேபிள்ன்னு கலக்கலா அறிக்கை விடாம, அப்புறம் தோத்துட்டேன் தோத்துட்டேன்னு கண்ணீர் வடிச்சா என்னய்யா அர்த்தம்? அடுத்த முறையாவது என் கிட்ட ஆலோசனை எல்லாம் கேட்டு சரியா பண்ண பாரு. என்னா?

Syam said...

ம கட்டி மலைய இழுக்கற காலத்துல டிராக்டர் கட்டி இழுத்து இருக்கீங்க...கவலை படாதீங்க அடுத்த தடவை மலைய வேரோடு புடுங்கிரலாம் (இப்பிடியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டுனு ...நீங்க சொல்ரது கேக்குது)

B o o said...

பின்ன? நீங்க இப்படி தோத்து போய், நொந்து நூலாகி, வெந்து வேப்பராகி, அப்படியும் விடாம, பல்ல கடிச்சுக்கிட்டு எங்களுக்கு நன்றி சொல்றத நாங்க பாக்க/படிக்க வேண்டாமா?! தோத்து போனாலும் dignity யோட இருக்கீங்க பாருங்க? அதுக்காக உங்கள பாராட்டியே ஆகணும்! :)

aruna said...

வர வர உங்களுக்கு பின்னூட்டம் எழுதறவங்க கூட ஒரே தமாசா எழுதறாங்க !! நல்லாத்தான் இருக்கு போங்க!!

SLN said...

"என்ன போட்டில (இந்த தரமும்) தோத்துப் போயிட்டீங்க போல இருக்கு...(முயற்ச்சிக்கு) வாழ்த்துக்கள்"

SLN

[ 'b u s p a s s' ] said...

ஹ்ம்ம்ம்...

உங்க நன்றி அறிவிப்பு அறிக்கைல தோத்த கட்சி மாதிரி "என்ன தான் தோத்திருந்தாலும்... highest average of votes per viewer" அப்படி இப்படினு எதாவது சொல்லி weight காமிச்சிருக்கலாம்...

சரி உடுங்க... அடுத்த தபா ஓட்டு குத்துனவங்களுக்கு வூடு கட்டி குடுத்துடலாம்... குத்ததாவங்களுக்கும் வூடு கட்டிற்லாம்...

:)

daydreamer said...

appdithen irukkanum.... gajini mohammadhu pathi padikala.. adhukku sambandhame illama gajini nu peru vechu padam edutha oora sendhavangathaane naama... vidaama padai edunga... all the best

Anonymous said...

dubukku annachi,

naan apdi enna periya kariyam panitenu naan comment pannathai pathi post panirukeenga.en nenjai nakkiteenga ponga!!!!!

நெல்லைக் கிறுக்கன் said...

அண்ணாச்சி,
இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்...

தோல்வியக் கண்டு துவழாத திருநெல்வெலி ஆளு வே நீரு. தொடந்து எழுதி பட்டயக் கெளப்புமய்யா... நாங்களும் உமக்கு தொடர்ந்து ஓட்டு போட்டுகிட்டே இருப்போம்.

லங்கினி said...

Oottu poda kedu mudinju poocha?? 2 weeks munnadi kooda nenaichen ungalukku ootu podanumnu..Velai adhigam aagi pochu...Innikku dhan romba nalkku apporom unga blog pakkam vandhu parthaapporom dhan nyabhagam varudhu...
Inime reminder post onnu podunga...Aana andha post-aiyum yennai madiri makkal padikkalaina ?!!!
Good Luck for the next trial...
OOtta mukkiyam rasigargal dhan mukkiyam..

manasu said...

//ரூம் போட்டு யோசிச்சு அடுத்த தரம் "தரம்" ட்ரை பண்ணுகிறேன்.//

ஸ்டோரி டிஸ்கஷன் லெவலுக்கு போயாச்சு போல.... தனியா பண்ணுங்கப்பா டிஸ்கஷன்.

Dubukku said...

மணியன் - வாங்க வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாயிடுங்க....:)

மஞ்சூர் ராசா - கவலையா?? யாரு ஹ..அதெல்லாம் நேத்து தோக்கிறவனுக்கு...நான் மூனு வருஷமா இங்க தோத்துக்கிட்டு இருக்கேன்...வைரம் பாஞ்ச பாடி இது..:)

நாகை சிவா - //இது எல்லாம் நமக்கு புதுசா என்ன//- இப்ப சொன்னீங்க பாருங்க...அது.!!

பினாத்தலார் - ஐய்யா வாங்க...உங்க வோட்டும் பதினெட்டுல உண்டா ரொம்ப சந்தோஷம், மிக்க நன்றி... :))

Dubukku said...

இளவஞ்சி- வாங்க வெற்றி வீரரே...அடுத்த தரம் :)))

அம்பி - வாடா தங்கக் கம்பி...பார்துகிட்டே இரு ஆகஸ்டுல இருக்குடி உனக்கு ஆப்பு... :))

கொத்ஸ்- அதான் மேட்டரா...கரெக்டா போட்டி முடிஞ்சப்புறம் வந்து சொல்லுங்கைய்யா...சரி அடுத்த தரம் வந்துடறேன். ஆமா நீங்க வோட்டக் குத்தினீங்களா?

Shyam - //இப்பிடியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டுனு // - அதே தான் அதே தான் வோட்டு போடறீங்களோ இல்லையோ இதெல்லாம் கரெக்டா செய்வீங்களே :))))) நன்றி.

Dubukku said...

Boo- //தோத்து போனாலும் dignity யோட இருக்கீங்க பாருங்க? அதுக்காக உங்கள பாராட்டியே ஆகணும்// - அது!! நன்றி மேடம். பின்ன இன்னிக்கு நேத்திக்கா தோத்துகிட்டு இருக்கேன்...:))


Aruna - ஆமாம்...சந்தோஷமா இருக்கு :)

SLN - ஆஹா நீங்களுமா? :))

Buspass - இதுக்குத் தான் உங்கள மாதிரி படிச்சவங்களைப் பக்கதுல வைச்சுக்கனும்ங்கிறது...பேசாம நம்ம கட்சில சேர்ந்திருங்க...பதவி குடுத்திருவோம்.

Dubukku said...

daydreamer - டேங்க்ஸ்ங்க...கஜினி நம்ம சித்தப்பா தான். அவரையும் மிஞ்சுவோம்ல...

anonymous - இந்த டுபுக்கு நன்றியுடையவங்க...ஆமா நீங்க...(புனைப்) பெயராவது போடலாம்ல?

நெல்லைகிறுக்கன் -வாங்கையா...நீங்களும் பதினெட்டுல உண்டா...சந்தோஷம்வே..

கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் - ஏ என்ன சொல்லுதீரு கொஞ்சம் பொறும் அவங்களே அவுத்துவிட்ருவாங்கங்கீரா?? ஊர்க்காரன் சொன்ன சரியாத் தான் இருக்கும் :)

Dubukku said...

Langhini - ஆஹா இப்படி புள்ள பெத்து பேரு வைச்ச அப்புறம் கல்யாணத்துக்கு வந்திருக்கீங்களே....இதெல்லாம் மறக்கலாமா? சரி தாயீ அடுத்த மாசத்துக்கு இப்பவே சொல்லிட்டேன்..மறக்காம வோட்டப் போட்டிருங்க...ஆமா...

//OOtta mukkiyam rasigargal dhan mukkiyam..//
டுபுக்கு என்ன தவம் செய்தனை...ரொம்ப டச் பண்ணிட்டீங்க...முற்றிலும் உண்மை

Manasu - யோவ் ஏற்கனவே நான் வாயக் குடுத்து மாட்டிக்கிட்டு இருக்கிறது போதாதா? நீங்க வேற எடுத்துக் குடுக்கனுமா?? ஏதோ பார்த்து செய்யுங்கப்பு..

பொன்ஸ்~~Poorna said...

விடுங்க விடுங்க டுபுக்கு.. ஜெயிச்சவங்க எல்லாருமா சேர்ந்து தோத்தவங்களுக்கு ஆறுதல் விழா எடுக்கணும்னு சொல்லிடலாம் :))

Post a Comment

Related Posts