Tuesday, June 13, 2006

அன்புள்ள டைரி

அடுத்தவர் டைரியைப் படிப்பது தப்பு. என்னைத் தவிர என் அனுமதி இல்லாமல் இந்த டைரியைப் படிப்பவர்கள் நூறு வருடம் நரகத்தில் எண்ணைக் கொப்பரையில் காய வேண்டும்.

அன்புள்ள டைரி,
இன்று பூனே மாமா வந்திருந்தார். இந்தப் பேனா பரிசாக கிடைத்தது. இதில் வாட்ச் வேறு இருக்கிறது. ஆனால் எழுதிக் கொண்டே நேரம் பார்ப்பது சிரமமாக இருக்கிறது. போகப் போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் பேனா நன்றாக எழுதுகிறது. இந்தப் பேனாவை டைரி எழுத மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஓகே டைமாச்சு தூங்கப் போகனும் சி.யூ. பை

அன்புள்ள டைரி,
சாரி நேற்று நேரம் கிடைக்கவில்லை அதான் எழுதவில்லை. பூனே மாமா இன்று ஊருக்குப் போகிறார். மிச்சத்தை நாளைக்கு எழுதுகிறேன்.

அன்புள்ள டைரி,
நான் ரொம்ப மோசம். எனக்குத் தெரியும் ஒருவாரமாக டைரி எழுதவில்லை. இனிமேல் ஒழுங்காக எழுதுகிறேன். இன்று ஸ்கூல் திறந்தது. எங்க க்ளாஸில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னும் ரொம்ப பழகவில்லை. கேசவன் ரொம்ப பிகு பண்ணுகிறான். புது பையன்களை வைத்துக் கொண்டு நானே புதுசா செட் ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன். என்னுடைய பிறந்தநாள் இந்த மாதம் வருகிறது. எப்போ என்று தெரியுமா? சொல்லு பார்ப்போம்.

அன்புள்ள டைரி,
இன்று எனக்குப் பிறந்தநாள். ஹேப்பி பர்த் டே டூ மீ. இன்றிலிருந்து நான் டீன் ஏஜாம். "நிறைய சுவரசியமாய் இருக்கும் மனச ரொம்ப குழப்பிக்காம என்ஞ்சாய் பண்ணு" என்று சித்ராக்கா சொன்னார்கள். சரி என்று சொல்லியிருக்கிறேன். இனிமேல் மனதை குழப்பிக் கொள்ளமாட்டேன். சித்ராக்கா அப்பா நிறைய சாக்லேட் அள்ளிவிட்டார். கணேஷுக்கு குடுக்க முடியவில்லை. பை ஸ்டார் வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கேன்.

அன்புள்ள டைரி,
இப்போவெல்லாம் தொடர்ந்து எழுதமுடியவில்லை. மன்னிச்சுக்கோ. உன்கிட்ட மட்டும் தான் நான் மனம் விட்டுப் பேசறேன். எங்கள் ஸ்கூலில் நேற்று ஸ்போர்ட்ஸ் டே. சந்துரு சைட் அடிக்க சொல்லிக் கொடுத்தான். நானும் சந்துருவும் சேர்ந்து சைட் அடித்தோம். இன்னும் கொஞ்ச நாளில் நானும் சைட் அடிப்பதில் தேறிவிடுவேன் என்று சந்துரு சொன்னான். எனக்கு சந்தோஷமாக இருந்தது. சந்தியா தான் என் ஆள் என்று முடிவு கட்டி விட்டேன்.

அன்புள்ள டைரி,
ராஜேஷும் சந்தியாவை டாவடிக்கிறான். ஆனால் சந்தியா என்னைப் பார்த்து தான் அடிக்கடி சிரிக்கிற மாதிரி இருக்கிறது. ஸ்கூல் டேயில் சந்தியா டேன்ஸ் ஆடப் போகிறாள். நான் நாடகத்தில் உண்டு. இனிமேல் நிறைய கோட்வேர்ட் யூஸ் செய்யவேண்டும் வீட்டில் யாராவது படித்துவிட்டால் அவ்வளவு தான்.இன்று ஜ்fஇச்ஜ்fச்ட். நாளையிலிருந்து மிட் டேர்ம் ஆர்ம்பிக்கிறது. சோ படிக்கப் போகிறேன்...பை

அன்புள்ள டைரி
பரீட்சை நன்றாக எழுதியிருக்கிறேன். ஹே...! இன்றைக்கு யாருமில்லாத போது அப்பாவுடைய ஷேவிங் செட் எடுத்து ஷேவ் செய்து பார்த்தேன். ஆனால் முகத்தைப் பார்த்து அப்பா கண்டுபிடித்துவிட்டார். அதுக்குள்ள என்ன அவசரம் என்று ரொம்ப சத்தம் போட்டார். ஒரு தரம் ஷேவ் செய்தால் அப்புறம் வளர ஆரம்பித்துவிடுமாம்.ஹீ ஹீ அதுக்கு தானே ஷேவ் செய்ததே.

அன்புள்ள டைரி
ஸ்கூல் கிரிக்கெட் டீமில் நான் தான் கீப்பர். அடுத்த வாரத்திலிருந்து டோர்னமென்ட் இருக்கு. இனிமேல் டெய்லி ப்ராக்டிஸ் போகனும். உடம்பு பெண்ட் எடுக்குது. சந்தியா இன்று ஹாஸ்டலுக்குப் போகும் போது நான் கீப்பிங் செய்ய்வதைப் பார்த்தாள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. இனிமேல் அவளை இம்ப்ரெஸ் செய்வது ஈ.ஸி என்று நினைக்கிறேன். நீ தான் ஹெல்ப் பண்ணனும். ஹி ஹி இதை ஏன் உன்னிடம் கேட்கிறேன்? தெரியலை...

அன்புள்ள டைரி
டோர்னமென்டில் சொதப்பி விட்டோம். எங்க பவுலிங் சரியில்லை. விளாசிவிட்டார்கள். நான் மூனு ஸ்டெம்பிங். ஒரு மேன் ஆப் த மேட்ச். ஸ்கூலில் ப்ரேயரில் வைத்து கொடுப்பார்கள். சந்தியா கண்டிப்பாக பார்ப்பாள். இன்று க்ளாசிலிருந்து அக்னி நட்சத்திரம் போனோம். செம கூட்டம். படம் சூப்பராக இருந்தது. எல்லோருக்கும் நிரோஷா பிடித்தது ஆனால் எனக்கு அமலா தான் பிடித்தது. சந்தியாவிற்கு கொஞ்சம் கொஞ்சம் அமலா ஜாடை இருக்கிறது.

அன்புள்ள டைரி
நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சந்தியா என்னுடன் பேச ஆரம்பித்துவிட்டாள். ஸ்கூல் டேயில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். க்ளாசில் எல்லாப் பையன்கள் காதிலும் ஒரே புகை. சந்தியாவின் அப்பா எங்க ஸ்கூலில் தமிழ் எடுக்க சேரப் போகிறாராம். அனேகமாக எங்க க்ளாசுக்கு எடுப்பாராம். எப்படியாவது அவரையும் இம்ப்ரெஸ் செய்யவேண்டும். ஸ்கூல் டேயில் நாடகத்தில் தூள் கிளப்பிவிட்டேன். சந்தியா ரொம்ப பாராட்டினாள்.

அன்புள்ள டைரி
முகத்தில் நிறைய பரு வருகிறது. யாருக்கும் தெரியாமல் விக்கோ டர்மரிக் தடவிக்கொள்கிறேன். சே என் பொழப்ப பார்த்தியா. சித்ராக்கா ரொம்ப சைட் அடிக்காதடா என்று கேலி செய்கிறார்கள். சந்தியாவைப் பற்றி சித்ராக்காவிடம் சொல்லலாம என்று நினைக்கிறேன். குழப்பமாக இருக்கு. இப்போதைக்கு வேண்டாம்..அப்புறம் பார்ப்போம்.

அன்புள்ள டைரி
இன்றைக்கு கிங்பெல் ஒரு புத்தகம் கொடுத்தான். என்ன புக் என்று சொல்லமாட்டேன். நீயே புரிஞ்சுக்கோ. அடப் பாவிங்களா க்ரூப் ஸ்டடின்னு சதீஷ், சங்கர் எல்லாரும் இதைத் தான் படித்திருக்கிறார்கள். ரொம்ப தைரியம் கிங்பெல்லுக்கு. பக்கத்தூருக்குப் போய் வாங்கி வருகிறான். என்னிடமே விஷயத்தை மறைத்துவிட்டார்கள். இன்று தான் கிங்பெல் படிச்சுட்டு பெரியமனுஷனாகு என்று கொடுத்தான். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஆனால் எனக்குப் பிடிக்கலை. இனிமேல் படிக்க மாட்டேன் சத்தியம்.

அன்புள்ள டைரி
சந்தியாவும் நானும் அடிக்கடி ரொம்ப நேரம் பேசுகிறோம். அவ அப்பா என்னுடைய தமிழ் வாத்தியார். கொஞ்சம் கோபப்படுகிறார். வாத்தியார் என்றால் கோபம் வரத் தானே செய்யும். சந்தியாவிடம் காதலிக்கிறேன் என்று சொல்லிவிடலாமா என்று நினைக்கிறேன். ஆனால் பயமா இருக்கு. என்ன செய்ய? அவ மட்டும் என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். உனக்கு கல்யாணம் ஆகலங்கிற வருத்ததில என்னோட மேட்டர கவுத்திராத பிள்ளையாரப்பா. மேத்ஸ் கொஞ்சம் வீக்கா இருக்கு என்று நானும் க்ரூப் ஸ்டடி போய் வருகிறேன். இப்போ தமிழ் பேச்சுப்போட்டியில் எல்லாம் கலந்து கொள்கிறேன். வாத்தியார இம்ப்ரெஸ் பண்ணனும்ல...அடுத்து கவிதை எழுத ஆரம்பிக்கனும். "மாமா உன் பொண்ணக் குடுன்னு" பாட்டு எழுதினா பிச்சிப்புடுவார்...வேற எதாவது எழுதனும்.

அன்புள்ள டைரி,
சந்தியாவிடம் எப்படி சொல்ல எப்போது சொல்ல...பயமாய் இருக்கிறது. பப்ளிக் எக்ஸாம் வருகிறது அதற்கப்புறம் சொல்லவா? முன்னாடி சொல்லவா? அப்பா கூப்பிடுகிறார்..அப்புறம் எழுதுகிறேன் பை...


அதற்கப்புறம் டைரியில் வெத்துப் பக்கங்களே இருந்தன. எவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் எழுதியிருக்கிறேன் என்று இப்பொழுது படித்து பார்த்த போது சிரிப்பு வந்தது. சந்தியா பிறந்தநாளைக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து இதே மேஜையில் ட்ராவின் அடியில் இடுக்கில் ஒளித்து வைத்திருந்தேன். டைரியை பழைய படி ஒளித்துவைத்துவிட்டு வாழ்த்தட்டையை தேடிப் பார்த்ததில் கிடைத்தது. “நேசமுடன் சஞ்சு” என்று கையெழுத்திட்டிருந்தாள். "நேசமுடன்" என்பதற்கு என்ன அர்த்தம் என்று எவ்வளவு ராத்திரி தூக்கமில்லமல் குழம்பி இருப்பேன்?

"என்னங்க...அங்க ஹாலில் எல்லோரும் வந்திருக்காங்க...எப்பவோ ஒரு தரம் ஊருக்கு வர்றோம்...அவங்க கூட பேசாம இங்க என்னத்த மேஜைல குடைஞ்சுகிட்டு இருக்கீங்க?"

"ஒன்னுமில்லமா சும்மா நோண்டிப் பார்த்துகிட்டு இருக்கேன்...இதோ வர்றேன்"

"...சுமி, என் தமிழ் வாத்தியார் இங்க பக்கத்தூர்ல தான் இருக்கார்...இந்த தரம் போய் பார்த்துட்டு வரலாம்"

"என்ன திடீர்ன்னு இவ்ளோ நாளில்லாமல அவர் நியாபகம்..."

"ரொம்ப நல்ல வாத்தியார்மா...அவர் எடுத்த பாடத்துல தான் நான் இன்னிக்கு கதை கவிதைன்னு எழுதிகிட்டு இருக்கேன்...ஒரு நடை போய் எப்படி இருக்கார்ன்னு பார்த்துட்டு வரலாம்"

***************
பின்குறிப்பு - "வளர்சிதை மாற்றம்" - தேன்கூடு இந்த மாதப் போட்டிக்கான பதிவு இது. வழக்கம் போல் ஓட்டுப் போடாம கவுத்துங்க...நானும் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விகரமாதித்தன் வேதாளத்தைத் தேடி முருங்கைமரத்தின்...."

39 comments:

PKS said...

Though I could guess while reading that it is for Thenkoodu Poati, Nalla iruku.. very realistic.

- PK Sivakumar

Anonymous said...

sooper.romba nalla irukku, ungalukku than votu

Aravind said...

good .Aalavandhan padathula vandha madhri iruku

SLN said...

Good story, படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.

I felt, in the initial part, the style seemed to indicate a younger boy (8-9 years old) than mentioned.

Cheers
SLN

இராமச்சந்திரன் said...

நல்லா இருக்கு தல...


டைரிலயும் என்ன எழுத-னு குழப்பாமா ? போன பதிவோட எஃபக்ட்டோ? ராஜாமணிக்கு...கிங்பெல் அடைமொழி சூப்பர் (இங்க எங்க ஃப்ரென்ட்-டோட அப்பா பேரு அதுதான்.விளையாட்டு பருவத்துல நாங்களும் அப்படிதான் சொல்லுவோம்).

ஆமா தேன் கூடு-ல நான் ஓட்டு போட முடியுமா?

Anonymous said...

Dear Dubukku

Good one. Enjoyed it.

Thanks
Sa.Thirumalai

நெல்லை சிவா said...

நல்லாருக்கு, டைரியின் பார்வை.. வாழ்த்துக்கள்..

துளசி கோபால் said...

இப்படி அடுத்தவங்க டைரியை எங்களையும் படிக்க வச்சுட்டீங்களே.
எண்ணெய்க் கொப்பரைக்கு கம்பெனி குடுக்க ஆள் பிடிக்கிறீங்களா?:-)))

சீனு said...

rasithu suvaika nanraga ullathu....ennai sirikka vaithathu...nandri

Anonymous said...

ஆகா, எங்கே போனாலும் adolesence பத்தி ஆளாளுக்கு எழுதித் தள்ளிருக்கீங்க. சாதாரணமாவே உங்கள கவுத்துவுடுவாங்க எல்லாரும், இந்த தடவை hmmmm.....

Anonymous said...

Autograph-part 2

Nalla eruku.

நெல்லைக் கிறுக்கன் said...

வெளுத்துக் கட்டுதீரு வே. அப்படியே நம்ம எல்லாத்துக்கும் வாழ்க்கயில வருத அந்த டீன் ஏஜ் ஒரு தலக் காதல ரொம்ப அருமையா சொல்லிட்டீரு. என் ஒட்டு உமக்குத்தான் வே.... முடிஞ்சா கள்ள ஓட்டும் போடுதேன்...

Anonymous said...

This Article was so nice...I thought of putting vote for this...But I donno how to vote for that thenkoodu contest.. :(

Unknown said...

படிக்கச்சுவை. பழைய நினைவுகளை வரவழைக்கிறது

Kumari said...

Pretty nice style of writing :)
Enga veetla, ennoda pazhaiya bero-la innum ennoda 3 diary irukkudhu. Ovvoru thadavai adhai vasikkum podhu, che evlo abathama yosichirukomnu thonudhu :)
I guess that is the sign of growing up :p

Jinguchakka said...

Tamizh padam yellam ungalai rombave bAdhikudhu pOla. konja naal munnadi "kAdhal" padam. ippO "Autograph"aa? :-)

ambi said...

Hahaaa, too good, and the choice of words..excellant. can i put my vote in thenkoodu?

btw, ellaam sari, diaryaa manni padichaachaa? yen saarbaa nalla poori kattai onnu vaangi kudukallamnu irukken. :))

Unknown said...

ஆறு விளையாட்டுக்கு உங்களை கூப்பிட்டிருக்கேன். பாருங்க.

http://silandhivalai.blogspot.com/2006/06/blog-post_14.html

யாத்ரீகன் said...

டுபுக்ஸ்... அப்பட்டமா.. பலரோட முந்தய காலங்களை அப்படியே பிடிச்சுட்டீங்க.... நல்லா இருக்கு... ஆனா ஓட்டு வேற எங்கயோ போயிருமோனு பயமாயிருக்கு.. இந்த தடவ மன்னிச்சிருங்க..

Jeevan said...

China vayasula namba pannathaa ippa padicha Sireputhaan varum. naanum un class mate Kavitha eppa enkuda peasuvanu kathuketu irupan, palaiya nayabagam varuthu. eppadi voteu podrathu?

மனதின் ஓசை said...

நன்றாக இருக்கிறது..

ஆனால் அரம்பத்தில் கொஞ்ஜம் maturity அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது..

வெற்றி பெற வாழ்துக்கள்

Indian Voter said...

Good post... reminds a part of Autograph.

அனுசுயா said...

வித்தியாசமான முயற்சி, ஆனா ஆளவந்தான் எபக்ட் கொஞ்சம் அதிகமா இருக்கு. :)

Anonymous said...

அன்புள்ள டைரிக்கு பதிலாக தேதி போட்டீங்கனா ஆளவந்தான் தாக்கத்தைக் குறைக்கலாம். அதுவே டைரி லுக்கையும் குடுக்கும்.
மற்றபடி கதை அருமை.

-பாலாஜி

Kumari said...

unga blog thantha inspirationla naanum etho kirukki irukken. Padichu epdi irukkunu sonna, etho chinna manasu santhosapadum appu :)

Vinesh said...

Ungal valaippadhivukku idhu dhaan en mudhal pravesam..
Azhagu.. Mikka azhagu!

Dubukku said...

PKS - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்களுக்கு இந்த ஆக்கம் பிடித்தது மிக்க மகிழ்ச்சி.

anon - romba danks...votu..hehe :))

Arvind - andha "anbulla diary" lineaa? cha enakku strike ahala illana pottirukkave matten....(neraya per solli irukeenga)

SLN - that was the idea. Wanted to start it young and then make the maturity grow over a period of time but adhu romba mudiyala...

Dubukku said...

Ramachandran - தல..வாங்க தல..நல்லாருக்கீங்களா.என்னாச்சு ரொம்ப நாளாச்சு நம்ம பக்கம் வந்து....அப்பப்போ கண்டுக்கோங்க சார்....:)

தேன்கூட்டில யார் வேணா வோட்டு போடலாம்...ரெஜிஸ்தர் பண்ணிக்கனும் அவ்வளவு தான்...மறக்காம போடுங்க

Thirumalai - romba danks. Glad that you enjoyed it :)

நெல்லை சிவா - மிக்க நன்றி அண்ணாச்சி.

துளசி - ஹீ ஹீ ஆமாங்கோவ்...

Seenu - naan than danks sollanum. Glad that you enjoyed this

Dubukku said...

WA - வாங்க வாங்க...உங்க ஆசிர்வாதம் கண்டிப்பா நடக்கும் பாருங்க...நானெல்லாம் தேன்கூட்டில பரிசு வாங்கறதுகுள்ள....ஹூம் யாராவது விட்டுக்கொடுத்தா தான் உண்டு...

Sriram - romba danks. Glad that you enjoyed

anonymous - danks....Autograph...atha maathiriyum irukka enna? (that shaving part isit?)

நெல்லைகிறுக்கன் - அண்ணாச்சி...வாங்க அண்ணாச்சி...உங்க சப்போர்டு ரொம்ப தேவை...ரொம்ப நன்றிவே

Tamilpen - many thanks. I use http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm for typing the posts. Its easy type ammaa or ammA...for அம்மா. With some trial and error you will learn it easily.

Priya - danks very much for your support. The voting starts on 21st. You can vote after that...visit http://www.thenkoodu.com/contest.php after 21st for voting.

Sudda - romba danksga...(paratareenganu nenaichu sollaren :P)

Sultan - உங்களுக்குமா? மிக்க நன்றி...

Dubukku said...

Kumari - yes I too have got mine. The best part is my wife hasn't read that yet and the worst part is she will after reading this :(
(yenga vaya kilararreenga :)) )

Jinguchaka - யோவ்...ஏற்கனவே நான் பாட்டெழிதினேன்னு சொன்னா ஊர்ல ஒரு பயலும் நம்பமாட்டான்...இப்படி மண்டபதுல யாரோ எழுதிக் கொடுத்ததுன்னு ஏன்யா கதையக் கிளப்பிவிடுறீங்க??? :))

Ambi - yes ofcourse you can vote. Voting is open for anyone and The voting starts on 21st. Poori kattai thaane...naan orrukku varum pothu irukkudi unakku :)

சிலந்திவலை -அண்ணே..சீக்கிரம் போட்டுர்றேன்ணே

யாத்திரீகன் - மிக்க நன்றி. வோட்டு - உங்க பேச்சுக் கா..... :( (just kidding ...the competition is very serious this time I know)

Jeevan - enna ore malarum ninaivugala?? Voting starts on 21st. Visit http://www.thenkoodu.com/contest.php on 21st for instructions..

மனதின் ஓசை - மிக்க நன்றி. விடலைப் பருவத்தில் மெச்சூரிட்டி...நிலையானதே அல்ல அல்லவா? :)

Dubukku said...

Uma Krishna - yeah I guess that phrase was misleading. Voting starts on june 21st. Visit http://www.thenkoodu.com/contest.php on or after 21st. Many thanks for your support Uma. (thangamanikku innum diary matter theriyathu aanaa unga punniyathulla inniku therinjirum :p)

Indian Voter - Many danks...Autograph ...probly bcos of that shaving??

அனுசூயா - மிக்க நன்றி...அப்படியா என்ன??

பாலாஜி - மிக்க நன்றி.ரொம்ப சரி...அந்த வார்த்தை பிரயோகம் திசை திருப்பிருச்சுன்னு நினைக்கிறேன்.

Dubukku said...

Kumari- read that and left a comment there. Very nice...haiyooo romba potti koodi pochunga :))

Vinesh - Danks for dropping by and your compliments. Glad that you enjoyed. Cheers

Anonymous said...

Solla marandhuttene, ungallukku ottu pottu kavukka solli Gilli la recommendation post onnu potturukken :)

Balaji S Rajan said...

Dubukks as usual kalakiteenga. Romba kurumbu pola irukku chinna vaysula.......

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

யாத்ரீகன் said...

டாப் 10-ல வந்துட்டீங்க டுபுக்ஸ்... வாழ்த்துக்கள்... ஒரு ஸீரோ மட்டும் அடுத்த தடவ தூக்கியாச்சுனா கலக்கிறலாம்.. உங்களால முடியும்.. அட்வான்ஸ் வாத்துக்கள்.. !! :-)

Anonymous said...

Good One !!!

CVR said...

அழகான கதை.
அப்படியே உங்க டைரியா படிச்ச மாதிரியே இருந்தது.

வாழ்த்துக்கள்!! :-)

நாமக்கல் சிபி said...

//சந்தியா தான் என் ஆள் என்று முடிவு கட்டி விட்டேன்//

வாழ்த்துக்கள்!


எண்ணெய்க் கொப்பரையிலிருந்து
நாமக்கல் சிபி

Post a Comment

Related Posts