Monday, April 10, 2006
Memoirs of a Geisha
சில படங்கள் அழவைப்பதே நோக்கமாக எடுக்கப்பட்டிருக்கும். நாமும் துட்டைக் குடுத்துப் பார்த்து விட்டு பிழிய பிழிய அழுது, கண்ணீரில் ரெண்டு பெட்ஷீட்டும்,நாலு தலைகாணி உறையும் அலசிப் போட்டுவிடுவோம். இந்த மாதிரி படங்களில் எனக்குப் பெரிய ஆர்வம் கிடையாது. ஆனால் அழவிடாமல் சோகத்தை சொல்லமுடியும். அழமாட்டோம் ஆனால் தொண்டையை அடைக்கும். சில சமயம் அதிகமில்லை ஜென்டில்மேன் (மேன்..வுமன் கிடையாது) ஒரு துளிக் கண்ணீர் கண்களில் எட்டிப் பார்க்கும். படம் பார்த்து இரண்டுமணி நேரத்துக்கு கதாநாயகியை நினைக்காமல் கதையை நினைத்துக் கொண்டிருப்போம். அழகி, சலங்கை ஒலி ஆகிய படங்களில் எனக்கு இந்த அனுபவம் நேர்ந்து இருக்கிறது.(கதாநாயகி மேட்டர் சலங்கை ஒலிக்குப் பொருந்தாது) இதற்கடுத்த கொஞ்சம் குறைவான சோகம் என்பது ஒரு துளி கண்ணீரைத் தவிர்த்து மற்ற எல்லா பாதிப்பையும் ஏற்படுத்துவது. "Melancholy" என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது மாதிரி. மெல்லிய சோகம் பின்னனியில் இழையோடிக் கொண்டிருக்கும். இந்தப் படம் என்னைப் பொறுத்த வரையில் அந்த வகையில் சேர்ந்தது.
ஆபிஸில் மேனேஜர் ஒரு பத்து டி.வி.டி குடுத்த போது "மத்த குப்பைகளைப் பார்ப்பதற்கு முன்னால் இந்தப் படத்தைப் பார் என்று ஸ்பெஷலாகச் சொன்னார். ஒரு அதிசயமான சனிக்கிழமையில் காலை ஆறு மணிக்குத் தூக்கம் வராமல் (இல்லாவிட்டல் பத்தரை மணிக்கு குறைந்து விடியாது) தனியாக நான் மட்டும் பார்த்த படம். வீட்டில் செய்யும் உப்புமா மாதிரி சில சில இடங்களில் தொண்டையை அடைத்து ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
"கெய்ஷா" என்பது ஜப்பானில் நம்மூர் தேவதாசி முறை மாதிரி. "கெய்ஷா"வும் தேவதாசிகள் மாதிரி முதலில் கலை சம்பந்தப் பட்டதாகவே ஆரம்பித்து, பின் செக்ஸுடன் கலப்படமாயிற்றோ என்று இந்தப் படம் என்னை நம்ப வைக்கிறது. சரித்திரப் பிண்ணனியை ரொம்ப நோண்டாமல் எழுதுகிறேன் தவறாக இருக்கலாம். படம் ஒரு கெய்ஷாவாக வரும் பெண்ணின் வாழ்க்கையை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் ஆறு வயதுப் பெண்ணாக கெய்ஷாவாக விற்கப் பட்டு, அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தும், அங்கு கெய்ஷாவாக இருக்கும் ஒரு பெண்ணின் பகையினாலும் கெய்ஷாவாக ஆகமுடியாமல் அடிமையாக வாழுகிறாள். அன்பே கண்டறியாமல் வளரும் சிறுமியின் மனதில் ஒரு சேர்மனின் அன்பான வார்த்தைகள் அப்பிடியே பதிந்து விடுகின்றன. அவர் கொடுத்த கைக்குட்டையை அப்பிடியே அன்புடன் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கிறாள். பின்னாளில் கெய்ஷாவாக மாறி அதே சேர்மனை சந்திக்கும் போது அன்பு அவளுள் காதலாகப் பெருக்கெடுக்கிறது. அவளுடைய கற்பை வேறொருவர் ஏலத்தில் எடுக்கும் போதும் ஜெனரலின் மேலிருக்கும் அவளுடைய காதல் சிறிதும் குறையவில்லை. விதி வசத்தால் பின்னாளில் சேர்மனே அவளை வேறொருவருக்கு ஒரு காரியத்துக்காக அவளைக் கேட்க்கிறார். சேர்மனுக்காக ஒத்துக் கொண்டாலும் அவள் தன் காதலை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் படும் அவஸ்தைகள் நெகிழச் செய்கின்றன. கடைசியில் ஒரு வழியாக சேர்மனும் அவளின் காதலை புரிந்து கொண்டு ஒன்று சேருகிறார்கள்.
மிக அழுத்தமாக எடுத்திருக்கிறார்கள். தேவையில்லாத ஜேம்ஸ்பாண்டு ஆபாசத்தைக் கலக்காமல் கதைக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் ஜப்பானிய பெண்ணுக்குப் பதிலாக சீனப் பெண் நடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் சீனப் பெண்ணும் அருமையாக நடித்திருக்கிறர். அதுவும் அந்த ஆறு வயது சிறுமியின் நடிப்பு மிகப்பிரமாதம். சியோ கெய்ஷா பாடங்களை கற்றுக்கொண்டு சயூரியாக மாறும் போது காமசூத்திராவின் சாயல்கள் இருப்பது மாதிரி எனக்குப் பட்டது.
ஒரு உணர்ச்சிப்பூர்வமான ப்ளாக் படித்த மாதிரி இருந்தது. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள். அருமையான படம்.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
Kathaila nerrya parts..tamil padam- "Thendral" maathiri irukku......
டுபுக்கு, இப்பதான் நாவல் படித்து முடித்தேன்! படம் பார்க்கவில்லை!. நாவலில் இருந்த அதே ஆழம் காட்சி அமைப்புகளில் இருப்பதாக கேள்விப்பட்டேன்! உடனே இந்த வாரம் போய் பார்க்கணும்! எல்லாம் உங்கள் விமரிசனத்தூண்டல் தான்!
(இந்த word verification ஐ எடுப்பா, ஒரே பேஜாரா இருக்கு, கமண்ட்டு முடிச்சு இங்கிலிபீஷுல எழுத இன்னொரு கிளிக்கி, ஏகப்பட்ட வேலைபா!)
Very well expressed.. I like the first paragraph.
nalla thiraivimarsanam eluthiringa. kadippa sekaram intha padam pakanum. antha Geisha, romba alaga irukkaranga, avankalukaha vavathu oru murai pakanum.
padam nalla padam. anaal unga vimarsanam adai vida super!
enakkum anda azghagi, salangai oli maadiri anubhavam undu - mudal mariyadai apram moonram pirai kooda appadithaan..
Oru vazhiya Internet Explorer kaadhai thirugi, onga blog-a load panna vechen. Geisha, hmmm, neenga solreenga, aana padathoda trailer parthaappo "Stay away"nu oru thought. Let's see, exam mudinjadhukkapram may be I'll catch it.
BTW,
"ஒரு துளிக் கண்ணீர் கண்களில் எட்டிப் பார்க்கும்"
If you want more of that kind, let me know, I have a couple of suggestions.
Senti padam onnu rendu paarthirukken (aamam, onnu rendu thaan :) ) Cinema paarthu azhuvennu nenaichu kooda paarkalai.
Can anyone tell me how to write blogs in tamil. Do we need to have any special font? or this is only posisble in blogspot. any settings???? Please help.
One of my Fav books. I purchased it in Bombay airport and finished the book non-stop before i got to Frankfurt.
-muthuamy
andha chinna ponnu .. dukkam thodnaiyai adaichuduthu pakkumbodhu.. million dollar baby, sila nerangalil sila manidargal.. sollitte polaam ..
Eniya Tamil Putthandu Naal Vazthikkal Dear Friend:)
I have to look for this movie @ local library.
இப்படி நல்ல படமா மொதல்லியே பாத்து லிஸ்ட குடுத்திட்டீங்கன்னா... நாங்க டெஸ்ட் பண்ணவேண்டிய வேலை மிச்சம்.
நன்றி.
Just saw the film after your recommendations. I didnt feel much emotional. May be, becausing finding such a different movie in Hollywood may be a notable. It surely is good. But not that emotional as compared to the Tamil films you have listed in the blog.
My view: A beautifully told story unexpected in Hollywood. But cant compete with our own Tamil classics.
PS: I dont want to write Tanglish. can anyone tell me how to write in Tamil in blogs please.
Cipher - hmmm thendral romba pidikala enakku. romba soham illa? adhanala enakku appidi theriyalaiyonu nenaikaren
வெளிகண்ட நாதர் - எனக்கு படம் பிடிச்சிருந்தது. கதையமைப்பு தான் ரொம்ப பிடிச்சுது. சிம்பிளா இருக்கு. வேர்ட் வெரிபிகேஷன் தூக்கிட்டேன் சார்
the woman - danks mam. Have you seen this film?
Jeevan - dankyou. Happy new year. Padam konjam heavy subject prepared a paarunga. nalla padam.
Usha - danks. Mudhal mariyathai enakku romba pidikathu. Moonram pirai is a nice movie :)
Krithika - greaatt!! Would like to hear your suggestions :) Indha movie avlo sogam kidaiyathu...but nice narration.
injey - I use http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm Its a simple but powerful tool for unicode tamil convertion. the bottom converted text is tamil unicode which you can cut and past.Try that.Hope this helps.
Regarding the film...yes agree its not as emotional as the tam movies lists (I have said the same in the post too). Yes I too like the narration. Tamil Classics are great but there are very few films which overcome the commercial demands to portray the finer feelings is my personal opinion. But given a chance our people certainly can do better than hollywood.
Muthu- Haven't read the book version yet.Heard that is great as well.
Paavai - yes andha chinna ponna parkum pothu enakkum romba feelinga irundhuthu. Haven't seen Million dollar baby yet. Will make a note to see that danks :)
இராமச்சந்திரன் - பாருங்க நல்ல படம். ஆனா ஹெவி சப்ஜெக்ட் :)
டுபுக்கு.. மற்றவர்களின் கருத்துளிருந்து கொஞ்சம் வேறுபடுகின்றேன்.. அழுத்தமான திரைக்கதை கொண்ட ஒரு படத்தை விமர்சிக்கும்போது மெல்லிய நகைச்சுவை இருக்கலாம், நையாண்டி இருக்க கூடாது என்று என் சிற்றறிவுக்கு தோண்றியது.... காரணம், விமர்சனத்தையும் சொல்ல வந்த விஷயத்தையும் அது திசை திருப்பி விடுமென்பதால்..
சத்யம் தியேட்டரில் இந்த படம் பார்க்கச்சென்றேன்... அவார்டு படம் யாரும் வரமாட்டார்கள் என்று எண்ணியே, ஏகப்பட்ட ஜோடிகள்... "படத்தை இரசிக்கனும்னு" தனியா போன என்னை நோகடித்துவிட்டார்கள் :-))
யாத்திரீகன் - உங்கள் கருத்தோடு முழுமையாக ஒத்துப் போகிறேன். "ஆதலால் இந்தப் பதிவில் என் வாலைச் சுருட்டிக் கொள்கிறேன் என்று போடவும்" நினைக்கவும் செய்தேன், ஆனால் செயல் படுத்தவில்லை. ஆனால் இந்தப் படத்தைப் பற்றி பேசும் போது அவற்றைத் தவிர்த்திருக்கிறேன் அதற்கு முந்திய பத்தியில் தான் கொஞ்சம் வால்தனம் :)
Post a Comment