Friday, April 07, 2006

நல்லதுக்கு ஒரு பதிவு...

ஒழுங்குமுறைப் படுத்துகிறோம் என்று மதுரையில் நலிந்தோருக்கான ஹாஸ்டலில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். “ரெண்டு க்ரோசின் மாத்திரை குடுங்கள்” என்று சத்தமாய் கேட்டு வாங்குமளவுக்கு, சகோதரிக்கோ, அம்மாவுக்கோ, மனைவிக்கோ மாதவிடாய் காலங்களில் கடைக்குச் சென்று சானிடரி நாப்கின் வாங்க ஆண்களே கூச்சப்படும் சமுதாயத்தில், படிக்கும் பெணகளின் மாதவிடாய் தேதிகளை பொது ரெஜிஸ்தரில் பதிய வைத்து, அதைக் கேலிக்கூத்தாய் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்.டி.டி.வி இதைப் பற்றி எழுதியுள்ளது.

"யார் கேட்பது இவர்களை எல்லாம் கலிகாலம்" என்றில்லாமல் வலைப் பதியும் நாம் கேட்கலாம் என்று பல்வேறு வலைப்பதிவர்களை சேர்த்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார் பிரேமலதா. முதற்கட்டமாக தமிழக முதல்வருக்கு லெட்டர்கள் பறந்து கொண்டிருக்கிறது. இதில் பிள்ளையார் சுழி போட்டு பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் நிதி திரட்டுவோம் என்கிறார். நல்ல விஷயம். வலைப்பதிவர்கள் தான் என்றில்லை. ஆர்வமிருப்பவர்கள் எல்லோரும் பிரேமலதாவை தொடர்பு கொள்ளலாம்.

4 comments:

Premalatha said...

நன்றி. :)

Premalatha said...

நான் நம் முதல்மந்திரி அவர்களுக்கு எழுதிய கடிதத்தை பார்க்க http://premalathakombai.blogspot.com/2006/04/my-letter-to-cm.html,

தருமி said...

நான் நம் CM-க்கு எழுதிய கடிதத்தின் நகல் இந்தப் பதிவின் இரண்டாம் பின்னூட்டத்தில் பார்க்க.

daydreamer said...

enna oru anaagareegam? veetlaye indha vishayam ellam ippodhu ketka yosikkaraanga... che

Post a Comment

Related Posts