சொல்லாமல் கொள்ளாமல் கொஞ்சம் நாள் லீவு எடுத்துவிட்டேன். மன்னியுங்கள். ஆபிஸிலும் வீட்டிலும் கொஞ்சம் வேலை மென்னியைப் பிடித்துவிட்டது. அத்தோடு இயந்திரமயமான உலக வாழ்க்கையிலும் கொஞ்சம் வெறுப்பு வந்து தெலுங்கு டப்பிங் படங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். "வீரன்" பார்த்திருக்கிறேன். சீக்கிரம் விமர்சனம் எழுத வேண்டும். "அண்ணன் நடந்து வந்தா மாஸ்"க்கு எங்கள் வீட்டில் ஒரு அரை டிக்கெட்டும், ஒரு உழக்கும் சோபாவில் ஏறி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
சின்ன வயதிலேயே ரிட்டயர் ஆகிவிடவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. என்று நிறைவேறுமோ தெரியவில்லை. “டுபுக்கு World” சைட் கிடப்பில் இருக்கிறது. இதுபோக வீட்டில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று ஆரம்பித்து, ப்ராஜெக்ட் ஆரம்பதற்கு முன்னாலேயே எங்கோ போய் நிற்கிறது. வீட்டை புல்டோசர் கொண்டு வந்து இடிக்கவில்லை அவ்வளவு தான்! மற்றபடி வீட்டை தலைகீழாய் மாற்றுவதற்குள் மண்டை காய்ந்துவிடும் என்று நினைக்கிறேன். மாற்றுவதற்கு கேட்டிருக்கும் தொகையைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இலவசக் கொத்தனார் எல்லாம் ப்ளாகில் தான் போலும்.
அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கும் பழக்கம் போகவில்லை. சரவண பவன் மிக்ஸட் வெஜிடபள் பரோட்டாவைப் போல் "ரங் தே பஸந்தி" ரொம்ப பிடித்தது. மச்சினி, அக்கா புருஷனுக்கு ரூட் விடும் கலாபக் காதலன் தமிழ் சினிமா உலகில் புதிய முயற்சி என்று யாராவது, "வாலி" படம் பார்க்காதவர்கள் காதில் காலி ப்ளவர் சுற்றலாம். மெர்குரிப் பூக்கள் ரொம்ப சுமார். மீரா ஜாஸ்மின் அறிமுகக் காட்சி அக்மார்க் “சண்டைக் கோழி” காப்பி. கொஞ்சம் நல்ல திரைக் கதையுடன் எடுத்திருக்கும் ஜூன் ஆர்-ல் சரிதா இளைத்த மாதிரி இருக்கிறது. இன்னும் திருந்தவே திருந்தாத பரமசிவன், நியாபகத்துக்கு வராத இன்னும் சில புதுப் படஙளையெல்லாம் பார்த்ததில் நாட்டை விட்டு எங்கேயாவது காட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றி, கடைசி நேரத்தில் ப்ளான் செய்து சக்ரா அண்ட் கோவுடன் ஒரு சபாரி பார்கிற்கு கிளம்பி குரங்கு, மான், யானை, சிங்கம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம். "கார் ஓட்டுகிற இந்த சிங்கத்தைப் பார்க்காமல் காருக்கு வெளியே இருக்கும் போலி சிங்கத்தைப் போய் இப்படி பார்க்கிறீர்களே" என்று பரணி பாடியதில் சம்சாரம் ஒரு மின்சாரம் என்றால் என்னவென்று சிற்றறிவுக்கு புரிந்தது.
புலி , சிங்கத்தையெல்லாம் சுதந்திரமாக கார் பக்கத்திலிருந்து பார்க்கும் போது நன்றாகத் தான் இருந்தது. சுற்றி நிறைய கார்கள் இருந்ததால் பயமே இல்லாமல் இருந்தது.(அவர்களுக்கு). அரை டிக்கெட் விட்டால் சிங்கத்துக்கு சிடுக்கெடுத்துவிடுபவள் போல தைரியமாக வாயடித்துக் கொண்டு வந்துகொண்டிருந்தாள். ஆனால் பேக்டரியன் ஒட்டகம் தான் குளித்து கொஞ்சம் நாளாகியிருக்கும் போல...அழுக்கு சடை சடையாக உவ்வே....
வனவாசம் போனதில் தலைவர் சன்.டீவியில் "வேட்டையாடு விளையாடு" பற்றி என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
தற்போது சித்தம் தெளிய தேவசேனாபதியின் மதனகாமராசன் கதை படித்து வருகிறேன். கதை ஒரு மாதிரியாக இருக்கிறது. கதையில் நாலு பக்கத்துக்கு மூன்று தரம் புருஷர்களும் ஸ்திரீகளும் சம்போகத்தில் ஈடுபடுகிறார்கள். (வார்த்தை புரியாவிட்டால் விட்டுவிங்கள்.. தயவு செய்து பின்னூட்டத்தில் சந்தேகம் கேட்காதீர்கள் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது :P) பாதி தான் படித்திருக்கிறேன். சை...என்ன கதை இது! என்றாகிவிட்டது எனக்கு. இரண்டாம் பாகம் எதாவது இருக்கா என்று லைப்ரரியில் தேடிப் பார்க்கவேண்டும்.
மற்றபடி கூடிய சீக்கிரம் சித்தம் தெளிந்து ப்ளாக் பித்தம் ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன்.
சொல்ல மறந்துவிட்டேனே..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
(முதல் படத்தில் ஜூனியர் சக்ராவும், என்னுடைய மகள்களும்)
Wednesday, April 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
Just was wondering where you were...glad that the singam is safe...
>>>இலவசக் கொத்தனார் எல்லாம் ப்ளாகில் தான் போலும்
:-))))))))))
Your kids are so cute....and chuuuweet yaar!!
irandaavadhu padathula oru senior thaan vandhu irukkenga pola!!!!
(summa joke joke)
haha !! Enna kathai ithu, irendam paagam irukaanu paakanum...nenachean unga style ithana....
annachi, ennada romba naala Aleye kanoomnu paarthen.
naanga ellam singathuku seepu kudutha parambarainu manni kitta solli parungaa.(poori kattai bathrama irukka manni?)
btw, as per ur mail, made changes and also i replied u. hope u might've rcvd my reply mail.
ippo vara oru padamum uruppadi illa!! standards romba koranju pona maathiri oru feeling!! innum tamil new yr release ellam paarunga.... enakku athuvum onnum pudikkala!!
the kids are cute!! :-)
வெளி நாட்டுல வேலை பாத்து நம்ம ஊர்ல வீடு கட்டினாலே முழி பிதுங்குது. இதுல வெளி நாட்டுலயே வீட்டையும் கட்டணும்னா கேட்கவே வேண்டாம். என் லெவலுக்கெல்லாம்...ஹோம் பேஜ் போடறதே ஜாஸ்தியா இருக்கு குரு...
"குடிசைகள் கோபுரமானால்
லகரங்கள் சிகரங்களாகும்"
என்னோட 5வது பாகத்துல கமென்ட் விடலியே. அதுக்குள்ள இன்னொரு பதிப்புக்கு 2வது பாகம் தேடறது என்ன நியாயம் ?
"pattiyal" nalla irukkaam
"பேக்டரியன் ஒட்டகம" - adhu enna
-bangalore thangachi
Dubuks! wanna join my summer coaching class of "muppathil retire aavathu eppadi"..
i tell u..its tuff..if u dont get ur noon nap..am struggling once a while;-)
தேவசேனாபதியின் மதனகாமராசன - pere namma shakila range ku irukke.
Dubukku - Unga eranthavathu ponnu superra pose kodukuranga. Very cute kids:) you are very luck to see the dangerous animals near.
buspass - yaaru "Singam"mla... :)) (habbaa neengalavadhu acknldg. pannineengale :P )
Yaathirgan - ஆமாங்க...:)
Kavitha - danks..I have passed on your compliments :)
daydreamer - soke puriyaleengale..is there any typo ?? senior nu ottagatha sollureengala?
Aruna - he he...summa damasu damsu...naan appidi illenga (ippid thaan sollikarathu)
Ambi - namba paramabara veerthai pathhi neraya solli irukenda... :))
Saw your email sorry couldn't reply imddly will do soon.
Kuttichuvaru - danks correctnga...rare aa thaan nalla padam varuthu :)
Ramachandran - yooww summa irungaiya...pora pokula ethavadhu sollitu pohatheenga :)) comment vitrukene parkalaya?
b.thangachi - Pattiyal parthutten nalla irukku. Bacterian ottagam is a type I guess.
Ananthoo - thalaivaaa...nera varren...vandhu joing pannaren unga class la :))
Prabhu - wc. ada raja rani kathainga adhu :))
Jeevan - danks Jeevan. I have passed on your compliments. Yes safari park was sooper.
ஆமாம் டுபுக்கு, எனக்கும் ரொம்ப நாளாவே சீக்கிரம் retirement வாங்கிடனும்போல்[என்னமோ அரசாங்க வேலையில் நம்மை பிடித்து இருத்தி வைத்திருப்பதுபோல் -) ]இருக்கு.
உங்க டூப்ளிகேட் அம்மாஞ்சி உங்களைப்போல் நல்லாவே(!) எழுதறார்.
நன்றி,நன்றி. at last என் பின்னூட்டம் உங்கள் பதிவில் சேர்ந்துவிட்டது.comment moderation-ஐ எடுத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
சிவா - நான் கமெண்ட் மாடரேஷனை போடவே இல்லையே? நீங்க தேசி பண்டிட்ல் கேட்டதை இன்று தான் பார்த்தேன். என்ன பிரச்சனை தெரியவில்லையே...மற்ற மக்களெல்லாம் கமெண்ட் விட்டுக்கொண்டிருந்தார்களே...ஒன்னுமே புரியலை...எப்படியே சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்..உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி
என்னாங்க. நீங்க original மதன காம ராசன் கதைகள் படிச்சதில்லயா? இந்த தேவசேனாபதி ரொம்பதான் censor பண்ணிபுட்டார்.
dubukku.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading dubukku.blogspot.com every day.
payday cash payday
Post a Comment