Wednesday, April 26, 2006

Lifecycle...

பெரியவனானதும் என்னவாடா ஆகப் போற?

.....

டாக்டரா ஆகப் போறியா இன்ஞ்சினியர் ஆகப்போறியா?

ட்ராக்டர் அதான் பெரிய வண்டி..ஃபாஸ்டா போகலாம்

டேய் இன்னிக்கு ஆத்துக்கு குளிக்கப் போகும் போது பார்த்தேன்....செம நீளமா ஒரு துப்பாக்கிய வைச்சுக்கிட்டு ஒரு போலீஸ் நின்னாரு பாரு...கத்தியெல்லாம் இருந்துடா அந்த துப்பாக்கில...அத வெச்சு சுட்டா ரொம்ப தூரம் போகும் தெரியுமா...யார வேணா சுடலாம்...

நான் போலிஸாத் தான் ஆகப் போறேன்...எங்க சித்தப்பா ஆபிஸ் அதுக்கு அடுத்தாப்புல தான் இருக்கு....அவருக்கு இந்த போலீஸெல்லாம் ரொம்ப ப்ரெண்டு தெரியுமா..அவர் சொன்னா போதும் உடனே துப்பாக்கிலாம் குடுத்து வேலை குடுப்பாங்க...வெளியே நிக்கிற போலிஸாத் தான் ஆகப் போறேன் அவங்களுக்குத் தான் பெரிய துப்பாக்கியெல்லாம் குடுப்பாங்க...உள்ள உள்ளவங்கல்லாம் சும்மா கணக்கு தான் எழுதுவாங்க தெரியுமா?

அம்மா இன்னிக்கு ஃபய்ர் சர்விஸ் வண்டியப் பார்த்தேன்மா...நான் அத ஓட்டறதுக்குப் படிக்கப் போறேன் அதுக்குத் தான் படிக்கப் போறேன்

ஃபயர் சரிவீஸ் வேண்டாம் எப்பவாவது தான் வண்டி ஓட்டமுடியும் நான் ட்ரெயின் ஓட்டப் படிக்கப் போறேன். வாண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு வண்டிலேயே தூங்கிக்கலாம். வண்டி தண்டவாளத்துல தானா போகும். ட்ரெயினுல தான் ரொம்ப சவுண்ட் வர்ற ஹாரன் இருக்கு தெரியுமா?

டாக்டர் வேண்டாம் இன்ஞ்சினியாராவே போறேன்....டாக்டர் சீட் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமாம்..

அப்பா, என்.டி.யேல சேரட்டுமா? பத்தாவது பரீட்சைக்கு அப்புறம் என்டரன்ஸ் எழுதினா ஆர்மில சேர்ந்தாலும் அங்கேயே இன்ஞ்சினியர் இல்லை மெடிக்கல் வேணாலும் படிக்கலாம்...அதுக்குன்னே கோட்டாலாம் இருக்காம். அப்புறம் சர்விஸ் முடிச்சுட்டு கவர்மெண்ட்ல வேற எந்த வேலைக்கும் அப்ளிகேஷன் போட்டாலும் எக்ஸ் சர்விஸ் மேன் கோட்டா வேற உண்டு.

அப்பா, மரைன் ரேடியோ கோர்ஸ்ல சேரட்டுமா? எடுத்தவுடனேயே இருபதாயிரம் சம்பளமாம். கடல்ல கப்பல்ல இருந்தாலும் ஆறு மாசம் லீவு உண்டாம்...ரொம்ப டிமாண்டா இருக்காம்

நான் ஏ.எம்.ஐ.ஈ சேரப்போகிறேன். ஏரோநாட்டிகல் இன்ஞ்சினியரிங்...பாஸ் பண்றது பயங்கர கஷ்டம் ஆனால் முடிச்சுட்டா பயங்கர வேல்யூ வெளிநாடெல்லாம் போகலாம்

பி.எஸ்.ஸி முடிச்சுட்டு எம்.ஐ.டில சேரனும். இப்போவே அப்ளிகேஷனெல்லாம் வாங்கியாச்சு...பார்ப்போம்...

எம்.எஸ்.ஸி படிச்சுண்டே ஐ.ஐ.எஸ்.ஸி பரீட்சைக்கும் ப்ரிப்பேர் பண்றேன். அங்கேயே கேட் பாஸ்பண்ணி ஆஸ்ட்ரோ ப்ஸிக்ஸ்ல பி.ஹெச்.டி முடிச்சா நேர இஸ்ரோவில போய் சேர்ந்துக்கலாமாம். ரொம்ப பக்கம் தானாம்.

எம்.எஸ்.ஸி வேண்டாம்ன்னு நினைக்கிறேன் ஃலைப்புல செட்டிலாகறதுக்குள்ள விடிஞ்சிரும். கேட் எழுதி எம்.ஃபில் படிச்சு பி.ஹெச்.டி முடிக்கிறதுக்குள்ள பேரன் பேத்தி பார்துடலாம்... சங்கரோடு தீஸிஸ் இன்னும் அக்செப்ட்டே பண்ண மாட்டேங்கிறாராம் அவன் கைடு..ஆகஸ்ட்டோட எட்டு வருஷமாகப் போறது

கம்ப்யூட்டருக்கு படிச்சா ரொம்ப வேல்யூவாம்...உடனே வேலை கிடைக்கிறதாம். பெங்களூர்ல ரோட்டுல கூவி கூவி கூப்பிடறாங்களாம்...லாரில வந்து ஏத்திண்டு போறாங்களாம்.

சி,சி++ லாம் நம்மூர்ல வேலை ரொம்ப இல்லையாம், மெயின் ஃபிரேம் படிச்சா மூனு மாசம் ட்ரெயினிங்காம் அப்புறம் ராவோடு ராவா அமெரிக்கால போய் இறக்கி விட்ருவானாம்

மெயின் ஃப்ரேம் மோகம் இப்போ சுத்தமா இல்லை...ராவோடு ராவா போலாம்ன்னு சொன்னது ஆந்திராக்காராளாம். அவாள்லாம் ராவ் பேமிலியாம். க்ளையன்ட் செர்வர் படிச்சாத் தான் இப்போல்லாம் மதிப்பு. தெரியலைன்னா கம்ப்யூட்டர் துடைக்கிற வேலை கூட குடுக்க மாட்டானாம்

என்னத்தடா...அடுத்த வாரம் ப்ராஜெக்ட் லைவ் போகுது ஏகப்பட்ட பக் இருக்கு பி.எம். சாவடிக்கிறான்...எங்கேர்ந்துடா பிடிச்சாங்க இவன

டேய் மச்சி சி.டி.எஸ்ன்னு புதுக் கம்பெனி நல்ல சம்பளம் தராங்களாம்...சி.வி ஃபார்வேர்ட் பண்ண உள்ள ஆள் யாரும் தெரியுமா? கொஞ்சம் கேட்டு சொல்லேன்

டேய் உங்க சி.டி.எஸ் ஆள தொந்தரவு பண்ணச்சொல்லாதடா...இங்கேயே யூ.எஸ் பிராசஸ் பண்றேங்கிறான். என்ன மயிரா அப்ளிகேஷன் டெவெலப் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்கீங்கன்னு க்ளையண்ட் இவன் கிட்ட சாமியாடிருக்கான்...இவன் நான் ரெண்டு பேர உடனே அனுப்பறேன்னு நெஞ்ச நக்கியிருக்கான்...அவனும் மண்டைய ஆட்டிடானாம். இன்வாய்ஸ்ல இந்தப் பக்கம் ஏத்திடுவாங்கன்னு தெரியல அவனுக்கு. என்ன பொழப்புடா..இது...சீ..இதுக்கு பேசாம மவுண்ட் ரோட்ல மாமா வேலை பார்க்கலாம்..

மச்சி பி.எம். புத்தியக் காட்டிட்டான்டா...அந்த க்ளையன்ட் கபோதி பட்ஜெட் இல்லைன்னு திடீருன்னு வேட்டிய உதறிக் காட்டிட்டானாம் இந்தப் பரதேசி யூ.எஸ் போறதுக்கு ஆடி பொறக்கட்டும் ஆவணி பொறக்கட்டும்ன்னு நான் என்னம்மோ கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொன்ன மாதிரி கதை விடுறான். உங்க சி.டி.எஸ் ஆளோட இன்னும் டச்சுல இருக்கியாடா?

ரொம்ப சாரிடா ...நேத்திக்குத் தான் யூ.கே.க்கு முத்திரை குத்திட்டு வந்தேன். மக்கா ட்ரெயினேஜ்ல வேலை பார்க்கவேண்டியவனெல்லாம் எம்பஸ்ஸில தூக்கி போட்டிருக்காங்க...குடை குடைன்னு குடைஞ்சு எடுத்துட்டான். உன் சி.டி.எஸ் காண்டாக்ட் கிட்ட சொல்லிடு மச்சி

நம்மூர் எவ்வளவோ பரவாயில்லைடா இங்க ஒன்னும் தெரியாதவனெல்லாம் என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். என்ன விட நாலு மடங்கு சம்பளம் வேற. சாய்ந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் டான்ன்னு குடிச்சுக் கூத்தடிக்க கிளம்பிருவான். எல்லாத்துக்கும் நான் தான் உயிர விட வேண்டியிருக்குடா.

இப்போ பரவால்லடா நானும் டகால்டி வேலை கத்துக்கிட்டேன். ரெண்டு நாள் வேலைக்கு நாலு நாள் ஆகும்ன்னு சொல்லிருவோம்ல இந்தியாக்காரனா கொக்கா...

இதக் கேட்டியா மாப்ளே இப்போ நம்மூர்ல சம்ப்ளமெல்லாம் எகிறிடுச்சாம்....நாம் வாங்குறதெல்லாம் ஒன்னுமே இல்லையாம். அத விட ஊர்லயே வாங்குறாங்களாம் என்ன பொழப்புடா ...ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு நாம இங்க வந்தா...நம்ம நேரம் இங்க புட்டிக்கிச்சு அங்க ஓகோன்னு ஆகிடிச்சாம்ல...

சரியான நாதாரிப் பொழப்பா போச்சுடா...கல்யாணமாகி குழந்தை குட்டின்னு ஆகி முன்ன மாதிரி வேலை கூட மாற முடியலடா...லொட்டு லொசுக்குன்னு ஆயிரத்தெட்டு யோசிக்க வேண்டி இருக்கு..இப்போல்லாம் என் குழந்தை தான்டா கொஞ்சம் ஆறுதல்...

இங்க வாடா செல்லம்..நீ பெரிசானதும் என்ன ஆகப் போற?...சொல்லுடா அப்பா கேக்குறேன்ல..!

30 comments:

வெளிகண்ட நாதர் said...

உண்மை நிலையை புட்டு புட்டு வச்சீட்டீங்க!

Anonymous said...

good one...., though I am not from software feild I can relate to it.

இதக் கேட்டியா மாப்ளே இப்போ நம்மூர்ல சம்ப்ளமெல்லாம் எகிறிடுச்சாம்....நாம் வாங்குறதெல்லாம் ஒன்னுமே இல்லையாம்

ikaraikku akkarai pachai nu sumava sonnanga
Dubukks, Iam happy, am the 1st one to post comment on this topic....heee

chee chee ethaduku pooti podarathu nu vevasthaya illama pochu

Anonymous said...

Dubuks,
unga blog, mavuasa pathengala.., comment thanklishla tpye panitu preview pakarathukula வெளிகண்ட நாதர் vekundu ezhundu post pannetaruuuuuuuu. anyway gajini madhri try panneta iruupopmallaaaaa

Anonymous

Anonymous said...

Good one dubukku!!
..aadhi

துளசி கோபால் said...

//இதக் கேட்டியா மாப்ளே இப்போ நம்மூர்ல சம்ப்ளமெல்லாம் எகிறிடுச்சாம்....நாம் வாங்குறதெல்லாம் ஒன்னுமே இல்லையாம். அத விட ஊர்லயே வாங்குறாங்களாம் என்ன பொழப்புடா ...ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு நாம இங்க வந்தா...நம்ம நேரம் இங்க புட்டிக்கிச்சு அங்க ஓகோன்னு ஆகிடிச்சாம்ல...//

உண்மைதான்.

போடு 100க்கு 100:-)))

oosi said...

எங்கே இருந்து கத்துக்கிட்டீங்க இந்த மாதிரி எழுத? ஒரே மூச்சீல் படித்து விட்டேன் போங்க .....

ambi said...

Hahaaa, sys login pannina udane annachi, unga post thaan padichen!
ethellaam namma familyku apdiyee varuthu thaan illa!(he hee naisaa,included myself also!)

கவிதா | Kavitha said...

//இதக் கேட்டியா மாப்ளே இப்போ நம்மூர்ல சம்ப்ளமெல்லாம் எகிறிடுச்சாம்....நாம் வாங்குறதெல்லாம் ஒன்னுமே இல்லையாம். அத விட ஊர்லயே வாங்குறாங்களாம் என்ன பொழப்புடா//

விலைவாசி கூட எகிறிடிச்சி சார்..

Anonymous said...

இதக் கேட்டியா மாப்ளே இப்போ நம்மூர்ல சம்ப்ளமெல்லாம் எகிறிடுச்சாம்....நாம் வாங்குறதெல்லாம் ஒன்னுமே இல்லையாம்


enge sir egurthu,en cmpny la nan enna velai pakareno athe velai than america la erukara vella karan seyaran,avanuku sambalam evalo theriyuma????????oru masathuku rendra latcham,enaku 10,000.

Jeevan said...

இப்போ பரவால்லடா நானும் டகால்டி வேலை கத்துக்கிட்டேன். ரெண்டு நாள் வேலைக்கு நாலு நாள் ஆகும்ன்னு சொல்லிருவோம்ல இந்தியாக்காரனா கொக்கா...

unga boss intha post'a padicharu, aniku irukku dubukku unnaku aappu:))

Anonymous said...

Eppovum ezhutharadha vida idhu konjam extra special. But oru precaution naan enna seiyyaren-a yaaravadhu aduthu enna seiya porenu ketta, "ask no questions, I'll tell you no lies"nu sollama solliduven. :o)

aruna said...

extremely good! I liked this best of all your post!....particularly" mount roadla maama vela paakalaam"..lol

Kumari said...

Chumma pichi uthariteenga :D

Naanum enga veetukarara plane ethalamnu parkkiren, mudiya maatengudhu.

//இதக் கேட்டியா மாப்ளே இப்போ நம்மூர்ல சம்ப்ளமெல்லாம் எகிறிடுச்சாம்....நாம் வாங்குறதெல்லாம் ஒன்னுமே இல்லையாம். அத விட ஊர்லயே வாங்குறாங்களாம் என்ன பொழப்புடா//


Indha line-a blow-up panni, frame pottu pesama veetla maatirlam. Appavachu manasu maruthanu parppom :)

expertdabbler said...

ROTFL :))

ana seriousa ikkaraiku akkarai pachai avlo daan dubukks...

onsite la 8/9 hrs ku mela yaarum velai panna force panna mudiyadhu...

India la oru sila companies thavira evening 6 manikku veetukku kelambina "ennada 1/2 day leave pottutiya?" nu keppanga...

ippo ellam sambalam jasthi dhaan.. ana naanga rendu velai panrom.
kalaila irundhu evening varaikum software velai aprom evening la irundhu night varaikum call center velai...

pinna ennanga varathile 4 naal dhinam 3 mani neram adhuvum pasi vayithai kilra neram telephone la kooptu kaluthu arupaan...

vazhkaiyle cricket commentary kooda naan ivlo sincere a kettadhu illai...

avan nimmadiya veetile irundhu morning 6.30-7 manikku call edupaan, naanga engey utkarnduttu avasthai padanum...

india la "work from home" nu ellam jalliadika mudyadhu. avadi la irundhu navalur dhinam vandheenga na udambile cholestrol varave varadhu, aana kandippa piles varum.

kuttichuvaru said...

arumaiyaana post!! nalla flow-la varuthu!!

Premalatha said...

Best of all your posts so far.

Usha said...

something each one of us has gone through - enda velaiku poirundalum kadaiseele inda nilamaidaan.
sari kozhandai enna solra?

Paavai said...

stephen covey sonna madiri - is life run by a compass or clock? enga poromnu theirayamale, trial and errorla vazhkai pogudhu

இராமச்சந்திரன் said...

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை"

நான் படிக்கும்போதே ஆவரேஜ் தான். எடுக்கற மார்க் தெளிவா தெரிஞ்சதுனால டாக்டர், இன்ஜினியர் எல்லாம் கனவுல கூட வராது. ஏதோ கிளார்க் ஆவேன் நினைச்சு படிச்சேன்...ராஜீவ் காந்தி புண்ணியத்துல ஐடி வந்தது. கொஞ்சம் சின்சியரா(NIIT) படிச்சேன். U.S வந்தது கண்டிப்பா எதிர்பார்க்காதது. இதுவும் என் பேக்-கிரவுன்டுக்கு(B.E*) அதிகம்னு அப்பப்ப நினைப்பதுண்டு.


* = Bachelor in Economics

Dubukku said...

வெளிகண்ட நாதர் - :)

anonymous - danks. amanga ikkairaikku akkarai eppavume paichai thannu nenaikaren. Sorry about missing 1st comment.hehe

ஷாஜி- மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கத்துக்கு.

aadhi - romba danks

Sriram - danks. Yes I guess its every s/w engineers daily life :))

துளசி- வாங்கக்கா...நூத்துக்கு நூறு..உங்ககிட்டயாவது வாங்கினேனே ரொம்ப சந்தோஷம்.

Dubukku said...

oosi - ரொம்ப நன்றிங்க...எல்லாம் உங்கள் மாதிரி மக்களோட ஊக்கம் தான் காரணம்.

Ambi - டேங்க்ஸ்...பேமிலி - வேணாம் அடக்கம் அமரருள் உய்க்கும்...இதே வைச்சுப்போம் நாம்

கவிதா - ஆமாங்க அதுவும் கேள்விப் பட்டேன். இந்த சம்பளம் எகிறின மேட்டர் நல்லதுக்கான்னு தெரியல..கீழ்மட்டத்துல உள்ளவங்களெல்லாம் கஷ்டப் படுவாங்களோன்னு தோனுது ஹூம்

anonymous - sorrynga..konjam experience irukaravangalukku nalla sambalamnu kelvi patten athan appidi. Kavala padatheenga...seekiram adhu job change vandhu unga sambalamnu ehira kadavula vendikkaren

Dubukku said...

Jeevan - hehe avarukku tamil padikka theriyathunu ellam oru thahiriyam thaan :)

Krithiga - danks. appidi sonna vitturangala enna? paravallanga neenga pozhaicheenga

Uma Krishna - romba danks..

Aruna - romba danks. I am glad that you enjoyed this post :)

Kumari - Danks. haiii neengalum oorukku pohanumnu thudichittu irukkeengala? :)

PK - What you have said is very true and thats why I think ppl deserve this. That 6.30-7 kilambara matter was very true in my company as well. :))
And this work culture is the only thing thats putting me off to coming back right now.

kuttihucaru - danks sir.

Dubukku said...

Premaltha - romba thanks :)

Usha - yes everyone would have gone through this :). Ava ippothaikku officeku handbag eduthundu povenngra level la irukka.(handbagla neraiya paisa irukkumam )

Paavai - amanga...ennamo thalaila kondu pohira maadhiri romba kashtap padaromonu thonuthu sometimes :)

Ramachandran - ரொம்ப உண்மைங்க...
உன்க்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

தான் நியாபகத்துக்கு வருது :)

Murali said...

Hello Dubukks

Very good post. Really enjoyed it.

Murali

daydreamer said...

reverse order la varalaamnu chinna vayasula (enga chinna vayasula) mudalla thambiya pathu "periavan aanadhum ennava aaga pora" nu kettar

thambi" naan appa aagiduven" nu sonnan

appdiye kelviya cancel pannitaaru appa. engala ellam kekkave illa... naangalum badhil sollamaye ennavo aagittu blog ezhudikittu irukkom. adhanaala en ponna naan indha kelvi mattum kandippa kekkaradhu illanu sabadhame eduthu irukken.

Anonymous said...

SOFTWARE ENGINEER DEVELOPMENT LIFE CYCLE!!!

nalla irukku :)

யாத்ரீகன் said...

டுபுக்ஸ்.... எல்லோரும் சந்திக்குற பிரச்சனை இயல்பான நகைச்சுவையாய் இழையாய் வரும் உரையாடல்கள்.... அதிகம் இரசிக்க முடிந்தது.. :-)

ஆனால்... இதை கொஞ்சம் சீரியஸ் மனநிலையுடனே யோசித்துப்பார்த்தால், சூழ்நிலையின் கட்டாயத்தால் படித்த என் நிலையும், கொஞ்சம் சுதந்திரத்துடன் ரிஸ்க்கான ஆனால் மனதுக்கு பிடித்த படிப்பு படித்துவரும் தம்பியின் நிலையும் கண்டு கொஞ்சம் இல்லை, நிறையவே பெருமூச்சு வருகின்றது :-(

Anonymous said...

//ராவோடு ராவா போலாம்ன்னு சொன்னது ஆந்திராக்காராளாம். அவாள்லாம் ராவ் பேமிலியாம்.//

Excellent...kalakureenga...

I became a fan of ur writings...

சுந்தர் / Sundar said...

கலக்கிட்ங்க போங்க .... சும்மா சுப்பர் அப்பு

Anonymous said...

dubukku...unga flow chancea illa...classic....

Post a Comment

Related Posts