ஹிஸ்டாரிக்கல் பேண்டசி ரசிகர்களுக்கு சரியான விருந்து. படத்தின் ட்ரையலரில் ஒரு ஷாட் வரும் ரன்வீர் சிங் குதிரையில் ஸ்லொமோஷனில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் தீபிகா மெதுவாய் ஷாட்டில் நுழைந்து ஓவர்டேக் செய்வார். அட்டகாசமான ஷாட். அன்றே படத்திற்கு துண்டைப் போட்டு வைத்துவிட்டேன். சரித்திரத்தை திரைக்கதைக்காக அப்படி இப்படி புரட்டியிருக்கிறோம் கண்டுக்காதீங்க என்று முதல் டிஸ்கிலேயே சொல்லிவிடுகிறார்கள். ரன்வீர் சிங் மொட்டயடித்துக் கொண்டு பேஷ்வாவாக படம் நெடுக மெனக்கெட்டிருக்கிறார். குடுமி வைத்த பேஷ்வா குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாரா என்ற தர்கத்தையெல்லாம் ஓரம் கட்டி பேஷ்வா எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தண்ணி தெளித்துவிட்டு மஸ்தானிக்கு வருவோம். தீபிகா தீபிகா தீபிகா...என்ன ஒரு ஆளுமை படம் நெடுக. கத்தியை விட கூர்மையாய் பார்க்கிறார், கண்ணால் பேசுகிறார். சமீபத்திய படங்களில் நடிப்பில் பட்டயக் கிளப்புகிறார். Why Deepika is still my darling !!!
என்னை மாதிரி பேஷ்வாவிற்கும் தூத் பேடாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் ட்ரைலர்-1ஐ மட்டுமே பார்த்துப் படம் பார்க்கப் போனால் படம் சர்ப்ரைஸாக இருக்கும். ஜோதா அக்பர் மாதிரி அல்லாத்தையும் பரிமாறுவார்கள் என்று நினைத்தேன். மஹூம்...இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை. அதிலும் இரண்டாவது பெண்டாட்டியின் காதலைச் சொல்லும் கதை. பேஷ்வாவாகவே இருந்தாலும் குஜால்ஸுக்கு அப்புறம் படும் அல்லலை அழகாய் படம் பிடித்திருக்கிறார்கள். இரண்டாவது மனைவியாய் அதிலும் வேற்று மதத்திலிருந்து வந்து அங்கு சந்திக்கும் அவமானங்களை தீபிகா தீபிகா தீபீகா. தியேட்டரில் என் வரிசையில் இருபுறமும் முஸ்லீம் சகோதர்களும் சகோதரிகளும். படத்தில் இரு மதத்தின் பெயரால் நடக்கும் சில அக்கப்போர் காட்சிகளில் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தேன். ஆனால் சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பாராட்டிய அவர்களுடைய ரியாக்ஷனோடு பார்த்தது மிகச் சுவாரசியம்.
என்னளவில் படத்தின் ஹீரோ ப்ரொடக்ஷன் டிசைன் & ஆர்ட் டைரக்டர் தான் - கலக்கியிருக்கிறார்கள். படம் நெடுக வரக்கூடிய மாராத்திய கலாசார விஷயங்கள் ஆகட்டும், மாராட்டிய தர்பார் ஆகட்டும், பேஷ்வாவின் தர்பார் ஆகட்டும் இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதிலும் அந்த ஜொலிக்கும் கண்ணாடி மண்டபம் வாய் பிளக்க வைக்கிறது. டிக்கட்டிற்கு கொடுத்த பைசாவிற்கு வஞ்சமே இல்லாமல் பார்த்து வரலாம்.
No comments:
Post a Comment