மு.கு - இது முழுக்க முழுக்க பட விமர்சனம் அல்ல. விமர்சனம் ஒரு பகுதி அவ்வளவே. நீங்கள் இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்திருப்பீர்களயானால், அதை வைத்து விஸ்வரூபம் படத்தின் சில அடிப்படை கதை கட்டமைப்புகளை யூகித்திருப்பீர்களேயானால் இந்தப் பதிவை தாராளமாகப் படிக்கலாம். இல்லை விஸ்வரூபம் - விஷாலா விஜயான்னு கேட்கும் பச்சைக் குழந்தையாக இருந்தால் ப்ளீஸ் அப்படியே அப்பீட்டு, ஏன்னா இந்தப் படம் தமிழ்ப் படம், இதில் கமல் நடித்திருக்கிறார் போன்ற பல ஸ்பாயிலர்கள் இருக்கின்றன.
படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால் இந்தப் படத்தின் மீதான தடை பற்றி. படம் பார்ப்பதற்கு முன்பாகவே, ஒரு கமல் ரசிகனாக அல்ல- ஒரு திரைப்பட ரசிகனாய் எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லை. படம் பார்த்த பிறகு கேட்கவே வேண்டாம். என்னைப் பொருத்தவரை படத்தில் முஸ்லீம்களையோ இஸ்லாமையோ குறை சொல்வது மாதிரி காட்சிகள் எதுவும் இல்லை. படத்தின் டைட்டில் முதல் அரபிக் மொழி மாதிரி டிசைன் செய்திருக்கிறார்களே என்று தோன்றலாம். கதை ஆப்கானிஸ்தானில் ஆரம்பிப்பது மாதிரி இருக்கிறது. ஆப்கானிஸ்தான்காரர்களையெல்லாம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் லுங்கியுடன் அலைவது மாதிரி காட்டமுடியாது அல்லவா அது போன்று தான் படம் நெடுகவே தவிர, எதையும் திணித்ததாய் தோன்றவில்லை. ஆட்சேபம் தெரிவிக்கும் குழுவினரும் நண்பர்களும் ஒரு முறை படத்தைப் பார்த்தால் இது உறுதியாகி, இதற்காகவா இவ்வளவு சவுண்டு விட்டோம் என்று நினைக்கத் தோன்றும்.
அமெரிக்காவையும் இன்ன பிற நாடுகளையும், இஸ்லாம், கிறுத்துவம் உட்பட பல மதங்களையும் வறுத்து, துவைத்து தொங்கப் போடும் ஆவணப் படங்களும், திரைப்படங்களும் ஆயிரம் இருக்கின்றன. சொல்வது அவர்கள் படைப்புரிமை, எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் நமதுரிமை என்ற கோட்பாடில் மற்ற நாடுகளில் இதை freedom of experssionஆகவே எடுத்துக் கொள்கிறார்கள். இந்த freedom of expression- க்கும் ஒரு வரையறுக்கப் படாத ஒரு நாகரிக எல்லை இருக்கிறது. அதைத் தாண்டும் போது பார்ப்பவர்களுக்கான வயதை நிர்ணயம் செய்வதுடன், சொல்லப்படுவது ஆட்சேபமாய் இருக்கும் பட்சத்தில் அதையும் மட்டுறுத்துவதற்காகத் தான் சென்சார் போர்ட் இருக்கிறது. திரும்பவும் சொல்கிறேன் இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய அளவுக்கெல்லாம் காட்சிகளே இல்லை. மாறாக நான் வுட்டாலக்கடி விடுவதாக நீங்கள் நினைத்தாலும் சரி, படத்தைப் பார்த்து எனக்கு சில இஸ்லாமிய பழக்கங்களின் மீது மதிப்புத் தான் வந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர் சிறுமியர் பார்க்கும் காட்சிகளில் அவர்கள் வயதுக்குத் தகாத தொப்புளும் மாரும் தெரிய உடையோடு வெளிப்படையாய் புணரும் காட்சிகளுக்கு இருக்கும் tolerance கூட freedom of expression க்கு இல்லை என்பது மிக வருத்தமான விஷயம். இப்படியே போனால் அப்புறம் தமிழ் திரைக்காவியங்களில் அல்கொய்தாவுக்கு தலைவராக ஐயரை அப்பாயிண்ட் செய்து அக்னிஹோத்ரம் தான் வளர்க்க வேண்டி வரும். எப்படியோ வாரயிறுதியில் பார்க்கலாம் என்று ஆபிஸ் விட்டு வரும் வழியில் முடி வெட்டிக் கொண்டிருந்தவனை, இன்னும் ஒரு மணி நேரத்தில் படம் என்று தெரியவந்து புடுங்கினது போதும் என்று அரக்கப் பரக்க முதல் நாளே பார்க்க வைத்த பெருமை இந்த சர்ச்சைக்கே சேரும்.
சரி நம்ம படத்துக்கு வருவோம்.இந்த தடை சர்சை காரணங்களால் ஒரு கமல் ரசிகனாய் படம் எப்படியிருந்தாலும் சூப்பர் என்று தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கமல் ரசிகனாய் எனக்கே ஒவ்வாது. படத்தின் ப்ரொடெக்க்ஷன் வேல்யூ சும்மா அதிரடி. அதாவது செய்த செலவுக்கு கொடுத்திருக்கும் பிரமாண்டம் அருமை, ஹாலிவுட் ரகம். சங்கருக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழுக்கு புதிய உச்சம். ஆஃப்கானிஸ்தான் குகைகளாகட்டும், அடிச்சு தூள் கிளப்பும் சண்டைக் காட்சிகளாகட்டும் அவற்றில் செய்திருக்கும் சி.ஜி.ஐயாகட்டும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஒரு டைரக்டராக, ப்ரொடியூசராக கமல் இந்த இடங்களில் ஜொலிக்கிறார். படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் படம் படு விறுவிறுப்பாய் போகிறது. கமலின் பெரிய பலவீனமே அவரின் பலவீனம் தெரியாமல் இருப்பது தான். அவரின் வசனங்கள் பல காமெடி தருணங்களில் கிச்சு கிச்சு மூட்டுவதாய் நினைத்து எழுதப்பட்டிருக்கிறது ஆனால் எனக்கு கொஞசம் கடியாக இருந்தது. கம்யூனிகேஷன் என்பது காம்ப்ளிகேட்டடாகத் தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. சொல்ல வந்த விஷயத்தை என்னதான் ஜார்கனெல்லாம் போட்டாலும், தெளிவாகச் சொல்லும் பட்சத்தில் "என்னம்மா சொல்லியிருக்கார்பா கலக்கிட்டார் இல்ல" என்று சொல்லவைக்கும். "அண்ணன் என்னண்ணே சொல்ல வராரு" என்று பக்கத்திலிருப்பவரை பிராண்ட வைக்காது. படத்தில் பல இடங்களில் சொல்வது புரிந்தாலும் என்ன/எதுக்கு சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருந்தது.
ராக்கெட் லாஞ்சர் ஹெலிகாப்டர் சகிதம் போடும் சண்டைக் காட்சிகள் கலக்கலாய் எடுக்கப் பட்டிருந்தாலும் அவற்றை சுற்றி வரும் திரைக்கதை சில இடங்களில் பலத்த தொய்வுடன் பின்னப் பட்டிருக்கிறது.ஆன்டிரியா படத்தில் எதுக்கு என்றே தெரியவில்லை. ரெண்டு ஹீரோயின் இருந்தா க்ளாமரா இருக்கும்ன்னு நினைச்சுட்டாரோ தலை? பூஜா குமார் நாக்கைச் சுழட்டி சுழட்டி பேசும் NRI ஐயர் தமிழ் சரியான கொடுமை. பல இடங்களில் ப்ரேக் போடுகிறது. இந்த இடங்களில் ஒரு எழுத்தாளராய், டைரக்ட்டராய் கமல் தவறிவிட்டார். இடைவேளைக்கு முன்னால் கொஞ்சம் கொட்டாவி வருகிறது. நல்ல திரைப் பின்னணி இசை என்பது பல இடங்களில் மௌனமாகவே வரும் என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால் இந்தப் படத்தில் ரொம்ப ஓவராகவே மௌனமாக இருந்து பல காட்சிக்குத் தர வேண்டிய டெம்போவை கொடுக்கத் தவறியிருக்கிறது என்று நினைக்கிறேன்.இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரும்ப உட்கார வைக்கிறது.
எடிட்டிங்கில் கமல் நிறைய மூக்கை நுழைத்திருப்பார் என்பது எனது திண்ணமான எண்ணம். கொஞ்சம் கத்தரி போட்டு டைட்டாக திரைக்கதையை நகர்த்தியிருந்தால் குருதிப் புனலை விட பத்து மடங்கு சூப்பர் ஆக்ஷன் படமாய் வந்து பிச்சு உதறியிருக்கும். ஆனால் திரைக்கதை தொய்வினால் அந்த அளவிற்கு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
இந்த குறைகள் எல்லாம் இருந்தாலும் இந்த பிரமாண்டமான, ஹாலிவுட்டுக்கு நிகரான முயற்சிக்கு கமலுக்கு ஒரு ஷொட்டு. தமிழ் சினிமா வரவேற்க வேண்டிய முயற்சி.