Sunday, October 18, 2009

பொறுமை....

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். பட்டாசெல்லாம் கொளுத்தி...பலகாரமெல்லாம் பக்கத்து வீட்டுக்கு குடுத்து...தெருவில் நண்பர்களோடு கூடி...சாரி சாரி...வழக்கம் போல டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்து தீபாவளியை ஜமாய்ச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

மன்னிக்கவும், வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமாக இருக்கட்டுமே என்று சில பல உபரி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு...இப்போ அது ஏகப்பட்ட பொறுப்புகளாகி.. ரெண்டு தெரு தள்ளி ஒரு குழந்தைக்கு காது குத்த மட்டும் தான் ஒத்துக்கொள்ளவில்லை அந்த அளவில் வந்து நிற்கிறது. எல்லா நேரங்களிலும் வேலை மென்னியப் பிடிக்கிறது. இப்போதெல்லாம் ஆபீஸ் போய் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடிகிறது. இதெல்லாம் போக அடுத்த விடியோ(ஃபிலிம்) ப்ராஜெக்ட்டையும் ஆரம்பித்திருக்கிறேன். பின்னொரு பதிவில் விபரமாய் பதிவிடுகிறேன்.

என் சின்ன மகள் டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததால் தங்கமணி அவரின் நிறைய சேட்டைகளை மொபைல் போனில் பிடித்து வைத்திருந்தார். அதையெல்லாம் போனில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றச் சொல்லி மூன்று வருடங்களாய் சொல்லிக் கொண்டிருந்தார். அப்புறம் "உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லையா...நானும் எவ்வளவு நாள் சொல்றது ...கொஞ்சமாவது மானம் வெட்கம் இருக்கா...இதுக்கு மேல நான் மனுஷியா இருக்க மாட்டேன்"ன்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியதில், சரி என்று பெரிய மனது செய்து மாற்றி அமைத்ததில் எனக்குப் பிடித்த ஒரு கோப்பு ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அமுக்கு போல முகத்தை வைத்துக் கொண்டு இரண்டு வயதில் என் சிறிய பெண் செய்த சத்தியாகிரகம்...ஹூம்ம்ம்ம்ம் இந்த இந்த இந்த டெக்னிக்கு தான் நானும் ரொம்ப நாளா ட்ரை பண்ணுறேன்...பிடி பட மாட்டேங்குது....!!!


ஆரம்பகால மொபைல் போனில் எடுத்தது என்பதால் வீடியோ க்வாலிட்டி மிக மோசமாய் இருக்கும். பொறுத்தருள்க.

68 comments:

Anonymous said...

very cute

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டுபுக்கு & குடும்படத்தாருக்கு என்னுடய தீபாவளி வாழ்த்துக்கள்.

பரதேசி said...

டுபுக்கு & பேமிலிக்கு இனிய தீபாவளி வழ்த்துக்கள்.
தலை தீபாவளிக்கு 'மாமியார்' வீட்டுக்கு போகிறோமோ இல்லியோ, நான் இருக்கும் ஊரில் 'பட்டாசு' கொளுத்தினாலே 'மாமியார்' வீடு போக சான்ஸ் உண்டு. ஆனா, July 4th அன்று விதவிதமா சில இடத்துல வாணவேடிக்கை நடக்கும் - தூரத்திலிருந்து கண்குளிர பார்க்கலாம். அவ்வளவு தான். அந்தகாலத்தில் இந்தியாவில் கொண்டாடிய தீபாவளிகளை நினைத்து 'ஜொள்'வேன்.

உங்க பொண்ணுக்கு ஆனாலும் ரொம்ப பொறுமை. ஆனா கடைசியில் "கோமதி" யையும், தன் பெயரையும் சொல்லாமல் திரும்பி நின்றது அற்புதம். வாழ்த்துக்கள்!

sriram said...

48 நாள் கழிச்சு வந்துட்டு சும்மா பழய வீடியோவ போட்டு ஒப்பேத்தியாச்சா?
எனிவே, தீபாவளி வாழ்த்துக்கள், நல்ல நாள் அதுவுமா திட்ட விரும்பல, பொழச்சிப் போங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

so cute...sutti......
உங்க பொண்ணுக்கு ஆனாலும் ரொம்ப பொறுமை.
ha hah ha....
happy dewali..


Rifay

அறிவிலி said...

ச்சோ.. ச்வீட்.

ச.சங்கர் said...

Belated Deepavali Wishes to you & your family.

குழந்தைக்கு பாட்டு சொல்லிக் குடுக்குறது யாரு? உங்க தங்கமணியா? நீங்க பொண்ணு பாக்கப் போனப்ப பாடுனது போலேருக்கு ,அப்புறம் பாடவே விடலியா? குரல் பிசிரடிக்குது:) இல்லை உம்ம கிட்ட கத்தி கத்தி இப்படியா :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..எப்படியும் அடுத்த பதிவு 2010 லதான..அதான் இப்பவே அதுக்கான பின்னூட்டத்தையும் சேத்தே போட்டுட்டேன் :)

Murali said...

Hello Dubuks

You made my day. Very beautiful video snippet :)

KCDesi

CS. Mohan Kumar said...

டுபுக்கு அவர்களே..

பல முறை உங்கள் blog வந்துள்ளேன். முதன் முறை பதிவு இடுகிறேன். தங்கள் காமெடி ஆன எழுத்தை நான் பெரிதும் ரசிப்பேன். என் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளேன்.

************

நானும் ஒரு blogger தான்.

சிறு வயது முதல் நமது விருப்பங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது.. இது பற்றி ஒரு சிறு article. படிக்க எனது blog-க்கு வரவும்.

"யாரை பிடிக்கும்?" மாறும் விதம்

Link:

http://veeduthirumbal.blogspot.com/

Mohan Kumar

rapp said...

ha ha ha v v v cute:):):)

லங்கினி said...

Excellent video. Theriyama office-la play pannitten, I cudnt control laughing loud...

Cute child...

I would love to learn that song to teach my 3yr old :)

சிங்கக்குட்டி said...

தீபாவளி வாழ்த்துகள்.

எங்க போனீங்க ஆளையே காணோம்?

பாசகி said...

ச்சோ ச்வீட் :)

தீபாவளி வாழ்த்துகள்(ரொம்ப லேட்டாயிடுச்சோ)

அடுத்து ஒழுங்கா எதாவது எழுதுங்க, வீடியோ போட்டு எங்களை ஏமாத்தவேணாம் :)

Ananya Mahadevan said...

அழகு அழகு.. மழலை மொழி இனிமை
பாடல் பிரமாதம் .
Belated Diwali Greetings!

அடுத்த தெரு குழந்தைக்கு காது குத்தரதெல்லாம் இருக்கட்டும், சீக்கிரம் அடுத்த போஸ்ட் போடுங்க.

sriram said...

அப்புறம், தங்க்ஸ் பேச்சை உங்களைத் தவிர வீட்ல யாரும் கேக்க மாட்டாங்க போலருக்கே..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அரசு said...

Belated deepawali wishes to you and your family.

எம்மாம் பெரிய பாடல்... 2 வயசுலே நல்லா repeat பண்ணியிருக்காங்க.

வாழ்த்துக்கள்.

-அரசு

ambi said...

மன்னி கஷ்டப்பட்டு பாடின(?) இந்த வீடியோவை தேடிப் பிடிச்சு போட்டது கூட பொறுத்துக்கலாம். இந்த பதிவுக்கு பொறுமைன்னு தலைப்பு வெச்சு அதுவும் ரென்டு வயசு குழந்தையின் பொறுமைன்னும் தலைப்பு வெச்சீங்க பாருங்க, உங்க தைரியத்தை மனம் திறந்து பாராட்டுகிறேன். :p

@மன்னி, திலகர் வித்யாலயத்தில் லலிதா டீச்சர் சொல்லி குடுத்த அதே பாட்டை பாடி குழந்தையை இப்படி இம்சிச்சு இருக்க வேணாம். :))

ambi said...

புதிய பொறுப்பா? உங்கூர்ல மேயர் எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சுட்டீங்களா?

அங்க ஜெயிச்சாலும் ரோடு போடறேன், பாலம் கட்டறேன்னு சில்லறை பாக்க முடியாதே! (அழகான லேடி செகரட்டரி கிடைக்கலாம், அதான் மிச்சம்) :))

Unknown said...

Belated Diwali Wishes to you and your family anna.. nice video.. so sweet. manni's voice s too good :)

Anonymous said...

Ambi - Enna romba thairiyama pesarai?
un wife kitta pesi romba nalachu illa?

Manni.

Gayatri _ thanks.

Anonymous said...

Dubukku, unga old photo, video irunthal podavum plees

Anonymous said...

cute cute cute child.ithellam neenga try pannalum varathu.thangamani paadi,neenga mirutham vasichathu(jolli thirinhtha kaalam) enna paatu?athuvum podunga-isthripotti

sriram said...

அனானி அன்பரே,
அழகா ஒரு முகமும் அழகா ஒரு குரலும் பதிவில போட்டார் இல்ல, எதுக்கு அவரோட போட்டோ கேட்டுகிட்டு, இதத்தான் சொந்த செலவில சூனியம் வெச்சிக்கிறதுன்னு சொல்வாங்க..
அப்புறம் அவரும் போட்டோ போட்டுட்டு ஜாக்கி ஷெராஃப் மாதிரின்னு சொல்வார் (ரங்கா - ஞாபகம் இருக்கா??)

அம்பி : உங்க அண்ணாதான் மன்னி பேர்ல வந்து அனானி கமெண்ட் போட்டு மிரட்டுகிறார்ன்னு நெனக்கிறான், நீங்க என்னா நெனைக்கிறீங்க..

Rams said...

Yov..Adi Paadi Lateaa vandhuttu porumai erumai nnu oru alvaa post..adutha post oru varrathukula varale americalerundhu autom bomb varum..anyways belated diwali wishes..

sriram said...

ரங்கா,
மேலே காரித்துப்பியிருக்கும் ராம்ஸ் நானில்லை, நானில்லை, நான் அவனில்லை.
நள்ள நாளேச்சுன்னு நான் விட்டுட்டேன், ராம்ஸ் விடறதாயில்ல... நல்லா வாங்கி கட்டிக்கோங்க..
என்றும் அன்புடன் (இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்லன்னு சொல்வது எனக்கு கேக்கல)
பாஸ்டன் ஸ்ரீராம்

Gayathri said...

thanks for responding manni.
anna.. please note how fast manni responded. try to follow her.

Rams said...

Sriram..thanks for the clarification..naan hartfordla irukkara Rams..contact details anupunga..pesuvom..appuram sendhu Rangava thitaruthukku vasadhiyaa irukkum..

endrum nakkaludan
Hartford Rams

sriram said...

ராம்ஸ் ரொம்ப நெருங்கிட்டீங்க..
நமக்கு இடையில் தூரம் அதிகமில்லை (Boston to Hartford) நம் எண்ணங்களிலும் அதிக வித்தியாசமில்லை (டுபுக்கை கலாய்ப்பதில்)
பொற்கொடி இப்போ ரொம்ப பிஸி, அவங்க வர்ற வரைக்கும், கும்மியை நாம பாத்துப்போம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

குப்பன்.யாஹூ said...

MY Belated Deepawali wishes to you, your wife and daughters.

Million thanks for sharing this interesting video.

I bless, wish and pray that you daughter to come a bright, brilliant, smart and loving human.

I appreciate your honesty of sharing own family related video. Hats of Buddy.

உண்மைத்தமிழன் said...

டுபுக்கு அண்ணே..

உங்களுடைய கலை உலக வாரிசுக்கு இப்போதே வாழ்த்து தெரிவிச்சுக்குறேன்..!

உங்க சேட்டைல பாதியாவது உங்க வாரிசுக்கு இருக்காதா என்ன..?

Anonymous said...

Hi, I'm from TVL district too. Glad to hear some our Ooru tamil + Brahmin dialects. Very nice blog!

Anonymous said...

ungal thangamaniyin kural mattum,juniorin kural inimai mattrum azhagu.vazhtukkal.
sir,innum ethannai naal eduthu kolveergal pudu postirkku.adhutha deepavali varai kakka venduma???seeekirame ezhudungal.ungalukkum matrum kudumbatharkum iniya deepavali vazhtukkal.
nivi.
ps.ennoda rengamani solla sonnar.veetu velaigal busyaaga irundhal dhayavu seidhu officela vandhu ezhudungal.ange dhhan nimmadhiyaga sindikka mudiyum enrar.idharku erkanave ennidam sagasra archanai vangi kondadhaga thervikka sonnar.

Anonymous said...

veetu velaigal busyaaga irundhal dhayavu seidhu officela vandhu ezhudungal.ange dhhan nimmadhiyaga sindikka mudiyum enrar.idharku erkanave ennidam sagasra archanai vangi kondadhaga thervikka sonnar.
- ivaroda nermai pidichiruku, franka pesuranpa- isthripotti

Rams said...

Sriram,gummikku naan ready...kaala maadu thenju thenju katerumbaa aana kadhayaa indha aaloda postings kammi aayite varudhu..enga poga poraanga..namma eppa vandhu post pannalum padikathaan poraangannu nammala kanda nakkal..idhukku oru mudivu kataama vidaradhaa illai..

Ambika Rajesh said...

Dear Dubukku

Belated Deepavali wishes to you and your family. Your kid is so cute.

My father used to come and conduct Radha and seetha kalyanam at Ambasamudiram for many years. I forgot to ask about your co ordinator Raghu anna. He might remember him.

Best wishes
Ambika

sriram said...

அலோ ராம்ஸ்,
பாவம் நம்ம டுபுக்கு அண்ணன் ரொம்ம்ம்ப நல்ல்லவர்..அவர் வாசகர்கள் மீது எவ்வளவு மதிப்பு வச்சிருக்கார்னு எனக்குத் தெரியும். என்ன அப்பப்போ லேட்டா வத்துட்டு ஹி ஹின்னு இளிப்பார், இனிமே அடிக்கடி எழுதறேன்னு சொல்லிட்டு மறுபடியும் முருங்க மரம் ஏறிடுவார், மத்த படி அண்ணன் 80 KG சொக்கத்தங்கம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

டுபுக்கு & குடும்படத்தாருக்கு என்னுடய தீபாவளி மற்றும் இனிய புத்தான்டு வாழ்த்துக்கள். எப்பிடியும் அடுத்த போஸ்டு ஜனவரிலதான் போடுவிங்க அதனாலதான் :)


அன்புடன்.
கார்த்திக்.

Rams said...

Sriram,

Annan lateaa varadhu kooda o.k..aana lateaa vandha latestaa illa varanum..indha maadhiri artha pazhasaana oru video pottu post pannaa kovam varaadha enna..i am not saying the video is bad..it's cute..irundhaalum naanum ethana thadave pazhaya post ellam review pannaradhu..manapaadme aayiduchu..

sriram said...

ராம்ஸ்,
இந்த ஆட்டத்துக்கு நா வல்ல..
ஏற்கெனவே டுபுக்கு நான் ரொம்ப கலாய்க்கறேன்னு சொல்லிட்டு என் மேல காண்டுல இருக்கார், இதுக்கப்புறம் என்னை இந்த தளத்தில் இருந்து விலக்கி வெச்சிடுவார்..
எனவே, வாழ்க டுபுக்கு, வளர்க அவர் தமிழ்த்தொண்டு (துண்டு இல்ல) என்று கூறி என் உரையை முடிக்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Rams said...

Sriram..Idhellaam too much..Gumikku vaanu koopitadhu yaaru? ippa niceaa escapeaa? anyways singam singleaa thaan varum..naan thaniyaa dubukku va sandhikaa thayaar..

Anonymous said...

Enjoyed the video! Thangs has a great voice!
Is that kutty asking for appalam (followed by pashikkuthu?) baby mouthing aRputham and remembering appalam?!!! at some point before beginning the satyagraha?!!! :))) ... Or is it just my bad bad ears - or is my brain filled with appalam?! :) ...
Absolutely fantastic video!

Kavitha said...

Welcome back!

இரா. வசந்த குமார். said...

hai dubukku sir...

i want ur personal mail id. can u please send to vasanthfriend.raju@gmail.com

thanks.

Kavitha said...

Just read your UK Deepavali celebrations -Getting to be a celebrity beyond the blog genre is it?

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3713&Country_name=Europe&cat=new

Porkodi (பொற்கொடி) said...

adada gummi nadakkudha ipovum..? :) //enga poga poraanga..namma eppa vandhu post pannalum padikathaan poraangannu nammala kanda nakkal..idhukku oru mudivu kataama vidaradhaa illai..// - adra adra adra.. idha ellam paathum oru jeevan silenta irukke, haiyo haiyo!

Rams said...

vaanga porkodi..indha Boston Sriram gummiya arrambichitu escape aayitaaru..naan inge solo solayappanaa aayiten..konjam kai kudunga..naan dubukku nallavaru, vallavaru, maanasthannu nenachen..andha ennam konjam konjamaa kammi aayitte varudhu..vara vara dubukkunra peruku etha maadhiriye nadakka aarambichutaaru..

Porkodi (பொற்கொடி) said...

enna dubukku uncle, rams ungala ipdi ellam solitaru apo kooda soundu kuduka matengringa? at least manni avadhu velila varuvanga nu patha.. enna koduma saravana?

video ippo thaan pathen, chooooooo chweet!! enaku kuttioda cuteness thanga'manni'yoda voice ellame chala nachindhi..!

Dubukku said...

கமெண்டிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அனைவரும் மன்னிக்கவும். என்னால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இங்கு எழுத முடியாது. இந்த வாரத்தில் தனித் தனியாக பதிலளிக்க முயலுகிறேன்.

ராம்ஸ் - உங்களை ஏமாற்றுவதற்க்கு ரொம்ப ஸாரி...ஆனால் இங்கு சொல்லமுடியாத பல்வேறு குழப்பங்களில் இருப்பதால் இங்கே எழுதும் மனநிலையில் இல்லை. தெளிவு பிறந்தவுடன் திரும்ப வருகிறேன்.

Rams said...

Renga..i was just kidding around..please dont take it personally...your trouble is my trouble...ippadi ellaam naan solluven endru edhir paarthaal sorry..seekiram vaanga..may be if u write here ur mind might get some peace...

Endrum anbudam (sriram mattum dhaan solvaara idha)

Rams said...

Disclaimer: Again all the comments I made here were in good humour and not meant to hurt any body's feelings..I apologize for anything I said which might have done so..

-Rams

Porkodi (பொற்கொடி) said...

enaku ennavo Rams neenga thaan "boss"ton nu thonudhu..! :)))

Rams said...

aiyoo..nejamaa illeenga porkodi..enna irundhaalum neenga enna indha maadhiri escape aagara aalu kooda compare pannaradhu nalla illai..(adudha gummi getting ready for bostonsriram.blogspot.com) avaru dhaan real "boss"ton..naan chumma..vethu vettu..

sriram said...

ராம்ஸ் மற்றும் பொற்கொடி,

அடங்கவே மாட்டீங்களா நீங்க..

உங்களையெல்லாம் பெத்தாங்களா இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா???
(அப்பாடா, இப்போ நான் டுபுக்காரின் good books ல வந்துடுவேன் - எப்படி என் சாமர்த்தியம்...ஹி ஹி)

ராம்ஸ் : என்றும் அன்புடன் - tag line நான் காப்பி ரைட் வாங்குனது, என் அனுமதியில்லாமல் உபயோகப் படுத்துவது தவறு..

பொற்கேடி : நான் அவரில்லை, நான் அவரில்லை, நான் அவரில்லை..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...

sriram said...

Hi Rams and PorKEdi...
Hope you guys took my earlier comment in the right spirit.. No offense meant - I promise...
Hope you found that as a part of the GUMMI and nothing more..
திட்டுறதுன்னா 781 363 9168 ல போன் பண்ணி திட்டலாம்..
சும்மா கூட போன் பண்ணலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

பின் குறிப்பு: யாஹூ மெசஞ்சர் சாட் பாக்ஸை விட இந்த சாட் பாக்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு, உங்களுக்கு??

Porkodi (பொற்கொடி) said...

Mathavangla "kedi"nu koopidravanga thaan kedi velai seiranga nu oorla pesikarangappa! :D

enaku onnu puriala - ennathuku aal aaluku naan summa than sonnen/ i was just kidding/ right spirits nu solitrukinga?! inga enna nadandhu pochu nu ivlo emotion?!! yov dubukku uncle (mariyadhai pathingla apo kooda), neenga oru peelings comment potalum potinga, ellarum pesave bayandhu sagaranga! nallarka idhu??

boss, phone numberlam kuduthu thitta solringa, avlo nallavara neenga?? :) ungluku adutha one year kulla call paniduven boss, yenna inga vandhu 3 years achu inum call panna vendiya cousins, friends list apdiye irukku! enga nalladha oru hands free kidaicha thaane? enaku kazhuthu saichu pesite velai seiya varadhe!! :((

Porkodi (பொற்கொடி) said...

han, apram enaku indha chat thaan romba romba pidichuruku! vera yaroda idathula poi avanglaiye thitti gummi adika mudiyum sollunga? dubukku uncle 'vaalga'! avanga manaivi thanga manni 'vaalga vaalga'!

sriram said...

பொற்கேடி..
கனக்டிகட் ராம்ஸ் ஒங்கள மாதிரி இல்ல, நம்பர் கொடுத்த உடனே போன் பண்ணிட்டார்.. அவுரு ரொம்ப நல்ல்ல்லவரு...

முடிஞ்சப்ப போன் பண்ணுங்க..

நான் போன வாரம் தான் கொஞ்சம் காஸ்ட்லியான Hands Free வாங்கினேன்.. அதன் பேரு Lexus RX 350. அதுக்குள்ள போனாலே என் போனை சரியா கண்டு பிடிச்சு நீலப்பல்லுல (அதாங்க Bluetooth) மாட்டி விட்டுடுது.. ஹாயா பேசிக்கிட்டே போகலாம், நீங்களும் வாங்கிப் பாருங்களேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Dubukku said...

ராம்ஸ் - நோ ப்ராப்ஸ்...நான் நீங்கள் சொன்னைதை தவறாக எடுத்துக்கொள்வில்லை. கவலைப் படவேண்டாம். I have taken no offence on your comment.

Will be back soon on my blog.Just give me some more time.

Sriram/Por"kedi"Aunty- நடத்துங்க நடத்துங்க...பார்த்துக்கிட்டே இருக்கேன்...உங்க கும்மியையும் ஆட்டத்தையும் :))))

Porkodi (பொற்கொடி) said...

paarra.. edho kadavul megathu mela ninnu paakra madhri pathukitte irukaram! :)) ennai poi aunty nu koopidravanga ellam adutha jenmathula benjamin button madhri thaan poraka poringa solliten! ;)

sriram, ennadhu Lexus 350 a? edho car madhri illa iruku peru?! idhu enna endha phonekum work aguma? details konjam sollunga pathuduvom..

sriram said...

பொற்கேடி Aunty
(பெயர் உபயம் : கேடி - தம்பி, aunty : அண்ணன்),
அது கார்தான் - Lexus Rx 350 SUV - தெரியாத மாதிரி கேக்குறீங்க.
இதில இருக்குற bluetooth ல பேசிக்கிட்டே ட்ராவல் பண்ணலாம்..
போன் பண்ணுறதுக்கு ஒரு வருஷம் ஆகும் சொன்னதால Suggest பண்ணேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

aiyo sriram, ippovum naan travel panikite pesitu thane irukken? :) idhukellam oru lexusa? en kitta irukra dabba phone ku oru handsfree thedaren nu sonna.. vivagaramana aalunga sami!

idhu varaikum enna paatha bloggers ellam orediya shock than agirkanga.. onnu naan chinna ponnu nu poi solren nu nenachutu vandhu patha naan nijamave avanga ninaichadha vida chinnavala thaan iruppen..! illaina chinna ponnu nu solli solli avanga manasula romba kutti ponna imagine panirupanga (oruthar naan edho 3rd std ponnu nu karpanai panirukar na parunga.. ithanaikum blog la college kalyanamlam soliruken..) unmaiyana ponna pathadhum peche varadhu!! enna kodumainga idhu saravanan?

Deekshanya said...

hello Renga,
unga mail id konjam venumay. please email to anitha.malaiyarasan@gmail.com

Regards
Deeksh

Deekshanya said...

hello Renga,
unga mail id konjam venumay. please email to anitha.malaiyarasan@gmail.com

Regards
Deeksh

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Dubukku said...

அனானி - நன்றி

பட்டாபட்டி - வாழ்த்துக்கு நன்றி. நான் தான் லேட்டாகிவிட்டது அடுத்த தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்தை பிடியுங்கள் இதோ

பரதேசி - மிக்க நன்றி நண்பரே உங்களுக்கும் அடுத்த தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்தை பிடியுங்கள் இதோ

ஸ்ரீராம் - நல்ல வேளை தப்பிச்சேன் :)

நன்றி நண்பரே ஆமாம் பொறுமை ஜாஸ்தி தான் :)

அறிவிலி - நண்றி நண்பரே !!

சங்கர் - பாருங்க உங்க வாய் முஹூர்தம் பலித்தே விட்டது. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

முரளி - மிக்க நன்றி நண்பரே

மோகன்குமார் - வான்க்க மிக்க நன்றி. நானும் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்

ராப் - டேங்க்ஸ்

லங்கினி - டெங்கஸ். ராயல்ட்டி உண்டா :P

சிங்கக்குட்டி - கொஞ்சம் இதர வேலைகள் ஜாஸ்தியாயிடிச்சு அதான்

பாசகி - டேங்கஸ் நானும் வாழ்த்து சொல்ல லேட் தான் :)

அனன்யா - வாங்க ரொம்ப நன்றி பாராட்டுக்கு

ஸ்ரீராம் - அங்க எஅப்படி...இங்க வந்து உதாறெல்லாம் ஜோராத் தான் விடறீங்க :)))

அரசு - ஆமாம் நானே மலைச்சுப் போயிட்டேன் நன்றி நண்பரே

அம்பி - உனக்கு நேர்ல பார்க்கிற அன்னிக்கு இருக்குடி தீவாளி :)))

காயத்ரீ - ரொம்ப டேங்க்ஸ்

அனானி - ஏன் ஏன் இப்படி...நாலு பேரு வந்து காறித் துப்பட்டும்ன்னா ரொம்பத் தான் ஆசை உங்களுக்கு :))))))))


இஸ்திரிபொட்டி - அதெல்லாம் கல்யாணத்திற்கு முன்...இப்போல்லெலம் நான் மிருதங்கம் வாசிக்கிறத விட்டுட்டு வெறும் ஜால்றா தான் போடறேன் :))

ராம்ஸ் - நீங்க நல்லவர் வல்லவர் ஸ்ரீராம பார்த்து கெட்டு போகாதீங்க நீங்க இப்படி சொல்லலாமா..:)

காயத்ரீ - சரிங்க மேடம் :P

குப்பன் - வாங்க சார் நல்லா இருக்கீங்களா..நீங்க தான் தொடர்ந்து கொஞ்சம் இதமா பின்னூட்டம் போடறீங்க..கோடனு கோடி நன்றி உங்களுக்கு

உண்மைத் தமிழன் - அண்ணே வாங்க ரொம்ப நன்றி வாழ்த்துக்கு ....ஆமா ஆமா

அனானி - வாங்க நீங்களும் திருநெல்வேலியா...ஆஹா ரொம்ப சந்தோஷம்


நிவி - வாங்க சாரி ரொம்பவே லேட் ஆகி விட்டது. வேறொரு மேட்டர்ல கவனம் போய் விட்டது அதைப் பற்றியும் கூடிய சீக்கிறம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

Dubukku said...

அம்பிகா - வாங்க ஓ அப்பிடியா..கொஞ்சம் முடிந்த போது டீடெயில்ஸ் தட்டி விடுங்க கண்டிப்பா உங்க அப்பாவ பற்றி எங்க வீட்டுலயாவது தெரிஞ்சிருக்கும்

கார்திக் - வாங்க மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு ரொம்ப சாரி என்னுடைய லேட்டான பதிலுக்கு

ராம்ஸ்/ ஸ்ரீராம் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் அழுதுடுவேன்

மதுர - ஆமாம் சும்ம நக்கல் விட்டுக் கொண்டு சத்தியாகிரகத்தை ஆரம்பித்துவிட்டார் :))) இந்த தெகிரியம் தான் நம்ம கிட்ட மிஸ்ஸிங் :P

பொயட்றீ - ரொம்ப சாரிங்க உங்க கமெண்டுக்கு என்னால ஒன்னும் சொல்ல முடியல :))))

வசந்தக்குமார் - வாங்க சார்...உங்க கமெண்ட் வந்த உடனேயே உங்களுக்கு ஒரு மெயில் தட்டி விட்டேன் ஆனா அதுக்கப்புறம் உங்க கிட்டேர்ந்து சத்ததையே காணோம்?

பொயட்ரீ - ஆகா நீங்க தினமலர அட்டை டு அட்டை படிப்பீங்களா...:))) கரெக்டா பிடிச்சிடீங்க :)) மிக்க நன்றி மேடம்

பொற்கேடி - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏற்கனவே அவங்க அட்டகாசம் தாங்கல இதுல நீங்க நேறையாஅ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராம்ஸ்/ஸ்ரீராம்/பொற்கேடி - deadly combination pola irukke avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

உண்மைத்தமிழன் said...

இதெல்லாம் டூ மச் டுபுக்கு..!

அக்டோபர்ல போட்ட கமெண்ட்டுக்கு ஜனவரில பதில் கமெண்ட்டா..?

அப்பாடி.. இதுதான் வலையுலக சரித்திரத்துல சாதனைன்னு நினைக்கிறேன்..!

நல்லாயிருங்கண்ணே..!

sriram said...

//உண்மைத்தமிழன் said...
இதெல்லாம் டூ மச் டுபுக்கு..!
அக்டோபர்ல போட்ட கமெண்ட்டுக்கு ஜனவரில பதில் கமெண்ட்டா..?
அப்பாடி.. இதுதான் வலையுலக சரித்திரத்துல சாதனைன்னு நினைக்கிறேன்..!
நல்லாயிருங்கண்ணே..!////
நல்லா பாத்துக்கோங்க, இது நான் போட்ட கமெண்ட் இல்ல, உ.த அண்ணன் போட்டது..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Post a Comment

Related Posts