Tuesday, September 01, 2009

கல்யாணம் - Prequel

ஏன்டி சுஜா சித்த பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணிண்டு சின்ன மாமாவ கூட்டிண்டு நாலு தெருவுக்கு பத்திரிக்கை குடுத்து நேர்ல அழைச்சிட்டு வந்துடேன்..இந்த் பேப்பர்ல பெயர் அட்ரெஸ் இருக்கு, அத்தோட யார் யார எதுக்கு கூப்பிடனும்ன்னு டீடெயில்ஸும் இருக்கு. பெயருக்கு நேர ஒரு க்ராஸ் போட்டிருந்தா கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிடு. ரெண்டு கிராஸ் போட்டிருந்தா ஜானவாசத்துக்கும் கூப்பிடு. மூனு இருந்தா ரிசெப்ஷன் வரைக்கும் இருந்துட்டு தான் போகனும்ன்னு வருத்திக் கூப்பிடு என்ன..

என் பிராஜெக்ட் மேனேஜர் மாதிரி சரியான இம்சைமா நீ...ரிக்வைர்மென்ட் ஸ்பெசிபிகேஷன்லாம் டீட்டெய்லா குடு...இதெல்லாம் நீயே பார்த்துக்க கூடாதா....இல்ல வானுயர வளர்ந்து நிக்கிறானே உன் தம்பி அவன் கிட்ட குடுக்க கூடாதா...கல்யாணத்துக்கு வந்த இடத்துல அழைச்சிட்டு வா தொலைச்சிட்டு வான்னு....

ஏன்டி உன் சின்ன மாமாக்கு இந்தூர்ல யாரடி தெரியும் அவனே இங்க எப்பவோ வரான் எப்பவோ போறான்...

யாரு...உன் தம்பி...ராது ப்ரெண்ட்ஸ் அத்தனை பேர் வீடும் அவனுக்கு அத்துப்படி...அவங்க போன் நம்பர் வேணும்னா நானே அவன கேட்டுத் தான் தெரிஞ்சிக்கிறேன்...வயசுப் பெண்களின் நடமாடும் டைரக்ட்ரிமா உன் தம்பி...

அஞ்சு வயசு வித்தியாசத்துல உனக்கு மாமாவா வந்து பொறந்தேன் பாரு ...எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்.... அன்னிக்கு ராது கூட ஸ்ரீலேகா ஆத்துக்கு போயிருந்தேன் அவ அம்மாக்கு நல்ல முட்டா மஞ்சள் வேணும்ன்னு போன் நம்பர் குடுத்தா...டீ.நகர்ல ரங்கநாதன் தெரு பக்கத்துல...

ஏன்டி உன்ன கல்யாணத்துக்கு கூப்பிட்டு வான்னு சொன்னா அவன போய் கிண்டின்டு...சாப்ட்வேர் கம்பேனில வேலை பார்தா..? ரொம்ப தான் வாய் வந்திடுத்து உனக்கு... நாளைக்கு உனக்கு கல்யாணம்ன்னு வரும் போது அவன் தான் திரும்பவும் ஓடியாடி வேலை செய்யப் போறான்...

ஆஹா சந்தடி சாக்குல அடுத்த கல்யாணத்துக்கும் ஓசி எடுபிடியா இப்பவே அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர குடுக்கிறியே அக்கா...

நோ வே...என்னோட கல்யாணத்துக்கெல்லாம் முந்தின நாள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பறேன்...காலம்பற கிளம்பி வந்து சேரு...சிம்பிளா லிப் டு லிப் குடுத்து கல்யாணம்...ரெஸ்டாரண்ட்ல புஃபே. நாலு மணிக்கு எல்லாரும் இடத்த காலி பண்ணிடனும். நாங்க பர்ஸ்ட் நைட்டுக்கு பிரிப்பேர் ஆகி அடுத்த நாள் காலம்பற முதல் ப்ளைட்ல ஹனிமூனுக்கு எஸ்கேப் ஆகிடுவோம்...

ஆஹா இந்த ஐடியா சூப்பரா இருக்கே...சுஜா எனக்கும் ஒன்னு செட் பண்ணேன்

இதோ பாரு...நீ தான் எனக்கு மாமா..நான் உனக்கு இல்ல புரிஞ்சுதா...சரியான அலையாண்டி மாமாவா இருக்கியே...

ஏன்டி ஒரு அம்மா முன்ன பேசற மாதிரியா பேசற...ரொம்ப ஆட்டம் போடதடி உங்க பாட்டி காதுல விழுந்துடப் போறது. நானும் உன்ன மாதிரி ஒரு காலத்துல ஈஸ்ட்மென்ட் கலர்ல கனவு கண்டவ தான்..இன்னிக்கு உங்கள பெத்துட்டு கிரைண்டர்ல தோச மாவு அரைச்சிண்டு இருக்கேன்...

டேய் நீ நம்ம குமார் பையன் தானேடா...என்ன படிக்கிற

இப்போ தான் ப்ரி கே.ஜி சேர்த்திருக்கோம் மாமா...

ம்ம்ம்..வெரி குட்..நல்ல கவனமா படிக்கிறானா...குட் பாய்...நல்ல படிக்கணும் என்ன....பெரியவனாகி என்ன ஆகப் போற....டாக்டரா...இல்ல இஞ்சினியரா

....ம்ம்ம்

..சொல்லுடா...பெரியவனாகி என்ன ஆகப் போற...??

ம்ம்ம்...நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்....

உங்க பெரியப்பாவுக்கு தேவை தான்...சின்னப் பிஞ்சு அவன்...அவனப் போய் டாக்டராகறியா கம்பவுன்டர் ஆகறியன்னு ப்ரஷர் போட்டுண்டு....கரெக்டா சமாளிச்சான் பார்த்தல்ல...இவன் வயசுல எனக்கெல்லாம் இவ்வளவு சாமர்த்தியமில்லை....

...ம்க்கும்... உங்களுக்கா...எங்க அதான் கையில ஒன்னு வயித்தில ஒன்னுன்னு..பேச்சப் பாரு...அப்பா ஆகப் போறானாம்...இந்த குறுக்கு புத்திக்கு அப்படியே அப்பனக் கொண்டிருக்கான்...

டேய் ராகவ்...பந்தக்கால் நடறதுக்க்கு ஆள் சொல்லிட்டு வரச் சொன்னேனே..ஆச்சா

ஓவரா சீன் போடாதம்மா....அதெல்லாம் அப்பவே ஆச்சு...எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கைல குடுத்து வை...அவசரத்துக்கு வேணும்ன்னு கேட்டேனே என்னாச்சு...

அவசரத்துக்கு ஆயிரமா...அப்பிடி என்ன அவசரம் உனக்கு...?

அக்கா கல்யாணத்துக்கு பார்ட்டி எங்கடான்னு ப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே நச்சரிப்பும்மா...

சரி சரி...இந்தா நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோடா...நான் வெஜ்லாம் திங்காதடா...பாட்டி கேட்டா என் உசிர எடுத்துடுவா...

ஆமாண்டா ராகவ்...நல்ல சைவ உடுப்பி ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோ...யெப்பா தாங்கலடா சாமி...அம்மாவும் பிள்ளையும் ட்ராமா கம்பெனி ஆரம்பிக்கலாம்டா...சாப்பாடு சாப்பிட ஆயிரம் ரூபாயாம்...என்ன பார்ட்டின்னு எங்களுக்கு தெரியாதா....கேக்கிற மாதிரி கேக்கிறதென்ன...குடுக்கிற மாதிரி குடுக்கிறதென்ன....யெப்பா...வீட்டுல..முழிச்சிண்டிருக்கிற போதே முழியப் பிடுங்குறீங்களேப்பா...

என்ன சுஜா மேடம்...வீட்டுல மூக்கும் முழியுமா வாட்ட சாட்டமா புதுசா ஒரு பையன் வந்திருக்கான் போல...

ஏய் சும்மா கிண்டாடதடி...அவன் எங்க அத்தையோடு நாத்தனார் பிள்ளை...தூரத்து சொந்தம்

ஓ அப்போ உனக்கு அண்ணா முறையா...

சீச் சீ...வாய பினாயில் விட்டு கழுவு...தூரத்து முறைப் பையன்டி

ஓ அதான் தூரத்திலேர்ந்து உன்னையே முறைச்சிண்டே இருக்கானா

ஏய்...அப்படியே ஓடி போயிடு இது நம்ம கோட்டா...தெரியுமில்ல...

இதோ பாருங்கோ இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கிறவா முன்னாடி என் புடவைய பிடிச்சிண்டு பின்னாடியே வராதீங்கோ...மானம் போறது. ராத்திரி ஆம்பிளைகள் படுத்துக்கறதுக்கு ஹால்லயும் மொட்டைமாடிலயும் ஏற்பாடு பண்ணியிருக்கா...என் கூடத் தான் படுத்துப்பேன்னு சாக்கு போக்கு சொல்லதீங்கோ...உங்க அக்கா பெண்களெல்லாம் கிண்டல் தாங்க முடியலை...

என்ன மாமி மாமா என்ன சொல்றார்....ராத்திரி உங்க கூடத் தான் படுத்துப்பேங்கிறாரா...மொட்டை மாடில படுத்துண்டா ஜலதோஷம் வந்திரும்....இல்லையா மாமா..??

பார்க்கத் தான் போறேன்டி...நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க ஆத்துகாரரையெல்லாம் எங்க அனுப்பறீங்கன்னு...சை...என்ன பொழப்புடா இது ...பூஞ்சை உடம்புக்காரன மொட்டைமாடில படு, கட்டைமாடில படுன்னு...

வேன் காலம்பற அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடும்...மூனு ட்ரிப் அடிக்கும்...கிச்சு டெம்போக்கும் சொல்லி இருக்கேன்...மத்த சாமானையெல்லாம் நீ ஏத்திண்டு அதுல வந்துடு...நான் இவாள எல்லாரையும் பேக்கப் பண்ணிண்டு வந்துடறேன்...

ஐய்யோ ஐய்யோ...லைட்ட போடுங்கோ போடுங்கொ....கழிசல்ல போக யாரோ என் இடுப்ப பிடிச்சிட்டா.....லைட்ட போடுங்கோ

மாமி சத்தம் போடாதீங்கோ....நான் தான்...மொட்டை மாடில படுத்துண்டு..வாடைக் காத்துல நெஞ்சடைக்கிற மாதிரி இருந்துது...என் பெண்டாட்டின்னு நினைச்சு...விக்ஸ் இருக்கான்னு கேக்கலாம்ன்னு...சாரி அவள நினைச்சு உங்களை எழுப்பிட்டேன்...

ஏன்டா பிரம்மஹத்தி....பெண்டாட்டிய எழுப்பறவன் இப்படியாடா இடுப்ப பிடிச்சு நிமிண்டுவ...ராத்திரி நெஞ்சடைக்கறது .கு**%*(அடைக்கிறதுன்னு ஏதாவது சாக்கு போக்கு....மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே...என்னம்மா நிமிண்டிட்ட.... சௌம்யா எப்படித்தான் இவன சமாளிக்கிறயோ...நானும் ஏழு பெத்திருக்கேன்...எங்காத்துக்காரர்லாம் இவ்வளவு இல்லைம்மா...

ஸ்ஸ்ஸ் ஏன்னா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...அப்பவே படிச்சு படிச்சு சொன்னே கேட்டேளா...பெண்டாட்டிக்கும் பெருச்சாளிக்கும் வித்தியாசம் தெரியாதா...உங்க அத்தைபாட்டி மாதிரியா இருக்கேன் நான்...எனக்கென்ன இத்தோட ஓயாது நாளைக்கு...பி.பி.சி ப்ளாஷ் நியூஸ் மாதிரி மண்டபம் புல்லா நாறடிக்கப் போறா...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத ஜென்மம்...உங்களப் போய் எங்கேர்ந்து பிடிச்சேனோ...சே...

ஏன்டி விசாலம் உம் பொண்ணு குளிக்கப் போனாளா இல்ல கிணறு வெட்டப் போனாளா...எம்புட்டு நேரமாச்சுடி பாத்ரூமுக்குள்ள போய்....வேன் வந்து காத்திண்டு இருக்கு....சீக்கிரம் வரச் சொல்லுடி...

ஏன்னா...இந்தாங்கோ இவன பிடிங்கோ...இவன கக்கா போக வைக்க வேண்டியது உங்க பொறுப்பு...உசிர வாங்கறான்...பட்டுப் புடவைய உடுத்திண்டு வேன்ல ஏறி மடில உட்கார்ந்த உடனே டான்னு மணியடிச்ச மாதிரி கக்கா வந்துடும் உங்க புள்ளைக்கு....என்னால வைச்சுக்கு முடியாது உங்க பாடு

கிச்சு சாமானெல்லாம் ஏத்தியாச்சா.....நீ முன்னாடி கிளம்பு...நாங்க வந்துண்ட்டே இருக்கோம்....விசாலம் எல்லாம் எடுத்துண்டாச்சா...நல்ல சகுனமா பாத்து வண்டிய கிளப்புப்பா...முக்குப் பிள்ளையார் கோவில்ல கொஞ்சம் நிறுத்துப்பா தேங்காய விடல் போட்டுட்டு அப்படியே கிளப்பிடலாம்...ம்ம் ரை ரைட்..

இதன் தொடர்ச்சி தான் நான் 2007ல் எழுதிய "கல்யாணம்". அதையும் ஒரு தரம் ரிவைஸ் பண்ணிக்கலாமே :))

62 comments:

Rams said...

Me the first..Padichuttu varen for comments..

Rams said...

Dubukku back to form..Mana ulachal ellam poiduchu pola irukku?..Chancea illai..Kalakkal..

Porkodi said...

ada cha adhukulla oruthar vandhutara! seri 2ndu..

Porkodi (பொற்கொடி) said...

//அஞ்சு வயசு வித்தியாசத்துல உனக்கு மாமாவா வந்து பொறந்தேன் பாரு ...எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்....//

இந்த மாமா தான் டுபுக்குங்கற பேர்ல கதை எல்லாம் எழுதறாரா மாமா?

//இதோ பாரு...நீ தான் எனக்கு மாமா..நான் உனக்கு இல்ல புரிஞ்சுதா...சரியான அலையாண்டி மாமாவா இருக்கியே...
//

ஹாஹா.. உறுதி.. நீங்களே தான் அது ;)

//என்ன சுஜா மேடம்...வீட்டுல மூக்கும் முழியுமா வாட்ட சாட்டமா புதுசா ஒரு பையன் வந்திருக்கான் போல...//

சொல்லவே வேண்டாம் நீங்க இல்லனு தெளிவா தெரியறது :D

//இதோ பாருங்கோ இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கிறவா முன்னாடி என் புடவைய பிடிச்சிண்டு பின்னாடியே வராதீங்கோ..//

ஓ அவ்ளோ லவ்வோ லவ்வா தங்கமணி மேல.. நல்லாருங்க :)

//இதன் தொடர்ச்சி தான் நான் 2007ல் எழுதிய "கல்யாணம்". அதையும் ஒரு தரம் ரிவைஸ் பண்ணிக்கலாமே :)) //

என்ன்ன்ன்னது? ரிவைஸா.. நீங்க பதிவே போடாம மாசக்கணக்குல தவத்துல இருக்குறப்ப எல்லாம் நான் என்ன பண்ணேன்னு நினைச்சீங்க? திரும்பி திரும்பி படிச்சதையே படிச்சு.. வேணாம் அளுதுருவேன்..

Porkodi (பொற்கொடி) said...

as always, kalakkals. kalyanam - sequel eppo ? ;-)

sriram said...

அன்பின் ரங்கா,
கலக்கல் பதிவு. உங்கள் கிளாசிக் காமெடி பதிவெங்கும் இழையோடியது.
அக்மார்க் டுபுக்கு போஸ்ட், விழுந்து விழுந்து சிரித்தேன். நிஜமாகவே ஒரு ஐயராத்து கல்யாணத்தில் பங்கு எடுத்துக்கிட்டா மாதிரி இருந்த்தது.
dubukku is back to form.
வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

Mahesh said...

கலக்கல்... ஆமா...2007ல எழுதினதுக்கு 2009ல prequel...அப்ப sequel 2004லயே எழுதியாச்சா?

Mahesh said...

கலக்கல்... ஆமா...2007ல எழுதினதுக்கு 2009ல prequel...அப்ப sequel 2004லயே எழுதியாச்சா?

வாழவந்தான் said...

Welcome back!
typical 'dubuku' post and so lively like 'kalyanam(2007)'

Thanks for bringing some cheerful minutes

Bharath said...

அண்ணே Prequel அருமையோ அருமை.. சீக்கிரமா sequel போடுங்கோ..

குப்பன்.யாஹூ said...

சான்ஸே இல்லை.

எழுத்தாளர் சுஜாதா இல்லையே இப்போ அதான் எனக்கு வருத்தம், படிச்சு இருந்த உடனே ஷங்கர் அல்லது மணி ரத்னம்ட்ட சேர்த்து இருப்பார்.

இதில் எந்த வித மிகை படுதலும் இல்லை. என் மனதில் பட்டதை சொல்கிறேன்.

ஒரு தடவை தான் படித்தேன். இன்னும் நாலு முறை படித்து நீலமகா பின்னூட்டம் இடுகிறேன்.

அம்பை தெருவில் பட்டு புடவை அல்லது பாவடை தாவணி அல்லது சுடிதார் போட்டு மஞ்சள் கலர் ச்கின்னுடன் கையில் வெள்ளி குங்கும செப்பும் , அடிக்கடி தன் உடையை சரி செய்து, கூடவே செல்லும் தோழியிடம் நான் அழகா இருக்கேனா என்று பேசி கொண்டே செல்லும் மங்கை தான் என் கண்ணுக்குள் வருகிறார் .

அறிவிலி said...

அட போங்கப்பா, என்ன கமெண்ட் போடறதுன்னே தெரியல. ஏதாவது ஒண்ணோ ரெண்டோ லைன் நல்லா எழுதியிருந்தா கட் அண்ட் பேஸ்ட் பண்ணி ஸ்மைலி போடலாம். ஆனா முழு போஸ்ட்டையும் கட் பண்ணி போட்டா நல்லா இருக்குமா.

ஜெனீவால ஏதாவது லேகியம் வாங்கி சாப்டீங்களா? பழைய வேகம் வந்துருச்சே.

வல்லிசிம்ஹன் said...

ஒரு நூறு காமிரா வைத்துக் கல்யாண மும்முரத்தைப் படம் எடுத்தது போலத் தெரிகிறது.
அதி அற்புதம். மாஸ்டர் பீஸ்.
கல்யாணத்துக்குப் போகிறேன்:)

bhardwaj said...

ahahahaha

enga aathu kalyanam (?) madariye
irundadu
AMBAI SUJATA back to farm

nan inime yar athu kalyanathilum
mottai madi mele aduvum iruttile
padukkave matten.

valara nanni siriyo siri

Unknown said...

No doubt, it will take everybody down the memory lane!!! can't thank u enuf!

waiting for the sequel :)

Sab

gayathri said...

interesting kalyana galata..
"பெயருக்கு நேர ஒரு க்ராஸ் போட்டிருந்தா கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிடு. ரெண்டு கிராஸ் போட்டிருந்தா ஜானவாசத்துக்கும் கூப்பிடு. மூனு இருந்தா ரிசெப்ஷன் வரைக்கும் இருந்துட்டு தான் போகனும்ன்னு வருத்திக் கூப்பிடு என்ன.."

apdiyee yenga amma sollara madhiriye iruku.

உண்மைத்தமிழன் said...

டுபுக்கு..

ஒரு கல்யாண மண்டபத்தையே கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க..!

கலக்கல்..!

Shakthiprabha (Prabha Sridhar) said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு. எங்க வீட்டுல அடுத்த மாசம் கல்யாணம். இப்போவே scenes கண் முன்னாடி ஒத்திகை பார்த்துட்டேன் போங்க.

Shakthiprabha (Prabha Sridhar) said...
This comment has been removed by the author.
Anonymous said...

wow,great,romba nanna irundhadhu.sirippu sara vedi,thanks a lot..neenga vivericha ella characterllayum,ungalai othha character edhu??
nivi

Ambika Rajesh said...

Dear Dubukku


My last trip to India was in 2005. I missed all my beloved family functions and marriages. Indha blog padichappuram romba feelings ayidduthhu.

Romba nanna iruku

Ambika

சிங்கக்குட்டி said...

//நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்//
சூப்பரூ ....கலக்கல் பதிவு டுபுக்கு.

ட்கிள் பாட்சா said...

'மீண்டும் கோகிலா' கமல்னு நெனப்போ. மாமி இடுப்ப கிள்ளிட்டேளே! ம்ம்ம். பகல்லேயே பசுமாடு தெரியாது! இருட்டில எரும மாடு தெரியவா போறது ன்னு தங்கமணி சொன்னதை சென்சார் பண்ணீட்டிங்களாக்கும்! ;-)

Anonymous said...

:-)
அன்புடன்,
கார்த்திக்

பாசகி said...

இஃகி இஃகி

அது ஒரு கனாக் காலம் said...

மாமோவ்.... சூப்பர் . சிரிச்சு சிருச்சு கண்ல ( கு........) தண்ணீ

Unknown said...

Dear Dubukku

Fabulous.Immensely enjoyed reading it... i have heard every piece of conversation with little variation...but absolutely authentic.Vazthukkal.

Raajoo,Dubai

பரதேசி said...

//ஏன்டா பிரம்மஹத்தி....பெண்டாட்டிய எழுப்பறவன் இப்படியாடா இடுப்ப பிடிச்சு நிமிண்டுவ...ராத்திரி நெஞ்சடைக்கறது .கு**%*(அடைக்கிறதுன்னு ஏதாவது சாக்கு போக்கு....மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே...என்னம்மா நிமிண்டிட்ட.... சௌம்யா எப்படித்தான் இவன சமாளிக்கிறயோ...நானும் ஏழு பெத்திருக்கேன்...எங்காத்துக்காரர்லாம் இவ்வளவு இல்லைம்மா...//

கலக்கல் டுபுக்கு!!! இந்த பத்தி பிரமாதம்! தூள் கிளப்பிட்டீங்க

Ananya Mahadevan said...

மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே..
Gosh!!! இப்பெல்லாம் இதை அடிக்கடி நினைத்து நினைத்து சிரிக்கிறேன்..
சமீபமா இவ்ளோ சிரிச்சதா நினைவில்லை..LOL

Ponnarasi Kothandaraman said...

Ahh...That was a happening post...Romba naal apram had a chance to read in tamil :)

Anonymous said...

Unga posts ellame romba nanna iruku. I enjoyed reading your blog :)

லங்கினி said...

I cursed myself, how come I forgot to read ur blog for past 8months now :(
Excellent post. Arrear-lam clear pannanum modalla..

Porkodi (பொற்கொடி) said...

yaravadhu irukingla? enaku thaniya romba bayama irukku!

Porkodi (பொற்கொடி) said...
This comment has been removed by the author.
sriram said...

என்னாது பொற்கொடிக்கு பயமா??
உங்களப் பாத்துத்தான் எல்லாரும் டரியலாகிக் கெடக்கறாங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Madhuram said...

Dubukku, neenga ezhudaradha paartha romba poraamaiya irukku. Anniya ungalukku suthi poda sollunga.

Porkodi (பொற்கொடி) said...

ennai paathu ellarum bayapadranga nu indha blog ulagathula solli solli nija ulagathula naan thaan ellathukum bayandhutu irukken, idhennada kodumai saravana.. :(

Sriram, mrs.dubukku ezhudina evlo swarasyama irukum, epdi ezhuda vekkalam avangla? any idea?

sriram said...

நான் அவர் வீட்டு போன் நம்பர் தரேன், அவர் ஆபிஸ் போயிருக்கும் போது பேசுங்க (Girly- Girly talk- நீங்க girl இல்ல - பேரிளம் பெண்- இருந்தாலும் பரவால்ல) அவங்கள பேசிப்பேசி வழிக்கு கொண்டு வந்துடுங்க. உங்க அறுவைக்கு பிளாக்கே தேவலன்னு எழுத ஆரம்பிச்சுடுவாங்க..

பாசகி said...

//Sriram, mrs.dubukku ezhudina evlo swarasyama irukum, epdi ezhuda vekkalam avangla? any idea? //

//நான் அவர் வீட்டு போன் நம்பர் தரேன், அவர் ஆபிஸ் போயிருக்கும் போது பேசுங்க (Girly- Girly talk- நீங்க girl இல்ல - பேரிளம் பெண்- இருந்தாலும் பரவால்ல) அவங்கள பேசிப்பேசி வழிக்கு கொண்டு வந்துடுங்க.//

அண்ணே, என்னமோ சதி நடக்குது. உஷாரண்ணே உஷாரு :)

sriram said...

பாசகி,
நான் தங்கம், பொற்கொடி சொக்கத்தங்கம், நாங்க ரெண்டு பேரும் அண்ணனுக்கு எதிரா சதி செய்வோமா..
சும்மா ஒரு கும்மிதான்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாசகி said...

ஸ்ரீராம் -ஜி அது தெரியாதா எனக்கு. ஒரு கை கொறையுதே நானும் சேந்துக்கலாம்-னு பாத்தேன் :)

Porkodi (பொற்கொடி) said...

vaanga vaanga paasagi (enna vidhyasamana perunga, sooooper!).. oru kai illa, pala kai kuraiyudhu! enna sriram, phone number innum varave illiye?

naan nenakren thala adutha pilim edukradhula busya irukaru nu.. enna padama irukkum? laaaavvvu storya irukumo?

பாசகி said...

//...paasagi.//

அவ்வ்வ்வ்...

//naan nenakren thala adutha pilim edukradhula busya irukaru nu//

அண்ணே ஃபோட்டோ எடுத்தாவே போஸ்ட் போடுவாரு, ஃபிலிம் எடுத்தா?

Dubukku said...

மக்களே தாமதத்திற்கு மன்னிக்கவும். தற்போது வெளியூரில் இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இங்கு திரும்ப வந்து பதிலளிக்கிறேன்.
ஸ்ரீராம்/ பொற்கொடி / பசகி - ஆஹா கும்மிய ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா ...நடத்துங்க :))))))

பாசகி said...

paasagi, பசகி -னு ஏம் பாஸ் என்பேரை மட்டும் எல்லாரும் இப்படி போட்டு தாக்கறீங்க, அவ்வ்வ்வ் :(

k.veeramuni said...

pls visit at www.aanmigakkadal.blogspot.com

கார்த்திகேயன் said...

ரெடி ஜூட் ,அம்பி வண்டி பழைய வேகம் வந்துடுது.

Porkodi (பொற்கொடி) said...

paasagi, naan unga perai sariya sonnene? idhuku ellam azha koodadhu? nama ellam mathavanglai azha vekka porandhavanga :)

பாசகி said...

//paasagi, naan unga perai sariya sonnene?..//

பாசகி or Basaki :)

//..nama ellam mathavanglai azha vekka porandhavanga :)//

ரைட்டு மேடம் :)

Porkodi (பொற்கொடி) said...

ooo! apdiya! Baasaki na enna artham? oru velai Vaasaki nu adikka vandhu typo aagi apdiye vitutinglo? :-/

பாசகி said...

பொற்கொடி மேடம், இது தகுமா? அண்ணாச்சியை வாறச் சொன்னா இந்த புள்ளபூச்சியை இந்த வாங்கு வாங்கறீங்களே :)

Porkodi (பொற்கொடி) said...

porkodi madam a!!! kootungada panchayata!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன டுபுக்கு,
ரொம்ப நாளா ஒரு Posting இல்ல..
தங்கமணி தடா போட்டுவிட்டார்களா?
இல்ல UK-க்கு ஆட்டோ அனுப்பனுமா?..

sriram said...

பாசகி
ஆமா பொற்கொடி மேடம்னு சொல்லாதீங்க, பொற்கொடி Aunty ன்னு சொல்லணும், நம்மள மாதிரி யூத்துக்கெல்லாம் அவங்க Aunt.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

பாசகி said...

அண்ணா சொன்னா சரிதான். பொற்கொடி Aunty மன்னிச்சிடுங்கோ :)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

காணவில்லை....

டுபுக்கு என்ற மனிதர் ,Blog-ல் எழுதிக்கொண்டு இருப்பது தெரிந்ததே...
அவரை சில நாட்களாக காணவில்லை...
கண்டுபிடித்து தருவோருக்கு , கீழ்கண்ட அட்டவணனைப்படி அதாவது ஒரு பரிசு தரப்படும்..

A: டாஸ்மாய் சாரயம்.
B: 1 ரூபாய் அரிசி 10kg
C: கொட நாடு-ல் ஒரு வேளை சாப்பாடு.
D: கலை ஞர் வீட்டில் இட்லி வடையுடன் காலை டிபன்.

லங்கினி said...

Happy Deepavali...Daily pudu post irukkanu partha yematram dhan micham :(
I think work has kept you busy.

Deepavali wishes for all at home.

Dubukku said...

ராம்ஸ் - வாங்க மிக்க நன்றி ஹீ ஹீ நீங்க பெக் டு ஃபார்ம்னா சொன்னீங்க...எனக்கு காதுல விழவே இல்லீங்கோவ் :)))

பொற்கொடி - வாங்க...நீங்க போட்டு புகுந்து விளையாடி இருக்கீங்க போல கமெண்டுல...மிக்க நன்றிங்கோவ்....உங்க கமெண்டுக்கு தனித் தனியா பதில் போட்டா அது பதிவ விட பெரிசாகிடும்ங்கிறதால மொத்தமா சொல்லீக்கிறேன்...கண்டுக்காதீங்கோ.... மத்தபடி உங்க கருணா கதாட்சத்துக்கு மிக்க நன்றிங்கோவ்...:))

ஸ்ரீராம் - வாங்க பார்ம்மா...எதுக்கு வம்பு நான் பொதுவா ஒரு நன்றி சொல்லிக்கிறேன் நீங்க எப்படியும் அடுத்த பதிவுல திட்டப் போறீங்க :)))

மகேஷ் - மிக்க நன்றிங்க நீங்க மேத்ஸ் மேஜரா...கரெக்டா கணக்கு போடறீங்க :))

வாழவந்தான் - மிக்க நன்றி நண்பரே...உங்கள் பாராட்டுக்கு

பரத் - நன்றி...சீக்கிரம் தானே ஹி ஹீ...போட்டுருவோம் :)))

ராம்ஜி யாஹூ - வாங்கண்ணே...உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும்...ஷங்கர்...மணிரத்னம் ரெண்டு பேரையும் போய் பாத்திரலாம்ன்னு இருக்கேன் :)))

அறிவிலி - மிக்க நன்றிங்கோவ்....ஜெனிவால லேகியமா...அதெல்லாம் விக்கிறாங்களா என்ன...மஹேஷ் சொல்லவே இல்லையே..:)))

வல்லிசிம்ஹன் - வாங்கம்மா...எல்லாம் உங்க ஆசிர்வாதம். கல்யாணத்துக்கா....ஆஹா ஏக்கத்த உண்டு பண்ணிட்டீங்களே :))

பரத்வாஜ் - ஹீ ஹீ சுஜாத பட்டமெல்லாம் எனக்கு ரொம்பவே ஓவர்ங்க...இருந்தாலும் ஜிவ்வுன்னு இருந்திச்சி :))) மிக்க நன்றி. மொட்டை மாடி ஆமாமா...ஜாக்கிரதை :))

சபரி - மிக்க நன்றி நண்பரே...சிக்கிரம் எழுதப் பார்க்கிறேன்

காயத்ரி - ஹா ஹா நம்மூர் வழக்கம் அப்படி...உனக்கு சமீபத்துல கேட்ட மாதிரி இருக்குமே...:)))

உண்மைதமிழன் - வாங்க நண்பரே...நலமா...மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

சக்திபிரபு - -ஆகா இந்த மாசம...கலக்கல்...நல்ல என்சாய் பண்ணுங்க..:))

கார்த்திக் - லிங்க் வொர்க் செய்யலையே

நிவி - நன்றி மேடம் நம்ம கேரக்டர் ஒரு இடத்துல இல்லை பல இடத்துல வருது :))

அம்பிக - வாங்க. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.

சிங்கக்குட்டி - ஹீ ஹீ நன்றிங்கோவ் :P

டகிள் பாட்சா - அட நீங்க வேற சும்மா இரும் ஓய் :))

கார்த்திக் - :)))

பசகி - இஃகி இஃகி - அப்பிடீன்னா??

அது ஒரு கனாக்காலம் - வாங்க மிக்க நன்றி :))

ராஜூ - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

பரதேசி - வாங்க உங்க புனைப் பெயர் அருமை ஒரு பய இத யூஸ் பண்ணி திட்ட முடியாதில்ல...:))) உங்க பாராட்டுக்கும் மிக்க நன்றி

அனன்யா - வாங்க மேடம் நலமா...மிக்க நன்றி பாராட்டுக்கு, ப்ளாக் ஆரம்பிச்சிட்டீங்க போல...இதோ வந்துகிட்டே இருக்கேன் :))

பொன்னரசி - வாங்க...மிக்க நன்றி..ஏகப்பட்ட நல்ல தமிழ் பதிவுகள் இருக்கே இப்போ..:)

ஐ.எம்.கர்ட்டன் - வாங்க மிக்க நன்றி.

மித்து - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு,.

லங்கினி - வாங்க...பார்த்தீங்களா நம்மள மறந்துட்டீங்க...அப்புறம் (அடுத்த பின்னூட்டதுல திட்டுறீங்க..:)))) ) மிக்க நன்றி மேடம் உங்க பாராட்டுக்கு


பாசகி/பொற்கொடி/ ஸ்ரீரம் - அஹா ரென்டு பெரும் கூட்டனி போட்டு கும்மியா...ஐயையோஒ பெரிய லெவெல் சதியெல்லாம் பண்ணுறீங்கலே....நான் உஷாரா இருக்கனும் போல
பாசகி அந்த மிஸ்டேக் கூகிள் ட்ரான்ஸ்லிட்ரேட்டர்னால வந்தது...அதுல உங்க பெயர ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க..

மதுரம் - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு...தங்கமணி கிட்ட சொன்னா என்ன சுத்தி போட்டுறுவாங்க...எதுக்கு வம்பு :))

கார்த்திகேயன் - மிக்க நன்றி நண்பரே :))

பட்டா பட்டி - ஐய்யோ வேண்டாம் சார்...நல்ல பையன் சார் வழிக்கு வந்துடறேன்....

லங்கினி - சாரி மேடம் கொஞ்சம் லேட்டாகிடிச்சு...மன்னிச்சிக்கோங்க...உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் !!!

balutanjore said...

thalaiva adutha post eppo podaporel?romba naal ache

R. Jagannathan said...

I am a new visitor to different blog sites and had the opportunity to visit yours today. Read two posts - about your experience of wine drinking and the running commentary of the household getting ready for the wedding. Simply super. Very easy flow in your writing style. I enjoyed it very much and thanks. - R. Jagannathan

R. Gopi said...

:-)))))))))))))

Sujatha said...

:) what a writing!!

Post a Comment

Related Posts