Thursday, July 23, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.9

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8

ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.

சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)

ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.

வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)

ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.

தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.

"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்

" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.

தொடரும்

35 comments:

rapp said...

aahaa, ivlo seekkiram innoru padhivaa?:):):)

வெட்டிப்பயல் said...

Kalakal Thalaiva...

JustATravellingSoldier said...

/* மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும் */

/*வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான். */

There lies your punch :¬)..

துபாய் ராஜா said...

// (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)//

நம்ம ஊரு பயபுள்ளைய பாசத்துக்குதான் ஒரு அளவே கிடையாதே..

Mahesh said...

excellent one to start the day with.... :))))))))))

சிங்கக்குட்டி said...

//தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான்//

வாவ் என்ன ஒரு டைம்மிங் ....அருமை....இன்னும் ஜொள்லுங்க ...:-)

Victor said...

I told you na...... You are back to form........... Don't take a break! Keep going!
Victor

sriram said...

ரங்கா
R U Ok? anything wrong with you?? ஒரே வாரத்தில் மூணு போஸ்ட்???
வழக்கம் போல கலக்கல், தமிழ்மணத்தில் போஸ்டை சேரு தல.. சும்மா பிச்சிக்கின்னு போவும்.
BTW, சென்னையை கலாய்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும், சென்னை சிங்கங்கள் எல்லாம் பொங்கி எழுவோம்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

குப்பன்.யாஹூ said...

wow lovely, back to form. good post, keep rocking

Anonymous said...

this this this only expecting ... attagaasam .. paavai

அரசு said...

இந்த வாரம் டுபுக்கு வாரம்.... லண்டன் கிராமத்திலிருந்து 6-க்கு மேல 6-ஆ வருது... அடிச்சு விளையாடுங்க...

பூவே பூச்சூட வா - மணிரத்னம் படமா ? சரித்திரம் முக்கியம் தல!!

-அரசு

மன்மதக்குஞ்சு said...

/* மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும் */

/*வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான். */

There lies your punch :¬)..

Repeat Repeat

Anonymous said...

(நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)


Nambitom.....


மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும்....

Sema dialog... Back to form...Keep going...

Expecting a lot like this...Dont disappoint us.

Ur fan.

Anonymous said...

God knows the truth.
sonnalum sollatiyum .................
neenga ........

u know who?

Rams said...

Kalakkal..Keep it coming

gk said...

continue jolly thirindha kalam. its so interesting. ungala nambama irupena anna!!! ore street aache!! i need a hint abt those characters :)

Unknown said...

dat gk s me anna.

இரா. வசந்த குமார். said...

அன்பு டுபுக்கு சார்...

ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க :: http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html

நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.

ambi said...

ஹிஹி, இதெல்லாம் வேற நடந்து இருக்கா? ரைட்டு விடுங்க. :))

//God knows the truth.
sonnalum sollatiyum .................
neenga ........

u know who?
//

I know who you're. :))

balutanjore said...

fantastic

பாசகி said...

கலக்கல்ஸ்ண்ணா :))) தொடர்ச்சியா பதிவு போட்டு குஷிபடுத்தறீங்க..

//ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும்//

சுத்தி இருக்கவங்க கெடுக்காம இருந்தா போதாது :)

//கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் //

மணிரத்தினம் படத்துலயும் வாண்டுக வயசுக்கு மீறி பேசுங்க...

//இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்//

அண்ணே, சல்மான்கானோட biceps size தெரியும்தான :)

webalfee said...

super thought friend :)

அது ஒரு கனாக் காலம் said...

அண்ணா ஒரே கலக்கல் தான் ...ஒத்தைஅடி பாதை , மூட்டை தூக்கி, .... அலம்பல் தான் போங்கோ

Ambika Rajesh said...

Interesting.Came to know about your blog from my Brother in law. I am from Tirunelveli now in UK. Nice to read stories from our district.

Ambika

Sri said...

Classic dubukku post. ROFL :)

Anonymous said...

haiyaa,namma dubukku sir nijammavae niraya pathivu poda arambichittaru!!!!!keep going sir,as usual kallakal.neenga edhukku salman khan thevaillama pagachikireenga,anyways,ungalai nambittomnnu naanga anoushka perla,aishu perla,deepika perla ellam sathiyam panrom.sathiyam panrom sathiyam panrom.....
nivi.

சிங்கக்குட்டி said...

2.10-ன பாக்க வந்தேன் இருந்தாலும் :-((

Unknown said...

You made my day :) I have been reading all your posts.You are natural and truly gifted.Please do think about contributing to print media. Ungal sevai, tamizh mozhikku thevai..

Sab

roguegene said...

Dubukku Sir, romba super post...

அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும் --top

As a wannabe film maker, unga posta ellam parkrappo romba romba poraamaya irukku.. evlo originality in narration.. romba super.. Ennoda abiprayapadi.. neenga aduthu edukapora short film ku.. unga jolli thirundha kaalam post la onnayae subject mattera eduthukkanam.. i can vividly visualize ur blog as a movie already..

ச.சங்கர் said...

Nice post. Punch paragraph is very nice

அறிவிலி said...

ஹா..ஹா..ஹா...
நெறய பேருக்கு கொசுவத்தி சுத்திருக்கும்.

Dubukku said...

ராப் -...ஹீ ..ஹீ என்னங்க நீங்க...:))

வெட்டிப்பயல் - மிக்க நன்றி ஹை தலைவா

ஜஸ்ட் அ ட்ராவலிங் சோல்ட்ஜர் - நன்றி ஹை ...இதான் பஞ்சா.

துபாய் ராஜா - அதச் சொல்லுங்க...பாசக்கார பயலுவ

மகேஷ் - நன்றி மிக்க சந்தோஷம் :)

சிங்கக் குட்டி - ஆமாங்க சில சமயம் நேரம் காலமே தெரியாதுங்க.. மழலைங்களுக்கு :))

விக்டர் - உங்கள் வார்த்தை மிக்க ஊக்கமாய் இருக்கிறது மிக்க நன்றி தொடர்ந்த ஆதரவுக்கு

ஸ்ரீராம் - சென்னை சிங்கங்கள்...யெம்மா சவுண்ட்லாம் பலமா இருக்கே....ஒரே வாரத்தில் மூனு போஸ்ட்...நக்கலு ஆங்...

குப்பன் - மிக்க நன்றி சாரே..எல்லாம் உங்களை மாதிரி நலம்விரும்பிகளின் ஊக்கம் தான் காரணம்.

பாவை - மிக்க நன்றி மேடம். எல்லாம் உங்கள் ஊக்கம் தான்.

அரசு - மிக்க நன்றி தல. ரோசா படத்துல அந்த புள்ளையும் நாலு நண்டு சிண்டுகளை கூட்டிக் கிட்டு தானே திரியும்? :))

மன்மதக் குஞ்சு - என்னம்மோ பஞ்சுன்னு சொல்றீங்க கேட்டுக்கறேன்...உங்க அன்பிற்க்கு மிக்க நன்றி தல.

அனானி - போன ப்ளாக்ல கமெண்டு போட்டு (அப்புறம் யாருன்னு சொன்ன) அதே அனானியா நீங்க? நம்புங்க...நீங்களாவது இந்த பச்ச மண்ண நம்புங்க :))

அனானி - ஐயகோ...அனானி கமெண்ட்டு போட்டேவிட்டாகியதா...எஸ் கடவுள் நோஸ் திஸ் பச்சை மண்ணு...:)))

ராம்ஸ் - மிக்க நன்றி தலைவா

காயத்ரி - ஆஹா இப்போ புரியுதா ஊர்காரங்க என் ப்ளாக எப்படியாவது கண்டுபிடிச்சா நான் ஏன் டென்ஷன் ஆகறேன்னு :)) அந்த கபாஸ்கர் குழந்தை வேணா யாருன்னு சொல்றேன் :))

வசந்த குமார் - மிக்க நன்றி நண்பரே. தன்யனானேன். கண்டிப்பாய் நானும் தொடர்கிறேன்.

அம்பி - வந்திட்டான்யா நல்லவன் :)) நீங்க போட்ட சீன விட கொஞ்சம் கம்மிதான் :))

பாலசுப்பிரமணியன் - மிக்க நன்றி நண்பரே.

பாசகி - மிக்க நன்றி தல. சல்மான் பத்தி எதுக்கு நாம அனாவசியமா பேசிகிட்டு :))

வெப அல்ஃபீ- மிக்க நன்றி நண்பரே

அது ஒரு கணாக்காலம் - அண்ணாவா...தலிவா இது நியாயமா :)) உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா.

அம்பிகா - ஆஹா நீங்களும் நம்மூரா...சூப்பர். நீங்க நெல்லையேவா..இல்ல நம்மள மாதிரி நெல்லைக்குள்ள ஒரு சிட்டியா? நீங்களும் இங்க தானா..கலக்கல்ஸ். உங்க தமையனுக்கு என்னோட நன்றிய சொல்லுங்க.

ஸ்ரீ - மிக்க நன்றி தல.

நிவி - வாங்க வாங்க என்னை நம்புறதுக்கு நீங்களாவது இருக்கீங்களே...சல்மான் கான் பார்த்துக்கலாங்க...வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம் தானே என்ன நான் சொல்லுறது .. :))

சிங்கக் குட்டி - ஏமாத்தினதுக்கு மன்னிச்சிக்கோங்க தல

சபரிநாத் - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான பாராட்டுக்கு. ப்ரிண்ட் மீடியா...என்னோட சோம்பேரித்தனம் தான் அதுக்கு மிகப் பெரிய எதிரி..பார்ப்போம் :))

ரோக் ஜீன் - உங்களுக்கும் சினிமாவுல இண்ட்ரெஸ்டா...எனக்கும்தேன்...கூடிய சீக்கிரம் கோலிவுட்ல குதிக்கனும் முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருக்கேன் :)) உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே. மிக ஊக்கமளிக்கும் வார்த்தைகள்.

சங்கர் - மிக்க நன்றி நண்பரே

அறிவிலி - ஹீ ஹீ ஆமாம்

Unknown said...

apdi ungala koopadarathuku neeenga perumai padanum :) yenna maati vidarele..

நாடோடிப் பையன் said...

"குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும்"

:-)

மதுரையான் - அருண் பிரசாத்.கு. said...

Dear Dubukku சார், நான் ரொம்ப நல்ல உங்க blog படிச்சு கிட்டுவரேன்.ஜொள்ளி திரிந்த காலம் என்னை கொஞ்சம் பின்னாடி கூட்டிட்டு போயிடுச்சு.. ரொம்ப நன்றி...
மதுரையான் - அருண் பிரசாத்.கு.

Post a Comment

Related Posts