Saturday, March 15, 2008

அவன் அவள் அது

ஸ்வேதாவுக்கு படபடப்பாய் இருந்தது. தான் எடுத்த முடிவு சரியா என்பதிலேயே அவள் மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது. ஒரு கையில் திணிக்கப்பட்ட ஏர் பேக்குடனும் இன்னொரு கையில் அதுவாக வந்து ஒட்டிக்கொண்ட நடுக்கத்துடனும் இன்னும் விடியாத கருக்கலில் ஆனந்துடன் நின்று கொண்டிருந்தாள்.

" ஆனந்த் அங்க பாரு ரோட்டுல வர்றவன் போறவன்லாம் ஒரு மாதிரியா என்னையே பார்க்கிறான் எனக்கு ரொம்ப கூசுது"

"ஸ்வேதா நீ ரொம்ப டென்ஷனாகிற...அவ்வளவு தான் அவங்க உன்னை பார்க்கலை..."

"நாம பண்றது சரிதானா. வீட்டுல இருக்கிறவங்களுக்கு துரோகம் பண்றோமா..."

"இதோ பாரு ஸ்வேதா நீ ஏன் இத துரோகம்ன்னு நினைக்கிறன்னு எனக்குப் புரியவே இல்லை..திரும்ப திரும்ப மனசப் போட்டு குழப்பிக்காத நாமளும் வேற வழியில்லாம தானே இந்த முடிவுக்கு வந்திருக்கோம்?"

"எவ்வளவு ஈசியா சொல்லிட்ட நீ...நம்மள எவ்வளவு பாடுபட்டு நம்ம பெற்றோர் வளர்த்திருப்பாங்க, நம்ம சந்தோஷத்துக்காக எவ்வளவு ஒவ்வொன்னா பார்த்துப் பார்த்து செஞ்சிருப்பாங்க, எங்க வீட்டுல அதுவும் எங்கப்பா அம்மாலாம் என்ன தங்கத் தட்டுல வைச்சு தாங்கினாங்க தெரியுமா?.."

"இதோ பாரு எல்லா அம்மா அப்பாவும் அது மாதிரி தான்..."

"இல்லைங்கல ஆனா அவங்கள ஏமாத்திட்டு அவங்களுக்குத் தெரியாம இப்படி செய்யறோமே என் மனசு ஒத்துக்கவே இல்லை..."

"இது பத்தி நாம ஏற்கனவே நிறைய பேசியாச்சு...இப்போ இத நாம அவங்க கிட்ட சொன்னா புரியாது அவங்க புரிஞ்க்கவும் ட்ரை பண்ண மாட்டாங்க..நம்ம முடிவ ஏத்துக்கவும் மாட்டாங்க.அதுக்குத் தான் உன்ன லெட்டர் எழுதச் சொன்னேன். ஒரு வாரம் எல்லாரும் நமக்காக அழுவாங்க அப்புறம் பழகிடும். அடுத்த வருஷம் சகஜமாகிடுவாங்க..."

"எங்கப்பாவ நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு...அவரால இதத் தாங்கவே முடியாது"

"எந்தக் காலத்துல இருக்க நீ?...இப்போ இதெல்லாம் ரொம்ப சாதாரணம்..சினிமா நியூஸ்ன்னு எல்லாத்துலயும் காட்டுறாங்க...ரெண்டு நாள்ல அவங்களே இதையெல்லாம் சொல்லி சமாதனம் ஆகிடுவாங்க."

"ஊர்ல எல்லாரும் என்ன நினைப்பாங்க என்னப் பத்தி...ரொம்பக் கேவலமா பேசுவாங்க"

"லெட் மீ மேக் ஒன் திங்க் க்ளியர்...நீ என்னிக்குமே ஊரப் பத்தி கவலப் படாத...எல்லாருக்கும் அவங்க பொழப்ப பார்க்கவே டைம் கிடையாது...போற போக்குல எதையாவது சொல்லிட்டு போவாங்க...அதையெல்லாம் கண்டுக்கவே கூடாது. உனக்காக உன்னுடைய முடிவுகளை எடுக்கனுமே தவிர ஊருக்காக இல்லை...அவங்க வந்து குடித்தனம் பண்ணப் போறது இல்ல..நீ தான்.."

"பஸ் வந்தாச்சு பாரு வா..."

ஸ்வேதா கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது, ஆனந்த் ஓடிப்போய் வாட்டர் பாட்டில் வாங்கி அருகில் அமர்ந்தான்.

"ஸ்வேதா அன்ஃபார்சுனேட்லி நமக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனாலும் நம்ம ரெண்டுபேரோடு டேஸ்டும் விருப்பங்களும் வேற வேற. இந்த டைவேர்ஸ் முடிவு நாம விரும்பி எடுத்துகிட்டது இல்லை ஆனா இதில்லாம நாம் சேர்ந்திருந்தோம்னா நமக்குள்ள வருத்தங்களும் பிர்ச்சனைகளும் தான் நிறைய வரும். சினிமால காட்டுற மாதிரி அடிதடி அசிங்களெல்லாம் ஆகாட்டாலும் வீ ஹேவ் அ ஃலைப் டு லிவ். நீ இனிமே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் கண்டிப்பா வாழ்க்கை அமையும். அடுத்த முறையாவது உன்னோட விருப்பங்களை வாயத் தொறந்து சொல்லி உனக்கு பிடிச்ச வாழ்க்கையா அமைச்சுக்கோ..டோன்ட் பி இமோஷனல் .எல்லாத்துக்கும் தேங்க்ஸ்.."

ஆனந்த் எழுந்து போவதை வெறித்த படியே பார்த்துக்கொண்டிருந்தாள்.பஸ் ஸ்வேதாவின் ஊரை அடைந்த போது ஸ்வேதாவின் அப்பா அவளுக்காக பஸ்ஸ்டாண்டில் காத்துக் கொன்டிருந்தார்.

14 comments:

மங்களூர் சிவா said...

ஞாநியின் கதை மாதிரியே இருந்தது.

பிரிந்த பின்பும் நண்பர்களாய் இருத்தல் இந்தியாவுக்கு வர ஒரு 50 வருசம் ஆகலாம்.

இலவசக்கொத்தனார் said...

உண்மையைச் சொன்னா நான் எழுதும் கதை மாதிரி இருக்கு. அதாவது சுமார்தான்னு சொல்ல வந்தேன்.

Girl of Destiny said...

twist vara podhu nu therinjadhu...
usual twist varum nu nenaichen - adhavadhu avanga rendu perum sappaiya oru matter ku ivalo build up kudkranga nu....

but ending was different! good job surprising me :-)

Ramya Ramani said...

Nalla twist!

ILA (a) இளா said...

மொக்கை திருப்பமா இருக்கும்னு நினைச்சேன், பரவாயில்லே ஒரு அர்த்தம் இருக்குங்க..

Anonymous said...

kadhai nalla irundhudu,innum vara kalathil ithu niraya nadakalam.ippalam divorce panna kuzhandhinga suffer avanganradhu kooda yarum care panradhillai.thirumbavum serum opprtunities almost nilagi konde varudhu.patchup vendam innoru matchup irundha porumnnu yosikiraanga!!but avvai sanmughi vasanam enkku romba pidkum."kanavan maniavi divorce pannalam annal appa amma koodathunnu.how true.passanga mathiyil matti kondu avasthai....
nivi.

sriram said...

ஹே ராம்
கதையின் ஆரம்பம் டிபிகல் ராஜேஷ் குமார் ஸ்டைல். மற்றபடி கடை வெகு சுமார். நீ காமெடி வசன கர்த்தா மற்றும் டைரக்டர் இத்துடனே நிறுத்திக்கொள்வது நலம்.
கடைசி நாளில் கலக்கல் போஸ்ட் வேண்டும்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

Shobana said...

Nice story! Good story telling technique....write more.

யாத்ரீகன் said...

>>>>> 50 வருசம் ஆகலாம் <<<<<

the day when that girl isn't questioned odd about her previous relation by the new guy whom she meets :-)

Dubukku said...

மங்களூர் சிவா - நீங்க கதைக் கருவச் சொல்றீங்களா?? :) நீங்க 50 வருஷம்ன்னு நினைக்கிறீங்களா? நான் இன்றைக்குப் பார்க்கும் சில மாற்றங்கள் 5 வருஷங்களுக்குள் வந்திருக்கின்றன. டேட்டிங் உள்பட??

கொத்ஸ் - தப்பே இல்லை எனக்கும் ரொம்ப திருப்தி இல்லை. டைம் பிர்ஷர்ரில் போட்டது சுமாராகத் தான் இருக்கிறது.

கேர்ல் ஆப் டெஸ்டினி - ரொம்ப நன்றி ஆனா இந்தக் கதையை இன்னும் சிறப்பா எழுதியிருக்கலாமோன்னு தோன்றியது

ரம்யா - நன்றி மேடம்.

இளா - ஹீ ஹீ நன்றி சாரே

நிவி - உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். குழந்தைகள் தான் டைவேர்ஸில் நிறைய பாதிக்கப் படுகிறார்கள். அத்தோடு குழந்தைகளுக்காக மட்டுமே இன்னும் நிறைய டைவேர்ஸ்கள் நடக்காமலும் இருக்கின்றன என்பது எனது கருத்து.

ஸ்ரீராம் - நீங்கள் என்னைச் சேலன்ஞ் செய்கிறீர்கள் மிக்க நன்றி இந்த சேலன்ஞ் எனக்கு இந்த தருணத்தில் மிக மிக தேவை. மீண்டும் வருவேன் நல்ல கதையோடு :)))))). முன் சொன்ன மாதிரி என்னால் இந்த வாரம் வேறு தனிப்பட்ட மன அழுத்தங்கள் காரணமாக திருப்தியாக பதியமுடியவில்லை. உங்களை ஏமாற்றியிருந்தால் வருந்துகிறேன்.

ஷோபனா - நன்றி மேடம். இன்னும் இதை அழகாகச் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தேன். அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்.

யாத்திரிகன் - அப்போ மணிரத்னம் ரீல் விடுறார்ன்னு சொல்றீங்களா :))) :P. ஆனால் நிலமை மாறிவருகிறது என்று நினைக்கிறேன்...இல்லைங்கிறீங்களா?

மங்களூர் சிவா said...

//
மங்களூர் சிவா - நீங்க கதைக் கருவச் சொல்றீங்களா?? :) நீங்க 50 வருஷம்ன்னு நினைக்கிறீங்களா? நான் இன்றைக்குப் பார்க்கும் சில மாற்றங்கள் 5 வருஷங்களுக்குள் வந்திருக்கின்றன. டேட்டிங் உள்பட??
//

ஆம் நான் சொன்னது ஞாநியின் உண்மை கதை. மிக சமீபத்தில் குமுதத்திலோ ரிப்போர்டரிலோ படித்தேன்.

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. நல்ல மாற்றங்கள் நிறைய வரட்டும்.

Anonymous said...

சனி (&ஞாயிறு) தான் வூட்ல பொண்டாட்டி பிள்ளையோட செலவிடுகிற நாள். அன்று நல்லவேளை கிரிக்கெட் வேறு இல்லை.. உங்க போஸ்ட் வேற சனிக்கிழமை. நல்லவேளை....அம்மணி பக்கத்துல இல்லை. இருந்திருந்தா...ஸ்வேதா எடத்துல நானப்பூ.....

Anonymous said...

Dubuku sir,
indha twist naan edhirparkavey illa.
This is definitely a reflection of the prevailing mindset of this generation.
Well told!!!!

Keep writing dubukku!!!!

Vg said...

Good end.. :) But not suitable for your lifestyle.. ;)

Post a Comment

Related Posts