Tuesday, January 29, 2008

வாழ்க்கை கல்வி

"பருவ மலர்" இது தான் நான் படித்த முதல் மேட்டர் புஸ்தகம். "டேய் அந்த மாமா 'சுகு' போட்டுடார்டா"ன்னு கோட் வேர்ட்டில் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கும் - மேட்டர்ன்னா என்னான்னே தெரியாத வயதில் இந்த புஸ்தகம் கையில் மாட்டியது.
பாலமித்ரா, இரும்புக்கை மாயாவி, அம்புலி மாமாவெல்லாம் ஆர்வமாய் படிக்கும் வயது அது. மாமா கூட இசக்கி தாத்தாவின் சந்திரா சலூனுக்கு முடி வெட்டிக் கொள்ளப் போயிருந்தேன். இசக்கி தாத்தா கடை பற்றி ரொம்ப நாள் முன்னாடி பதிந்திருக்கிறேன். இசக்கி தாத்தா நம்ம தலையில் தான் முதலில் கச்சேரி நடத்திவிடுவார்.அதறகப்புறம் மாமாவுக்கு தலையில் அறுவடையாகிக் கொண்டிருக்கும் போது சும்மா இராமல் ஒரு மேஜை ட்ராயரை நோண்டி ஒரு அட்டை பக்கமில்லாத புஸ்தகத்தை எடுத்து விட்டேன். இசக்கி தாத்தா கடையில் பொதுவாக தினமலர் வாரமலர் தான் இருக்கும். அதில் முக்காலேவாசி - பன்னிரெண்டாம் பக்கத்திலோ, இருபதாம் பக்கத்திலோ மூனுக்கு ஆறு கட்டத்தில் ஔவையார் மாதிரி குனிந்து கொண்டு போஸ் குடுக்கும் நடிகைகள் போட்டோ இருக்கும் துணுக்கு முட்டை தவிர்தலாக மற்றவற்றைப் படிப்பேன். அதே மாதிரி நடுப்பக்கத்தில் கீழே யாரோ தரையை பெருக்கிற மாதிரி காலை தூக்கி வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் குடத்தையோ, திராட்சைப் பழக் கொத்தையோ, விளக்குமாத்தையோ வைத்துக் கொண்டு மார்க்கமாய் இருக்கும் நடிகையின் புல் ப்ளோ-அப்பையும் (அந்த வயதில்) ரொம்ப பார்க்க மாட்டேன். இப்பக் கூட இந்த மாதிரி படங்கள் எதாவது இருந்தால் "ச்சீ என்ன படம் போட்டிருக்கான்"ன்னு அந்த பக்கத்தை சட்டென்று திருப்பிவிடுவேன். அப்புறம் சுத்தி முத்தி யாரும் நம்மளைப் பார்க்கவில்லை என்று உறுதிப் படுத்திக்கொண்டு ரீவிசிட் செய்யும் வழக்கம் தான் இன்னிக்கு வரைக்கும்.
இப்படி சத்யசீலனாய் இருந்த காலத்தில் இசக்கி தாத்தா கடையில் பருவமலர் மாட்டிய போது அதுவும் வாரமலர் மாதிரி என்று படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் திறந்த பக்கத்தில் ஜோக்ஸ் இருந்தது. ஜோக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்பதால் படிக்க ஆரம்பித்து, கொஞ்ச நேரத்திலேயே என்னாடா இந்த புஸ்தகத்தில் ஜோக்ஸ்லாம் ஒரு மாதிரியா ஓப்பனா இருக்கேன்னு என்று நினைப்பதற்க்குள் இசக்கி தாத்தாவின் வளர்ந்த பையன் எங்கிருந்தோ வந்து புஸ்தகத்தை பிடுங்கிக் கொண்டு போய்விட்டான். இசக்கி தாத்தாவிம் பிரச்சனையை எஸ்கலேட் பண்ணியதில் "பரவாயில்லையே அம்பி புஸ்தகமெல்லாம் படிக்கிறாரே..எலே சம்முவம் புஸ்தகத்த குடுறா அம்பி படிக்கட்டும்"ன்னு திரும்ப வந்த புஸ்தகம் ஒரிஜினல் வாரமலராக மாறியிருந்தது. "தொட்டனைத்தூறும் மணற்கேணி..மாந்தர்க்கு.." என்று மாமா படிப்பைப் பற்றி இசக்கி தாத்தாவிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்த போது, நான் திரும்பி வந்த புஸ்தகத்தில் பாதியில் விட்டுப் போன ஆபிஸ் ஸ்டெனோ ஜோக்கைத் தேடிக்கொண்டிருந்தேன். அதில் தேடி பார்த்தும் அந்த பழைய மாதிரி ஜோக்கிலாதது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனாலும் பள்ளிக்கூட்டத்தில் வாத்தியார்கள் அடிக்கடி சொல்லும் "பசுமரத்தாணி" போல் முழுதாய் படித்த அந்த ஜோக் மனதில் பதிந்துவிட்டது.

பின்னொரு நாளில் அரும்பு மீசை வயதில் பருவமலர் மீண்டும் ஏடாகூடமாய் அறிமுகமாயிற்று. தெருவில் சாயங்காலம் பொதிகை மலைக் காற்று இதமாக அடிக்கும் என்பதால் பெரிசுகள் எல்லாம் ஈ.ஸி சேர் போட்டு வீட்டு வாசலில் உட்காருவார்கள். இதமான இயற்கை காற்றில் ஈஸிசேரில் படுத்துக்கொண்டு, தெருவிளக்கு வெளிச்சத்தில் (நல்ல) புஸ்தகம் படிப்பது போன ஜென்ம குடுப்பினை. ஒன்பது மணி வரை மாமா சீனாதானா மாமாவோடு ஈ.சிசேரில் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஒன்பது மணிக்கு மேல் அவர் சாப்பிட எழுந்து போய்விடுவார் என்பதால் சனி ஞாயிறுகளில் எனக்கு ஈசி சேர் கிடைக்கும். மாமியும் சிலநாள் என்னுடன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு மிச்சம் இருக்கும் புஸ்தகத்தில் எதாவது ஒன்று எடுத்துக்கொண்டு படிப்பார். சுஜாதா, தமிழ்வாணன் எல்லாரையும் போட்டி போட்டுக்கொண்டு படித்துக் கொண்டிருந்த காலமது.

தெருவில் இருந்த பப்ளிக் லைப்ரரி எங்கள் செட்டுக்கு இன்றியமையாத வரப்பிரசாதம். ஒருவருக்கு ஒரு புஸ்தகம் தான் எடுக்கலாம் என்பதால் கிடைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல புஸ்தகங்களை வரலாறு ரேக்கில் ஒளித்துவைத்துவிட்டு கூட்டாளிகளிடம் சொல்லி எடுத்துவந்து மாற்றிக்கொள்வது அன்றாடப் பழக்கம். அதனால் எடுத்துவந்த புஸ்தகத்தை முடித்துவிட்டு இரண்டாவது வீட்டில் இருக்கும் கிங்பெல்லிடம் குரல் குடுத்தால் எங்கெல்லாமோ இருந்து புரட்டி வைத்திருக்கும் நாலு புஸ்தகங்களை குடுப்பான். கிங்பெல்லின் திறமை அசாத்தியமானது. ஒடிசலாய் மார் தெரிய அட்டைப்படம் போட்டிருக்கும் புஷ்பா தங்கத்துரை புஸ்தங்களுக்கு அட்டைப்படம் போட்டு படிக்கும் தில் தெருவிலேயே கிங்பெல்லுக்கு மட்டும் தான் உண்டு.

இப்படியாக சர்வயோகமும் கூடிய ஒரு சனிக்கிழமை நன்னாளில் ஈ.ஸி சேரில் படுத்துக்கொண்டு இரண்டாவது வீட்டிலிருந்த கிங்பெல்லிடம் குரல் குடுத்த போது சுஜாதா உட்பட ஒரு நாலு புஸ்தகளைக் ஓடி வந்து கையில் திணித்துவிட்டு அவசரமாய் ஓடிவிட்டான். நான் சுஜாதவை எடுத்துக்கொண்டு மீதி புஸ்தங்களை மாமியிடம் குடுத்துவிட்டேன். மாமி படிக்கும் கண்ணாடியில்லாததால் படிக்காமால் சிறிது நேரம் கழித்து உள்ளே போய்வரும் போது கண்ணாடியை எடுத்துவரக் காத்திருந்தார். இதற்குள் ராத்திரி அரட்டைக்கு வானரப் படை கூடியிருந்ததால் நான் சுஜாதாவை கிடப்ப்பில் போட்டுவிட்டு அரட்டைக் கச்சேரிக்குப் போய்விட்டேன்.

சிறுது நேரத்தில் அரட்டை ஜோதியில் ஐக்கியமான கிங்பெல் "என்னடா கபாஸ்கர், புஸ்தகமெல்லம் எப்படி இருந்ததுன்னு கண்ணடித்துக் கொண்டே கேட்க, சுஜாதா புஸ்தகத்தில் தான் மேட்டர் இருக்கு போலன்னு "இன்னும் ஃபுல்லா படிக்கல டா...ரஞ்சித் இன்னும் துப்பாக்கி வாங்கிக் கொண்டிருக்கிறான்...அவ இப்பதான் நாயவே கொஞ்ச ஆரம்பிச்சிருக்கா..."ன்னு சின்சியர் சிகாமணியாய் பதில் சொல்ல கிங்பெல் டென்ஷனாகிவிட்டான்.

"டேய் நான் வாரமலர் மாதிரி ஒன்னு குடுத்தேனே அத படிக்கலையா..அத பத்திரமா வைச்சு யாருக்கும் தெரியாம படிடா"ன்னு கிங்பெல் சொல்லிக்கொண்டிருந்த போது நான் வீட்டுக்கு தலை தெரிக்க ஓடிக்கொண்டிருந்தேன். நல்ல வேளை மாமி கண்ணாடி இல்லாததால் புஸ்தகங்களை என்னுடைய மேஜையில் அப்பிடியே வைத்துவிட்டு தூங்கப் போயிருந்தார். இல்லாவிட்டால் அன்றைக்கு வீட்டில் என் மண்டையை உடைத்து மாவிளக்கு ஏற்றி இருப்பார்கள்.

இப்படியாக கிங்பெல் என் வாழ்வில் அறிவுக்கண்ணை திறந்து வைத்தான். முதல் முறை படிக்கும் போது சில விஷயங்கள் ஒரு மன்னும் புரியவில்லை. எல்லாக் கதைகளிலும் கரு(??!!) ஒரே மாதிரி தான் இருந்தது என்றாலும், இதுக்கெல்லாம் யார்கிட்ட போய் விளக்கம் கேட்பது? 'தொட்டனைத்தூறும் மணற்கேணி' - படிக்கப் படிக்கத் தான் அறிவு வளரும் என்று மாமா அடிக்கடி சொல்லும் திருக்குறள் விளக்கத்தை நியாபகப்படுத்திக் கொண்டு மனதை தேற்றிக் கொண்டேன்.

ஆனாலும் அதற்காக (நீங்கள் நினைப்பது மாதிரி) அடிக்கடி இந்த மாதிரி புஸ்தகமெல்லாம் படித்துவிடவில்லை. தெருவில் அப்பிடி கிடைக்கவும் செய்யாது. ஏதோ கிங்க்பெல் புண்யத்தில் ஒரு புஸ்தகம் கிடைத்தது என்றாலும் அதைப் பற்றி மத்த பையன்களிடம் கூட சொல்லவில்லை. அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று சில அகராதிகள் ஜனாதிபதி அவார்ட் வாங்கின ரேஞ்சில் பேசிவிடுவார்கள் என்ற பயம் இருக்கும். அது ஒரு பயங்கரமான இம்சை. தெரு பசங்களாவது பரவாயில்லை. நான் படித்த பள்ளிக்க்கூடம் கான்வென்ட் ரேஞ்சுக்கு பந்தா இருக்கும். பசங்கள் நம்மைப் பற்றி "சீ"ன்னு நினைத்து விடுவார்களோன்னு ஒருவரிடமும் கொஞ்ச நாள் இதைப் பற்றி மூச்சே விடவில்லை.

-தொடரும்

23 comments:

ILA (a) இளா said...

ஆனாலும் ரொம்பதான் கெத்து டுபுக்கு. இந்த மாதிரியான விஷயம் இல்லாத ஆண்கள் இல்லாம இருந்தாலும் வெளியே சொல்ல கூச்சப்பட்டுக்குவாங்க. (நானும்தான்)

தங்ஸ் said...

ஹா.ஹா..எனக்கு முதல்ல கெடச்சது ஒரு நாவல் மாதிரி..கதையோட கலந்து இருக்கும்:-)))

இலவசக்கொத்தனார் said...

//முழுதாய் படித்த அந்த ஜோக் மனதில் பதிந்துவிட்டது.//

ஜோக்கைச் சொல்லாம என்ன இது சிறுபிள்ளைத்தனமா....

இலவசக்கொத்தனார் said...

//நான் படித்த பள்ளிக்க்கூடம் கான்வென்ட் ரேஞ்சுக்கு பந்தா இருக்கும்.//

இந்த கான்வெண்ட் ஹாஸ்டலில் நான் ஒரு வருடம் இருந்தேன் என்பதை மறக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அபி அப்பா said...

வந்துட்டேன் வந்துட்டேன்!! 100 சதம் சரி!! பதிவு போட மேட்டர் கொடுத்த டுபுக்கர் வாழ்க!!! பதிவும் எப்போதும் போல சூப்பர்!!!!

Unknown said...

டுபுக்கு, ரொம்ப தைரியம்தான் :)

'கல்லூரி விடுதியில் மருதம், நியூலைப் மாதிரி புத்தகங்களைத் தமிழ் தெரியாத என் நண்பன் பிற நண்பர்களிடம் லவட்டிக் கொண்டு வந்து என்னைப் படிக்கச் சொல்லிப் பாடாய் படுத்துவான். நானும் கொஞ்சம் உப்பு காரம் சேத்து, அவனுக்குப் படித்துக் கொடுப்பேன். வார்டன் ரவுண்ட்ஸ் வரும்போது, குறைந்தது 100 புத்தகங்களாவது மாட்டும்!'

- தஞ்சாவூரானந்தாவின் சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்டது :)

rv said...

:))

//ஜோக்கைச் சொல்லாம என்ன இது சிறுபிள்ளைத்தனமா...//

ரிப்பீட்டேய்...

//"தொட்டனைத்தூறும் மணற்கேணி..மாந்தர்க்கு.." //
எத்துணை பொருத்தமான குறள். திருக்குறளை இப்படி ப்ராக்டிகலா சொல்லிக்கொடுத்தா எல்லாரும் மனப்பாடம் பண்றதுக்கு வசதியா இருந்திருக்கும்.

தொடர்ந்து நடாத்துங்க...

dubukudisciple said...

he he he.. naanga ellam aangila book padichi ariva valarthukitom

Sumathi. said...

ஹாய் டுபுக்ஸ்,

ஹா ஹா ஹா...இந்த மாதிரி விஷயங்களை கூட இவ்ளோ நாசூக்காகவும் கொஞ்சம் கூட விரசமில்லாமல் எப்படி இல்ல உங்களால் மட்டும் தான் முடியும்.வாவ்... really xllent.

Anonymous said...

this topic is like walking on a knives edge.but you have done a good work.idhai patri ezhutha athuvum pirayazhamal ezhutha ungalal mudiyum,you have already done that with ease.gr8.
nivi.

Anonymous said...

nalla diriyama elluthuringa. post nalla iruku as usual.if u had a chance read the article arinthum ariyamalum written by MR.GYANI(VIKATAN).
-isthripotti

சேதுக்கரசி said...

வாழ்க்கைக் கல்வி.. தொடரும் வேறயா? நடத்துங்க, மக்கள்லாம் ஜாலியா இருப்பாங்க :-)

//ஜோக்கைச் சொல்லாம என்ன இது சிறுபிள்ளைத்தனமா....//

நம்ம நண்பர்கள்லாம் எவ்வளவு பறக்கறாங்க பாருங்க, நீங்க் பண்றது உங்களுக்கே நியாயமா? :-)

sriram said...

வாய்யா வாய்யா டுபுக்கு, என்ன Back to form ஆ? இத்தனை வருடம் கழித்தும் புத்தகம் பெயர் ஞாபகம் இருக்குன்னா, எத்தனை ஆழமா படித்து இருக்கணும்? அப்படியே அடுத்து முதலில் பார்த்த சாமி படம் பற்றியும் எழுதவும். பாத்ததே இல்லைன்னு உதார் விட வேணாம். (ஆஹா சென்னையை விட்டு வந்து வருடம் ஆனாலும் சென்னை தமிழ் என்னை விடவில்லை)
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston

Anonymous said...

////ஜோக்கைச் சொல்லாம என்ன இது சிறுபிள்ளைத்தனமா...//

ரிப்பீட்டேய்...//

டபுள் ரிப்பீட்டேய்.......


"பருவ மலர்" புரியவில்லை என்றாலும், "தொட்டனைத்தூறும் மணற்கேணி..மாந்தர்க்கு.." திருக்குறளை மனதில் நினைத்து கொண்டு, திரும்ப திரும்பப் படித்து அதை புரிந்ததை (?) பாரட்டும் வேளையில், புரட்சி தலைவர் ராம் எழுதிய பதிப்பைப் புரிந்துக்கொள்வதற்கு கோனார் நோட்ஸ் கேட்பது ஏன்?

-அரசு

ambi said...

நான் கொஞ்சம் பெட்டர். காலேஜ் வந்தபுறம் தான், அதுவும் NCC கேம்ப் போன போது தான் வாழ்க்கை கல்வி எல்லாம்.

இந்த கமண்டை பாத்தாலே இன்னிக்கு வீட்டுல விளக்குமாத்து அடி விழும். நல்லா இருங்கண்ணே! :))

ambi said...

//"பரவாயில்லையே அம்பி புஸ்தகமெல்லாம் படிக்கிறாரே..எலே சம்முவம் புஸ்தகத்த குடுறா அம்பி படிக்கட்டும்"//

இதுல எதுவும் உள்குத்து இல்லையே! :D

Anonymous said...

hey u r really gifted, plz write more, v al rlly like ur style, write more

Dubukku said...

இளா - கரெக்ட்டுத்தான்...எனக்கும் முன்னாடி கூச்சமா தான் இருந்தது...கல்யாணமானதுக்கப்புறம் மானம் வெக்கம் ரோஷம் ....:))))) (சும்மா டமாசு...யாராவது கோச்சிக்கிடாதீங்கப்பூ)

தங்ஸ்- ஆஹா அது நல்லா இருக்கும் :))

கொத்ஸ் - யோவ் ...அந்த ஜோக்கையெல்லாம் இங்க சொல்லமுடியாதைய்யா...என்னை வம்புல மாட்டிவிட்டுறுவீர் போல இருக்கே. எல்லாருக்கும் சொல்லிக்கிறேன் கொத்ஸ் எனக்கு ஸ்கூல் சீனியர் சீனியர் சீனியர்...:)))

அபி அப்பா - //பதிவும் எப்போதும் போல சூப்பர்// பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஆனா இது ஏதோ டெம்ப்ளேட்லேர்ந்து எடுத்த மாதிரி இருக்கே?? :P

தஞ்சாவூரான் - அட மருதம் நீங்களும் உண்டா...அடாடா உங்க நண்பரோட இம்சை தாங்காது போல இருக்கே :))

இராமநாதன் - அண்ணே...நீங்களும் என்ன வம்புல மாட்டிவிட்டுறாதீங்க...குறல் ஹீ ஹீ எங்க மாமா நான் நல்ல புஸ்தகங்களைப் படிக்கிறதுக்கு சொல்லுவார்...

டுபுக்குடிசைப்பிள் - ஹூம்....இங்க்லீஸ் புக்குக்கு மவுஸ் ஜாஸ்திங்க...எனக்கு ரொம்ப நாள் கிடைக்கவே இல்லை :))

சுமதி - ஹப்ப்பாடா...எங்க எல்லை மீறிடிச்சோன்னு கவலைல இருந்தேன்...ரொம்ப நன்றிங்க வயத்துல பாலவார்த்தீங்க...ரொம்ப டேங்க்ஸ்

நிவி - வாங்க ரொம்ப சரி நீங்க சொல்றது...அதான் ரொம்ப யோசனையா இருந்தது. உங்க பின்னூட்டத்த பார்த்த அப்புறம் தான் நிம்மதியா இருந்தது. மிக்க நன்றி


இஸ்திரிபொட்டி - வாங்க ரொம்ப நன்றி. விகடன் இந்த வாரம் படிக்கிறேன். (அது தொடரா? எந்த வாரத்த படிக்கனும்? இல்ல லேட்டஸ்டா?)

சேதுக்கரசி - ஆமாங்க அட நீங்களுமா ...அந்த ஜோக்க இங்க போடமுடியாதுங்க :))

ஸ்ரீராம்- ஹை உங்களுக்கு புஸ்தகம் பெயரெல்லாம் ஞாபகம் இல்லையா?? நல்லாத் தேன் நடிக்கிறீங்க...இல்ல இல்ல உங்க பாஷைல சொல்லனும்னா நல்லாத்தேன் உதார் விடறீங்க

Dubukku said...

அரசு - வாங்கைய்யா..ஜோக் - மேலே ரிப்ளை ரிப்பீட்டேய் :)) ஏங்க பருவமலர்க்கு கோனார் நோட்ஸ் தேவையில்லைங்க...பொறுமையா படிக்கலாம்...நம்மாள் சொன்னதுக்கு அப்படியா? :)))

அம்பி - ஓ NCC கேம்ப்பா...சரி சரி நேத்திக்கு விளக்குமாத்து அடி விழுந்துதா இல்லையா? நான் வேணா உன் கமெண்ட்ட (மட்டும்) பார்வேர்ட் பண்ணட்டுமா?

அனானி - ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு..என்னங்க...ஒரு டம்மி பெயராவது வெச்சிக்கலாம்ல..அடுத்த தரம் கமெண்ட் போடும் போது அடையாளம் கண்டுக்கிறதுக்கு

Anonymous said...

ஞாபகத்தில் அடங்காத கணக்கில் படித்திருப்பதால் (அப்போ 'சரோஜாதேவி' ரொம்ப ஃபேமஸ். அட புக் பேருதான்) பெயரை லிஸ்ட் போட முடியலை. பொதுவா எல்லா புக்குமே "அந்த நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில்" தான் ஆரம்பிக்கும்.

இளமைக்காலத்த திரும்ப கொண்டுவர உங்களால தான் முடியும் தல....நடத்துங்க...

ஜொள்ளுப்பாண்டி said...

ஹஹஹஹ நம்மளைப்போல பலரும் இருக்காவன்ணு தெரியரப்போ நெம்ம சந்தோசமா இருக்குங்க டுபுக்கு அண்ணாச்சி :))))

M.Rishan Shareef said...

வாவ்..அழகா எழுதியிருக்கீங்க !

Anonymous said...

dubukanadha nan gemini. ungalal mattumthanna ipdi virasam illama intha matera elutha mudiyum kalakkungana.enaku saamy book arimugam aanathu saloon la thanna
appolam vellikilama dinamalaroda sublimentry ya siruvar malar varum
enga school ku pakathula iruntha(innum iruku) delux saloon la vanguvanga nan intervel timela poi padipen athemari annakum poirunthen anga bookka kanom.kadaikararta keta table drawerla iruku eduthuko naru drwrea open panna marutham nu pottu oru book irunthuchi ennada puthu booka irukeenu padikka arambicha athula irukara story 1 mey puriyala padamla vera black&white la sariya print aagama irunthuchi nan yetho saathrna book thannu apro padichikalanu school ku eduthuttu poiten.anga poi pasangalta kudutha avanunga than sonnanga ithu samy book nu apro antha book enga schoola oru sorry pala round vanthathu thanikathai.athukapro paruvachittu
paruvakala malarnu saroja devi varikkum padichi ariva valathukiten

Post a Comment

Related Posts