Monday, January 28, 2008

பொட்டி...

மஹா ஜனங்கள் மன்னிக்கனும். ஒரு சில காரணங்களுக்காக எழுதி வைத்திருந்த பதிவுகளும் போட முடியாமல் இருக்கிறது (புத்தம் புதுசா வாங்கின கம்ப்யூட்டர் ஊத்திக்கிச்சு, டிஸ்க் பெயிலியர்). கம்ப்யூட்டர் விலை அதிகம், அதில் இருக்கும் கோப்புகளும் வேண்டுமென்பதால் சும்மா வைப்ஸ் வைத்து நல்ல பளபளன்னு துடைத்து விட்டு "இங்க தான வைச்சேன் ஸ்க்ரூட்ரைவர காணுமேன்னு..." நால் நாளாய் சீன் போட்டு ஓட்டி, டெல் கைல கால்ல விழுந்து நாளைக்கு சர்வீஸ்குக்குப் போகுது. நல்ல ஓவராயில் பண்ணிக் கொடுக்கச் சொல்லியிருக்கேன். பார்ப்போம்.

இல்லாவிட்டாலும் வாரக் கடைசிக்குள் திரும்ப பொட்டி தட்டு ஒரு பதிவாவது போடனும்னு ப்ளான் - ஏழுகுண்டல வாடா நடுவுல புகுந்து கவுத்தாம இருந்தா.

11 comments:

உமையணன் said...

போன சனிக்கிழமை இரவு 6:45க்கு ஆக்டன் டவுண்ல நின்ன ஈஸ்ட்பவுண்ட் பிக்கடிலி லைன்ல பிஸ்கட் நிற தின்சுலேட் குல்லா போட்டுக்கிட்டு தி லண்டன் பேப்பர்ல சுடொக்கு எழுதிக்கிட்டிருந்தது நீங்கதானே?

உமையணன் said...

மன்னிக்கனும் வெள்ளிக்கிழமை.

இலவசக்கொத்தனார் said...

பொண்டாட்டி எழுத விடலை. அதைச் சொல்ல முடியாம இப்படி ஒரு சாக்கா? நல்லா இருடே!!

துளசி கோபால் said...

//ஏழுகுண்டல வாடா நடுவுல புகுந்து கவுத்தாம இருந்தா.//

இதி ஏமிட்டிரா கொடவ?

எந்துக்கு ஈ கொரபாட்ட?

வடுவூர் குமார் said...

இதெல்லாம் ஒரு சாக்கா!!
அவனவன் 4 கி பி பென் டிரைவில் லினக்ஸ் போட்டு படம் காட்டுகிறான்!!!
லினக்ஸ் பக்கம் கொஞ்சம் திரும்பி பாருங்க,இல்லை இ.கொத்தனார் சொன்னது தான் காரணமா?
:-)

ambi said...

இதேல்லாம் ஒரு சாக்கா? ஆபிஸ்ல எதுக்கு பொட்டி குடுத்து இருக்காங்களாம்? :p

ஏழு கொண்டல வாடுவே முருகனாம், தெரியுமா உங்களுக்கு? :)))

Anonymous said...

annany peru than isthri potti.seekiram post popdunga. anaalum ippdi mokkai comment podathinga.
isthri potti

Anonymous said...

enn sir ,veetula velayirukku,thangamani thengathurva sonnanga,ponnu homework ezutha sonnathila time poiduchu nnu unmaiya sollunga vitudorum.ithellam lifella sagajam.seekiram orunalla post podunga sammee!!!!!!!!!!!!!
nivi.

sriram said...

யோவ் டுபுக்கு
எங்களுக்கே அல்வாவா? வீட்டுல பொட்டி இல்லேன்னா என்ன? ஆபீஸ் பொட்டி என்ன ஆச்சு? இந்த மாதிரி நொண்டி சாக்கு சொல்லாம போஸ்ட் போடற வழிய பாரு ...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

Dubukku said...

உமையணன் - ஆஹா வாங்க நீங்களும் இங்க தானா? ஆனா அது நான் இல்லை. நான் ஆக்டன் டவுன் வரமாட்டேன். பிக்கடிலி லைனும் பிடிக்க மாட்டேன். :) நீங்க ஆக்ட்ன் டவுண் பக்கமா? லண்டன்ல ப்ளாகர்ஸ் மீட் போட்டுறலாம் போல

கொத்ஸ் - இத படிச்சிட்டு தங்கமணி நீங்க என்னம்மோ வீட்டுல வேலை செஞ்சி கிழிக்கிற மாதிரி சீன் போடறீங்கன்னு எனக்கு டோஸ் விழனும் அதானே?? நல்லாத்தேன் போட்டுக்குடுக்கறீரு...

துளசி - சந்திரமுகியெக்கா....நீங்க ஒதலவேண்டாம்...நான் ஓடிப் போயிறேன்... :))

வடுவூர் குமார் - அண்ணே கொத்ஸ் கொளுத்தி போடறார். லினக்ஸ் பக்கம் போனது இல்லை...பார்க்கறேன்

அம்பி - ஆபிஸ் ரொம்ப மோசம்பா வேலையெல்லம் பாக்கச்சொல்றாங்க. என்னாது முருகன் தான் ஏழுகொண்டலவாடுவா...யாரு முருகனே சொன்னாரா?

இஸ்திரி பொட்டி - ஓ சரி சரி இப்போ புரியுது...மன்னிச்சிக்கோங்க...போட்டாச்சு

நிவி - வாங்க அடுட்து நீங்களா...உங்களுக்கும் கொத்ஸ் மாதிரி ரொம்ப நல்ல எண்ணம். என்னக்கு வீட்டுல இப்போ டோஸ் விழனும் அதானெ?? :)

ஸ்ரீராம் - வீட்டு பொட்டில ஒரு போஸ்ட் தட்டி வைச்சிருந்தேன். அத எப்படியாவது எடுத்துறலாம்ன்னு தான் ட்ரை பண்ணினேன்...அதான் லேட்டு (இந்த அல்வா பதமா வந்திருக்கா? :ப்)...புது போஸ்ட் போட்டாச்சுண்ணே

உமையணன் said...

ஆஹா அது நீங்க இல்லையா? அப்ப கண்டிப்பா எனக்கு ப்ளாகோஃபோபியாதான்.

நான் ஆக்டன் டவுணுக்கு ஒரு ஃபிரண்ட பாக்குறதுக்காக ட்ரெயின் மாறுவதற்காக நின்று கொண்டிருந்தேன்.

Post a Comment

Related Posts