கதையைச் சொல்லவில்லை தாராளமாகப் படிக்கலாம்.
இந்தப் படமெல்லாம் இன்டர்நெட்டில் டவுண்லோட் செய்ய கிடைக்குமென்று சத்தியமாக நினைக்கவே இல்லை. கூகிளில் தலைகீழாக தேடிப்பார்த்தும் மாட்டவில்லை. இந்த ப்ளாக் நண்பர் மூலமாக டவுண்லோட் லிங்கை கிடைத்தவுடனேயே கை பரபரக்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் படம் மற்றுமொரு ஃபார்முலா படமாக இருக்காது என்று நம்பினேன்.ஆனால் இந்தப் படம் மிகப் பெரிய ஏமாற்றம்.
ஆரம்பம் எதிர்பார்த்த மாதிரி பிரமாண்டமாக இருக்கிறது. எதிர்பார்த்து போல் தலைவர் தடாலடி என்ட்ரி குடுக்கிறார். பார்த்த சில சீனக்ளின் கெட்டப்பை பார்த்த போது சரி தல அலட்டலில்லாத நடிப்பில் கலக்கியிருப்பார் என்று நம்பினேன். முழுவதுமில்லாவிட்டாலும் பல இடங்களில் ஏமாற்றவில்லை. ஆரம்பப் பாடலே மயிலாட்டம் ஒயிலாட்டம், கரகாட்டம், குரங்காட்டம் என்று கூட்டம் கூட்டமாக ஜால்ரா பாட்டு பாடுகிறார்கள். பாடல் முடிந்தவுடன் நம்ம டவுண்லோட் மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டது. அடப்பாவி மக்கா மூனு ஜி.பி ராத்திரி முழுவதும் டவுண்லோட் ஆகிசொதப்புகிறதே என்று பதறிப் போய் நோண்டி நொங்கெடுத்து ஒரு வழியாக படத்தை சரி பண்ணி விட்டேன்.
படத்தில் மிகப் பெரிய சொதப்பல் அழுகை தான். இந்த மாதிரி படங்களில் அழுகை சென்டிமென்டையெல்லாம் ஓரம் கட்டி எடுக்கவேண்டாமோ? இயக்குனரின் பிற படங்களைப் பார்த்து அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துப் பார்த்த படம் இது. ஆனால் சொதப்பலுக்கு காரணம் பட்ஜெட்டாக இருக்கலாம். தேவைக்கு செலவழிக்காத படமும் அதிகமா செல்வழிக்கற படமும் ஜெயிக்கவே ஜெயிக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க. தலைவர் படத்தில் வில்லன்கள் தலைவருக்கு இணையாக பட்டயக் கிளப்ப வேண்டாமா? சொதப்பலிலும் சொதப்பல். மிகப் பெரிய சோகம்.
தலைவர் நடிப்பையும் லக்ஷ்மி நடிப்பையும் தவிர மத்ததெல்லாம் ரொம்ப சுமார் ரகம் தான். ஆர்.எஸ்.மனோகர் சும்மா பேண்டுக்கு மேல் பாவாடை கட்டிக் கொண்டு படிகளில் ஸ்டைலாக வருகிறாரே தவிர அவர் திறமையை மொத்தமாக வீணடித்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் கதையை எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் காமெடி செய்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியில் கோயில் கட்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதுக்கப்புறம் அதைப் பற்றி மூச்சே விட வில்லை. சென்ற முறை இந்தியா சென்ற போது இந்தக் கோயிலை பார்த்ததிலிருந்து இதன் வரலாறு பற்றி வீடியோ பார்க்க ஆசையாய் இருக்கிறது. "ராஜ ராஜ சோழன்" - படம் அந்த ஆர்வத்தை எள்ளவும் பூர்த்தி செய்யவில்லை.நடிப்பில் Sivaji - The Boss ஒத்துக்கலாம். படத்தில் மத்ததெல்லாம் வேஸ்ட்.
ராஜராஜ சோழன் டவுண்லோட் லிங்க் கொடுத்த அனானி நண்பருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
பி.கு - சிவாஜி படம் ஃபர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துட்டு பாதி ராத்திரிக்கு டெக்ஸ் மெசேஜ் அலம்பலா பண்றீங்க...தசாவதாரம் வரட்டும்டீ...உங்களுக்கு இருக்குடி :))
Friday, June 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
:))
கலக்குறீங்க!
> தசாவதாரம் வரட்டும்டீ...உங்களுக்கு இருக்குடி
- என்னதிது.. மகளிர் அணி வாடை ரொம்ப வருது.
தசாவதாரன் வந்தா என்ன செய்யறதா உத்தேசம்? பதில் SMS அனுப்ப போறியா? மொபைல் Off பண்ணிடுவோம்ல.
btw, தசாவதாரம் இது வரை எடுத்திருக்கறது CD-ல வந்திருக்காம்.. பாக்கறியா?
இப்பத்தான் தசாவதாரம் ஒரு சிடி பார்த்துட்டு வந்தேன். இனி ரெண்டாவது சிடி போடணும்.
மொத்தம் 3 சிடிக்கள்.
மச்சாவதாரம் முடிஞ்சு, வராகம், கூர்மம் முடிஞ்சு இப்ப பிரகலாதன் கதையில் வனை
மலையிலிருந்து உருட்டப்போறாங்க.செளகார் ஜானகி பிள்ளைப்பாசத்துலே கதறுதல்.
ஹிரண்யகசிபு காட்டுக்கத்தலா கத்தறார். அவர் எம்.ஆர்., ராதா.
கே.எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கம்.
முக்கியமான ரோல் நாரதர்.
சீர்காழி கோவிந்தராஜன்.
இது சத்தியமான உண்மை..
லிங்கை குடுய்யா டுபுக்கு:-((((
நீ எல்லாம் சிவாஜி பதிவு போடும் போதே தெரியும். உல்டா கேஸுன்னுதான். ஆனால் இந்த சிவாஜி ஜுரம் ரொம்ப போர் அடிக்குதய்யா...
கவலப்படாதீங்க. லேடஸ்ட் சிவாஜியும் சீக்கிரம் இணையத்தில் அவதரிப்பார்.
தல, ஏன் உங்க ஆர்கைவ்ஸ் பகுதி வேல செய்யமாட்டேங்குது ?
adap paavi, edho comedy pandreengannu theriyum.. adhukkunnu ipdiyaa? very good Dubukks. i expected something abt Sivaji from you, but Chakra didn't disappoint... naanga sunday book panni irukkome!!!
- umakrishna
பாடல்கள் நன்றாக இருக்குமே டுபுக்கு, அதுவுமா உங்களுக்கு பிடிக்கவில்லை?....
மதுரையம்பதி
தசாவதாரம் வரட்டும்டீ...உங்களுக்கு இருக்குடி :))
enna madurai karainga maadhiri solreenga... correct dubukks.. lets watch first day first show (ipdi thursday release panni vayitherichala kottikkama irundhaa :-))
- umakrishna
அண்ணா, உங்க அழும்புக்கு ஒரு எல்லையே இல்லையா? மனோகரின் பேண்டுக்கு மேல் பாவாடை படிச்சதும்தான் புரிய ஆரம்பிச்சது... ஆனாலும் இது ரொம்பபபப..ப ஓவர். இதுதான் ஓவர்னா, துளசி டீச்சர் செயின் புடிக்கறாங்க. நல்லால்லை. சொல்லிட்டேன்.
தலையெழுத்து! கடைசி லைன் வரைக்கும் புரியலை எனக்கு! சரியான டியூப் லைட் நான்!!
thalaiva.. apdika namma blog pakkam vaanga unga padathoda sarithira chaandrithalgal paarkalaam ;-)
//சிவாஜி படம் ஃபர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துட்டு பாதி ராத்திரிக்கு டெக்ஸ் மெசேஜ் அலம்பலா பண்றீங்க...தசாவதாரம் வரட்டும்டீ...உங்களுக்கு இருக்குடி :))//
ரிப்பீட்டே
can you send me the link?
///இந்தக் கோயிலை பார்த்ததிலிருந்து இதன் வரலாறு பற்றி வீடியோ பார்க்க ஆசையாய் இருக்கிறது///
me too! :)
சரியான டியூப் லைட் நான்!!
:)
இதுக்குதான் பதிவ படிக்கனுமுனு சொல்லுறாங்க எவ்வளவு பெரிய ஆப்புல இருந்து தப்புச்சியிருக்கேன்
:))
ரங்கா,
தசாவதாரம் ஸ்டில்ஸ் பார்த்தீங்களா? தலைவர் அடையாளமே தெரியலையே... கலக்கறாரு இல்ல....
கதையை சொல்லவில்லைன்னு முதல் வரியிலேயே சொன்ன ஒத்த வார்த்தையிலதான் நான் இந்த பதிவைஏ படிச்சேன். படம் பார்த்துட்டுதான் மத்த விமர்சனங்கள் படிகக்னும்ன்னு இருக்கேன். :-D
பின் குறிப்பு சூப்பர்.. சிவாஜியை விட தசாவதாரத்தைதான் நான் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். :-D
எனக்கு அப்ப்ப்ப்ப்ப்பவே தெரியும்!! உங்க அலம்பல் தாங்க முடிலயே!
//இதுக்குதான் பதிவ படிக்கனுமுனு சொல்லுறாங்க//
:))) பின்னூட்டத்துல மின்னல அடிச்சிக்க ஆளே இல்ல போல!
ayyo naanum emanden
:))))
டுபுக்கு சரியான டுபாகோ வேலைதான் செஞ்சிருப்பீங்கன்னு தெரியும். தமிழ்நாட்டுலதான் 'ரஜினி'யை தலைவான்னு சொல்லிக்கிட்டு திரியும் கூட்டமிருக்குன்னு பார்த்தா, இங்க துபாயில அத விட பைத்தியக்காரங்களெல்லாம் இருக்காங்க. ஒரு டிக்கெட் 50-100 திர்ஹம் போகுதுன்னு சொல்லி, என்ன இது லூசுத்தனமா இருக்கென்றால், திருச்சியில் நெல்லையில் ரூ.5000/-த்திற்கு டிக்கெட் எடுத்து பார்த்த முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் - ராஜ ராஜ சோழனுக்கில்லை சங்கரின் 'சிவாஜி'க்கு. ஆனா 'சிவாஜி'யும் இணையத்திலும், திருட்டு விசிடியிலும் வந்துவிட்டதாக கேள்வி உங்களுக்கு கிடைச்சா எங்களுக்கும் அனுப்பு வையுங்க ;-)
Loosappa Nee?? (Laila Stylla padikavvum)
Rathiri sappidum bodu Sivaji Pathi pesittu (50$ selavu panni padam poganuma, one weekla isaitamil.net la parkalam etc) vandu midnight 12 manikku blog padikkalamnu partha, ippadi mokkai podariye, idhu niyayama?? Chakra text message anupuna, namum 10avatharam vandathum SMS anuppuvom, Idhu verum Mass movie, nammavar movie is Class Movie, Athai vittu Blogla sandai ellam podapadathu chinna pullayattam, solliputten
Endrum Anbudan....
//ராஜராஜ சோழன் டவுண்லோட் லிங்க் கொடுத்த அனானி நண்பருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
//
அந்த லிங்க் குடுத்த அனானிக்கு இருக்குடி ஒரு நாளைக்கு தீவாளி. :)
என்னடா மனோஹர், லக்ஷ்மி எல்லாம் எங்க வந்தாங்க?னு திரு திருனு முழிச்சேன் ஒரு நிமிஷம். Grrrrrr.
சாரே... நெட்ல டவுன்லோடு பண்ணினேன் என்றப்பவே தெரிஞ்சு போச்சு இது உட்டாலக்கடி வேலை தான் என்று...
நாங்க இங்க ராப்பகலா நெட் போட்டு குடைஞ்சு கிட்டு இருக்கோம் லிங்க் கிடைக்குமா என்று... இதுல நீங்க கூகிள் மூலமா கண்டுப்பிடிச்சிங்களாம்...
என்ன இது...
nekkonnum pidikkalai! £14 chillarai suththa waste! tsk tsk!
- desigirl
என்ன தசாவதாரம் வரட்டும்டீ...?...தலைவர் படம் வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் படத்த (தசாவதாரம்) ரிலீஸ் பண்ணாம உள்ளார(on hold) வெச்சுட்டாங்கள்ல.
அது....சொன்னா அதிரும்..
கமலையும் பிடிக்கும்.... ஆளவந்தானுக்கு அப்புறம் (ஸ்டீராய்ட்?) ரொம்ப கெழடு தட்டின மாதிரி இருக்கு...ஆளும் டூ ஒரிஜினல் பாடி...
I mean not to original body shape..
nenaichen! ulta lakkadi velai irukkuntu appave theriyum. Nembalaam fans of class illa :-)
ஆனாலும் ம்ஓசமிப்படியா ஏமாத்துவாங்க.
this is the best muttalthina
velai.
enjoyed like anything.:)))))
சிபி - :)) நன்றிங்க...
சக்ரா - வரட்டும் பார்ப்போம். எது இந்த விஷ்ணுவப் பத்தின உம்மாச்சி படம் தானே...பார்த்தாச்சுல
துளசி - யெக்கா...நினைச்சேன் யாராவது இப்படி பதில் அல்வா தருவாங்கன்னு நீங்க தானா அது :))) ஆனாலும் அது செம நீள படம்..இல்ல...நிறைய தரம் பார்த்திருக்கேன் :)
அனானி - ஹா ஹா நான் சொன்னது ராஜ ராஜ சோழன் பத்தியது. லிங்க் போன பதிவின் பின்னூட்டதில இருக்கு பாருஙக் :))
கொத்ஸ் - ஆமாங்கோவ்...ஏதோ எங்கறிவுக்கு எட்டினத போடறோம். உங்கள மாதிரி ரீபஸுக்கெல்லாம் இங்க மேல் மாடி காலி
அனானி - நல்ல பிரிண்டில் அவதரிப்பாரா?? :))
அனானி - ஆர்கைவ்ஸ் அது முதல் முகப்பு பக்கத்திலேர்ந்து மட்டும் தான் வேலை செய்யுது. எதாவது பதிவுக்குள்ளேர்ந்து போனீங்னன்னா வேலை செய்ய மாட்டேங்குது. ஏன்னே தெரியல. நான் ஆர்க்கைவ்ஸ் பார்மேட்ட மாத்தினதுலேர்ந்து இந்தப் பிரச்சனை தான். எப்படி சரி பண்ணன்னு தெரியல
மதுரையம்பதி - ஆமாங்க..பாடல்கள் அருமை. அத சொல்ல மறந்துட்டேன் :))
உமா - ஆமாங்க...தசாவதாரம் வரட்டும் எங்களுக்கும் சேர்த்து புக் பண்ணுங்க...சேர்ந்து போகலாம்
லஷ்மி - வாங்க மேடம். இங்க சிவாஜி பார்த்தவங்க அழும்பவிடவா இது... :)) துளசியக்கா பத்தி நான் எதுவும் சொல்ல மாட்டேன் :))
Boo - ஹீ ஹீ அதெல்லாம் இல்லீங்கோவ்...:))
யாத்திரிகன் - அண்ணே அந்தக் கோவிலை கட்டியது பற்றி ஒரு வீடியோ இருக்கு அதத் தான் தேடிக்கிட்டு இருக்கேன். உங்க பதிவும் அருமை. அங்க கமெண்ட் போடறேன்.
இளா - ஆஹா ஏகப்பட்ட பேர் இருக்கோம் போல
சர்வே ஈசன் - இன்னமும் மாட்டலை . மாட்டினவுடனே அனுப்பறேன்.
மின்னல் - வாய்யா மின்னல். வசமா மாட்டினீங்களா...ராஜ ராஜ சோழன் லிங்க் போன பதிவுல இருக்கு....தரட்டுமா :))))))
உண்மை - :)) நன்றி.
பாலாஜி - இல்லீங்களே இன்னும் பார்க்கலை
மை ஃபிரண்ட் - நீங்களுமா வாங்க வந்து ஜோதியில ஐய்க்கியமாகுங்க
காயத்ரி - நீங்களெல்லாம் கண்டுபிடிச்சிருவீங்கன்னு தெரியும். மின்னல் வசமா மாட்டினாரு... :)))
ப்ளாகேஸ்வரி - அட நீங்களுமா :))
துர்கா - வாங்க மேடம் :))
ஜெஸிலா - சிவாஜி டிக்கட் விலை ரொம்ப கொடுமைங்க..5000ரூபாய் நெல்லையில தாங்க முடியல. விலை கொடுத்துவாங்குபவது அவரவர் விருப்பமென்றாலும் உங்களை மாதிரி எனக்கும் வயிறு எரிகிறது
Sriram - அண்ணே தலைவர் ரசிகரா நீங்க...மன்னிச்சிக்கோங்கண்ணே..சும்மா டமாசு டமாசு :))
Ambi - வாடா புதுமாப்பிள்ளை...நீயுமா...சூப்பர். :))
நாகை சிவா - சும்மா டமாசு டமாசுன்னே...கண்டுக்கிடாதிங்க...ஏதோ சின்னப்புள்ள விவகாரம் :)
Desigirl - £14 பவுண்டு ....உங்களுக்கு சில்லறையா....வணக்கம் மேடம் :)) படம் பிடிக்கலையா..ச்சோ ச்சோ :)
Ramachandran - சும்மா டமாசுன்ணே..கோசிக்கிடாதீங்க...:)) எனக்கு இப்போ இருக்கிற ரஜினியை விட முள்ளும் மலரும், தில்லுமுல்லு ரஜினியைத் தான் ரொம்ப பிடிக்கும்.
Munimma -வாங்க மேடம்...நிங்களும் தலைவர் அப்போ இங்கயே ஒரு ரசிகர் மன்றம் இருக்குன்னு சொல்லுங்க :)
வல்லிசிம்ஹன் - வாங்கம்மா...:))) ஏமாந்துட்டீங்களா...ஆனாலும் நீங்க ரசித்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம்
Well, don't overestimate Dasavadharam just yet... You never know how much Kamal can screw up things. And he is capable of doing it.
R
ps: I am too a Kamal fan.
//
Thalaivar padathaiya inga oru thalaivar (down)loadadikirarupa! Its little disappointment the boss!
Post a Comment