Tuesday, June 05, 2007

படிச்சவன் பதிவக் கெடுத்தான்

Desigirl நான் பதியவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு டாப்பிக்கில் போஸ்ட் போட சொல்லி டேக் செய்திருக்கிறார். எனக்குப் பிடித்த இந்திய எழுத்தாளர்கள்/ புத்தகங்கள்

1. நம்ம தலை சாண்டில்யன். திரைப்படம் பற்றி பேசும் போது எனக்குத் தெரிந்த அனைவரையும் பீட்டர் ஜாக்ஸன், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றி பேசி நிறைய போரடித்திருக்கிறேன். அதே போல் எழுத்தாளர்களில் நான் வியந்து ஸ்லாகிக்கும் எழுத்தாளர் சாண்டில்யன். இவரின் எழுத்து வசீகரமானது. இவரின் எல்லா நாவலகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். கடல் புறா, யவன ராணி இரண்டும் எனது மிகவும் பிடித்தமானவை. அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் சாண்டில்யன் நாவல் கதாநாயகனாய் தான் பிறக்க வேண்டும் என்று பிள்ளையாருக்கு நேர்ந்து கொண்டிருக்கிறேன் (அதுவும் யவன ராணி கதாநாயகனாய்). சாண்டில்யன் ஹிஸ்டரி ஜ்யாக்ரஃபியில் ரொம்ப ஸ்ட்ராங்க். நிறைய ஆராய்ச்சி தகவல்களை பின்புலமாக கொண்டு கதை பின்னியிருப்பார். இவரின் கதாநாயகிகள் ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( வெறும் காத்து தான் வருது). தலைவர் எழுதிய ராஜ முத்திரையில் முதல் பாகம் எங்க ஊரில் தான் நடக்கிறது. படிக்கும் போது அட நம்மூரப் பத்தியெல்லாம் தலைவர் எழுதியிருக்கிறாரே என்று அப்படியே சிலிர்த்துவிட்டது. இவர் மட்டும் இப்பொழுது உயிரோடு இருந்தால் எப்படியாவது போய் கண்டிப்பாய் நேரில் பார்த்திருப்பேன். இவரின் பல நாவல்களை இன்னும் படிக்கவில்லை என்பதை நினைக்கும் போதே எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கும். (அப்போதானே படித்துக் கொண்டே இருக்கமுடியும்). இவரின் புத்தகங்கள் இங்கே எங்க ஊர் லைப்ரரியில் கிடைக்கிறது.ஒவ்வொரு தடவையும் இவரின் புத்தகம் ஏதாவது இருக்கும் எனது லிஸ்டில். மற்றபடி இவரின் நாவல்களை யாராவது தமிழில் படமாக எடுக்க மாட்டார்களா என்று இன்றளவும் ஏக்கமாய் இருக்கிறது.

2.தேவன் - இவரின் எழுத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இவரின் நகைச்சுவை இருக்கும். இவரின் எழுத்தையும் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கால நடையில் இருக்கும் இவரின் நகைச்சுவை நிறைய நேரங்களில் குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும்.

3. சுஜாதா - தலையப் பத்தி நான் சொல்லவேண்டியதில்லை. இவருடைய பாணி, நடை எல்லாமே அருமையாக இருக்கும். என்னைப் பொருத்த வரையில் இவருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் ஒரு ஒற்றுமை. இருவருமே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினார்கள். பல புதிய முயற்சிகள் செய்திருக்கிறார்கள். சின்ன வயதில் ஊரில் நூலகத்தில் ஒரு புத்தகம் தான் எடுக்க முடியும். அதனால் தெருவில் நாலைந்து வானரங்கள் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு புத்தகங்கள் எடுப்போம். இவருடைய புத்தகங்களை ஒன்றுக்கு மேல் பார்த்துவிட்டால் ஒளித்து வைத்துவிடுவோம். அந்த இடம் எங்களுக்கு மட்டும் தான் தெரியுமாகையால் நாங்கள் படிக்கும் வரை வெளியே யாரும் எடுக்க முடியாமல் செய்துவிடுவோம். கடைசியில் ஒரு நாள் லைப்ரரியன் கண்டுபிடித்து வாங்கிக் கட்டிக் கொண்டு அதிலிருந்து நாங்கள் வந்தாலே அட்டெண்டர் பறக்கும் படை மாதிரி கூடவே வந்து நோட்டம் விடுவார். அதெல்லாம் ஒரு த்ரில்.நிறைய பேர்கள் மாதிரி இவருடைய ஸ்ரிரங்கத்து தேவதைகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

4.கல்கி/ பொன்னியின் செல்வன் - இவருடைய இந்த நாவலின் பிரம்மாண்டம் இன்னும் மனதிலிருக்கிறது. சரித்திர கால நாவல்கள் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டிருந்த என்னை (சரித்திர கால திரைப்படங்கள் விஷயமே வேறு இன்னமும் விரும்பிப் பார்ப்பேன் :) ) பொன்னியின் செல்வன் தலைகீழாக மாற்றி விட்டது. பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஒரே தடவையில் நூலகத்திலிருந்து எடுத்துவந்து கொடுத்த இருப்பத்தி ஓரு நாள் கெடுவில் ஐந்தாம் பாகம் முடிப்பதற்குள் கெடு முடிந்துவிட்டது. ரினியூ செய்வதற்க்கு தடையாக யாரோ ரிசர்வ் செய்திருந்தார்கள். புத்தகத்தை திரும்பக் குடுக்காமல் ஃபைன் கட்டிக் கொண்டே படித்து முடித்து தான் திரும்பக் கொடுத்தேன். பைன் கட்டி படித்த ஒரே புத்தகம் இது ஒன்று தான் இதுவரைக்கும். சிவகாமியின் சபதமும் நன்றாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் அளவுக்குப் பிடிக்கவில்லை.

5.ஆர்.கே.நாராயணன் - நான் இங்கிலிபிஸ் புத்தகங்கள் எல்லாம் படிப்பதே இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் ட்ரெயினில் ஒரு இங்கிலீஸ் ஃபிகர் ரெகுலராய் வருகிறதே ஃபிலிம் காட்ட தோதாய் இருக்கும்மே என்று ஊருக்கு போயிருந்த போது ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்" வாங்கி வந்தேன். மிக அருமையான புஸ்தகம். என்னை மாதிரி ரெபிடெக்ஸ் விட்டேத்திகளுக்கும் புரியும் படி எளிய ஆங்கிலத்தில் அருமையாக எழுதியிருப்பார். படிக்க ஆரம்த்தவுடனே மிகவும் பிடித்து விட்டது. ஆர்.கே.நாராயணனின் எழுத்து மந்திரத்தில் ஃப்லிம் காட்ட வேண்டிய கடமையை மறந்து உண்மையாக ஊன்றிப் படித்து அந்த ஃபிகரையும் கோட்டைவிட்டேன். பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு அப்புறம் மீண்டும் ட்ரெயினில் தமிழ் புத்தகங்களுக்கே மாறிவிட்டேன்.

6. சாவி - வாஷிங்டன்னில் திருமணம் - இதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். சின்ன வயதில் புத்தகங்களில் வருவதைப் பார்த்து தெருவில் மாமிகள் பூரித்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் படித்ததில்லை. இங்கு எங்கள் லைப்ரரியில் கிடைக்கவில்லை. யாரவது கடன் தந்து உதவினால் அடுத்த ஜென்மத்தில் நீங்களும் (யவனராணி தவிர்த்த) சாண்டில்யன் நாவல் கதாநாயகனாகவோ/நாயகியாகவோ பிறப்பீர்கள்.

7.பாலகுமாரன் - இவர் புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் இல்லை. ஆனால் இவரின் நடையில் சில உத்திகள் எனக்குப் ரொம்ப பிடிக்கும். ஆன்மிகமும் அறிவுரையும் மிகைப்பட்டு இருக்கும் இவரின் சில புத்தங்களினால் இப்பொழுது இவர் புத்தகங்களை ரொம்ப படிப்பதில்லை. ஆனால் இதற்கு முற்பட்ட இவரின் சில நாவல்கள் மனதை பிசைந்திருக்கின்றன.

இது தவிர சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ்குமார், பாலகுமாரன் என்று எல்லாரையும் படிப்பேன்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விண்ணப்பம் சிவாஜி நடித்த "ராஜ ராஜ சோழன்" படம் எங்காவது டவுண்லோட் செய்யக் கிடைக்குமா? நானும் இந்த டி.வி.டிக்கு நாயா பேயா அலையறேன் கிடைக்க மாட்டேங்குது.

மற்றபடி உங்கள் ஆர்வங்களையும் உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் அறிய ஆவலாய் உள்ளேன். உங்கள் பதிவிலோ/ பின்னூட்டத்திலோ தெரிவியுங்களேன். உங்களுக்குப் பிடித்த வித்தியாசமான புத்தங்களையும் தெரிவியுங்களேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது படிக்க வசதியாக இருக்கும்! நன்றி.

22 comments:

sriram said...

Hey Ram,
This is a good one from you. Itthanai serious topicai comedy yodu ezhutha unnal (hope i can take this liberty) thaan mudium.
I used to read Balakumaran, Pattukottai, subha, rajesh kumar, sujatha and saavi earlier, but reading the writings of Dubukku only these days. I dont get to do heavy readings these days due to the schedule / availability of Tamil books. But reading your posts regulary compensates for that. Keep up the good work, only thing is that you have to be more regular with the posts, atleast once in a week / 10 days.
Endrum Anbudam

பாலராஜன்கீதா said...

நீங்கள் என்ன என்னுடைய clone-ஆ ?
:-)
ஆனால் லேபிள் மட்டும் செயின் திருட்டு. எல்லாப்புத்தகங்களையும் அப்படித்தான் படித்தீர்களா ?
:-)

Anonymous said...

Raja Raja Cholan film indha site-la irukum, we downloaded once. Idhuku u've to install the s/w Azureus. Ahuvum illama someone shud seed the torrent of the film (right now there r 7 seeders). The site is http://tamiltorrents.net/ and the link http://www.tamiltorrents.net/forums/forumdisplay.php?f=17 will take you to the page where the film is posted.

Regards
Arvinth

வல்லிசிம்ஹன் said...

நாங்க சொல்லணுனு நினைக்கிறதை நீங்களே சொல்லிட்டீங்க.
தி.ஜானகிராமன் படிக்கலியா இன்னும்.
அவரோட அம்மா படிக்கவும்.
அப்புறம் நீங்களே எல்லாவற்றையும் படித்துவிடுவீர்கள்.

ஏ.எஸ்.பியோட சின்னம்மா நன்றாக இருக்கும்.
இன்னும் சத்தியப்பிரியன் நாவல்கள்
கி.ராஜநாராயணன் சார் புத்தகங்கள்
எல்லாமெ இண்டரஸ்டிங் தான்.
ஜெயகாந்தனுடைய யுகசந்தி ரொம்பவுமே நல்லா இருக்கும்.

Vino said...

You must read Jayamohan's Pin thodurum nizhalin kural and Naangavathu kolaii(jayamohan use to mime all the authors it is really funny).. I havn't read the other works of Jayamohan's but it is worth trying these two...
About Kalki.. there is no second opinion about your views I also personally feel...Ponniyin Selvan is unbeatable....for no reasons i don't like Balakumaran not sure why though...Vasanthi Sirukathaigal...Pa.Va. Chelladurai (I met him in person very nice person).

ACE !! said...

ஆர்.கே. நாராயணனின் swami and friends ஒரு அருமையான புத்தகம்.. முடிந்தால் படித்து பாருங்கள்.. நம் அனைவரின் சிறு வயது நிகழ்ச்சிகள் கண் முன் நிறுத்தும் ஒரு எளிமையான கதை..

Anonymous said...

Raja Raja Chozhan - DVD Rip.
http://www.tamiltorrents.net/forums/showthread.php?p=263126

சீக்கிரம் ஜோதியில் ஐக்கியமாகவும். இல்லாவிட்டால் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.

JVC said...

Dubbukku, appuram enna, indha vaaram 'Raja Raja Cholan'-a poettu thaaka vendiyadhu thaana!

இலவசக்கொத்தனார் said...

ராசா,

இதெல்லாம் நாம ஒரே தண்ணியைக் குடிச்சு வளர்ந்ததாலா? லிஸ்ட் அப்படியே இருக்கே!! இல்லை நம்ம பள்ளி நூலகத்தில் இருந்த புத்தகங்களின் இன்ப்ளூயன்ஸா?

ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்ச்சர், ரொஆல் டால் மட்டும் சேர்த்துக்கணும். அப்புறம் சிறு வயது இலக்கியமான எனிட் ப்ளைட்டன். ஆஸ்டரிக்ஸ், டின் டின் காமிக்ஸ்.

இப்படி கொஞ்சம் லிஸ்ட் பெருசா ஆகணும். அந்த காலத்தில் நானும் நம்ம நண்பர் ஒருவரும் யாருக்கு நூலக பதிவேட்டில் அதிக பக்கங்கள் எழுதப்படுகிறது என போட்டி போட்டு படித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது!!!

dubukudisciple said...

Guruve...
Naan athigam sandilyan padithathu illai.. matra ellam padithu irukiren..Sivagamiyin sabadam kooda nanraga irukum..
http://dubukku.blogspot.com - idu kooda padika nanra irukum naan sibarisu seigiren..neengalum padithu parungalen...
www.nilacharal.com idil nee naan thamirabarani endru oru thodar varugirathu aduvumnanraga iruku..
Sydney sheldon avargalin kadaigal arumaiyaga irukum.. http://www.esnips.com/web/eb00ks
inge padikalam avaigalai

நந்தா said...

சாண்டில்யனின் மன்னன் மகள் படித்து விட்டீர்களா? மாஸ்டர் பீசுங்க அது. இன்னும் பல புத்தகங்கள் பேரை சொல்லலாம். அத்ற்குப் பதில் முடிந்தால் இதைப் பார்த்து விடுங்கள்.

http://nandhakumaran.blogspot.com/2007/05/blog-post.html

Anonymous said...

hi.... unga library la tamil books laam kedaikkudha? paravaa illaiye? anga Sujatha-vum irukkaa? vandha unga perla eduthuttu book-a post pannidalaama? - UmaKrishna

Anonymous said...

Vairamuthuvin - Kallikkaattu idhigaasam matrum Karuvaachi Kaaviyam padhithu paarungal.

Ungalai veru oru ulagirkku kondu sellum padaippugal avai.

காயத்ரி சித்தார்த் said...

//பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு அப்புறம் மீண்டும் ட்ரெயினில் தமிழ் புத்தகங்களுக்கே மாறிவிட்டேன்.//

என்ன பதிவு போட்டாலும் உங்க குறும்புக்கு மட்டும் குறைச்சல் இல்ல!

DesiGirl said...

கலக்கல் லிஸ்ட் போங்கோ! (வாஷிங்டனில் திருமணம் அடுத்த முறை ஈஸ்ட் ஹாம்க்கு வரும் போது குடுக்கறேன்.)

ulagam sutrum valibi said...

டுபுக்கு சாரே,
கடவுள் சித்தமிருந்தால் இந்த மாத கடைசில் லண்டன் வருவேன்,விரும்பினால் உங்கள் தொலை பேசியின் எண்ணை கொடுங்கள், வேண்டிய நூலைக் கூறினால் இந்தியாவிலிருந்து திரும்பும் போது கொண்டுவருகிறேன்.

Dubukku said...

Sriram - அட நீங்க ரொம்ப புகழறீங்க..இவ்வளவுக்கெல்லாம் தகுதியானவனா தெரியல (இந்தப் படமும் போடனும்ல :) நன்றி. அடிக்கடி போடறதுக்கு முயற்சி செய்யறேன்

பாலராஜன்கீதா- ஹய்யோ பொதுவில் வைத்துக் கேட்காதீர்கள் :)) செயின் போஸ்டிங்கெல்லாம் இந்த மாதிரி லேபிள் செய்திருக்கிறேன் :)

Arvinth- ரொம்ப நன்றி. ஆனா டாரன்ட் என்னுடை ஆபிஸ் லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யமுடியாது. வேறு முறையில் முயற்சிக்கிறேன். But many thanks for the link.


வல்லி- வாங்க. மரப்பசு படித்திருக்கிறேன். மோகமுள் படம் ரொம்ப பிடித்தது அதனாலேயே படிக்கவில்லை. மற்ற புத்தக பரிந்துரைக்கு மிக்க நன்றி. கிடைக்கும் போது எடுத்துப் படிக்கிறேன்.

Dubukku said...

Vino- ஜெயமோகன் எழுதை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். பரிந்துரைக்கு மிக்க நன்றி இந்த புத்தங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

ACE- ஆங் அந்த புத்தகம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். கண்டிப்பாய் படிக்கிறேன்.மிக்க நன்றி.

அனானி - அண்ணே ரொம்ப ரொம்ப நன்றி. வர்றேன் சீக்கிரம் வரேன் :))

JVC - பார்க்கனும்ங்க...டாரெண்ட் என் லேப்டாப்ல கொஞ்சம் பிரச்சனை அதான் யோசிக்கிறேன்.

இலவசக்கொத்தனார்- அண்ணே உங்கள மாதிரி இங்கிலிபிஸில ரொம்ப படிக்கிலியே..அதான் இன்னும் மக்கும் பயலா இருக்கேன். இதில் பாதிக்கு மேல் (சுஜாதா தவிர்த்து) இங்க லண்டன் வந்தப்புறம் படித்தது.

dubukudisciple - ஹீ - கீ அந்த லிங்குக்கு மிக்க நன்றி. (நம்பளப் பத்தி சொன்னதுக்கும்...நன்றி... கூச்சமா இருக்குங்கோவ்)

நந்தா- நான் இங்க நுனிப்புல் மேய்ஞ்சிருக்கேன்...நீங்க பிரிச்சு மேய்ச்சுட்டீங்க...கலக்கலா எழுதியிருக்கீங்க நல்ல ஒரு லிஸ்ட்.

Dubukku said...

Uma Krishna - ஓ கிடைக்குது. இங்க கிடைக்கிற புத்தகங்களை லிஸ்டப் பார்த்தீங்கன்னா அரண்டு போயிருவீங்க. ஓ என் பேர்ல எடுக்கலாமே...ஆனா பழி வாங்கிட மாட்டீங்களே??? :))

அருண் - பரிந்துரைக்கு நன்றி. இங்க லைப்ரரியில் கிடைக்கும், அடுத்த முறை படிக்கிறேன்.

காயத்ரி- ஹீ ஹீ சும்மா டமாசு...நான் நல்ல பையன்ங்க....

DesiGirl- யெக்கா..நன்றியக்கா...இந்த மாதிரி பளாக்குல போட்டுத் தான் நல்ல நல்ல புஸ்தகமெல்லாம் யெக்காக்கள் வழியா கிடைக்குது...மறந்துடாம கண்டிப்பா எடுத்துட்டு வாங்க..

ulagam sutrum valibi - மிக்க நன்றி மேடம். உங்க மெயில் ஐ.டி. குடுங்களேன் மெயில் பண்றேன். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. Or email me at r_ramn at yahoo dot com

csk said...

sithira pavai naval padichu parthudu (munnadiyea padichurunthalum) enaku kandipa mail pannunga sir unga commant ah nan parkanum

Anonymous said...

sir unga comments ok aana dubukku very bad word ungaluku artham theriyanumna second letterai firstla pottu paarunga athanala vera peru maathunga !my request! saa.kanthasamy ,subramanya raju, endamoori veerendranath (tamil:suseela kanagathurga) ithellam interesta irukkumnu ninaikiren anga eppadiyo?

Anonymous said...

Vengaiyin maindhan is also a wonderful novel.

Post a Comment

Related Posts