Monday, June 18, 2007

டைவேர்ஸ் வாங்கலாம் வாங்க

கல்யாணமான புதிதில் வெளிநாட்டில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, லைசன்ஸ் வாங்கி, பெண்டாட்டியை முன் சீட்டில் உட்கார வெச்சு "இந்தாம்மா ராஜாத்தி இந்த மேப்பைப் பார்த்து கொஞ்சம் வழி சொல்லும்மா கண்ணு"ன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்தோம் என்றால் போற இடத்துக்கு போய் சேருவோமோ இல்லியோ பெரும்பாலும் வழியிலயே வக்கீலைப் பார்த்து டைவேர்ஸ் அப்ளிகேஷன் குடுத்தாலும் குடுத்திருவோம். அதுவும் சந்தும் பொந்துமா புகுந்து போற ரூட்டுக்கு மேப்ப பார்த்து வழி சொல்லச் சொன்னா வள்ளலார் பொண்டாட்டி கூட விதிவிலக்கு கிடையாது. போற வழி ஃபுல்லா ஒரே லவுஸ்தான் போங்க.

நான் லைசன்ஸ் வாங்கின புதுசுல நடந்த அலம்பல் கொஞ்ச நஞ்சம் கிடையாது(இப்பவும் ஒன்னும் குறைச்சல் இல்லை). ரொம்ப நாள் வரைக்கும் ரவுண்ட் அபவுட்டுக்கு பயந்தே இருக்கிற டவுண விட்டு வெளிய போகவே இல்லை. எல்லைச்சாமி காவல் கிடக்கிற மாதிரி ஒரு எல்கைக்கு உள்பட்டே கார ஓட்டுவது என்று கொள்கை வைத்திருந்தேன். இதுல ரெண்டு தெரு தள்ளி இருக்கிற கடைக்குப் போகனும்னா கூட தங்கமணி முன்னாடி சீட்டில் உட்கார்ந்து கூடை பின்ன ஆரம்பித்து விடுவார். அடப்பாவி மக்கா இதெல்லாம் உனக்கே அடுக்குமா இந்த கார மெனுபாக்ஃசர் செஞ்சவன் பார்த்தா கண்ணீர் விடுவான்மான்னு சொல்லியும் கேக்கிற மாதிரி இல்ல. என் பெண்ணுக்கு வேறு நான் போகிற ரூட்டு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சரி கொளுகையை கொஞ்சம் தளர்த்தி நேர் கோட்டில் நூல் பிடிச்ச மாதிரி இருக்கிற அடுத்த ஊருக்கு போயிட்டு வருவோம்ன்னு ஒரு நாள் கிளம்பி போய் அதுவும் விபரீதமாகி தொலைந்து போய் அந்த இடத்துல இருக்கிற நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து வழிகாட்டி "இருந்தாலும் இந்த ரூட்டுல கூட தொலைஞ்சு போறதுக்கும் ஒரு திறமை வேணும்ன்னு" என்று வழிகாட்டியதோடு குடும்பத்தில் விளக்கேற்றியும்வைத்து விட்டுப் போய்விட்டார். விளக்கு பற்றி எரிந்து ஒரே லவ்ஸாகிவ்ட்டது.

அப்புறம் சமாதானமாகி ரவுண்டபவுட்டில் ஒரு பரிகாரத்தை பண்ணி விட்டு திரும்பவும் எங்க எல்லைக்கு உள்ளயே வலம் வர ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேறி எல்லா இடங்களுக்கும் சென்று வர ஆரம்பித்தோம். ஆனாலும் போகிற வழியில் ஏகப்பட்ட லவ்ஸ் கண்டிப்பாக இருக்கும். இண்டர்நெட்டில் போகவேண்டிய இடத்துக்கு ஸ்டெப் ஸ்டெப்பா வழி சொல்லும் தளங்களிலிருந்து வழியை எடுத்துக் கொண்டு போனாலும், ரெண்டு ஸ்டப்பை முழுங்கிவிட்டு முந்தின லெஃப்டிலேயே ரைட்டுக்கு வழி சொல்லும் போதும், இந்தப் பக்கம் திரும்பனும் என்று விரல் ஒரு திசையும் விரலுக்கிடுக்கில் இருக்கும் பேனா நேரெதிர் திசையிலும் வழி காட்டும் போதும், பாதி தூரம் வரைக்கும் ஸ்டான்ஸ்டட் ஏர்போர்ட் குறியீட்டைப் பார்த்து போகனும் என்று சொன்னால், எதுவரைக்கும் என்று தெரியாமல் ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்ட்டையே முழுவதும் பார்த்துக் கொண்டு போய் நேரே ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்டில் பார்க் செய்துவிட்டு, "நீ தானே சொன்ன?" என்று பழியை நைஸாக மாற்றிப் போடும் போதும், போட்டிருக்கும் ரூட்டுக்கும் போற ரூட்டுக்கும் சம்பந்தமே இல்லையே என்று வெளியாளிடம் வழி கேட்டால்...நல்லவேளை வழி கேட்ட இன்னும் அஞ்சு நிமிஷம் நேரா போய் பீச்சாங்கை பக்கம் திரும்பினா ஃபிரான்சே வந்திரும்" என்ற எகதாளத்தை கேட்டுக்கும் போதும், "போதும்டா சாமி வழி சொல்லி சொல்லி...அடுத்த ஜென்மத்துல பஸ் ட்ரைவர் பொண்டாட்டியாவோ இல்லை காருக்கு தனியா செஃப்பார்(ட்ரைவர்) வெச்சிருக்கவன் பொண்டாட்டியாவோ தான் வாக்கப்படனும்...கார்ன்னு தான் பேரு, ஏறினோமா ஜாலியா பராக்கப் பார்த்தோமா..பாட்டு கேட்டோமான்னு இருக்கா...வீட்டில தான் போறாதுன்னா இங்கயும் இந்த இழவ கட்டி அழவேண்டியிருக்கு" என்ற அங்கால்ய்ப்பைக் கேட்கும் போதும் காரைச் சொல்லுகிறாளா இல்லை நம்மைத் தானா என்பது விளங்காவிட்டாலும் விவேகானந்தர் ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை என்பது விளங்கியது.

இல்ல எங்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை...நாங்க இப்போ சேட்நேவ் வாங்கிட்டோம்ன்னு சொன்னீங்கன்னா அடுத்த பரீட்சை ஜோடிப் பொருத்தம் போட்டியில் தான். இங்கயும் டைவேர்ஸ் எக்ஸ்பிரெஸ் சர்வீஸ் தான். கல்யாணமான புதிதில் கசகசவென்று எப்பவும் வியர்த்து கொட்டுகிற சென்னையின் கொதிக்கிற வெய்யில் கூட ஏஸி போட்ட தேவலோகமாக தெரிந்த பெரியவர்கள் சொன்ன முப்பது நாள் கெடுவில் இருந்த காலத்தில், ஆபிஸில் ப்ளாகெல்லாம் இல்லாத நேரத்தில் நாங்களெல்லாம் உழைத்து ஏதோ லாபம் பார்த்துவிட்டார்கள் என்று ஒரு நாள் கொண்டாட்டம் ஏற்பாடாகியிருந்தது. கொண்டாட்டம்ன்னா பாட்டு பாடினோமா ஆட்டம் ஆடினோமா, கண்டபடி தின்னோமா கக்கூசுக்குப் போனோமான்னு இல்லாம போட்டி வைக்கிறேன்னு ஜொடி பொருத்தம் வேற வைச்சுட்டாங்க.

நான் ஆபிஸில் வழக்கமாக கடலை போடும் பெண்களெல்லாம் இதை விட்டா சான்ஸ் கிடைக்காது என்று எங்கள் பெயரை கொடுத்து மொத்தமாக பழிவாங்கிவிட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ஆபிஸில் காதலித்துக் கொண்டிருந்தவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள். காதலிக்கும் வேகமென்ன கல்யாணமான சோகம் என்ன..இரண்டும் போட்டி போடமுடியுமா? போட்டி நடத்தினவர்கள் முதல் ரவுண்டில் டெஸ்ட் எழுதச் சொல்லிவிட்டார்கள். கேள்விகளை பார்த்த உடனேயே நம்ம லட்சணம் தெரிந்துவிட்டது. பெண்டாட்டியின் பிறந்தநாளை கேட்டாலே பாத்ரூமில் தாள்பாழ் போட்டுக்கொண்டு பத்து நிமிஷம் யோசிக்கனும் இந்த லட்சணத்தில் மாமியாரின் பிறந்தநாளைக் கேட்டிருந்தார்கள். என்னம்மோ தெரிந்து மறந்த மாதிரி ரொம்ப யோசித்ததில் பத்தாவது பரீட்சையில் நியாபகத்துக்கு வராத இந்திய நேஷனல் காங்கிரஸ் ஆரம்பித்த தேதி முதற்கொண்டு புலப்பட்டதே தவிர இதற்கெல்லாம் வழியே தெரியவில்லை. அடுத்து மாமனார் மாமியாரின் கல்யாண நாள் கேட்டிருந்தார்கள். சரிதான்..இதெல்லாம் ஒரு மார்க்கமாய் போகிறது..நமக்கு ஆவுறதுக்கில்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. சரி வழக்கம் போல நம்ம திறமைய காட்ட வேண்டியதுதான்னு பக்கத்துல உட்கார்ந்திருந்தவனப் பார்த்து பிட் அடித்துவிட்டேன்.

காதல் பண்ணிக்கொண்டிருந்த ஜோடியைத் தவிர என்னை மாதிரி கல்யாணமான கபோதிகள் எல்லாரும் திரு திரு தான். போட்டி நடத்துபவர்கள் இந்த சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் "டைம் அவுட்" சொல்ல, அதான் கல்யாணமான அன்னிக்கே தெரியுமேன்னு பேப்பரை கொடுத்துவிட்டேன்.போட்டி நடத்தினவர்கள் ஏதோ பொழச்சு போகட்டும்ன்னு விடாமல் எல்லார் விடைகளையும் மைக்கில் கப்பலேத்த ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளை தங்கமணியும் என்னை மாதிரி சுதந்திர தின தேதிகளை போட்டிருந்ததால் தப்பித்தேன். ஆனால் அடுத்த ரவுண்டில் தங்கமணிக்கு பிடித்த கலரென்ன...தங்கமணியிடம் எத்தனை ஜோடி செருப்பு இருக்குன்னுலாம் ரொம்ப டெக்னிக்கலாய்ப் போய்விட்டார்கள். செருப்பு ஜோடி பிரச்ச்னையில் மேடையிலேயே "அடி செருப்பால" ரெண்டு மூனு ஜோடி தகராறு ஆரம்பித்துவிட்டது. அடேய் எங்கப்பா!! இந்த மாதிரி போட்டியில முக்கியமான இடத்துல தப்பு விட்டோம்ன்னா பெண்டாட்டிகள் அப்பிடியே சிரித்துக்கொண்டு கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள், பிரகாஷ் ராஜெல்லாம் பிச்சைவாங்கணும்.

இங்கே லண்டனிலும் போன பொங்கல் பார்ட்டியில் இந்த மாதிரி ஒரு போட்டியை தோழி உமா அண்ட் தீபா நடத்தினார்கள். ஜாலியாக இருந்தது(உஷாராக அவர்கள் இரண்டு பேரும் கல்ந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்). முதல் இரண்டு ரவுண்டுகள் சேர்ந்து பலூன் ஊதுவது, பொட்டு வைப்பது என்று ஈஸியாக இருந்தது. அதெல்லாம் இடது கையாலயே அசால்ட்டா செய்வோம்ல. டாப் ஐந்தில் தேறி ஒரு வேளை நமக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கிறதோ என்று எங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. அடுத்த ரவுண்டில் மனைவி கணவனுக்கு டையும், கணவன் மனைவிக்கு புடவையும் கட்டி விட வேண்டிய சேலஞ்சிங்கான ரவுண்ட். (புடவை - ஏற்கனவே அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தான்யா). புடவை கட்டத் தெரியுமென்றாலும் அனுபவம் ப்ளீட் வைப்பது வரை தான் என்பதால் புட்டுக்கிச்சு. நல்ல வேளை தப்பித்தோம் அடுத்த ரவுண்டில் உங்கள் மனைவியை நீங்கள் முதன் முதலாக சந்தித்த போது என்ன கலர் நெயில் பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார் போன்ற ஆப்பு வைக்கும் கேள்விகள் கேட்டு பெண்ட் நிமிர்த்திவிட்டார்கள். ஏற்கனவே இன்னமும் வீட்டில் அதெப்படி "சலங்கை ஒலி" ஜெயப்பிரதா புடவை கலர் மட்டும் நியாபகம் இருக்கும்? ஆனா நீங்க வாங்கிக் கொடுத்த தலை தீபாவளி புடவைக் கலர் மட்டும் மறந்து போகும்?"ன்னு ட்ரில் வாங்கிக் கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் விட்டுலயே டெய்லி ஜோடிப் பொருத்தம் டெஸ்ட் தான்.

பி.கு - வருத்தப்படாத வாலிபர் சங்கம், கவலைப் படாத காரிகையர் சங்கம், பயமறியா பாவையர் சங்கம்ன்னு எல்லோருக்கும் சங்கம் இருக்கு. ஹூம் நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?

55 comments:

இலவசக்கொத்தனார் said...

//நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?//

எதுக்கும் வீட்டில் பர்மிஷன் கேட்டுட்டு வந்து சொல்லறேன். சேரவா வேண்டாம்மான்னு.

Sowmya said...

நாங்க ரொம்பவே ஸ்பீட்ல...ஏற்கனவே கல்யாணமான கபோதினிகள் சங்கம் ஆரம்பிச்சிடோம்ல..சங்கத்துல தலைவி ரெடி (அடியேன் தான்..!) நல்ல செயலாளரத் தான் தேடிக்கிட்டு இருந்தோம்....இப்பத் தான் கிடச்சாங்க...

உங்கள் அகமுடையாள் எண்ணைச் சற்று அரற்றுக..! :P

Anonymous said...

I like to reserve a place if possible please consider for any position in the union (have to many experinces and knowledge)

Sevvanthi Thasan

Boston Bala said...

:)

ACE !! said...

தல, உங்க பழைய கார் ஓட்டிய போஸ்ட தான் தூசி தட்டு போட்டுடீங்கன்னு நினைச்சேன்.. உங்க பழைய போஸ்ட்க்கு லிங்க் குடுத்துட்டு இத இன்னும் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாம்.. :)

உங்க கபோதிகள் சங்கத்துல என்ன பண்றதா உத்தேசம்?? அடி வாங்கினால் ஒத்தடம் கொடுப்பது எப்படினு கிளாஸ் எடுப்பீங்களா??

இந்த சங்கத்துக்கு வீட்ல பெர்மிஷன் கிடைச்சுதா??

ILA (a) இளா said...

//கல்யாணமான கபோதிகள் சங்கம்//
கொத்ஸ் சீக்கிரமா பதில் சொல்லுங்க. எப்படியும் வாங்கி கட்டிக்கப்போறோம் அப்புறமா எதுக்கு கேட்டுகிட்டு. சேர்ந்துட்டே வாங்கிகட்டிக்கிவோம். நான் ரெடீஈஈஈ.

//ரவுண்ட் அபவுட்டுக்கு பயந்தே இருக்கிற டவுண விட்டு வெளிய போகவே இல்லை//
நான் இப்படி பயந்து ஈஸ்ட் ஹேம் வரைக்குமே வந்துட்டேன், ஹீத்ரோவில இருந்து. அப்போ தங்கமணி மொறச்ச மொறைப்பு இருக்கே, நக்கீரன் மாதிரி சாம்பல்தான் ஆகலை. "இல்லேங்க, தோசை சாப்பிடத்தான் இங்கே வந்தோம்"னு சொல்லி ஆஸ்கார் வாங்கிட்டோம்ல. அப்புறமா இண்டெர்நெட் செண்டர் போயி மேப்பை பிர்ண்ட் அவுட் எடுத்து ஒரு புராஜக்ட் பிளானே பண்ணினோம்.ஆனாலும் திரும்ப போவும்போது சாப்பிட்டது ஜீரணமே ஆகிருச்சு.

வல்லிசிம்ஹன் said...

நாங்க கல்யாணமாகியும் பைத்தியம் ஆகாதவர்கள் சங்கம் ஆரம்பிச்சிருக்கோம்,
அதில கன்னபின்னா காரோட்டியின் மனைவிகள்னு ஒரு பிரிவும் உண்டு.
தங்கமணிகிட்ட சொல்லுங்க.

வழிதவறி வழியும் வெள்ளாடுகள்
மாம்ஸிடம் மாட்டிய மகானுபாவர்கள்னு
கணவர்களுக்கும் ஆஃபீஸ் ப்யூன் வேலைகள் கொடுக்கப்படும்.:-))))

பெருசு said...

ம்ஹும், இந்தப்பதிவ மட்டும் என்னோட
தங்கமணி படிச்சுதுண்ணா,
பத்த வெச்சுட்டியே பரட்டை!

க.க.ச, என்னியும் சேத்துக்கங்க.

Anonymous said...

\\\\
இந்த மாதிரி போட்டியில முக்கியமான இடத்துல தப்பு விட்டோம்ன்னா பெண்டாட்டிகள் அப்பிடியே சிரித்துக்கொண்டு கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள், பிரகாஷ் ராஜெல்லாம் பிச்சைவாங்கணும்.
\\\\\\\\\\\\\\\
Excellent!

Anonymous said...

//கல்யாணமான கபோதிகள் சங்கம்//
மொத ஆளா எம் பேர எழுதிகோங்கப்பா

ambi said...

உங்க கார் ஓட்டின பழைய போஸ்ட எதுக்கு இது கூட தூசி தட்டி போடனும்? :p

//நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன்//

அண்ணா! என்னையும் சேர்த்துகோங்க! மாத சந்தாவா? வருட சந்தாவா? எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல,
(இப்பவே) முடியல, வலிக்குது! :)

உண்மைத்தமிழன் said...

அருமையான வார்த்தை ஜாலங்கள்.. நகைச்சுவை வார்த்தைக்கு வார்த்தை கொப்பளித்துள்ளது.. பத்து நிமிடங்கள் தொடர்ந்து சிரிக்க வைத்ததற்கும், அடுத்து பதிவுன்னு ஒண்ணு போட்டோ இப்படி போடணும் என்று சிந்திக்க வைத்ததற்கும் எனது நன்றிகள்..

Anonymous said...

indha maadhiri prechanai varumnu thaan, pondatikku driving licence vaangi kuduthu naan paasenger seat.la savaari pandradhu !.
idhu varaikkum endha idathukkum seriyana time.ku ponadhilai, adhu vera vishayam !
vazhi thavari theriyama glasgow pakkam vandheenganakka, oru phone podunga.

Anonymous said...

சிவாஜி படத்துக்கான இணைப்பு
CD1
http://download.yousendit.com/855EB33608FA68B9
CD2
http://download.yousendit.com/B5AB057C0098EE71

பத்மா அர்விந்த் said...

ரங்கா
இதுக்குத்தானே இப்ப ஜிபிஎஸ் வந்தாச்சு. பத்து எக்சிட் நுழைஞ்சு சுத்துவோம் ஆனா வழிகேட்க மாட்டோம் னு ஏதாவது ஆடவர் குலம் சபதம் எடுத்திருக்கா ன்னு கேட்டு சொல்லுங்க.
நீங்களாவது காரோட்டினப்புறம் டைவோர்ஸ் பத்தியோசிக்கிறிங்க.ரங்கமணிகிட்ட டிரைவிங் கத்துக்க ஆரம்பிச்ச இரண்டாவது நாளே வக்கீல தேடின தங்கமணிகள் உண்டு.

பினாத்தல் சுரேஷ் said...

தலைவா...

எனக்கு க க ச விலே வெயிட்டான போஸ்ட்டு வேணும். என்ன தகுதின்னா கேக்குறீங்க? மனைவிக்கவிதைகள் பாடிய மறத்தமிழனாச்சே நான்!

பதிவு, வழக்கம்போல கலக்கல்! டைவர்ஸ் எக்ஸ்பிரஸ் ஓடாத ஊரே கிடையாது போல :)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<-- நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க -->
ithukkellam yosikkave koodathu. Nan ready.

Munimma said...

naangallum dc beltway 3 pradakshanam pannina anubhavam undu :-)

ithini pera m4 gumbal-la (m4: manaivikitta maattitu muzhikum manithan, illa madayan, seri manushan-ne pottukka)?

ulagam sutrum valibi said...

//பெண்டாட்டியை முன் சீட்டில் உட்கார வெச்சு "இந்தாம்மா ராஜாத்தி இந்த மேப்பைப் பார்த்து கொஞ்சம் வழி சொல்லும்மா கண்ணு"ன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்தோம் என்றால் போற இடத்துக்கு போய் சேருவோமோ இல்லியோ பெரும்பாலும் வழியிலயே வக்கீலைப் பார்த்து டைவேர்ஸ் அப்ளிகேஷன் குடுத்தாலும் குடுத்திருவோம்//அப்படியா செதி!!

நாகை சிவா said...

:-)))))

ulagam sutrum valibi said...

//இப்பவும் ஒன்னும் குறைச்சல் இல்லை). ரொம்ப நாள் வரைக்கும் ரவுண்ட் அபவுட்டுக்கு பயந்தே இருக்கிற டவுண விட்டு வெளிய போகவே இல்லை. எல்லைச்சாமி காவல் கிடக்கிற மாதிரி//
அது தானே பார்த்தேன்,நம்ப அவ்வளவுதான்.

ulagam sutrum valibi said...

// தங்கமணி முன்னாடி சீட்டில் உட்கார்ந்து கூடை பின்ன ஆரம்பித்து விடுவார்//
பிலாஸ்டிக் குடையா?ஸீகாராஸ் குடையா?வேர என்னா செய்ய முடியும் உபயோகமாய் இலுக்குமில்ல.

ulagam sutrum valibi said...

// என் பெண்ணுக்கு வேறு நான் போகிற ரூட்டு போரடிக்க ஆரம்பித்து விட்டது//
யப்பா இவரு பொண்ணுக்னா தெரியுது.அப்ப தங்கமணி?

ulagam sutrum valibi said...

//இருந்தாலும் இந்த ரூட்டுல கூட தொலைஞ்சு போறதுக்கும் ஒரு திறமை வேணும்ன்னு" என்று வழிகாட்டியதோடு குடும்பத்தில் விளக்கேற்றியும்வைத்து விட்டுப் போய்விட்டார்//
இப்ப புரியுத? தங்கமணி ஏன் குடை பின்ன கையோடு எடுத்துட்டு போராங்கன்னு.

ulagam sutrum valibi said...

//நல்லவேளை வழி கேட்ட இன்னும் அஞ்சு நிமிஷம் நேராபோய் பீச்சாங்கை பக்கம் திரும்பினா ஃபிரான்சே வந்திரும்//
பக்கத்து நாட்டு விசாவ எதுக்கும் கையோட வாங்கி வச்சுக்கங்க சாமி.

ulagam sutrum valibi said...

//விவேகானந்தர் ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை என்பது விளங்கியது.//
ஐய்யா!! கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை!!

ulagam sutrum valibi said...

//பிட் அடித்துவிட்டேன்//
அதுதான் நமக்கு கைவந்த கலையாற்றே.

ulagam sutrum valibi said...

//பார்வை பார்ப்பார்கள் பாருங்கள், பிரகாஷ் ராஜெல்லாம் பிச்சைவாங்கணும்.//

நீங்க என்ன நமித்தா வாட்டமா ஆட போறிங்க!!

ulagam sutrum valibi said...

//"கல்யாணமான கபோதி//
உங்க தங்கமணி உங்க கண்ணா இருந்து எல்லாவற்றையும் கவணிச்சுகிறாங்கன்னு சொல்லுறிங்க!!

ulagam sutrum valibi said...

//கல்யாணமான கபோதி//
உங்க தங்கமணி உங்க கண்ணா இருந்து எல்லாவற்றையும் கவணித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்?

Anonymous said...

romba romba rasikumbadiya irundhadhu.appa husband kitta car kathukittu thittu vangina engala madhiri ladies ellam kalyannamgi nondhu pona karigai sangamno illa paavapatta paavayar sangamno araambikkalama sir.veetukku veedu vasappadi,i hope you have got permission for the sangam.
nivi.

Anonymous said...

அட போங்க சார்.. ப்ரசாந்த்,ஷிரிகாந்த் கதையை சொல்லப் போரீங்க என ஆவலோடு வந்தேன் செம் காமெடி

ஒளி said...

அய்யா டுபுக்கு தங்கமனிகிட்ட எத்தனை ஜோடி செருப்பு இருக்குன்னு கரீட்டா சொல்லியிருப்பீரெ.....

துளசி கோபால் said...

உங்க சங்கத்துக்கு நானும் ஒரு டிக்கெட்டை வூட்டுலே இருந்து அனுப்பி வைக்கிறேன்(-:

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

தூள் போங்க, தலைப்ப பாத்துட்டு நான் கூட ஏதோ நல்ல விஷயம் போலன்னு வேகமா வந்து படிச்சேன்,

ஹும்...உங்களோட இந்த சங்கத்துல
பெண்(மணி)களுக்கு அனுமதி உண்டா? இல்லைனா தங்கமணிய அனுகினா போதுமா?

ஆமாம், உங்களோட டுபுக்கு வோர்ல்டுக்கு ஒரு செருப்பு(மட்டும்) தான் இருக்கு, மீதில்லாம் கூட போட்டுருக்கலாமே...

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

//"கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன்.//

உங்களோட இந்த சங்கத்த திறந்து வைக்க மகா சக்தியும், மலயாள பகவதியும் வருவாங்களா?

பாரதி தம்பி said...

//மாமனார் மாமியாரின் கல்யாண நாள் கேட்டிருந்தார்கள். சரிதான்..இதெல்லாம் ஒரு மார்க்கமாய் போகிறது..நமக்கு ஆவுறதுக்கில்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. சரி வழக்கம் போல நம்ம திறமைய காட்ட வேண்டியதுதான்னு பக்கத்துல உட்கார்ந்திருந்தவனப் பார்த்து பிட் அடித்துவிட்டேன்//

நல்ல காமெடி. சூப்பருங்கோ...

SurveySan said...

///// வருத்தப்படாத வாலிபர் சங்கம், கவலைப் படாத காரிகையர் சங்கம், பயமறியா பாவையர் சங்கம்ன்னு எல்லோருக்கும் சங்கம் இருக்கு. ஹூம் நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?/////

சூப்பர் ஐடியா. டக்குன்னு ஆரம்மிங்க. ரிப்பன் வெட்ட நான் வரேன்.
சீரியஸ்லி, எ மிலியன் டாலர் ஐடியா :)

சுந்தர் / Sundar said...

அனுபவம் ... பழசு ....
பதிவில் புதுசு ... !

Madhu Ramanujam said...

எப்படிங்க இப்படி ? சும்மா சொல்லக் கூடாது நகைச்சுவையை அள்ளி தெளிக்கறீங்க போங்க. நீங்கல்லாம் கல்யாணம் ஆனப்புறம் டைவர்ஸ் பத்தி யோசிக்கறீங்க. நம்ம போற போக்கை பார்த்தா கல்யாணம் ஆகாமலேயே டைவர்ஸ் ஆயிடும் போலருக்கு.

Anonymous said...

//பீச்சாங்கை பக்கம் திரும்பினா ஃபிரான்சே வந்திரும்//
// பெண்டாட்டியின் பிறந்தநாளை கேட்டாலே பாத்ரூமில் தாள்பாழ் போட்டுக்கொண்டு பத்து நிமிஷம் யோசிக்கனும் //
//இந்திய நேஷனல் காங்கிரஸ் ஆரம்பித்த தேதி முதற்கொண்டு புலப்பட்டதே தவிர //
-- edhai solla edhai vida, super post dubukks. unga k.k.sangathula krishna vum servaar kettu paarunga.
- UmaKrishna

sriram said...

Hey Ram
Such a fantastic / Hilarious post, was laughing continuesly for 15 mins, Ippavellam, thangamani naan thaniyay monitor parthu sirithu kondirunthal, edhuvum solvadillai, oru look- Enna Dubukku adutha post potacha- this time around I made her to read the post and she understood as why i keep laughing to myself looking at the laptop.
Naanellam Delhi la car ottinavan endra thenavattoda Car edutha,Boston Downtown mattrum sorrounding Freewayla Vandi otti Veedu vandhu seruvatharkul- Appa thavu theendudum, I really miss the autos on the road where you can roll the window down and ask for direction.
Endrum Anbudam

Anonymous said...

Anna,
"peechankai poona france vanthurukkum"- chancece illa anna,
suuuuuuuper.
cheers,
poolisamiyar

PPattian said...

எதேச்சையா ஒரு போஸ்ட்டை படித்தேன். இப்போ தொடர்ந்து ஒவ்வொன்னா படிக்கிறேன். காமெடி எல்லாமே க்ளாஸ்... பாத்ரூம் கதவை மூடிட்டு காமடிதான் யோசிப்பீங்களோ?

Aani Pidunganum said...

Dubuks,
Ennanga idhu, then & there samayathula thittu varudhey, adhu poradhaa kalyanamanavangaluku, idhula namma sangathu perula verah yenga nammala naamey thittikanum?
Eppapaar veetla thaaan kabothinu
Sindhiyungal thalaivareh...

Kalyanamana (ennanu oru nalla word fill pannunga) Sangam.

Note: Map paarkaradhu, route parkaradhu ellam vandi ootindey parthukaradhu, edhavadhu route maarinu ponaalum, rendaiyum ore nerathula route paarthu roundabout exit ellam edukumbodhu thappu aagaradhu sagajamnu solli oppethipaen...(oru nalla ennam, mathavangalukku help pannumeh indha idea)

Anonymous said...

kalyanam panninda indha maadiri lollu ellam irukkummnu munnadiye oru manual potta ennavaam? oru tharam edho new year programme-la 'best couple'kku maati vida periya thalaiga erpadu senjaanga. nalla velai, thalaivar yedho paanai odaikkaren potti, yaanai pudikkaren potti nnu odi poyi maanathe kaapathiyachu! illenna 'kappaleri poyachu' sruthi serama padiyirukkanum!

Dubukku said...

கொத்ஸ் - இதெல்லாம் முன்னாடியே கேக்கிறதில்லையா...எங்கூட்டுல குடுத்திட்டாங்களே !!!

சௌம்யா - அம்மணி வருக. நீவீர் நலமா? (சும்மா இப்படி பேசி ரொம்ப நாளாச்சு அதான்) இன்னும் வெயிட்டான போஸ்ட் வேணுமாம் :))

Sevvanthi Thasan- அடேய் எங்கப்பா உங்களுக்கு இருக்கும் தொண்டாற்றும் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் சேவை எங்களுக்குத் தேவை

பாஸ்டன் பாலா - அண்ணே வாங்க...எப்பவும் ஸ்மைலி மட்டும் போடுறீங்களே ஏதாவது விரதமா?;P

சிங்கம்லே ஏஸ் - பெர்மிஷன் கிடைச்சாச்சுல....கிடைக்காம போஸ்ட் போடுவோமா...இன்னும் சங்கதுல என்னென்ன பண்ணலாம்ன்னு முடிவு எடுக்கலை...மெம்பேர்ஸ்லாம் வீட்டுல கேட்டு சொல்றதுக்கு டைம் கேட்டிருக்காங்க

இளா - அது!!! சொன்னீங்க பாருங்க...ஐ.டி பிராஜெக்ட் கூட ஈசியா ப்ளான் பண்ணிரலாம்...இது இருக்கே...எப்படியும் தப்பிருதுங்க...கண்ட்ரோல் இசெட் இல்லாம கை வேற ஓடமாட்டேங்குது

Dubukku said...

வல்லிசிம்ஹன் - :)))) ஹா ஹா //கல்யாணமாகியும் பைத்தியம் ஆகாதவர்கள் சங்கம் // அதானே குடும்பத்துல ஒரு பைத்தியம் தானே இருக்க முடியும் :P

பெருசு - ஐய்யா சங்கத்துல சேருங்க எப்படி எஸ்ஸாகிறதுன்னு க்ளாஸ் நடத்தறேன்னு ஒருத்தர் சொல்லியிருக்கார் :)

அனானி - நன்றி ஹை :)

Pranni - அடாடா கள்ப்பணிக்கு நிறைபேர் துடிக்கிறாங்க போல

Ambi - டேய் போய் ஒழுங்கா எக்ஸ்பீரியன்ஸ் போட்டுட்டு வாடா..இன்னும் வாங்க வேண்டியது எவ்வளவு இருக்கு.அதுக்குள்ள எஸ்கேப் ஆகப் பார்கிற...:))

உண்மைத் தமிழன் - வாங்க...ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு.. :))

Bhaskar - ஆஹா....நம்ம சங்கத்துக்கு நீங்க தான் செகரட்டரி...:)) க்ளாஸ்கோவா கண்டிப்பா போன போட்டிருவோம்...(நம்பர் குடுக்காமலே இப்படி ஃபோன் போடச் சொல்றீங்களே நியாயமா?? :P)

Dubukku said...

அனானி - அண்ணே நன்றி ஆனா லிமிட் எக்ஸீட்டட்ன்னு திட்டறாங்க

பத்மா - ஐயய்யோ...சொல்லிக் கொடுக்கிறது எம்மாடி அட்வான்ஸ்ட் லெவல்...அதுல பயங்கர பிரச்சனைன்னு நிறைய கேள்விப் பட்டிருக்கேன். இங்க தெளிவா இருக்காங்க...கத்துக்க மாட்டோம்ன்னு :))

பினாத்தல் சுரேஷ் - வாங்க பினாத்தலாரே..உங்களுக்கெல்லாம் கேக்கிற போஸ்ட் குடுத்திருவோம் :)) ஆமாங்கோவ்...இது இண்டர்நேஷனல் எக்ஸ்பிரஸ் :))

சிவா - வாங்க வாங்க...கடமை உங்களை அழைக்கிறது :))

முனிம்மா - ஆமாங்க...இவ்வளவு பேர் இருகோம் பாருஙக..சும்மா மடையன்னே சொல்லலாம் :P

Dubukku said...

உலகம் சுற்றும் வாலிபி - தாயே தயை கூர்ந்து பொறுத்தருள் வேண்டும்...யெம்மாடி இப்படி வீறு கொண்டு எழுந்துட்டீங்களே..சின்னப் பையன் எதாவது தப்பு இருந்தா மன்னிச்சு விட்ருங்க...இவ்வளவு கமெண்டு போட்டு ஸ்கோர் ஏத்தி விட்ருக்கீங்க...உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கேன் :)) (மெயில் நீங்க தானே அனுப்பினீங்க...பதில் போட்டிருக்கேன் )

நாகை சிவா - :))

பூவண்ணன் - நன்றிங்க...

மாயக்கண்ணாடி - சொல்வோம்ல...அங்க எப்படி?? :)

துளசி - மேடம் டிக்கெட் கோபால் சாருக்கா உங்களுக்கா? :)

சுமதி - அம்மணிங்களுக்கும் அனுமதி உண்டுங்கோவ்...ஆனாலும் மேலே படிச்சு பாருங்க...பெண்களும் ஆரம்பிக்கிறாங்களாம் :) பகவதிக்கெல்லாம் சொல்லிவைப்போம்ல :))

ஆழியூரான் - நன்றி ஹை :)

சர்வே ஈசன் - அப்பிடீங்க்றீங்க..ஆரம்பிச்சிருவோம் :)

சுந்தர் - அதானே...வீட்டுக்கு வீடு ..:))

மதுசூதனன் - அந்த தப்பெல்லாம் பண்ணிடாதீங்க...இதெல்லாம் சும்மா டமாசு டமாசு :))

உமா - ரொம்ப நன்றி ஹை

ஐய்யைய்யோ வீட்டுல ஒன்னும் சொல்லலையே?? :)) நானும் இங்க ஆட்டோவ ரொம்ப மிஸ் பண்றேங்க...என்ன சௌகரியம் இல்ல?

போலிசாமியார் - வாடா...நீ கமெண்ட் போட்டது பத்தி ரொம்ப சந்தோஷம்..இதெல்லாம் பார்த்து பயந்துறதே..சும்மா டாமாசு... நீ பாட்டுக்கு லைன் விட்டுக்கிட்டு இரு :P

PPattian - வாங்க ரொம்ப நன்றிங்க உங்க கமெண்ட்டுகளுக்கெல்லாம். உங்களுக்கு பிடிச்சது பத்தி ரொம்ப சந்தோஷம்.

Dubukku said...

ஆணி - அடாடா ரொம்ப ஃபீல் ஆகிட்டீங்க போல...இதெல்லாம் நமக்கு புதுசா என்ன. :)) அந்த ஐடியா இன்னுமா ஒர்க் அவுட் ஆகுது உங்க வீட்டுல :))

தேசிகேர்ல் - எனக்குத் தெரியும்ங தலைவர் ரொம்ப உஷார் :)) இதுவரைக்கும் ஒன்னுமே கலந்துகிட்டது இல்லையா?? :))

Anonymous said...

secretary padhaviya ethukaradhukku mudhalla ammavoda permission vangikkaraen(enga veetu thangamaniya oru mariyadhaiyoda thaan koopidaradhu !).
ellarum padikara comment section.la phone number kudutha, namma makkal aedakoodama edhavadhu phone/SMS panni kudumbathula kuzhappatha undaakiduvaanga. adhanala mail ID anuppunga adhukku reply panidaraen !!

B o o said...

இந்த போஸ்ட எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியலை. இன்னிக்கு தான் படிச்சேன். எப்போதும் போல சிரிச்சு, சிரிச்சு வயிறு இழுத்துக்கிச்சு. என் பொண்ணு வேற நான் அழறேனா, சிரிக்கறேனான்னு தெரியாம முழிக்குது! சரியான போஸ்ட்! One of your best!

Itz me!!! said...
This comment has been removed by the author.
Itz me!!! said...

hi Ranga,,sirichu sirichu vayiru valichuduthu..tooooooo good.
Dharshna Sharath Kumar

Post a Comment

Related Posts