Wednesday, June 27, 2007

டைப்பு டைப்பு

"கரும்பு தின்ன யாராவது கூலி கேப்பாங்களா" என்று பிரின்ஸிப்பால் கேள்வி கேட்ட போது எங்களுக்கு ஒரு இழவும் புரியவில்லை. ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தோம். ப்யூன் முருகன் சம்பந்தமே இல்லாமல் ஒரு பத்து பேரை பெயர் வாசித்து பிடித்துக் கொண்டு நிப்பாடியிருந்தார். இதில் இரண்டு பெண்கள் வேறு அடக்கம். தனியாக கூப்பிட்டிருந்தால் பெல்லி டான்ஸர் மாதிரி நடுங்கிக் கொண்டிருந்திருப்பேன். கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்ததால் "யாருடா இங்க பிரின்ஸிப்பால்" தெலுங்கு பட ஹீரோ மாதிரி பராக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல பிரின்ஸிப்பால் இரண்டு நிமிடம் சொற்பொழிவாற்றிய பிறகு தான் விஷயம் புரிந்தது. நாங்கள் எல்லோரும் ஸ்கூல் சார்பாக டைப்ரைட்டிங்கில் லோயர் பரீட்சை எழுதவேண்டும்.

எங்கள் ஸ்கூல் சுற்றுவட்டாரத்திலயே கொஞ்சம் பெரிய ஸ்கூல் ஆகையால் நிறைய எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் இருக்கும். அதில் ஒன்று டைப்ரைட்டிங் க்ளாஸ். எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருந்த விமலா டீச்சர் தான் வந்து சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பார்ப்பதற்கு "விதி" திரைப்பட மனோரமா மாதிரி தான் இருப்பார். பேச்சும் மேனரிஸமும் அதே மாதிரி தான். கொஞ்சம் படபடவென்று பேசுவார் ஆங்கிலத்தில் பேசினால் ஆஃப் ஆகிவிடுவார்.. "ஏ பாய் கோ பாய் தேர், ஏ கேர்ல் கோ கேர்ல் தேர்" என்பதை மட்டும் அதிகாரத்தோடு ஆணையிடுவார். அதற்கு மேல் "எஸ் நோ" மட்டும் தான் பதிலாக வரும். அதனால் பள்ளியில் தமிழில் பேசக்கூடாது என்றிருந்த சட்டம் டைப்ரைட்டிங் க்ளாசில் மட்டும் வாய்தா வாங்கும்.

விமலா டீச்சருக்கு ஆங்கிலம் பற்றிய ஆதங்கம் நிறைய உண்டு. டீச்சருக்கு "மேம்" என்று கூப்பிட்டால் பெருமை எருமையில் ஏறிவிடும். கண்ணாடியை தூக்கிவிட்டுக்கொண்டு "யெஸ்ஸ்ஸ்" என்று ஸ்டைலாக உடனே வந்து சொல்லிக்கொடுப்பார். விமலா மேம் மட்டும் பரீட்சைக்கு சூப்பர்விஷன் போட்டால் பசங்கள் ஆங்கிலத்திலேயே அவரிடம் பேசுவது மாதிரி மற்றவர்களிடம் விடை கேட்பார்கள். விடை தெரிந்தவர்களும் அதே மாதிரி அவரிடம் பேசுவது போல் பதில் சொல்லுவார்கள். அப்புறம் மேம்க்கு சந்தேகம் வந்து "ஏ பாய் கோ பாய் தேர்" என்று உட்காரச் சொல்லிவிடுவார்.

ஒன்பதாவது வகுப்பில் மட்டும் தான் இந்தக் க்ளாஸ். அதனால் பசங்களுக்கு டைப் மெஷினை பார்த்தவுடன் கையும் காலும் பரபரக்கும். அனேகமா க்ளாஸில் எல்லோருமே ஒரு விரல் கிருஷ்ணாராவ் தான். ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு லொட்டு லொட்டு என்று அடி பின்னி எடுத்துவிடுவார்கள். "மேம் க்யூ எங்க மேம் இருக்கு, எம் எங்க மேம் இருக்கு" என்பது ரீதியான டவுட்டுகள் தான் பசஙக்ள் விமலா மேமிடம் கேட்பார்கள். அதில் பெரும்பான்மை ஹாஸ்டல் பையன்கள் - வீட்டிற்கு எழுதும் லெட்டருக்கு லொட்டி லொட்டி அட்ரஸ் அடிப்பார்கள்.

எனக்கு பிற்காலத்தில் நான் பெரிய ஆபிஸராக ஆகிவிடுவேன் என்று தெரியுமாகையால் என்னுடைய பியானோ, மற்றும் ட்ரம்ஸ் ஆசையை எல்லாம் டைப் மெஷினில் தான் தீர்த்துக் கொள்வேன். பேசிட், ரெமிங்டன் என்று இரண்டு விதமான மெஷின்கள் இருந்தன. பேசிட் அடிப்பதற்கு வசதியாக இருக்கும் ஓடாது. ஆனால் ரெமிங்டன் பூப்போல நழுவும். ஒழுங்காக அமுக்காவிட்டாலும் ஓடிவிடும். ஆனால் "ராஜா ராஜாதி ராஜா" பாட்டுக்கு ரெமிங்க்டன் மிஷினில் தான் கரெக்டாக டைப் தாளம் போட முடியும். பேசிட் மெஷினில் "மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத் தானே" பாட்டுக்கு மட்டும் தான் கரெக்டாக வரும். அதனால் அந்த பாட்டுக்கு மட்டும் பேசிட்டுக்கு மாறிக்கொள்வேன்.


டீச்சர் அடப்பாவிகளா இப்படியெல்லாம் அடித்தால் ட்ரம் போய்விடும் என்று கண்ணீர்விடுவார். கேட்டால் தானே. ஆனாலும் மெஷின்கள் ஸ்கூல் மெஷின்கள் என்பதால் சத்தம் போடுவதோடு நிப்பாட்டிக் கொள்வார். ரொம்ப அதிகமானால் "ஏ பாய் ஐ கோ பிரின்ஸிப்பால்" என்று மிரட்டுவார். எங்கள் பிரின்ஸ்பாலுக்கு ஸ்கூல் மேல் அதிக பாசம். நாங்கள் டைப்ரைட்டிங்கில் பிரித்து மேய்கிறோம் என்று டீச்சரை கூப்பிட்டு டைப்ரைட்டிங் லோயர் பப்ளிக் எக்ஸாம் எழுத பத்து பெயரை தயார் செய்யச் சொல்லிவிட்டார். டீச்சர் பிள்ளையார் சுழி போட்டு "யாரெல்லாம் எழுதப் போறிங்கன்னு" கேட்க லிஸ்ட் பிள்ளையார் சுழியுடன் நின்றி விட்டது. என்னாங்கடா விளையாடறீங்கன்னு மானாவாரியா பெயர் எழுத ஆரம்பித்துவிட்டார். "மேம் எனக்கு விரல்ல ப்ளட் கேன்சர்" என்று நான் எவ்வளவோ மன்றாடியும் டீச்சர் கேட்கவில்லை.

அடுத்த கட்ட நடவடிக்கையாக "ஐ கோ பிரின்ஸிப்பால்" என்று பிரின்ஸிபாலிடமும் போட்டுக்கொடுத்துவிட்டார். எப்பொழுதும் பீட்டர் மட்டுமே விடும் பிரின்ஸியும் அன்று கரும்புக்கென்ன கூலி எறும்புக்கென்ன வேலின்னு பழமொழியெல்லாம் சொல்லி "ஐ வாண்ட் சென்ட் பர்சன்ட் ரிசல்ட். சென்ட் பெர்சன்ட் ரிசல்ட் வாங்காட்டா அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, என்பேச்சை நானே கேக்க மாட்டேன்" என்று தமிழ் பட ஹீரோ மாதிரி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். வீட்டுக்கு வந்து மாமாவிடம் போட்டுப் பார்த்த "எக்ஸாம் ஃபீஸ் முப்பது ரூபாய்" ட்ரம்ப் கார்டும் வொர்க் அவுட் ஆகவில்லை. பிற்காலத்தில் டைபிஸ்ட் ஆவதற்காவது உபயோகமாக இருக்கும் என்று வழக்கம் போல "நல்ல கவனமா படி, கவனம் சிதறக்கூடாது" நேயர் விருபம் ஓட ஆரம்பித்துவிட்டது. கவனமா படிக்கலாம் ஆனால் "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாட்டெல்லாம் லோயர் பரிட்சை சிலபஸில் இல்லை மாமாவிடம் விளக்கியதில் அடுத்த தெருவில் இருக்கும் டீச்சர் வீட்டுக்கு அடிஷனல் க்ளாஸ் போகச் சொல்லிவிட்டார்.

நானும் இன்னொரு நண்பனும் டீச்சர் வீட்டுக்கு ட்யூஷன் போக ஆரம்பித்தோம். டீச்சர் வீட்டில் சொந்த மிஷின் என்பதால் ரொம்ப ஸ்ட்ரிக்ட். போதாதற்கு டீச்சர் வீட்டுக்காரர் வேறு இருப்பார். அவர் தான் அங்கு மெஷினுக்கெல்லாம் ஆல் இன் ஆல் அழகுராஜா. முதல் நாளே "மாசி மாசம்"க்கு தடா போட்டுவிட்டார்.ஸ்கூலுக்குப் போகவேண்டும் என்பதால் காலை ஆறு மணிக்கு க்ளாஸ். தூக்கக் கலக்கத்துடன் போய் கதவைத் தட்டினால் டீச்சர் வீட்டுக்காரர் தான் பல்தேய்க்காமல் வந்து கதவைத் திறப்பார். அதே ஊசல் வாய் நாற்றத்துடன் வந்து மெஷின் கவரை எடுத்து பேப்பர் போட்டுக் கொடுக்கும் போது வீட்டில் குடுத்த காப்பி குமட்டிக் கொண்டு வரும். டீச்சர் அவருக்கு நேர்மாதிரி. கொல்லைப் புறத்தில் அவர் பல் தேய்க்கும் போது "ஊவ்வ்வ்வ்ழ்ழ்....ழ்ழ்ழ்ழ்ழ்" என்று போடும் சத்தத்தைக் கேட்டால் நாக்கை கழற்றி வைத்துவிட்டு சிறுகுடல் வரைக்கும் பல் தேய்க்கிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம் வரும்.

ஒருவழியாக ஏ. எஸ்.டி. எஃப்.ஜி.எஃப் ஸ்பேஸ்பார் செமிகோலன் எல்.கே.ஜே.ஹெச்.ஜே சொல்லிக் கொடுப்பதற்க்குள் டீச்சருக்கு தாவு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் படிப் படியாக முன்னேறி ஒரு பாசேஜ் குடுத்து பார்த்து அடிக்கச் சொன்னார். முடித்து திருத்தும் போது பேப்பர் ரத்தக் களறியாக இருக்கும். "எப்பா இப்படியெல்லாம் அடிச்சா தேறாதுப்பா" என்று சின்சியராக சொல்லுவார். ஞாயிற்றுக் கிழமையும் போக ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்ச நாள் கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்துக்கெல்லாம் களாஸ் நேரத்தை மாற்றிக் கொண்டு கிரவுண்டில் போய் டைப்படித்தேன்.

முடிவாக எங்கள் பள்ளியிலிருந்து லகான் மாதிரி பத்து பேரும் போய் லோயர் டைப் பரீட்சை எழுதினோம். ஊரிலிருந்த ஒரு பெரிய அரசுப் பள்ளியில் பரீட்சை. டைப் பரீட்சைக்கும் யூனிபார்ம் அணிந்து கொண்டு போக வேண்டும் என்று எங்க ப்ரின்சிப்பால் இட்ட கட்டளையினால் நல்ல பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் என்று கொஞ்சம் மரியாதை கிடைத்தது. பாஸாகி வேலைக்கு போக வேண்டும் என்று லட்சிய வெறியோடு வந்திருந்த கூட்டத்திற்கு நடுவில் கூச்சமாகத் தான் இருந்தது. மொத்தம் பத்தோ பதினைந்தோ நிமிஷம் தான். ஒரு பத்தி குடுத்திருப்பார்கள். அதை அடிக்க வேண்டும். சுப்பர்வைசர் விசில் ஊதியவுடன் தட தடவென்று எல்லோரும் அடிக்க ஆரம்பித்தார்கள். மூன்று நிமிடம் கழித்துத் தான் பார்த்தேன். பேப்பர் நேராக லோட் செய்யவில்லை. டைப்ரைட்டரையும் குடுத்திருந்த பாசேஜையும் மட்டுமே பார்த்து அடித்ததில் பேப்பர் கீழே விழுந்தது கூட தெரியவில்லை. "நீயெல்லாம் பாஸ் பண்ணின மாதிரி தான் " என்று சுப்பர்வைசர் வந்து நக்கலாக எடுத்துக் கொடுத்தார்.

இரண்டு வாரங்கள் கழித்து ரிசல்ட் வந்தது. மிக ஆறுதலாக பிரின்சிபால் கேட்ட மாதிரி பரீட்சை எழுதிய பத்து பேரும் செண்ட் பர்சண்ட் ரிசல்ட் வாங்கியிருந்தோம். எல்லோருக்குமே ஊத்திக்கிச்சு. ஒருவேளை அவன் பாஸாகிடுவானோ இவன் பாஸாகிடுவானோ என்றிருந்த சந்தேகமும் ஒழிந்து மீண்டும் ஒரு கூட்டுப் பறவைகளாகி திரும்பவும் "மாசி மாசம் ஆளான பொண்ணு" ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அடுத்த பரீட்சை வருவதற்குள் பத்தாவது போய்விட்டதால் மாமாவுக்கு முப்பது ரூபாய் மிச்சமாயிற்று.

36 comments:

B o o said...

அந்த கடைசி பாரா டைப் அடிச்ச கைக்கு ஒரு டைப்ரைட்டரே வாங்கி குடுக்கலாம்! கலக்கிட்டீங்க போங்க.

சுந்தர் / Sundar said...

Wow ... அருமை யான பதிவு ...

CVR said...

LOL!! :-)))

Lakshman said...

//"மேம் எனக்கு விரல்ல ப்ளட் கேன்சர்" என்று நான் எவ்வளவோ மன்றாடியும் டீச்சர் கேட்கவில்லை.
//

இதெல்லாம் எப்படிங்க தோனுது? உங்க கிட்ட ப்ளாக் எப்படி எழுதறதுன்னு ட்யுஷன் வரலாம்னு இருக்கேன்.

கலக்கறீங்க அண்ணாத்தே...

sriram said...

Hey Ram
Naan Pathodu onnu padinonnu. wondering what? 11vadhu padikkumbothu parents thollai thanga mudiama, type writing institute Poi vanden (poi vanden endru mattume sonnen, typing thavira angu ellam seiden - namakkellam ungalai madiri solla varathu), oru naal examum vandathu, Bit adikkum vasadhi indha exam la illadathal, OOthikkichu- 20 varushama Lower typing exam fail aana visayathai yaridamum sollavialli, i thought no other soul in this world would have failed in this exam, Now feeling very happy to know that there were atleast 10 Jandus like me.
BTW, a great and hilarious post, every post of yours makes me to think about starting a blog as wells as against it (naan konjam serious aadmi, ivvalavu comidi ya ezhutha varathu) so it is better to read your post and just enjoy.
Endrum Anbudan.....

பாலராஜன்கீதா said...

போனால் போகிறது ஆங்கிலம் தட்டச்சு. தலைப்பில் தமிழ் டைப்பு ***டைட்பு*** என்ன பாவம் செய்தது ? :-)))

துளசி கோபால் said...

:-))))))))

asdfgf 'lkjhj

Madhu Ramanujam said...

******* இதை வெளியிட வேண்டாம் *******

உங்க அத்தனை பதிவையும் படிக்கணும்னு பார்த்தா உங்க ஆர்கைவ் சரியா வேலை செய்யலை. நீங்க வேற உதவி பண்ண சொல்லி கேட்டிருக்கீங்க. என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றேன். எப்படி ஆரமிக்கலாம்னு நீங்க சொல்லுங்க.

கப்பி | Kappi said...

:)))))

Blogeswari said...

rofl.. விதி பட மனோரமா கிளாஸ்-ல நீங்க மைக் கோகன்.. அப்ப, பூர்ணிமா ஜெயராம் யாரு?

இலவசக்கொத்தனார் said...

ஏண்டா நாங்கதான் பாஸாக மாட்டோமுன்னு எழுதவே போகலை. இப்படி மானத்தை வாங்கிட்டீங்களேட!

அடுத்தது என்ன மிருதங்கக் கிளாஸா? உனக்குத்தான் அது வாசிக்கத் தெரியுமே. அதனால அங்க வந்து ஒன்லீ ரவை ஈட்டிங்கா?

ambi said...

//பேசிட் மெஷினில் "மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத் தானே" பாட்டுக்கு மட்டும் தான் கரெக்டாக வரும்.//

ROTFL :)

ஐ நீங்களும் பெயிலா? ஹிஹி, நான் ரென்டு மாசம் போயி பார்த்தேன், இது கதைக்காவாது!னு எஸ்கேப்பு.

Padmapriya said...

ROTFL :D
chance ye illenga

Anonymous said...

hilarious post."viralla blood cancer" .kallakittenga.
nivi.

Munimma said...

good writeup. enakkum antha kaala nyabagam varuthu. low-yer exam ezhuthi, pona porathuntu - II class pass. solli kaattalai :-)
bayangara bore class, but naan vellila pombothu mammooty lookalike used to come in. Only motivation ;-)

சீனு said...

nalla ezhuthi irukinga dubukku...hehehe

ILA (a) இளா said...

ஆபிசுல சத்தம் போட்டு சிரிக்க வெச்சுடீங்களே, போங்கையா, இனிமே உங்க பதிவ படிக்கவே மாட்டேன்... ஆபீசுல

உண்மை said...

:)

காயத்ரி சித்தார்த் said...

// "ராஜா ராஜாதி ராஜா" பாட்டுக்கு ரெமிங்க்டன் மிஷினில் தான் கரெக்டாக டைப் தாளம் போட முடியும். பேசிட் மெஷினில் "மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத் தானே" பாட்டுக்கு மட்டும் தான் கரெக்டாக வரும். அதனால் அந்த பாட்டுக்கு மட்டும் பேசிட்டுக்கு மாறிக்கொள்வேன்.//

யப்பா! உங்க லூட்டிக்கு ஒரு அளவே இல்லியா? உங்க பதிவுக்கு வந்தா சிரிப்பு கேரண்டின்னு ஆய்டுச்சு!!

Anonymous said...

//விமலா மேம் மட்டும் பரீட்சைக்கு சூப்பர்விஷன் போட்டால் பசங்கள் ஆங்கிலத்திலேயே அவரிடம் பேசுவது மாதிரி மற்றவர்களிடம் விடை கேட்பார்கள்.
//ஏ பாய் கோ பாய் தேர்
//ஐ கோ பிரின்ஸிப்பால்
non-stop sirippu dhan ponga...
ada che, naan ennamo pass aagitteenga nu nenaichen, andha last para super!
- umakrishna

Anonymous said...

Hahahahahah...Naan epadiyo thatti thadavi lower, higher rendum pass paniten. Aaana enga veetula odane tamil typewriting kathukkonu oree imsa.. adhula neenga sona elaa amsamum porundhara scenes elam vandhuchu.. resultum sethi thaan... :-)

Sowmya said...

ஒரு டைப்பா தான் இருந்திருகீங்க பாலபருவத்தில்..:P

"\\எனக்கு பிற்காலத்தில் நான் பெரிய ஆபிஸராக ஆகிவிடுவேன் என்று தெரியுமாகையால் என்னுடைய பியானோ, மற்றும் ட்ரம்ஸ் ஆசையை எல்லாம் டைப் மெஷினில் தான் தீர்த்துக் கொள்வேன். பேசிட், ரெமிங்டன் என்று இரண்டு விதமான மெஷின்கள் இருந்தன. பேசிட் அடிப்பதற்கு வசதியாக இருக்கும் ஓடாது. ஆனால் ரெமிங்டன் பூப்போல நழுவும். ஒழுங்காக அமுக்காவிட்டாலும் ஓடிவிடும். ஆனால் "ராஜா ராஜாதி ராஜா" பாட்டுக்கு ரெமிங்க்டன் மிஷினில் தான் கரெக்டாக டைப் தாளம் போட முடியும். பேசிட் மெஷினில் "மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத் தானே" பாட்டுக்கு மட்டும் தான் கரெக்டாக வரும். அதனால் அந்த பாட்டுக்கு மட்டும் பேசிட்டுக்கு மாறிக்கொள்வேன்.//"

அடாடடா.. சிவமணிக்கு ட்யூஷன் எடுத்தீங்களோ..!

"\\என்பேச்சை நானே கேக்க மாட்டேன்" என்று தமிழ் பட ஹீரோ மாதிரி மிரட்ட ஆரம்பித்துவிட்டார்."//

haha...எங்கடா சொல்றதுன்னு வெய்ட் பண்ணி சொன்னீங்களோ!

"ஏம்மா கம்புயூட்டரப் பார்த்து சிரிச்சுண்டே படிகற "
- எம் பசங்களுக்கும் ஒரு சிரிப்பை தான் பதிலா தர முடிஞ்சது. :) nice post

Guna said...

eppadinga ippadi ellam ungalala mattum mudiyuthu..Kuppura paduthu yosippingalo...

Kalakkuringa ponga

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

கலக்கல், எப்படி தான் இப்படில்லாம் யோசிக்கறீங்களோ? இது இது தான்யா உங்க ஸ்பெஷல். இதுக்காகவே அடிக்கடி இந்த பக்கத்தைப் புரட்ட வேண்டியிருக்கு.

ஆமாம், நான் கூட +2 படிக்கும் போது எங்க ஸ்கூலில வெகேஷனல் க்ளாஸ்ல எல்லாம் டைப்படிக்கும் போது நாக்கொழுக பாத்துக் கிட்டு இருபேன். இந்த க்ருப்புக்காக உண்ணாவிரதம்லாம் இருந்து கூடப் பாத்துட்டேன், ஹும் ஒன்னும் வேகலை. இதப் படிக்கும் போது அதுல்லாம் நினைவுக்கு வந்தது.excellent.

Anonymous said...

டைப்பு டைப்பு தான், டாப்பு டாப்பு தான்.

இளங்கோவன்.

dubukudisciple said...

guruve!!!!
super kalakiteenga...
asdfgf ;lkjhj
awerqfa ;oiuph;
axcvza ;,mnbh;

idu epadi iruku .. ennoda typing.. namakum oothikichu

Ragu said...

Mr dubukku.. you are amazing man.. I have been a silent admirer of your blog for a long time (more than a year now).. இத்தன நாளா comment எதுவும் எழுதாம இன்னைக்கி என்னடா திடீர்னு அப்படினு கேக்கறீங்களா?? இந்த பதிவு படிக்கும் போது என்னுடைய school days நியாபகம் வந்தது. அதுக்கு thanks பண்ணத் தான்..

மிக ஆறுதலாக பிரின்சிபால் கேட்ட மாதிரி பரீட்சை எழுதிய பத்து பேரும் செண்ட் பர்சண்ட் ரிசல்ட் வாங்கியிருந்தோம். எல்லோருக்குமே ஊத்திக்கிச்சு :-) soooper..

Keep writing..

Paavai said...

learnt a new tamil word - rayasam from the instructor.. when we tried raja rajadi rajan etc he would immediately come near us and shout - inda rayasam ellam vechukkade..

brought back old memories

லங்கினி said...

Excellent post.

Whenever I read ur post I too feel like writing..started my own blog too..but..:-( vaartha muttudhu..
tuition yedunga "30 naalil blogging"-nu pls...

Anonymous said...

:) :) :)

PVS said...

hope u r fine. read in Chakra's blog that you were in that tube which derailed.

take care

Dubukku said...

BOO- நன்றிங்க...ஐய்யையோ...மறுபடியும் டைப்ரைட்டரா.....நான் எஸ்கேப்ப்ப்ப்ப்

Sundar - மிக்க நன்றிங்க..

CVR - :))

Lakshman - ரொம்ப நன்றிங்க...ட்யூஷனா..வாங்க வாங்க...இப்படியே உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டு....:)))

Sriram -ஹீ ஹீ நீங்களுமா...கையக் குடுங்க...அட என்னங்க...சிக்கிரம் ப்ளாக் ஆரம்பியுங்க...அந்த பிட்டு மேட்டர் சொன்னீங்க பாருங்க...ரொம்ப கரெக்டுங்க...

பாலராஜன்கீதா - வாங்க சார்...ரொம்ப நன்றி உடனே திருத்திவிட்டேன்(நீங்க சொன்ன அப்புறம் தான்)

துளசி - டீச்சர் நீங்களுமா? :))

மதுசூதனன் - அண்ணே ரொம்ப நன்றிங்க..என்னயும் ஒரு மனுசனா மதிச்சு உதவ நினைச்சதுக்கு .r_ramn at yahoo dot com -க்கு ஒரு மெயில் தட்டுங்களேன் உங்க ஈ.மெயில் ப்ரொபைல்ல தேடினேன் இல்லையே


கப்பி - :))

ப்ளாகேஸ்வரி -ஏங்க ஏங்க..அப்பிடி ஒரு பூர்ணிமா இருந்திருந்தா ஃபெயிலாகியிருப்பேனா??ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பேன்ல...

கொத்ஸ் - பள்ளி மானத்த கொடியேத்துவோம்ல....போகவே இல்லையா...இதச் சொல்ல வெக்கமா இல்லை ? :))

அம்பி - எனக்கு சாய்ஸே இல்லையே அப்புறம் எங்க எஸ்கேப்பூ...ஹூம்

பத்மப்ரியா - வாங்க...எது நான் பாஸ் பண்றதா?? :P

நிவி - வாங்க மேடம்..நன்றி ஹை

முனிம்மா- பாத்தீங்களா...உங்களுக்கு மம்மூட்டி இருந்ததால செகண்ட்க்ளாஸ்லயாவது பாஸ்பண்ணீங்க...இங ஒரு மீரா ஜாஸ்மின் இருந்திருந்தா...ஹூம்ம்......ஊசப் பல் டீச்சர் ஹஸ்பண்டுக்கெல்லாம் நான் க்ளாஸுக்கு காலம்பற ஆறு மணிக்கு போனதே பெரிசு...:))

Dubukku said...

சீனு - ரொம்ப நன்றிங்க :)

இளா - அட ஆபிஸுல அப்புறம் எப்படிங்க பொழத போக்கப் போறீங்க...வேலையா செய்யப்போறீங்க :))

உண்மை - :))

காயத்ரி - அட உண்மையாத் தாங்க...எனக்கு எத எடுத்தாலும் தாளம் போடற பழக்கம் உண்டு சத்தம் போட்டு போட்டு இப்போதா குறைஞ்சிருக்கு

உமா - நன்றிஙகநானெல்லாம் எங்கங்க..பாஸாகிறது...:))

நித்யா - இங்லீஸ் பாஸ் பண்ணிட்டு அப்புறம் தமிழ் வேறயா இதெல்லாம் ரொம்ப டூ மச்ங்க :))

சௌம்யா - ரொம்ப நன்றிங்க....ஆமாங்க ஒரு மார்க்கமா தான் இருந்தேன் :)) பசங்களை விசாரிச்சேன்னு சொல்லுங்க...

குணா - ரொம்ப நன்றிங்க...அட நீங்க வேற...இப்படியே உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டு :)))))

சுமதி - ரொம்ப நன்றிங்க...அட இதுக்காக உண்ணாவிரதம்லாம் இருந்தீங்களா :)) பிட் கூட அடிக்க முடியாதுங்க...:)) நீங்களெல்லாம் படிசிருந்தா டிஸ்டிங்க்க்ஷன்ல பாஸ் பண்ணியிருப்பீங்க

Dubukku said...

இளங்கோவன் - வாங்க ரொம்ப நன்றிங்க..

டுபுக்குடிசைப்பிள் - ஆஹா நீங்க டைப்ல பிரிச்சு மேய்வீங்க போல இருக்கே....இங்க எல்.கே.ஜி கூட கிடையாதுங்க :))

ரகு - வாங்க சார்.ரொம்ப நன்றி முதல் கமெண்ட்டுக்கு :))ஓ நீங்க நக்கல் விடறத பார்த்தா நீங்க பாஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன் கரெக்டா? :))

பாவை - வாங்க மேடம் என்ன ரொம்பபப நாளா உங்கள காணும்? ரொம்ப ஆணியா? அட நீங்களும் இந்த பாட்டெல்லாம் ட்ரை பண்ணுவீங்களா...ரயசமா?? கேள்விப் பட்டதே இல்லை :))

லங்கிணி - வாங்க மேடம்..ரொம்ப நன்றி. நீங்க சும்மா எழுதுங்க...கொஞ்சம் போக போக இந்த தயக்கமெல்லாம் போயிடும் அப்புறம் நான் உங்கள் வந்து டியூஷனுக்கு கேட்பேன் :)

அனானி - :))

பி.வி.எஸ் -வாங்க ரொம்ப நன்றிங்க..உங்க அன்புக்கு..ஆமா நல்லா இருக்கேன். அதப் பத்தி போஸ்ட் போட்டாச்சு :))

Anonymous said...

gud post!!

A.V.Rm.V A.V.Rm.V thaan. Yaaraalayum adichika mudiyathu!!

How did you forget this??

'A boy, you only eat the food, goto the bed'

my fav dialogue by manorama (our instructor)! lol

She used it very frequently, atleast with us.

and how abt the fight happening for the new machines?

Golden days

Naanga'lam exam'ukae pogalayakum!!

ஆடுமாடு said...

டுபுக்கு... லேட்டா டைப் அடிக்க...ஸாரி...லேட்டா உங்க பதிவை படிக்க வந்ததுக்கு. அப்புறம் நீங்க எந்த ஸ்கூலு. தீர்த்தபதி, ஏவிஆர்ம்வி...கல்லிடை திலகர் வித்யாலயா... இதுல எதுவும் இல்லையா? நான் டைப் அடிச்சது ஆழ்வார்க்குறிச்சி பரமகல்யாணியில. அங்கயெல்லாம் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்க மாட்டேன்னுட்டாங்க. தனியா போய் படிச்சேன். ஆனா, தேறலை.

Post a Comment

Related Posts