Tuesday, May 16, 2006

தேர்தல் 2060 - சிறுகதை

தேன்கூடு நடத்தும் போட்டிக்கு எனது ஆக்கம். இந்தக் கதையில் உங்களுக்கு சுஜாதாவின் தாக்கம் தெரியுமானால் அது என் தவறில்லை. இந்த மாதிரி கதைகளில் அவ்வளவு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கிறார் மனுஷன். முற்றிலும் மாறுபட்ட களத்தில் இன்னொரு கதையையும் யோசித்தேன். கடைசியில் இதே இருகட்டும் என்று இதை முதலில் எழுதிவிட்டேன். அதக் கதையையும் முடிந்தால் இங்கே பதிகிறேன்.
********************
தேர்தல் 2060

"இவர் தான் பிஜு, ‘அவிஷ்கா’ மாட்யூலின் சீஃப் டெக்னிகல் ஆர்கிடெக்ட்" நிர்வாக இயக்குனர் என்னை வீடியோ கான்பரன்ஸில் அறிமுகப் படுத்திய போது ஒரு அழுத்தமான அமைதி அங்கு நிலவிக்கொண்டிருந்தது. டெக்னிகல் டைரக்டர் உட்பட எல்லா பெரிய தலைகளும் ஆஜராகியிருந்தார்கள்.

"பிஜுவிற்கு ‘அவிஷ்கா’ மாட்யுலில் தெரியாத விஷயமே கிடையாது நூற்றி அறுபது பேர் கொண்ட டீமின் மொத்த மூளையும் பிஜு தான்" - டைரக்டர் அளவுக்கு அதிகமாக என்னைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.

நடக்கும் 2060-ம் வருஷ தேர்தலின் மூளை, முதுகெலும்பு, நரம்பு, கிட்னி எல்லாமே இந்த “அவிஷ்கா” மாட்யூல் தான். வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் விபரங்கள், வாக்கு சேகரிக்கும் முறை, தேர்தலை நடத்துவது என்று சகலத்தையும் அடக்கி வைத்திருக்கிறது. கள்ள வோட்டு என்பதை சரித்திர கால தொடராக்கிய விஞ்ஞான வஸ்து. கி.பி.2010 வரை புழங்கிக் கொண்டிருந்த வாக்காளர் அட்டை, வாக்குச்சாவடி என்று சாவடிக்காமல் 2060ன் விஞ்ஞான வளர்ச்சியின் அததாட்சி. நேனோ சேனலில் ஒளிபரப்பாகும் "கோலங்கள்" தொடரில் சிபியும் அவ பாட்டி அபியும் டயலாக் பேசி முடிப்பதற்குள் மொத்த தேர்தலையும் நடத்தி முடித்துவிடும். இந்த முறை தேர்தலை நடத்த எங்கள் ‘அவிஷ்கா’ மாட்யூலை எலெக்க்ஷன் கமிஷன் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தேர்தல் ஓத்திகைகளுக்காகத் தான் ராப்பகலாக என் டீம் உழைத்துக் கொண்டு இருக்கிறது.

தேர்தல் நடத்தப் போகும் முறை பற்றி போட்டியிடும் கட்சி தலைவர்களுக்கு நிர்வாக இயக்குனர் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாக் கட்சித் தலைவர்களும் லாகின் செய்திருந்தார்கள். ஒருத்தருக்காவது இந்த டெக்னாலஜி விஷயங்கள் பிடிபடுமா என்று எனக்கு ரொம்ப சந்தேகமாக இருந்தது. இந்த மாதிரி மீட்டிங்குகளில் நான் பொதுவாக கலந்துகொள்ளமாட்டேன். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று என்னுடைய மாட்யூல் என்பதால் ஒருவேளை எதாவது டெக்னிகல் கேள்விகள் வந்தால் விளக்கம் கூற வர வேண்டிய நிர்பந்தம்.

கட்சி தலைவர்கள் அறிமுகப் படுத்திக் கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நான் கூட்டத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். முப்பதிரண்டாம் திரையில் தெரிந்த நபரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவன் பக்கதில் உட்கார்ந்திருந்த பெண் நான் பார்ப்பதைப் பார்த்து நட்புடன் சிரித்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் புன்முறுவல் பூத்தான். கண்டிப்பாய் அவனை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று தான் பிடிபடவில்லை. எங்கு பார்திருக்கிறேன் என்று புருவத்தை நெருக்கி யோசித்துக் கொண்டிருந்ததில் டிஜிட்டல் முன்னேற்றக் கழகத் தலைவர் கேட்ட அபத்தமான கேள்வியைக் கோட்டை விட்டு அப்புறம் சமாளித்து பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

"என்னைத் தெரிகிறதா?" - திடீரென்று என் திரையில் ப்ரைவேட் மெசேஜ் பளிச்சிட்டது. அவனிடமிருந்து தான். யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டே இல்லை என்று தலையை ஆட்டிக் காட்டினேன். எதிர்பார்த்தவன் போல்...சகஜமாக நோட்டம் விட்டுக் கொண்டே மெதுவாக ஆப்டிகல் மார்க்கரை மூக்குக்கு கீழே மீசை மாதிரி வைத்துக் காட்டினான்.

இப்போது பிடிபட்டு விட்டது...மிஸ்ரா...என்னுடைய யுனிவர்ஸிட்டியில் இரண்டு ஆண்டுகள் சீனியர். யூனிவர்சிட்டி முழுவதும் அவனுடைய அறிவு பிரபலம். ஏதோ பெரிய கம்பெனியில் வெளிகிரகத்தில் செட்டிலாகி மார்ஸுக்கும், ப்ளூட்டோவிற்கும் பறந்துகொண்டிருப்பான் என்று நினைதவன்...நியூட்ரான் சமாஜ் கட்சித் தலைவனா? என்னால் நம்பவே முடியவில்லை. "என்ன இப்படி.." என்று மெசேஜ் அடித்தே விட்டேன்.

"இப்போ அரசியல் ஒரே ஊழலாகிவிட்டது படித்தவர்கள் களம் இறங்கினால் தான் களையெடுக்க முடியும்" ரொம்பத் தீவிரமாக பதில் அனுப்பியிருந்தான்.

எனக்கும் ரொம்ப அவசியம் என்று தான் பட்டது. அவ்வளவு ஊழல் மண்டிப் போயிருந்தது. சந்திரன், நவீன் எல்லோரும் அவனுடன் கட்சியில் இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். பக்கத்திலிருந்தது அவன் செட் காவ்யா மாதிரி இருந்தது. கேட்கவில்லை. அவள் பின்னாடி ஒரு பெரிய கூட்டமே யுனிவர்ஸிட்டியில் அலைந்து கொண்டிருக்கும்.

மீட்டிங் முடிந்து பேசலாம் என்று கவனிப்பது போல் தீவிரமாகிவிட்டேன். காவ்யா அவன் பக்கதிலிருந்த அன்யோன்யத்தைப் பார்த்தால் காதலிக்கிறார்கள் என்றே தோன்றியது. கை கோர்த்து உட்கார்ந்திருக்கிறார்களா என்று திரையில் தெரியவில்லை.

மீட்டிங் முடிந்து மிஸ்ராவுடன் "சேட்"டிக் கொண்டிருந்த போது அது காவ்யா தான் என்று ஊர்ஜிதமாயிற்று.

"பிஜூ நீ படித்த துறையிலேயே பெரிய வேலையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் டெக்னாலஜி பக்கம் திரும்பி வெகுநாட்களாகிவிட்டது " - மிஸ்ராவின் ஆதங்கம் எனக்குப் புரிந்தது. அவனும் நான் படித்த துறையில் கில்லாடி தான். அதற்கப்புறம் கொஞ்ச நேரம் டெக்னிக்கலாக உரையாடிக் கொண்டிருந்தோம். நான் மிக புத்திசாலித்தனமாக ‘அவிஷ்கா’-வை வடிவமைதிருப்பதாக மிஸ்ரா புளகாங்கிதமடைந்தான். இந்த மாதிரி டெக்னிகல் விஷயங்களைப் பேசுவதற்காகவாது நாம் இனிமேல் அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டான். நேரமாகிவிட்டது அப்புறம் சந்திக்கலாம் என்று பரஸ்பரம் விடைபெற்றுக் கொண்ட போது தான் அதைக் கேட்டான்

" தப்பாக எடுத்துக் கொள்ளாதே...பிஜூ...ஈசி784பியில் ஒரு சின்ன சித்து விளையாட்டு காட்டினால் விழும் ஓட்டுகளில் ஓவ்வொரு நாலாவது வோட்டும் எங்கள் கட்சிக்கு விழுமாறு செய்யமுடியும்...கடைசி வோட்டில் அந்த ட்ரோஜனை தானே அழிந்து போகும் படியும் செய்யலாம்..எந்தத் தடயமும் இருக்காது...எனக்காக, நம் யுனிவர்சிட்டியில் படித்த இளைஞர் பட்டாளத்திற்காக இதைச் செய்யமுடியுமா? நான் மட்டும் வந்துவிட்டால் உன்னை இந்த கம்பெனியின் இயக்குனாரக ஆக்கவேண்டியது என் பொறுப்பு.. என்ன சொல்ற"

எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

15 comments:

Anonymous said...

Nalla irukkunga. innum konjam neraiya ezhuthiyirukkalam.

Anonymous said...

fantastic!
does this story have any connection with your previous post? LOL

மாயவரத்தான்... said...

எனக்கும் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது:))

Anonymous said...

Super kadhai. Andha rendaavadhayum post pannunga.

துளசி கோபால் said...

டுபுக்கு,

கதை சூப்பர்
( ஒருவேளை பரிசு கிடைக்கலாம்)

Paavai said...

very nice story - Jayalalitha kaila kedaicha edha veche recounting ketruvanga

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு.. பேச்சுவாக்கில் பிஜுவே ஏதாவது ரகசியத்தைச் சொல்லி அது மூலம் மிஸ்ரா ஜெயித்துவிடுவதாக முடிப்பீர்கள் என்று நினைத்தேன் :)

Anonymous said...

i liked this much better than the cryptic story!

bt (bangalore thangachi)

Geetha Sambasivam said...

டுபுக்கு, எப்போவில் இருந்து தமிழில் எழுத ஆரம்பிச்சீங்க? உங்க ப்ளாக்கிற்கு வருவதற்கே ரொம்ப சிரமம். நடுவிலே இந்த pop-up தொந்திரவு வேறே. அது சரி, என்னோட கல்யாண நாள் வாழ்த்துக்கள். 13-ம் தேதி உங்க கல்யாண நாளாமே. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன் பாருங்க.

Anonymous said...

Kalakkittengana!!!

Etho unga kuda pooti potta santhosamavathu minjattum.

Kumari said...

Arumayilum arumai :)
Innum konjam ezhuthi irukalaam. Seekiram mudinjitta mathiri irukku :(

Dubukku said...

Raghu - danks.. romba neelam adhikam aayita appurm bore adichirumonu than cautious a irundhen :)

anon- danks spot on LOL:)

lisawarner - PHD is a bit tempting :p

மாயவரத்தான் - உங்களுக்குமா? :)

Dubukku said...

Krithiga - andha rendavathu kathaiya votingku appuram post pannaren...illana I will split my own votes .professional politician maathiri pesaren illa?:)))

துளசி கோபால்- ரொம்ப நன்றி. நீங்க சொன்னதே கிடைச்ச மாதிரி இருக்கு :)

Paavai - danks . hehe :)

பொன்ஸ்- நன்றி. இந்த முடிவு பிடிக்கலையா?

bt - aanalum cryptic kathaigala vidara maathiri illa...aduthathu onnu post pannaren koodiya seekiram :))

Geetha -வாங்க கீதா. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இப்போதான் இரண்டு வருடங்களாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன்....கேக்கிறதப் பார்த்தா...ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு இந்தப் பக்கம் வந்து :)

Dubukku said...

demigod - danks. anna romba overa nakkal vidatheenganna...ungalukke ithu overa theriyala :))

Kumar - danks Mam!! makkalukku pidikumo pidikathonu...konjam cautiousa chinnatha mudichitten :)

யாத்ரீகன் said...

அரசியல் கட்சிகளின் பெயர்கள் படித்ததும் :-)))))) முக்கியமாக டி.மு.க :-))))

ஆனால் முடிவு ஒருவாராக யூகிக்க முடிந்ததாய் இருந்தது..., பரிசு பெருமா என்று சந்தேகம்தான் ஆனால் கட்டாயம் இரசிக்க சிரிக்க முடிந்தது.. :-)

Post a Comment

Related Posts