கொத்துபரோட்டா, கதம்பம், பிரியாணி, கூட்டாஞ்சோறு என்று ஏகப்பட்ட பெயர்களில் பரபரப்பாய் கேபிள் சங்கர் உட்பட பல வலையுலக பிரபலங்கள் நிறைய பேர் எழுதி வருகிறார்கள். நான் அந்த பெரிய லீக்கில் இல்லாவிட்டாலும், மனம் போன போக்கில் தோன்றியவற்றை அப்பப்போ தோன்றும் தலைப்புகளில் கிறுக்கி வந்திருக்கிறேன். இனிமேல் இந்த மாதிரியான அலைபாயும் எண்ணங்களுக்கு சின்னி ஜெயந்த் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு "ஜில்பான்ஸ்" என்று நாமகரணம் சூட்டிருக்கிறேன். என்றும் உங்கள் ஆதரவு அன்பனுக்குத் தேவை.
சமீபத்திய வெட்டிமுறிப்பு
இரண்டு கார்ப்பரேட் வீடியோக்களை எடுத்து முடித்து வருவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. தற்போது ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் அவர்களின் மியூசிக் ஆல்பம் எடிட்டிங் வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிக அருமையான கர்னாட்டிக் ஃபியுஷன். முதல் முறை கேட்கும் போதே மிகவும் பிடித்துப் போனது. அருமையாக இசையமைத்திருக்கிறார் ஜோத்ஸ்னா. இது முடிந்தவுடன் மீண்டும் சில குறும்படங்கள் என களமிறங்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்.
சமீபத்திய துக்கம்
சமீபத்தில் இங்கே இங்கிலாந்தில் தீ விபத்தில் ஒரு நெருங்கிய நண்பரின் மறைவு, எங்களையும் மற்ற நண்பர்களையும் குடும்பத்தோடு மனதளவில் பெரிதாக பாதித்தது. மெட்ராஸில் ராம்கோவில்லிருந்து தெரிந்த இந்த இனிய நண்பனின் திடீர் மறைவு, எனதளவில் வாழ்க்கை தத்துவங்களில் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. ஹூம்ம்ம்ம்ம்ம்
சமீபத்திய சந்தோஷம்
சினிமா தியேட்டரில் முறுக்கு விற்கும் வேலை கிடைக்க கூடாதா என்று ஏங்கிய ஒரு காலம் எனக்கு உண்டு. அப்புறம் அதுவே தியேட்டரில் முறுக்கு கடை வைத்தால் என்ன, தியேட்டர் ஓனர் பொண்ணை டாவடித்து கல்யாணம் செய்தால் என்ன என்று வயதுக்கேற்ற முதிர்ச்சியடைந்து, எதுவும் நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த ஆசைக்கெல்லாம் அடிப்படை காரணம் வேண்டிய போது சினிமா பார்க்கலாம் என்ற நப்பாசை தான். ஆனால் அந்த ஆசை தற்போது இங்கே யூ.கேவில் சினிவேர்ல்டின் புண்யத்தில் நிறைவேறி இருக்கு. மாதம் ஒரு தொகையை கட்டிவிட்டால் "ராசா எத்தனை படம் வேணும்னாலும், எத்தன தடவ வேணா, நினைச்ச போது பார்த்துக்கோ" என்று அன்லிமிட்டட் கார்டு ஸ்கீம் ஒன்று இருக்கிறது. இதில் ஓஹோ மேட்டர் என்னவென்றால் ஒரு மாததிற்கான சந்தா தொகை ஒன்றரை பட டிக்கெட் காசு தான். இந்த தியேட்டரில் தான் தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகும்.
இன்னாது காந்தி செத்துட்டாரா
என் தானைத் தலைவன் கமலஹாசன் படத்திற்கு கூட டெம்ட் ஆகாமல் காலந்தாழ்த்தி...எந்திரன் ஜுரத்தில் அன்லிமிட்டெட் கார்டு வாங்கி இரண்டாம் நாளே பார்த்துவிட்டு வந்த பிறகு தான் ஜுரம் இறங்கியது. எந்திரன் என்னை வியந்து பார்க்க வைத்திருக்கிறது. ஒரு மண்ணும் இல்லாத கதை, அலட்டல் அவுட்டேட்டட் ஐஷ்வர்யாராய், இத்தனைக்கும் நடுவில் நான் வியந்து பார்ப்பது இரண்டு விஷயங்களைத் தான். என்னதான் சூப்பர் படமாயிருந்தாலும் தமிழ் வியாபார மார்க்கெட் இவ்வளவு தான் என்றிருந்த ஒரு மாயையை உடைத்து, நூத்தி அறுபது கோடி போட்டு எடுத்து அதை முதல் இரண்டு மூன்று வாரங்களிலேயே திரும்ப எடுத்து எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கும் சன் பிக்சர்சின் வியாபார நுணுக்கத்தையும், தைரியமும் - உண்மையிலேயே ஒரு பிஸினஸ் கேஸ் ஸ்டடி.
(தலீவர் பாணியில்) படம் பிடித்ததா...என்றால் அதில் இருக்கும் பாடம் பிடித்தது என்று தான் சொல்வேன். மேலே சொன்ன சன் பிக்சர்ஸின் வியாபார நுணுக்கமாவது கேல்குலேடட் கேம்ப்ளிங். ஆனால் அதையெல்லாம் தாண்டி விளக்கமே இல்லாமல் வியக்க வைத்தது ரஜினி என்ற தனிமனிதரின் வெற்றி. ரஜினி மட்டும் இல்லாவிட்டால் எந்திரனின் இந்த வியாபாரம் சாத்தியமே இல்லை. மனிதரின் கரிஷ்மாவிற்க்கு விளக்கமே இல்லை.
இந்த வார கிசுகிசு
"டு" என்று ஆரம்பித்து "கு" என்று முடியும் வலைப்பதிவர் இனிமேல் தனது வலைப்பதிவுல் அடிக்கடி எழுதி அவரது வலைப்பதிவுக்கு தப்பி வருபவர்களை கன்னாபின்னாவென்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது என்று முடிவெடுத்துள்ளாராம். "அட போய்யா அவருக்கு வேற வேலையே கிடையாது...அடிக்கடி இப்படித்தான் கூவிக்கினு இருப்பாரு...எல்லாம் அடுத்த வாரமே பழைய குருடி கதவ திறடின்னு ஆகிடும்" என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனவாம்.
Monday, November 22, 2010
Sunday, October 31, 2010
லவ் லெட்டர்
சாமஜ வர கமனாவோ, அலைபாயுதேவோ கேட்டுக்கொண்டே கேசரி பஜ்ஜியை அலேக்காய் லவட்டிட்டு, பில்டர் காப்பியை சுர்ர்ர்ன்னு உறிஞ்ஜி விட்டு, "எங்க சௌம்யா வத்தக்குழம்பு வைச்சா அடுத்த தெரு வரைக்கும் மணக்கும்" டயலாக்கையெல்லாம் கேட்டுவிட்டு, சவுகரியமாய் ஊருக்குப் போய் கலந்து கேட்டு லெட்டர் போடறோம்ன்னு பழைய சினிமாவில் வருவது மாதிரியோ, இல்லை தமிழ் மேட்ரிமோனி டாட் காம்மில் போட்டோஷாப்பில் டச் செய்த போட்டோவை அப்லோடிவிட்டு "சோ அன்ட் சோ கம்பெனியில் சோ அன்ட் சோ சேலரி ட்ராயிங் மாநிறமான பையனுக்கு...வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய, பெரியவர்களை மதிக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள, எந்த தோஷமும் இல்லாத, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பெண் வேண்டும்"ன்னு தகப்பனார் ஜாதாக பரிவர்தனை செய்ய ஆரம்பிப்பதற்கு வெகு முன்னாலேயே எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும் என்னை மாதிரி அபாக்கியவான்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் - "லவ் லெட்டர்".
அதிலும் முதல் லவ் லெட்டர் இருக்கிறதே மிகப் பெரிய இம்சை. இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய் "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் செய்யும் உதவி எல்லாம் கிடையாது. , " சார்ட்டர்டே டிஸ்கோவுக்குப் போகலமா"ன்னு திரையுலக பாடலாசிரியர்கள் கூப்பிடாத ஒரு காலத்தில் லவ்வி எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். எனக்குத் தெரிந்த லெட்டர்கள் எல்லாம் நேருமாமா தன் மகள் இந்திராகாந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் தான். அதிலும் அவர் பாட்டுக்கு அந்த நாட்ட பார்த்தியா இந்த நாட்ட பார்த்தியான்னு பக்கம் பக்கமாய் மகளை கொஞ்சி இருப்பார். இப்படியெல்லாம் லெட்டர் போட்டால் "அப்படியே மெட்ராசிலயே ஒழிஞ்சு போன்னு" திரும்ப பதிலுக்கு டெலிகிராமே வந்துவிடும் என்று தீர்மானமாய் தெரிந்தால் எதுக்கு வம்பு என்று ரொம்ப நாள் லெட்டரே போட்டவில்லை.
மெட்ராஸ் பட்டிணம் ஒரு கெட்டுக் குட்டிசுவரான ஊர். லவ் பண்ணுபவரக்ள் அம்மாவாசை பௌரணமியானால் காதலிக்கு குரங்கு பொம்மையோ கழுதை பொம்மையோ வாங்கி கழுத்தில் பட்டுக் குஞ்சலம் ஒன்றை கட்டி "ஐ லவ் யூ" என்று எழுதி பிங்க் கலரில் உதடு படம் ஒன்றை போடவேண்டும் என்று கோட்பாடு வைத்திருக்கிறார்கள். தங்கமணி வீட்டுக்கு இந்த மாதிரி எல்லாம் அனுப்பினால் "இந்தம்மாக்கு இதெல்லாம் வராதே"ன்னு போஸ்ட்மேனே திறந்து பார்த்து அங்கே டோர் டெலிவரி செய்வதற்கு பதிலாக நேர எங்க வீட்டில் போய் வாழ மட்டையை கொழுதினாற் போல் நல்ல புகைய விட்டு, மாமா காதில் மேட்டரை டெலிவரி செய்து, "நல்லாத் தானேடா உன்னை வளர்த்தேன்"ன்னு மாமா மெட்ராஸுக்கு தேடி வந்துவிடுவார் என்பதால் இந்த ரிஸ்க் எடுக்க தெகிரியம் வரவே இல்லை.
கரும்பு படம் போட்ட ஒரு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போதே அன்புடன் போட்டு கையெழுத்து போட்டால் தப்பாகிவிடுமோ என்று எனக்கு உதறலெடுக்கும். ஏனென்றால் தங்கமணி வீட்டில் ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன். இந்தப் பக்க வீடு, அந்தப் பக்க வீடு எதிர்த்த வீடுன்னு ஒரே சொந்தக்காரர்கள் கூட்டுக் குடித்தனம். "மெட்ராஸுலேர்ந்து லெட்டர் வந்திருக்கு ஒரு வேளை ஐ.நா சபைலேர்ந்து கூபிட்டு அனுப்பியிருப்பாளோ என்ன அவசரமோன்னு பிரிச்சு படிச்சேன்....நேக்கில்லாத உரிமையா...கையெழுத்து இன்னும் பிடிச்சு வரனும்...கூட ரெண்டு வரி எழுதப்பிடாதோன்னு"ன்னு அரட்டையரங்கமாகிவிடும் அபாயமாய் எனக்குப் பட்டது. (எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்.)
எப்போதாவது ஒரு தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கப் போனால் "சௌக்யமா ஊரில் இருந்து எப்ப வந்த"ன்னு ஒவ்வொருத்தராய் கேட்டு நான் பதில் சொல்லி முடியும் போது - வீட்டுக்கு கிளம்பும் நேரமாகிவிடும். வயசுப் பையன் வந்திருக்கானே...(அவர்களுக்குள்) நிச்சயமான பெண் தானே...ரெண்டு பேரும் அப்படியே போய் ஜாலியாய் ஒரு சினிமா பார்த்துட்டு வாங்களேன்னு சொல்வதற்க்கு ஒருத்தருக்கும் வாய் வராது. இதில் தங்கமணியிடம் நான் என்னத்தை பேச.
இதில் தங்கமணியின் பாசக்கார கூட்டத்தில் ஒன்று "போன வாரம் தான் அவளுக்கு பிறந்தநாள்.. உங்களுக்கு தெரியுமோ இல்லையோ..."ன்னு எடுத்துக்குடுக்கும். "ஓ காந்தி இங்கேர்ந்து தான் தண்டி யாத்திரையை ஆரம்பித்தாரா"ன்னு நான் வழிந்துகொண்டே வியக்கும் போது..."நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ன்னு கண்ணாம்பா டயலாக்கை தங்கமணி கண்ணாலேயே டெலிவரி செய்வார்.
இதற்கு நடுவில் ஒரு தரம் ஊருக்கு போவதற்கு ஒரு தரம் கேப் விழுந்துவிட்டது.இதான் சமயம் என்று தங்கமணியின் உறவு வட்டத்தில் ஒருவர் "பிள்ளையாண்டன் வேறு சாஃப்ட்வேரில் இருக்கிறான். அந்த கம்பெனியிலெல்லாம் பசங்களும் பொண்ணுங்களும் திங்கள் டு வியாழன் டெய்லி டேட்டிங்கும் மத்த நாளெல்லாம் க்ளப்பிங்குமாய் ஜெகஜோதியாய் இருப்பார்கள் " என்று கிடைத்த கேப்பில் காட்சிலாவை வெட்டி விட்டார். அடுத்த அப்ரைசலில் தங்கமணி அன்பாய் ஏகப்பட்ட ஃபீட்பேக் குடுக்க..."என்னை மாதிரி மூக்கும் முழியுமாய் இருக்கும் பையன்களுக்கு சமுதாயத்தில் இந்த மாதிரி பிரச்சைனையெல்லாம் இருக்கு ஆனால் நான் நல்லவன்" என்ற வாதமெல்லாம் எடுபடவில்லை.
"கம்யூனிகேஷன் இஸ் த கீ" என்று தங்கமணி குடுத்த செமெத்தியான பீட்பேக்கில் லெட்டர் போடவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டு எழுத ஆரம்பித்து...ஆரம்பித்து...ஆரம்பித்தது பித்து. "போன தடவை வந்திருந்த போது உங்க வீட்டில் குடுத்த பால்கோவா நன்றாக இருந்தது...நீயே செஞ்சதா" போன்ற அன்பான விசாரிப்புகள் லவ் லெட்டர் இலக்கணத்தில் வராததால் கொஞ்சம் தெவங்கிவிட்டேன். அப்புறம் உங்க வீட்டு கன்னுக்குட்டி எப்படி இருக்கு? தெரு நாய்க்கு காய்ச்சல் தேவலையா என்று ரீதியில் ஏதோ எழுதி வீட்டில் வேறு யாரிடமும் காட்டவேண்டாம் என்ற அபத்த டிஸ்க்ளெய்மரெல்லாம் போட்டு முடித்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் தேறி "கண்மணி அன்போட நான் நான் நான்" என்று தலைவர் படத்து மேற்கோளெல்லாம் போட்டு ரஜினி முத்து பட டயலாக்கையெல்லம் போட்டு முடித்து ஏதேதோ சமாளித்தேன் என்பது சப்ஜெக்ட்டுக்கு தேவையில்லாதது.
இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...

Tuesday, September 21, 2010
வந்தியா இந்தியா
இந்திய விடுமுறைப் பயணம் மிக மிக இனிமையானதாய் இருந்தது என்று எழுத ஏகப்பட்ட ஆசை. ஆனால் இறங்கிய ஒரு மணிநேரத்திலேயே அகலக் கால் வைத்து மாடிப் படியில் தடுக்கி விழுந்து தோள்பட்டையை அல்மோஸ்ட் உடைத்துக் கொண்டு, இன்னும் வலி போகாமல் டயாப்டீஸ் மாமா மாதிரி காலையில் கையை தூக்கி உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஊரில் இண்டர்நெட் செண்டரில் மெயில் பார்த்த அடுத்த நாள் ஈமயிலை ஹாக் செய்து மங்களம் பாடி விட்டார்கள். மெயில் ஹாக் செய்யப்பட்ட பிறகு தான் இந்தியாவில் சந்திக்க நினைத்தவர்க்ளின் போன் நம்பர்கள் ஈமெயிலில் இருப்பது நியாபகம் வந்து தொலைத்தது. ஆகையால் நான் ஆவலோடு சந்திக்க நினைத்தவர்களையெல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது.
அம்பாசமுத்திரத்தில் முக்கால்வாசி பேருக்கு அம்பானி ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்ன...அடுத்தவனை ஏமாத்தியாவது அம்பானி ஆகவேண்டும் என்று இருப்பது தான் வருத்தமாய் இருக்கிறது. தெரிந்தவர் தெரியாதவர் என்று ஏகப்பட்டபேர் எமாற்றி என்னை கும்பகோணம் கும்பானி ஆக்கிவிட்டார்கள்.. அதற்கப்புறம் "தம்பிக்கு எந்த ஊரு." கேள்விக்கு ஆட்டையாம்பட்டி சொல்லிப் பார்த்தேன்...நம்புவாரில்லை. "எது இந்த லண்டன்ல இருக்கே அந்த ஆட்டையாம்பட்டியா"ன்னு உஷாராய் கேட்டார்கள். மண்டையில கொண்டை கூட இல்லீயேடா அப்புறம் எப்படிடா கண்டிபிடிக்கிறீங்கன்னு மண்டை காய்ந்துவிட்டது.
இதற்கு சென்னை மிக பரவாயில்லை. நான் இந்த ஏரியா கிடையாது சார்..நீங்களே பார்த்து ஒரு கரெக்ட்டான அமௌண்ட குடுங்க என்று பின்னிரவில் ஏறிய ஆட்டோகாரர் அசத்தினார்.
மதுரையில் ஒரு இனிய நண்பியையும் குடும்பத்தாரையும் பார்த்தது மட்டும் தான் ப்ளான் படி நடந்தது. மற்ற ப்ளான் எல்லாம் காம்ப்ளான் தான்.
ஊரில் ஏகப்பட்ட மாற்றங்கள். சன் டீவியில் மிட் நைட் மசாலா போடுவதை நிப்பாட்டி விட்டார்கள். ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு நாலு நாள் சவரம் செய்யாத தாடியை ஒரு கதாநாயகன் கத்தியால் சொறிந்து கொண்டிருந்தார். சந்தோஷம்.
பொக்க வாயக் காட்டிக்கிட்டு குட்டைச்சுவரில் மொட்டைத் தாத்தா உட்கார்ந்திருப்பார், ப்ளாக் அண்ட் ஒயிட்ல ஒரு போட்டோ பிடிச்சு ப்ளாக்ல போடணும்ன்னு இருந்தேன். கலைப்பணிக்கு நேரமில்லாமல் போய்விட்டது.
ஜெயா டீவியில் அழகிப் போட்டி என்று அழகிகள் கையில் படமெடுக்கும் பாம்பை குடுத்து போஸ் குடுக்கச் சொல்கிறார்கள். அவர்களும் பாம்புடன் போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு அப்புறமாய் வீல் வீல் என்று அழுகிறார்கள். எந்தப் புண்யவான் ரூம் போட்டு இந்த மாதிரி ஐடியாலாம் யோசித்தாரோ...ஹூம் பிக்கினியில் வலம் வருவதே எவ்வளவோ தேவலையாய் இருந்தது
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில்... யுவதிகளெல்லாம் சர்வ தேச தரத்தில் உடையணிந்து அழகாய் வலம் வருகிறார்கள். கடைகளில் சிப்பந்திகள் இங்கிலீஷில் வரவேற்று சர்வ தேச தரத்தில் பில் போடுகிறார்கள். எல்லா கடைகளிலும் வாசலிலேயே பையை வாங்கிக் கொள்கிறார்கள். "அப்படியே பர்ஸையும் வாங்கி வைச்சிக்கலாம்ல...நாலு காசாவது மிஞ்சும்"ன்னு நான் அடித்த ஜோக் கடை செக்யூரிட்டிக்கு பிடிக்கவில்லை. விட்டால் அரெஸ்ட் செய்துவிடுகிற துவேஷத்தை முகத்தில் காட்டினார்.
டீவீ சீரியல்களில் மனைவிகள் மாங்கல்யத்தைக் காட்டி கற்பூரம் ஒற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து "இப்படியே பேசிக்கிட்டிருந்தீங்கன்னா தூங்கும் போது மண்டையில ஆட்டுக்கல்லை தூக்கிப் போட்டு கொன்னுடுவேன்"னு புருஷனை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி சீரியலகளை பெண்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.
பம்பாய் மற்றும் சென்னை ஏர்போர்ட்டும் இருக்கும் லட்சணத்திற்கு ஹைதராபாத் விமான நிலையம் இப்போது தான் கல்யாணம ஆகிய மாதிரி புத்தம் புதுசாய் சூபராய் பளபளத்துக்கொண்டிருக்கிறது. என்ன ஏர்போர்ட்டில் இட்லி தோசா என்று என்னத்தையோ குடுத்து ஒரு குண்டு ராவ் பைசா பார்த்துக்கொண்டிருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன் ரோடு ரோடாய் பைக் ஓட்டிய சென்னை மேம்பாலங்களினால் அன்னியமாகி கிழக்கு மேற்கு கூட தெரியவில்லை. கிண்டி வழியா போகட்டுமா அடையார் வழியா போகட்டுமா என்று கேட்ட கால்டாக்ஸி ட்ரைவருக்கு "அவ்வ்வ்வ்வ்"ன்னு நான் சொன்னது புரியவில்லை.
முக்கால்வாசி பேர் செல் போனில் அம்மாவைப் பற்றி உருகி உருகி காலர் சாங் போட்டிருக்கிறார்கள். சன் ம்யூசிக்கிற்கு "ஐ லவ் மை ஃவைப்" போன்ற அபத்த டெக்ஸ்ட் இன்னும் வந்துகொண்டிருக்கிறது.
சரவணா மாளிகையில் வெள்ளி விற்கும் செக்க்ஷனில் அங்காடித் தெரு மாதிரியே நாலைந்து பெண்களும் பையன்களும் நல்ல ஜாலியாய் பேசினார்கள். அங்கேயும் ஒரு காதல் கதை ஓடிக்கொண்டிருப்பதை கண்ணால் காண முடிந்தது. "தவறாய் நினைக்காதீர்கள்.." என்று அங்காடித் தெரு பற்றி கேட்டபோது...."மூன்னாடியெல்லாம் இப்படித் தாங்க இருந்தது அதத் தான் எடுத்திருக்காங்க..ஆனா இப்போலாம் ரொம்ப மாறிடிச்சு"ன்னு ஒரு பெண் சொன்னது ஆறுதலாய் இருந்தது.
ப்ரஜைல் ஸ்டிகர் ஒட்டி கஷ்டப்பட்டு பழைய புடைவையெல்லாம் சுத்தி பேக்கிங் செய்து கொண்டு வந்த அல்ட்ரா கிரண்டர் லக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் வந்த போது கடமுடா என்று ஒரே சத்தம். வீட்டில் ஒரு இஞ்சினியர் இருக்கிறேன் என்று இப்படியெல்லாமா முருகா சோதிப்பது என்று திறந்து பார்த்தால் மோட்டார் ஹவுசிங் சுக்கல் சுக்கலாய் போயிருந்தது. இந்த மோட்டாரை வைத்து இனிமேல் வயலுக்குத் தான் தண்ணி பாய்ச்சமுடியும் தோசைமாவெல்லாம் அரைக்கமுடியாது தூக்கி போடு என்று எவ்வளவோ சொல்லியும் தங்கமணி என்ன காரணத்திற்காகவோ குழவிக் கல்லை மட்டும் எடுத்து பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கிறார். மேலே சொன்ன டீவி சீரியலைப் பார்த்து கெட்டுப் போயிருப்பாரோ என்று பயமாய் இருக்கிறது.

Thursday, July 15, 2010
ஊரிங் டூரிங்
இந்தியாவிற்க்கு லீவிற்க்கு அடுத்த வாரம் கிளம்புகிறோம். தங்கமணி மும்முரமாக பொட்டியைக் கட்டிக் கொண்டிருக்கிறார். நான் சில பல கடமைகளில் சிக்கி பிஸியாய் இருப்பது மாதிரி நடித்துக்கொண்டு பொட்டி கட்டும் வேலையிலிருந்து ஓ.பி அடித்துகொண்டிருக்கிறேன். வரும் வழியில் மும்பாயில் அரை நாள் தேவுடு காக்க வேண்டும். கிங்பிஷரில் சர்வீஸும் (ஏர் ஹோஸ்டஸும்) நன்றாக இருக்கும் என்று நாலு நல்லவர்கள் சொன்னதை நம்பி வானத்தில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.
ஊருக்கு போக முடியாமல் இருக்கும் போதெல்லாம் ஊரில் கல்யாணம், காது குத்துன்னு பத்து நாளுக்கு ஒருதரம் சொந்தத்திலிருந்து அழைப்பு வரும். நாங்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு விசேஷ நாள் அன்று போன் போட்டால் சுத்த பத்தமெல்லாம் சாப்பாடு பந்தியில் இலையை வழிச்சு வாரி ஒரு கட்டு கட்டிக்கொண்டிருக்கும். இருக்கட்டும் இருக்கட்டும் நமீதாக்கு ஒரு காலம் வந்தா நயந்தாராக்கு ஒரு காலம் வரமலயா போயிடும்ன்னு கருவிக் கொண்டிருப்பேன்.
இப்போ ஊருக்கு வருகிறோம் யாராவது கல்யாணம் வைங்கப்பான்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிப் பார்க்கிறேன் ஹூம் எல்லாரும் கையை விரித்து விட்டார்கள். "ஏண்டி கல்யாணம்னா தாய்மாமா வர வேண்டாமா..ஊருக்கு வர்றதுக்கு எவ்வளவு செலவு ஆகுகிறது...எனக்கு வேற ஆபிஸ்ல பொறுப்பு கூடிக்கிட்டே போகுது இத விட்டா இன்னும் பத்து வருஷத்துக்கு லீவு எடுக்கமுடியாது பேசாம உன் பையனுக்கு ஆகஸ்டுல கல்யாணத்த வைச்சிடுன்னு அக்காவிடம் மன்றாடிப் பார்த்தேன். பத்தாவது படிக்கிற பையனுக்கு கல்யாணம் பண்ணக் கூடாதாம்... கறாராய் சொல்லிவிட்டார். சரி அவனுக்கு காதாவது குத்து என்று சொல்லிப்பார்த்தேன். கலிகால்ம்....தாய்மாமாவுக்கு மரியாதையே இல்லை. போகும் போது விஜய்குமார் டிவிடி ரெண்டு எடுத்துப் போய் போட்டுக் காட்டவேண்டும்.
என்னங்க ஒரு விக்கெட் கூட விழமாட்டேங்குதுன்னு தங்கமணிக்கும் ஒரே கவலை. இப்போதைய நிலவரப்படி நானே இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் தான் உண்டு போல இருக்கு. முத தரம் பண்றது தான் ஆக்சிடெண்ட் ரெண்டாவது தரம் அது சூயிசைட்ன்னு கெட்டியாய் இருக்கிறேன். ஆகையால் வலைமக்களே ஆகஸ்டு மூன்றாம் வாரம் வரை ஏதாவது கல்யாணம் நடந்தால் சொல்லவும், அஜந்தா வால் க்ளாக் ஒன்றை வாங்கிக் கொண்டு தவறாமல் சாப்பாடுக்கு வந்து விடுகிறேன். (இப்பவும் இந்த கல்யாண கிப்டா குடுக்குறாங்களா?). சேட்டுக்கள் ஆடி மாதம் பார்ப்பார்களா தெரியவில்லை. இல்லாவிட்டால் அதே கடிகாரத்தை வாங்கிக் கொண்டு , சௌகார்பேட் பக்கமா ஒதுங்கி, எனக்கு ரொம்பப் பிடிக்கும் நார்த் இன்டியன் புஃபே சாப்பிடலாம் என்று பிரயாசை.
பெரும்பாலும் அம்பாசமுத்திரத்தில் பெற்றோருடனும், சென்னையில் கொஞ்ச நாட்களும் இருக்கப்போவதாய் ப்ளான். வலைமக்கள் சந்திப்பு எதாவது நடந்தால் சொல்லவும். அந்த சமயம் ஊரில் இருந்தால் வந்து ஜோதியில் ஐக்கியமாகிக் கொள்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)