Saturday, July 08, 2017

Bigg Boss

ஓவியாவின் நிலை ஜென் நிலை. இதெல்லாம் ஒரு மேட்டரா .....சரி சரி நீ பாட்டுக்கு கத்திக்கிட்டு இரு ...நான் பாட்டுக்கு ஒரு டேன்ஸ் ஆடறேன் எனும் முதிர்ந்த நிலை. பார்பதற்கு இம்மெச்சூர்டாய் இருந்தாலும் அடிபட்டவர்களுக்கு இவர் ஒருவரே இதமான கரெக்டான ஆறுதலையும் அறிவுரைகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இளய சமுதாயத்தைப் பொருத்தமட்டில் எல்லாவற்றுக்கும் வேட்டியை மடித்துக் கட்டும் உணர்ச்சிப் பெருக்கெல்லாம் அநாவசியம். ஓவியா திரைத்துறையில் இதெல்லாம் நிறைய சந்தித்திருப்பார் போலும். ஜூலி இதில் எமோஷனல் டைப், ஒரு பக்கம் தனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தேடும் முகம். ஆனால் எப்போது எப்படி காய் நகர்த்த வேண்டும் என்று தெரியாமல் குழம்பி அடுத்தவர் செய்த தப்பிற்கும் சேர்த்து அவர்களிடமே போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார். பரணி இந்த விளையாட்டே புரியாமல் உப்பு எடுக்கப் போவது போல் தான் உண்டு தன் நடை உண்டு என்று நடந்துகொண்டே இருக்கிறார். ஆட்டத்தில் உப்புக்கு சப்பாணி மாதிரி இருந்த அனுயா போல் இருக்கும் பரணி தான் இந்த வாரம் வெளியேறுவார் என்பது எனது அனுமானம். கஞ்சா கருப்பு உணர்ச்சிக் குவியலாய் என்ன பேசுகிறோம் எதற்கு பேசுகிறோம் என்று தெரியாமல் காமெடியும், கடுப்பும் ஏத்திக்கொண்டிருக்கிறார். இவர் பேச வேண்டுமே என்று செய்யும் பஞ்சாயத்துகள் சொ.செ.சூ வகையறா. வையாபுரி - சுத்த அப்ராணியாய் இருந்தும் அவ்வப்போது கஞ்சா கருப்பிற்கு சைடு நாயனம் வாசிக்கிறார். கூடிய சீக்கிரம் இவருக்கும் நமீதாவிற்குமான சண்டையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நமீதா ஒரு ப்ளாக் ஹார்ஸ். நல்ல நோட்டில் ஆரம்பித்து தற்போது நிறம் மாறிக்கொண்டிருக்கிறார். சக்தி கஞ்சா கருப்யையும், பரணியையும் மட்டும் அவ்வப்போது அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். சக்திக்கும் ஹாரத்திக்குமான சண்டையை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.
காயத்ரியும், ஹாரத்தியும் தான் Bigg boss ஜாக்பாட். இவர்கள் இல்லாவிட்டால் ஷோ ப்ளாப் ஆகியிருக்கும். வில்லன்/வில்லி இல்லாவிட்டால் கதையும் கிடையாது நாட்டும் கிடையாது. என்னளவில் இவர்கள் தான் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் பாத்திரங்கள் (அதாவது இவர்களின் எதிரிகள் தான் வெல்லுவார்கள்) . இவர்களை கடைசி வரை பிக் பாஸ் வெளியேறாமல் பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். ஹாரத்தியிற்கு ஷோவை விட்டு வெளியேறும் போது துளி அளவிற்கு கூட பெரும்பாலான மக்களின் மனதில் மரியாதை இருக்காது என்பது எனது அனுமானம். ஒருவேளை காயத்ரியும் ஹாரத்தியும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் - மார்வெல் காமிக்ஸில் வில்லன்கள் மோதிக்கொள்வது மாதிரி Bigg Bossற்கு டபுள் ஜாக்பாட் தான்.
ரைஸா, ஆரவ் எல்லாம் வெறும் கவர்சிக்காகவே சேர்த்தது மாதிரி சுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனித்துவம் எதுவும் தெரியவில்லை.
முப்பதுக்கு மேல் எல்லாம் கூட்டணி அமைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருக்கிறார்கள் நாற்பதுக்கு மேல் ரத்தக் கொதிப்பு வந்து அடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆபிஸில், சொந்தக்கார வட்டத்தில் நாம் எல்லோருமே Bigg boss தான் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் (என்னையும் சேர்த்து) பார்ப்பவர்கள் எல்லாம் டென்ஷனாகி டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கிறோம்.
“வோய் டோண்ட் வீ பீ பாய்ஃப்ரெண்ட் கேர்ல்ஃபிரண்ட்” என்று கூலாய் கலாய்த்துக் கொண்டிருக்கும் ஓவியாவின் மனநிலையே மோன நிலை.

3 comments:

ராஜி said...

சினேகனும் கடுப்பேத்துறார். சக்தி, ஆரவ், ஓவியாதான் ஜெயிக்க வாய்ப்பு அதிகம் என்பது என் எண்ணம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Neengalum jothi'la aikkiyam aagitteengala? :) :) my favourite oviya, becos of her cool attitude

Gopal said...

The entire show is scripted and orchestrated.kamal also knows that we know.

Post a Comment

Related Posts