முதலில் ஒரு சம்பவம் பற்றி சொல்கிறேன் அப்புறம் ஒரு சினிமா.
லண்டனில் என்னுடைய ஆபிஸ் அருகில் ஹாட்டன் கார்டன்ஸ் என்று ஒரு தெரு இருக்கிறது. தெருவென்றால் சாதாரண தெருவல்ல. மிகச் சாதாரணமாய் சில பல மில்லியன் பவுண்டுகள் வர்த்தகமாகும் இடம். பதினாறாம் நூற்றாண்டு முதாலாகவே வைரம், வைடூரியங்கள் வியாபாரமாகும் தெரு. சின்னக் குண்டூசி சைஸ் வைரங்களிலிருந்து உலகின் பெரிய சைஸ் வைரங்கள் வரை பல்வேறு அபூர்வ ரகங்கள், பெரிய சைஸ் ரூபி, எமிரால்ட் என்று அசால்ட்டாய் கைமாறும் இடம். வைரங்கள் ஹோல்சேலில் விற்கும் பெரிய பெரிய வியாபாரிகளும் வியாபித்திருக்கும் இடம். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் வைர அட்டிகைகள் எல்லாம் மிகச் சாதரணமாக டிஸ்ப்ளேயில் வைத்திருப்பார்கள்.
லண்டனில் சின்னக் கடைகளிலேயே விலையுர்ந்த ஹாண்ட் பேக் மற்றும் நகைகள் வைத்திருக்கும் டிஸ்ப்ளே அலமாரியை பைக்கில் வந்து கோடாலியால் உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சிட்டாய் பறந்துவிடுகிறார்கள் என்பதால் இந்த ஹாட்டன் கார்டன்ஸில் பந்தோபஸ்திற்கு கேட்கவே வேண்டாம். பல்வேறு லெவெலில் செக்யூரிட்டிகள் இருக்கின்றன. இது தவிர வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து தனியாக ப்ரைவேட் செக்யூரிட்டியெல்லாம் வேறு வைத்திருக்கிறார்கள். புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டில் ஸ்பெஷல் ப்ரீக்வென்ஸி ரேடியோவில் மிகச் சாதரணமாக அடையாளமே தெரியாமல் வளைய வந்து கொண்டிருப்பார்கள். இந்த பந்தோபஸ்து எல்லாம் சாதாரணமாக நடந்து போகும் நமக்கு சுத்தமாக தெரியவே தெரியாது, ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸீற்கு எந்த குந்தகமும் வராது. ஹாட்டன் கார்டன்ஸில் சவுகரியமாக போய் வரலாம் - ஆனால் நம்முடைய ஒவ்வொரு அசைவயும் நமக்கே தெரியாமல் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை கடைகளும், ஹோல்சேல் ட்ரேடர்ஸும் ஒருவருக்கொருவர் பயங்கரமாய் நெட்வெர்க்ட். அங்கிருக்கும் வியாபாரிகளிடம் வர்தக ரீதியாக கொஞ்சம் ராங் டீலிங் செய்தாலோ இல்லை சந்தேகப் படும்படியாக இருந்தாலோ போதும் உடனே போட்டோ அத்தனை கடைகளுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் போய்விடும். அப்புறம் டீலிங் லேசுப்பட்ட டீலிங்காய் இருக்காது.
இந்தத் தெருவில் ஹாட்டன் கார்டன் சேஃப் லாக்கர் கம்பெனி ஒன்று உள்ளது. அண்டர் கிரவுண்டில் பல்வேறு கெடுபிடிகளுக்கும் கம்பிகளுக்கும் டெக்னாலஜிக்கும் நடுவில் சைஸ் வாரியாக லாக்கர்கள் வைத்திருக்கிறார்கள். செக்யூரிட்டிக்குப் பெயர் போன இந்த கம்பெனியில் பெரிய பெரிய சீமான் சீமாட்டிகளும் இந்த தெருவில் வர்தகம் புரியும் ஹோல்சேல் ட்ரேடர்ஸ்களும் லாக்கர்கள் வைத்திருப்பார்கள். ட்ரேடர்ஸ் நாள் இறுதியில் மிச்ச வைரங்களை இங்கே லாக்கரில் பூட்டி வைக்கும் வழக்கமும் உண்டு.
மேட்டர் என்னவென்றால் இங்கே இங்கிலாந்தில் போன வெள்ளியிலிருந்து திங்கள் வரை(06 April) நான்கு நாட்கள் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டரை முன்னிட்டு தொடர்ச்சியாக லீவு. இவ்வளவு செக்யூரிட்டி நிறைந்த இந்த ஹாட்டன் கார்டன் சேஃப் லாக்கர் கம்பெனியை திட்டம் போட்டு கொள்ளையடித்து விட்டார்கள். கேலிக் கூத்து என்னவென்றால் வெள்ளியன்று இத்தனைக்கும் அலாரம் ஒரு முறை அடித்தது என்று சொல்கிறார்கள். சும்மா வெளியிலிருந்து எட்டிப் பார்த்து உள்ளே ஒன்றும் சந்தேகப் படும் படியாக இல்லையென்று விட்டுவிட்டார்களாம். செவ்வாயன்று திறந்த போது தான் விஷயமே வெளியே தெரிந்திருக்கிறது. அவ்வளவு நடமாட்டமும் செக்யூரிட்டியும் இருக்கும் இடத்தில் லிப்ட் ஷாஃப்ட் வழியாக சுவற்றைக் குடைந்து பூமிக்கடியில் இருக்கும் சேப்டி லாக்கர் ரூமிற்கு பல்வேறு கம்பிகளையும், இரும்பு ப்ளேட் கதவுகளையும் ஹெவி கட்டரை கொண்டு அறுத்து லாக்கரை எல்லாம் ட்ரில் செய்து ஓப்பன் செய்து கொள்ளையடித்திருப்பது பெரிய அதிர்ச்சி. துல்லியமான ப்ளானிங்குடன் கன கச்சிதமாக ஹாலிவுட் படத்தை மிஞ்சுமளவிற்கு கொள்ளை நடந்தேறியிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு கொள்ளை போயிருக்கும் என மதிப்பிடுகிறார்கள். ஆனால் லாக்கர் வைத்திருப்பவர்கள் தொலைந்ததை முழுவதுமாய் டிக்ளேர் செய்யமாட்டார்கள் என்பதால் அஃபிஷியல் கணக்கு எவ்வளவு வருகிறது என்று இனிமேல் தான் தெரியும். லீவில் நிதானமாய் கொள்ளையடித்து போலீஸ் உஷாராவதற்குள் கொள்ளையர்கள் ஊரை விட்டுப் போய் இந்நேரம் தென் அமெரிக்காவில் போய் செட்டிலாகியிருப்ப்பார்கள் என்றும் மிஸ்டர் இங்கிலீஸ் கழுகு சொல்கிறார். அட தேவுடா
1971ல் லண்டனில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு வீக்கெண்டில் லாயிட்ஸ் பேங்க் லாக்கர் சேஃப்பில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் நடந்தேறியது. அப்போது கொள்ளையர்கள் பேங்கிற்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளி ஒரு கடையை வாடைக்கு எடுத்து பூமிக்கடியில் பாங்கிற்கு டனல் அமைத்து கொள்ளையடித்தார்கள். இதே போல் பயங்கர ப்ளானிங், துல்லியமான எக்சிக்யூஷன் எல்லாம் இருந்தும் சின்னதாய் ஒரு பெரிய கோட்டை விட்டார்கள். அது பயங்கர சுவாரசியம். அவர்கள் ஓருவருக்கொருவர் கோஆர்டினேட் செய்து கொண்டிருந்த வாக்கி டாக்கி ப்ரீக்வென்சியை ஒரு ரேடியோ ஆர்வலர் எதாச்சையாக கேட்டு போலிஸை உஷார் படுத்த, அவர்கள் எந்த ப்ரான்ச் லாயிட்ஸ் பேங்க் என்று தெரியாமல் (அதை அவர்கள் வாக்கி டாக்கியில் சொல்லவில்லை) இப்போது நடந்தது போல் ஓவ்வொரு கிளையாக போய் சும்மா வெளியிலிருந்து கண்ணாடி வழியாகப் பார்த்து அப்புறம் திங்கள் கிழமை சம்பந்தப்பட்ட கிளையை திறந்த போது தான் தெரியவந்தது. இதுதவிர ஒரு லாக்கரில் பிரிட்டிஷ் இளவரசியின்ஏடாகூடமான படங்களை ஒரு மாஃபியா கும்பல் ப்ளாக் மெயில் செய்வதற்காக வைத்திருநததாகவும் அதுவும் கொள்ளையில் பறி போனதாகவும் ஒரு தியரி நிலவுகிறது. இந்தக் கொள்ளை இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை மிக மிக சுவாரசியமாய் Jason Statham நடித்து The Bank Job என்று ஒரு ஹாலிவுட் படமாய் எடுத்தார்கள். இதுவரை பார்க்கவில்லை என்றால் பாருங்கள். ஒரு கொள்ளையை பக்கத்திலிருந்து பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அவ்வளவு க்ரிப்பிங்காய் இருக்கும் படம். அந்த பிரின்சஸ் தியரியை சினிமாட்டிக்காய் அழகாய் முடிச்சுப் போட்டு முடித்திருப்பார்கள்.

8 comments:
Sema narration! :)
விலாசம் குடுக்கறேன், அப்படி யாராவது இந்தப்பக்கம் வந்தா சொல்லுங்க.
Very Thrilling ...... Narration ! :)
initially i thought you are talking about this movie.Looks like the gangs are from Ocean series, Great planning and execution. Your narration is excellent, better than the movie.
நீங்கள் இந்த படத்தைப் பற்றி சொன்ன விதத்திற்குப்பின், அந்த படம் பார்க்காமலேயே பார்த்த முடித்த ஃபீல். உங்க ப்ளோக்-லே பாப்கார்ந், சமோசா மட்டும் தான் மிஸ்ஸிங்க். மத்தபடி தியேடர்-லே உக்காந்து படம் பார்த்த மாதிரி தான் இருக்குது...அவ்ளோ அழகான Narration.
மதுரம் - நன்றிங்கோவ்
பெருசு - ;)) கண்டிப்பா
வை.கோபாலகிருஷ்ணன் - மிக்க நன்றி சார்
அரசு - மிக்க நன்றி. Oceans seriesa மிஞ்சிருவாங்க போல என்னுடைய அடுத்த பதிவ படிங்க...அது மட்டும் நிஜமாக இருந்தால் ப்ப்ப்பா கலக்கல் ப்ளானிங்
கோபிகா - ஹா ஹா மிக்க நன்றிங்க உங்கள் ஊக்கமான கமெண்ட்டுக்கு
Bank Job.. Yes Nice movie and I own BluRay..
பார்த்துடுறேன் அண்ணா.! :-)
Post a Comment