இருள் கவிழ்ந்த இனிமையான மாலை நேரம். லண்டன் தேனிசையில் நேயர் விருப்பம் ஓடிக் கொண்டிருந்தது. பாட்டு கேட்பதே அரிதாகி விட்டது. இனிமையான மாலையில் மேலும் இனிமை சேர்க்கலாமே என்று கூடப் பாடிக் கொண்டிருந்தேன். பொறுக்கவில்லை.
ரெண்டு நாளா வாங்கிட்டு வந்த மாங்காய் ப்ரிஜ்ஜில் இருக்கிறது காய்ஞ்சு போயிடும் இனிமையான மாலையில் இனிமை சேர்த்துக்கிட்டே அப்படியே சின்னச் சின்னதா நறுக்கித் தரலாமே..மிளகாய் மாங்காய் போட்டு முடிச்சிடலாமே என்று உத்தரவாகிவிட்டது.
யாரப் பார்த்து என்னல சொன்ன...நான் மானஸ்தன்டா...எலே சம்முவம்...எடுறா வண்டியன்னு துண்டை உதறித் தோளில் போட்டு ஊர் ஊரா போவதற்கு நாம என்ன ஒபாமாவா... கத்திய எங்க காணோம்.. இங்க தான் வச்சிருப்ப...அந்த கூறு கெட்ட கத்தி தானா எங்கயோ போய் இசகு பிசகாய் ஒளிந்து கொண்டிருக்கும் என்று கூவும் கவரிங் மான் பரம்பரையாச்சே.
மாங்காயை சின்னச் சின்னதாய் அரிவது பிடித்த விஷயம் தான். பெருங்காயம் கடுகு தாளித்து உப்பு மிளகாய் தூவி...ஆஹா ஆஹா...
நேயர் விருப்பத்தில் ரா ரா சந்திரமுகி பாட்டு ஓட ஆரம்பித்தது. லக லக லக லகா என்று கூர் தீட்டி அரிய ஆரம்பித்தேன். அசால்ட்டாய் ரெண்டே நிமிஷத்தில் முதல் மாங்காய் டமால், ரெண்டாவது மாங்காய் பணால்.
உடனே எங்கேயிருந்தோ வந்துவிட்டார்கள் மகள்கள்.
டேட் கேன் வி சேஞ்ஜ் தி ரேடியோ டு கிஸ் எப்.எம் ப்ளீஸ்...
அடீங்ங்ங்க...நானே தமிழ்ப் பாட்டு கேக்கலையேன்னு இப்போத் தான் போட்டிருக்கேன்... கிஸ் எப்.எம் மாம்... அப்பான்னு கொஞ்சமாவது மட்டு மரியாதை இருக்கா... பாரதியார் என்ன சொல்லியிருக்கார் தமிழிசையை திக்கெட்டும் பரவச் செய்வீர்ன்னு. எட்டு மணி வரைக்குமாவவது பரவச் செய்வோம் அதுக்கப்புறம் ஷகீரா பரவட்டும் போதும். போய் அம்மா கிட்ட சமத்தா உட்கார்ந்துகோங்க. தமிழும் கத்துக்கோங்க பரம்பரைக்கு பெருமை சேருங்கன்னு ஒரே போடாய் போட்டு விட்டேன் யாரு கிட்ட.
ஒன்றும் சொல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
கொஞ்ச நேரத்திலேயே கொடுத்த அட்வைஸை சிரமேரற்றுக் கொண்டு இரண்டாவது மகள் தங்க்ஸிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்
அம்மா சரசுக்கு ரா ரான்னா என்னம்மா அர்த்தம்
........
அப்டீன்னா
...ம்ம்ம் அது தெலுங்கு...
திரும்ப சரணம் வந்த போது மூத்தவளுக்கும் அதே டவுட்டு சரசுக்கா...வாட் டஸ் தேட் மீன்
யேய்...லக லக லகாக்கு மீனிங்ங் தெரியுமாடி...அதெல்லாம் விட்டுடு கரெக்ட்டா இதக் கேளுங்க.. அம்மா பிஸியா இருக்கால்ல நோண்டாத அது தெலுங்கு. கொஞ்சம் பொறு கிஸ் எப்.எம் போடறேன்
ஓய்ந்தது என்று நினைத்தேன் இல்லை.
அப்படியே அப்பனோட ஜீன்ஸ் ...கரெக்ட்டா பிடிக்கிறதுங்க.. வார்த்தைய...அதெப்படி கரெக்ட்டா....
ஹலோ நேயர் விருப்பமா... எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தா பாட்டு போட முடியுங்களா....

10 comments:
There was a lot of pressure at work and I really laughed well to ease myself up. I wish you wrote more frequently buddy.
Same boat! Work la thalai pichuttu irukkum podhu - idukkan varungal nahuka appadinnu unga blog :) Thanks!
2015-in mudhal padhivu, Semma kalakkal. Pakka Dubukku style!
Appavukku pulla thappaama...;-)
Sema!!!
:) Had a good laugh! :)
Loving it!!!
Morning started with dynamite laughs!! Vaazhukkal!!
Regards,
Vikram Balaji
எப்ப சார் கடைய தொரபிங்க?
Laughed on my own ....for several minutes....Good one....யேய்...லக லக லகாக்கு மீனிங்ங் தெரியுமாடி...அதெல்லாம் விட்டுடு கரெக்ட்டா இதக் கேளுங்க.. அம்மா பிஸியா இருக்கால்ல நோண்டாத அது தெலுங்கு. கொஞ்சம் பொறு கிஸ் எப்.எம் போடறேன்
ஓய்ந்தது என்று நினைத்தேன் இல்லை.
அப்படியே அப்பனோட ஜீன்ஸ் ...கரெக்ட்டா பிடிக்கிறதுங்க.. வார்த்தைய...அதெப்படி கரெக்ட்டா....
Super Post Thaleeva.. Next time, please post a pic of that milagaai maangai... :) We can atleast see that and relish!!!
Madhu - Glad that you enjoyed this post :) Sure will try buddy
Poetry - Ohh double glad that you too enjoyed the post. Thanks
Girl of Destiny - Ohhh naane realise pannala.. semma sharp statistics :)
Amutha - Danks danks
Kookaburra - danku danku
Vikram - மிக்க நன்றி சாரே ;)
அனானி - உங்க கமெண்ட்டை ரொம்பவே ரசித்தேன். ரத்தின சுருக்கமாய் செம்ம ;) சாரி கடைய தொறக்க கொஞ்சம் லேட்டாகிடிச்சு
Mr.Vadhiya - hmmm if not for that govt jobs at the end - would have thought you are a real person :)
Anony - danku danku உங்களுக்கு பதிவு பிடித்தது பற்றி மகிழ்ச்சி
கோபிகா - ஹிஹி எனக்கு மிகப் பிடித்த ஊறுகாய் அது. அதுவும் சின்னச் சின்னதாய் அரிவது மிகவும் பிடிக்கும். இதென்ன செய்வது கடினமா என்ன ...போட்டோ போட்ருவோம் :)
Post a Comment