முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் ப்ரென்ச் படம் பார்க்கவில்லை - தமிழில் படம் பட்டாசு. கடலில் நீந்தி நொங்கெடுக்கிற திமிங்கலத்தைக் கொண்டு வந்து ஸ்விமிங் பூலில் நீந்தச் சொல்லி ஷோ காட்டியிருக்கிறார்கள். கமல் எனும் ஒரு ஆளுமைக்கு இதெல்லாம் ஜுஜூபி.
பிடித்தவை பிடிக்காதவை பிடித்துப் பிடிக்காதவை பிடிக்காமல் பிடித்தவை பிடிக்கவே பிடிக்காதவை
---------------------------------------------------------------
லாலாலா என்று ஆரம்பித்து மெயின் ப்ளாட்டுக்கு வராமல் வண்டியை நேரே நடு கூடத்தில் மோதி கதையை முதல் காட்சியிலேயே ஆரம்பித்திருக்கிறார்கள்.
கமல் காலேஜ் முடித்து நான்கு ஆண்டுகள் தான் ஆகிறது என்று காட்டாமல் நரைத்த தாடியோடு வலம் வருகிறார். அஜீத் வாழ்க. என்னுடைய தனிப்பட்ட ஆசை - கமலின் இந்த மாதிரி வயதொத்த பாத்திரங்களுக்கு தறகாலத் தமிழுலகில் செம தீனியிருக்கிறது. இதற்கு இயக்குனர்கள் கதை செதுக்கவேண்டும் (ஹிந்தியில் அமிதாப் செய்வது மாதிரி). அப்புறம் பாருங்கள் அட்டகாசத்தை
பாட்டு போட்டு படத்தை தொய்ய விடாமல் கடைசியில் பாட்டைப் போடுகிறார்கள்.
திரிஷாவை பிடித்த மிக அரிய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். படம் முழுக்க - முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு வருவதாலா என்று தெரியவில்லை.
மச்சம் வைத்தால் தான் வில்லன்கள் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்ற மரபை உடைத்து பக்கதில் குளு குளுவென்று இருக்கும் பெண்ணை குமுக்கென்று கவ்வி லபக்கென்று முத்தம் குடுத்து வில்லன்கள் கண்களில் மண்ணைத் தூவுகிறார் தல. ஆனால் கேமிரா ஆங்கிள் சரியில்லை. வெளிச்சமே இல்லாத இடத்தில்
பழைய சினிமா டெக்னிக்கில் பின்னால் இருந்தும் காட்டும் போது தலை மட்டும் தான் தெரிகிறது கமல் உம்மா குடுக்கிறாரா இல்லை சும்மா குடுக்கிறாரா என்று சரிவரத் தெரியவில்லை. இதில் வேறு ஆயிரத்தெட்டு பேர் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். என்னைய்யா அவசரம்? மது ஷாலினியாம்.
இன்சொமேனியா கடை மொதலாளிக்கு பணக் கஷ்டம் என்பதால் கடையில் பாதி லைட் எரியமால் இருட்டில் யுவதிகள் காதுக்கு பின்னாடி யுவன்கள் என்னத்தையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவரகள் பக்கத்திலிருப்பவர்களுக்கு டிஸ்டர்ப் ஆகுமே என்று வாய்க்குள்ளேயே வாய் வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடை அட்ரஸ நோட் பண்ணு நோட் பண்ணு சென்னை...ஈ.சி.ஆர் மெயின் ரோடு சென்னை. சொக்கா சொக்கா
கமலுக்கும் திரிஷாவுக்கும் காதல் இல்லை. சண்டை போடுகிறார்கள். அதிலும் காலுக்குள் கால் விட்டுப் பின்னி ஏடாகூடமாய் கிடுக்கிப் பிடியெல்லாம் போட்டு சண்டை நடக்கும் போது "வாட் இஸ் ஹாப்பனிங் ஹியர்" என்று நமக்கு டவுட்டு வரக் கூடாது என்று போகிற போக்கில் திரிஷாவை தல கூட ரெண்டு சாத்து சாத்துகிறார். பார்க்கிற நமக்கே வலிக்கிறது. பாவம் சிஸ்டர் திரிஷா.
பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர் என்று விலன்களில் ஹெவி வெயிட் காட்டியிருக்கிறார்கள். அதனாலோ என்னவோ யார் மெயின் வில்லன் என்று சரிவர மனதில் பதியவில்லை. பிரகாஷ் ராஜ் சிரிப்பு வில்லன் போலும். நிறைய இடங்களில் கெக்கப்பிக்குகிறார்.
ஆஷா சரத் இந்தப் படத்திலும் பையன் வீட்டுக்கு வந்தாச்சா என்று போனில் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்.
திருவல்லிக்கேணி மேன்ஷனுக்குள் புகுந்தது மாதிரி எந்தப்பக்கம் கதவைத் திறந்து போனாலும் வந்த இடத்திலேயே சுத்தி சுத்தி வருகிறார்கள். ஆனால் கதை நகருகிற வேகத்தில் அதெல்லாம் ரொம்பத் தெரியவில்லை.
டிக்கட் பைசா வசூல் க்யாரண்டி. கர்ப ஸ்திரீகளும் குழந்தைகளும் ஒரு வேளை நெளியலாம்