Tuesday, January 18, 2011

முகப்புத்தகம்

ஒரு காலத்தில் நலம் நலமறிய ஆவல் என்று இங்க் பேனா வைத்து எழுதியது போய், "லெட்டர் எழுதி குடுக்க ஒரு ஸ்டெனோ தேடிக்கிட்டு இருக்கேன்...அதுவரைக்கும் வேகாதது அட் வெந்தது டாட் காம்க்கு ஒரு மெயில தட்டு மாமு நானே கைப்பட திரும்ப ஈமெயில் போடறேன்"னு வந்து, "சத்தியமா ஈமெயில் அடிச்சேன்டா இன்விடேஷன் வரலையா ஒரு வேளை ஸ்பாம் போல்டருக்கு போயிருக்கும் நீ பார்த்திருக்க மாட்ட" என்று சால்ஜாப்பாகி, "என்னோட வெப் சைட் அடேஙகப்பா டாட் காம் வா நான் எங்க இருக்கேன்னு எல்லா அப்டேட்டும் ரெகுலரா போடறேன் நினைச்ச நேரத்துல் சௌகரியமா என்னைப் பத்தி தெரிஞ்சிக்கலாம் ஃபோட்டோ கூட போட்டிருக்கேன் அப்பாவையும் கூட்டிண்டு வந்து காட்டு" என்றாகி,  "டூட் சும்மா டபாய்க்காத ஐ.சி.க்யூலயோ ஜீடாக்கிலயோ பிங் பண்ணினா பதில் சொல்லிட்டுப் போறேன் வாய்யா"-ஆகி, " 'நொண்டியடித்துக் கொண்டே எல்லாத்தையும் பத்தியும்'ன்னு ஒரு ப்ளாக் வைச்சிருக்கேன். டெய்லி ஆபிஸ்லேர்ந்து அப்டேட் மயம் தான், கமெண்ட் கூட போடலாம், 2020ல என்ன பண்ணப் போறேங்கிறதுலேர்ந்து நீயும் நானும் ரெண்டாங் கிளாஸ் படிக்கும் போது நம்மூர் சந்துல சூச்சால எட்டு போட்டது வரைக்கும் பதிவு எழுதறேன்னா பார்த்துக்கோயேன்" என்று அதுவும் கடந்து போய் தற்போது பேஸ்புக் மசக்கையில் வந்து நிற்கிறது.

பேஸ்புக்கில் ப்ரொபைல் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே யாரோ என்னை நண்பராக்கிக் கொள்ள முயற்சி செய்ய எனக்கு ஒரு ஈமெயில் வந்து சரி இருக்கட்டும்ன்னு ப்ரொபைல ரெஜிஸ்தர் செய்தேன். இருந்தாலும் இதுவும் ஆர்குட் மாதிரி தான் என்ன பெரிசா என்று ரொம்பநாள் சீண்டவே இல்லை. அப்பப்போ யாராவது என்னை போனால் போகிறது என்று நண்பராக்கிக் கொள்வார்கள். நிறைய பேர் போட்டோவெல்லாம் போட அட பரவால்லையே ஆர்குட் மாதிரி இல்லாமல் இங்கே தைரியமாகவே போடுகிறார்களே என்று ஈடுபாடு கூட நாம் போடுகிற அப்டேட்டுகளுக்கு அங்கேயே கமெண்டும் லைக்கும் இருக்க சூப்பர் என்று ஆகி, ஆளாளுக்கு வீடியோ ஆடியோ என்று போட்டு அசத்த நானும் ஜோதியில் ஐய்க்கியமாகிவிட்டேன்.

நிற்க எனக்கு பேஸ்புக்கில் மிகப் பிடித்தது அங்கு வலம் வரும் வீடியோக்கள் தான். மிக மிக சுவாரசியமான விடீயோக்கள் வலம் வருகின்றன. எனக்குப் பிடித்த சில வீடியோக்களின் சாம்பிள்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.. தமிழ் பதிவர்களில் முக்காலே வாசி பேரை பேஸ்புக்கில் காண முடிகிறது. உண்மைத்தமிழனும் இன்னொரு ப்ளாகரும் ஏகப்பட்ட  பேருக்கு நண்பரகளாய் இருக்கிறார்கள். ப்ளாக்க்கு சம்பந்தமே இல்லாத எதோ ஒரு விதத்தில் தெரிந்த நண்பரை க்ளிக் செய்தால் கூட அங்கேயும் உண்மைத் தமிழன் இருக்கிறார். எனக்கு வந்த ஆச்சரியம் இன்னும் அடங்கவில்லை ஹூம்ம்ம்ம்

தற்சமயம் பேஸ்புக்கில் நிறைய உழன்று கொண்டிருக்கிறேன். "தோசை வார்த்தாகிவிட்டது கீழே வரவும்" என்று தங்கமணி பேஸ்புக் வழிதான் செய்தி அனுப்புகிறார். அந்த கமெண்டை லைக் பண்ணிவிட்டு நானும் டின்னருக்கு செல்லுமளவுக்கு குடும்பத்தோடு பேஸ்புக்கில் ஐய்க்கியமாகிவிட்டோம்.

பெயரை பதியும் போது ‘Dubukku Blog’ என்று பதிய நினைத்து எழுதுப் பிழையாகி 'Dubukku Bogl' என்று போட்டு(எதத் தான் கரெக்டா செஞ்சிருக்கோம்) பேஸ்புக் keyword என்று திரும்ப மாற்ற அனுமதிக்கவில்லை. போங்கடான்னு விட்டுவிட்டேன்.

யோவ் எந்தக் காலத்துலயா இருக்கீரு!.. பேஸ் புக்லாம் அரதப் பழசு அதற்கடுத்த கட்டமாக நாங்கள்லாம் ட்விடருக்கு எப்பவோ போய்ட்டோம்ல என்று நிறைய பேர் சிரிக்கலாம். "ரெண்டுக்குப் போய்விட்டு திரும்பிப் பார்க்கிறேன் சொம்பை காணவில்லை" என்று ரத்தினச் சுருக்கமாய் இன்னும் எழுத வரவில்லை. கலை கைக்கு வந்தவுடன் ட்விட்டருக்கு மாலை போட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். அதுவரை அடியேனுடைய கால அபத்ததை பொருத்தருளவும்.


பேஸ்புக்கில் வலம் வந்ததில் பிடித்த வீடியோக்களில் சில


மருதமலை மாமணியே ரீமிக்ஸ் அந்த அம்மணியின் கொண்டையும் அவர் பண்ணுகிற சேட்டையும் ரொம்பவே ரசிக்கும் படி இருக்கின்றது. தேவரின் குணம் காக்கும் வேலைய்யா....ஈஈய்யா (oh yeah மாதிரி)!! இதுல "ஒயே ஒயே...ய்யேய்...வரே வா"உறுமலோட கடைசியில் "க்யா பாத் ஹை" ஹிந்தி வேற. சரிதான் :))) முருகன் முக்குல போய் குந்திக்குவார். ஆனால் பாட்டில் இருக்கும் எனர்ஜியை பாருங்கள் !!




ஹிந்தி படம் ஒன்றில் ஆங்கிலத்தை கடித்துக் குதறும் நல்ல காமெடி ஒன்று





படத்தைப் பார்த்தால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள். - The Most offensive translator - பயங்கர காமெடி

63 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பயங்கர காமெடி...chanceless...ha ha ha

BTW - you can change the display name in facebook... I did it couple of times... venumnaa sollunga... kammi consulting charge thaan.. (ha ha ha)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ahaa..me the first... idhukke oru vizha edukkanum...ha ha ha...

Porkodi / LK - ha ha ha ha ha ha ha

பத்மநாபன் said...

Bogl.. நாம தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டோம்....
வேகாதது @ வெந்தது காம்.. நல்ல தளமாக இருக்கிறது...
மருதமலை பாட்டு தமிழை கொலை பண்ணாம , ஹை ஹைன்னு நல்லா மாடு ஓட்டிருக்காங்க....
..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தேடித்தேடி கண்டுபிடிச்ச என் ப்ரண்ட்ஸ் கிட்ட இப்படித்தான் பந்தா விட்டு.. அப்டேட் எல்லாம் போட்டு .. அப்பப்ப ”டீ எப்படி டி .. ப்ரவுட் ஆஃப் யூ டி” ந்னு பேரு வாங்கிட்டிருக்கேன் .. இப்படி எல்லாத்தையும் எழுதிட்டா நாங்க என்ன பண்ரது..:))))

துளசி கோபால் said...

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு............:-))))))

ராம்ஜி_யாஹூ said...

பேஸ்புக்கில் ப்ரொபைல் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே யாரோ என்னை நண்பராக்கிக் கொள்ள முயற்சி செய்ய எனக்கு ஒரு ஈமெயில் வந்து சரி இருக்கட்டும்ன்னு ப்ரொபைல ரெஜிஸ்தர் செய்தேன்.




அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Porkodi (பொற்கொடி) said...

:D

Chitra said...

தற்சமயம் பேஸ்புக்கில் நிறைய உழன்று கொண்டிருக்கிறேன். "தோசை வார்த்தாகிவிட்டது கீழே வரவும்" என்று தங்கமணி பேஸ்புக் வழிதான் செய்தி அனுப்புகிறார். அந்த கமெண்டை லைக் பண்ணிவிட்டு நானும் டின்னருக்கு செல்லுமளவுக்கு குடும்பத்தோடு பேஸ்புக்கில் ஐய்க்கியமாகிவிட்டோம்.


...... SUPER COMEDY!! ha,ha,ha,ha...

Porkodi (பொற்கொடி) said...

//உண்மைத்தமிழனும் இன்னொரு ப்ளாகரும் ஏகப்பட்ட பேருக்கு நண்பரகளாய் இருக்கிறார்கள். ப்ளாக்க்கு சம்பந்தமே இல்லாத எதோ ஒரு விதத்தில் தெரிந்த நண்பரை க்ளிக் செய்தால் கூட அங்கேயும் உண்மைத் தமிழன் இருக்கிறார். //

என் நிலைமையை திருப்பி சொல்லவும் வேணுமோ.. எங்க போனாலும் 20 ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ்.. ஒண்ணு விட்ட இல்லன்னா விடாத சொந்தம். அதனால தான் இப்பல்லாம் நான் ரொம்ப சைலண்டா இருக்கேன்! :D

Porkodi (பொற்கொடி) said...

அப்பாவி அக்கா, நீங்க உங்க‌ கதையை முடிச்சுட்டு அப்புறம் வேற எந்த கன்சல்டிங் ஆணியை வேணாலும் பிடுங்குங்க! (ஆனா ஒண்ணு ஏற்கனவே நிறைய அறிவாளிகள் (நானே தான்) கன்சல்ட் பண்ணியும் சும்மா சீன் போட்டுட்டு இருக்காரு தல..)

sriram said...

இப்போ என்னா வாத்யார், நீங்க மூஞ்சுபுத்தகத்தில இருக்கீங்க, அதுலேயும் உங்கள நண்பரா ஆக்கி அங்கியும் வந்து கும்மி அடிக்கச் சொல்றே, அவ்ளோதானே வாத்யார்? செஞ்சிட்டாப் போவுது...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

//செஞ்சிட்டாப் போவுது...//

இவர் வேறே அப்பப்போ வந்து அந்த வருஷத்துக்கான ஜோக்கை அடிச்சுட்டு போறாரு..

இத்துடன் இன்றைய கொடி-கும்மி முடிவடைகிறது, மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை..

Vidhya Chandrasekaran said...

ட்விட்டர் விளக்கமும், வீடியோக்கான கமெண்டும் செம்ம:))))))))

தக்குடு said...

சிரிச்சுகிட்டே இருக்கேன் தல, அந்த சொம்பை காணும் சான்சே இல்லை...:) கத்ரினா வீடியோ கூட மூஞ்சி புஸ்தகத்துல இருக்காமே!!..:PP

கொஞ்சம் லேட்டா வந்தா நாற்காலி சண்டை வருதுன்னு நாட்டாமை இந்த தடவை வந்து ஆஜர் போட்டாச்சு போலருக்கு!..:))

அமுதா கிருஷ்ணா said...

முகப்புக்கில் இல்லாத ஆட்கள் இல்லை இப்ப.

பத்மநாபன் said...

இப்ப தான் பார்த்தேன் இந்தி பட இங்கிலிஷ் காமெடியும்.. மொழி பெயர்ப்பு காமெடியும் அதகள விடியோ..

Anonymous said...

moonju puthagam...oh yes...idhu super.....dubukku sir....ennatha solla..fb pisasu ellarayum pidhicchu aatugiradhu...solla marandhuteene..adhula farmvillennu onnu irukkilla...naan petha pennarasi...ennodu gardenukku thaaneer ootru enral ,sardhan boring...engiral...facebook farmivilleill mattum ayyo ennoda crops wither aayidum enru kavalai padugiral...ennatha solla...en rengamani kadhai vera...officekku phone pannal..konjam busy appuram pesattuma engira manushan...fbill eppo vareenga enru kettal mattum bathil taanu varum...mothathil kudumbame jothiyil ayyikiyamaagi vittadhu.kaalam seidha kolamadi!!!!post super!!!!
nivi.

Paavai said...

eppadi vilayadareenga varthaigalai vechu ... twitter explanation super :)sombu message avalavu skills ungalai twitteril dada akkidum start pannunga

middleclassmadhavi said...

சூப்பர் பதிவு! (ஆங்கிலத்தில் தான் பின்னூட்டம் எழுதணும்னு ஒண்ணும் மூஞ்சிபுக்ல போடலியே?!!)

வீடியோவில் முதல் இரண்டில்,- முக்கியமாக இரண்டாவதில் - வடிவேலுவும் மூன்றாவதில் விவேக்கும் நடித்தால் நன்றாகத் தானிருக்கும் :)) இதையெல்லாம் காப்பிகாரங்க பாத்திருப்பாங்ளா?!!

Arul Kumar P அருள் குமார் P said...

\\"ரெண்டுக்குப் போய்விட்டு திரும்பிப் பார்க்கிறேன் சொம்பை காணவில்லை" என்று ரத்தினச் சுருக்கமாய் இன்னும் எழுத வரவில்லை.\\

இந்த விசயத்தில் நானும் உங்க கட்சி. வழக்கமா பதிவுல தான் சிரிக்க வைப்பீங்க ...இப்போ வீடியோ கூட சேர்ந்து சிரிக்கிறோம். மூஞ்சி புத்தகத்துல வந்துடிங்கில்ல, விடுங்க அங்கயும் உங்கள follow பண்ணிருவோம்.

அன்புடன் ,

-வெட்டிப்பையன்

Arul Kumar P அருள் குமார் P said...

ஆமா யார் இந்த நாட்டாம , பின்னூட்டத்துல தக்குடு சொல்லி இருக்கார். லிங்க்க கொடுத்தா பின் தொடர வசதியா இருக்குமில்ல...!

மனம் திறந்து (மதி) said...

//நீயும் நானும் ரெண்டாங் கிளாஸ் படிக்கும் போது நம்மூர் சந்துல சூச்சால எட்டு போட்டது//

எப்பவோ நம்ம பண்ண இந்த வித்தையெல்லாம் இன்னும் மறக்காம இருக்கீங்களே பாஸ்....Hats Off!

//"தோசை வார்த்தாகிவிட்டது கீழே வரவும்"// :)) பழைய Gavaskar விளம்பரத்தை நினைவூட்டுகிறது!

"சொம்பு" மேட்டர் அமர்க்களம்! இப்படி அதிரடியா Twitterஐ Shitterஆ பண்ணிட்டீங்களே பாஸ்! அவங்க market value nosedive ஆகியிருக்கும் இந்நேரம்!!!பாவம் (:

@அருள் குமார்: இந்த நாட்டாமை வேற யாரும் இல்லீங்கோ..."என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்" தானுங்கோ! (அப்பாடா! ஒரு புண்ணியம் பண்ணிட்டேன் இன்னைக்கு...!!!)

ACE !! said...

Bogl-ன் இரகசியம் இதுதானா... எதோ நியுமராலஜி படி வெச்சிருக்கீங்கன்னு நெனைச்சேன் :P

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//Porkodi (பொற்கொடி) said - அப்பாவி அக்கா, நீங்க உங்க‌ கதையை முடிச்சுட்டு அப்புறம் வேற எந்த கன்சல்டிங் ஆணியை வேணாலும் பிடுங்குங்க! (ஆனா ஒண்ணு ஏற்கனவே நிறைய அறிவாளிகள் (நானே தான்) கன்சல்ட் பண்ணியும் சும்மா சீன் போட்டுட்டு இருக்காரு தல..) //
என் "ஜில்லுனு ஒரு காதல்..." (சும்மா ஒரு PR கண்டுக்காதே...) தொடர்கதைல நீ இவ்ளோ ஆர்வமா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல கொடி... ஒரே பீலிங்... சரி சரி உடு... ஆமா யாரோ அருவாளுனு... ச்சே... அறிவாளிகள்... அவங்கள விசாரிச்சதா சொல்லுங்க அம்மணி...

//இத்துடன் இன்றைய கொடி-கும்மி முடிவடைகிறது, மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை..//
மொக்கையுடன்,
மொக்கை அரசி கொடி... (I guess you hit post comment before completing the sentence...just wanted to help you finish it... சக கழக கண்மணியா இது கூட செய்யலேன்னா எப்படி சொல்லு... ஒகே ஒகே... தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் கொடி...)

//ஆமா யார் இந்த நாட்டாம , பின்னூட்டத்துல தக்குடு சொல்லி இருக்கார். லிங்க்க கொடுத்தா பின் தொடர வசதியா இருக்குமில்ல...! //
அடக்கடவுளே... இப்படி ஆகி போச்சே நிலைமை... அவ்ளோ கம்மியாவா கும்மி இருக்கோம்...

ப்ளாக் owner என் மேல ஸ்டே ஆர்டர் வாங்கறதுக்கு முன்னாடி மீ எஸ்கேப்...

Anonymous said...

இதையும் பாருங்கள்!

வேலவா......வடிவேலவா....

http://www.youtube.com/watch?v=ZDXxad1MAy4

வெற்றி வேல் முருகனுக்கு.... Ah! Say...Ah! Say... அரோகரா....அரோகரா....

எல் கே said...

நெறயக் காமெடி வீடியோ இருக்கு அங்க. ட்விட்டரை விட இதுதான் நல்லா இருக்கு

Bharath said...

இதவிட Twitter'க்கு விளக்கம் சொல்லவே முடியாது.. வாத்தியாரே!! Hats Off!! :)

Sh... said...

என்னோட favourite அருணா சாய்ராம் க்கு friend request போடலாமான்னு யோசிச்சு யோசிச்சு சரி அப்புறம் போடலாம்ன்னு லாக் ஆஃப் பண்ணி, அந்த அறிவுபூர்வமான கேள்வி இருக்குதான்னு பாக்க உங்க ப்ளாக் பக்கம் வந்தா, என்ன ஆச்சரியம் நீங்க facebook பத்தி எழுதிருக்கீங்க!

திருப்பி உள்ளே போயி dubukku bogl தேடினா, உங்கள காணோமே. Privacy setting-ஆ?

Unknown said...

நல்லா ஃபார்ம்ல இருக்கிங்க. ட்விட்டர் ஷிட்டர் ஆனாலும் சூப்பர்..... உங்க தங்கமணி பாவம், "சொம்பை நாட்டாமை தூக்கிட்டுப் போயிட்டார்" அப்படினு அடிச்சாவது, நீங்கள் நிறைய ட்விட்டும் வாய்ப்புக்கள் வர வாழ்த்துகள்.

முகமூடி போட்டுட்டு இருக்கிற வரை இந்த முகநூல் வம்பு அவ்வளவு இல்லை. எங்க திரும்பினாலும், ப்ளாகர்கள் தான் மூஞ்சிப்புத்தகத்தில்....

மருதமலை விடியோவில பாட்டின் எனர்ஜியையும் அந்தம்மா போட்டிருக்கிற திருமாங்கல்ய "சோக்கர்" (ஏதேனும் குறியீடோ?) ஐயும் ரசிச்சேன்!

sriram said...

KP.. நியூஸ் வாசிக்கற பொம்பளைங்களோட Accessories இவ்ளோ நாளா பாத்தீங்க, இப்போ யூடியூபிலே ஒரு அம்மணி வந்து பாடினாலும் அதையேத்தான் பாப்பீங்களா?

”எனர்ஜியை ரசிச்சேன்” சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவரா போகுறதுக்கு எல்லா தகுதியும் இருக்கு உங்ககிட்ட

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Sh... said...

இப்போ பார்த்து ரசிச்சது - http://www.youtube.com/watch?v=KQtFCPF40As

Dubukku said...

அப்பாவி - மிக்க நன்றி ஹை :) ஏங்க இதுக்கெல்லாமா இம்புட்டு சந்தோஷம் :)) பெயருல என்ன மேட்டர்ன்னா அது ஒரு கீவேர்ட். அதுனால அவங்க ஆட்டமேட்டட் சிஸ்டம் அத ரிஜெக்ட் பண்ணிடுது இப்படியெல்லாம் பெயரு இருக்காதுன்னு அதான் மாத்த முடியல :))

பத்மநாபன் - ஆமாங்க அதான் ரகசியம் :)) கரெக்ட் அவங்க பெயரு சுசீலா. தமிழ் பொண்ணு தான் இங்க லண்டன் தானாம். உச்சரிப்ப கொலை செய்யல :))

முத்துலெட்சுமி - ஹா ஹா அப்படியா...சரி சரி உங்க ப்ரெண்ட்ஸ் கண்ணுல இந்த பதிவு படாம பார்த்துக்கறேன்...:))

துளசி - ஆமா அக்கா இப்போ முருகனையே கடிச்சிட்டாங்க :))

ராம்ஜி - உண்மையாதாங்க....அதுல தான் நான் இம்ப்ரெஸ் ஆனதே :))

பொற்கொடி - :))) என் நிலைமையையும் சொல்லிட்டேனே...பாதிக்கு மேல குடும்ப வட்டமே...அவ்வ்வ்வ்வ்வ் என்னத்த லிங்க் பண்றது நான் பேஸ்புக்குல :))

சித்ரா - மிக்க நன்றிங்கோவ் :)))


பொற்கொடி - இந்த வம்பு தானே வேண்டாங்கிறது ப்ளாக்ங்கிறது அவங்க ஆட்டேமேட் அப்ப்ரூவல் சிஸ்டம்ல கீவேர்ட்ன்னு ரிஜெக்ட் ஆகுதுங்கிறேன் சீன் ந்னு சொல்றீங்களே அவ்வ்வ்வ்வ் :)))


ஸ்ரீராம் - அதையும் அடிச்சிருந்தேன் விடுபட்டு போச்சு நல்லவேளை நீங்களே சொல்லிட்டீஙக:)

வித்யா - மிக்க நன்றி ஹை மேடம்

தக்குடு - ஆமாம் ஆனா அதப் பத்தி க்ளேரிஃபை பண்ணிட்டேனே இன்னிக்கு :))

அமுதா - ஆனா அதுவே பிரச்சனையும் கூட :))

பத்மநாபன் - இத முகப்புத்தகத்திலும் பொட்டிருந்தேன்


நிவி - வாங்க மேடம் அய்ய்ய்ய்ய்ய்யோஓஓ அந்த ஃபார்ம் வில்லேவும் பெட் வில்லேவும் சொல்லி மாளாது எங்க வீட்டுல தங்கமணியும் இதே கேஸ் தான். உங்க வீட்டு ரங்குவும் நாணும் ஒரு கட்சி இந்த விஷயத்துல. அதுக்கு தண்ணி ஊத்து அறுவடை பண்ணுன்னு படற கஷ்டங்கள் சொல்லி மாளாது !!

பாவை - ஹீ கீ ஏதோ சொல்றீங்க நன்றி மேடம். ட்விட்டர் தெரியல பார்ப்பொம் :))

மி.மாதவி - நன்றி ஹை மேடம். ஆமாம் நல்லா இருக்கும். காப்பி காரங்க பார்த்தாங்களா தெரியலையே வந்துடும் சீக்கிரம்

அருள்குமார் - மிக்க நன்றி தல. பேஸ்புக் பக்கம் வாங்க நண்பராகுவோம். நம்ம என்றும் அன்புடன் பாஸ்டன் ஸ்ரீராம் தான் நாட்டாமை :))))

மதி - வாங்க கோதால குதிச்சாச்சு போல போஸ்ட போடுங்க சீக்கிரம் நாங்களும் வந்து கும்மறோம் :))

ஏஸ் - ஆமாங்க இதான் ரகசியம் :))

அனானி - சும்ம ஒரு டம்மி பெயராவது போட்டிருக்கலாம்ல. மிக்க நன்றி சூப்பர் லிங்கும் தகவலும் குடுத்திருக்கீங்க :)))

எல்.கே - ஆமாம் தல

பரத் - மிக்க நன்றி தல. ரொம்ப நாளாச்சு போல இந்தப் பக்கம் வந்து :P

ஷ் - அடடா அந்த அறிவுபூர்வமான கேள்விய விட மாட்டீங்க போல இருக்கே அது சும்ம டமாசுக்கு சொன்னேங்க ...அறிவுப் பூர்வத்துக்கும் எனக்கும் ரெண்டரை மைல் தூரம்ங்க :)) இப்போ பேஸ்புக்குல ட்ரை பண்ணிப் பாருங்க இல்ல இது வொர்க் ஆகுதான்னு பாருங்க http://www.facebook.com/dubukku

Dubukku said...

கெக்கே பிக்குணி - மிக்க நன்றி மேடம். அட திருமாங்கல்ய சோக்கர் இப்பொ தான் பார்க்கறேன் :)) ஒருவேளை கல்யாணமாகி தாலியா இருக்குமோ??

ஸ்ரீராம் - அண்ணே :))))

ஷ் - அருமை இல்ல...அதுல வந்த கமெண்ட் அதவும் ரொம்ப அருமை :)))

Unknown said...

யு.எஸ்.இல் நிறைய (தமிழல்லாத) இந்தியப் பெண்கள் திருமாங்கல்யம் அப்படித் தான் சோக்கர் ஸ்டைல்ல‌ போடுக்கிறாங்க. நான் பாத்த வரை தமிழ்ப் பெண்கள் தழையத் தழைய, அல்லது, பாதுகாப்பா வீட்ல விட்டுட்டு... அதான் நோட் பண்ணேன். ஆனாலும் அந்தம்மா நல்லா ரசிச்சுப் பாடினாங்க.

இமெயில்ல வந்த டுபுக்கு கமென்டு 1 இங்க காணலை. என்றாலும், ப்ளாக், கார்பரேட் போன்ற பெயர்ச்சொற்கள் முகநூல் பயனர் பேரில் வர அனுமதி கிடையாது. ப்ளாக் என்ற சொல்லுக்கு கொஞ்சம் ஸ்பெல்லிங் மாற்றவும். தமிளர் ஷ்டைல்ல, Plog or something like that ட்ரை மாடுரீ.

Unknown said...

Try Tamilanblog ...

மனம் திறந்து (மதி) said...

1) ஒரு தன்னிலை விளக்கம்...நான் தான் "சாட்டிங் சாட்டிங்" லே "அறிமுகமான" ASL "அனானி"ங்க!
"வாத்யார்" தயவிலே பாஸ்போர்ட் எடுத்துட்டேன்...விசா இப்போதைக்கு கிடைக்கிற மாதிரி தெரியலை! இண்டர்வியூவிலே "fail" ஆயிட்டேன்!...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்!

2) //கெக்கே பிக்குணி:"... சொம்பை நாட்டாமை தூக்கிட்டுப் போயிட்டார்"...//

மேடம்: இந்த நாட்டாமையை பஞ்சாயத்திலே "நிக்க வைச்சு விசாரிக்கணும்" என்கிற உங்க நீண்ட நாள் (மானசீக) ஆசையை பிசாத்து "சொம்பு" மூலமாவே பூர்த்தி பண்ணிக்க முயற்சி பண்றீங்கண்ணு நினைக்கிறேன்! அவ்வளவு லேசில நடக்கிற காரியம் இல்ல இது அம்மணீ ...! (நாட்டாமை! இந்த 'கண்ணுக்குட்டி அப்பிரசண்டி' எவ்ளோ ஷோக்கா உங்களை சப்போர்ட் பண்றேன் பாருங்க...தேர்தல் சமயத்துல பார்த்து கவனிங்க...இன்னா? வர்ட்டா!)

Unknown said...

மனம்திறந்து,

//மேடம்: இந்த நாட்டாமையை பஞ்சாயத்திலே "நிக்க வைச்சு விசாரிக்கணும்" என்கிற உங்க நீண்ட நாள் (மானசீக) ஆசையை பிசாத்து "சொம்பு" மூலமாவே பூர்த்தி பண்ணிக்க முயற்சி பண்றீங்க//

யாரை நீங்க நாட்டாமைன்னு சொல்றீங்கனு எனக்கு நிசமாவே புரியலை. இருந்தாலும், என் பின்னூட்டத்தில //உங்க தங்கமணி பாவம், "சொம்பை நாட்டாமை தூக்கிட்டுப் போயிட்டார்" அப்படினு அடிச்சாவது, நீங்கள் நிறைய ட்விட்டும் வாய்ப்புக்கள் வர வாழ்த்துகள்.// இதுக்கு அருஞ்சொற்பொருள் (நேரம்டா!):

இவரு தங்கமணிக்குப் பொழைக்கத் தெரியலை, "சொம்பைக் காணோம்"னு "அங்கிட்டு இருந்து" யாராச்சும் ட்விட் அனுப்புவாங்களா? இந்த மாதிரி ட்விட்டற ஆளுக்கு மனைவின்னா எப்படி காண்டாகியிருப்பாங்க? எனவே அவங்க பாவம்.

கொஞ்சம் இவரு தங்கமணி, சாமர்த்தியமா "சொம்பை நாட்டாமை தூக்கிட்டுப் போயிட்டார்" அப்படினு அடிச்சா, இவரும் நம்பிட்டு, "அங்கியே உக்காந்து", (ரூம் போட்டு உக்காந்து) யோசிச்சு நிறைய ட்விட்டும் வாய்ப்புகள் வரும்....

உங்களுக்கு என்னைப் பத்தி ரொம்ப தெரியாது போலிருக்கு;-)

மனம் திறந்து (மதி) said...

@கெக்கே பிக்குணி மேடம்:

//யாரை நீங்க நாட்டாமைன்னு சொல்றீங்கனு எனக்கு நிசமாவே புரியலை//
ஹைய்யோ! இப்படி முகம் தெரியாத நாட்டாமைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு உதவப் போனது தப்பாப் போச்சே! அம்பேல் ...விடு ஜூட்!

//"சொம்பைக் காணோம்"னு "அங்கிட்டு இருந்து" யாராச்சும் ட்விட் அனுப்புவாங்களா? இந்த மாதிரி ட்விட்டற ஆளுக்கு மனைவின்னா எப்படி காண்டாகியிருப்பாங்க?//

"அங்கிட்டு இருந்து" தான் ட்வீட் கூட பண்ண முடியுதுன்னா அந்த ஆண்மகனுக்கு வீட்டிலே எவ்ளோ சுதந்திரம் இருக்கும்னு நீங்களாவது நினைச்சுப் பாத்தீகளா? மாட்டீங்க! ஏன்னா நீங்களும் அம்மணி தானே? இந்தக் கல்யாணம் ஆன ஆம்பிளைங்க படும் அவஸ்தை இருக்கே....ஸ்ஸ்ஸ்ப்ப்பா சொல்லி மாளாதுங்க!

//உங்களுக்கு என்னைப் பத்தி ரொம்ப தெரியாது போலிருக்கு;-)//

"ரொம்ப" என்ன...சுத்தமாவே தெரியாதுங்க...நானே அப்பிரசண்டி இங்கே...நீங்க வேற! Anyway, there is nothing personal about whatever I said here! எல்லாமே தமாசு தாங்க!... ரொம்ப பயமுறுத்தாதீங்க மேடம்! ப்ளீஸ்! இல்லாட்டி நானு பழையபடி மாடு மேய்க்கப் போய்டுவேன்...ஸ்கூல் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டேன்....ஆமா!

மனம் திறந்து (மதி) said...

@ தக்குடு, கேடியக்கா, பாவை, சுபா:
"வாங்க வாங்க...வருக...வருகன்னு" சொன்னீங்களே....இதுக்குத் தானா! KP மேடம் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்னு ஜாடை மாடையா சொல்லியிருக்கப் படாதா!...ஹ்ம்ம்...எல்லாம் முடிஞ்சு போச்சு....! இனிமே சொல்லி என்ன...சொல்லாட்டி என்ன? நீங்கள்லாம் இந்த மாதிரி கூட இருந்து குழி தோண்டுவீங்கன்னு இந்தப் பச்சப் புள்ளைக்கு தெரியாமப் போச்சே! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்!

Unknown said...

மனம் திறந்து... சொல்றேங்க, உங்க பின்னூட்டத்தை முதல்ல பார்க்கும் போதே, வார்த்தை விளையாட்டைப் பார்த்து (ட்விட்டர் ஷிட்டர்) பிரமிச்சுட்டேன். வாவ், விவரிக்க வார்த்தையே இல்லை. Ok, just kidding...

நான் சொன்னதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க, சும்மா அடிச்சு ஆடணும் அவ்வளவு தான். நீங்க டுபுக்குவை காலை வார ரெடின்னா, நீங்க நம்ம சைடு (என்ன, அவர்ட்ட சொல்லிடாதீங்க). பொம்பளைங்களைத் தான் சப்போர்ட் செய்வீங்கன்னா, எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவுமே உண்டு (இதுவும் பப்ளிக்கா சொல்ல வேண்டாம்).

நான் வந்து ரொம்ப அப்பிராணி, அந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதானு தானே கேட்டேன்.. டேக் இட் ஈஸி:-))

டகிள் பாட்சா said...

சரி! நம்ம டுபுக்கு அண்ணாச்சி ‘முகப்பக்கத்தை’ பாக்கலாமேன்னு search பண்ணதில் பக்கத்திலேயே ‘ Adinga Dubukku ன்னு ஒருத்தர் இருக்காரே! உம்ம பங்காளியா!

Porkodi said...

தெரியாதுங்க கெக்கேப்பிக்குணி.. ஆமா நீங்க அப்பாவி தங்கமணியை விட அப்பாவியா இல்ல அப்பாவி தங்கமணியோட தங்கைமணி (நான் தான் நான் தான்) விட அப்பாவியா?

ஒரு புது அப்ரெண்டிசு வந்தா இப்படியா பயமுறுத்தறது? டுபுக்கு ப்லாக்ல டுபுக்கு வாத்தியார், மாணாக்கர்கள்ல பாஸ்டன் ஸ்ரீராம் நாட்டாமை சொம்பு, தக்குடு நசுங்கின சொம்பு, அப்பாவி தங்கமணியும் நானும் தங்கச் சொம்பு.. அப்புறம் சுபான்னு ஒரு அக்கா, அம்பின்னு ஒரு அண்ணா (இவர் எத்தனை நாளா கேசரி கிண்டறாரோ பாவம்..) பாவை, இவங்கள்லாம் சேர்ந்த தான் இந்த டுபுக்குபட்டி ஹைஸ்கூல். (இன்னும் யாரையாவது விட்டுட்டேன்னா ப்ளீஸ் அடிக்கடி அட்டென்டன்ஸ் போடுங்கப்பா..)

மனம் திறந்து மதி, இவ்ள பேச்சு பேசறீங்க, விசா கிடைக்கலியாக்கும்? நம்பிட்டோம்..

Dubukku said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் நேத்திக்கு எல்லாருக்கும் தனித்தனியா போடிருந்த பதில் பின்னூட்டத்தை காணும் :((((((((((((((((( (போட்ட ரெண்டாவது செட் மட்டும் தான் இருக்கு :((

அப்பாவி - மிக்க நன்றி. அடடா என்னங்க இதுக்கெல்லாம இவ்ளோ சந்தோஷம் :)) நான் பதிவுல சொன்ன மாதிரி ப்லாக்ங்கிற வார்த்தை கீவேர்ட்ன்னு பேஸ்புக் ஆட்டோமேடட் அப்ரூவல் சிஸ்டம் ரிஜெக்ட் பண்ணிடுது

பத்மநாபன் - ஆமாங்க அதாங்க அந்த தேவரகசியம் :))) ஆமா அவங்க உச்சரிப்பு ரொம்ப கொடுமை இல்ல ஆனா மத்த பாட்டையெல்லாம் பாருங்க

முத்துலெட்சுமி - ஓஹோ அப்படியா :))) கவலபடாதீங்க உங்க நண்பிகள் தான் இங்க வரமாட்டாங்களே அப்புறம் என்ன :)))

துளசி - ஆமாக்கா இப்போ முருகனையே கடிச்சுட்டாங்க

ராம்ஜி - உண்மையாத் தான் சொல்றேன்...இந்த விஷயத்தைப் பார்த்து தான் நான் பேஸ்புக்குல இம்ப்ரெஸ் ஆனது

சித்ரா - மிக்க நன்றி ஹை மேடம் :))

பொற்கொடி - :D இதானே வேணாங்க்கிறது. அது கீவேர்ட்ன்னு ஆட்டோமேட்டட் அப்ரூவல் சிஸ்டம் ஆதரைஸ் பண்ணமாட்டெங்குதுன்னு சொன்னேனே அப்புறம் என்ன சீன்ன்னு சொல்லிக்கிட்டு

ஸ்ரீராம் - அதே தான் அந்த வரி ஏனோ பதிவுல எடிட்டிங்ல போயிடிச்சு :))) நல்ல வேளை நீங்க சொன்னீங்க :))

வித்யா - மிக்க நன்றி ஹை மேடம்

தக்குடு - :))) நன்றி தல

அமுதா - ஆமாங்க அதான் சில சமயம் பிரச்சனையும் கூட

பத்மநாபன் - ஆமாம் :)))

நிவி - வாங்க. ஐய்யோயோஓஓஓ அந்த பார்ம் வில்லேயும் பெட்வில்லேயும் பத்தி சொல்லாதீங்க. தங்கமணியும் உங்க கட்சி தான். தண்ணிய ஊத்தனும் அறுவடை பண்ணனும்ன்னு. இந்த விஷயத்துல நான் உங்க ரங்கு கட்சி தான் :)))) ஷப்பா என்னா இம்சை தெரியுமா அது

பாவை - :)) ஏதோ சொல்றீங்க....ஹூம்ம் சீக்கிரம் ட்விட்டர் ஜோதிலயும் சேரணும் பார்ப்போம் :)

மாதவி - :))) மிக்க நன்றி ஆமாம...செம காமெடி. காப்பிக்காரங்க இன்னும் பார்க்கலையான்னு தெரியல

அருள் - மிக்க நன்றி. வாங்க தலை நண்பராகுவோம்

மதி - வங்க பதிவெல்லாம் ஆரம்பிச்சாசு போல. சீக்கிரம் போஸ்ட போடுங்க வந்து கும்மறோம்

ஏஸ் - ஆமாங்க இதான் அந்த ரகசியம்

அப்பாவி - :)))

அனானி - கலக்கல் வீடியோ ரொம்ப நன்றி. யார மேலவா மேலவானு கண்டெக்டர் மாதிரி கூப்பிடறாங்கன்னு பார்த்தா அது வேலவாவாம் :))

எல்கே - நீங்க சொன்ன சரி தான்:)

பரத் - மிக்க நன்றி தல

ஷ் - அட நீங்க இன்னும் அந்த அறிவுப்பூர்வமான கேள்விய விடலையா அது சும்மாங்க எனக்கும் அறிவுப்பூர்வத்துக்கும் நாலு கிலோமீட்டர் தூரம். இப்போ தேடிப் பாருங்க இல்லைன்னா http://www.facebook.com/dubukku

Dubukku said...

கெக்கே பிக்குணி - அடாடா என்ன போட்டுத் தள்ள இங்க வந்தே ஆள் தேடுறீங்களா...:)) அந்த சொம்பைக் காணும் எந்த அர்த்தமும் இல்லாம சொன்னது. அதுக்கே இவ்ளவு அர்த்தமா...காதலா காதலா துடைப்பாளி தான் நியாபகத்துக்கு வருகிறார் :))

மதி /கெக்கே பிக்குணி - ரெண்டு பேரும் எவ்ளோ கமெண்ட்டு வேணாலும் போடுங்க ஆனா அதுக்கெல்லாம் சேர்த்து ஒழுங்கா உண்டியல்ல ஃபைன கட்டிடுங்க

டகிள் பாட்ஷா - நம்க்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. பங்காளியும் கிடையாது :)))

Unknown said...

ஐ, முகப்புத்தகத்து படத்துல நீங்க கூட திருமாங்கல்ய சோக்கர் போட்டுட்டிருக்கீங்களே, புது டிசைனா?

Paavai said...

muga puthagathula ungalai kanom dubukku .. eppadi thedaradu ?

madhi - udane badil alilkarennu jump panna vendam .. idhu dubukkuvoda muga puthagam avare badil sollattum, start your posts first. Inga vandhu kooda sense of urgency in posting varalaina eppadi .. see the speed with which posts land on this blog :)

enna porkodi madam naan oru pithalai sombukku kooda qualify agalayaa ..

send the criteria for sombu qualification quickly :)

Dubukku said...

கெக்கே பிக்குணி - ஆமாம் ஜாய் ஆலூகாஸ்ல வாங்கினது:)))))

Paavai - :)) pls try - http://www.facebook.com/dubukku I think this should work. Not sure otherwise how to give link to my fb profile. if anyone knows pls let me know.

அடடா நீங்க நம்ம கும்மி கூட்டத்துல இல்லாமலையா உங்களுக்கு நம்ம மானேஜ்மென்ட் கோட்டா அட்மிஷன் :))

மதி - வந்தவுடனேயே எவ்ளோ பாப்புலராகிட்டீங்க பாருங்க

மனம் திறந்து (மதி) said...

கெக்கே பிக்குணி: அப்பிடி ஒரு உலுக்கு உலுக்கிட்டு....நிதானமா உல்லுலாய் காட்றீங்களே அம்மிணி! நீங்க எவ்ளோ சாதுவான அப்பிராணின்னு "எ.தோ.சோ" பக்கம் எட்டிப் பார்த்த பின்பு தான் தெரிய வந்தது!
தல டுபுக்குக்கு எதிரா கூட்டணி? அதுலே நானு சேரணும்? அபச்சாரம் .....அபச்சாரம் .....! இந்தக் கொடுமைக்கு பதிலா நீங்க எனக்கு எதிரியாவே இருக்கறது எவ்ளோ தேவலை அம்மணீ !
தாய்க்குலம் கட்சி வேற விஷயம்...விலாவரியா அப்புறம் பேசலாம்...!
(காதைக் குடுங்க...) சொம்பு மேட்டர்ல கடேசியா ஒரு ரகசிய செய்தி: மாமி கிட்டேயிருந்து தப்பிச்சி ஓடி ஒளியர டென்சன்ல "தல" சொம்பை விட்டுட்டே உள்ளே போயிட்டார்...அங்கிட்டு இருந்து கேட்டா சொம்பு பறந்து வரும்னு பயந்து தான் வெளி உலகத்துக்கு ட்வீட் பண்றதா கற்பனை பண்ணார்!

கேடியக்கா: நன்றிக்கா...சாமி புண்ணியத்துல நீங்க வந்து நறுக்குன்னு கேக்கறதுக்கு கொஞ்சம் முன்னாடியே KP மேடம் சரண்டர் ஆயிட்டாங்க!
கெடைச்ச "passport" ஐ வச்சு பின்னூட்டம் தான் போட முடியுது! சொந்தமாப் பதிவு போட "visa" கேக்குறாங்களே என்ன செய்ய!

தல டுபுக்கார்: நம்மள கும்ம ரெடியாயிட்டீங்க...நான் இங்க பம்மிட்டிருக்கேன்...பாப்போம்!
//மதி - வந்தவுடனேயே எவ்ளோ பாப்புலராகிட்டீங்க பாருங்க//
(தலையை சொறிந்து கொண்டு...) அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ! நான் உள்ளே வந்ததே பாவைக்கு பதில் சொல்லித் தானே(ASL)! அதனால தான் அவங்களே இந்த முந்திரிக் கொட்டைய கொஞ்சம் உஷார் பண்ணாங்க அவ்ளோதான்!
இந்த உண்டி விஷயம் இன்னும் பிடிபடலை...கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்...!

Porkodi (பொற்கொடி) said...

சொம்புக்கு என்ன பெரீய்ய க்வாலிஃபிகேஷன்.. தொடர்ந்து வந்து கமெண்ட் போடணும், மத்தவங்கலாம் இதென்னடா பெரிய தொந்திரவா போச்சுன்னு சலிச்சிக்கிட்டாலும் கண்டுக்காம ஆடணும். அப்புறம், அப்பப்போ தல, நாட்டாமை, தக்குடு இப்படி யாரையாவது பிடிச்சு கலாய்க்கணும், ஆனா நாம அவங்களை தான் சொல்றோம்னு அவங்களுக்கே தெரியக் கூடாது! போதுமா? ;)

ஆனா எல்லாத்துக்கும் மேல இதென்ன பீத்தல் சொம்பு, நான் தான் வைர சொம்புன்னு நீங்களாவே சொல்லிக்கறது தான் முக்கிய தகுதி. :D

(நீங்க அப்பப்போ தலை காட்டற மாதிரி நினைவு அதுனால சொம்பு குடுக்கலை..)

sriram said...

ம.தி. மதி..
கொஞ்சம் லேட்டாயிடுச்சு, மன்னிச்சிக்கோங்க..
வெல்கம் டு கழகம். கொஞ்ச நாள்தான் அப்ரசண்டி போஸ்ட், கூடிய சீக்கிரமே நல்ல போஸ்ட்ல போடறேன். அறிமுகத்திலேயே அட்டகாசமா என்னை சப்போர்ட் பண்ணியிருக்கீங்க, உங்களுக்கு இல்லாத பதவியா??

கழகக் கண்மணிகள் லிஸ்ட் கேடியக்கா எழுதிட்டாங்க, இதுல நானும் தக்குடுவும் நல்லவங்க. கேடி, அடப்பாவி தங்கமணி அப்பப்போ மட்டும் நல்லவங்க, அடிக்கடி கோஷ்டி சேத்துகிட்டு நம்மளையே கலாய்ப்பாங்க, அப்போதெல்லாம் நம்ம கோஷ்டிக்கு சப்போர்ட் பண்ண ஓடி வந்துடுங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடு said...

ஆஹா இங்க ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்துருக்கு போல, மதி அண்ணாச்சி, இந்த பொற்'கேடி' & 'அடப்பாவி' தங்கமணி கிட்டயும் கொஞ்சம் ஜாக்ரதையா இருந்துக்கோங்க. எதாவது பிரச்சனைனா 'நாட்டாமமமம!'னு பொன்னம்பலம் மாதிரி பலமா ஒரு சவுண்ட் குடுத்தா நம்ப நாட்டாமையோ அல்லது அவரோட அடிப்பொடி தக்குடுவோ வந்து காப்பாத்துவாங்க!

என்றும் வம்புடன்,
தக்குடு

Kavitha said...

Nice videos!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தக்குடு said 'நாட்டாமமமம!'னு பொன்னம்பலம் மாதிரி //

ROFTL... உங்களுக்கு எதிரி வெளில இல்ல நாட்டாமை அண்ணாச்சி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

@ ம.தி. மதி..
//வெல்கம் டு கழகம்//
தலைவரோட இந்த அபிசியல் அறிவிப்புக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.... வாங்க ம.தி. மதி.. கலகத்தின்... ச்சே கழக்கத்தின் துண்டு பார்சல்ல வரும்... போட்டு ஆஜர் ஆகிடுங்க... uniform ரெம்ப முக்கியம் யு சி...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

@ பொற்கொடி-
//ஆனா எல்லாத்துக்கும் மேல இதென்ன பீத்தல் சொம்பு, நான் தான் வைர சொம்புன்னு நீங்களாவே சொல்லிக்கறது தான் முக்கிய தகுதி//

நான் கழகத்துல சேந்தப்ப இந்த டிப்ஸ் எல்லாம் சொல்லவே இல்லியே கொடி... ஹ்ம்ம்... (சொல்லாமையே உன்ன சமாளிக்க முடியலைனு யாரு அங்க முணுமுணுக்கறது...)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//porkodi said ஆமா நீங்க அப்பாவி தங்கமணியை விட அப்பாவியா இல்ல அப்பாவி தங்கமணியோட தங்கைமணி (நான் தான் நான் தான்) விட அப்பாவியா?//
ச்சே ச்சே... நம்மள விட யாரும் லோகத்துல அப்பாவியா இருக்க முடியுமா கொடி... irrelevant கொஸ்டின்னு கெக்கே பிக்குணி விட்டுட்டாங்க போல இருக்கு...

//அப்பாவி தங்கமணியும் நானும் தங்கச் சொம்பு//
இந்த ஒரு பாயிண்ட்க்காகவே நான் கொடிக்கு கொடி புடிக்க ரெடி...
(இது நான் ஏற்கனவே போட்ட கமெண்ட்... ஆனா காக்கா தூக்கிட்டு போய்டுச்சு போல இருக்கு... எங்கயும் காணோம்... ஹ்ம்ம்)

Paavai said...

madi - ungalai poi ushar pannuvena ? chattu puttunu post podunga :)

kodi madam.. enna wish pannunga management kottala seat vangitomla .. enime vaira sombudaan !!

Nat Sriram said...

ஐயோ...நீரே புலவர்..இன்னும் சிரித்து தீரவில்லை " "ரெண்டுக்குப் போய்விட்டு திரும்பிப் பார்க்கிறேன் சொம்பை காணவில்லை"க்கு..யோவ்..140-குள்ள மேட்டர சொல்லி ஒரு 2 ஃபாலோயர் ட்விட்டர்ல புடிக்கறது என்ன பேஜார்னு தெரியுமா?
//
"தோசை வார்த்தாகிவிட்டது கீழே வரவும்" என்று தங்கமணி பேஸ்புக் வழிதான் செய்தி அனுப்புகிறார். அந்த கமெண்டை லைக் பண்ணிவிட்டு //
நீர் ப்ளாக்ல இருக்க வேண்டிய ஆளே இல்லை. கிரேசி ரிடையர் ஆகிறார். கே.எஸ்.ரவிக்குமார், கலை ஞானிக்கு கூட்டா சேர்ந்து காமெடி படம் எழுத வேண்டிய ஆள்..(நெசமா தான் சொல்றேன்)

Arun Prakash said...

என்னதான் technology-ல மூழ்கி facebook profile ஆரம்பிச்சாலும், ரெண்டுக்குப் போய்விட்டு இன்னும் சொம்பைத் தேடிட்டு இருக்கார் பாத்தீங்களா? அங்க நிக்கறாரு நம்ம தலைவர்.

Dubukku said...

பொயட்ரீ - நல்லா இருக்குல்ல :)

நடராஜ் - ஹீ ஹீ மிக்க நன்றி தல. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் இவ்ளோ தூரம் வந்தாச்சே :))) ஜோக்ஸ் அபார்ட் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு ரொம்ப ஊக்கமாய் இருக்கிறது ரொம்ப நன்றி

அருண் - ஆமாங்க :) பேஸ்புக்குல போட்டோ வேணா போடலாம்...சொம்பு?? அட அது நான் இல்லீங்க சும்ம உதாரணம் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

Anonymous said...

Dubukku,

Don't know how to post this in Tamil. If I knew, I would. Your posts are hilarious. I've introduced this to my parents and my 65 yr old Dad has a good laugh when he reads your blog!

I just checked out your FB account. I wish you had made that public. I couldn't see anything besides your pic. Unnal mudiyum Thambi Kamal alavukku illattiyum, romba cute-aave irukkeenga ;)

Ayyo idhai vaiche, ungala Porkodi ottu ottunnu otta porangannu bayama irukku.

- Ippadikku ungal abimana vasagi MC.

Anonymous said...

Yey FB la yen status pakkalai.. Unga oorladhan irundhennu theriyadha nnu kutrappatrikkai vasikkum sondhangalai ninaivu koora vaithadhu..

If the "awaiting friend confirmation" period is long, namma oru feelings aavom parunga..

thanx for such patient writing.. too good

Dubukku said...

MC - //Unnal mudiyum Thambi Kamal alavukku illattiyum, romba cute-aave irukkeenga ;)// - ஆஹா அடாடா...உண்மைய நச்சுன்னு உரக்க சொல்லிட்டீங்க...லண்டன் பக்கம் வந்தீங்கன்னா சவுண்டு குடுங்க பெரிய ட்ரீட் குடுக்கறேன் உங்களுக்கு :)))



தங்கள் பெற்றோருக்கு பிடிப்பது பற்றி மிக மிக சந்தோஷம்.மிக்க நன்றி ஆனா ஜொள்ளிங்க்ஸ் பதிவுகள சென்சார் பண்ணிடுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்



Anony - yes that "Awaiting Frnd confirmation is really a pain " :P thanks for stopping by :) கொடுமை என்னான்னா...எனக்கு ப்ரெண்டு ரெக்வஸ்ட் போட்டா யாரையோ தங்கமணி அவங்க லாகின்ல இருக்குன்னு நினைச்சு இக்னோர் பண்ணிட்டாங்க. அத அவஙக் உணர்ந்து என்கிட்ட சொன்னபோது யாருன்னு கூட பார்க்க முடியல. அவரு என்ன பத்தி பாவம் என்ன நினைச்சாரோன்னு தெரியலை :(((

Post a Comment

Related Posts