Saturday, January 01, 2011

ஜில்பான்ஸ் - 010111

வேண்டுவன எல்லாம் கிடைக்க அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இங்கே இந்த வாரம் முழுவதும் விடுமுறை. நண்பர்கள் வீடு பார்ட்டி என்றிருப்பதால் வழக்கம் போல் (??!!) எழுதமுடியவில்லை. அடுத்த வாரத்திலிருந்து நிலைமை சீராகும் என்று நம்புகிறேன்.

இந்த வார சினிமா

மன்மதன் அம்பு - இந்த படம் ஹார்ட் கோர் கமல் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாய்த் தான் இருக்கும். முதல் பாதி வரை ஜோராய் செல்லும் நேர்த்தியான கதை. இரண்டாம் பகுதியில் க்ளாம்க்ஸ் ட்ராமா ஆரம்பிக்கும் போது கதை சூடு பிடித்து...தோ வர்றார்ரா தலீவர்ன்னு நாமும் டென்ஷனாகும் போது குழப்பம் ஆரம்பிக்கிறது. இந்த கட்டத்தில் ஸ்கிரின்ப்ளேயும் வசனமும் பிசுபிசுக்க ஆரம்பிக்கிறது. எனக்கு தனிப்பட்ட விதத்தில் இந்த இடத்தில் லைவ் சவுண்டு வேறு கைவிட ஆரம்பித்த மாதிரி தோன்றியது. பல முடிச்சுகளைப் போட்டு ரணகளமாகி இடியாப்பத்தை பிழிந்த உடனேயே பிரிக்க முயற்சித்த மாதிரி இருந்தது. சில அரத டயலாக்குகளும் அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் பாடல்கள் பாடி பேசிக்கொள்வதும்...ஸ்ஸப்ப்பா தாங்கல. இன்னா தலீவா இப்படி பண்ணிப்புட்ட? நீலவானம் பாடலும் படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். படத்தில் சங்கீதாவிற்கு செம சான்ஸ். டாக்ஸி ட்ரைவர் கதாபாத்திரம் ப்ரான்சில் படப்பிடிப்பு உதவியதற்கு கைமாறு செய்த வகையில் புகுத்திய மாதிரி இருக்கு. கதைக்கு கொஞ்சம் கூட உதவவில்லை கொட்டாவிக்குத் தான் உதவுகிறது. சீராக இருக்கும் மாதவனை க்ளைமாக்சுக்காக குடிகார கம்னாட்டியாக்கி படு முட்டாளாக சித்தரித்திருப்பது கொடுமையிலும் கொடுமை. கமல் விஜய் டீ.வி இன்டர்வியூவில் பேசுவது மாதிரி சில இடங்களில் வசனங்களை அமைத்திருக்கிறார். திரிஷா ட்ராயர் போட்ட தம்பி மாதிரி படம் நெடுக வருகிறார். த்ரிஷாவை பிடித்தவர்கள் போய்ப் பார்த்து சந்தோஷப் பட்டுக்கொள்ளலாம். ஆனைக்கு பானை சரியாப் போச்சுன்னு திடீர்ன்னு மாதவன் சங்கீதா காதலிக்க கமல் த்ரிஷாவை காதலிப்பதாக சுபம் போடுகிறார்கள். கஷ்ட காலம். மொத்ததில் என்னளவில் படம் க்ளைமாக்ஸ் வரை சூப்பர். மிச்சபடி தேறும் ஆனா தேறாது.

ஈசன் - இதுவும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே. படத்தில் வரும் அரசியல்வாதி பாத்திரப் படைப்பு அருமை. அதுவும் டீல் பேச வந்திருக்கும் தொழிலதிபர் முன்னால் அரசியல்வாதி சட்டை வேஷ்டியை சர் சர்ன்னு உருவி போட்டு லுங்கிக்கு மாறும் காட்சி நச். திடீரென்று ஈசன் காரக்ட்டரை நுழைக்கிறார்கள். இரண்டாம் பகுதியில் காங் ரேப், ஏகப்ப்ட்ட ரத்தம், இரும்பு கம்பியினால் நங்கென்று அடிக்கும் காட்சிகள் என்று கொஞ்சம் ராவாக இருக்கிறது. சமுத்திரகனி போலிஸ் பாத்திரத்துக்கு கனகச்சிதம். நடிப்பில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். அதுவும் மேலிடத்து பிரஷர் காரணமாக கையாலகாதனத்தை அவர் வெளிக்காட்டும் இடங்களில் அருமையாக செய்திருக்கிறார். கர்பவதிகள் படத்தை அவாய்ட் செய்யவும்.

இந்த வார படிப்ஸ்
"கல்யாண சமையல் சாதம்" - அறுசுவை நடராஜன் அவர்கள் எழுதி விகடனில் தொடராய் வந்தது. சின்ன வயதில் தான் அனுபவித்த கஷ்டங்கள் முதற்கொண்டு அவரது பழுத்த அனுபவத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களை மிக சுவாரசியமாக தொகுத்திருக்கிறார். கிடைத்தால் வாசிக்கவும். அருமை.

"ராஜிவ் காந்தி கொலை வழக்கு" - கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சி.பி.ஐ தலமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் எழுதிய புத்தகம். நண்பனின் வீட்டில் சும்மா படிப்பதற்கு எதாவது புஸ்தகம் கொடேன் என்று வாங்கி படிக்க ஆரம்பித்தேன். கையில் எடுத்தது முதல் முடிக்கும் வரை அத்தனை விறு விறுப்பு. பல கிளைகளையும் பல கோணத்திலும் சொல்ல வேண்டிய விஷயங்களை குழப்பமில்லாமல் அருமையாக தொகுத்து குடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே இதே விஷயத்தை கையாளும் "குப்பி" திரைப்படமும் அருமையாக எடுக்கப் பட்டிருந்தது. புத்தகத்தை படித்து முடித்தவுடனே குப்பியை திரும்ப பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.

தள்ளி வைக்கப்பட்ட துக்கம்

தமிழ்மண விருது முதல் ரவுண்டில் என்னுடைய மூன்று பதிவுகளுமே அடுத்த கட்டத்திற்கு போய் இருக்கின்றன. வாக்காளர்கள் கில்லாடிகள். என்ன முதல் மாடியிலிருந்து தூக்கி போடுவதை விட அதற்கடுத்த மாடியிலிருந்து தூக்கிப் போட்டால் சேதாரம் அதிகம் என்று தெளிவாய் இருக்கிறார்கள். இரண்டாவது மாடிக்கு தூக்கி விட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

இந்த வார கேள்வி
"நீங்க ஏன் டுபுக்குன்னு பெயர வைச்சிக்கிட்டு இருக்கீங்க. கூப்பிடுவதற்க்கு கொஞ்சம் தர்மசங்கடமாய் இருக்கு"ன்னு - ஷ்ஷ்.. கேட்டிருக்காங்க.
நிறைய பேர் இதையே அவ்வப்போது கேட்டிருப்பதால் விளக்கம் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

நான் ப்ளாக் ஆரம்பித்தது 2003ல். முதலில் இங்கிலிபிஸில் ஆரம்பித்தாலும் சீக்கிரமே தமிழுக்குத் தாவி விட்டேன். அப்போது தமிழில் இருந்த பதிவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போது இருப்பது மாதிரி திரட்டிகள் எல்லாம் கிடையாது. ப்ளாக்கரில் பின்னூட்ட வசதி கூட கிடையாது. ஹாலோ ஸ்கேன் போன்ற ஆட் இன் போட்டு தான் ஓட்டி கொண்டிருந்தோம். நமக்கு ஒரு பதிவு தெரிந்து அங்கே போய் கமெண்டு போட்டால் அங்கே படிக்க வருபவர்கள் நம் பெயரை க்ளிக்கி நம்ம பக்கத்துக்கு வருவார்கள். இது தான் தெரியாத ஒருவர் நம் பக்கத்துக்கு வருவதற்கான ஒரே நேர் வழி. கூகிள் சேர்ச், மற்றவர் சொல்லி வருவது இதெல்லாம் மிக மிக சொற்பமே. இதில் எல்லாரும் எல்லாரையும் க்ளிக்கி வருவார்கள் என்று நிச்சயம் கிடையாது. மனதோடு மனீஷா, சுகமில்லாமல் சுவாதி, க்யூட் கேர்ள், ஆக்சுவலி அனு, வானத்தைப் பார்த்தபடி வானதி போன்ற பெயர்களுக்கு ஆகும் போனியில் ஒன்றில் பத்து கூட அமிஞ்சிக்கரை முருகன், ஆல்தோட்ட பூபதி, சப்தமில்லாமல் சபாபதி, ஆயிரத்தில் ஒருவன் பெயர்களுக்கு ஆகாது. சரி இதை வேறு விதமாய் தான் சமாளிக்கனும்ன்னு ஒரு வித்தியாசமான பெயராய் யோசித்துக் கொண்டிருந்தேன். கிட்ட வாங்க ஒரு ரகசியம். இதுவா அதுவான்னு நான் ஷார்ட்லிஸ் செய்திருந்ததில் முடிவு செய்த பெயர் "லொடுக்கு பாண்டி" என்பதே! அனால் அடுத்த நாள் ப்ளாகரில் விபரங்களை குடுக்கும் போது அவசரத்தில் இன்னொரு சாய்ஸான டுபுக்குன்னு போட்டு ஒரு போஸ்டும் போட்டு விட்டேன். ஒரு வாரம் கழித்து தான் உரைத்தது. சரி இருக்கட்டுன்னு விட்டுவிட்டேன்.

இந்த பெயரை தர்ம சங்கடமாய் பார்ப்பவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இதை ஒரு அர்த்தம் தெரியாத ஸ்பானிஷ் பெயராகவோ அல்லது சிந்திக்கும் கோமாளி என்று அர்த்தம் வரக்கூடிய லத்தீன் பெயராகவோ மட்டும் பாருங்கள். தமிழில் நாம் வழி விடுங்கள் என்று சொல்வதை கேரளாவில் போய் சொன்னால் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரிப்பார்கள் :)). அதற்காக வழி விட சொல்லாமல் இருக்கிறோமா? அதே போல் தான் இந்த டுபுக்கு என்ற ஸ்பானிஷ் பெயரும் :P தமிழில் சில விஷமிகள் வேறு அர்த்தம் வைத்திருக்கலாம். கண்டுக்காதீங்க. அ ரோஸ் இஸ் அ ரோஸ் இஸ் அ ரோஸ். அம்புட்டுத்தேன்.

(இது போக ஒரு நல்ல அறிவுப் பூர்வமான கேள்வி வைத்திருந்தேன் ஆனால் பதிவு ரொம்ப நீளமாகிவிட்டதால் அடுத்த பதிவில்)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

29 comments:

வெட்டிப்பயல் said...

புத்தாண்டு வாழ்த்துகள் தல :)

வெட்டிப்பயல் said...

”டுபுக்கு” பேருக்கு என்ன குறைச்சல்? இந்த பேரைப் பார்த்து தான் தமிழ் வலையுலகுக்கே வந்தேன் (2006) :)

எல் கே said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

middleclassmadhavi said...

பெயர்க் காரண சந்தேகம் போக்கிய உங்களுக்கு ஒரு பூங்கொத்து! (என் ப்ரொஃபைல் ஃபோட்டோ!!)
புத்தாண்டு வாழ்த்துகள்

சண்முககுமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

Sh... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆஹா என் கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்கன்னு சன்தோஷப்பட்டா, கடைசில இன்னொரு அறிவு பூர்வமான கேள்வி செலெச்ட் பண்ணி வெச்சேன்னு nose cut குடுத்து new year அதுவுமா upset பண்ணீட்டீங்க. :((

இருப்பினும் என் கேள்விக்கு பதில் சொன்னமைக்கு thanks. (தமிழ்ல டைப் பண்ணா னன்றி ன்னு வருது)

Sathish Kumar said...

//பல முடிச்சுகளைப் போட்டு ரணகளமாகி இடியாப்பத்தை பிழிந்த உடனேயே பிரிக்க முயற்சித்த மாதிரி இருந்தது.//

என்னே கற்பனை ஐயா...! பின்றீங்க...!


//சீராக இருக்கும் மாதவனை க்ளைமாக்சுக்காக குடிகார கம்னாட்டியாக்கி படு முட்டாளாக சித்தரித்திருப்பது கொடுமையிலும் கொடுமை.//

ஹா...ஹா...ஹா...!

தலைவா..! எங்காவது மாயமா மறஞ்சிட்டு அப்பப்போ ஏதாவது காரணம் சொல்ல வேண்டியது...!

Ahamed irshad said...

புத்தாண்டு வாழ்த்துகள் :)

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு வாழ்த்துகள்:)

Porkodi (பொற்கொடி) said...

:)

Dubukku said...

வெட்டிப்பயல் - வாங்க தல. எப்படி இருக்கீங்க மிக்க நன்றி. ஆஹா நீங்க சொல்லி பெருமைப் படுத்தறீங்க...என்ன தவம் செய்தனை

எல்.கே - மிக்க நன்றி தல. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சேலம் தேவா - உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மிடில் களாஸ் மாதவி - உங்க பெயரும் அட்டகாசம். பூங்கொத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சன்முகக்குமார் - உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நீங்க குடுத்த சுட்டியும் அதிலிருக்கும் விஷயமும் மிக நன்றாக இருக்கு. இன்னும் முழுவதும் படிக்கவில்லை ஆனால் லிங்க் குத்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய ரீடரில் இணைட்து விட்டென்.


Sh..- என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. நோஸ் கட் செய்யும் நோக்கத்தில் அப்படி சொல்லவில்லை. அப்படி பொருள் வர வாய்ப்பிருக்கிறது எனபதை நீங்க சொன்ன பிறகு தான் உணர்கிறேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். But I did not mean that way. என்னுடைய எடிட்டரில் w போட்டால் 'ந' வரும்

சதீஷ் குமர் - மிக்க நன்றி தல. அடாடா...அப்பிடியெல்லாம் இல்லீங்க...உண்மையிலேயே ஒரே பிஸி

அகமது இர்ஷாத் - மிக்க நன்றி தல. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வித்யா - மிக்க நன்றி மேடம். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பொற்கொடி - சரி சரி பார்ட்டியில இருக்கீங்கன்னு ஒத்துக்கிறேன் அதுக்காக ஃபோன்லேர்ந்து :) -ஆ?? உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :))

பத்மநாபன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

தலைவன் படம் புஸ் ஆனது வருத்தம் தான்... என்ன செய்வது அறிவுஜிவித்தனத்தை கொஞ்சம் குறைச்சா பரவாயில்லை... டிராயர் தம்பிய வச்சுதான் கொஞ்சம் இழுக்கனும் ..

சசி டைரக்‌ஷனுக்கு ஈசன் பார்க்கலாமா?

நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

தமிழ்மண விருதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ( ரசிகர்களை தனியா கவனிப்பிங்கங்ற நம்பிக்கை இருக்கு )

வலைப் பெயர்களும் அதன் கிராக்கிகளும் நசுக் சிரிப்பை வரவைக்கின்றன..
சுகமில்லாமல் சுவாதி., சப்தமில்லாமல் சபாபதி சிரிப்பை அடக்கமுடியல.. நெஜமா இந்த பேர்ல யாரவது இருந்தா மன்னிச்சுக்கங்க சகோக்களே

லொடுக்கு பாண்டிக்கு டுபுக்கே பரவாயில்லை... ஸ்பானிஷ் அர்த்தமே வச்சுக்கிறோம் ( நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவரு – இதுதான் அர்த்தம் ஸ்பானிஷ் அகராதியில டுபுக்குக்கு நேரா போட்டிருக்கான் )

balutanjore said...

dear dubuks

wishing you and your family a very happy and prosperous new year

balu vellore

sriram said...

ஹாப்பி நியூ இயர் தல,
2011 இல் இந்த இடுகையைத்தான் மொதல்ல படிச்சேன், வருசம் பூரா இதே மாதிரி நல்ல இடுகைகள் படிப்பேன்னு நம்பறேன்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Kavitha said...

Wish you and your family a Very Happy, Healthy and Peaceful New year.

Sh... said...

வேற யாராவது சொல்ற்துக்கு முன்னாடி நாமளே சொல்லிடலாமேன்னு தான். மத்தபடி புண் எல்லாம் படலை.

நன்றி. (for ந)

தக்குடு said...

கரெக்டு தல, ஒரு உருப்படியான பேரு வெக்கர்துக்குள்ள மண்டை காய்ஞ்சு போகுது. 'டுபுக்கு'நு வாசிச்சு முடிக்கர்துக்குள்ளையே 'கிளுக்'னு ஒரு சிரிப்பு வரர்தை நம்மால கட்டுப்படுத்த முடியாது.

தன்னோட நடிக்கும் 2'nd ஹீரோவை ஜீரோ ஆக்கி தன்னோட மேதாவித்தனத்தை ஸ்தாபிக்கும் கமலின் கணக்கு இந்த படத்துல சரியா வரலை போலருக்கு.

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

Gopikaa said...

Accidentally i happened to read your blog, incidentally i so liked it. Laughed a lot while reading your Jollithirintha kaalam. Keep up your work! I just loved the humour in your style of depicting things!

Paavai said...

Dubki na hindi la moozhgudal/mungudal ... why go that far to Spain and other places ... arivu thadagathil moozhgi mutheduthu engaludan share pannuvadal dubukku ....

Happy New Year to you and your loved ones

Cable சங்கர் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் டுபுக்கு..:))

Anonymous said...

அப்பாடா ம.அ படம் நல்லா இல்லையா :) நான் பாக்க முடியாம போச்சேன்ற சோகம் தீர்ந்து போச்சு! இவ்வளவுதான் க்ளைமாக்சா - ஆனைக்கு பானை அடங்கொய்யாலதான் ...

டுபுக்கு அவர்களே, :))) ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
டுபுக்குன்ற பேருக்கு எனக்கு தெரிஞ்சு எல்லாருக்கும் "பதிவுலகின் கலக்கல் காமடி இருப்பிடம்" அப்படின்ற அர்த்தம் தான் இன்னைக்கு நிலைச்சிருக்கு. 'அனுமாருக்கு தன் பலம் தெரியாது'ன்னு சொன்னா நான் உங்களை குரங்குன்னு சொன்னேன்னு கோச்சிக்கப்போறீங்க.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பதிவுலக வெற்றிகளுக்கு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அதானே இந்த பேருக்கு என்ன குறை? சூப்பர் நேம்... இதில் உள்குத்து எதுவும் இல்லை பாஸ்... தலைவர் படம் இன்னும் பாக்கலைங்க... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

வித்துவான் ....முன்றாம் சுற்றில் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள் ...... பதக்கத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Porkodi (பொற்கொடி) said...

செம இன்டெலிஜென்டு தல நீங்க.. என்னது பெரிய வித்துவானுமா? சரி அதுவும் தான்.

Anonymous said...

puthhandu nal vazhtukkal...thalaivar padam paarkala....indha varusham muzhukka nalla nalla post ungalidam edhirparkirrom.neenga enna ezhudinalum engal support ungalukku undu adhanal kallakunga!!!!new year resolutions patriyum,london kulirai eppadi samallikireeragal enbadhai patriyum ungal paniyeleye oru nagaichuvai kalandha post podungalen please!!!
ippadikku nivi mattrum niviyin rengamani!!!!

Dubukku said...

அறிவிலி - மிக்க நன்றி சாரே உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

பாலு - மிக்க நன்றி நண்பரே உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஸ்ரீராம் - ஹி ஹீ நம்பிக்கை தான் வாழ்க்கை தல :))

பொயட்ரீ - மிக்க நன்றி மேடம் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஷ்- :) அப்போ என்னோட சாரி வேஸ்டா :P இங்க 98% ஜாலிதாங்க அதுனால கண்டுக்கிடாதீங்க :)

தக்குடு - :) கமலைப் பத்தி நீ சொல்லியிருக்கும் கருத்துக்கு நான் வேறுபடுகிறேன். பஞ்ச தந்திரம், அன்பே சிவம் எல்லாம் இதற்கு மாறன உதாரணங்கள். அன்பே சிவத்தில் என்னைப் பொருத்தமட்டில் மாதவன் கலக்கி இருப்பார்.

பிலாசபி பிரபாகரன் - மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் டெம்ப்ளேட் சூப்பர்

கோபிகா - வாங்க வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. அடிக்கடி வாங்க வந்து ஜோதில ஐக்கியம் ஆகிக்கோங்க :)

பாவை - அடாடா...நச்சுன்னு சொன்னீங்க போங்க...எங்க ஹிந்தி மிஸ் இந்த மேட்டர சொல்லாததுனால தான் ஸ்பெயின் வரைக்கும் போக வேண்டி இருக்கு பாருங்க. அந்த அறிவுன்னு ஆரம்பிச்சு சொன்னீங்களே..- என்னப் பத்தியா ? எனக்கே இன்னிக்குத் தாங்க தெரியும் :P

கேபிள் சங்கர் - அண்ணாத்த மிக்க நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

கூக்கபுரா - (தமிழ்ல உங்க பெயர கரெக்ட்டா சொல்லியிருக்கேனா?) மிக்க நன்றி உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். ஹீ ஹீ அனுமாருன்னு சேட்டைக்கு மட்டும் கரெக்டா சொல்லி இருக்கீங்க. ரொம்ப ஊக்கமா இருக்குங்க இந்த மாதிரி நீங்க பாவை, அப்பாவி இன்னும் பல நண்பர்கள் பல சந்தர்பங்களில் சொல்லுவது. ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன்.


அப்பாவி - மிக்க நன்றி உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். ரொம்ப டேங்கஸ் பெயர பத்தி சொன்னதற்கு :))

பத்மநாபன் - உங்களுக்கு ரசிகமணின்னு கரெக்ட்டா தான் பெயர வைச்சிருக்காங்க. மிக்க நன்றி தல...நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும். உங்கள் அன்பிற்கு மிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நிவி - மிக்க நன்றி உங்களுக்கும் ரங்குவிற்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் அன்பிற்கு நான் ரொம்ப கடமைப் பட்டுள்ளேன். நீங்க சொன்னதில் ரெண்டு மேட்டர் போஸ்டுக்கு தேறி இருக்கு மிக்க நன்றி கூடிய சீக்கிரம் பதிகிறேன் :)))

Ponniwinselvan said...

டுபுக்கை எனக்கு அறிமுகம் பண்ணிய நண்பர் ஜலகண்டபுரம் தியாகராஜன் நிற்க - இது ரொம்பவே சுவாரசியமான பதிவுகள் - பின்றீங்க போங்க - பிச்சு உதறுங்க வாத்தியாரே !!!!!!!

Post a Comment

Related Posts