Sunday, December 05, 2010

ஜில்பான்ஸ் - 051210

சமீபத்திய சந்தோஷம்
நந்தலாலா காணுற்றேன். இனிமையான படம். பஸ்டிக்கெட் பின்னால் டயலாக் எழுதி, படம் நெடுக கவித்துமாய் உறுத்தாமல் திரைக்கதை அமைத்து பாந்தமாய் நடித்திருக்கிறார் மிஷ்கின். படத்தின் இணை ஹீரோவான இளையராஜா அதாவது நம்ம செல்லமாய் கூப்பிடும் மொட்டை படத்தில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார். மிஷ்கின் -இளையராஜா இரண்டு பேருக்குமாய் பார்க்கவேண்டிய படம். படத்தில் ரோகிணி பொருத்தமே இல்லாத மிகப் பெரிய மிஸ் காஸ்ட். தலைவிரி கோலமாய் ரோகிணி என்று தெரிவதற்கு முன்னாலே காலைப் பார்த்து அடடா கேரக்டரின் வயதுக்கேற்ற அம்மணியைப் போடவில்லையே என்று தோன்றியது. முகத்தைக் காட்டிய பின், சே வேற யாரையாவது போட்டிருக்கலாமே என்று திண்ணமாய் தோன்றியது. ஆனால் இதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன குறை. நிஜமான க்ளைமாக்ஸ்க்கு அப்புறமாய் பொதுஜன செண்டிமென்டிற்காக பயந்து கடைசிக் காட்சி அமைத்த மாதிரி எனக்குப் பட்டது. ஒரிஜினல் கதையில் அந்தக் காட்சி இருந்திருக்காது என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். தமிழ் சினிமா ஆரோக்கியத்திற்கு படம் பெரிதும் உதவியிருக்கிறது. வாழ்த்துகள் மிஷ்கின்.

இங்கிலாந்தை சமீபத்திய வரலாறு காணாத குளிர் ஆட்கொண்டு நாடே திணறிப் போய், அதிக பட்ச வெப்பமே வடக்கே மைனஸ் இருபத்தியெட்டு டிகிரியும், இங்கே லண்டனில் மைனஸ் நாலு ஐந்து என்று சென்ற இந்த ஒரு வாரத்தில் சுத்த பத்தமாய் தலை குளித்து, கடமையுணர்ச்சியில் சரியாய் துவட்டாமல், குல்லா அணியாமல், அலுவலகத்திற்கு கடமையாற்றச் சென்றதில் கடந்த மூன்று நாட்களாய் நூற்றியிரண்டு டிகிரி எனக்கு வந்து, வேளாவேளைக்கு, விதவிதமாய் சாப்பாடு இருக்கும் இடத்திற்கு வந்து, படுக்கையில் படுத்த வண்ணம் வேளைக்கொரு படம் பார்த்துக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

"யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்" என்ற மரபிலே சமீபத்தில் வெளியாகியிருக்கும் "எவன்டி உன்னைப் பெத்தான் பெத்தான் கையில கிடைச்சா செத்தான் செத்தான்" என்ற அற்புதமான 'வானம்' திரைப்பட பாடல் வெளியாகியிருக்கிறது. ஆழ்ந்த கருத்துகள் ஐயப்பாட்டை நீக்கும் வரிகள். என்ன ஒரு பத்து பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கவிஞர் சிந்தனையை வெளியிட்டிருந்தால் எனக்கும் உபயோகப்பட்டிருக்கும். தற்பொழுது தங்கமணி இந்த வரிகளை தத்து எடுத்துக்கொண்டு என் மகள்களுக்குப் பாடி எனக்கு செய்தி அனுப்புகிறார். சர்வேஸ்வரா உலகத்த நீ தான்பா காப்பாத்தனும். ஹூம்...கவிஞர் இன்னும் எத்தனை பேர் வாயில விழுந்து வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறாரோ.


அது என்னம்மோ என்ன மாயமோ தெரியல ரொம்ப பிடித்த சில பேரை கொஞ்ச நாளாக பிடிக்காமல் ஆகிவிட்டது. அதே போல் பிடிக்காமல் இருந்த சில பேர்களை சமீபத்தில் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முன்னால் ரொம்ப பிடித்த ஏஞ்சலினா ஜோலி முன்னாள் ஆகிவிட்டார். அதே போல், பொம்மரிலுவில் பார்த்தும் (ரொம்ப) பிடிக்காத  ஜெனிலியாவை உத்தம புத்திரனில் பார்த்த போது பிடித்துவிட்டது. இதை மாதிரி லிஸ்டில் நிறைய பழையன கழிதலும் புதியன புகுதலும் இருக்கு. மேலும் விபரங்கள் சேதாரத்திற்க்கு அடிகோலும் என்பதால் 'நோ செய்கூலி சேதாரம்' ஆஃபர் வரும் போது இன்னும் விளக்கமாய் சொல்கிறேன். ஜெனிலியா யாரு என்று தெரியாதவர்களுக்கு உபயோகப் படுமே என்று படம் போட்டிருக்கிறேன். படத்தில் இருக்கும் அம்மணி தான் ஜெனிலியா.


இந்த வார மெசேஜ்
மெசேஜ் எதாவது சொல்லனும்ன்னு ஆசையா இருக்கு அதுனால ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேனே ப்ளீஸ். அடிக்கடி தீடீர்ன்னு யாராவது ஒருத்தர் பொழுது போகாம என்னுடைய பதிவுகள் எல்லாத்தையும் ஒரே நாளில் நோண்டியெடுத்து படிச்சுட்டு அங்கங்க பழைய பதிவுகளுக்கு பின்னூட்டம் போடறீங்க. என்னுடைய பதிவில் நான் பொதுவாக பின்னூட்டங்களுக்கு பதில் போடும் பழக்கம் வைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது பழைய பதிவுங்கிறதால அங்க உங்களுக்கு பதில் போட விட்டுப் போய்விடுகிறது. அதுனால தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். உங்களுடைய பொன்னான நேரத்தை உபயோகித்து பழைய பதிவானாலும் பின்னூட்டம் போடற உங்களுடைய அன்பிற்க்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். அதற்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வார கிசுகிசு
2010 தமிழ்மண விருதுகளுக்கு அழைப்பு வந்த அடுத்த நிமிஷமே, டு என்று ஆரம்பித்து கு என்று முடியும் வலைப்பதிவர், இந்த வருடமும் சற்றும் மனம் தளராமல் போட்டியில் மூன்று பதிவுகளை சேர்த்துவிட்டார். என்னம்மோ கலந்து கொண்டதில் எல்லாம் வாங்கி குவித்துவிட்ட மாதிரி, இதில் நகைச்சுவை பகுதியில் மட்டுமே கலந்துகொண்டு மிச்ச ரெண்டையும் வாபஸ் வாங்கிவிடலாமா என்று ரூம் போட்டு யோசித்து வருகிறார். எல்லா பரிச்சைலயும் பெயில் என்பதற்கும் ஒன்னே ஒன்னு அவுட் என்பதற்கும் வித்தியாசம் இருக்குல்லா என்று கன்றாவியாய் தர்கம் வேறு புரிகிறார்.

32 comments:

Philosophy Prabhakaran said...

// நிஜமான க்ளைமாக்ஸ்க்கு அப்புறமாய் பொதுஜன செண்டிமென்டிற்காக பயந்து கடைசிக் காட்சி அமைத்த மாதிரி எனக்குப் பட்டது //

எனக்கும் அதே தான் தோன்றியது.... அகி, ஸ்நிக்குக்கு முத்த மழை போழிவதொடு திரையை இருளவிட்டு "a film by mishkin"ன்னு போட்டிருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

// படுக்கையில் படுத்த வண்ணம் வேளைக்கொரு படம் பார்த்துக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் //

பாவி மக்கா... மறுபடி அலுவலகம் திரும்பியதும் உம்முடைய உயரதிகாரி உன் எலும்பை முறிக்க வேண்டும்...

Philosophy Prabhakaran said...

// படத்தில் இருக்கும் அம்மணி தான் ஜெனிலியா //

ஆத்தா.... சிரிக்காத ஆத்தா பைய்யன் பயப்படுறான்...

Philosophy Prabhakaran said...

நல்ல கலெக்ஷன்...

Porkodi (பொற்கொடி) said...

haiya silver medal enaku than!!!

Porkodi (பொற்கொடி) said...

விருது பெற வாழ்த்துக்கள், எங்க போய் பாக்கறது என்ன பதிவு எலெக்சன்ல நிக்கிதுன்னு?

நந்தலாலா முதல்ல கொஞ்ச நேரம் ரொம்ப கடியா இருந்துது (என்னடா நமக்கு மட்டும் புடிக்கலியேன்னு ரொம்ப பீலிங்கி..) அப்புறம் ஆழ்ந்துட்டேன். :‍) ஸ்னிக்தாவுக்கு முத்தம் குடுத்ததோட படம் முடிஞ்சுருந்தா எனக்கு இன்னும் பிடிச்சுருக்கும். :D

ரெண்டாவது பத்தி அப்படிக்கு அப்படி சியாட்டில்னு மாத்திக்கலாம் போலருக்கே.. பனி ஐசு வழக்கமான மழை எல்லாம் மாறி மாறி வருது ஆனாலும் காத்துல dryness தாங்க முடியல.. respiratory system எல்லாம் ஓன்னு அழுவுது.

காவியப்பாட்டை அறிமுக படுத்தினவங்களுக்கு ஒரு க்ரெடிட் கூட இல்லியா?!

sriram said...

//haiya silver medal enaku than!!! //
கேடியக்கா.. பதிவைப் படிக்காமல் போடும் பின்னூட்டங்கள் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொள்ளப் படமாட்டா..

ஒழுங்கா பதிவைப் படிச்சிட்டு பதிவுக்குச் சம்பந்தமா பின்னூட்டம் போட்டு வெண்கலப் பதக்கமாவது ஒழுங்கா வாங்கப் பாருங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//2010 தமிழ்மண விருதுகளுக்கு//
கவலைப் படாதே வாத்யார், கழகக் கண்மணிகள் நாங்க எதுக்கு இருக்கோம், கள்ள ஓட்டு போட்டாவது கெலிக்க வச்சிடறோம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

அப்புறம் மிஷ்கின் ஸ்னிக்தா கிட்ட வெளிப்படையா அவனுக்கு அம்மாவா நீ இருப்பியான்னு முன்னாடியே கேக்கறது கூட பிடிக்கல, கடைசில வெறும் செய்கைல காட்டி இருந்தா இன்னும் பவுர்ஃபுல்லா இருந்துருக்கும்ல??

Porkodi (பொற்கொடி) said...

நாட்டாமையா இருந்துக்கிட்டு அவசரப்பட்டு பேசிப்புட்டீயளே பாஸு! படிச்சப்புறமும் நாங்கதேன் சில்வரு எப்பூடி..

sriram said...

//படிச்சப்புறமும் நாங்கதேன் சில்வரு எப்பூடி.. //
ஒத்துக்கறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
(என்றும் அன்புடன் அடிக்கிற நேரத்திலதான் சில்வர மி பண்ணிட்டேன்)

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
பத்மநாபன் said...

நந்தலாலா- விமர்சனம் பார்க்கவைக்குது ...எங்க மக்கள் இன்னமும் வலையிலிருந்து கிழிறக்கவில்லை...

அப்புறம் காரை சுத்தியிருக்கிற பனிக்கட்டியை எப்படி எடுக்கறிங்க... நியுகேஸசல்ஸ் இருந்து வர்ற வெள்ளக்காரனுங்க இங்க 45 டிகிரி வெய்யில சொர்க்கம்னு சொல்லிட்டு அரை நிர்வாணம சுத்திட்டு இருக்காங்க...

பெத்தான் ...செத்தான் தத்துவப்பாடல் .எல்லா தங்கமணிகளுக்கும் விருப்ப பாடலாகிவிடும்...

படம் போட்டு விளக்கியதற்கு நன்றி.. இந்த பொண்ணு ஒரு படத்துல ஜங்கு ஜங்குன்னு குதிச்சு நங்கு நங்குன்னு எல்லார் தலையையும் இடிக்குமே...

ஜொ.தி.காலம் , பிரசவம் போன்ற சூப்பர் பதிவுகளுக்கு பின்னுட்டம் போட எனக்கும் கை பரபரக்குது...

தமிழ் மணத்துக்கு பெரிய மன்சு...உங்களை மாதிரி ஸ்டார் பதிவர் களோடு எங்களை மாதிரி பின்னுட்டம் மட்டும் போடுபவர்களையும் ஆட்டத்திற்கு சேத்திக்குது... வித்துவான் நகைச்சுவையில் வெற்றி பெறும் சி.வாத்தியாரே...
December 06, 2010 1:01 AM

தக்குடு said...

டுபுக்கு அண்ணாச்சி! உங்களோட பழைய போஸ்ட் லிங்கு எல்லாம் குடுத்து ஆட்களை அனுப்பிவுடர்தே நாங்கதேன்!!...;)) சுப்ரமணியபுரம் ஹீரோயின் தான் நமக்கு பிடிக்கும்!!..:)

Chitra said...

ஆஹா... ஒரே கல்லில் (பதிவு) எத்தனை மாங்காய் (கருத்துக்கள்)!!!! கலக்குங்க!

Paavai said...

high fever kku ice kattiyai tubla pottu ukkara vaikkama ungalukku bedlaye sappadu adha thavira cinema entertainment .. thangamani rombathaan nanna pathukkaranga ungalai ... get well soon

DaddyAppa said...

//கடமையுணர்ச்சியில் சரியாய் துவட்டாமல், குல்லா அணியாமல், அலுவலகத்திற்கு கடமையாற்றச் சென்றதில் கடந்த மூன்று நாட்களாய் நூற்றியிரண்டு டிகிரி எனக்கு வந்து, வேளாவேளைக்கு, விதவிதமாய் சாப்பாடு இருக்கும் இடத்திற்கு வந்து, படுக்கையில் படுத்த வண்ணம்//

ஹலோ! ஹலோ!! இது climate காரணம் வந்தது கிடையாது. இப்படி வரும் -ன்னு எனக்கு 3 வாரம் மின்னாடியே தெரியும்.இதோட symptom .... உங்க பதிவின் வேகம். இது மூளை ரொம்ப சூடானதில வந்த காய்ச்சல்... :-)

அப்புறம்...list ...ஜெனிலியா நம்ம தனுஷ் டயலாக்க சுட்டு சொல்லறாங்க "என்னையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது...பாக்க பாக்க தான் பிடிக்கும்" ...இதுக்கு தான் நாங்க எல்லாம் இரண்டு மூணு list வெச்சிக்கறது... 'selected ', 'rejected ' & 'waiting -list ' [நன்றி: சூப்பர் சிங்கர் judges ] :-)

தக்குடு said...

ஹலோ எவரிபடி, கொடியக்கா,எட்டிப் பாக்காத அனன்யா & இட்லி மாமி,தலைமறைவான அம்பி எல்லாருக்கும் ஒரு நற்செய்தி!!(வெயிட்! வெயிட்! நான் அப்பா எல்லாம் ஆகலை). இந்த வாரம் தமிழ் மண ஸ்டார் யாரு தெரியுமா? நமது தன்மானசிங்கம்,'என்றும் அன்புடன்' தட்டி தட்டியே விரல் தேஞ்சு போகும் வீரர்,கண்ணாடி போட்ட கோப்பெருஞ்சோழர்,அமெரிக்காவுக்கு கள்ளத் தோணியில் போவது எப்பிடி?னு பரபரப்பான தொடர் எழுதும் நம்ப கழகத் தலைவர் அண்ணன் பாஸ்டன் நாட்டாமை அவர்கள். நம்ப கழகத்துக்கே பெருமையா இருக்கு நாட்டாமை!! வாழ்த்துக்கள்!!

என்றும் வம்புடன்,
தக்குடு
கழக போர் வாலு
தோஹா கிளை

தக்குடு said...

என்னடா இந்த பயல் இங்க வந்து சொல்றானே?னு யாரும் நினைக்க வேண்டாம். எங்களுக்கு எல்லாம் கழகமே கோவில், எப்பிடினாலும் கழக கண்மணிகள் இங்கதான் உலாத்திண்டு இருப்பாங்க, அதான் போஸ்டர் ஒட்டிட்டேன்(டுபுக்கு அண்ணாச்சி இதுக்கெல்லாம் கோச்சுக்கமாட்டார்)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கடமையுணர்ச்சியில் சரியாய் துவட்டாமல்//
இங்க வந்த புதிசில் ஒரு நாள் அப்படி அவசரத்தில் ஓட... மைனஸ் இருபது அன்னைக்கி... வெளிய போனப்புறம் தலை எல்லாம் freeze ஆகி...அட ஈஸ்வரா? நொந்து நூடுல்ஸ் ஆன கதையெல்லாம் உண்டு என் வாழ்க்கைல... ஹும்... இப்படி எல்லாம் கூட ஆகும் இந்த கொடுமை பிடிச்ச ஊர் வந்து தான் தெரிஞ்சுது...

பழையன கழித்தல் புதியன புகுதல்... ஆஹா... நான் கூட ஒரு நிமிஷம் தப்பு கணக்கு போட்டுட்டேன்... யு ஆர் கிரேட்...

//ஜெனிலியா யாரு என்று தெரியாதவர்களுக்கு உபயோகப் படுமே என்று படம் போட்டிருக்கிறேன்//
உங்க கடமை உணர்ச்சி யாருக்கு வரும் சொல்லுங்க...ஹும்..

இந்த வார கிசு கிசு சூப்பர்...பாயிண்ட் நோடேட்...என்ன ஒரு விஷயம்னா ... நானும் race ல இருக்கேன்... இருங்க இருங்க நீங்க இப்படி டென்ஷன் ஆகி வாபஸ் எல்லாம் வாங்கற முடிவு சரி இல்லிங்க... (ஹி ஹி ஹி)

Thakkudu - super நற்செய்தி... super poster... me too proud you know...okay okay... me escape now...

balutanjore said...

dear dubuks

neenga badhil pottalum podavittalum

yarum kochukka matta.

thodarndhu ezhudhungal

balu vellore

Kavitha said...

Idukkan varungal nahuka...mmm 102 fever and sirippu! Nalla irukku:)

a said...

//
தற்பொழுது தங்கமணி இந்த வரிகளை தத்து எடுத்துக்கொண்டு என் மகள்களுக்குப் பாடி எனக்கு செய்தி அனுப்புகிறார்
//
எவ்ளோ விவரமா இருக்காங்க....

ராம்ஜி_யாஹூ said...

அருமை,

தமிழ்மணம் விருதுக்கு உங்கள் பதிவின் தலைப்பு என்ன, இப்போதே வாகு அளிக்க நான் தயார், மகிழ்ச்சி

Anonymous said...

dubukku sir..take care of your health....idhu naduvulayum ezhudareengle....indha kadamai unnarchi yaarukku varum....by the way...loose penne pattu kette vandha juram pogala...idu naduvula indha madhiri...evandi unna pethannn...ore advantage...thitta oru pudhu pattu kidachudhu enakku!!!
nivi.

Anonymous said...

jurathukku semma vaidyam ice tubla podrathuthaan... wifekku theriala pola irukku pavam avanga ungalukku padukkaila sappadu kuduthu sishrushai panranga ... :) jokes apart get well soon .. Paavai

ரஜின் said...

ஓ..இவங்கதா ஜெனிலியாவா,,,இப்பத்தா,நேர்ல...சாரி போட்டோல பாக்குறேன்.இந்த காலேஜ் பியூட்டி,அப்டீ இப்டீன்னு சொல்ரதெல்லா இவங்களத்தானா?...எனக்கு அதெல்லா தெரியாது.நா டீவியே பாக்குரதில்ல..சரி இவங்க எந்த சீரியல்ல நடிக்கிறாங்க???ம்ம்ம்

Dubukku said...

பிலாசபி பிரபாகரன் - அதே அதே. ஏங்க ஆபீஸ் பற்றி இவ்வளவு நல்லெண்ணம் உங்களுக்கு? :))) அட என்னங்க ஜெனிலியா சிரிச்சாதேன் சிறப்பு... நல்ல கலெக்க்ஷ்னா எதச் சொல்றீங்க??

பொற்கொடி - கெடு முடிஞ்சவுடனே எல்லாருக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன். உங்க ஊரு பத்தியும் தான் தெரியுமே. காவியப் பாட்டை அறிமுகப் படுத்தியது நீங்கதேன் நீங்கதேன் நீங்கதேன்

ஸ்ரீராம் - கள்ளவோட்டு -ம்க்கும்...கள்ளவோட்டு போட்டா கூட கெலிக்க முடியும்ன்னு தோணல...எனக்கு சாதகத்துல விருது தோஷம் இருக்குன்னு சொல்லிப்புட்டாய்ங்க. ஆனா உங்க அன்பிற்க்கு நெம்ப நன்றிங்கோவ்

பொற்கொடி - //அப்புறம் மிஷ்கின் ஸ்னிக்தா கிட்ட வெளிப்படையா அவனுக்கு அம்மாவா நீ இருப்பியான்னு முன்னாடியே கேக்கறது கூட பிடிக்கல, கடைசில வெறும் செய்கைல காட்டி இருந்தா இன்னும் பவுர்ஃபுல்லா இருந்துருக்கும்ல//ஆஹா எனக்கும் இது தோணிச்சே...சேம் திங்கிக்...

ஸ்ரீராம் - அன்பு எங்கெங்க போகப்போவுது ஆனாலும் நீங்க இவ்வளவு மெனக்கெடறது டச்சிங்கா இருக்குங்க

Dubukku said...

பத்மநாபன் - கார் மேல இருக்கிற பனிக்கட்டி தாங்க சரியான கடி வேலைங்க அது. உசிரு போயிடும். சரி பெரீய டவுட்டு...நீங்க நான் வித்துவான் பதிவத் தான் போட்டிக்கு போட்டிருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க...அத பப்ளிஷ் பண்ணியிருக்காங்களா என்ன?

தக்குடு - டேங்க்ஸ் டேங்க்ஸ் நிறைய ஆதரவு காட்டறது புல்லரிக்குது. கணக்கு போட்டு காசக் கேக்கமாட்டீயே? :P

சித்ரா - ஹீ ஹீ ரொம்ப டீஜென்டா டேய் மாங்கா ஏதாவது ஒழுங்கா எழுதுன்னு சொல்றீங்க.. அதானே:))

Dubukku said...

பாவை - ஏங்க உங்களுக்கு ரொம்ப நல்ல் மனசுங்க....எப்பா ஐஸ நினைச்சாலே சிலிர்க்குது

டாடிஅப்பா - ஹய்யா அப்போ இங்க எனக்கு மூளை இருக்குன்னு நம்பிட்டீங்க. தளிவா தான் இருக்கீங்க ஆனா இந்த மூனு லிஸ்ட் மேட்டர் வீட்டுக்குத் தெரியுமா? :P

தக்குடு - ஹீ ஹீ எனக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரியுமே :)) சரி சரி உண்டியல் கலெக்க்ஷன் என்னாச்சு??

அப்பாவி தங்கமணி - ஆமாங்க இந்த குளிர் பெரிய கொடுமைங்க //நான் கூட ஒரு நிமிஷம் தப்பு கணக்கு போட்டுட்டேன்// ஹலோ...என்னா தப்பா நினைச்சீங்க என்னப் பத்தி....
ஐயைய்யோ நீங்களும் போட்டில இருக்கீங்களா...போட்டி பலமா இருக்கும் போல இருக்கே!!!

பாலு - உங்கள் அன்பு சிலிர்க்க வைக்குதுங்க ஆனா எனக்கு கில்டியா இருந்தது அதுனால தான் தெளிவு படுத்திட்டேன்

பொயட்ரீ - ரொம்ப டேங்க்ஸ் இப்போ திரும்ப நலமாகிட்டேன்

யோகேஷ் - ஆமாங்க ரொம்ப விவரம் :))

ராம்ஜி - அண்ணாச்சி வாங்க உங்களையெல்லாம் நம்பித் தான் டெபாசிட்டு கட்டியிருக்கேன் ஏதோ பார்த்து செய்யுங்க. நகைச்சுவை பிரிவில் வித்துவான் பதிவும், பயண நிணைவுகளில் "வந்தியா இந்தியாவும் பொட்டிருக்கேன் (அனேகமா இத வாபஸ் வாங்கிடுவேன்னு நெனைக்கறேன் என்ன சொல்றீங்க)

நிவி - ரொம்ப நன்றிங்க இப்போ நலமாகியாச்சு :) அதனே உங்களுக்கெல்லாம் ரொம்ப கொண்டாட்டமா இருக்குமே!! உங்க வீட்டுலயும் ரங்கு பாடு கஷ்டம்தான்னு சொல்லுங்க.

பாவை - ரெண்டு தரம் அந்த ஐஸ் மேட்டர சொல்லி கமெண்ட் போடறீங்க...ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு ஜோக்ஸ் அப்பர்ட் உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. இப்போ திரும்ப ஆபீஸ் போக ஆரம்பிச்சாச்சு

ரஜின் - ஆமாங்க இந்த மாதிரி தெரியாம யாரும் கஷ்டப் படக்கூடாதேன்னு தான் படத்த போட்டேன். என்ன சீரியல்ன்னு சரியா தெரியல..இருங்க உங்களுக்காக இன்னும் நாலு படத்த பார்த்து கண்டுபிடிச்சு சொல்றேன். :P

கால்கரி சிவா said...

நல்லவேளையப்பா நீரும் அந்த சாப்பாட்டு கடைக்காரர்களை போல் நான் வெஜ் ஜோக்குகளைப் போட்டு கொல்ல போகிறீர் என நினைத்தேன். ஜில்பான்ஸ் ஒரு குன்சாவே இருக்கு.

Saraswathi said...

Hahaha
unga message enaku sonna maari irundhudhu
unga post ellam padichundu varen
public exam ku kooda portions complete panni padichadhu illai
Year wise unga posta padichundu varen

Post a Comment

Related Posts