Tuesday, December 14, 2010

ஜில்பான்ஸ் - 141210

சமீபத்திய வருத்தம்
கமல் என்ற நடிகரின் தீவீர ரசிகன் நான் என்பதை இன்னுமொரு முறை ஆணித்தரமாய் சொல்லுவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. அவருடைய நிஜ குடும்ப வாழ்க்கையைப் பற்றி எனக்கு கருத்தொன்றும் சொல்வதற்கில்லை அதில் அவசியம் இருப்பதாயும் நான் கருதவில்லை. எனக்கு ஷகிராவிலிருந்து நேற்று ரோடைக் கடக்கும் போது ஹாரன் அடித்தவன் வரை எல்லாரைப் பற்றியும் எனக்கு தனிப்பட்ட கருத்தும் பிம்பமும் இருக்கிறது. அது என்னுடைய தனிமனித உரிமைக்குட்பட்டது, சபை நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது.

இங்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். கடவுள் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை உணர்சிப் பூர்வத்திலிருந்து ஆராய்ச்சிப் பூர்வமாய் சில காலமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அன்பே சிவம் என்பதில் நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அது என்னுடைய நம்பிக்கை மட்டுமே. அதை முன்னிருத்தி நான் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை கேலி செய்வதை நாகரிகமாக கருதவில்லை. என்னுடைய சுயமரியாதையைப் போல் நம்புபவர்களின் சுயமரியாதையையும் நான் சமமாக மதிக்கின்றேன். அது அவர்கள் உரிமை என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனோ நாத்திகமும், சுயமரியாதையும் கடவுள் நம்பிக்கையை தாக்குவதில் முனைப்பாக இருப்பது பெரும் ஆயாசத்தை குடுக்கிறது.

மன்மதன் அம்பு படத்திற்கு ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே அவசியம் என்று நான் கருதவில்லை. கவிதையில் எனக்கு சீப் பப்ளிசிட்டியின் வார்த்தை வண்புணர்ச்சியும் கெக்கலிப்பும் தான் தெரிகிறதே தவிர அறிவிஜீவித்தனம் மருந்துக்கும் தெரியவில்லை. மும்பை எக்ஸ்பிரஸ் பயத்தில் ஏற்கனவே படம் எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற கமல் ரசிகர்களுக்கு  இந்த கவிதை ஏமாற்றமே. இருந்தாலும் பயத்தை உறுதிப் படுத்திக்கொள்ளவாவது படத்திற்கு முதல் நாள் போக வேண்டும், போவேன்.
(ஹூம்...அடுத்ததா ஓபாமாவே மன்னிப்பு கேள்ன்னு ஒரு பதிவு எழுதனும் )


சமீபத்திய வாசிப்பு
ஏனோ தெரியவில்லை வாழ்க்கை அனுபவ வாசிப்பு சமீபத்தில் ரொம்ப பிடித்திருக்கிறது. கல்கி அவர்களின் புதல்வர் கல்கி ராஜேந்திரன் எழுதிய "அது ஒரு பொற்காலம்" ரொம்ப அனுபவதித்து படித்தேன். ராஜாஜி, கல்கி, எம்.எஸ் சதாசிவம் தம்பதியனர் எல்லோரையும் பற்றி பல வழ்க்கை சம்பவங்களை சுவையாக எழுதியிருக்கிறார். பல அரிய புகைப்படங்களும் இருக்கின்றன. என்.சி.மோகன் தாஸ் அவர்கள் எழுதிய "நன்றி மீண்டும் வருக"வும் மிக சுவையான புத்தகம். அமீரகத்தில் அவர் நடத்திய விழாக்களுக்கு அழைத்து வந்த வி.ஐ.பிக்களைப் பற்றியும், அவர்களைப் பற்றிய அவருடைய கருத்தையும் கவனிப்பையும் உணமையாக மிக சுவை பட எழுதியிருக்கிறார். அதே போல் எம்.ஜியாரின் தனி மெய்காவலராய் இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் எழுதிய புத்தகம் ஒன்றையும் வாசித்தேன். அதுவும் மிக அருமையான புகைப்படங்களுடன் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது. 


இந்த வார கிசு கிசு
டு என்ற பெயரில் அரம்பிக்கும் (இந்த முறை கடேசி எழுத்து க்ளூ கிடையாது) பதிவருக்கு ரொம்ப நாளாய் ஒரு ஆசை. அவ்வப்போது இந்த அறிவிப்பை உங்கள் ப்ளாகில் போடமுடியுமா என்று சில பேர் அணுகுவதுண்டு. அதை ஒரு பெர்மணன்ட் பகுதியாகவே எங்கேயேயாவது சொருக முடியுமா என்று யோசித்து இனிமேல் ஜில்பான்ஸில் போடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். உங்களுக்கு ஏதாவது அறிவுப்பு செய்யவேண்டுமானால் r_ramn அட் யாஹூ டாட் காம் என்ற ஈமெயிலுக்கு ஒரு மெயில் தட்டினால் அதற்கடுத்த ஜில்பான்ஸில் வெளியிடப்படும் என்று பட்சி சொல்கிறது.

ஏன் எதற்கு எப்படி, மதன் பதில்கள் புத்தகத்தை படித்ததிலிருந்து நிறைய கேள்வி கேட்டால் நிறைய அறிவு வளரும் என்று ஆணித்தரமாய் நம்பி அதே டு பதிவர் அறிவிப்பு மட்டுமில்லாமல் "மைசூர் போண்டாவை பெங்களூருவில் தின்கிறார்களே...இது அடுக்குமா?" போன்ற வாசகர் கேள்விகளையும் ஜில்பான்ஸில் அறிமுகப் படுத்தலாமா என்று யோசித்து வருகிறார். கேட்டால் ஜில்பான்ஸ் மொத்ததில் இன்டராக்டிவாய் இருக்கலாமே என்று ஜல்லியடிக்கிறார். நீங்கள் பேகான் ஸ்ப்ரே அடித்து ஐடியாவை கொல்லாமலிருக்கும் பட்சத்தில் நிறைவேற்றிவிடுவார் போல இருக்கிறது ஜாக்கிரதை !!!

47 comments:

Porkodi (பொற்கொடி) said...

vaasagar kelvi: க்ரைண்டர் எப்படி இருக்கு?

Porkodi (பொற்கொடி) said...

//ஏனோ தெரியவில்லை வாழ்க்கை அனுபவ வாசிப்பு சமீபத்தில் ரொம்ப பிடித்திருக்கிறது.//

நெஜமா தெரிலியா இல்லை தெரியாத மாதிரி ஆக்டிங்கா? :P

ஆமா முதல் பத்தி எதை பத்தி ஒண்ணுமே புரியலியே? Cupid arrow படத்துல வர்ற என்ன பாட்டாவது பத்தியா? (I heard only நீல வானம்..)

ரொம்ப கம்மி ஜில்பான்ஸ் தல‌!

Porkodi (பொற்கொடி) said...

பாஸ்டன், தக்குடு, அப்பாவி அக்கா, சுபா அக்கா, இன்ன பிற சங்கத்து அடி பொடிகளுக்கு: வவவ்வ்வ்வ்வே! :P

Porkodi (பொற்கொடி) said...

ரெண்டாவது வாசகர் கேள்வி: ஆமா இன்னும் யாருமே வராத போது ஏற்கனவே ஒரு ஓட்டு இருக்குன்னா, சொந்த ஓட்டா அது?!!

சரி இனிமே மத்தவங்க கேக்கட்டும்..

Philosophy Prabhakaran said...

// r_ramn அட் யாஹூ டாட் காம் என்ற ஈமெயிலுக்கு ஒரு மெயில் தட்டினால் //

மெயில் ஐடியை தெளிவாக ஆங்கிலத்தில் போடவும்...

Dubukku said...

//இல்லை தெரியாத மாதிரி ஆக்டிங்கா? // இல்லைக்கா எனக்குத் தெரியலை பெரியவ்ங்க நீங்க சொல்லுங்கக்கா
அடடாடா....அதுக்குள்ள கேள்வியப் போட்டு தாக்கிறீங்களே. ஓட்டு -ஏங்க இதுல சந்தேகம் வேறயா...நான் நான்....நானே தான். பதிவப் போட்டுட்டு ஓட்டக் குத்திட்டு தான் மறுவேலை.
வரலெட்சுமி தெரியாதா...நல்லது...அது தலைவர் ம.அம்புக்கு விட்ட பப்ளிசிட்டி கவிதை கூகிள் பண்ணிப் பாருங்க...

Dubukku said...

பிலாசபி அண்ணாச்சி - நீங்க வேற எனக்கு ஏற்கனவே ஏகப்பட்ட உகாண்டா பிசினெஸ் ரிலேஷன், (ஹீ ஹீ அத்தோட மேட்ரிமோனி விளம்பர இம்சைகள் வேற) இதுல ஆங்கிலத்துல வேற தெளிவா போட்டச் சொல்றீங்க

Porkodi (பொற்கொடி) said...

ஏலேய் மருவாதியா உண்மைய சொல்லிடு! திடீர்னு போஸ்ட் வரத்து இவ்ளோ சாஸ்தி ஆயிருக்கு.. கமெண்ட் செக்சன்ல வந்து உடனே பதில்லாம் வருது.. யாரு நீ? எங்கள் தானைத்தல எங்க?

அனுபவ வாசிப்பு.. நான் சும்மா தான் இருந்தேன் நீங்க அக்கான்னு கூப்டதால சொல்றேன், அதெல்லாம் பாஸ்டன் மாதிரி அங்கிள் அல்லது தாத்தா பண்ற காரியம். யூத்துன்னா ஜில்பான்ஸோட ஸ்டாப்!

Porkodi (பொற்கொடி) said...

யாருமே இல்லாத கடையில் உங்களை டீ ஆத்த விட(!!!) மன்சு கேக்ல தல.. 3ஆவது கேள்வி: டைட்டில்ல ஓரத்துல அப்புறம் இடது கீழ்கோடில எல்லாம் செஸ் காயினாட்டம் நிக்குதே, இந்த ப்லாகுக்கும் அதுக்கும் என்னா சம்பந்தம்?

sriram said...

வாத்யார், ஜில்பான்ஸ் ரொம்ப சின்னதா இருக்கு என்ன ஆச்சு?
இடுகை எல்லாம் விடு வாத்யார், //பெரியவ்ங்க நீங்க சொல்லுங்கக்கா // இந்த ஒரு வாக்கியத்துக்காகவே பத்து கள்ள ஒட்டு போடலாம். போட்டுடறேன். அதுவும் தவிர அடப்பாவி தங்கமணி பெயர்தான் பொருத்தமா இருக்குனு சொன்னதுக்காக தக்குடு கிட்ட சொல்லி இன்னுமொரு பத்து ஒட்டு போடச்சொல்லிடறேன்.

//யூத்துன்னா ஜில்பான்ஸோட ஸ்டாப்!// கேடியக்கா, நானும் தக்குடுவும் தான் கழகத்தில யூத்து, நீங்கல்லாம் யூத்து லிஸ்ட்ல இருந்து எடுக்கப்பட்டு பத்து இருபது வருஷம் ஆச்சு.

வாத்யார், நல்லா ரோசிச்சு அப்பாலிக்கா வந்து கொஸ்டின் கேக்கறேன்.
என்றும் அன்புடன்

பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

இப்போதைக்கு ஒரு கொஸ்டின் வாத்யார், இந்த இடுகைல கூவிக்கினே இருக்குதே போர்க்கொடி அக்கா அத்த பொற்கேடின்னு அல்லாரும் சொல்றாங்களே அது ஏன்?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Vidhya Chandrasekaran said...

மீ டு கமல் ரசிகை. ஆனால் விஜய் டிவியில் நடந்த மன்மதன் அம்பு பாடல்கள் வெளியீட்டு விழாவில் கேட்ட ஜால்ரா சத்தம் எரிச்சலை தந்தது:(

Anonymous said...

Voltaire n quote thaan nyabagam varudhu ungal suyamariadai kadavul nambikkai pathi padikkum podhu .."I may disapprove of what you say, but I will defend to the death your right to say it." Intellectual maturity comes with wisdom and Intellect comes with knowledge nu thondradhu .. Paavai

Anonymous said...

ஆபீஸ் லே ப்ளாக் படிக்கறதே ரொம்ப கஷ்டம். வந்து படிச்சு கமெண்டை தனி மெய்லாய் போட்டு யாரவது போடுங்க ராஜான்னு கெஞ்சி .... எப்பா முடியலை ஒரு சோடா ப்ளீஸ்...:))
அதுக்குள்ளே அமெரிக்கா காரங்க எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட கும்மி ...))

subha

Anonymous said...

டுபுக்கு அண்ணாத்தை ஜில்பான்ஸ் தம்மாதுண்டு இருந்தாலும் short and cute ஆ கீது.
அன்பே சிவம் தான் கரீட்டு மா. அதான் நம்ப கட்சி நைனா. எம்ஜியார் புஸ்தகம் நம்ப ராம கிருஷ்ணன் எழுதினதா கண்ணு.
கட்சீயா ஒரு கேள்வி கணை உனுக்கு பா
மைசூர் போண்டா பத்தி சொன்னியே, மைசூர் ரசம் சென்னைலே வச்சு சாப்ட்ராங்களே இது நியாயமா, இதுக்கு உன் பதில் இன்னா
அன்புடன்
சுபா

தக்குடு said...

டுபுக்கு அண்ணாச்சி கேள்வி பதிலுக்கு எல்லாம் யோசிக்காம கமிட் ஆகாதீங்கோ!! ஏடாகூடமா கேள்வி கேக்கர்த்துக்குன்னே கூடாரம் போட்டு யோசிக்கர ஒரு கூட்டமே இங்க இருக்கு. அவ்ளோதான் சொல்லுவேன்!!..;)

@ பாஸ்டன் நாட்டாமை - நான் கும்மிக்கு வரர்த்துக்கு முன்னாடியே என்னையும் சேர்த்து அரவணைச்ச உங்க அன்பு புல்லரிக்கவெக்குது நாட்டாமை!
வாழ்க நாட்டாமை! ஓங்குக கழகத்தின் ஒற்றுமை!

Kavitha said...

Kelvi kekkaradhukku yosikka room poda phone panninen...aana andha hotelil room romba vela solraanga. Sponsor pannuveengala? :)!!! I enjoy reading your humorous writing style...so miha viraivil adha miss pannaporena enna??

CS. Mohan Kumar said...

முதல் ரெண்டு மேட்டர் படிச்சு இது டுபுக்கு தானா என டவுட்டு. மூணாவது படிச்சு தான் தெளிந்தேன்

ILA (a) இளா said...

டேய் யார்ரா நீயூ? தல டுபுக்குக்கு பதிவுல பூந்து விளையாடுறியா? இதுக்காகவே பாஸ்டன் ஸ்ரீராம், போர்கொடி(bore கொடி) எல்லாரும் டீ குடிப்பு போராட்டம் நடத்துவாங்க

Porkodi (பொற்கொடி) said...

vivasayi, unglukum enakum enna vaaika varapau thagarara? edhuva irundhalum pesi theerthukalam!

Ramesh said...

அந்த‌ க‌விதைய‌ கேட்ட‌ப்போ ஒரு மாதிரி இருந்த‌து. ஆனா என‌க்கு க‌ருத்தில் உட‌ன்பாடுதான். மொழி கொடுமையாக‌ இருந்த‌து.
எங்க‌ வோட்டு போட‌ர‌து?

பத்மநாபன் said...

டுபுக்கார் வெள்ளிகிழமை தான் வருவார்ன்னு கெஸ் பண்ணனது தப்பா போச்சே.

நானும் கமலின் ரசிகசிகாமணி தான்..இருந்தாலும் இந்த கவிதையை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...
அறிவிஜீவித்தனம் வெளக்கெண்ணையாக மாறிக்கொண்டுள்ளது...திருத்திக் கொள்ளவேண்டும்..

//உணர்ச்சிப் பூர்வத்திலிருந்து ஆராய்ச்சிப் பூர்வமாய் // சரியான ரூட்ல தான் போறிங்க ...

வாசித்த புத்தகங்கள் வித்தியாசமா இருக்கிறதே..

எதையாவது அறிவிக்கனும்ன்னு எனக்கும் தோணுது..வசமா ஒன்னும் சிக்க மாட்டேங்குது..

நல்ல ஐடியாத்தான் ..கே.பதில்கள் ..கேட்கமட்டும் தெரிந்தவங்க பொழச்சுப்போம்.

sriram said...

வாத்யார், ஒரு கொஸ்டின்.
சிஷ்ய கோடிகள் (பொற்கொடி மட்டும் சிஷ்ய கேடி)நாங்க வாத்யாரைப் பாத்து கொஸ்டின் கேக்கலாமா? அப்படி கேட்டா அதுதப்பு இல்லயா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

ஆமா தப்புன்னு அவர் சொன்னா நீங்க என்ன கேட்டுடவா போறீங்க பாஸ்டன்?

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

Anonymous said...

//ஆமா தப்புன்னு அவர் சொன்னா நீங்க என்ன கேட்டுடவா போறீங்க பாஸ்டன்?//

அலோ என் பேரு ஸ்ரீராம், பாஸ்டன் இல்லை.

கேடியக்கா @ கேடி Aunty @ சிஷ்ய கேடி
என் கேள்வி வாத்தியாருக்கு, அவுரு பதில் சொல்லட்டும். நீங்க உங்க பக்கத்தில கொஸ்டின் அக்சப்டட்னு ஒரு தபா சொல்லுங்க, கேள்வி மழை பொழியறோம்.

வாத்யார் கேக்கலாம்னு சொல்லிட்டா போட்டுத் தாக்கிடலாம், கூடாதுன்னு சொன்னா நாங்க என்னிக்கு வாத்யார் பேச்சை கேட்டிருக்கிரோம்னு சொல்லிட்டு அப்பவும் கேள்விகள் கேட்கப்படும்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

நான் உங்க கேள்விக்கு எதிர்கேள்வி தானே கேட்டேன், பதில் சொல்லலியே..! (அப்பாடா.. last comment, எதா இருந்தாலும் மீதியை அடுத்த பதிவுல கும்மி அடிப்போம்.)

தக்குடு said...

பாஸ்டன் நாட்டாமை & கேடி- அமைதி! அமைதி! நாம இப்படி கும்மி அடிச்சா அப்பரம் நம்ப தல அடுத்த போஸ்ட் போடாம டபாய்சுடுவார். எதுனாலும் கழக பொதுக்குழு மீட்டிங்ல பேசி தீர்த்துக்கலாம்.

என்றும் வம்புடன்,
தக்குடு

லங்கினி said...

Appada romba naalaikku apporom ippo dhan arrears -lam clear panninen...

Oru chinna idea.. Othhu varumanu parunga..
Every week adutha kelvi badhil section-ku yenna yenna topic anuppalam-nu sonna ready-a iruppom...

Anonymous said...

naanum kamalin theevira rasigai.aanal indha kavidhaiyai rasikka mudiyavillai.naatheegam pesum kamal aranganai thevai illamal vambukizhukkirar!!!kamalin kavidhai konjam abathamagavum anagareegamagavum enakku thonriyadhu.pugazha aalirundhal enna ezhudinalum rasikka aalirukkum enru potta kanakku maaperum thavaru....ulaga nayagan usarathillurundhu sarukkukigarar!!!

btw ???kelvi thanee ketta pochu!!!
nivi.

Anonymous said...

என்கூட டூ போட்டுக்க மாட்டீங்கன்னா ஒண்ணு எதிர்பதமா சொல்லட்டுமா டு? :)
//கடவுள் நம்பிக்கையை தாக்குவதில் முனைப்பாக இருப்பது//
இப்படி அந்த கவிதை தோணலையே. உங்க பதிவு மூலமாக தெரிஞ்சு யூ ட்யூப்ல இப்பதான் பாத்தேன்.
கடவுளே உனக்காவது கனவு பலிச்சுதான்னுதான முடிச்சிருக்காங்க? கடவுளிடம் நட்போடு பேசுவது மாதிரிதான் இருக்கு - கடவுளை மரியாதைக்குரிய பெரியோரா பாக்காம நட்போட பார்த்து பாடலையா வேறெந்த பக்தரும்?
நான் கமல் ரசிகை இல்ல. ஆனா ஏதோ வித்தியாசமா இருக்கு கவிதை - நாத்திகம் எனக்கு தெரியவே இல்லையே?!!!

Sh... said...

enakku purinja varayil, Kamal anda kavithai la solla vara vishayam idu than - oru aanukkum oru pennukkum idayil iruppadu allathu irukka vendiyathu kaamam mattum thaan. Idu avarudaya opinion nnu vittudalam. Aana anda kavithai varigal censor panna vendiyanava irukku. Dubukku sir sonna mathiri, sabai naagarigam karuthi ada publicize pannama irundu irukkalam. Avare avara thazhthikkarar.

intha subject kavithai la edukku varalakshmi -ya izhukkanum? intha technic aathiga vaadigalai vambukku izhukkaththan nnu enakku thonudu. antha maathiri oru cheap idea en kamal mathiri orutharukku thonichchu nnu theriyalai.

naan kamal rasigai illai. aana, enakku kavithainna romba pidikkum. antha kavithai kettappo, kaatha pothikka than thonithu.

ide kamal, deepavali spl koffee with anu ending la oru naathiga kavithai vasichaaru. karuthula enakku udanpaadu illai, aana antha kavithai nayamum avar vaasicha vithamum nalla irundudu.

innoru vishayam ennanna, there were lot of issues when Kushboo said something offensive about thamizh panpaadu. kamal's work is no different from that. aana ellarum summa irukkanga. May be TN is busy with raasa's spectrum case.

கைப்புள்ள said...

கேள்வி பதில் பகுதியா...
என்ன கேள்வி கேக்கல்லாம்னு இப்போவே யோசிக்கத் தொடங்கியாச்சு :)

Anonymous said...

Trying again as my comment didn't get posted, I think.
Hi Dubukku,
Totally enjoyed the jilpaans post.
2 questions: (not sure if qualify for kelvi badhil but genuine q's)
1. Can you tell me where to find Kalki Rajendran's book in Chennai? Husband currently visiting Chennai and will pick it up for me if I can tell him exactly where to find it.
2. Can you point me to the tamil s/w to download that I can use to respond in thamizh to your posts?
nandri,
sri

Dubukku said...

பொற்கொடி - யெக்கோவ் கோச்சுக்காதீங்க பாருங்க இப்ப பழைய பார்முக்கே வந்தாச்சு. உடனே பதில் சொல்றதே இல்லை

ஸ்ரீராம் - ஆஹா ஆரம்ப கேள்விகளே விவகாரமா இருக்கே ...தல சின்னப் பையன் பார்த்து செய்யுங்க தேர இழுத்து தெருவில விட்டுராதீக

வித்யா - அட அப்படியா அது இன்னும் பார்க்கல யூட்யூப்ல இருக்கா பார்க்கனும்

பாவை - உங்க மேற்கோள் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சது. நான் வளவளன்னு சொன்னத ரெண்டே வரில அற்புதமா சொல்லியிருக்காரு. உங்க மேதாவிலாசம் என்னை நாளுக்கு நாள் ஆச்சரியப்படுத்துகிறது

சுபா - யெக்கா நீங்க தானே ஆபிஸர் அப்புறமென்ன எல்லாருக்கு ஹோம் வொர்க் குடுத்துட்டு கமெண்டு போட வேண்டி தானே. அட ஆமாக்கா ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகமே தான். உங்க நியாபக சக்தி பிரமாதம்.

தக்குடு - ஆமாண்டா தக்குடு ஆரம்ப கேள்விகலே கதி கலங்க வைக்குது :))

பொயட்ரீ - ஏங்க என்னோட எழுத்த மிக விரைவில் மிஸ் பண்ணப் போறீங்க?? என் மேல நம்பிக்கை போயிடுச்சா??

Dubukku said...

மோகன் குமார் - தல ஹீ ஹீ

இளா - வேண்டாங்க வேண்டாங்க நான் பாருங்க நான் உடனே பதில் போடறத நிப்பாட்டிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்

பொற்கொடி- உங்களுக்கும் என்ன மாதிரி ஊர சுத்தி ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் போல இருக்கு??

ரமேஷ் - ஆமாங்க வார்த்தைகள் கொஞ்சம் ஸ்ராங்கா இருந்தது.

பத்மநாபன் - ஆமாம் சாரே எனக்கும் தலீவர் கவிதையில் உடன்பாடு இல்லை.ஏதாவது அறிவிப்பு இருந்தா சொல்லுங்க :)))


ஸ்ரீராம் - நீங்க நான் சொல்லி தானே கேக்கறீங்க கேளுங்க கேளுங்க (இல்லாட்டி மட்டும் அவ்வ்வ்வ்)

செந்தில்குமார் - மிக்க நன்றி நண்பரே

ஸ்ரீரம்/தக்குடு/பொற்கொடி - அந்த உண்டியல் மேட்டர் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன் :))))))


லங்கினி - வாங்க. நல்ல யோசனை. ஆனா ஒரே டாபிக் போரடிச்சிடுமோன்னு வர்ற கேள்விகள ஒரு கலவையா குடுகலாமோன்னு யோசிச்சேன்.ஆனா எங்கங்க கேள்விகள் இனிமே தான் தேறனும் :))

நிவி - பொதுவா தலீவர் கொஞ்சம் நாசுக்கா சொல்லுவார் இந்த தரம் ஏனோ சறுக்கிட்டார். ஹூம்ம்ம்

Kookaburra - என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. இங்கே தாராளமா எதிர் கருத்து சொல்லலாம். பதிவக் கூட காறித் துப்பலாம்னா பார்துக்கோங்களேன் தவறாவே எடுத்துக்க மாட்டேன் :)) நீன்களில் சொன்ன நட்பு கருத்தோடு ஒத்துபோகிறேன் ஆனால் அதிலும் ஒரு நாகரீக எல்லை இருக்கிறது. ஒரு பெரும்பாண்மை புனிதமாய் கருதும் ஒரு விஷயத்தை கையாளும் போது கொஞ்சம் கவனம் வேண்டும். வரலெட்சுமி விரதம் எனக்கு தெரிந்து ஏகப்பட்ட பெண்கள் மிகப் புனிதமாய் பின்பற்றும் ஒரு விரதம். அந்தக் பெண் கடவுளை கவிதையில் உயயோகப் படுத்தும் போது வார்த்தைகள் நம்புபவர்கள் மனம் புண்படாமல் எழுத வேண்டும். சாதரண பெண்ணாக இருந்தாலே கலவி பற்றி பேசும் போது நாசுக்கு வேண்டும். கமல் அதில் சறுக்கி விட்டார் என்று தான் சொல்வேன். வரலெட்சுமியை விட்டு விட்டு ஒரு தாயிடம் கெட்பது மாதிரி மாத்தினால் கூட ரொம்ப காரமாய் இருக்கிறது வார்த்தைகள். (என்னைப் பொறுத்தவரையில்)

ஷ்ஷ் - கமல் பற்றி உங்கள் கருத்துகளோடு ஒத்து போகிறேன்.ஆனால் குஷ்பூ விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு வேறு. அவர் எத சமயத்திலும் அநாகரீகமான வார்த்தைகளை உபயோகப் படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.

கைப்புள்ள - வாங்க பார்த்து கேளுங்க தல .நீங்க மெத்தப் படித்தவர் நான் சின்னப் பையன் ஏதோ பார்த்து செய்யுங்க

ஸ்ரீலதா - வாங்க. உங்கள் கேள்விகளுக்கு சுடச் சுட இங்கே பதில்

1. அது ஒரு கனாக்காலம் - கல்கி ராஜேந்திரன் - வானதி பதிப்பகம். அவர்களிடம் நேராகவே வாங்கிக் கொள்ளலாம்
Vanathi Pathipagam is located at T. Nagar in Chennai. The complete address where Vanathi Pathipagam is located is Old #13 New 23, Deenadayalu Street T. Nagar, Chennai - 600017 Tamil Nadu, India contact numbers 044-24310769, 044-24342810

2 - இதற்கு http://tamilblogging.tamilmanam.net/?p=20 இந்த பக்கத்தில் "அடே தமிழ்" பகுதியைப் பாருங்கள். மிக விளக்கமாக குடுத்திருக்கிறார்கள். மிக உபயோகமாய் இருக்கும்.

Sh... said...

I think I did not convey my message properly. I was only comparing the reaction of TN people towards kushboo's remarks and Kamal's kavithai. I personally do not know what kushboo said so I dont have any comments on that either.

BTW, unga Q/A session kku ennoda kelvi - Why did u choose the name dubukku. Ada ketta konjam oru madiri irukku sir.

Anonymous said...

Thank you!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கமல் என்ற நடிகரின் தீவீர ரசிகன் நான் என்பதை இன்னுமொரு முறை ஆணித்தரமாய் சொல்லுவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை//
same blood...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பாஸ்டன், தக்குடு, அப்பாவி அக்கா, சுபா அக்கா, இன்ன பிற சங்கத்து அடி பொடிகளுக்கு: வவவ்வ்வ்வ்வே! :P//
present மிஸ்... சாரி லேட் எண்ட்ரி....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஏலேய் மருவாதியா உண்மைய சொல்லிடு! திடீர்னு போஸ்ட் வரத்து இவ்ளோ சாஸ்தி ஆயிருக்கு.. கமெண்ட் செக்சன்ல வந்து உடனே பதில்லாம் வருது.. யாரு நீ?//
கேடி... ச்சே... கொடி.. உடனே ஒரு detective கதை ஆரம்பிம்மா... உன் திரம எப்படி எல்லாம் வேஸ்ட் ஆகுது பாரு... ஹும்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அதுவும் தவிர அடப்பாவி தங்கமணி பெயர்தான் பொருத்தமா இருக்குனு சொன்னதுக்காக தக்குடு கிட்ட சொல்லி இன்னுமொரு பத்து ஒட்டு போடச்சொல்லிடறேன்//

ஏன் தாத்தா இந்த கொல வெறி? உண்மை ஊருக்கு தெரியும்... am I right kodi?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இப்போதைக்கு ஒரு கொஸ்டின் வாத்யார், இந்த இடுகைல கூவிக்கினே இருக்குதே போர்க்கொடி அக்கா அத்த பொற்கேடின்னு அல்லாரும் சொல்றாங்களே அது ஏன்?//

பொற்கொடியோட உடன் பிறவா சொந்தம்ங்கற முறைல நான் சொல்றேன் பதில் இதுக்கு... உங்கள போல தாத்தாவையும் உங்க assistant தக்குடுவையும் சமாளிக்கரதுல அவள் போர்க்கொடி... மத்தபடி ஊருக்கு பொற்கேடி...அதாகப்பட்டது, பொன்னான மனசுள்ள கேட்பவர்க்கு அள்ளி தரும் பொண்ணுனு அர்த்தம்... (ஸ்ஸ்ஸ்பப்பா...) இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஸ்ரீராம் தாத்தா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எதுனாலும் கழக பொதுக்குழு மீட்டிங்ல பேசி தீர்த்துக்கலாம்.//
அடிக்கடி மீட்டிங் மீட்டிங்னு காதுல விழுது... ஹும்... ஒரு invite ம் காணோம்... கழகத்துல நம்ம எடம் என்னனு ஒண்ணும் புரியல... ஹும்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கொஸ்டின்: டாம் க்ரூஸ் கால்சீட் கேட்டு நீங்க முடியாதுன்னு சொன்னதா ஒரு கிசு கிசு வந்ததே... அது எந்த அளவுக்கு உண்மை?

Kavitha said...

Ada kadavule, idhukku ippadi oru artham irukka??? Illave illa ...makkaloda kelvi mela nambikkai illa...lollu sabha madhiri ayidumondra bayam...

Unknown said...

Glad to be here after a long time. You seem to be writing more again.

Amen about Kamal's arivuseevithanam. I decided not to watch his movies after seeing the stupid way he handled Dasavatharam. There must be several thousands of fans like us who wish he just "acted".

Post a Comment

Related Posts