இந்திய விடுமுறைப் பயணம் மிக மிக இனிமையானதாய் இருந்தது என்று எழுத ஏகப்பட்ட ஆசை. ஆனால் இறங்கிய ஒரு மணிநேரத்திலேயே அகலக் கால் வைத்து மாடிப் படியில் தடுக்கி விழுந்து தோள்பட்டையை அல்மோஸ்ட் உடைத்துக் கொண்டு, இன்னும் வலி போகாமல் டயாப்டீஸ் மாமா மாதிரி காலையில் கையை தூக்கி உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஊரில் இண்டர்நெட் செண்டரில் மெயில் பார்த்த அடுத்த நாள் ஈமயிலை ஹாக் செய்து மங்களம் பாடி விட்டார்கள். மெயில் ஹாக் செய்யப்பட்ட பிறகு தான் இந்தியாவில் சந்திக்க நினைத்தவர்க்ளின் போன் நம்பர்கள் ஈமெயிலில் இருப்பது நியாபகம் வந்து தொலைத்தது. ஆகையால் நான் ஆவலோடு சந்திக்க நினைத்தவர்களையெல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது.
அம்பாசமுத்திரத்தில் முக்கால்வாசி பேருக்கு அம்பானி ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்ன...அடுத்தவனை ஏமாத்தியாவது அம்பானி ஆகவேண்டும் என்று இருப்பது தான் வருத்தமாய் இருக்கிறது. தெரிந்தவர் தெரியாதவர் என்று ஏகப்பட்டபேர் எமாற்றி என்னை கும்பகோணம் கும்பானி ஆக்கிவிட்டார்கள்.. அதற்கப்புறம் "தம்பிக்கு எந்த ஊரு." கேள்விக்கு ஆட்டையாம்பட்டி சொல்லிப் பார்த்தேன்...நம்புவாரில்லை. "எது இந்த லண்டன்ல இருக்கே அந்த ஆட்டையாம்பட்டியா"ன்னு உஷாராய் கேட்டார்கள். மண்டையில கொண்டை கூட இல்லீயேடா அப்புறம் எப்படிடா கண்டிபிடிக்கிறீங்கன்னு மண்டை காய்ந்துவிட்டது.
இதற்கு சென்னை மிக பரவாயில்லை. நான் இந்த ஏரியா கிடையாது சார்..நீங்களே பார்த்து ஒரு கரெக்ட்டான அமௌண்ட குடுங்க என்று பின்னிரவில் ஏறிய ஆட்டோகாரர் அசத்தினார்.
மதுரையில் ஒரு இனிய நண்பியையும் குடும்பத்தாரையும் பார்த்தது மட்டும் தான் ப்ளான் படி நடந்தது. மற்ற ப்ளான் எல்லாம் காம்ப்ளான் தான்.
ஊரில் ஏகப்பட்ட மாற்றங்கள். சன் டீவியில் மிட் நைட் மசாலா போடுவதை நிப்பாட்டி விட்டார்கள். ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு நாலு நாள் சவரம் செய்யாத தாடியை ஒரு கதாநாயகன் கத்தியால் சொறிந்து கொண்டிருந்தார். சந்தோஷம்.
பொக்க வாயக் காட்டிக்கிட்டு குட்டைச்சுவரில் மொட்டைத் தாத்தா உட்கார்ந்திருப்பார், ப்ளாக் அண்ட் ஒயிட்ல ஒரு போட்டோ பிடிச்சு ப்ளாக்ல போடணும்ன்னு இருந்தேன். கலைப்பணிக்கு நேரமில்லாமல் போய்விட்டது.
ஜெயா டீவியில் அழகிப் போட்டி என்று அழகிகள் கையில் படமெடுக்கும் பாம்பை குடுத்து போஸ் குடுக்கச் சொல்கிறார்கள். அவர்களும் பாம்புடன் போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு அப்புறமாய் வீல் வீல் என்று அழுகிறார்கள். எந்தப் புண்யவான் ரூம் போட்டு இந்த மாதிரி ஐடியாலாம் யோசித்தாரோ...ஹூம் பிக்கினியில் வலம் வருவதே எவ்வளவோ தேவலையாய் இருந்தது
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில்... யுவதிகளெல்லாம் சர்வ தேச தரத்தில் உடையணிந்து அழகாய் வலம் வருகிறார்கள். கடைகளில் சிப்பந்திகள் இங்கிலீஷில் வரவேற்று சர்வ தேச தரத்தில் பில் போடுகிறார்கள். எல்லா கடைகளிலும் வாசலிலேயே பையை வாங்கிக் கொள்கிறார்கள். "அப்படியே பர்ஸையும் வாங்கி வைச்சிக்கலாம்ல...நாலு காசாவது மிஞ்சும்"ன்னு நான் அடித்த ஜோக் கடை செக்யூரிட்டிக்கு பிடிக்கவில்லை. விட்டால் அரெஸ்ட் செய்துவிடுகிற துவேஷத்தை முகத்தில் காட்டினார்.
டீவீ சீரியல்களில் மனைவிகள் மாங்கல்யத்தைக் காட்டி கற்பூரம் ஒற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து "இப்படியே பேசிக்கிட்டிருந்தீங்கன்னா தூங்கும் போது மண்டையில ஆட்டுக்கல்லை தூக்கிப் போட்டு கொன்னுடுவேன்"னு புருஷனை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி சீரியலகளை பெண்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.
பம்பாய் மற்றும் சென்னை ஏர்போர்ட்டும் இருக்கும் லட்சணத்திற்கு ஹைதராபாத் விமான நிலையம் இப்போது தான் கல்யாணம ஆகிய மாதிரி புத்தம் புதுசாய் சூபராய் பளபளத்துக்கொண்டிருக்கிறது. என்ன ஏர்போர்ட்டில் இட்லி தோசா என்று என்னத்தையோ குடுத்து ஒரு குண்டு ராவ் பைசா பார்த்துக்கொண்டிருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன் ரோடு ரோடாய் பைக் ஓட்டிய சென்னை மேம்பாலங்களினால் அன்னியமாகி கிழக்கு மேற்கு கூட தெரியவில்லை. கிண்டி வழியா போகட்டுமா அடையார் வழியா போகட்டுமா என்று கேட்ட கால்டாக்ஸி ட்ரைவருக்கு "அவ்வ்வ்வ்வ்"ன்னு நான் சொன்னது புரியவில்லை.
முக்கால்வாசி பேர் செல் போனில் அம்மாவைப் பற்றி உருகி உருகி காலர் சாங் போட்டிருக்கிறார்கள். சன் ம்யூசிக்கிற்கு "ஐ லவ் மை ஃவைப்" போன்ற அபத்த டெக்ஸ்ட் இன்னும் வந்துகொண்டிருக்கிறது.
சரவணா மாளிகையில் வெள்ளி விற்கும் செக்க்ஷனில் அங்காடித் தெரு மாதிரியே நாலைந்து பெண்களும் பையன்களும் நல்ல ஜாலியாய் பேசினார்கள். அங்கேயும் ஒரு காதல் கதை ஓடிக்கொண்டிருப்பதை கண்ணால் காண முடிந்தது. "தவறாய் நினைக்காதீர்கள்.." என்று அங்காடித் தெரு பற்றி கேட்டபோது...."மூன்னாடியெல்லாம் இப்படித் தாங்க இருந்தது அதத் தான் எடுத்திருக்காங்க..ஆனா இப்போலாம் ரொம்ப மாறிடிச்சு"ன்னு ஒரு பெண் சொன்னது ஆறுதலாய் இருந்தது.
ப்ரஜைல் ஸ்டிகர் ஒட்டி கஷ்டப்பட்டு பழைய புடைவையெல்லாம் சுத்தி பேக்கிங் செய்து கொண்டு வந்த அல்ட்ரா கிரண்டர் லக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் வந்த போது கடமுடா என்று ஒரே சத்தம். வீட்டில் ஒரு இஞ்சினியர் இருக்கிறேன் என்று இப்படியெல்லாமா முருகா சோதிப்பது என்று திறந்து பார்த்தால் மோட்டார் ஹவுசிங் சுக்கல் சுக்கலாய் போயிருந்தது. இந்த மோட்டாரை வைத்து இனிமேல் வயலுக்குத் தான் தண்ணி பாய்ச்சமுடியும் தோசைமாவெல்லாம் அரைக்கமுடியாது தூக்கி போடு என்று எவ்வளவோ சொல்லியும் தங்கமணி என்ன காரணத்திற்காகவோ குழவிக் கல்லை மட்டும் எடுத்து பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கிறார். மேலே சொன்ன டீவி சீரியலைப் பார்த்து கெட்டுப் போயிருப்பாரோ என்று பயமாய் இருக்கிறது.
Tuesday, September 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
55 comments:
Welcome back...!!! Really missing your posts... :-)
//தங்கமணி என்ன காரணத்திற்காகவோ குழவிக் கல்லை மட்டும் எடுத்து பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கிறார்//
எதுக்கும் தூங்கும்போது ஒரு நல்ல ஹெல்மெட் போட்டுட்டுத் தூங்குங்க.
என்னாச்சுங்க... இப்பெல்லாம் ரொம்ப எழுதுறதுல்ல?? அடிக்கடி பதியுங்க. குறும்படம் என்னாச்சு? எந்திரன் ரிலீசுக்காக வெய்ட் பண்றீங்க போலிருக்கு :)
அசத்தல் டுபுக்கு. அஜந்தா கடிகாரம் குடுத்தீங்களா யாருக்காச்சும். அதை சொல்லவேயில்லையே?
வெல்கம் பேக் வாத்யார்.. என்னடா வாத்யார ரொம்ப நாளா காணோமேன்னு மெரிசலாயிருந்தேன் வாத்யார்.
தோளாண்ட வலி இப்போ எப்படி இருக்கு வாத்யார்? தேவலியா??
நல்லா பாத்தியா வாத்யார் - இமெயிலயும் ப்ளாக்கையும் ஹேக் பண்ணாங்களா இல்ல ரொம்ப நாளா ஒன்னியும் எழுதாம எக்ஸ்பைரி ஆகிடுச்சா??
அப்புறம் தக்குடு பையனுக்கு வத்தலோ தொத்தலோ ஏதாவது தேறிச்சா வாத்யார்? பதிவு போடக் கூட மேட்டர் தேறலன்னு பொலம்பிக்கினு கீரான் போயிப் பாரு.
//குறும்படம் என்னாச்சு? எந்திரன் ரிலீசுக்காக வெய்ட் பண்றீங்க போலிருக்கு :) //
பயாலஜிஸ்டு - குசும்பையா உமக்கு, வாத்யார் குறும்படம் ரிலீஸ் பண்ணா அது புரியறதுக்கு ஒரு மாசமாகுமுன்னு அந்த ஒரு மாசம் யாரும் படத்தை ரிலீஸ் பண்ணமாட்டாங்க - தெரியாதா உங்களுக்கு?
இப்போ ஜூட் வுட்டுக்கறேன், அப்பாலிக்கா மீட் பண்றேன் வாத்யார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
செம....... சிரிச்சு முடியல.....!
யோவ் ஸ்ரீராம் என்ன கிண்டலா? தக்குடு இருக்கும் ஆகிருதிக்கு நமீதாவே பக்கத்துல நின்னா தம்மாத்தூண்டு தான் தெரியும். இதுல வத்தலோ தொத்தலோ தேடுனுமாமே? இது மட்டும் தக்குடு காதிலே விழட்டும் பின்ன இருக்கு உமக்கு கச்சேரி:-)
:)))
நல்லா சிரிச்சோம்..
(ஒரு மனுசனுக்கு தான் எவ்ளோ கஷ்டம்.. அடுக்கடுக்கா.. )
//மேலே சொன்ன டீவி சீரியலைப் பார்த்து கெட்டுப் போயிருப்பாரோ என்று பயமாய் இருக்கிறது. //
:))))) எதுக்கும் கொஞ்ச நாளுக்கு தினமும் தலை வைக்கிற இடத்துல காலும், கால் வைக்கிற இடத்துல தலையும்னு மாத்தி படுங்க
வாங்க தலை.. நான் போன மேமாசம் ஊருக்குப் போய்ட்டு, போன அன்னிக்கே இளநீ, பத்னி, எங்கூரு உழுந்தவடை, காராசேவுன்னு மொசுக்குனதுல நாலுநாள் வீட்டுல டாய்லெட்டுக்கும், பெட்ரூமுக்கும் ஓடிக்கிட்டிருந்தேன். ஊர்ப்பாசத்த உடனே காமிக்கக் கூடாதுனு தெரிஞ்சிகிட்டேன்..
வலியெல்லாம் குறைந்து, மீண்டும் எழுத வாழ்த்துக்கள்
மிஸ்ட் யுவர் ஹியுமர் ஹானர்
//மேலே சொன்ன டீவி சீரியலைப் பார்த்து கெட்டுப் போயிருப்பாரோ///
:)))))))))))))
சரி அந்த குட்டை சுவர் மொட்டை தாத்தா இல்லாட்டியும் பரவாயில்ல கலைப்பணிக்கென எடுத்த போட்டோக்கள் இருப்பின் - அம்பாசமுத்திரம் லொக்கேஷன்ஸ் - காமிக்கவும் :)
வாங்க... வாங்க....தோள் சரியாயிடுச்சா??
//தங்கமணி என்ன காரணத்திற்காகவோ குழவிக் கல்லை மட்டும் எடுத்து பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கிறார்//
அதெல்லாம் பயப்பட வேண்டாமாம்... அவ்வளவு ஒண்ணும் வெயிட் இல்லையாம்... ஸ்ரீராம் தனியா சொன்னார் :)
ROTFL:)))))
//சந்திக்க நினைத்தவர்களையெல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது//
இந்த முறை அல்வா கொஞ்சம் பதமாக வந்திருக்கிறது போல :-).
ஹாய் டுபுக்கு,
ஹா ஹா...//கும்பகோணம் கும்பானி // இது கூட ரைமிங்கா இருக்கு. ஆக இங்க வந்துட்டு போயாச்சுனு சொல்லுறீங்க. சரி இப்போ கை எப்படி இருக்கு? உடம்பும் எப்படி இருக்கு?
சூப்பர் டுபுக்கு! இப்படி ஒரு டெல்லீஷியஸ் பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு! இந்தியா டிட்-பிட்ஸ் எல்லாம் ரொம்பவே ரசிச்சேன்! கலக்கிட்டீங்க!
உடம்பை கவனிச்சுக்குங்க தல..,
//சிங்கக்குட்டி said...
//சந்திக்க நினைத்தவர்களையெல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது//
இந்த முறை அல்வா கொஞ்சம் பதமாக வந்திருக்கிறது போல :-).
//
சிங்க குட்டி சொன்னது உண்மை எனில்.. ஏமாந்தவர்களில் ஒருத்தனாய்.. :((((
டேக் கேர்.
தோ.. பாருங்க!!!!
மனுஷன், தோள் வலி, ஈ மெயில் ஹேக், ஏமாந்த கதைன்னு சொல்லி பொலம்பிருக்காரு... முக்காவாசி பேரு சிரிச்சுட்டு போயிருக்காங்க......
உடம்பை பாத்துக்கோங்க, முக்கியமா குழவிக் கல்கிட்ட ஜாக்கிரதை.
//அறிவிலி said... தோ.. பாருங்க!!!!
மனுஷன், தோள் வலி, ஈ மெயில் ஹேக், ஏமாந்த கதைன்னு சொல்லி பொலம்பிருக்காரு... முக்காவாசி பேரு சிரிச்சுட்டு போயிருக்காங்க......//
அறிவிலி ஐயா.. எங்க வாத்யாருக்கு எப்பவுமே டமாஷ்தான்.. பொஞ்சாதிகிட்ட அடி வாங்கினத அவரும் இப்படி டமாசா சொல்வாரு நாங்களும் புரியாத மாரி சிரிச்சிட்டு போயிருவோம்..
அப்பால ஊருக்குப் போயிட்டு எழுத்தாளருங்க யாரையும் பாக்கமலே வந்துகீராரு இல்ல அதுக்குத்தான் இம்மாம் பெரிய பில்ட் அப்பு.. இப்போ பிரியுதா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அண்ணே... வந்திருக்கீங்களா..? சந்தோஷம்..! ஒரு நாள் போன் பண்ணுங்க.. சந்திக்கலாம்..! 9840998725
varaathavanga vanthirukeega, enna ivalavu thooram. thangamani romba smart. neenga romba koduthu vachirukeenga. Athaan vaddiyoda thirumba vaangikkunga. at least innoru blog post kadaikkum.
hahahaa...ROFL!!!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அண்ணே... வந்திருக்கீங்களா..? சந்தோஷம்..! ஒரு நாள் போன் பண்ணுங்க.. சந்திக்கலாம்..! 9840998725//
என்னது காந்தி செத்துட்டாரா?? என்னது இந்தியாவுக்கு சொதந்திரம் கெடச்சிடுச்சா??
உ.த அண்ணே.. ஏண்ணே இப்படி??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
nice
வந்துட்டுப் போயாச்சா. உங்க எழுத்தை மீண்டும் பார்த்ததில் மிகவும் சந்தோஷம் டுபுக்கு. அடிக்கடி எழுதவும் ,இல்லாவிட்டால் நகைச்சுவை எழுத்தே மறந்துவிடும்.:)
aiyo paavam - agala kaal vechu vizhundadukku, grinder damage kku nu seriousaa respond pannanumnu pathalum. sirippa adakka mudiyala .. seekirama kuzhavi ennachunu oru padhivu podhunga ... Paavai
போக்கிரி படத்துல விஜய் ஆடிட்டு இருக்கும்போது பிரபுதேவா திடீர்ன்னு வந்து கலக்குவாரே..!! அப்ப ஒரு பீலிங் வரும் பாருங்க..!! அது உங்க போஸ்ட்டரொம்பநாள் கழிச்சு பாத்தவுடன் வந்துச்சு தல..!! கலக்குங்க..!!!
//ஊரில் ஏகப்பட்ட மாற்றங்கள். சன் டீவியில் மிட் நைட் மசாலா போடுவதை நிப்பாட்டி விட்டார்கள்.
ஹாஹாஹா. :D
மிட் நைட் மசாலாவோட மாறுபட்ட வெர்ஷன் சின்ன, லோக்கல் சேனல்ஸ்ல அப்பப்போ வருதே. யாரும் சொல்லலையா? :)))
வந்தியா போனியா மாதிரி ஆய்டுச்சா இந்தியா வருகை.....
//"ஐ லவ் மை ஃவைப்" போன்ற அபத்த டெக்ஸ்ட் இன்னும் வந்துகொண்டிருக்கிறது.//
தங்கமணி குழவிக்கல்ல எடுத்து வைக்காம என்ன பண்ணுவாங்க...
// மெயில் ஹாக் செய்யப்பட்ட பிறகு தான் இந்தியாவில் சந்திக்க நினைத்தவர்க்ளின் போன் நம்பர்கள் ஈமெயிலில் இருப்பது நியாபகம் வந்து தொலைத்தது. ஆகையால் நான் ஆவலோடு சந்திக்க நினைத்தவர்களையெல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது// ஆமாம், அப்பிபிபிபிபிடியே மீட் பண்ணிட்டாலும்!!..:) நேர்ல பாக்கவந்த என்னாலையே 2 நிமிஷம் உங்க கூட பேச முடியலையே...:) ஆனா அழகா மெயில் ஹாக்!னு சமாளிக்கர்துதான் அம்பை ஸ்டைல்!..:)
@ பாஸ்டன் நாட்டாமை - என் மேல தான் உங்களுக்கு எவ்ளோ அன்பு நாட்டாமை!..:)
@ அபி நைனா - நமிதா எல்லாம் நம்ப அர்னால்டு பாடி தாங்காது சாமி!!!..:)
dear dubuks
happy to read after a long gap
pl take care of your health
and continue writing please
balu vellore
டுபுக்கு
மாடிப்படி தடுக்கி தோள் உடைந்து போச்சா!! சென்னை போகும்போது கிங் ஃபிஷர் ஏர் ஹோஸ்டஸிடம் நீங்க ஜொள்ளு விட்டதுல அப்ஸெட் ஆன தங்கமணி கொழவிக்கல்ல விட்டெறிஞ்சதுல தோள்பட்ட எகிறி போச்சுன்னுதானே அரசல் புரசலா பேசிக்கறாங்க!
சற்று முன் கிடைத்த தகவல்.
நீங்க வெறும் ஸைட் அடிச்சதோட நிருத்தியிருந்தா இவ்வளவு டேமேஜ் ஆயிருக்காதாம். இந்த தோள்பட்டதானே இடிச்சுதுன்னு குறி பார்த்து குழவிக்கல்லை வீசி சாதனை படைத்த தங்கமணியை இந்தியா ‘காமன்வெல்த் கேம்’ ற்க்கு அனுப்பியிருந்தா short put ல நமக்கு தங்கமெடல் கெடைக்க வாய்ப்பிருந்திருக்கும்னு ஊர்ல பேசிக்கிறாங்க. ‘தானைத்தலைவி தங்கமெடல் தங்கமணி’ன்னு நாங்களும் போஸ்டர் அடிச்சு கொண்டாடியிருப்போம்ல!
//தக்குடுபாண்டி said... நேர்ல பாக்கவந்த என்னாலையே 2 நிமிஷம் உங்க கூட பேச முடியலையே...:)
தக்குடு : கழகக் கண்மணி ஒருத்தரை மீட் பண்ணாத வாத்யாரை எதிர்த்து போராட்டம் அறிவிக்கலாமா??
@ பாஸ்டன் நாட்டாமை - என் மேல தான் உங்களுக்கு எவ்ளோ அன்பு நாட்டாமை!..:)
இருக்காதா கோந்தே.. எவ்ளோ சமத்துப் பையன் நீயி??
@ அபி நைனா - நமிதா எல்லாம் நம்ப அர்னால்டு பாடி தாங்காது சாமி!!!..:)
தக்குடு : பீடி மாதிரி இருக்குற ஒன்னோட பாடிய அபி நைனா பாத்ததில்லனு நெனைக்கிறேன்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//தோசைமாவெல்லாம் அரைக்கமுடியாது தூக்கி போடு என்று எவ்வளவோ சொல்லியும் தங்கமணி என்ன காரணத்திற்காகவோ குழவிக் கல்லை மட்டும் எடுத்து பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கிறார்.
ha..ha.... good.
துரும்பும் பல் குத்த உதவும்ன்னு எடுத்து வச்சிருப்பாங்கண்ணா.. இதுக்கெல்லாம் போய் பயப்படாதீங்க.
ungalukku oru pazhamozhi theriyadha....oru porulai 7 varusham vachiru edhavadhu use aagumnnu dhaan than thangamani vachirukkanga...enna usennradhu neenga nadandhukardha poruthu irukku.edhukkum kai jaaakradhaiya paathukonga...
nivi.
Ungaloda blog post Ranji madhiri...konjam naal aanalum, suvayum stylelum kurayave illa! And take care. Accidnets happen everywhere these days, including doctor's offices...
Welcome back...full formla vandhurukeenga pola irukke... ha ha ha... kulavu kalukku velai varaama poga vaalthukkal...ha ha ha
I just googled "tamil blogs" and came across yours. Started reading a week ago from ur oldest posts...still in 2005 posts...they hold so good even today...i have become ur fan in just 7 days. My husband doesnt read tamil so I read it out for him when we r back home after work...i was missing tamil soo much...ur blog makes me nostalgic! I hav never felt such an urge to read anything at work like I do now for ur blogs...
All the very best! Pls continue writing forever!!
நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆ இருக்கீங்க போட்டோ ல ... உங்க எழுத்து மாதிரியே!!
பி.கு: தங்கமணி- கோவிச்சுக்க வேணாம்.. உண்மையா தான் சொல்றேன் :)
dear dubuks
nanna mattindu achu pola irukku.
(mele ieukkara comment padiyungo)
balu vellore
சுரேஷ் - மிக்க நன்றி உங்க பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு :)
கந்தசாமி - அது தான் இன்னும் இம்சையா இருக்கு சார்.
மாலிக்யூலர் பயாலஜிஸ்ட் - பெயர் அம்சமா வைச்சிருக்கீங்க...பார்த்தாலே படிச்சவஙக மாதிரி இருகீங்கோ... குறும்படம் - கொஞ்ச கார்ப்பரேட் வீடியோஸ் மற்றும் ஒரு ஆல்பம் கமிட்மெண்ட் இருக்கு. அனேகமா முடியற தருவாயில இருக்கு. அதுக்கப்புறம் வேறெதுவும் கமிட் ஆகாம குறும் படம் பக்கம் தான் வரணும்ன்னு இருக்கேன்...பார்ப்போம்
அபி அப்பா - இல்லீங்கோவ்...யாருக்கும் கடிகார யோகம் இல்லை போல இருக்கு
ஸ்ரீராம் - அண்ணாத்தே வணக்கம்பா..நக்கல் நக்கல் நக்கல் இன்னும் அதே அன்போட ....குறும்படம் எடுக்கறேன் தல நீங்க சொல்லி எடுக்காமல... தக்குடு ஆள் கண்ணுலயே படாம நான் பிஸின்னு பீலா விட்டுக்கிட்டு திரியறான் :))
சித்ரா - மிக்க நன்றிங்கோவ்
அபி அப்பா - அப்போ நமீதா தக்குடுக்கு பொருந்த மாட்டார்ன்னு சொல்றீங்க அப்படி தானே?
முத்துலெட்சுமி - ஆமாங்க பாருங்க ஏனோ கடவுள் நல்லவங்கள இவ்வளவு சோதிக்கிறார்
நான் ஆதவன் - நீங்க வேற கால் போனா மட்டும் பரவாயில்லையா?,,நல்லாக் குடுக்கறாங்கப்பா ஐடியா :)))))
கார்க்கி - தேங்க்யூ மை லார்ட்
கானகம் - இந்த வேலைய நான் போன தரம் செஞ்சிட்டு பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமா
ஆயில்யன் - நீங்க தக்குடு பக்கம் போங்க...அங்க கல்லிடைன்னு போஸ்ட்ல போட்டிருக்கிறது எல்லாமே அம்பாசமுத்திரம் ஃபோட்டோ தான் :)))
மகேஷ் - தோள் பரவாயில்லி நன்றி. நம்ம பாஸ்டன் எது சொன்னாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் கேட்டுப்பேன் :))
வித்யா - மிக்க நன்றி :))
சிங்கக் குட்டி - யோவ்...கொளுத்திப் போட்டுட்டியேய்யா...நான் நிசமாவே நிறைய பேர சந்திக்க நிணைcசிருந்தேன் யா..
சுமதி - இப்ப்போ ரெண்டுமே பரவாயில்லைங்கோவ்
அனன்யா - மிக்க நன்றி ஹை மேடம்
பாலபாரதி - உடம்பு கிடக்கட்டும் ...என்ன தலை இப்படி சொல்லிட்டீங்க...நிஜமாவே உங்களையெல்லாம் பார்க்கனும்ன்னு ஆர்வமா இருந்தேன்...உங்களை எல்லாம் சந்திக்காததில் நஷ்டம் எனக்குத் தான். :((( உண்மையிலேயே தவியாய் தவிட்தேன். கடைசியில் மெட்ராசில் ரெண்டே நாள் தான் இருந்தேன். ஆனா அடுத்த தரம் இந்த தப்பு கண்டிப்பா நடக்காது மன்னித்துக் விடுங்கள்.
அறிவிலி - ஹீ ஹீ உங்க அன்ப்பு என்னை புல்லரிக்க வைக்குது. எங்கங்க இருந்தீங்க இம்புட்டு நாள்??
ஸ்ரீராம் - என்றும் அன்புடன் அண்ணாச்சி...சிங்கக்குட்டி கொளுத்திப் போட்டாச்சு நீங்க எண்ணெய்ய ஊத்துங்க...நடக்கட்டும் நடக்கட்டும்
உண்மைத்தமிழன் - அண்ணாச்சி..நீங்க வேற வந்துட்டு திரும்ப வந்தாச்சு...சோகக் கதைய கிளப்பாதீங்க
முனிம்மா - உங்க அன்பும் என்ன புல்லரிக்க வைக்குது...:))) ஒரு போஸ்ட்க்காக காலைக் கொடுத்தான் டுபுக்குன்னு சரித்திரம் என் பேர சொல்லட்டும்
குட்டிப்பையா - நன்றி ஹை :))
மோகந்தாஸ் - மிக்க நன்றி தல
வல்லியம்மா - மிக்க நன்றியம்மா. கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்சி செய்யறேன்
அனானி - பரவாயில்ல பச்சாதாபம் காட்டிட்டு சிரிக்கிறீங்க...சிரிச்சிக்கோங்க :))
சேலம் தேவா - அண்ணாச்சி உண்மையிலேயே உங்க கமெண்டு பார்த்து தான் எனக்கு அப்ப்டி ஒரு ஃபீலிங் ஆச்சு. மிக்க நன்றி உங்கள் ஊக்கமான கமெண்டுக்கு
கார்த்திக் - இல்லீங்கோவ்...யாருமே சொல்லலை...சே
பத்மநாபன் - யோவ் லவ் பண்றத பொண்டாட்டி கிட்ட சொல்லாம டெக்ஸ்ல சொல்றானேன்னு நான் எதார்த்தமா சொன்னேன்யா...நல்லாத் தான் கோர்த்து விடுறீங்க...யெப்பா
தக்குடு - பெரியவங்க வந்திருக்கீங்க...வாங்க வாங்க...எப்படி இருக்கீங்க :)))
பாலு - மிக்க நன்றி ஹை தல உங்க அன்புக்கும் பண்புக்கும்
டகிள் பாட்சா - அடுத்த எபிசோடுக்கு கரெக்ட்டா எடுத்துக் குடுங்க ஸ்டார்ட் மீசிக் ஹூம்ம்ம்ம் ஊரெல்லாம் எதிரியா இருக்காங்களே நமக்கு
குந்தவை - என்னது பல் குத்த கிரண்டர் கல்லா...சரிதான்...நான் பயப்படவே இல்லை....
நிவி - ஏழு வருஷமா சரி தான் எல்லாரும் ஒரு முடிவோடு தான் கமெண்ட் போட்டிருக்கீங்க
பொயட்ரீ - ஏங்க ஏங்க ஏங்க ...:)))))) உங்க அன்புக்கு மிக்க நன்றி
அப்பாவி தங்கமணி - நானும் அதே தான் எனக்கு வாழ்த்திக்கிறேன் :)))
ரம்யா- மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கும் சிரமம் பாராமல் மெயில் தட்டியதற்க்கும்..கடமைப்பட்டுள்ளேன். அந்த ஸ்மார்ட் கமெண்ட் சூப்பருங்க...உங்களுக்கு ஒரு ட்ரீட் தரலாம் இந்த கமெண்ட்டுக்காகவே
பாலு - எதுக்குங்க மாட்டிக்கனும். கலீலியோ உலகம் உருண்டைன்னு சொன்னதுக்கு பயப்பட்டாரா,....உண்மைய சொல்றாங்க...கேட்டுக்கறேன் :)))
எம்கேநாட்டி - மிக்க நன்றி ஹை
அடக் கடவுளே! எல்லாரும் கடிகார நேரப்படிதானே யோகம் பாப்பாங்க! கடிகாரம் கிடைக்கவே யோகம் வேணும்னா என்ன கொடுமை சரவணன்?
அப்புறம், குட்டைச் சுவத்துலே பொக்கைவாய் மொட்டைத் தாத்தா இல்லாட்டி என்ன? குட்டைப் பாவாடை போட்டு நெட்டைப் பாப்பாக்கள் வலம் வரும் அழகை படம் எடுத்திருப்பீங்களே! அதை போடவேண்டியதுதானே?
thaniya vizhundu vizhundu sirichukitrunda pakravanga enna pathi enna nenaipanga...hmmm. humorous post after a long time..ethai solla.. ethai vida...especially..kuttichuvar pokkai vai thatha.. kalaipadam.!!!!! u made my day.
மீள் வருகைக்கு நன்றிகள்.
உங்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதற்கு வருத்தங்கள்.
உங்களின் அடுத்த விடுமுறையில் சென்னை/ நெல்லை/அம்பையில் சந்திப்போம்..
express mall security joke is awesome.
looking forward your post on ENDHIRAN.
எக்ஸ்பிரஸ் அவென்யூ போனது இருக்கட்டும். அம்பா ஸ்கைமால் போனீங்களா
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10008063&format=html
when u get time please read thisstory- thi janakiraaman.
ahaa.. பாக்காம போயிட்டீங்களே..
கேபிள் சங்கர்
why? you didn't see the programme maarada(sorry)maana mayilada? nothing less than midnight masala
அனானி1 - //வாய் மொட்டைத் தாத்தா இல்லாட்டி என்ன? குட்டைப் பாவாடை போட்டு நெட்டைப் பாப்பாக்கள் வலம் வரும் அழகை படம் எடுத்திருப்பீங்களே! அதை போடவேண்டியதுதானே? // ஆஹா நீங்க அழகா பத்த வைக்கிறீங்க...நான் அப்பீட்டு :)))
அனானி2 - ஊக்கமூட்டும் பின்னூட்டம்....மிக்க நன்றிங்க உங்க பாராட்டுக்கு :)
ராம்ஜி - எனக்கும் உங்களை சந்திக்க முடியாததில் வருத்தங்கள். எனக்குத் தான் கூடுதல் நஷ்டம். இரண்டே நாட்கள் தான் சென்னையில் ( ப்ளானெல்லாம் சொதப்பல்)
தாறுமாறு - ஸ்கைமாலா....எதச் சொல்றீங்க...?? வண்டிமரிச்சான் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கே அதையா? நான் போனா அன்னிக்கு அங்க விடுமுறை என்று திரும்ப வந்துவிட்டே :(((
ராம்ஜி - வாவ் அருமையான நடை...மனதை அப்படியே கொள்ளை கொண்டு போனது. கோடி நன்றி உங்களுக்கு கதையை பகிர்ந்துகொண்டதற்க்கு..
கேபிள் - அண்ணாச்சி எனக்குத் தான் உங்களை விட வருத்தம். ரெண்டே நாள் தான் சென்னையிலிருந்தேன். உங்க நம்பர் என்கிட்ட தான் இருந்தது. ஆனா வந்து இறங்கினவுடனேயே டெல்லிக்கு லோக்கல் கனெக்க்ஷன் ப்ளைட் கேன்சலாகி கடைசி நிமிடம் வரை சுத்தி அடித்து விட்டார்கள் கிங்பிஷர். இதில் என்றைக்கு கிளபுகிறோம் என்று தெரியாமல் இங்கே லண்டனில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் பயங்கர டென்ஷன். டென்ஷனில் என்னுடைய ஒரு அக்கா விட்டிற்க்கு கூட கடைசி நாள் தான் போனேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்க. சொன்ன மாதிரி உங்களை சந்திக்காததில் எனக்குத் தான் நஷ்டமும் வருத்தமும். தயவு செய்து தப்பாக நினையாதீர்கள்.
அனானி - அந்த நிகழ்ச்சி சரியான போர்ங்க எனக்கு ஒரே ஒரு எபிசோட் பார்த்து இங்கே லண்டனில் வைத்து பார்த்து அலர்ஜி ஆகிவிட்டது.
அப்புறம் குழவிக்கல்லால் எதாவது உபயோகமாச்சா தங்கமணிக்கு...
Hi, I am following your posts for last one year... I like your way of presenting the things. And my request is, Please post atleast 2 posts a month.
I didn't follow your site for quite some time as I was disappointed looking for a new blog daily before that! As a number of your followers have mentioned, you should try to write more frequently - for our benefit!
/ அம்பாசமுத்திரத்தில் முக்கால்வாசி பேருக்கு அம்பானி ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. /
Now, Ambani wants to become A.Raja!
- R. Jagannathan
Post a Comment