சின்ன வயதில் அதிலும் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆரம்பித்த பிறகு கர்நாடக சங்கீத கச்சேரி என்றாலே கொஞ்சம் வயிற்றைக் கலக்கும். "டேய்...வாடா மிருதங்க வித்துவான்...இது என்ன ராகம் சொல்லு பார்ப்போம்..."ன்னு இழுத்துப் பிடித்து கேள்வி கேட்ப்பார்கள். மிருதங்க சிலபஸ்ல ராகம் கிடையாது தாளம் தான் என்று எவ்வளவு சொன்னாலும் விட மாட்டார்கள் கவுண்டமணி தவில்ல நலந்தானா வாசிக்க சொல்லுவது மாதிரி சில பெருசுகள் தொல்லை சொல்லி மாளாது. இந்த மாதிரி கச்சேரிகளில் நிறை குடங்கள் தளும்பவே தளும்பாது. சில அரைகுறைகள் பண்ணுகிற சேட்டை தான் தாங்காது.
சீனா தானா மாமா கொஞ்சம் சங்கீதத்தில் அரைகுறை தான். எல்லா ராகங்களும் தெரியாது என்றாலும் அவருக்கு சில ராகங்கள் தெரியும். அவருக்கு தெரிந்த ராகம் வந்து விட்டால் சித்தார்த் பாஸு மாதிரி க்விஸ் வைக்க ஆரம்பித்துவிடுவார். காபி ராகத்தை வைத்து உலவும் அரத ஜோக்குகளில் சேர்ப்பதற்காக எங்கள் வானரக் கூட்டத்திலும் ஒன்று உண்டு. ராதா கல்யாணத்தை முன்னிட்டு பஜனை மடத்தில் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். வந்திருப்போருக்கு காபி சப்ளை எடுபிடி பார்த்துக் கொண்டிருந்த சாது வானரத்திடம் அப்போது தான் வந்திருந்த சீனாதானா மாமா என்னடா போன பாட்டு என்ன காப்பியான்னு நக்கலாய் கேட்க மைக் சத்தத்தில் வானரம் சரியாய் காதில் வாங்கிக் கொள்ளாமல் "இல்லை மாமா டீ தான் இருக்கு...கன்னுக்குட்டி கணேசன் காப்பிப் பொடி வாங்கப் போய் இருக்கான்"ன்னு கர்ம சிரத்தையாய் பதில் சொல்ல சீனாதான மாமா அவனை மட்டும் ஏனோ அன்றிலிருந்து க்விஸ்லிருந்து ஒதுக்கி வைத்துவிட்டார்.
"டேய் நம்ம சீனாதானா மாமா தொல்லை தாங்க முடியலை...இதான் ஷண்முகப் ப்ரியா அதான் ஹரஹ்ரப் ப்ரியான்னு என்னம்மோ ராகதேவன் மாதிரி ஓவரா ப்லிம் காட்டறார். திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் அடக்கம் அமரருள் உய்க்கும்ன்னு எனக்கும் தான் மேலத்தெரு ப்ரியாவைத் தெரியும் அதுக்காக இவர்ட்ட போய் மேலத்தெரு ப்ரியாவைத் தெரியுமான்னு என்னிக்காவது கேட்டிருப்பேன்...?? .ஒரு நாள் இவருக்கு இருக்கு" கன்னுக்குட்டி கணேசனுக்கு சீனாதானா மாம பிஹேவியர் பிடிக்காமல் ரொம்ப நாள் கருவிக் கொண்டிருந்தான்.
அடுத்த தரம் சீனா தானா மாமா அவருடைய கட்டைத் தொண்டையில் பாடி இதென்ன ராகம்ன்னு கன்னுக்குட்டி கணேசனைக் கேட்க "இது ஒரு தலை ராகம்" மாமான்னு அவனும் சொல்ல "போடா தறுதலை ராகம்...சினிமாலயே நில்லுங்கோ இன்டர்வ்யூல கேட்பா போய் சொல்லுங்கோ உடனே மேனேஜர் உத்தியோகம் குடுப்பான்"ன்னு சீனாதானா மாமா டென்ஷனாகி அத்தோடு ராக க்விஸ் போட்டி எங்களுக்கு இனிதே நிறைவைந்தது,
நிற்க இந்த கச்சேரி கொசுவத்தி எதுக்கு சுத்தினேன் என்றால் ரொம்ப்பபபபபப நாட்களுக்குப் பிறகு இங்கே யூ.கேவில் மில்ட்டன் கீன்ஸ் த்வனி புண்யத்தில் ஒரு சங்கீதக் கச்சேரிக்கு போன வாரம் போய்வந்தேன். முதலில் டாக்டர் ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் மற்றும் சுதீந்திரா அவர்கள் கச்சேரியும், அடுத்து சஞ்சய் சுப்ரமண்யம், நெய்வேலி வெங்கடேஷ், மற்றும் வரதராஜன் அவரகளின் கச்சேரியும் நடந்தேறியது. மிகக் குறைந்த டிக்கெட் விலையில் த்வனி சுமார் மூன்றரை மணி நேர கச்சேரியை அருமையாய் பேக்கேஜ் செய்து நடத்திக் காட்டினார்கள்.
சங்கீதக் கச்சேரிக்குப் போவதற்கு என்று சில ஜபர்தர்ஸுகள் இருக்கின்றன. அங்கங்கே 'ச்....ச்'ன்னு உச்சுக் கொட்டி முன் வரிசையில் நாலு பேருக்கு கேட்கும் படியாக அங்கங்கே சபாஷ் பலே போடத் தெரிந்திருக்கவேண்டும். (நம்ம்) தொடையைத் தட்டி விரல் விட்டு எண்ணி என்னம்மோ பாடுபவர்க்கு தாளம் சொல்லிக் குடுக்கிற மாதிரி தாளம் போடத்தெரிய வேண்டும். இந்தப் பக்கம் உள்ளவரிடம் "ஆமா இந்தப் பாட்டு என்ன ராகம் தொண்டையில நிக்கிறது பேரு நியாபகம் வரமாட்டேங்கிறது"ன்னு நைசாக நூல் விட்டு தெரிந்து கொண்டு அந்தப் பக்கம் உள்ளவரிடம் "என்னமா இழையறது இந்தோளம்"ன்னு சங்கீத பூஷணமாக தெரிந்திருக்க வேண்டும்.
இத்தனை 'வேண்டும்'களுக்கு மத்தியில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டே தான் போனேன். போன இடத்தில் கேமிராவை ஆன் பண்ணி ஆப் செய்கிற வேலையை நைஸாக எடுத்துக் கொண்டு முதல் வரிசையிலேயே உட்கார்ந்துவிட்டேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ராஜா (அந்தப்பக்கத்லிருந்து கேட்டு) ராகங்கள் சொல்லி அசத்திக் கொண்டிருந்தார். நடுவில் இது அந்த ராகம் தானேன்னு ஏதோ ராகத்தை டவுட் வேற கேட்டார். நானும் "ரீ மா...செ...ன்"ன்னு மனதிற்குள் பாடுவது மாதிரி பாவ்லா காட்டி ஆமா அத மாதிரி தான் இருக்குன்னு சொல்லி சமாளித்தேன். அடுத்த பாட்டிற்கு திரும்பவும் ராகத்தில் டவுட் கேட்க "உளுந்த வடை,தோசை கொண்டு வந்திருக்கான் ...சாம்பார் வந்த மாதிரி வசனை தெரியலையேன்னு..." நம்ம ஞானத்தை மூக்காலயே காட்ட அப்புறம் அவருக்கு டவுட்டே வரலையே.
ஜோக்ஸ் அபார்ட்ன்னு துரை மாதிரி சொல்லிட்டு விஷயத்திற்கு வருகிறேன். ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் வயலினில் புகுந்து விளையாடினார். சுதீந்திரா மிருதங்கம் இதமாய் இருக்க இன்னும் கொஞ்சம் வாசிக்க மாட்டாரா என்று இருக்கும் போது கச்சேரி முடிந்துவிட்டது. அதற்கு அப்புறம் நடந்த சஞ்சை சுப்ரமண்யம் கச்சேரியும் மிக அருமை. மனிதர் அன்யாசமாய் அசராமல் இதமாய் பாடுகிறார். த்வனி, நேயர் விருப்பம் மற்றும் கேள்விகளுக்கு தனியாய் ஒரு விண்ணப்ப படிவத்தை டிக்கெட்டோடு குடுத்திருந்தார்கள். அதில் "ஆல் தோட்ட பூபதி" எழுதிக் கேட்டால் ஆளை வைத்து அடித்து விரட்டிவிடுவார்கள் என்பதால் மெனக்கடவில்லை. ஆனால் எனக்கு சஞ்சயிடம் பிடித்ததே அவர் கேள்விகளுக்கு விடையளித்த பாங்கு. மிக இயல்பாய் நகைச்சுவை கலந்து எந்த தலைக்கணமும் இல்லாமல் என்னை மாதிரி பாமரனுக்கும் புரியும் வண்ணம் பதிலளித்தார்.
மொத்தத்தில் ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல கச்சேரி போய் வந்த அனுபவ்ம் கிடைத்தது. "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போயிருக்கார்"ன்னு வீட்டிலிருந்து வழியணுப்பி வைத்த தங்கமணி திரும்பி வந்தவுடன் நான் பயந்துகொண்டிருந்த "ஆமா என்னென்ன பாட்டு பாடினார்" கேள்வியைக் கரெக்ட்டாய் கேட்டு விட்டார்.
நானும் நாயகன் கமல் மாதிரி உணர்ச்சி பொங்க பல ரியாக்க்ஷன் குடுத்து விட்டு உச்சி மண்டையில் கையால் வகிடெடுத்து தெரியலையேம்மான்னு சொல்லிவிட்டு "ஆனா உளுந்தவடையில மிளகு போட மறந்துட்டான்"ன்னு க்ரெக்ட்டாய் ரிப்போர்ட் குடுத்துவிட்டேன். யாருகிட்ட நம்மகிட்டயேவா..
Monday, April 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
59 comments:
வாழ்க்கைல மொதல் தடவையா மொதல் கமெண்ட் போடற வாய்ப்பை மிஸ் பண்ண கூடாது...சோ first கமெண்ட் அப்புறம் படிக்கிறேன்
//இவர்ட்ட போய் மேலத்தெரு ப்ரியாவைத் தெரியுமான்னு என்னிக்காவது கேட்டிருப்பேன்...??//
கேட்டு பாத்திருந்தா தெரியும் சங்கதி (நான் பாட்டுல வர்ற சங்கதிய சொல்லல)
//உள்ளவரிடம் "ஆமா இந்தப் பாட்டு என்ன ராகம் தொண்டையில நிக்கிறது பேரு நியாபகம் வரமாட்டேங்கிறது"ன்னு நைசாக நூல் விட்டு தெரிந்து கொண்டு அந்தப் பக்கம் உள்ளவரிடம் "என்னமா இழையறது இந்தோளம்"ன்னு சங்கீத பூஷணமாக தெரிந்திருக்க வேண்டும்//
ஆஹா... இந்த விசயம் புரியாம நான் என்னமோ நமக்கு ஒண்ணும் தெரியலயேன்னு ரெம்ப பீல் பண்ணி இருக்கேனே
// "ரீ மா...செ...ன்"ன்னு மனதிற்குள் பாடுவது மாதிரி பாவ்லா காட்டி//
அடப்பாவமே....
//மொத்தத்தில் ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல கச்சேரி போய் வந்த அனுபவ்ம் கிடைத்தது//
இதை படிச்ச எங்களுக்கும் ஒரு இல்ல இல்ல பல கொசுவத்தி நினைவுகள் கிடைத்தது (ரெண்டு போஸ்ட் தேறும்)
ஜோக்ஸ் அபார்ட்.... (டுபுக்கு பிரதர் மாதிரி).... நல்ல பதிவு.... பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி
// "ரீ மா...செ...ன்"ன்னு மனதிற்குள் பாடுவது மாதிரி பாவ்லா காட்டி//
அடப்பாவமே....
//மொத்தத்தில் ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல கச்சேரி போய் வந்த அனுபவ்ம் கிடைத்தது//
இதை படிச்ச எங்களுக்கும் ஒரு இல்ல இல்ல பல கொசுவத்தி நினைவுகள் கிடைத்தது (ரெண்டு போஸ்ட் தேறும்)
ஜோக்ஸ் அபார்ட்.... (டுபுக்கு பிரதர் மாதிரி).... நல்ல பதிவு.... பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி
silver!
பதிவு நல்லா இருக்கு, ஆனா எனக்கு என்னவோ டுபுக்கு டச் குறைஞ்சாப்புல இருக்கு. (என் எதிர்ப்பார்ப்பு ஓவாரகிடுச்சா இல்ல நீங்க ரொம்ப களைப்பாயிட்டீங்களா.. தெரியல.)
/நைசாக நூல் விட்டு தெரிந்து கொண்டு அந்தப் பக்கம் உள்ளவரிடம் /
ஆஹா.. என்னமா இழையறது காமெடி :)
பெஞ்ச் மேல நின்னுகிட்டே ஆஜர். அடிக்கிற ஒவ்வொரு கும்மிக்கும் கணக்குப் போட்டு காசு குடுக்கணும்னா, நான் அடுத்த அம்பது வருஷம் சம்பாதிக்கறதையும் இப்பவே எழுதிக் கொடுக்கணும், அதனால மீ த ஸ்டில் ஸ்டாண்டிங் ஆன் த பெஞ்ச். பெரிய மனசு பண்ணி எறக்கி விட்டா இந்த இடுகையிலும் கும்மி அடிக்கிறேன்.
கேடி, நீங்களும் இன்னும் பெஞ்ச் மேலதானே? அதனாலதான் காமடி சரியா புரியல, ஃபைன் கட்டிட்டு இல்லன்னா என்ன மாதிரி பொது மன்னிப்பு கேட்டுட்டு கீழ எறங்கி வந்து படிங்க, புரியும். ஒரு வேளை ”சார் போஸ்ட்” டயலாக் ப்ராக்டீஸ் பண்ணும் போது படிச்சீங்களா???
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...
டிஸ்கி: போன இடுகையில அநன்யாவையும் அப்பாவியையும் நல்லவங்களா காட்டி கழகத்தில குழப்பத்தை உண்டாக்க நெனச்சதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கழக கொ ப ச தக்குடு எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும் (தலைவர் தனியா தத்தளிக்கிறார்)
கலக்கல் பதிவு வழக்கம் போல.
அப்படியே அம்பை, சென்னையில் நடந்த கச்சேரி அனுபவங்களையும் எழுதுங்களேன்.
செம சிரிப்பு; டிபிகல் டுபுக்கு ஸ்டைல்.. ரசித்த/ சிரித்த சில இடங்கள் இதோ..
//இதென்ன ராகம்ன்னு கன்னுக்குட்டி கணேசனைக் கேட்க "இது ஒரு தலை ராகம்" மாமான்னு..//
//இன்டர்வ்யூல கேட்பா போய் சொல்லுங்கோ உடனே மேனேஜர் உத்தியோகம் குடுப்பான்//
//உளுந்தவடையில மிளகு போட மறந்துட்டான்"ன்னு க்ரெக்ட்டாய் ரிப்போர்ட் குடுத்துவிட்டேன். யாருகிட்ட நம்மகிட்டயேவா//
குருவே... சரணம்!!! ஆஹா ஆஹா... என்னமா காமெடி களை கட்டி இருக்கு! ஜோர்! ரீ...மா... செ...ன்.. சூப்பர் போங்க குரு! சாம்பார் இன்னும் வந்தமாதிரி தெரியலைன்னு நீங்க சொன்ன விதம் இருக்கே.. ஆஹா.. அல்ட்டிமேட். எல்லாத்தையும் ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.
ஸ்ரீராமண்ணா, கீழே இறங்குங்கோ.. நீங்களா ஏன் இப்படி எல்லாம் சின்னப்பதாஸ் மாதிரி பனிஷ்மெண்டு குடுத்துக்கறேள்? :P
பொற்ஸ்,
கண்ணைத்திறந்து படிச்சாத்தான் ஜோக்கு தெரியும். :P
//உச்சி மண்டையில் கையால் வகிடெடுத்து தெரியலையேம்மான்னு சொல்லிவிட்டு //
தலைவர் மார்லன் பிராண்டோ மாதிரி ஆக்ட் கொடுத்தா நக்கலா பண்றீங்க..:P
நல்ல பதிவு ரங்கா..ரீமா சென் matter-um super..
ரைட்டு, எல்லாரும் நன்னா எஞ்ஜாய் பண்ணா சரி. :) கண்ணை திறந்து கூட ஒரு தடவை படிச்சு பாத்தேன் அநன்யா, ஹிஹி ஃப்ரீயா விடு ஃப்ரீயா விடு.
நாட்டாமையே ஆன் தி பென்ச்சா! அப்போ நானெல்லாம் காலத்துக்கும் பென்ச் தான். (பென்ச்ல நின்னாலும் நிப்போமே தவிர, கும்மியை நிறுத்த மாட்டோம் என தாழ்மையுடன் சொல்லிக் கொ'ல்'கிறோம்.) க்ளாஸ் முடிஞ்சு டுபுக்கு சார் வெளிய போனப்புறம் வர்றேன். நன்றி வணக்கம்.
டுபுக்கு பிரதர் பிரதர், ப்ளீஸ் ப்ளீஸ் ஸ்ரீராம் நாட்டாமை மட்டும் பெஞ்சு மேலேயே இருக்கட்டும், கருணை காட்டாதீங்க (போஸ்ட் போட்டு 48 மணி நேரம் ஆகியும் கமெண்ட் போடாமா போன எதுவும் சொல்லுவோம் இன்னும் சொல்லுவோம்....)
@ நாட்டாமை - பொது மன்னிப்பு கேட்டாலும் "மன்னிப்பாயா" பாட்டை நூறு வாட்டி எழுதினாலும்..... ஹா ஹா ஹா..... no way Mr . நாட்டாமை
@ நாட்டாமை - //டிஸ்கி: போன இடுகையில அநன்யாவையும் அப்பாவியையும் நல்லவங்களா காட்டி கழகத்தில குழப்பத்தை உண்டாக்க நெனச்சதை வன்மையாகக் கண்டிக்கிறோம்//
நல்லவங்கள நல்லவங்களா தான் சார் காட்ட முடியும், நல்லவங்கள நல்லவங்களா காட்டாம போனா நல்லவங்க நாலு பேரு நல்லவங்களா இந்த ஊருல இருந்கறது நல்லது இல்லைன்னு ஆய்டாதா?
அனன்யா நான் சொன்னது சரியா (ஆஹா...சூப்பர் rhyming இல்ல)
நாட்டாம, நீங்க நாலும் தெரிஞ்ச நல்லவரு ஏன் இந்த தக்குடு கூட சேந்துண்டு இப்படி ஆய்டேள் (இதுல கொ ப ச பதவி வேறயா?)
@ நாட்டமை - // கழக கொ ப ச தக்குடு எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும் (தலைவர் தனியா தத்தளிக்கிறார்)
தக்குடு வெரி பிஸி இன் "பொழுது போகாம திரட்டுப்பால் கிண்டுவோர் சங்கம்" Annual General Meeting
நாட்டாமை, நீங்க உங்க கொ ப ச வ நம்பினா கஷ்டம் தான். நீங்க தத்தளிக்கறது Massachusetts Area Lake லயா? விவரம் சொன்னா தங்கமணிகள் சங்கம் சாப்பா ஆள் அனுப்பரோம்
@ பொற்கொடி - (பென்ச்ல நின்னாலும் நிப்போமே தவிர, கும்மியை நிறுத்த மாட்டோம் என தாழ்மையுடன் சொல்லிக் கொ'ல்'கிறோம்.)
கொடி, சற்று முன் கிடைத்த தகவல். டுபுக்கு மாஸ்டர் நம்மளை எல்லாம் அவரோட ப்ளாக்ல (Blog) இருந்து பிளாக் (Block ) பண்ண போறாராம்....
உயர் திருவாளர் டுபுக்கு அவர்களே, உங்க கையை கொடுங்க காலா பாவிச்சிண்டு கொஞ்சம் வாரி விடறேன் !!!!!. உங்களோட ( மிருதங்கம் ) டச் நிறைய இருக்கு.
நானும் வெகு நாட்களாக கச்சேரி போய் கொண்டிருக்கிறேன் / போவேன் .... ஆனால் இந்த ராகம் மட்டும் பிடி படவே படாது ..தாளமும் கொஞ்சம் இந்த பக்கம் /அந்த பக்கம் ஆகும் ..அதனால் என்ன, எனக்கு கச்சேரியை ரசிக்க முடியும்.
இப்போ தான் இங்க ( துபாய்ல) அபிஷேக் ரகுராமின் அருமையான கச்சேரி நடந்தது ...
டுபுக்கு
சரக்கு தீர்ந்து போச்சா! வர வர ஒரே ஒளறலால்ல இருக்கு. அரச்ச மாவையே இன்னும் எத்தனை நாள்! ஹூம்...
dear dubuks
andha ulundu vadayil milagu samacharamdhan supero
super.(naan konjam saappaattu raamanaakkum)
v.gangadar kalchattiyil vaththal kuzhambu vaipathu patri hinduvil ezhudinathai padithapodu
kidaitha adhe santhosham ippodhu kidaithathu.
enna irundalum vadai allava?
balasubramanyan vellore
//தக்குடு எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும் // வந்தேன்! வந்தேன்!
//தலைவர் தனியா தத்தளிக்கிறார்//நாட்டாமை,நான் இங்க இருக்கும் போது உங்களை யாரும் கலாய்க்க முடியாது...:)
நாட்டாமை உங்களுக்கு பதிலா நான் பெஞ்சுல நின்னுக்கறேன், நீங்க போய் கும்மி அடிச்சுட்டு வாங்கோ, அப்பரம் நான் இறங்கி வரேன், இப்படியே நாம முறை வெச்சு ஒரு team effortoda செயல்படுவோம். நடுல நம்ப கேடியும் வந்தாச்சுன்னா நம்ப பலம் ஜாஸ்தியா ஆயிடும்.
// நீங்க தத்தளிக்கறது Massachusetts Area Lake லயா? விவரம் சொன்னா தங்கமணிகள் சங்கம் சாப்பா ஆள் அனுப்பரோம்// எதுக்கு நன்னா உள்ள அழுத்தர்துக்கா அடப்பாவி அக்கா??
நடந்த கச்சேரியை பத்தி ப்ளாக்ல எழுதினா வரக்கூடிய கச்சேரிக்கு ஓசி டிக்கெட் தரேன்!னு சொல்லியிருக்காளா?? டுபுக்கு அண்ணாச்சி!...:)
jokes apart, பதிவு நன்னா இருந்தது...:)
வாங்க கொ.ப.ச...
இந்த அப்பாவி கழகத்துக்கு எதிரான வேலையில ஈடுபடறாங்க.. அவங்களை நல்லவங்கன்னு டுபுக்கார் சொன்ன நயவஞ்கச் சொல்லை உண்மைன்னு நம்பி கழகத்தின் கட்டுப்பாட்டை குலைக்க நினைக்கும் செயலுக்கு துணை போறாங்க..(இருங்கப்பா சோடா குடிச்சிக்கறேன்)
பொதுக்குழுவைக் கூட்டி இருக்குற 5 உறுப்பினர்களையாவது காப்பாதிக்கணும் (நீங்க, கேடி, அப்பாவி, அநன்யா மற்றும் நல்லவனான நான்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@ தக்குடு - //இப்படியே நாம முறை வெச்சு ஒரு team effortoda செயல்படுவோம்//
உங்க ஊர்ல தண்ணி பஞ்சம் ஜாஸ்தின்னு நெனைக்கிறேன்.... பைப்புல குடம் வெக்கற ரேஞ்சுலையே பேசறீங்களே பிரதர்....
//எதுக்கு நன்னா உள்ள அழுத்தர்துக்கா அடப்பாவி அக்கா??//
நாட்டாமை நல்லா கேட்டுகோங்க... உங்க கொ ப ச வ எனக்கு தோணாத ஐடியா எல்லாம் குடுக்கறாரு (Mr . தக்குடு - ஒரு விசியம் தெரியுமா, கொலை செய்பவர்கள் மட்டுமல்ல கொலை செய்ய தூண்டுபவர்களுக்கு தான் தண்டனை அதிகம்... அதுவும் நீங்க இருக்கற ஊர்ல கேக்கவே வேணாம்)
//@ ஸ்ரீராம் - இந்த அப்பாவி கழகத்துக்கு எதிரான வேலையில ஈடுபடறாங்க//
அடபாவிங்களா... பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம்னாப்ல பேசறது எல்லாம் நீங்க... வம்புன்னா நானா.... இதை கேக்க யாருமே இல்லையா... அனன்யா....யாயாயாயா....... பொற்கொடி....கொடி....கொடி
//நல்லவங்கள நல்லவங்களா தான் சார் காட்ட முடியும், நல்லவங்கள நல்லவங்களா காட்டாம போனா நல்லவங்க நாலு பேரு நல்லவங்களா இந்த ஊருல இருந்கறது நல்லது இல்லைன்னு ஆய்டாதா?//
அப்பாவித்தங்கமணி,
கலக்கிட்டீங்க. ஓமக்குச்சியின் வழுக்கை மண்டையின் சைடுல இருக்குமே அந்த பிஞ்சு போன பிரஸ்ஸை நல்லா பிய்ச்சுப்பாரே குடும்பம் ஒரு கதம்பம் படத்துல விசுவின் பைத்தியம் வைத்தியம் ஜோக் முடிஞ்சு , சேம் ப்ளட்! முடியல ஆத்தா!
//பொதுக்குழுவைக் கூட்டி இருக்குற 5 உறுப்பினர்களையாவது காப்பாதிக்கணும் (நீங்க, கேடி, அப்பாவி, அநன்யா மற்றும் நல்லவனான நான்)// ஸ்ரீராமண்ணா நான் டுபுக்கு ரசிகர் மன்றம் தான் வெச்சு நடத்திண்டு இருக்கேன் இங்கே.
நல்லவனான நான் = அருஞ்சொற்பொருள் கூறுக. யாரந்த ஆள்?
அன்பான வாக்காள பெருமக்களே! நான் ஒண்ணு சொல்றேன், கருத்து கந்தசாமி, நாட்டாமை நாச்சிமுத்துன்னு பட்டம் குடுக்காம, கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.. நம்ம கும்மி அடிக்கறது எல்லாம் எனக்கு குஷி தான் (டுபுக்குக்கு குஷி இல்ல, அதை பத்தி நமக்கு என்ன கவலை..), ஆனா கும்மியை பதிவு போட்டு 4-5 நாளைக்கு அப்புறம் இஷ்டார்ட் பண்ணலாமே? ரெகுலரா படிக்கறவங்க எல்லாம் பதிவு பத்தி கமெண்டு போட்டு, டுபுக்கு சாரும் சேர்லயே குறட்டை விட ஆரம்பிச்சதும் நம்ம சேட்டையை துவங்கினா நல்லாருக்காது?
எதுக்கு சொல்றேன்னா, இது ஒரு வளரும்(!) எழுத்தாளர் இயக்குனர் காமெடியனின் ப்லாக்.. நாம போடற கும்மில முக்கியமானவங்க பயந்து போய்(!!) கமெண்டு போடமலே போயிடலாம், இல்ல போட்டும் நம்ம கும்மிக்கு நடுவுல காணாம போயிடலாம். அடப்பாவிங்களா வந்த விருந்தாளியை துரத்தி விட்டுட்டீங்களேன்னு டுபுக்கு சார் நம்ம கழகத்தை பாத்து பல்லு மேல நாக்க போட்டு பேசிடக்கூடாது.
@ Porkodi -
அந்த கோணத்துல யோசிக்க தோணல. Thanks for pointing it out பொற்கொடி. (ஒகே...கும்மி re-directed to அப்பாவி தங்கமணி blog ....... நாட்டாம, தக்குடு, அனன்யா, பொற்கொடி சீக்கரம் வந்து சேருங்க... கும்மி அடிக்கறதுக்கு தோதா ஒரு மசாலா படம் ரிலீஸ் பண்ணி இருக்கேன்... ஒரே கண்டிஷன்... கல்லு / முட்டை / தக்காளி எல்லாம் வீட்டுலையே வெச்சுட்டு வரணும்.... attendance will be taken, students must come to say present, no proxies allowed.... see you there.... bye for now....ஸ்டார்ட் தி மீசிக்....)
@தக்குடு
நானும் நானும் உங்க டீம்ல சேந்துகறேன்
nice
Are you related to Saavi (Washingtonil Thirumanam) or P.G.Woodhouse by any chance? I am NOT kidding!!! Humour drips from your words!! Anayaasamana style. Thanks for writing!
//அடப்பாவிங்களா வந்த விருந்தாளியை துரத்தி விட்டுட்டீங்களேன்னு டுபுக்கு சார் நம்ம கழகத்தை பாத்து பல்லு மேல நாக்க போட்டு பேசிடக்கூடாது.
// ஏற்கனவே ஒரு தடவை வாங்கிகட்டின்ட அனுபவஸ்தி சொல்லும் போது நாம கேட்டுதான் ஆகனும், நாட்டாமையும் பாவம் எத்தனை பஞ்சாயத்துதான் பண்ணுவார்??....:)
You never disappoint me! ROFL. :D :D
கமெண்ட்ஸ்ல நடக்கற கச்சேரி.. ஆவ்வ்
ச்சே!.....இதைப் படிக்க சுப்புடு இல்லாமப் போய்ட்டாரே!...வழக்கமான கலக்கல்!.......
நல்லா சொன்னிங்க கேடி. இல்லனா இன்னொரு idea. comment form, kummi form nu rendu option vaikkanum. Comment form la as usual "LOL, ROFL, Super, Chance illa" இப்படி சாஸ்திரத்துக்கு நாலு வார்த்தை எழுதிட்டு பாக்கிய கும்மி form la வச்சிக்கலாம். யாருக்கும் எந்த ஒரு disturbance இருக்காது.
இப்படிக்கு
Dubukku உ.பி.ச.சங்கம்
தலை(வலி)வி
மதுரம்
(நான் மட்டும் சும்மாவா? புது சங்கம் start pannitom la!)
Jokes apart, regarding the post, it reminded me of the days my mother and I would go to Ayodhya Mandapam for free kacheris during Rama Navami. We used to compete with each other to find the ragam first. Miss those days very much. Even now finding the ragam in cinema songs is my favorite past time. Konja naal paithiyam maadhiri, I used to keep a dairy and write the ragam for each cinema song I hear. Ippa konjam thelinjutten.
Dear Dubukku
Nice post. Norwichla yedhuvum varadhannu irrukku.
Ungalai madhirithan nannum sangeetham kathukkarennu thirunelveli sangeetha sabhavukku nalu varusham amma thunaiyudan nadanthathundu.
Konjam pattum vandhadhu.Anal yindru varai ragam kandupidipathalaam mudiyathakalai.
Yipozhuthelaam yendravathu vayaith thirandal yenadharumai aathukkararum (avarhal yellam iyer pasanga yendralum aapricakvil valardhadhal tamizh padikkavaradhu yendru sollik kolbavar. Pinnalil coimbatoreil yirundhavar than. Yirundhallum tamizh konjam thadumatramae.)yen thamizhai dumil seyum kuzhandhaihalum vayai thirakka viduvadhilai.
Thanjai Medical college il paddikum podhu(nan M.B,B.S angae than padithaen) hostel corridoril ambika varuval pinnae pattu varum munnae pondra natkal ninaivai ungal padhivu yerpaduthiyadhu.
Niraiya sujatha navalhalai padithu adahi parimara mudiyamal yirukkum yindha natkalil vungal tamizh padhivu arudhal tharuhiradhu.
Norwich vandhal kannidapaha ahathirkku varavum
Nandri
Ambika
Your writing is very comical.
Vadai comment to wife was super!
கச்சேரி நன்றாக நகைச்சுவை களை கட்டியிருந்தது ... அதிலும் ''கன்னுக்குட்டி கணேசன்'' பேர் படிச்சுடனே சிரிப்பு குபுக்க் னு வந்தது..
கும்மிய தாண்டறது பெரும்பாடா இருக்குது ... அந்த அளவுக்கு நகைச்சுவை போட்டு தாக்கரிங்க ... சக மக்களை கண்ட்ரோல் பண்ண முடியாது ..இதுவும் நல்லாத்தான் இருக்கு....உங்கள் நடு வகிடு நாயகன் கமல் நடிப்பாக்கம் சூப்பரு .... சினிமாவிலும் கெளப்ப அட்வான்சு வாழ்த்துக்கள் ...
அருமை... அருமை.... என்னமா ரிபோர்ட் குடுக்கறீங்க !!!! வடைல மிளகு போடல... குடைல கம்பி இல்லன்னு.... உங்க அளவு ஞானம் எனக்கு எப்ப வந்து... நான் எப்ப ஒரு மாபெரும் கீபோர்ட் கலைஞன் ஆகி.... ஹ்ம்ம்ம்ம்...
//ஒரு வேளை ”சார் போஸ்ட்” டயலாக் ப்ராக்டீஸ் பண்ணும் போது படிச்சீங்களா???//
@பாஸ்டன் ஸ்ரீராம் & கேடி : "சார் போஸ்ட்" மனப்பாடம் பண்ணி டயத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம். அதுக்கெல்லாம் என்னை மாதிரி பிறவி நடிகன் தேவை. சமத்தா போ "வானம் பொழிகிறது..... " நன்னா மனப்பாடம் பண்ணி ஒப்பியுங்கோ பாக்கலாம்.
ஹி...ஹி.... நம்ம கச்சேரி.... http://thuklak.blogspot.com/2008/10/blog-post_25.html
pors,
I putting only two comments yaa...
I am the running the rasigar manram in abudhabiyaa.. so exempted yaa.. saari yaa... ok appavi thangs, meet you there yaa..
see yaa.. taataa yaa..
Dubukku,
As usual good post with great timing comedies. Keep it up.
- SP
எல்லா..போஸ்ட்டயும்..படிச்சாச்சு....
(உங்க..பாணில..சொன்னா)..கை..நம..நமன்னு..அரிக்குது...ம்..சீக்கரம்...அடுத்த..போஸ்ட்ட...போடுங்க..அண்ணாச்சி...
Haha ..:D Some of the tit bits, I enjoyed much
"கவுண்டமணி தவில்ல நலந்தானா வாசிக்க சொல்லுவது மாதிரி சில பெருசுகள் தொல்லை சொல்லி மாளாது. இந்த மாதிரி கச்சேரிகளில் நிறை குடங்கள் தளும்பவே தளும்பாது. சில அரைகுறைகள் பண்ணுகிற சேட்டை தான் தாங்காது."
"சங்கீதக் கச்சேரிக்குப் போவதற்கு என்று சில ஜபர்தர்ஸுகள் இருக்கின்றன. அங்கங்கே 'ச்....ச்'ன்னு உச்சுக் கொட்டி முன் வரிசையில் நாலு பேருக்கு கேட்கும் படியாக அங்கங்கே சபாஷ் பலே போடத் தெரிந்திருக்கவேண்டும். (நம்ம்) தொடையைத் தட்டி விரல் விட்டு எண்ணி என்னம்மோ பாடுபவர்க்கு தாளம் சொல்லிக் குடுக்கிற மாதிரி தாளம் போடத்தெரிய வேண்டும். இந்தப் பக்கம் உள்ளவரிடம் "ஆமா இந்தப் பாட்டு என்ன ராகம் தொண்டையில நிக்கிறது பேரு நியாபகம் வரமாட்டேங்கிறது"ன்னு நைசாக நூல் விட்டு தெரிந்து கொண்டு அந்தப் பக்கம் உள்ளவரிடம் "என்னமா இழையறது இந்தோளம்"ன்னு சங்கீத பூஷணமாக தெரிந்திருக்க வேண்டும்."
"எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போயிருக்கார்"ன்னு "
"உச்சி மண்டையில் கையால் வகிடெடுத்து தெரியலையேம்மான்னு சொல்லிவிட்டு "ஆனா உளுந்தவடையில மிளகு போட மறந்துட்டான்"ன்னு க்ரெக்ட்டாய் ரிப்போர்ட் குடுத்துவிட்டேன். யாருகிட்ட நம்மகிட்டயேவா.. "
Athanee..thamira baraniya thanniyaa kokkaa..:D
may 17th aahiduthu, innum adutha post kaanaliyae?!!
Ranga,
Ultimate....chey... Only you can write like this so humorously even about a classical music concert.... I need to read this to my family tomorrow.....
டுபுக்கு சார்
தமன்னாவிற்கு கோவில் கட்டும் முயற்சியில் இந்த தமன்னா தாசன் இறங்கியுள்ளேன். என்னுடன் இணைந்து இத்திருப்பணியில் இணைத்துக் கொள்ள அழைக்கிறேன்.
விபரங்களுக்கு
http://soopersubbu.blogspot.com - ற்கு
வருகை புரியுங்கள்.
நன்றி
சூப்பர் சுப்பு
dear dubuks
oru maasam aache sir
konjam dhayavu pannungo sir
balasubramanioan vellore
சங்கீதக் கச்சேரிக்குப் போவதற்கு ஜபர்தர்ஸுகள் - எல்லாம் பிரமாதம்! பின்னி பெடலெடுத்துட்டேள்
போங்கோ!
-குவைத் ஸ்ரீராம்
Dubuku... wer is the new post?!! u r so mean :(
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Hi Dubukku,
Everyday I am checking your website and waiting for ur newer posts. Why this much delay? No reasons acceptable....
Anbudan,
Srinivasan,
Tirunelveli
அப்பாவி தங்கமணி - முதல் கமெண்ட் கப்பு உங்களுக்குத் தான் :) அட கமெண்ட் போட்டு பின்னிட்டீங்க போங்க...உங்க பாராட்டுக்கும் மிக்க நன்றி,
பொற்கொடி - //பதிவு நல்லா இருக்கு, ஆனா எனக்கு என்னவோ டுபுக்கு டச் குறைஞ்சாப்புல இருக்கு. (என் எதிர்ப்பார்ப்பு ஓவாரகிடுச்சா இல்ல நீங்க ரொம்ப //
***உச்சி மண்டையில் கைய்யால் மகிடெடுத்து நாயகன் மாதிரி லுக்கில்**** தெரியலையேம்மா
பினாத்தல் சுரேஷ் - ஹீ ஹீ என்னம்மா இழையறது உங்க நக்கல் :))))
ஸ்ரீராம் - யோவ் நீங்க இன்னுமா பெஞ்ச்ல ஸ்டாண்டிங்?? :P
ராம்ஜி - மிக்க நன்றி சரே...அது இல்லாமலையா :))
மோகன்குமார் - மிக்க நன்றி நண்பரே உங்கள் பாராட்டுக்கு
அநன்யா - மிக்க நன்றி தன்யனானேன் உங்கள மாதிரி இப்படி அள்ளி விடறவங்களால வைச்சு தான் நானும் வீட்டுல கொஞ்சம் ஓட்டிகிட்டு இருக்கேன்:))
பிரபு - யேய் யாருடா அங்க எங்க தலைவர பத்தி நக்கல் விடறது...பிச்சு புடுவேன் பிச்சி...சொல்லிட்டென் பிரபு...யாரு நம்ம தலைவரையேவா...
பொற்கொடி - என்னங்க...அதுக்குள்ள மனச் மாறிட்டீங்க...:))
அப்பாவி தங்கமணி - அவரு ஏற்கனவே நிக்கிறார்ல :)
கனாக் காலம் சுந்தர் சார் - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு :) இந்த திருவாளர் திருமதி வேண்டாமே ப்லீஸ்...நான் ரொம்ப சின்னப் பையன் சும்மா டுபுக்குன்னே கூப்பிடுங்க. பதிவு உங்களுக்கு பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்.
ஜொள்ளானந்தா - சும்மா சோக்கடிக்காதீங்க சாமி இதுவரைக்கும் என்னம்மோ சரக்கு இருந்த மாதிரியும் இன்னிக்குத் தான் தீர்ந்த மாதிரியும் ...:))
பால்சுப்ரமண்யன் - உங்கள் பாராடுக்கு மிக்க நன்றி நண்பரே. மிக்க ஊக்கத்தைத் தருகிறது.
தக்குடு - //நடந்த கச்சேரியை பத்தி ப்ளாக்ல எழுதினா வரக்கூடிய கச்சேரிக்கு ஓசி டிக்கெட் தரேன்!னு சொல்லியிருக்காளா?? டுபுக்கு அண்ணாச்சி!...:)// எல்லாம் நாமளே அடியப் போடறது தான் :))) மிக்க நன்றி பாராட்டுக்கு
பொற்கொடி./ஸ்ரீராம்./அப்பாவி தங்கமணி/ தக்குடு/ அநன்யா/ - அடேயங்கப்பா என்னா கும்மி என்னா கும்மி. பொற்கொடி வந்து ஒரு சட்டம் போடாட்டா செஞ்சுரி அடிச்சிருப்பீங்க போல :)) நோ ஹார் ஃபீலிங்க்ஸ்...பொற்கொடி மிக்க நன்றி புரிந்துணர்வுக்கு
எல்கே - யோவ் பதிவு பத்தி ஒரு வார்த்தை சொன்னா தான் டீம்ல சேர்த்துப்பாங்களாம் :P
கார்திக் - ஸப்ப்பாஅ ஆஹா நீங்க தான் சொல்லி இருக்கீங்க :))) மிக்க நன்றிங்கோவ்
நேசன் - மிக்க நன்றி தலை...நல்லவேளை அவரு போயிட்டார் :)))
மதுரம் - யேங்க...நீங்களுமா சங்கம் வைச்சு என்ன நக்கல் விடுறீங்க :))) ஆமா நானும் அயோத்தியா மண்டபத்துல நடக்கிற கச்சேரிகளை 12ஜில உட்கார்ந்து கொண்டே கேட்டிருக்கேன்...(அந்த தெருவில அந்த வேகத்துல தான் பஸ்ஸெல்லாம் போகும்) அருமையான இடங்க அது
அம்பிகா - ஆகா நீங்க மெடிக்கல் டாக்டரா...அதுவும் சங்கீதம் தெரிந்த டாக்டரா...கலக்கல்...உங்களுக்கும் நம்மூர் தானே (நீங்க தானே அம்பை சீத கல்யாணம் பத்தி நாரத கான சபாவுல கமெண்டு போட்டது? ) நார்விசா உங்களுக்கு...கண்டிப்பா வர்றேங்க நீங்களும் லண்டன் வரும் போது கண்டிப்பா வாங்க (அட்ரசே குடுக்காம கண்டிப்பாவாங்கன்னு கண்டிப்பாவாங்கன்னு எப்படி வாய் நிறைய கூப்பிட்டுக்கிறோம் பார்த்தீங்களா...:)))) சும்மா டமாசு கோச்சிக்காதீங்க.
அனானி - மிக்க நன்றி ஹை...பெயர் போட்டிருந்தா அப்படியே அட்டென்டன்ஸ் போட்டிருப்பேன்ல
பத்மநாபன் - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு நண்பரே..கும்மி நான் இல்ல்லீங்கோவ் :))
மகேஷ் - மிக்க நன்றி ஹை...கவலையே படாதீங்க நீங்க பெரிய கீப்போர்ட் வித்துவானாகி...நம்ம படத்துல ஒரு டைட்டில் சாங்க் போடறீங்க நீங்க
எஸ்பி - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு. ஊக்கமாய் இருக்கிறது.
சர்ணா - அண்ணாச்சி இதோ போட்டாச்சி ...
சௌம்யா - மிக்க நன்றி ஹை ஆமா அதானே தாமிரபரணி தண்ணியா கொக்கா ...:)))
அனானி - சாரி இதோ போட்டாச்சு
பாலாஜி - மிக்க நன்றி தல. ஒரு தரம் நீங்க வாசிக்கும் போது எனனையும் ஆட்டதுல சேர்த்துக்கோங்களேன்
சுப்ரமணியன் - உங்கள் முய்ற்சி முழுவெற்றி ஆகுக. ஆனால் ரொம்ப சாரி. நான் ஏற்கனவே கேத்ரீனாவிற்க்கு கரகம் எடுப்பதாய் நேர்ந்துகொண்டுள்ளதால் தமண்ணா இறைப்பணியில் சேர்ந்துகொள்ள முடியாமல் இருக்கிறேன். ஒரு பக்தனாய் இந்த பக்தனின் பாவத்தை பொறுத்தருள்வீராக.
பாலு ஸாரி கொஞ்சம் லேட்ட்...இதோ போட்டாச்சு
குவைத் ஸ்ரீராம் - ஆஹா ஒரு பாஸ்டன் போக இப்போ குவைத் ஸ்ரீராமா...வாங்க வாங்க...மிக்க நன்றி ஹை
அனானி - கோச்சிக்காதீங்க அண்ணே - இதோ போட்டாச்சு....ஐயோ சாமி நான் தேன் சாரி
ஸ்ரீனிவாசன் - நண்பரே ரொம்ப சார் நடுவில் கொஞ்சம் வேலைப் பழுவாகிவிட்டது...இதோ போட்டாச்சு. அண்ணாச்சி நீங்க நம்மூரா...ஊர்ல எல்லாரும் நலமா...
உங்கள் உள் வட்டமே (நட்புக் குழாம்) பெரிசாயிருக்கிறது! ஒரு வேளை தொடர்ந்து அதிக பதிவுகள் இட்டால் அது மாவட்டமாகிவிடும். ஏற்கனவே ஒரு தடவை உங்கள் பதிவுக்கு நான் எழுதியது போல், உங்கள் எழுத்தில் நகைச்சுவை தாண்டவமாடுகிறது. ரொம்ப ரசித்துப் படிக்கிறேன். நன்றி. - ஜகன்னாதன்
Post a Comment