ரொம்ப நாட்களாகவே ஏங்கிக் கொண்டிருந்த சினிமா தாகம் இங்கே யூகே வந்த பின் கொளுந்து விட்டு எரிந்தது தாங்கள் அறிந்ததே. போன வருடம் அக்டோபரில் அருமையான நாட் என்று நான் நம்பும் ஒரு மேட்டர் சிக்க அதை வைத்து ஒரு கதையை உருவாக்கி இதை டெலி பிலிமாக எடுக்கலாமே என்று யத்தம் கட்ட ஆரம்பித்தேன்.
இந்தப் பற்றி திரைவட்டாரத்தில் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அனைவரும் ஏன் டெலிபிலிம் எடுக்கறீங்க..ஒழுங்கா திரைப்படமாகவே எடுக்கலாமே என்று ஆலோசனை சொன்னார்கள். முழு நீள திரைப்படமா என்று கொஞ்சம் தயக்கம் இருக்க, சரி ஜூலையில் ஊருக்கு வரும் போது மேலும் சில திரை நண்பர்களை சந்தித்து ஒரு முடிவுக்கு வருவோம் என்று நினைத்து சில சந்திப்புகளை ப்ளான் செய்து வந்தேன்.இதற்கு நடுவில் ஒரு கார்ப்பரேட் வீடியோ ஒன்றும் நண்பரின் கம்பெனிக்காக தயாரிக்கும் பணியிலும் ஈடுபட நேர்ந்தது. சில ப்ரொடெக்க்ஷன் வேலைகள் செய்யுமளவிற்க்கு ஒரு மீடியா ப்ரொடெக்க்ஷன் கம்பெனி ஒன்றும் துவங்கி இருக்கிறேன்.
எல்லாவற்றிக்கும் மேலாக மும்பை ப்ரொடக்க்ஷன் தயாரிப்பில் இங்கே படமாகவிருக்கும் ஒரு சின்ன பட்ஜெட் பாலிவுட் திரைப்படத்திற்கு தற்போது எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். படத்தின் டைரக்டர் நேஷனல் ஜியோக்ரபி சேனலில் கேமிராமேனாக பணியாற்றியவர். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட் ஜூனில் ப்ளான் செய்திருக்கிறோம்.
நிற்க. இந்தப் பாலிவுட் படத்தில் வேலை செய்யும் தைரியத்தில் தற்போது என்னுடைய படம் பற்றியும் மிகவும் யோசித்து வருகிறேன். என்னுடைய படம் தொடர்பாக சில ஆரம்ப கட்ட வேலைகளை நகர்த்த ஆரம்பித்திருக்கிறேன். ஒரு ஷேப்பிற்கு வந்தவுடன் மேலும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் வாழ்த்தும் ஆதரவும் என்றும் போல் அன்பனுக்கு (...நாந்தேன் :)) வேண்டும். இன்னும் பட விஷயத்தில் பிள்ளையார் சுழியே முழுதாய் போடவில்லை என்று தெரியும். இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது வழமையான வார்த்தைகளில் பசப்பினால் சும்மா வருவாளா சுகுமாரின்னு வழமையாய் பின்னூட்டத்தில் பின்னிவிடுவீர்கள் என்பதால் அப்படியே நேரா மேட்டருக்கு வருகிறேன்.
இந்த விஷயத்திற்காகவும் மற்றும் என்னுடைய ப்ரொடெக்க்ஷன் கம்பனி தொடர்பான சில ப்ராஜெக்டுகளுக்காகவும் தொழில் ரீதியாகவும் சில டெக்னிகல் தொடர்புகள் தேவைப்படுகிறது. ஆரம்ப காலம் என்பதால் சம்பளம் பிரதானமாய் இல்லாமல் ஆர்வமும் passionனும் உள்ள சில நபர்கள் உள்ள டீம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறேன். வரும் ப்ராஜெக்டுகளுக்கு ஒரு டீமாக வேலை செய்யும் விதமாக இதை செயல் படுத்த நினைக்கிறேன். போட்டோஷாப், போஸ்டர் மற்றும் க்ரியேட்டிவ் டிசைன், சி.ஜி, அனிமேஷன் ஆகிய துறைகளில் நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ இருந்து வாய்ப்புக்காக காத்திருப்பவராய் இருந்தால் எனக்குப் பின்னூட்டத்திலோ இல்லை rengasub at hotmail dot co dot uk - ஈமெயிலிலோ தொடர்பு கொள்ளவும். ப்ரீலேன்சர்களும் பார்ட் டைமாக இதை செயல்படுத்த நினைப்போரும் தொடர்பு கொள்ளலாம்.
- இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் நாடும் அன்பன் (யெம்மா... இதுக்கு மேல குனிய முடியல தலை தரையில தட்டுது :))
Wednesday, April 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
108 comments:
நாந்தான் போணியா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
யோவ் அன்பன்னு சொல்லி வாழ்த்துங்கன்னு சொல்லி கெஞ்சிருக்கேன்...நான் தான் போணியா டவராவா சட்டியான்னுகிட்டு...ஒழுங்கா மரியாதையா வாழ்த்தை சொல்லுய்யா இல்ல நடக்கறதே வேற :)))
மொதல்ல படம் எடுப்பீங்க, அப்புறம் நடிக்கறேம்பீங்க, அப்புறம் பஞ்ச் டயலாக் பேசுவீங்க, அப்புறம் கட்சி ஆரம்பிப்பீங்க, அப்புறம் அடுத்த முதல்வர் நாந்தாம்பீங்க
இதயெல்லாம் நாடு தாங்குமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
எனக்கு ஹீரோயினிக்கு டச் அப் பாயா வேலை கெடைக்குமா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
டச் அப் பாய் வேலைக்கு இண்டர்வியூவுக்கு லண்டன் வரணும், டிக்கெட் அனுப்புங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
என்னா சவுண்டு பலமா இருக்கு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ரங்கா..
நீங்க என்ன செஞ்சாலும் எங்க எல்லோரோட அன்பும் ஆதரவும் உங்களுக்கு என்னிக்கும் உண்டு.
நீங்க எதைச் செஞ்சாலும் அருமையா செய்வீங்கன்னு தெரியும், இதையும் அப்படியே சக்ஸஸ் பண்ணுங்க.
Our (Me, Kedi, ambi, ananya and Thakkudu) hearty congratulations on your venture and we wish you all success..
இவ்ளோ சொல்லியிருக்கேன், ரெண்டு ஓசி டிக்கெட் அனுப்ப மறந்திடாதீங்க
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சரியாச்சொன்னீங்க ஸ்ரீராம் அண்ணா..
//Our (Me, Kedi, ambi, ananya and Thakkudu) hearty congratulations on your venture and we wish you all success..//
ஸ்ரீ குருப்யோ நமஹ!
குருநாதர் எது செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும். அது ஜோரா வரும்ன்னு எங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்ணே! அதுனால, எடுத்து ஜமாய்க்கவும்! எடுத்த கார்யத்தில் வெற்றி அடைய, மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(என்னுடைய டேட்ஸ் 2020 வரை ஃபுல்லாகி விட்டதால், தங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொற்கொடியிடம் கேட்டுப்பார்க்கவும்!)
இப்படிக்கு,
டுபுக்கு ரசிகர் மன்றம்,
அபுதாபி கிளை
இது ஏப்ரல் ஃபூல் இல்லையே? வாழ்த்துக்கள். அப்போ அடுத்த மணிரத்னம் ரெடியா ?? :)
Hi Ranga,
All the best and wish you all success.... Itz really a great news..Kandippa u'll WIN...
-SweetVoice.
ம்ம்ம், ஆக நாகராஜசோழன் பரம்பரையில் மற்றுமொரு MLA!!!! உங்களுடைய நல்ல முயற்சிகள் வெற்றியடைய நித்தம் நித்தம் அடியேன் தொழும் தொப்பையப்பனும்,குருனாதரும் பரிபூர்ணமாக அருள்புரிய பிரார்திக்கிறேன்.
டுபுக்கு அண்ணா, நீங்க சினிமால பெரிரிரிரிரிய ஆளா வந்ததுக்கு அப்புறம், மணிரத்னம் அவர்களை பார்த்து, நீங்க என்ன பெரிரிய டுபுக்கா??னு நாங்க எல்லாம் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...:)( நாராயண! நாராயண!)
நான் ஏற்கனவே தமிழ் சினிமால வேஷம் எல்லாம் கட்டி நடிச்சுருக்கேன், எதாவது வேஷம் இருந்தா பாத்து தாங்க டைரடக்கர்!
//Our (Me, Kedi, ambi, ananya and Thakkudu) hearty congratulations // ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! இப்பவே கண்ணை கட்டுதே!!! பாஸ்டன் அண்ணாச்சி உங்க பாசத்துல எனக்கு //கண்கள் பணித்தது! இதயம் இணைந்தது//...:)
உங்க படத்தை வாங்க சன் பிச்ஷர்ஸ் , தயாநிதி அழகிரி, udayanidhi ஸ்டாலின் இடையே பெரும் போட்டி நிலவுகிறதாம், கோடம்பாக்கம் பட்சி சொல்கிறது.
WOW ! Congratulations - All the best - Be yourself and you will really go places .........
Nice to know this. All the best.
ஆல் தெ பெஸ்ட் .. வாழ்க வளமுடன்..
வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்லியுள்ள துறையில் எனக்கு ஆட்கள் தெரியவில்லை,தெரியவந்தால் சொல்கிறேன்.
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் அண்ணாச்சி. அன்டர் கிரவுண்டுல பல வேலைகள் நடந்துகிட்டு இருக்கு போல. :))
@பாஸ்டன் நாட்டாமை, உங்க அன்பு என்னை திக்குமுக்காட வைக்குது. இவரு எடுக்கற கதை தோஸ்தானா மாதிரி சப்ஜக்ட்டாம். ஹீரோயினே கிடையாதாம். இப்ப சொல்லுங்க டச்சப் பாயா இருக்க ரெடியா..? :))
நமக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு மெயில் தட்டி வுட்ருக்கேன். விருப்பம் இருந்தா உங்களை தொடர்பு கொள்வார்.
All the best for this venture. Hope you find time to blog too!!
ஆஹா....கெளம்பிட்டாய்யா......கெளம்பிட்டாய்யா......!
//என்னுடைய டேட்ஸ் 2020 வரை ஃபுல்லாகி விட்டதால், தங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொற்கொடியிடம் கேட்டுப்பார்க்கவும்//
ஏம்மா அநன்யா, வேணாம்மா டுபுக்கு பாவம் பொழ்ச்சிப் போகட்டும். அவுரு என்ன பேய்ப் படமா எடுக்குறார் - நீங்க எல்லாம் கதாநாயகியா நடிக்கறதுக்கு?
//பாஸ்டன் அண்ணாச்சி உங்க பாசத்துல எனக்கு கண்கள் பணித்தது! இதயம் இணைந்தது//
தக்குடு, இது என்னா உள்குத்து, இந்த டயலாக் பிரிஞ்சவங்க ஒண்ணா சேரும்போது சொல்ல வேண்டியது - என்னையும் டுபுக்காரையும் எந்த கொம்பனாலயும் பிரிக்க முடியாது.
//இவரு எடுக்கற கதை தோஸ்தானா மாதிரி சப்ஜக்ட்டாம். ஹீரோயினே கிடையாதாம். இப்ப சொல்லுங்க டச்சப் பாயா இருக்க ரெடியா..//
அம்பி, ஏன் இந்த பொறாமை? உங்களுக்கு முன்னால நான் அப்ளிகேஷன் போட்டதனாலா? என்னா ஒரு வில்லத்தனம்? கதையில ஹீரோயினியே இல்லன்னாலும் டுபுக்கு கிட்ட சொல்லி மாளவிகா குத்தாட்டம் ஒண்ணும் கஸ்தூரியின் குத்தாட்டம் ஒண்ணும் (லேட்டஸ்டா சொல்லியிருக்காங்க - ஒரு பாட்டுக்கு ஆடத் தயார்னு)வச்சி அவங்களுக்கு டச் அப் பாயா நான் போயிருவேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
புதிய முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துகள்.
Hi
I have been reading ur posts since last month.U r simply gr8.All the best for ur new venture.U r going to go places.
வாழ்த்துகள் பாஸு!. கூடவே சின்ன அட்வைஸும்.
எக்ஸ்பிரியன்ஸ் இல்லாம சினிமால மட்டும் இறங்காதீங்க. குறிப்பா டைரக்ஷனுக்கு.
வாழ்த்துக்கள். பைனான்ஸ் பண்றதை தவிர எந்த வேலையில் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். ஜூலையில் ஊருக்கு வரும்போது சந்திப்போம்.
All the very best for your direction venture. I am following your blog for years. Your narration skills are too good.
-- Srinivasan, Tirunelveli.
சந்திரமுகி ரிலீஸ் அப்போ ரஜினி ஷங்கர்ட்ட பேசினாராம், அந்நியன் ரிலீஸ் தள்ளி வைக்க சொல்லி.
அதே போல, உங்களிடமும் ரஜினி பேசினாராமே, எந்திரன் ரிலீஸ் அப்புறம் உங்க படம் ரிலீஸ் வைக்க சொல்லி, உண்மையா பாஸ்.
dear dubuks
may god shower on you all the strength you need for your new venture.
please continue writing also.
with best wishes
balasubramanyan vellore
மனமார்ந்த வாழ்த்துகள். கண்டிப்பா நல்லா நடக்கும், நினைச்ச மாதிரி.
vazhthus!
comedy padama eduthathaan unga area brother minimum padam paappaaru!
இப்பதான் பார்த்தேன் ..முதல்ல வாழ்த்துக்கள் .. பின்னாடி வர்றேன் ...
முதலில் டுபுக்கு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் (விஜய் சொன்னாப்ல பின்னாடி ஏப்ரல் பூல்னு சொன்னீங்கன்னு வைங்க...உங்க தங்கமணிக்கு ஒரு load ரமணி சந்திரன் புக்ஸ் பார்சல் பண்ணிடுவேன். அப்புறம் புவ்வாவுக்கு அல்வா தான்)
எனக்கு நீங்க சொல்ற technical வேலை எல்லாம் தெரியாதுனாலும் ஏதோ ராமர்க்கு அணில் உதவினாப்ல எதாச்சும் செய்யலாம்னு தான் நெனச்சேன். ஆனா இந்த வட அமெரிக்க கண்டத்துல இருந்து உங்க கண்டத்துக்கு ப்ரீ transport இல்லாததால அந்த யோசனைய நயாகராவுல கரைச்சுட்டேன்
ஸ்ரீராம் - கதாநாயகி டச் up வேலையா. யாருப்பா அங்க? சீக்கரம் ஸ்ரீராம் ஆத்துல மன்னிக்கு ஒரு போன்அ போடுங்க (இனிமே என்னையும் உங்க ஸ்ரீகுரூப்ல சேத்துகறதனா மன்னி கிட்ட சொல்லல...)
அனன்யா - பொறுத்தது போதும் பொங்கி எழு. ஸ்ரீராம் பேய்னு எல்லாம் சொல்றாரே...ஞாயமா இது (நாராயண நாராயண...இன்னிக்கி தக்குடு வேலைய நான் செஞ்சுட்டேன்)
நான் தான் டவராவா?
என்றும் அன்புடன்,
சியாட்டில் சிங்காரி.
இந்த படத்ல எனக்கு ரொம்ப டிஃபெரெண்டான ரோல். நான் ஒரு லெஃப்ட் ஹேண்டரா நடிக்றேன் ஃபர்ஸ்ட் டைம். இத்காக ஸ்பெஷலா நெதர்லாண்ட்ஸ்ல போய் ட்ர்யினிங் எட்துருக்கேன்.
ஆடிஷன் பாஸ் தானே? எனக்கு தானே ஹிரோயினி சான்சு?
அவ்வ்வ்வ்வ்.. பாஸ்டன் இங்க பாருங்க எனக்கு கண்ணுலாம் கலங்குது. மேக்கப் கலையுது பாருங்க! :))
ரொம்ப சந்தோஷமா இருக்கு டுபுக்கு! "ஃபேவரிட் டைரக்டர்: டுபுக்கு"ன்னு ஆர்குட், ஃபேஸ்புக்ல எல்லாம் நாங்க சொல்ற மாதிரி வளரணும், தெரிஞ்சுதோ? (ஆமா டைட்டில் கார்டுல ரெங்கான்னு போட்டா கொஞ்சம் பேருக்கு தான் தெரியும், பேசாம டுபுக்குன்னே போடலாமே. :P)
//டுபுக்கு அண்ணா, நீங்க சினிமால பெரிரிரிரிரிய ஆளா வந்ததுக்கு அப்புறம், மணிரத்னம் அவர்களை பார்த்து, நீங்க என்ன பெரிரிய டுபுக்கா??னு நாங்க எல்லாம் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...:)( நாராயண! நாராயண!)//
யோவ், யாருய்யா அங்க.. தக்குடு குடும்பத்துக்கு போட்ட 2 ஃப்ரீ டிக்கட்டை கேன்ஸல் பண்ணுய்யா..!
அப்பாவி தங்கமணி, இன்னிலேருந்து நீங்களும் எங்க டீம்ல இருக்கீங்க, 11 பேர் சேந்ததும் நல்ல வெலைக்கு விக்கலாம், இதுக்காக ப்ளாக் மெயில் எல்லாம் பண்ணக் கூடாது.
நான் எப்போ அநன்யாவ பேயின்னு சொன்னேன்?? பேய்ப்படமான்னுதானே கேட்டேன்? Don't put words into my mouth... :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இதுக்கு மேல இங்க கும்மியடிச்சா, டுபுக்கு எனக்கும் ஒரு மிரட்டல் அறிக்கை விடும் அபாயம் இருப்பதால், நான் எஸ் ஆகிறேன்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பாய் பாய் நில்லுங்க! (அட டச்சப் பாய்க்கு சுருக்கம்தேன்..)
கும்மியை விடுங்க, இந்த பதிவை "கடந்த இரண்டு நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை"ல எப்படி கொண்டு வர்றது?
ஒரு சின்ன கும்மி,,
//இந்த படத்ல எனக்கு ரொம்ப டிஃபெரெண்டான ரோல். நான் ஒரு லெஃப்ட் ஹேண்டரா நடிக்றேன் ஃபர்ஸ்ட் டைம்.//
கேடி அதுக்கு பதிலா,ஒரு அழகான பொண்ணா நடிக்கலாமே? நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருக்கும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஒரு பெரிய கும்மி..
பாஸ்டன்.. நீங்க என்ன அப்பாவி தங்கமணிக்கு போட்டியா அப்பாவி ஆக்டிங் குடுக்கறீங்க.. நியூயார்க்ல "ஐலனர் போடாத மாதிரி எப்படி போடுவது"ன்னு ட்ரெயினிங் இருக்காம், போயிட்டு வந்து வேலைல சேருங்க. நான்னாலே டிஃபால்ட் ப்யூட்டி தான்னு எல்லாத்துக்கும் தெரியும், உங்க பப்பு இங்க வேகாது :)))
//WOW ! Congratulations - All the best - Be yourself and you will really go places .........//
ஹையோ ஹையோ இது வேறயா.. :))
சரி, நான் போய் கோல்ட் ஃபேஷியல் பண்ணீட்டு வரேன்.
// நான்னாலே டிஃபால்ட் ப்யூட்டி தான்னு எல்லாத்துக்கும் தெரியும்//
அந்த “எல்லாத்துக்கும்” உள்ள யார் யாரெல்லாம் சேத்தி? நீங்களும் உங்க வீட்டு நாய் குட்டியுமா??
//கோல்ட் ஃபேஷியல் பண்ணீட்டு வரேன்// இன்னிக்குத்தானே அநன்யா காசை வேஸ்ட் பண்ணாதீங்க பதிவு போட்டாங்க, சொன்னா கேக்க மாட்டீங்களா??
அப்புறம் நீங்க குட்டிகரணமே அடிச்சாலும், டுபுக்கார் உங்களுக்கு “சார் போஸ்ட்” சொல்ற வேஷம் கூட கொடுக்க மாட்டார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
டுபுக்கு சார் டுபுக்கு சார், நான் க்ளாஸ்ல ஒழுங்காதான் சார் இருக்கேன், இந்த கேடி, தங்கமணி எல்லாம் வந்து என்ன வம்புக்கு இழுத்து கும்மிக்கு இழுக்கறாங்க சார்.
அவங்கள அடக்கி வைங்க சார்..
Yours obediently
Boston Sriram
மனம் நிறைந்த வாழ்த்துகள் ரங்கா
Congrats Renga!! Kalakreenga.
- Prabhu
//கும்மியை விடுங்க, இந்த பதிவை "கடந்த இரண்டு நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை"ல எப்படி கொண்டு வர்றது?//
ப்ளஸ் வோட்டு போடுங்க, ஏழு வோட்டு ஆனவுடன் பரிந்துரையில் வரும்
ஸ்ரீராம் - //எனக்கு ஹீரோயினிக்கு டச் அப் பாயா வேலை கெடைக்குமா?// ஓ உங்க வீட்டுக்கு முதல்ல ஒரு போன போட்டு நோ அப்ஜெக்க்ஷன் வாங்கிடறேன் :)) அப்புறம் லண்டனுக்கு டிக்கட் வாங்கனுமா இல்ல ஆஸ்பத்திரிக்கான்னு முடிவு பண்ணிக்கலாம்.
//நீங்க என்ன செஞ்சாலும் எங்க எல்லோரோட அன்பும் ஆதரவும் உங்களுக்கு என்னிக்கும் உண்டு.// - மிக்க நன்றி ஹை....:)))) உங்க பேச்சு தான் சூப்பர்....சும்மாவா சொம்ப கைல குடுத்திருக்காங்க...
அநன்யா - அம்மணி உங்கள் அன்பிற்க்கு என்ன தவம் செய்தனை. //அதுனால, எடுத்து ஜமாய்க்கவும்! எடுத்த கார்யத்தில் வெற்றி அடைய, மனமார்ந்த வாழ்த்துக்கள்!// - மிக்க நன்றி ஹை. எனர்ஜி பூஸ்ட்டராய் இருக்கு உங்க கமெண்ட். அடடா...2020 வரைக்கும் புக் ஆகிடிச்சா...சர பரவாயில்ல நம்ம பொற்கேடிகிட்ட கேட்டு பார்க்கிறேன் :))
விஜய் - இல்லைங்க சீரியஸ் மேட்டர் தான்.. ஆனா ஒரு ஒரு வேண்டுகோள் ஊர்ல (முக்கியமா அம்பாசமுத்திரத்துல) வீட்டுல சொல்லிடாதீங்க இப்போதைக்கு :))
ஸ்வீட்வாய்ஸ் - மிக்க நன்றி உங்க அன்பிற்க்கு. ரொம்ப ஊக்கமா இருக்கு.
தக்குடு - நக்கல் விட்டாலும் கடைசில டச் பண்ணிட்டியே பா... மிக்க நன்றி ஹை
ராம்ஜி - நீங்க என்ன வைச்சு ஏகத்துக்கு காமெடி பண்றீங்க சார்...:))))
அனானி - மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு. மிக்க ஊக்கமளிப்பதாக இருக்கு.
முத்துலெட்சுமி - மிக்க நன்றி மேடம்
வடுவூர் குமார் - மிக்க நன்றி சார்.
அம்பி - மிக்க நன்றி ஹை ...தோஸ்தானாவா....நாட்டாமைய செம வாரு வார்ற? :)))) ரெபரலுக்கும் மிக்க நன்றி
லங்கினி - ரொம்ப நன்றி மேடம். கட்டாயம் ப்ளாக் பக்கம் எப்படியாவது வந்துகொண்டிருப்பேன்
ஸ்ரீராம் - பொற்கொடியும் அனன்யாவும் நேர்ல வர முடியாவிட்டாலும் கூட்டணி போட்டு ஆள் வைச்சு அடிக்கப் போறாங்க பார்த்துகிட்டே இருங்க...:))) கஸ்தூரி குத்தாட்டமா சரி சரி இதுக்கும் உங்க வீட்டுல சொல்லி நோ அப்ஜெக்க்ஷன் வாங்கிடறேன் :))
அறிவிலி - மிக்க நன்றி சாரே
மிக்க நன்றி உங்க முதல் ஊக்கமான கமெண்டிற்க்கு
ஆடுமாடு - வாங்க அண்ணாச்சி. உங்க வாழ்த்திற்கும் அக்கறையான அட்வைசுக்கும் மிக்க நன்றி. உங்க ஆதரவு நம்பள்கி என்னிக்கும் வேண்டும்....:)
துபாய் ராஜா - மிக்க நன்றி. ஜூலைல நீங்களும் ஊருக்கு வர்றீங்களா? கண்டிப்பா சந்திப்போம்.
ஸ்ரீனிவாசன் - அட நீங்களும் திருநெல்வேலியா...மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்.
ராம்ஜி - அட நீங்க திரும்பவும் என்ன வைச்சு நக்கல் பண்றீங்க...ஹூம்ம்ம்ம் :)))
பாலு - மிக்க நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கு. கண்டிப்பாய் இங்கே எழுதிக் கொண்டும் இருப்பேன்.
கபீஷ் - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான பாராட்டுக்கு
பினாத்தல்ஸ் - தல காமெடி கண்டிப்பாய் எடுப்பேன் ஆனால் முதல் படமாய் இருக்காது என்று நினைக்கிறேன் காமெடிக்கு சினிமா தொழில் ரொம்ப கைவந்த கலையா இருக்கனும் இல்லையா
பத்மநாபன் - மிக்க நன்றி நண்பரே.
அப்பாவி தங்கமணி - மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கும் உதவ நினைக்கும் எண்ணத்திற்கும். ஆமாங்க ஸ்ரீராம் இப்படி கலாசுறார்,,,அனேகமா பொற்கொடியும் அனன்யாவும் போன போட்டோ அது முடியாத பட்சத்தில் யாஹு சேட்லயோ ஆளுக்கு அம்பது பெர்சண்ட் போட்டு கொண்டித் தோப்புலேர்ந்து ஆள் பிடிச்சு...ஸ்ரீராம் ஆபீஸ் போகும் போது ஸ்கெட்ச் போட்டிருவாங்களொன்னு எனக்கு பயமா இருக்கு :))))
பொற்கொடி - சியாட்டில் சிங்காரி சிங்காரி சிங்காரீ....பெயர் சூப்பரா இருக்கு... ///இந்த படத்ல எனக்கு ரொம்ப டிஃபெரெண்டான ரோல். நான் ஒரு லெஃப்ட் ஹேண்டரா நடிக்றேன் ஃபர்ஸ்ட் டைம். இத்காக ஸ்பெஷலா நெதர்லாண்ட்ஸ்ல போய் ட்ர்யினிங் எட்துருக்கேன்.// இந்த டயலாக் சூப்பர் இத என் படத்துல யூஸ் பண்ணிக்கிறேன் :))))
இந்த படத்துல உங்களுக்கு நடிக்க அத்தனை வாய்ப்பிருக்கான்னு தெரியல...நீங்க எதுக்கும் ரங்கு கிட்ட பேசி ஒரு அமௌண்ட தேத்துங்க ஸ்கிர்ப்ட மாத்திடலாம்...முத சீன்ல நீங்க இமயமலை போறீங்க அங்க...
//ரொம்ப சந்தோஷமா இருக்கு டுபுக்கு! "ஃபேவரிட் டைரக்டர்: டுபுக்கு"ன்னு ஆர்குட், ஃபேஸ்புக்ல எல்லாம் நாங்க சொல்ற மாதிரி வளரணும், தெரிஞ்சுதோ?// - உங்க அன்பிற்கு மிக்க நன்றி..ட்ரை பண்றேன் :))
ஸ்ரீராம் - அடிக்கிற கூத்தையெல்லாம் அடிச்சிட்டு அத சமாளிக்க அதான் அழகா நல்ல பையன் மாதிரி போன் போட்டுட்டீங்களே :)))
பொற்கொடி - //ஐலனர் போடாத மாதிரி எப்படி போடுவது/// - ஆஹா இது தான் நம்ம நாட்டாமையோட அழகின் ரகசியமா :))))
பொற்கொடி - //ஹையோ ஹையோ இது வேறயா.. :))// ஒரு ஹீரோயினா இருந்துகிட்டு நீங்க இப்படி பேசலாமா..
ஸ்ரீராம் - உங்களுக்கு ஹார்லிக்ஸ் பிடிக்குமா...ஆஸ்பத்ரி வந்து பார்க்கும் போது வாங்கிட்டு வர்றேன்
பாலராஜன் கீதா - மிக்க நன்றி தல.
பிரபு - மிக்க நன்றி தல. வாரக் கடைசியில் சந்திப்போம் :))
பொற்கொடி - இந்தப் பதிவ பாப்புலர் லிஸ்ட்ல கொண்டுவர நினைச்ச உங்க கடமையுணர்சிக்கு மிக்க நன்றி..அந்த இமயமலைல உங்களுக்கு ஒரு சாங் ஸ்கிர்ப்ட்ல சேர்த்தாச்சு
//ப்ளஸ் வோட்டு போடுங்க, ஏழு வோட்டு ஆனவுடன் பரிந்துரையில் வரும்//
அதுக்கு தமிழ்மணத்துல குடியுரிமை இருக்கணுமாமே..! எனிவே, எனக்கு இன்னும் 18 ஆகதனால போட முடியாதுன்னு வெச்சுக்கங்க.. Other fellow dubukku followers, pliss vote and bring it up!!
கழகக் கணமணிகளே நான் ஏற்கெனவே ஒரு முறை சொன்னது மாதிரி, தல வந்து ஏற்புரை நிகழ்த்திய பின் நானெல்லாம் பேசக் கூடாது, எனவே கும்மிய அடுத்த பதிவுல வச்சிக்கலாம், நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
டுபுக்கு, நான் உங்க பதிவுல வர்ற எல்லாரையும் கலாய்ப்பதில்லை, நான் கலாய்ப்பது எல்லாம் என் சங்கத்து ஆட்கள்தான்னு கூறி என் சிற்றுரையை முடிக்கிறேன்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துகள் ரங்கா !!! உண்மைலயே மகிழ்ச்சியான விஷயம்...
நம்ம சைடுல இருந்து விஷயதானத்துக்கு தனியா கடுதாசி போடறேன்...
//இந்தப் பற்றி திரைவட்டாரத்தில் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அனைவரும் ஏன் டெலிபிலிம் எடுக்கறீங்க..ஒழுங்கா திரைப்படமாகவே எடுக்கலாமே என்று ஆலோசனை சொன்னார்கள். //
இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.... ஹ்ம்ம்ம்ம்
//(யெம்மா... இதுக்கு மேல குனிய முடியல தலை தரையில தட்டுது :)) //
வேல ஆவணும்னா பள்ளம் தோண்டியாவது குனியணும்... அக்காங்....
//நான் ஏற்கனவே தமிழ் சினிமால வேஷம் எல்லாம் கட்டி நடிச்சுருக்கேன், எதாவது வேஷம் இருந்தா பாத்து தாங்க டைரடக்கர்!//hello naan keettathukku bathiley sollalaiyee??..:) nejamaavey oru national award moviela naduchurukken dubukku annachchi...!
அடடா... கேக்க மறந்து போச்சு.... அந்த "சார் போஸ்ட்... " கேரக்டர் எனக்குத்தான்னு ஜெனீவா அய்யனார் முன்னால கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினதை மறந்து உம்மாச்சி உங்க கண்ணைக் குத்தற அளவுக்கு போகமாட்டீங்கன்னு நினைக்கிறேன்....
வாழ்த்துக்கள் !
{(யெம்மா... இதுக்கு மேல குனிய முடியல தலை தரையில தட்டுது :)) }
எழுத்தில் இருக்கும் பணிவு மனத்தில் இல்லை என்பதை இவை புலப்படுத்துகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு..
தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்பியே இந்தக் குட்டு.
//Mahesh said...
அடடா... கேக்க மறந்து போச்சு.... அந்த "சார் போஸ்ட்... " கேரக்டர் எனக்குத்தான்னு ஜெனீவா அய்யனார் முன்னால கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினதை மறந்து உம்மாச்சி உங்க கண்ணைக் குத்தற அளவுக்கு போகமாட்டீங்கன்னு நினைக்கிறேன்....//
ஒரு பிரபல ம்யூசிக் டைரெக்டரா வருவீங்கன்னு பாத்தா,"சார் போஸ்ட்" கேக்கறீங்களே?
ஓ அதத்தான் தனிமடல்ல சொல்லப் போறீங்களா??
:-)))
Go...Rock!!! Good Luck!
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,இசை, ஒளிப்பதிவு, இயக்கம் உங்கள் டுபுக்கு (Title Card Ready)
dubukku sir,
sigaram thoda manammarndha vazhtukkal.ungal vetrikku dhinamum prarthippadhaga rengu solla sonnar.me too.
nivi.
Sometime in future can we say...'Director Dubukka? Avaru padam aarambikkum podhu enga kitta oru vaartha sollitu than aaramchar... Avlo dosthu na paathukonga!!' ;-)
Neenga sonna tech areas la yaarayum theriyadhu. But heroine role ku aalu irukku. Ok va?
Ore excitememnta, sandhoshama, perumaiya irukku, Dubukku. All at the same time. All the very best. From your various posts I know that you are very passionate about making movies. I strongly feel that passion irundha you can achieve anything.
I have to congratulate your Thangamani too for supporting you on this (risky) adventure.
vow itz really wonderful to hear.உங்களைப் போல் ஒருவர் கட்டாயம் கிடையாது. என்னுடைய nature of businessஐ கொஞ்சமே கொஞ்சம் மாற்ற பத்து நாளாக எவ்வளாஉ முடியுமோ அவ்வளவு
யோசித்துக் கொண்டு இருக்கிறேன் . ரெடி ஸ்டாக் வைக்கலாமா அல்லது need to orderஐ ஃபேஸ் பன்ன முடியும்மா என்று மண்டய்ய ஒடைத்துக்கொண்டு இருக்கிறேன். every time i learn a lot of lesson and courage from u. so monday onwards i'm going to change my style of business. ok.
all the best dubukku...:)
best wishes
frm LK
ஆஹா !
அருமையான பதிவு!!
வாழ்த்துக்கள் அண்ணா.
எனக்கு ஹீரோயின் வயசெல்லாம் இல்லை.. ஆனா உங்க படத்துக்கு child artist வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் கண்டிப்பாக வருகிறேன்.
hello anna,
Hope u remember me .Aparnaa (SPC-Courtallam).
i am reading your post regularly eventhough i dont comment.Read the good news ..Though i could suggest my friend .He is in London now and is an expert in animation, Ps etc..he was working withfew top studios in india before moving there.he worked in movies like Chandramuki . He is KarthikRaja (from tenkasi).he was my classmate.he had a blog before K4K. his gmail is k4karthik@gmail.com.I'll send ur blog link to him as well. you can also contact him on this if you think he will suit your requirement..
All the best for ur new venture.regards to ur family.
-aparnaa
டுபுக்கு...
யுகே போயாச்சா..? வாழ்த்துக்கள்..
உங்களுடைய புதிய புரொஜெக்ட்டுக்கும் சேர்த்தே சொல்லிக் கொள்கிறேன்..!
டைரக்டருக்கு ஆள் வேணும்னா ஒரு தந்தியடிங்க.. ஓடியாரேன்..!
பிளைட் டிக்கெட்டுக்கு மட்டும் காசு கொடுத்தா போதும்.. சோத்துக்கு நம்ம குலத் தொழில் ஒண்ணு கைவசம் இருக்கு. பொழச்சுக்கலாம்..!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
டுபுக்கு...
யுகே போயாச்சா..? வாழ்த்துக்கள்..//
சரவணண் அண்ணே, இது என்ன காந்தி செத்துட்டாரா? இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிடுச்சா? ரேஞ்சில ஒரு பின்னூட்டம்? டுபுக்கார் ப்ளாக் எழுத ஆரம்பிச்ச காலத்திலிருந்தே லண்டன்ல தான் இருக்கார்.
//சோத்துக்கு நம்ம குலத் தொழில் ஒண்ணு கைவசம் இருக்கு. பொழச்சுக்கலாம்..//
இதுக்கு இருக்கு உங்களுக்கு, வர்ணாசிரமக் கொள்கைகளை கடைபிடிக்கும், குலத்தொழிலை ஆதரிக்கும், பார்ப்பன அடிவருடி உ.த ஒழிகன்னு பல இடுகைகள் வரும் பாருங்க... :) :)
கழகக் கண்மணிகளே..
பின்னூட்டங்கள் செத்தவன் கையில கொடுத்த வொத்தலை மாதிரி சவ சவன்னு போயிட்டு இருக்கு, கும்மிய மறுபடி ஆரம்பிக்கலாமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சந்தோசம்! வாழ்த்துகள்!
இப்போ அசலுக்கு அஜித் கதை குழுவுல இருந்த மாதிரி என்னையும் சேத்துபீங்களா?
dear sriram
i hope to see PINNOOTTAMMS of the sort that appear in POPULAR (?) blogs.
i am also afraid of PURE TAMIL usage in those
pinnoottams.
kummi arambam ayidutholliyo, paarkalam.
balasubramanyan vellore
அன்பின் பாலு, ஏதோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது ஆனா என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல, தயவு செய்து விளக்கவும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
எனக்கு உ.த., பா.ஸ்ரீ, பா.வே (அதாங்க பாலசுப்பிரமணியன் வேலூர்) யார் பேசறதும் புரியலை. அப்போ நான் எப்படி கும்மறது? :)
கழகக் கண்மணிகளே, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புது வருடத்தில் மனம் போல் கும்மி கொட்டி பொழுதை போக்கும்படி, பெருந்தலைவர் காமராஜுக்கு அடுத்த படியாக நல்லாட்சி புரியும் தலைவர் பாஸ்டன் ஸ்ரீராம் சார்பாக பணிவன்போடு கேட்டுக் கொ'ல்'கிறோம்.
இவண்,
ப்ரெஸிடெண்டு,
அகில உலக குக்புடு தொண்டர்கள் சியாட்டில் மாநகரக் கிளை.
கேடி..
என் சார்பாக கழகக் கண்மணிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னதுக்கு நன்றி.
என்னை ரொம்ப புகழறீங்க... ரொம்ப வெக்கமா இருக்கு..
எனக்கு முதுகுக்கு முன்னாடி புகழ்வது பிடிக்காது, எனக்கு பின்னாடி நின்னு புகழுங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
congrats.
is shooting going to be here in uk ?
photoshop theriyum aana cg theriyathu.
on the job learning na count me in.
//Hope u remember me .Aparnaa (SPC-Courtallam).
// எப்பிடி மறக்க முடியும்? அவர் மறந்தாலும் நாங்க யாரும் மறக்க மாட்டோம்...:) LOL
//கும்மிய மறுபடி ஆரம்பிக்கலாமா??// பாஸ்டன் நாட்டாமை! நீங்க சொன்னா அதுக்கு மறுபேச்சு பேச 18 பட்டிலையும் யாருக்கும் தைரியம் கிடையாது. உங்க வார்த்தைக்குதான் நாங்க(தக்குடு,கேடி,அனன்யா,அம்பி,அடப்பாவி தங்கமணி) எல்லாரும் காத்துண்டு இருக்கோம்...:)
என்றும் வம்புடன்,
தக்குடு
//புது வருடத்தில் மனம் போல் கும்மி கொட்டி பொழுதை போக்கும்படி, பெருந்தலைவர் காமராஜுக்கு அடுத்த படியாக நல்லாட்சி புரியும் தலைவர் பாஸ்டன் ஸ்ரீராம் சார்பாக பணிவன்போடு கேட்டுக் கொ'ல்'கிறோம்// மன்றத்தின் உபதலைவர் என்ற முறையில் இதை நான் வழிமொழிகிறேன்.
இவண்,
தக்குடு
உபதலைவர்,
தோஹா கிளை
நானும் பா.ஸ்ரீ. சொன்னதைப் பார்த்ததும் அப்புடியே சாக் ஆயிட்டேன்! :)
ஆமா எனக்கு ஒரு டவுட்டு. இந்த "மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம்", "உபயோகமில்லா பின்னூட்டம் போடும் சங்கம்" மற்ற இன்ன பிற சங்கங்கள் எல்லாம் ஏன் தல ப்லாக் பக்கம் தல வெச்சுக் கூட படுக்க மாட்டேங்குது?! தல ஏதுனா மிரட்டி விட்டுருப்பாரா?
தக்குடு, உங்க பொறுப்புணர்ச்சியைப் பாராட்டி உங்களுக்கு கழகத்தின் கொ.ப.ச பதவியை வழங்குகிறேன்.
கழகத்தின் தானைத் தலைவனை (நான் தான் நான் தான்) யாரும் கலாய்க்காமல் / வம்புக்கு இழுக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உமக்கு இன்று முதல் வழங்கப் படுகிறது.
இவண்
பாஸ்டன் ஸ்ரீராம்
நிரந்தரத் தலைவர்
அகில உலக வெட்டி ஆபிசர்கள் கழகம்.
தலைமை செயலகம் : பாஸ்டன்.
//நானும் பா.ஸ்ரீ. சொன்னதைப் பார்த்ததும் அப்புடியே சாக் ஆயிட்டேன்! :)//
நீங்க சாக் ஆகுற அளவுக்கு நான் என்ன சொல்லிட்டேன் கேடி???
//ஆமா எனக்கு ஒரு டவுட்டு. இந்த "மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம்", "உபயோகமில்லா பின்னூட்டம் போடும் சங்கம்" மற்ற இன்ன பிற சங்கங்கள் எல்லாம் ஏன் தல ப்லாக் பக்கம் தல வெச்சுக் கூட படுக்க மாட்டேங்குது?! தல ஏதுனா மிரட்டி விட்டுருப்பாரா?//
ஏற்கெனவே இங்க வெட்டி கும்பல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, நாம வேற சேரவேணாம்னு விட்டுருப்பாங்க.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பாஸ்டன் நாட்டாமை & கேடி, டுபுக்கு சார் ஏற்கனவே ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவைதான் பதில் போட வருவாரு, இப்ப டைர டக்கரா வேற ஆயாச்சு! எங்க இந்த பக்கம் வர போறாரு?னு நினைச்சுண்டு நாம எல்லாரும் கும்மி அடிச்சுண்டு இருக்கோம்! அவர் வந்து பாத்தா குதிக்க போறாரு!...:)
@ கேடி - நம்ம அடப்பாவி தங்கமணிக்கு அவங்களோட, 'ஆபீஸ்ல குப்புற படுத்து குபீர்னு தூங்குபவர்கள் சங்கத்தை விட்டுட்டீங்களே!'னு ரொம்ப வருத்தமாம்!!...;)
கேடி & தக்குடு, வாத்தியார்(டுபுக்காரைச் சொன்னேன்) கொஞ்ச நேரம் வரலன்னா இப்படியா அமர்க்களம் பண்றது? Both of you Stand up on the bench...
டுபுக்கு சார், நீங்க வர்ற வரைக்கும் க்ளாஸை அமைதியா நான் பாத்துக்கறேன், நீங்க படம் எடுத்து முடிச்சிட்டு பொறுமையா வாங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
All the best Dubukks..
//தக்குடுபாண்டி said...
@ கேடி - நம்ம அடப்பாவி தங்கமணிக்கு அவங்களோட, 'ஆபீஸ்ல குப்புற படுத்து குபீர்னு தூங்குபவர்கள் சங்கத்தை விட்டுட்டீங்களே!'னு ரொம்ப வருத்தமாம்!!...;)//
பொற்கொடி - அப்படியே நம்ம தம்பிக்கு (தக்குடு) "சட்டி கரண்டியுடன் பேசுவோர் சங்கம்" , "பொழுது போகாம திரட்டுப்பால் கிண்டுவோர் சங்கம்" கூட வேணுமாம். ஒரே அழுகை நேத்திக்கி பூரா...
dear addappaavi thangamani,
அப்படியே நம்ம தம்பிக்கு (தக்குடு) "சட்டி கரண்டியுடன் பேசுவோர் சங்கம்" , "பொழுது போகாம திரட்டுப்பால் கிண்டுவோர் சங்கம்" கூட வேணுமாம். ஒரே அழுகை நேத்திக்கி பூரா
kannaa pinnaa repeatttu!!!!
அப்படியே இதுவும் சேர்த்துக்கோங்கப்பா..
குண்டலநாயகியுடன் சதா கனவுல டூயட் பாடுவோர் சங்கம், வெள்ளிக்கிழமை 11 மணிக்கி டாண்ணு டாப் எகிறி டமால்ன்னு பதிவு போடுவோர் சங்கம்.. இன்னும் ஏகப்பட்டது இருக்கு.. நெஸ்டு மீட் பண்றேன்.
பாஸ்டன் மாஸ்டர், பாஸ்டன் மாஸ்டர்! நானும் கேடியும் சமத்தாதான் இருந்தோம்(யாருக்கும் இடைஞ்சல் தராம). இந்த அனன்யாவும் அடப்பாவியும் தான் ஓவரா சத்தம் போட்டுண்டு இருக்கா!!! first அவாளை சத்தம் போடுங்கோ!
ananya & adappavi thangamani! Both of you Stand up on the bench
தக்குடு இப்போ நீஙக் ஒக்காந்துக்கலாம்.
அநன்யா அண்ட் அப்பாவி, இப்போ நீங்க stand up on the bench. இதே மாதிரி நீங்க அடுத்து சத்தம் போடறவங்களை பென்ச் மேல ஏத்திட்டு நீங்க ஒக்காந்துக்கலாம்.
இதுக்கெல்லாம் நமக்கு இருக்கு, டுபுக்கு சார் வந்து நம்மள எல்லாம் அடிச்சி வெரட்ட்ப் போறார் பாருங்க
என்றும் அன்புடன்
//இப்போ நீஙக் ஒக்காந்துக்கலாம்.// ஹலோ கேடி, மாஸ்டர்தான் உக்காசிக்கலாம்னு சொல்லிட்டாரே! பறக்க பறக்க முழிச்சுண்டு இருக்காம உங்க சீட்ல போய் ஒக்காருங்கோ!
//இதுக்கெல்லாம் நமக்கு இருக்கு, டுபுக்கு சார் வந்து நம்மள எல்லாம் அடிச்சி வெரட்ட்ப் போறார் பாருங்க//
அவரு பேச ஆரம்பிச்சார்னா என்ன பேசுவார்னு அவருக்கே தெரியாதுங்கறது உங்கள்ல பல பேருக்கும் தெரியல.. அதான் இப்படி பேசிண்டு இருக்கீங்க.. அப்புறம் வந்து "கொடிக்குட்டி டுபுக்கு சார் அடிச்சுட்டார்"னு வந்து என் கிட்ட அழக்கூடாது ஆமா!
//அப்படியே நம்ம தம்பிக்கு (தக்குடு) "சட்டி கரண்டியுடன் பேசுவோர் சங்கம்" , "பொழுது போகாம திரட்டுப்பால் கிண்டுவோர் சங்கம்" கூட வேணுமாம். ஒரே அழுகை நேத்திக்கி பூரா...//
ஹிஹிஹி.. அப்பாவி, நீங்க எப்படி இவ்வ்வ்வ்வ்ளோ அப்பாவியா இருக்கீங்க? ;)
தக்குடு, எதுக்கு இந்த அசிங்கம்ங்கறேன்? திரட்டுப்பாலை கிண்டுவானேன், சட்டிக் கரண்டினு பேர் வாங்குவானேன்? :P
சரி சரி, நான் டயலாக் மனப்பாடம் பண்ணனும். சும்மா கும்மி அடிச்சு வீண் பொழுது போக்காம, கேமரா பயம் இல்லாம நடிக்கறத பத்தி டிப்ஸ் குடுங்க.
நண்பர்களே நாளை இங்கு உங்கள் பின்னூட்டத்திற்கு பதிலிடுகிறேன். தாமதற்திற்கு மன்னிக்கவும்
ஐயியோ அப்ப நாங்க கும்மி அடிக்க முடியாதா?? :O
haiyaaaaaa, naanthaan 100-vathu comment...:)
ELLARUM KONJAM INGE PARUNGO.
NOORUDAN(100) MUDICHUKKALAM PLEASE.
ENNA SOLLA POREL IPPO?
BALASUBRAMANIAN VELLORE
ஆனா இப்போ 101ஆ ஆகிடுச்சே சார், பேசாம ரவுண்டா 200 ஆக்கிடுவோம்!
மகேஷ் - சரி சரி அந்த சார் போஸ்ட் உங்களுக்குத் தான் :))) சிங்கப்பூர்ல கொத்து பரோட்டா வாங்கித் தருவீங்க தானே? ;P
அனானி - தாராளமாய் பெயர் போட்டே குட்டலாம் தவறாய் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். என்னுடைய பதிவுகளில் நான் கடைப் பிடிப்பது சுய எள்ளல்...அந்த வரியில் நான் எள்ளியது போலியாய் கூழைக் கும்பிடு போடுகிறேன் என்பதை போல்... ஆனால் நீங்கள் கூறிய கருத்தாயும் அதை எடுக்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் உங்கள் கருத்திற்கப்புறம் உணர்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி கவனத்தில் கொள்கிறேன். நிற்க அந்த குறள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்காகவே கோடானு கோடி நன்றி :)) (அடுத்தாப்புல நாங்களும் எங்கேயாவது எடுத்துவிடுவோம்ல )
அறிவிலி - பரோட்டா வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கார்...ஆனா மெயில் எதுவும் போடலயே...என்ன மேட்டர்ன்னு தெரியலையே?? :))
ரமேஷ் - மிக்க நன்றி ஆனா இவ்வளவு கஷ்டப் படுத்த மாட்டேன்னு நினைக்கிறேன் :))
நிவி - கோடானு கோடி நன்றி உங்களுக்கும் ரங்குவிற்கும். இந்த அன்பிற்கு என்ன தவம் செய்தனை...
கேர்ல் ஆப் டெஸ்டினி - ஆமாங்க அதான் சொல்லிட்டு ஆரம்பிக்கிறேன். கொஞ்ச டிக்கெட்டாவது விக்கனும்ல :)) இன்னொரு ஹீரோயினியா...இருங்க பொற்கொடி வேற கேட்டுக்கிட்டிருக்காங்க...நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க (அப்பாடா)
மதுரம் - மிக்க நன்றிங்க உங்க வாழ்த்துக்கும் அன்பிற்கும். ஆமாம் தங்கமணி பயங்கர அன்டஸ்ஸ்டாண்டிங் இந்த விஷயத்துல செம சப்போர்ட் வேற...
சுபா - நீங்க ரொம்ப புகழறீங்க. ஆனா உங்க குழப்பத்திற்கு ஒரு திருப்புமுனையாய் இருந்ததில் சந்தோஷம். கவலையே படாதீங்க நல்லதே நடக்கும்...வாழ்த்துகள!!!
எல்கே - மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு
ரேஷன் ஆபிசர் - அண்ணே நீங்க நிசமாத் தான் சொல்றீங்களா..இல்ல டெம்பிளேட் பின்னூட்டமா இது :))))) (தப்பா எடுத்துக்காதீங்க)
குந்தவை - மிக்க நன்றி தங்கச்சி உங்க வாழ்த்துக்கு...ஓ சைல்ட் ஆர்ட்டிஸ்ட்...அடேங்கப்பா...(ஓ இது கண்மணி போட்ட கமெண்டா?)
அபர்ணா - மீண்டும் மிக்க நன்றி. கார்த்திக்கை சந்தித்து பேசியாச்சு ...அவரும் இப்போ ஜோதில ஐய்க்கியமாகிட்டார்.
உண்மைத் தமிழன் - அண்ணே சும்மா காமெடி பண்ணாதீங்க நான் யூகே வந்த பிறகு தான் இந்த் ப்ளாகே ஆரம்பிச்சேன் :)) கண்டிப்பா எதாவது வாய்பு இருந்தா சொல்கிறேன்.
ஸ்ரீராம் / பொற்கொடி / தக்குடுபாண்டி - நீங்க மூனு பேரும் ஸ்டேன்ட் அப் ஆன் தி பெஞ்ச். ஒரு கும்மிக்கு இவ்வளவுன்னு நீங்க் அடிச்ச கும்மிக்கு காச உண்டியல்ல போட்டுட்டுத் தான் பெஞ்சிலேர்ந்து இறங்கனும் சொல்லிட்டேன். இது அப்பாவி தங்கமணியையும், அனன்யாவையும் வேற கெடுத்து வைச்சிருக்கீங்க.....
பாலு - சமையில் அமைதி காத்தமைக்கு மிக்க நன்றி
பொற்கொடி - கேர்ல் ஆப் டெஸ்டினி வேற ஹீரோயினி சான்ஸ் கேக்கிறாங்க...பார்த்து நடந்துக்கோங்க அப்புறம் கல்யாணத்துக்கு முந்தின நாள் லெட்டர் எழுதி வைச்சிட்டு தாடி வெச்ச டொச்சு காதலனோட ஓடிப் போற மணப்பெண் ரோல் தான் கிடைக்கும் சொல்லிட்டேன் ஆமா :)))
Great news..
Congratulations and all the very best Renga...
Regards,
Suresh
//Appavi Thangamani: எனக்கு நீங்க சொல்ற technical வேலை எல்லாம் தெரியாதுனாலும் ஏதோ ராமர்க்கு அணில் உதவினாப்ல எதாச்சும் செய்யலாம்னு தான் நெனச்சேன். ஆனா இந்த வட அமெரிக்க கண்டத்துல இருந்து உங்க கண்டத்துக்கு ப்ரீ transport இல்லாததால அந்த யோசனைய நயாகராவுல கரைச்சுட்டேன்//
AT kavalaiye padaadheenga. Eppadiyum Canadian side Niagara Falls la oru duet eduppaanga. Naama rendu perum nalla virundhombal panni help pannalaam.
Dubukku
unga jollu experience....parasakthi college jigidi ellaarayum pathi ippa thaan padichen...
vera oru blogla irunthu comments linkla dubukku pagekku vanththaa.........aahaa.....super jollu...annamalai universityla naan potta kadalai ellam gnabakam varuthe gnabakam varuthe...vanthuruchche...
"kanna thoduchukkada"..appadinnu pakkaththu seat chinese figure solluthu...singapore officela...
...namma kulatholilaana Jollu pathi yaaro eluthiyurukkankalee appadinnu...
padichen...Pokattum...
appadiye...front blogla...unga cinema entry news...
Congrats...
tabakkunnu yaaro vanthu dubukkukku vaalththu solrangkalennu nenaikkatheenga...
intha Raj thaan unga kathaikku thiraikathai eluthap poren singaporela irunthu...
dubukku ..cheq edukkaatheenga...edukkatheenga....cheq book ippa ventaangka...naalaikku anuppunga...
Raj..
cnrajchid@gmail.com
Good luck, Dubukku.
Wish u all the best. Hope you will rock - SP.
Post a Comment