Sunday, January 03, 2010

தீர்த்தவாரி

"தண்ணி என்றால் என்ன...கிக்கு என்றால் என்ன"ன்னு பழனியாண்டவர் மாதிரி கையில் ஆரஞ் ஜூஸை வைத்துக் கொண்டு நானும் தண்ணியடிக்கும் தர்மவான்களுக்கு கிக்கு ஏறவிடாமல் நிறைய மொக்கை போட்டிருக்கேன். "யூ நோ...கிக்கு மீன்ஸ் கிக்கு......"ன்னு சில துரைமார்கள் மெனெக்கெட்டிருக்கிறார்கள். "தம்பீ...இதெல்லாம் கலர் மலையாளப் படம் மாதிரி...ஒரு மகோன்னத அனுபவம்...யாராலயும் சொல்லி புரிய வைக்க முடியாது"ன்னு நிறைய உஷார் மாக்கான்கள் நழுவியிருக்கிறார்கள்.

"அந்த கன்றாவில அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடனும்"ன்னு ரொம்ப நாளாகவே பீடிகை போட்டு வந்தேன். மெட்ராஸில் டூ வீலர் லைசன்ஸ் மாதிரி சப்பையாய் முடிய வேண்டிய மேட்டர், கல்யாணமாகி பத்து வருஷம் நல்லவனாய் நடித்ததில் நேஷனல் பெர்மிட் மாதிரி கொஞ்சம் இழுத்தடித்துவிட்டது. இதில் இரண்டு குழந்தைகளுக்கு வேறு பொறுப்பான அப்பாவாக ஆக்ட் குடுத்துக் கொண்டிருப்பது விஷயங்களை மேலும் சிக்கலாகிவிட்டது.

2012-ல வேற உலகம் அழியப் போகுதுன்னு சொல்லிட்டாங்களேன்னு பிரஷர் ஏற ஆரம்பித்து, ஏதோ ஒரு நல்ல நாளில் ஆரம்பிக்கலாமேன்னு நாளும் குறித்தாயிற்று.

முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்ன்னு ஆபிஸில், பக்கத்திலிருந்து ஆளிடம் பேச்சு வாக்கில் "எப்பா ராசா வெள்ளிக்கிழமையானா பாருக்கு கோலம் போடப் போகறியே எங்கூர்லன்னா டாஸ்மார்க்...இந்தூர்ல எந்த ப்ராண்ட்யா நல்லாயிருக்கும்"ன்னு கேட்க அம்புட்டு தான் ஆபிஸ் இருந்த அத்தனை பேரும் ஆளுக்கு ஆள் வந்து ரவுண்டு கட்டி அட்வைஸ் குடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் ஏதோ டபுள் டீர் பிராண்ட் பாஸ்மதி அரிசி மாதிரி ஒரு பெயர சொல்லுவான் கடைக்குப் போய் அதுல ஒரு பாட்டில் பேப்பர் சுத்தி குடுங்கன்னு வாங்கிட்டு வந்துடலாம்ன்னு பார்த்தா...விஷயம் ஏகத்துக்கும் காம்ப்ளிகேட்டாய் இருந்தது.

"பீர்லாம் வேண்டாம் முதல் தரம் பிடிக்கவே பிடிக்காது...வைன்ல ஆரம்பி அதான் உடம்புக்கு நல்லது"

"ஒக்கே...எந்த ப்ராண்ட்..."

"ப்ராண்ட்..ஓ யூ மீன் ஒயிட் ஆர் ரெட்..? .ரெட் வொயின் ஆரம்பி அதான் உன்னை மாதிரி கத்துக் குட்டிக்கெலாம் வாடை குறைய இருக்கும்..."

"ஓ அப்படியா...சரி...(இந்த மரமண்டையனுக்கு ப்ராண்ட்ன்னா தெரியல போல) ...ஓக்கே ரெட் வைன் புரிஞ்சுது ஆனா அதுல எந்த ப்ராண்ட்..ஐ மீன் லேபிள்..."

"லேபிள்...?? ரெட் லேபிள், ப்ளூ லேபிள் அதெல்லாம் விஸ்கில தான் ...வைன்ல கிடையாது...வைன்ல வருஷம் தான் கணக்கு.."

"கிழிஞ்சுது போ...ஓ இது அரிசி மாதிரியா..ஓக்கே பாத்துக்கறேன்..."ன்னுய் நழுவினாலும் விடவில்லை. இந்த வைன் இந்த சாப்பாடு கூட சாப்பிடனும் அந்த வைன் அந்த சாப்பாடோட சாப்பிடனும்ன்னு ஏகத்துக்கு குழப்பினார்கள். எங்கூர் தரமணி டாக்கிஸில் எல்லாத்துக்கும் கொண்டக் கடலை சுண்டலும், அவிச்ச முட்டையும் தானே சைட் டிஷ் வைப்பாங்க...அப்போ ஏமாத்திட்டாங்களான்னு எனக்கு ஏகத்துக்கும் டவுட்டு.

இதுல வைனை எடுத்து அப்படியே மடக்குன்னு குடிக்கக் கூடாதாம். வாயில விட்டு வெல்லப்பாகை சப்புக் கொட்டி சாப்பிடுவது போல மெதுவாய் நாக்கில் படுகிறமாதிரி பதமாய் டேஸ்ட் செய்ய்வேண்டுமாம். போ போ போய்டே இரு...நான்லாம் பரம்பரை ரவுடி...பாட்டில கவுத்தினேன்னா...பாட்டில் வழியா வானம் தெரிஞ்சாத் தான் பாட்டில கீழ இறக்குவேன்னு அப்படியே அவனை விரட்டிவிட்டேன்.

"ஓக்கே ஓக்கே...சூதனமா இருந்துக்கோ...குடிக்கும் போது ஏதாவது டவுட்னா எனக்கு ஒரு போன போடு, நான் க்ளியர் பண்ணறேன்னு ரெண்டு மூனு பேர் ஏகத்துக்கும் நல்லவன்களாய் இருந்தார்கள்.

டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா... கடைக்குப் போய் "அண்ணாச்சி ரெட் கலர்ல ஒரு வைன் குடுங்க"ன்னா குடுத்துட போறாரு. ஆபிஸில வேலைல சந்தேகம்னா ஒரு பயலும் திரும்பிக் கூட பார்க்காதீங்க....இப்படி ஒரு நல்லவன குடிச்சிக் கெடுக்கனும்ன்னா அடுத்த டிப்பார்ட்மென்ட் பெண்மணிகள் முதற்கொண்டு வந்து அட்வைஸ் பண்ணுங்கடான்னு எனக்கு ஏகத்துக்குப் பெருமை.

இருந்தாலும் விஷயம் இன்னும் குழப்பமாய் இருந்ததால், பொறுமை அதிகமாயிருக்கும் கலயாணமாகாத பேச்சிலர் பசங்களில் ஒருத்தனைப் பிடித்து "என்னய்யா குழப்புறாய்ங்க...என்னம்மோ ஐ.ஏ.எஸ் பரிட்சை மாதிரி ஆயிரத்தெட்டு சிக்கல பின்னுறாங்க..."ன்னு புலம்பியதில், நம்ம பேச்சிலர் பல நாடுகளில் இருந்தும் வரும் சரக்குகள் பற்றியும் திராட்சைகள் பற்றியும் அவற்றின் தாத்பரியங்களை பற்றியும் விலாவாரியாக எடுத்துரைத்தார்.

"ஏற்கனவே உங்களுக்கு தலை கால் தெரியாது இதுல முதல் தரம் வேற வைன்லாம் வெளில வெச்சு எங்கயாவது குடிக்கவேண்டாம் முதல்ல வீட்ல கொஞ்சமா ட்ரை பண்ணிப் பாருங்க"ன்னு தங்கமணி ஏக கரிசனம்.

அதுவும் சரிதான் நாம ஏற்கனவெ ரொம்ப பெரிய ரவுடி இதுல சரக்கு உள்ள போச்சுன்னா அப்புறம் எவன் அடிச்சான்னு கூட சொல்லத் தெரியாதுன்னு தலையாட்டிவிட்டேன்.அடுத்த வாரம் டெஸ்கோவிற்க்கு போன போது ஒரு சரக்கு ஆபரில் போட்டிருந்தார்கள். நம்ம பேச்சிலரிடம் நெட்டுறு போட்டதில் எனக்கு சரஸ்வதி சபதம் சிவாஜி மாதிரி "அ..அம்மா...ஆ....ஆடு...இ..இலைன்னு" உடம்பில் நரம்புகள் முறுக்கேறி பட்டென்று வாங்கி வந்துவிட்டேன்.

வெள்ளிக்கிழமை மஹாலெட்சுமிக்கு உகந்த நாள் என்று தங்கமணி தடா போட்டதில் தண்ணி முஹூர்த்தம் சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை மகள்களை அப்படி இப்படி என்று தாஜா காட்டி தூங்கப் போக சொல்லிவிட்டு பாட்டிலை உதறலோடு கையில் எடுத்த போது மணி இரவு பதினொன்று. "ஐயா முதல் தரம் பூஜை போடப் போறேன்...சைட் டிஷெல்லாம் அமர்களப் படுத்திடனும் என்ன...கொண்டக் கடலை சுண்டல், சிப்ஸ் வித் சல்சா டிப்பிங்...ஸ்பைசி கேஷ்யூநட்ஸ், காரமாய் பரோட்டா குருமா..எல்லாம் கரெக்டா இருக்கனும்...சரக்கு உள்ள் போச்சுன்னா அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் பேஜாராகிடும்"ன்னு தங்கமணிக்கு ஏகப்பட்ட பில்டப் வேறு குடுத்திருந்தேன்.

எத்தனை படங்களில் ட்யூஷன் எடுத்திருப்பார்கள்...பாட்டிலை தலையில் ஒரு தட்டு தட்டி, அடியில் ஒரு தட்டு தட்டி ஸ்க்ரூவை முறுக்கினால் ஈ.ஸியாய் திறக்கலாம்...ன்னு சீலை உடைத்தால் "கார்க்" பெப்பரப்பேன்னு முழித்துக் கொண்டிருந்தது. பாழாய்போன பரதேசி பேச்சிலர் கார்க் போட்டு மூடியிருபார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டான்.எங்க வீட்டில் சென்னா டின் ஒப்பன் பண்ணும் டின் ஓப்பனர் மட்டுமே.

விட்ட சைட் டிஷ் அலப்பரையில் தங்கமணி ஏற்கனவே செம டென்ஷனாகியிருந்தார். இதுக்குத் தான் இந்த பில்டப்பான்னு காறித் துப்பி விடுவார்ன்னு ராத்திரி அவசரமாய் அலைந்து பக்கத்து கடையில் "வீட்டுல கிச்சன் சிங்க் பைப் புட்டுக்கிச்சு அதை சரி பண்ண அவசரமா கார்க் ஒப்பனர் வேணும்ன்"னு வாங்கி வந்து ஓப்பன் செய்தால் ஒயின் நாற்றமான நாற்றம். நான் வேற பந்தாவா முக்கால் க்ளாஸ் ஊற்றிக் கொண்டுவிட்டேன். இந்த இழவையா குடிக்கப் போறீங்கன்னு தங்கமணிக்கு ஏக சிரிப்பு. "இதெல்லாம் கனவான்கள் குடிக்கிற சோமபானம்"ன்னு அரை க்ளாஸ் உள்ளே போவதற்க்குள் முழி பிதுங்கி இருந்த சைட் டிஷெல்லாம் காலி.

"சும்மா சைட் டிஷ்ஷை மட்டுமே சவசவன்னு மென்னு காலி பண்ணிட்டீங்க..கோட்டா ஓவர் .திரும்பலாம் கிடைக்காது"ன்னு தங்கமணி கறாராய் சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் குடித்துவிட்டு ஏதாவது கோமாளிக் கூத்தடிப்பேன் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.

என்னாடா நாம புதுசா இருந்தாலும் அரைக் க்ளாஸ் அல்ரெடி அடிச்சாச்சு...இருந்தும் இந்த கிக்கு ஒன்னும் வரலையே ஒரு வேளை சோடா கலக்கனுமோ..நம்மாள் சிலபஸ்ல அதெல்லாம் சொல்லலையேன்னு எனக்கும் கவலை வர ஆரம்பித்தது.

"என்னங்க ஏதாவது ஏறிச்சா"ன்னு தங்கமணி வேற கார்பரேஷன் தண்ணி டேங்கில் ஏறியாச்சா தொனியில் அடிக்கடி வினவிக்கொண்டிருந்தார்.

"சும்மா தொனதொனக்காத மனுசனை ஒரு ஃபீலிங்காய் இருக்கவிடு இப்பத் தான் ஏறிகிட்டு இருக்கு"ன்னு சமாதானம் சொன்னாலும் கிக்கு ஏன் ஏறவில்லை, ஒரு வேளை டூப்ளிகேட் சரக்கா இருக்குமோன்னு கவலையாயிருந்தது.

"ஒரு வேளை உங்களுக்கு தெரியாம அல்ரெடி கிக்கு ஏறியிருக்கும்...மாடிப் படில ஏறிப் பாருங்க...ஸ்டெடியா இல்லைன்னா தெரிஞ்சிடும்"ன்னு தஙகமணி சொன்ன போது ஏதோ ஹிட்டன் அஜென்டா இருக்கும் என்று உள்மனசு சொன்னாலும் ஏறித் தான் பார்ப்போமே கழுதை ஸ்டெடியா இருகோமான்னு தெரிஞ்சிடப் போகுதுன்னு ஏறியதில்,அபடியே அங்க உணர்த்தி இருக்கும் நைட் டெரெஸ்ஸை எடுத்துக் கொண்டும் வரும் ஆர்டர் தேறியது தான் மிச்சமே தவிர கிக்கு ஒன்னும் ஏறியது மாதிரி தெரியவில்லை.

ரைட்டு நம்ம ஆர்நால்ட் பாடிக்கு அரை கிளாஸெல்லாம் போதாது போலன்னு இன்னும் ஒரு கால் க்ளாஸ் ஏத்தியதில் காய்ச்சல் வந்தால் லேசாய் கண்கள் கணக்குமே அது மாதிரி இருந்தது. வந்தாச்சு...வந்தாச்சு...கிக்கு வந்தாச்சுன்னு மாப்பிள்ளை வீட்டு காரார்கள் வந்த மாதிரி சவுண்டு விட்டதில் தங்கமணி லேசாய் அரண்டு விட்டார். உண்மையிலேயாவா இது எத்தனை சொல்லுங்க..ன்னு விரலெல்லாம் காட்டிக் கேட்க ஆரம்பித்துவிட்டார். நானும் இதான் சாக்குன்னு "மீனா வந்து சரக்கு வைச்சிருக்கேன் இறக்கி வைச்சிருக்கேன் பாட்டு பாடனும்ன்னு" தெகிரியமாய் கோரிக்கை வைக்க...தங்கமணி எனக்கு உண்மையிலேயே ஏறிவிட்டது என்று முடிவுகட்டி "உங்களுக்கு ஏறியாச்சு இதோட போதும்"ன்னு மங்களம் பாடிவிட்டார். அதுக்கு மேல ரவுசு விட்டால் தங்கமணியிடமிருந்து வேற மாதிரியான நிஜ கிக்கு வரும் என்பதால் நானும் மலையேறிவிட்டேன்.

அட கருமாந்திரமே காய்ச்சல் வந்த மாதிரி இருக்கிற இந்த இழவுக்கா குடிக்கிறாங்க இதான் கிக்கா இதுக்கு ரெண்டு பாராசிட்டமால் மாத்திரை போட்டாலே போதுமேன்னு ஏமாற்றமாய் இருந்தது.

பின்னொரு நாளில் சில நெருங்கிய நட்பு வட்டத்தின் ஆன்சைட் ஹெல்ப்புடன் கிக்கு என்றால் என்ன என்று கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கைடன்ஸுடன் திரும்ப பால பாடம் எடுத்து அஙகேயே ஏத்து ஏத்துன்னு ஏத்தியதில் தலை சுத்தி ஒரு வழியாய் கிக்கு வந்து தொலைத்தது. அதிலும் நட்பு வட்டத்துடன் அடித்த கோமாளிக் கூத்து தான் ரொம்ப ஜாலியாய் இருந்ததே தவிர கிக்கு ஒன்னும் அப்படி ரொம்ப சொல்லிக்கிற மாதிரி இல்லை.

46 comments:

sriram said...

மீ தெ ஃபர்ஸ்ட்ட்டேடேய்ய்ய்ய்...
உண்மையிலெயே நாந்தான் ஃபர்ஸ்ட்டா டுபுக்கு?
படிச்சிட்டு திரும்ப வர்றேன்

sriram said...

டுபுக்ஸ்
என்னாச்சு புது வருஷத்தில இருக்குற ஒண்ணு ரெண்டு நல்ல பழக்கத்தையும் விட முடிவா? பொறுமை பதிவுக்கு வந்த கமெண்டுக்கு பதில் சொல்லவே இல்லை.

அப்புறம், உங்க பக்கத்தில் எனக்கு போர் அடிச்ச முதல் பதிவு இது, பாதி படிக்கும் போதே ஸ்க்ரோல் பண்ணி கடைசி பாரா படிச்சி முடிச்சிட்டேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

ennadhu naan seconda? 23 minutes kulla epdi iavru vandharu? ithanaikum ennoda laptop ellam vera velai seiyala.. apo kooda enaku 2nd thana??? :O

Porkodi (பொற்கொடி) said...

lol@ parambarai rowdy & arnold body..! eksi (enna koduma saranya idhu)?

padhivu konjam kadiya thaan irundhudhu ana scroll panra alavu kadi illa.. any day, kudikradhu oru great vishayama enna try panni paarka? i dont know why niraya peruku indha aarvam iruku nu! apo ulagathula irukra ovvorutharum ennanavo panranunga adhu ellathaiyum try panni paathaa thaan manushano?! :)

inum niraya peru kudupanga parunga advise.. ;D

Porkodi (பொற்கொடி) said...

adoda parunga 'dubukku'na oru image irukku veli ulagathula.. unga image damage panikringle thala.. (indha commentku yarum enaku auto anuppa koodadhu ama)

இலவசக்கொத்தனார் said...

சில விஷயங்கள் தானா செய்யலாம். சில விஷயங்களுக்குக் குரு கடாக்க்ஷம் வேணும்.

அடுத்த முறை நான் லண்டன் வரும் பொழுது வெச்சுக்கலாம்!!

அரங்கப்பெருமாள் said...

என்ன பாஸு!!!... நம்மக் கிட்டக் கேட்டிருந்தா அருமையான ஐடியா குடுத்திருப்பேனே.நாங்க பி.எச்.டி முடிச்சிருக்கோம்ல

அரசு said...

கிக்கு வரலை என்றாலும், எப்படி மீனாவுட 'சரக்கு' பாடல் டைமிங்கா வந்தது?

ராவா ஒரு 200ml Vodka அடிச்சு இருந்திங்கனா, கிக்கும் அவரோட கஸின் பிரதரும் வந்திருப்பார் !!!

-அரசு

kizhakku pakka nanbargal said...

renga , che vazhkalaila neenga ivvalvu naal waste panniteenga . ippo rendu perukku appanna ... ellam mudichu peak le poi vidra nilamaikku vandhrukkanum . adha vittuttu ippodhan pillayar suli podrel . sutha brahmana nnu sonnadhu ippodhan puriyudhu ... pala brand try pannunga kick erum .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னப்பா ரொம்ப நாளா பதிவு எதுவும் போடாம இருக்காறே?.. ஆபிஸ்-ல எதாவது ப்ரமோசனுக்கு ரெடி பண்றாருனு பாத்தா,
இதுதான் விசயமா?..
ஏறுன மப்பு இறங்க இவ்வளவு மாசம் ஆயிடுச்சு..
சரி.. சரி.. போனது போகட்டும். இனியாவது அட்லிஸ்ட் வாரம் வாரம் எழுதுங்க..
-அன்புடன் பட்டாபட்டி

Ambika Rajesh said...

Dear Dubukku

Wish you and your family a very happy new year.
Ambika

Rams said...

Dubukks,

Wish you and your family a happy new year.

Sriram/Porkodi,

Are you ready for the New Year Gummi? Inga namma ellam "Swine flu"kku bayandhomna, annanukku "Wine" flu vandhuduchu pola irukke??

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

அறிவிலி said...
ஹேப்பி நியூ இயர்.

படிக்க ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருந்துது.

உங்க ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப அப்பாவியோ???

வைன்லாம் குடிச்சு.. கிக் ஏறி... ஹ்ம்ம்ம்..

பேசாம டூட்டி ஃப்ரீல ஷிவாஸ் ரீகல் வாங்கி ரெண்டு லார்ஜ செவன் அப் கலந்து அடிப்பீங்களா.....

சிங்கப்பூர் பக்கம் வரும்போது சொல்லுங்க, ஒரு கச்சேரி போட்றலாம்.

Vijay said...

நாங்க கடைய கட்டிட்டு வெளிய வரப்போ நீங்க உள்ள போறீங்களா? செய்ங்க..செய்யுங்க... டூ லேட்.. இருந்தாலும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்தான. ம் ம்.. சாகும்போது அய்யோ அத விட்டுட்டமே, இத விட்டுட்டுடமேன்னு டென்ஷன் இருக்ககூடாது பாருங்க. களவும் கற்று மற. (நான் சொல்லலீங்க..) :))

குப்பன்.யாஹூ said...

Drinks and smoke once should learn at adolescent age, else it will be boring.

Can you write a blog on your smoke habit too.

துபாய் ராஜா said...

எல்லாம் மனப்பிராந்தி... :))

Deekshanya said...

sema post! valakam pola ROTFL!
Happy new year Renga.

Porkodi (பொற்கொடி) said...

gummi thaane adikalame.. enna irukra kickla thala rendu kick utruvaaro nu oru gili irukka thaan seiyudhu :) arasiyalla idhellam sadharnamappa nu kalathula gudhika vendi thaan!

yaravadhu nalla budhi solluvainganu patha ellarum late entry nu solittu irukanga..! eksi? enaku oru doubt.. thala summanachum pilim ku soliruparo kudichen nu.. thala kudichen nu solradhum adhuku thangamanni okay sonnadhum enavo enaku nambikaiye vara matengudhu!

கால்கரி சிவா said...

//சில விஷயங்கள் தானா செய்யலாம். சில விஷயங்களுக்குக் குரு கடாக்க்ஷம் வேணும்.

அடுத்த முறை நான் லண்டன் வரும் பொழுது வெச்சுக்கலாம்!!//

குருவின் குரு கூட இருந்தால் இன்னும் விஷேசம்.

ஹூஸ்டன் பக்கம் வந்த வுடுங்கய்யா. விதவிதமா வைன் வச்சிருக்கேன்

ஆமா கால்கரி இப்போ ஹூஸ்டன் பக்கம் கரை ஒதுங்கிருக்கு

JustATravellingSoldier said...

tesco ல நன்னாரி சர்பத் ல offer போட்டிருந்தான்
அதுக்கு நம்ம ஊரு மாப்பிள்ளை விநாயகர் சர்பதே நல்ல இருக்குமே.

நீங்க Wine பக்கம் கரை ஒதுங்கனது லேந்தே தெரியுது அட்வைஸ் எல்லாம்
Lady Mary's கிட்ட வாங்கிருக்கீங்கன்னு.

நடக்கட்டும்
நடக்கட்டும் அன்னாரின் கடலைகள் பலவிதம் அதில் இதுவும் ஒரு விதம் போல.

ஆயில்யன் said...

(எப்பா ராசா வெளிக்கிழமையானா பாருக்கு கோலம் போட போகறியே //

:))) பயபுள்ளக்கிட்ட ரூட்டு மட்டும் கேட்டுக்கோங்க கோலம் போடறது எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிடவேண்டாம் :)’

ஆயில்யன் said...

//பொறுமை அதிகமாயிருக்கும் கலயாணமாகாத பேச்சிலர் பசங்களில்//

ஆஹா !

ஆயில்யன் said...

//நான் குடித்துவிட்டு ஏதாவது கோமாளிக் கூத்தடிப்பேன் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.//

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்னு தலையில பாட்டில் வைச்சுக்கிட்டு ஒரு டான்ஸ் இந்த செஷன்ல உண்டா இல்லியா?

ஆயில்யன் said...

//நட்பு வட்டத்துடன் அடித்த கோமாளிக் கூத்து தான் ரொம்ப ஜாலியாய் இருந்ததே //

என்ன்னோட அனுபவத்தில குடிச்சுட்டு கிடக்கிற ப்ரெண்ட்ஸ் சர்கிள்ல தனியா தைரியமா நின்னு வெளையாடலாம் பாஸ்! அதுவும் ரெண்டு பேருங்களுக்குள்ள கிண்டலா பழைய விசயங்களை கிளறி வுட்டு வர்ற சீன்கள கவனிக்க ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது :))))

ஆயில்யன் said...

//இலவசக்கொத்தனார் said...

சில விஷயங்கள் தானா செய்யலாம். சில விஷயங்களுக்குக் குரு கடாக்க்ஷம் வேணும்.

அடுத்த முறை நான் லண்டன் வரும் பொழுது வெச்சுக்கலாம்!!/


LOL :))))

ஆடுமாடு said...

எனக்கெல்லாம் தெனமும் கிக் வருது பாஸு. ஆனா, போதைதான் வரலை. போதை கிக்கா, கிக் போதையான்னு ஒரு போனை போட்டு சொல்லுங்களேன்.

வழக்கம்போல காமெடியில கலக்கியிருக்கீங்க>

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

SUBBU said...

அடிக்கிர சரக்கு அடிச்சா கிக்கு தானா வரும்!!

hv jn4 rnfvju hn fjmv nvtrngjv cftmgkivj mt said...

Dubukka anna, idhu verum karpanai kadhainu ninaikiren. Yenna neenga romba nallavaru.

Anonymous said...

suuuuuuper inititative! kallidaikurichikaaranga yaarkittayaavathu ketta alaga solluvaangaley! avangathaan athula kinguuuu!

Poolisamiyar

சிங்கக்குட்டி said...

சும்மா என்ன கேட்டு இருந்தா கலக்கி இருக்கலாம், என்னா போங்க :-)

balutanjore said...

enne sir idu
namba mudiyaliye
naanga thanjavurkara vaarathukku
oru naal mattum konjam ethipom
chumma relaxationthane
aana non veg mattum never

anyway thank you for writing

inime ambai sujata solla matten

balasubramanyan vellore

Thiyagarajan said...

lol :)

Mahesh said...

தேவையா இதெல்லாம்? எதோ ஒரு குறும் படம் எடுத்தமா மக்களுக்கு பேதி குடுத்தோமான்னு இல்லாம? படத்தை ரிலீஸ் பண்ணுப்பா...

மருவாதையா நம்ம கடைக்கு வந்து விட்டுப்போன பதிவெல்லாம் படிச்சுடுங்க... கிக்கு போதை ஹேங் ஓவர் எல்லாம் வரும். :)))))))))))))))))))))))

Unknown said...

// அதுவும் சரிதான் நாம ஏற்கனவெ ரொம்ப பெரிய ரவுடி இதுல சரக்கு உள்ள போச்சுன்னா அப்புறம் எவன் அடிச்சான்னு கூட சொல்லத் தெரியாதுன்னு தலையாட்டிவிட்டேன்.//

//ஒரு வேளை உங்களுக்கு தெரியாம அல்ரெடி கிக்கு ஏறியிருக்கும்...மாடிப் படில ஏறிப் பாருங்க...ஸ்டெடியா இல்லைன்னா தெரிஞ்சிடும்"ன்னு தஙகமணி சொன்ன போது ஏதோ ஹிட்டன் அஜென்டா இருக்கும் என்று உள்மனசு சொன்னாலும் ஏறித் தான் பார்ப்போமே கழுதை ஸ்டெடியா இருகோமான்னு தெரிஞ்சிடப் போகுதுன்னு ஏறியதில்,அபடியே அங்க உணர்த்தி இருக்கும் நைட் டெரெஸ்ஸை எடுத்துக் கொண்டும் வரும் ஆர்டர் தேறியது தான் மிச்சமே தவிர கிக்கு ஒன்னும் ஏறியது மாதிரி தெரியவில்லை//

ROTL...Trademark Dubukku punch....

Veera said...

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் பில்லா-ல I am back- ன்னு சொன்ன மாதிரி dubukku is back with a bang...

"என்னங்க ஏதாவது ஏறிச்சா"ன்னு தங்கமணி வேற கார்பரேஷன் தண்ணி டேங்கில் ஏறியாச்சா தொனியில் அடிக்கடி வினவிக்கொண்டிருந்தார்.

அதிலும் நட்பு வட்டத்துடன் அடித்த கோமாளிக் கூத்து தான் ரொம்ப ஜாலியாய் இருந்ததே தவிர கிக்கு ஒன்னும் அப்படி ரொம்ப சொல்லிக்கிற மாதிரி இல்லை.

அந்த கோமாளிக் கூத்துக்கு தான் அந்த கிக்கே...மத்த நேரத்துல சும்மா பேசவே சிவாஜி ரஜினி மாதிரி டேய் மாமா அந்த window- வை close பண்ணு ... I am feeling very shy you know- ன்னு சொல்ற பசங்க கிக் ஏறினதுக்கு அப்புறம் நீங்க சொல்றாப்புல மீனா மாதிரி அவனுங்களே ஆடுவானுங்க...

By age I am very YOUNGER to you.... But my advice as a senior in தீர்த்தவாரி is never try drinking alone... if u r with friends, then u will enjoy it.......

அபி அப்பா said...

ஒயினை விட டுபுக்கார் பதிவு தான் சூப்பர் கிக்.

உம்மை அடிச்சுக்க ஆள் கிடையாதுய்யா காமடி பதிவிலே!!!

Dubukku said...

ஸ்ரீராம்- வாங்க பதிவு போட்ட அடுத்த நிமிஷமே பார்த்துட்டீங்க..நான் அந்த கமெண்டுக்கெல்லாம் பதில் அடிச்சிக்கிட்டு இருக்கும் போதே இங்க் வந்து திட்டு விழுந்தாச்சு..வருஷத்த அமோகமா போணி பண்ணிருக்கீங்கண்ணே....எப்பிடீங்க இதெல்லாம்.......:))

பொற்கொடி - அதான் அதேதான் அது பெரிய விஷயமில்லைன்னு சொல்றதுக்காகவும் நீங்கள்லாம் அட்வைஸ் பண்ணனுங்கிறதுக்காகவும் தான் இத்தனை வருஷத்துக்கப்புறம் ..:)) இமேஜா ..அப்படி ஒன்னு இருக்கா என்ன...அப்பாடா அப்படி ஒருவேளை எதாவது இருந்தா அதை அடிச்சி உடைச்சிருக்கும் இந்த பதிவு :))

கொத்ஸ்- ஆங் ஆங கண்டிப்பா லாம் லாம் லாம் :))

அரகப்பெருமாள்- வாங்க டாக்டர் சார்....தெரியாம போச்சே...உங்க பேர பார்த்து ஏமாந்துட்டேனே... :)))

அரசு - வோட்கா 200மில்லியா...ஆஅ அதெல்லாம் 25மில்லி தான் போடலாம்ன்னு இங்க ஒரு டாக்டர் சொன்னாரே...சிலபஸ் மாத்திட்டாங்களா :))

கிழக்கு நண்பர்கள்- ஆஹா மேடம்....கலக்கறீங்க...அடுத்த தரம் சந்திக்கும் போது குறிப்பு வாங்கிக்கறேன்...:)))

பட்டாபட்டி - வர வர எல்லாரும் அன்புடன்னு கையெழுத்து போட்டுட்டு மிரட்டு மிரட்டு "அன்போட" மிரட்டறீங்க :)))) அதுலயும் பாஸ்டன் ஸ்ரீராம் இருக்காரே...என்றும் அன்புடன் தான் :)))))))))))) (சும்மா டமாசு டமாசு ) :))

அம்பிகா - ரொம்ப டேங்கஸ் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள்.

ராம்ஸ் - உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள் மாமே..நியூ இயர் கும்மியா...ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

அறிவிலி - ஹேப்பி நியூ இயர். ஆஹா நீங்களுமா...சரி ரைட்டு...ஏ.ஆர்.ரஹமான் மாதிரி உலகமெல்லாம் பறந்து போய் கச்சேரி போட்டுட்டா போச்சு :))

விஜய் - ஆமா கொஞ்சம் லேட்டு தான் ...)))) //சாகும்போது அய்யோ அத விட்டுட்டமே, இத விட்டுட்டுடமேன்னு டென்ஷன் இருக்ககூடாது பாருங்க. // ரொம்ப கரீகட்டா சொன்னீங்க...

குப்பன் - ஆமாங்க...ரொம்ப லேட்...சும்மா ஒன்னும் ஏறாமலயே வீட்டுல அடிச்ச கலாட்டா இருக்கே ..
ஸ்மோக்கிங் பழக்கம் இல்லீங்கோவ்...அதை ஆரம்பிக்கிற மாதிரி இல்ல :)))

துபாய் ராஜா - அதே அதே

தீக்க்ஷன்யா - புது வருட வாழ்த்துகள். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

பொற்கொடி - //தல ரென்டு கிக்கு விட்டுருவாரோன்னு ஒரு கிலி இருக்கத்தான் செய்யுது :) // -ஆகா இந்த பயம் இருக்க்கா...இத நோட் பண்ணாம விட்டுட்டேனே...யேய் யாருப்பா அங்க...டேய் எவன்டா அங்க சவுண்டு விடுறது ....ஆங:)))

கால்கரி சிவா - ஓ கண்டுடிப்பா...குருவோட குரு,,,அவரோட குருன்னு கச்சேரி மாநாடு மாதிரி ஆகிடும் போல இருக்கே :)))

ட்ராவலிங் சோல்ஜர் - // நடக்கட்டும்
நடக்கட்டும் அன்னாரின் கடலைகள் பலவிதம் அதில் இதுவும் ஒரு விதம் போல.// யோவ் நீங்க பாட்டுக்கு போற போக்குல நாட்டு வெடிகுண்ட வீச்சிட்டு போறீங்களெய்யா...நியாயமா நான் ஏதோ சமத்தா வைன் டேஸ்ட் பண்ணவே இப்பத் தான் பெர்மிட் வாங்கி வைச்சிருக்கேன்...ஏதோ பார்த்து செய்யுங்க தல :))))

ஆயில்யன் - அண்ணாச்சி நான் சொன்னது நீங்க சொன்ன ரூட்டு மட்டும் தான் ...:)))) கமெண்டு வள்ளலே...அந்த பழைய மேட்டரை கிளறி விட்டு வேடிக்கை பார்க்கிறதுக்கு எங்க வீட்டுல ரெம்ப ட்ரை பண்ணினாக...எனக்கு கிக்கு ஏறாததல வொர்க் அவுட் ஆகலை :))

ஆடுமாடு - //போதை கிக்கா, கிக் போதையான்னு// அண்ணாச்சி கல்யாணமானாலே இப்படி தான் டவுட்டு வந்துக்கிட்டே இருக்கும். போன போட்டுட்டா போச்சி :))

சுப்பு - இப்படி தான் நிறைய பேர் சொன்னாக...:))

மதுரம் - ஆஹா நீங்க என்னை வைச்சு காமெடி பண்றீங்கன்னு தெரியுது ஒரு வேளை இப்படி எல்லாம் என்னைப் பத்தி நீங்க பேட் இமேஜ் வைச்சிருந்தீங்கன்னா...உடைச்சு எறிஞ்சிடுங்க அதை :))

Dubukku said...

போலிசாமியார் - அதான் தெரியுமே கேப்பமாரித்தனத்துல உங்க ஊர்காரங்கள்ல்லாம் கிக்குங்ன்னு....டேய் நல்லவனே..இதுல நான் என்ன கூத்தடிச்சேன்னு தங்கமணிக்கு வேற மெயில் அடிச்சு டீட்டெயிலு கேக்கிறியாம்...நீங்க அங்கன அடிக்கிற கூத்தை வூட்டுல போட்டுக்குடுக்கவா :)))))

சிங்கக்குட்டி - எத சோடவையா??...:)))) நானே இந்த தரம் முக்காடு போட்டு ஊத்திக்கினு இருந்தேன். அடுத்ததரம் கண்டிப்பா கேட்டுடுவோம்:)))

பாலசுப்ரமணியன் - ஆமா தஞ்சாவூர் போறதுக்கு எதுக்குங்க ரிலாக்ஸேஷன்?...அதென்ன ரிசார்ட்டா?? நல்லாத் தான் காரணம் கண்டுபிடிச்சி வைச்சிருக்கீங்க...இந்த ஐடியா கூட நல்லா இருக்கு. :)))))

தியாகராஜன் - :))

மகேஷ் - இதோ உங்க பக்கத்துக்கும் வந்துடறேன் பாஸ்....குறும்படம் மாதிரி பெரிய பெரிய தப்பெல்லாம் பண்ணியாச்சு இந்த மாதிரி சின்ன தப்பையும் பண்ணிடுவோம்ன்னு நினைச்சு அடிச்சிட்டேன் :)))

சபரிநாத் - மிக்க நன்றி ஹை :))

வீரா - வாங்க யூத்து..நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்...தனியா அடிக்கறத விட ப்ரெண்ட்ஸோட அடிக்கிறது தான் கலாட்டாவா இருக்கு... :)))

அபி அப்பா - வாங்க டேடி எப்படி இருக்கீங்க. ஹையோ நீங்க வேற புகழ்ந்துகிட்டு...மிக்க நன்றி ஹை. அபி, நட்ராஜ் மற்றும் தங்கமணி எல்லாரும் நலம் தானே.

shrek said...

தலைவா லேட் ஆனாலும் நீங்க லேட்டஸ்ட் தல...விடமாட்டோம்ல

பொட்ட புள்ளைங்க குடிக்கரதெல்லாம் நமக்கெதுக்கு தல (வைன்-அ சொன்னென்) - அட்லீஸ்ட் 3 க்ளாஸ் (அல்மோஸ்ட் 1/2 போட்டல்) அடிச்சா தான் கிக் வரும்.

அட்லீஸ்ட் வோட்கா+லெமனேய்ட் டிரை பண்ணுங்க (இது கூட பொட்ட புள்ளைங்க போர்டெர்-ல தான் கீது- இருந்தாலும் அஜிஸ் பண்ணிகலாம்)

இல்லீனா (இலியானா இல்லைங்க)ராயிலா, ரீஜென்டா, ஜென்டில்மேனா
ரம்+கோக்
ஸ்காட்ச்+கோக்
பர்பன்+கோக் காம்பினேஷனுக்கு வாங்க.

இன்னும் மேன்லியா, லோக்கலா வேணும்-ன நாளஞ்ஜி(4,5) பீர் போட்டு தாக்குங்க

வூட்ல சொல்லிட்டு, வூட்லயே வூடு கட்ற பாரு அங்க தான் தல நீ நிற்கிற.. தல போல வருமா

ஷோக்கா எழுதினு கீர தல படிச்கி படிச்கி ஒரே சிப்பு சிப்பா வந்திச்சி

//ஒரு வேளை சோடா கலக்கனுமோ//
என்னது வைன்-ல சோடா கலக்கனுமா? ஆஹா, நல்லவேள எதுல கிக் ஜாஸ்தி, வைன்-லயா? சோடாவுலயானு? கேக்காம விட்டியே.

எப்புவுமே நீ தான் தல காமிடில கிங்

(குரு)சிஷ்யன்

Girl of Destiny said...

Trademark Dubukku!! Super :-)

Balaji S Rajan said...

Dubukku,

Read it once and enjoyed to the core. Read it again for the family and everyone enjoyed it. Half way through my son ensured whether it was by you, and started laughing.
Kick comes naturally while reading your post....

Well written... Very humourous.

shubakutty said...

ஹா ஹா ஹா. ஜோர் ஜோர். ரொம்ப சூபெர்.

shubakutty said...

நீங்கள் திரும்பவும் எழுத ஆரம்பிதது ரொம்ப மகிழச்சி.

Anonymous said...

Dear Dubukku.....

Nice post...Really Enjoyed....

Kannan said...

சிரித்து சிறிது வயிறு புண்ணாகிவிட்டது!!!. அடுத்த வாரம் அங்க தான் வர்றேன். கவுத்திபுடுறேன்.

Post a Comment

Related Posts