Monday, June 02, 2008

சென்னை வலை மக்கள் சந்திப்பு

இதுவரை தொடர்பு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. சென்னை சந்திப்பு - ஜூன் 7ம் தேதி சனிக்கிழமை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள சிட்டி சென்டரில் உள்ள ஃபுட் கோர்ட் அருகில் சந்திக்கலாம் என்று முடிவாகியிருக்கிறது. மாலை 5:30 முதலிலிருந்து எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் நீடிக்கலாம். ஒருவேளை அங்கிருந்து நகர்வலம் புறப்பட்டு வேறு எங்கயேயாவது போய் மனு குடுக்கவேண்டும் என்று முடிவானாலும் ஓக்கே.

புதுமுக நடிகைகளில் யாரு இப்போ நம்பர் ஒன், கிரிக்கெட்டில் சென்னை ஏன் மண்ணை கவ்வியது, அரசல் புரசலாயிருந்த அந்த விஷயம் இப்போ வெளியில் எல்லாருக்கும் தெரிந்துவிட்டதாமே, பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு போட்டி வைத்து அவார்டு குடுக்கலாமா, நடுவராய் யாரைப் போடலாம், சினிமா கிசுகிசுக்கள் இப்போது ரொம்ப பிசுபிசின்றனவே ஏன் இப்படி போன்ற அறிவார்ந்த விவாதங்களை புட் கோர்ட்டிலோ சங்கீதா ரெஸ்டாரண்டிலோ எதாவது மேய்ந்து கொண்டே விவாதிக்கலாம் என்று முடிவாகியிருக்கிறது. பில் குடுக்கும் போது ஏதாவது கால் வருகிற மாதிரி செட்டப் செய்திருக்கிறேன்.

நீங்கள் வருவதாய் இருந்தால் எனக்கு r_ramn அட் yahoo டாட் com - ஈ.மெயிலில் தெரிவிக்கவும். இதுவரை பாபா, டோண்டு, கதிர், சுதா, தீக்க்ஷண்யா, குரு, நிஷா, ஜோதிவேல் மூர்த்தி, உண்மைத் தமிழன், நித்யா வருவதாக கூறியிருக்கிறார்கள் (இன்னும் சிலர் ஈ.மெயில் கன்பர்மேஷன் பெண்டிங்)

ஈமெயில் தெரிவித்து விட்டுத் தான் வரவேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. வரமுடிந்தால் ஜாலியாக வாருங்கள், ஏதோ ஒரு சாதுவுக்கு ரெண்டு போண்டா வாங்கிக் கொடுத்த புண்யம் உங்களுக்கு கிடைக்கும்.

17 comments:

Anonymous said...

//ஏதோ ஒரு சாதுவுக்கு ரெண்டு போண்டா வாங்கிக் கொடுத்த புண்யம் உங்களுக்கு கிடைக்கும்//

இப்படி எல்லாரும் போண்டா வாங்கி குடுத்தா என்ன ஆகும்? உங்களை கிள்ளினா ரத்தம் வராது, சாம்பார்தான் ஒழுகும், சாக்கிரதை :-)

Sumathi. said...

ஹாய் டுபுக்ஸ்,


ம்ம்ம், சாது? நீங்களா?
சரி சரி இப்போ உங்களுக்கு போண்டா சாப்பிட ஆசை வந்துடுத்து, சரி நடத்துங்க குருவே, என்ன என்னாலத்தான் வர முடியலை, அத்வும் போண்டா சாப்பிட, நீங்க வாங்கிகுடுக்கற அந்த ஸ்பெஷல் போண்டா, எனக்கு குடுப்பனை இல்லை, அவ்ளோதான். எனக்கும் சேர்த்து எங்க தலைவி சாப்டுவாங்க.
சரி, மீட்டிங் முடுஞ்சதுக்கு அப்பரம சொல்லுங்க யாரு போண்டாக்கு பில் குடுத்தது? அப்ப நீங்க யாரோட பேசிட்டு இருந்தீங்க? (நான் அப்போ கூப்பிட மாட்டேன் பா) இப்படி எல்லா விவரமும் போடுங்க சரியா.

Anonymous said...

bill kiudukurathu prachanaya?ottapanthayam vachi mudivu pannitalam.eppdi.
-isthripotti

உமா said...

இவ்ளோ தூரம் போண்டா சாப்பிட்டரத்துக்குண்னே வாராங்கப்பா?

Vijay said...

இன்னாபா, போன வாரம் பார்க்கசொல சொல்லவே இல்லையே :)

Simulation said...

உங்களையும் மற்ற வலைப்பதிவர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

- சிமுலேஷன்

KRTY said...

மன்னிக்கவும்.
பீச்சாங்கரையில் சுண்டல்தான் கிடைத்தது.

அதுவும் சிட்டி சென்டரில் போண்டா கேட்பது, பண்ணாரியம்மன் கோயிலில் மடோனா பாட்டு கேட்பதற்குச் சமம்.

sugumaran said...

இபோதான் பார்த்தேன் அடுத்தமுறை எப்போ போண்டா சாப்பிட வரிங்க ?
அன்புடன்,
எ.சுகுமாரன்
amirthamintl@gmail.com

jebas said...

hi, friends..

http:/www.jebamail.blogspot.com

this is my blog...

pls visit..

and keep touch with me.....

வள்ளி நாயகம் said...

என்னங்க அண்ணாச்சி இன்னும் லீவு முடியலியா. சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.

Subhashree said...

Why delay in posting the next post? Thangamani kovamaa irukkaangala? Engalallam neenga mattum meet pannineengannu?

Syam said...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....

இது எனக்கு சொல்லிகிட்டது...சென்னைல தான் இருக்கேன்...ஆனா இப்போ தான் இந்த போஸ்ட் பார்த்தேன்... :-(

ram anand said...

very interesting.



by:
ramanandtamil.blogspot.com & ilakkianesavu.blogspot.com

Anonymous said...

யோவ்...போண்டாலாம் ஊசி போயிருக்கும்...எவ்ளோ நாளாச்சு...சட்டுபுட்டுனு அடுத்த வேலைய ஆரம்பிக்கிறது.

Subhashree said...

What happened? No updates... All well at home front?

Krishnan said...

What is happening ? Been visiting your blog daily and trifle disappointed. Hope all is well.

Dubukku said...

கமெண்டிட்ட அனைவருக்கும் விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றி. வழக்கம் போல் அடுத்த பதிவிலிருந்து தனி பதில் போடுகிறேன்...கோச்சுக்கிடாதீங்க

Post a Comment

Related Posts