Sunday, March 16, 2008

தமிழ்மண வாரம் - நன்றி

ஓடியே போச்சு தமிழ்மண வாரம். என்னென்னமோ நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இந்த ஒரு வாரமும் எனக்கு டி.பி.கஜேதிரன், வீ.சேகர் பட க்ளைமாக்ஸ் மாதிரி தான் இருந்தது. அதாவது எல்லாப் பக்கத்திலிருந்தும் ப்ரஷர் மற்றும் பிரச்சனை. இதில் தினமும் ஒரு பதிவு என்ற நிர்பந்தமும் ஒட்டிக் கொண்டது. அது என்னம்மோ தெரியவில்லை இந்த மாதிரி சன்மானங்கள் வரும் போது வேறு மன அழுத்தங்களும் சேர்ந்து கொண்டு ரொம்பவே சொதப்புகிறேன். சாயங்காலம் ஏழு/எட்டு மணிக்கு ஒரு மணி நேர தூக்கம் போட்டுவிட்டு ராத்திரி இரண்டு மணி வரை முழித்து நிர்பந்தத்தில் போடும் போஸ்ட் திருப்தியாகவே இல்லை. உங்களுக்கும் அவ்வாறே இருந்திருக்கலாம். உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்து அதில் ஏமாற்றியிருந்தால் வருந்துகிறேன். இந்த தினமும் ஒரு பதிவு நிர்பந்தம் மட்டும் இல்லாதிருந்தால் இந்த வாரம் பந்திந்தவைகளில் முக்கால்வாசி பதிவுகளை பப்ளிஷ் செய்துஇருக்கமாட்டேன்.எனக்கு அவற்றில் முக்கால் வாசி பதிவுகள் மனதுக்கு நிறைவே இல்லை. நான் பெரிய இவன் என்ற தொனியில் இதையெல்லாம் சொல்லவில்லை, என்னுடைய க்ரியேட்டிவிட்டி டைம் பிரஷ்ஷரில் வேலை செய்ய திறமையில்லாது என்பதை மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். இந்த நிதமும் ஒரு பதிவு என்பது தமிழ்மண ஆங்கிளில் நூற் சதவீதம் சரியானது. நான் அதைக் குற்றம் சொல்ல்வே இல்லை. என்னுடைய திறமை அதில் பல்லிளித்தது என்பதை சுட்டிக் காடுகிறேன். இந்த புரிதலோடு, இனிமேல் இந்த மாதிரி பொறுப்புகள் ஏற்றுக்கொள்வதை ஜாக்கிரைதையாகக் கையாளவேண்டும் என்ற படிப்பினை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது சொதபல்களுக்கு இடையிலும் பாராட்டி என்னை ஊக்குவித்த உங்கள் அத்தனை பேருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தமிழ்மணம் நட்சத்திரம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.(நான் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்). எனக்கும் இந்த வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்துக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்மணம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்!!

19 comments:

யாத்ரீகன் said...

:-) ஒரு வெரைட்டி இல்லாதது கொஞ்சம் ஆச்சரியமாவே இருந்தது .. ஆனா உங்க டைரடக்டர் பதிவுகள் கட்டாயம் இரசித்தேன்.... :-) பலருக்கு அறிமுகமாகாத புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவதும் நட்ச்சத்திரத்தின் ஒரு பயன் .. இனி வழக்கம் போல சாக்கு போக்கோட நிறைய பதிய .. அந்த மலையாள பகவதி ஆசிர்வதிப்பாளாக ..

ILA (a) இளா said...

ஒரு குறும்படம் போதுமே, 7 நாளைக்கும் கேட்கும்

Anonymous said...

தமிழ்மணம் நட்சத்திரத்துக்கு பொதுவா ஒரு மாசம் முன்னாடியே சொல்லிடுவாங்களே? உங்களுக்கு அப்படி அவகாசம் கொடுக்கலையோ?

கோவி.கண்ணன் said...

//உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்து அதில் ஏமாற்றியிருந்தால் வருந்துகிறேன்.//

அதெல்லாம் இல்லைங்க, உங்கள் நடையும் எழுதும் பொருளும் மாறுபாடான இடுகைகளைத் தந்தது.

பாராட்டுக்கள் !

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் டுபுக்கு, கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனா இந்த மாதிரி நிர்பந்தங்களோட எழுதறது சிரமம்தான். அது மட்டுமில்லாம எழுதி ஸ்டாக் வெச்சுக்கிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணும் பழக்கமெல்லாம் இல்லாததுனால நமக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரமம் இல்லையா.
போகட்டும் வழக்கம் போல பட்டையைக் கிளப்புங்க.

பினாத்தல் சுரேஷ் said...

நிச்சயமா எனக்கு மனநிறைவு அளிக்கவில்லை டுபுக்கு. அந்த குறும்படம் தவிர வேறெதுமே இல்லாதது போல ஒரு தோற்றம்.

ஆனா, இது ஜகஜம்தான். சீக்கிரமா வாங்க வெரைட்டியோட.

மங்களூர் சிவா said...

நிர்பந்தங்களோட எழுதறது சிரமம்தான். குறும்படம் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Ramya Ramani said...

Dubukku Sir,

Ungaloda blogah recentah than padikka arambichen infact solla pona naan blog pannave 2008ahla dhan start pannen.. Unga bloga enakku evalo pidichirundhunna rende varathula unga archives ellathayum padichiten!!

Infact unga Preganancy blog ennoda friends ellarukkum anupinen. andha short film ennoda chatla irundha makkal ellarukkum send panniten..ennoda favorites videosahvum add pannirukken orkutlana parthukkonga...all ur posts this week were really good.

They say it just takes 8 muscles to smile but it is one of the best exercises! Adhu evalo unmainnu unga blog partha udane purijudhu..Hats Off!

Edho unga blog padicha influenceoh ennamo naan ippa recentah oru post potten..konjam comedyah podalamennu.. if u get time please visit my blog!

BTW andha website ennala decipher panna mudiyala.. i cud understand only http://www.j??

கிருஷ்ணா said...

Anna unga posts ellam regulara padikiren. but last week konjam yeamatram than. anyhow the short film is fine. i read all ur blogs atleast 5 times. i ask all my friends to visit ur blog.v r all the fans of Sujatha. ur " Naama davarum Kaipidi sundaluum" and " Jolly thirinda Kaalam" remains his style.

Sri Rangathu Davathigal padikkum podhu enngalukku enga school days niyabagathuku varum. unga blogs padikkum pothum appadithan irrundadhu.

ambi said...

கரக்ட்டா சுண்டல் குடுக்கும் போது வந்துட்டேனே.
அண்ணே! குறும்படம் நல்லா இருந்தது. (காய்ச்சல் இருந்ததால் கமண்ட் போட முடியலை.)

கொஞ்சம் வெரைட்டி கிடைக்கும்னு நினைத்தேன். ஆனா படம் எல்லாத்தையும் தூக்கி சாப்டுடுச்சு. :))

Anonymous said...

dubukku sir, engala poruta varaiyulum nanraaga irundhudhu.may be unga master stroke illanu sollalam.time pressures ennikume nammaloda best konduvarathuku thadai thhan,but for the people who always excel,best is yet to come thhhanu solvanga.sachinukku solra madhiri,form is temporary,class is permanent.you have always tried to emulate and do justice to your posts.the best is yet to come...........nivi.

Anonymous said...

Dubukku

Why don't you try a comical Science Fiction. I now see the pattern in your subject is getting Monotonous. Think differently write a lot of varieties. Good luck

Unknown said...

Good work done! Natchathiram Oli veesivittu thaan poiyirukirathu!

VaazthukkaL!


- Anand

Anonymous said...

athelllam ok...unga sujatha va pathi oru vaartha kooda neenga innum sollalayae...i immediately thought of u on hearing the news...

Anonymous said...

ஒரு வாரம் தொடர்ந்து ப்ளாக்கற அறிவிப்ப பாத்த ஒடனே நெனச்சேன்....பின்னாடி ஏதோ எஸ் இருக்குன்னு.. ஒரு மாசம் ஒன்னும் போடாம ஒப்பேத்தற ப்ளானா என்ன ?

Dubukku said...

யாத்திரீகன் - வாங்கண்ணே ரொம்ப நன்றி. ஆமாம் நிறைய நினைத்திருந்தேன் புஸ்ஸூன்னு போச்சு...நம்ம ராசி அப்பிடி :)) நீங்க ஆசிர்வாதம் பண்ணின முஹூர்த்தம் சாக்கு போக்கு இல்லாமலேயே கொஞ்ச நாளா அப்பீட்டு :))) (இல்லாட்ட மட்டும் இங்கன்னு முனங்காதீங்க :))

இளா - ரொம்ப் நன்றி அண்ணே ஹீ ஹீ உங்க பேச்சை நம்பி கொஞ்ச நாள் எஸ்ஸாகிட்டேன் ;P

அனானி - அவங்க கரெக்ட்டா அவகாசம் குடுத்தாங்க...நான் தான் வரட்டும் பார்க்கலாம்ன்னு கோட்டை விட்டுட்டேன் :)))

கோவி.கண்ணன் - வாங்க உங்க ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

கொத்ஸ் - அதே அதே எழுதி ஸ்டாக் வைக்க ஏனோ பிடிக்க மாட்டேங்குது. அதெல்லாம் சூட்டோட சூடா போஸ்ட் பண்ணினா தான் பிடிக்குது ..பாராட்டுக்கு நன்றிங்கோவ்.

பினாத்தலார் - ஆமாங்க அது தான் உண்மையும்கூட. இங்க பல்வேறு பிரச்சனைகளினால் கொஞம் மன அழுத்தம் வேற. மனசு ப்ரீயா இருந்தாத் தான் போஸ்ட் போட முடியுது

மங்களூர் சிவா - ரொமப் கரெக்ட்டுங்க உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சார்.

ரம்யா - மிக்க நன்றிங்க...உங்க பாராட்டு ரொம்ப தெம்பா இருக்கு. ஏகப்பட்ட மார்க்கெட்டிங்க் பீஸ் குடுக்கனும் போல இருக்கே உங்களுக்கு. ரொம்ப ரொம்ப நன்றிங்க. உங்க ப்ளாக்கும் இதோ வந்துக்கிட்டே இருக்கேன். அந்த சைட் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm மன்னிச்சிக்கோங்க போன தரம் குழப்பிட்டேன்

Dubukku said...

கிருஷ்ணா - அடாடா உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிங்க. நீங்க என்னென்னமோ சொல்றீங்க அவரு எங்க நான் எங்க...இருந்தாலும் நீங்க சொன்னத படிக்கும் போது கிக்காத் தான் இருக்கு. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என் மனமார்த நன்றி

அம்பி - ஆமாம் நிறையவே சொதப்பிட்டேன். படம் பிடிச்சிருந்ததா மிஸ்ஸியம்மாக்கு காட்டியாச்சா?

நிவி - இந்த மாதிரி மொட்டிவேட்டிங் கமெண்ட் தான் சில சமயம் ஓட வைக்குது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்

திரிசங்கு - மிக்க நன்றி. நீங்க சொன்னதையும் முயற்சிக்கிறேன். கண்டிப்பாக வெரைட்டி டிரை செய்கிறேன்.

ஆன்.ஆனந்தகுமார் - மிக்க நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கு !! ஊக்கமாக இருக்கு

ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. எழுதனும்ன்னு நினைச்சேன் ஆனா நான் சொல்ல நிஅனைச்சதையெல்லாம் இங்க தமிழ்மணத்துல எல்லாரும் நிறைய சொல்லிட்டாங்க. அதான் விட்டுட்டேன். என் நினைவு உங்களுக்கு வந்து என் பாக்யம். மிக்க நன்றி.


இராமசந்திரன் ஹீ ஹீ வேலைங்க சொன்னா நம்புங்க..அத்தோட ப்ரஷர் வேற. செம *(மெண்டல்) டயர்டாகிவிட்டது

Anonymous said...

என்னை கிட்ட தட்ட அழவெச்ச படங்களில் இதுவும் ஒரு படம். (என்னை நல்லாவே அழவெச்ச படங்களும் சில இருக்கு)

Ramya Ramani said...

டுபுக்கு அண்ணா

எனக்கு மார்கெடிங் பீஸ் எல்லாம் வேண்டாம். போனா போரது! ;-)என்னோட ப்ளாகுக்கு வந்து காமென்ட் போடத்துக்கு நன்றி

Post a Comment

Related Posts