Tuesday, April 01, 2008

Life is Beautiful1999ல் வெளியான இத்தாலிய திரைப்படமான இந்தப் படத்தைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். கசின் வீட்டில் ஓசி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு சன் டீ.வியில் காம்பியரிங் செய்யும் பெண்கள் மட்டும் ஏன் கொஞ்சம் பூசின உடம்பாக குண்டாக இருக்கிறார்கள்...இங்க வந்ததுக்கப்புறம் தான் இப்படி ஆகிவிட்டார்களா இல்லை இப்படி இருந்தால் தான் காம்பியரிங்குக்கே எடுப்பார்களா என்று வருஷத்துக்கு சன் டிவிக்கு தண்டம் அழுவதைப் பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்த போது, Vita è bella, La (Life is Beautiful)ன் அருமை பெருமைகளை சொல்லி இந்த படம் கண்டிப்பாக பாருங்கள் அற்புதமான படம் என்று சைனாவிலிருந்து வாங்கிவந்த 7 இன் 1 (ஒரே டிஸ்கில் ஏழுபடம் ) ஓசி டி.விடி குடுத்து பஸ் செலவுக்கும் கைக்காசு குடுத்து அனுப்பினார்கள். படம் மிக அழுத்தமான படம் ஆனால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.

ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் எடுக்கும் மேற்படி படங்களில் எனக்கு அதீத ஈடுபாடு பெரிதாக கிடையாது. இருந்தாலும் இவ்வளவு சொல்கிறார்களே என்று ஒரு பின்னிரவில் டி.வி.டியைப் போட்டு மெனுவில் இந்தப் படத்தை ஓட்டினால் "ஓ.சி டிவி.டிக்கு உனக்கு Life is Beautiful ஒரு கேடான்னு வேறு ஏதோ ஒரு அரதப் படத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது" அந்த படத்தில் வேறு பத்து காட்சிகளுக்கு ஒன்றரை சீன் . என்னாடா நம்மாளு அழுத்தமான படம்ன்னு சொன்னாரே இதைத் தான் சொன்னாரான்னு எனக்கு சந்தேகம். சரி சீனெல்லாம் வேஸ்டாகவேண்டாமே என்று அந்த அரதப் படத்தையும் முழுசாகப் பார்த்து தொலைத்தேன்.

சமீபத்தில் மீண்டும் ஓசிக்கு இந்தப் படத்தின் ஒரிஜினல் டி.வி.டி ஆபிஸ் நண்பர் மூலமாக கிடைத்தது.(நல்ல படமெல்லாம் ஓசியில் பார்த்தால் தான் எனக்கு செமிக்கும்). இத்தாலி படம் இங்கிலீஸ் சப்டைட்டில்ஸோடு பார்த்தோம். இதற்கு மேல் கதைக் களம் பற்றிய ஸ்பாயிலர்ஸ் இருப்பதால் ரொம்ப மெனெக்கடுபவர்கள் அடுத்த வரியோடு நிப்பாட்டிக்கொள்ளலாம். சில படங்களுக்கு ஸ்பாயிலார்ஸே கிடையாது, முழுக் கதையைச் சொன்னாலும் பார்க்கும் அனுபவத்துக்கு சிறிதும் பங்கம் வராது, இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்தது. படத்தின் டைரக்டர் ராபர்ட்டோ தான் கதாநாயகனும் கூட. இந்த விஷயம் எனக்கு படம் பார்த்து முடித்த பிறகு தான் தெரிந்தது. பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் டைரக்டரின் "இது ஒரு எளிமையான கதை ஆனால் சொல்வதற்க்கு மிகவும் கஷ்டமான கதை" என்று சொல்வார். முற்றிலும் உண்மை.

நாயகன் ஒரு யூதர். மிகவும் வேடிக்கையான பேர்வழி. தனது நகைச்சுவை திறமையால் கதாநாயகியை கவர்ந்து கல்யாணம் செய்துகொண்டு ஒரு பையனை பெற்றுக்கொள்கிறார். இரண்டாம் உலகப் போரின் பிண்ணனியில் ஜெர்மனியர்களால் கைது செய்யப்பட்டு யூதர்களின் கேம்பில் குடும்பத்தோடு மாட்டிக் கொள்கிறார்கள். பையனுக்கு அந்த கேம்பின் விளைவுகளோ கொடுமையோ தெரியாமல் இருக்க திரும்பவும் தனது நகைச்சுவை திறனை கொண்டு அது ஒரு விளையாட்டு என்று நம்ப வைக்கிறார்.

படம் ஆரம்பிக்கும் வேகத்திலேயே டைரக்டர் மிகவும் கைதேர்ந்தவர் என்று புரிந்துவிடுகிறது. அவரே நாயகனாக புகுந்து விளையாடியிருக்கிறார். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் எழுத முடியாது படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். சப் டைட்டில்ஸ் உதவியோடு இவ்வளவு ரசிக்க முடிகிறதே இத்தாலிய மொழி தெரிந்திருந்தால் முழுதாக ரசித்திருக்கலாமே என்று தான் எனக்குத் தோன்றியது.

ராபர்டோ ஸ்க்ரீன் ப்ளேயை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார். படத்தில் போர்க் காட்சிகள் கிடையாது, அருவருக்க வைக்கும் துன்புறுத்தும் காட்சிகளோ, பிழியப் பிழிய அழவைக்கும் காட்சிகளோ எதுவும் கிடையாது. ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே நம்மை உறைந்து போக வைக்கிறார். இந்தப் படம் போரைப் பற்றியோ அல்லது யூத ஹோலோகாஸ்டைப் பற்றியதோ அல்ல. ஒரு குடும்பத்தின் இணக்கம் பற்றியது. ஒரு தந்தையின் உணர்வைப்பற்றியது. ஆனால் யூத ஹோலோகாஸ்டின் பிண்ணனியில் பின்னப் பட்டிருக்கும் இந்தக் கதை, படம் பார்த்த ஒரு வாரத்துக்காவது பார்ப்பவர்களைப் பாதிக்கும். படமெடுப்பவர்களுக்கு இந்தப் படத்தில் ஓவ்வொரு சீனிலும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.

சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள் அருமையான படம்.

32 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்போதே இந்தப் படத்தைப் பார்த்தேன். இன்றும் மனதை விட்டு நீங்காத படம். அப்போதே இந்த நாயகனுக்கு பிரான்சின் உயர் திரைப்பட விருது,கான் விருது எல்லாம் கொடுத்துச் சிறப்பித்தார்கள்.
தேசிய தொலைக்காட்சியில் இரவு செய்தியில் அவர் நேரடிப் பேட்டி ஒளிபரப்பி சிறப்பித்தார்கள்.(எல்லோருக்கும் இச் சிறப்புச் செய்வதில்லை)
அந்தப் பேட்டியில் அவர் தன் இத்தாலிய சாயல் பிரான்சு உச்சரிப்பினால் பிரன்சு மக்களை வயிறு குலுங்க வைத்தார்.
மிகத் திறமைசாலி.
கட்டாயம் பார்க்காதோர் இப்படத்தைப் பார்க்கலாம்.
அச் சிறுவனின் நடிப்பும் பிரமாதம்.

Anonymous said...

இதில் ஒரு காட்சியில் ராணுவ அதிகாரி சொல்வதை அப்பாவாக நடிப்பவர் மொழிபெயர்ப்பார் பாருங்கள. நகைச்சுவை என்று அதைத்தான் சொல்ல வேண்டும். அத்தனை சோகமான கதையை அருமையாக இயக்கிய இயக்குனருக்கு என்ன விருது தந்தால் தகும். மகனை ஒளிந்து கொள்ளச்செய்து காப்பாற்றி விட்டு, கடைசியில் நாசி வீரர்கள் தன்னை கொல்ல அழைத்துச்செல்லும் போது வீரநடை போடும் அப்பா கேரக்டர். வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம்.(நீங்க கொஞ்சம் லேட்டா இல்ல எந்த படம் பாத்திருக்கீங்க)

இலவசக்கொத்தனார் said...

ஆஸ்கார் எல்லாம் வாங்கின படம். அதுனால நாம பாக்கறது இல்லை. முதலில் பார்த்த படம் பேரு சொல்லவே இல்லையே!!

[ 'b u s p a s s' ] said...

one of the best movies i've seen. forrest gump, shawshank redemption, cindrella man, beautiful mind, good will hunting(?) may all fit into a common genre.

Radha Sriram said...

செம கலக்கல் படங்க இது......அத்தனையும் ஒரு விளையாட்டு போல அந்த பைய்யனை நினைக்க வைப்பார் அந்த அப்பா..ரொபெர்டோ பெனினியோட அடுத்த படம் 'பினோக்கியோ' செமையா ஊத்திகிச்சு ஏன்ன்னு தெரியல?!

துளசி கோபால் said...

இதே பெயரில் இன்னும் ஒரு அரதப் பழசுப் படம் எங்கிட்டே இருக்கு.
இது கலஹாரிக் காடுகளில் எடுத்தது. எல்லாரும் ரொம்பவே இயற்கையா ட்ரெஸ்ஸே இல்லாமல் நடிச்சிருப்பாங்க. கொஞ்சம்கூட ஆபாசமாவே இருக்காது. அதுவும் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சுபோன குழந்தை ஒண்ணு கடைசியில் அம்மாவைக் கண்டுபிடிக்கும்போது கண்ணுலே தண்ணீர் கட்டிக்கும் 'என்னைப்போன்ற' ரசிகர்களுக்கு.:-))))

Anonymous said...

I had a similar effect after seeing "The Beautiful mind".

ambi said...

//தனது நகைச்சுவை திறமையால் கதாநாயகியை கவர்ந்து கல்யாணம் செய்துகொண்டு ஒரு பையனை பெற்றுக்கொள்கிறார். //

ஒரு பையனா? இரண்டு பெண் குழந்தைகள்னு தானே நான் நினைச்சேன்? :P

Chakra said...

I watched this 'padam' abt 4 years back. I was so captivated that I played it again and again and again and again over the weekend.

Girl of Destiny said...

I saw the english version of this movie... And the impact was exactly the same!

//பிழியப் பிழிய அழவைக்கும் காட்சிகளோ எதுவும் கிடையாது//
who says so? :-(
when the little boy watches his dad being led away, through the slit in the box, I did exactly that.

Long time back, when you wrote the post on must-watch-movies, I was mentally compiling my own list - and this movie has a top place there!

Ananthoo said...

/இத்தாலிய மொழி தெரிந்திருந்தால் முழுதாக ரசித்திருக்கலாமே என்று தான் எனக்குத் தோன்றியது./
try an italian girl friend..all those who had (atleast one) learnt Italian so fast:-)

ok seriously,there is one old classic called 'il postino' (The Postman)..a fantastic one..pablo neruda is the main character and supposedly on a holiday (hiding from chile govt) in a remote village (ofcourse a fictional story)..the relationship he builds with a postman who brings all his post every day..the movie is a kavithai..try n see that!

Veera said...

மிகவும் அருமையான படம்...

//பிழியப் பிழிய அழவைக்கும் காட்சிகளோ எதுவும் கிடையாது//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... படம் முடியும்போது நான் அழுதுவிட்டேன்... நீங்க சொன்ன மாதிரி ஒரு வாரம் அந்த பாதிப்பு இருந்தது..

Anonymous said...

Climax-la "We Won... We Won.." -nnu andha sinna paiyan sollumbodhu kannula thanni kandippa varum!!!

-Arun.

kannan said...

It is one of the great movies of all times.It will be in the top ten movies in any movie list.A simple story,the dirctor's ability to convey in celluloid makes it a evergreen movie.
Above all,the movie's message lifts it to the top:
"LIFE IS BEAUTIFUL"
best wishes,
kannan
http://www.growing-self.blogspot.com

Aani Pidunganum said...

Hi dubuks,

Indha padam pathi vikatan-la padicha niyabagam. A good movie.

கிர்பால் said...

படத்தின் ஆரம்பத்தில் இருந்து சிரிப்பு, ஆச்சர்யம், அற்புதம் என்று ரசித்துக் கொண்டே வந்தவன் கடைசி இரண்டு நிமிடங்களில் அழுது விட்டேன். அருமையான படம்!!! (நான் படத்தின் ஆங்கில மொழியாக்கத்தைப் பார்த்தேன்)

Kuzhambi said...

Romba arumiyana padam. Neenga ippo than parthaen sonnathu konjum namba mudiyalai.......

Going by your blogs and sense of humor, I thought you would have seen it earlier...any way better late than never...

Deepa Gowtham's said...

Hello dubukku sir, google searchil edhayo thedumbo, unga blogspottil tharcheyalaa paakka nerndhadhu... Kadavuley kittathatta rendu naala naan unga bloglaye thaan irukkein. Oru vazhiya 2007 posts, padichittein, inimettum comment podalainaa nallaarukkaadhunu thaan intha comments.. Ur blog is just mindblowing. Unga chinna ponnu advika romba azhagu, kannu patrukkum, suthi podunga pls. Ungala intha alavukku ookkuvikkara unga thangamanikkum hats off.

Anonymous said...

சார்,இந்த படத்தை நான் பல வருடங்களுக்கு முன்பு பார்த்தேன்.குடும்ப சகிதமாக நாங்கள் எல்லோரும் பிழிய பிழிய அழுதோம் (லைட் அணைத்துவிட்டு ).கிட்டதட்ட அந்த படம் ரிலீஸ் ஆன வருடம் சுமார் 6 விருதுகள் வாங்கிய ஒரே படம் இது என்று நினைவிருக்கிறது.திரைக்கதை,படமாக்கம்,வசனம்,நடிப்பு என்று எல்லா அவார்டும் வாங்கிய ஒரு மிக மிக அற்புதமான ஒரு படைப்பு.நம் கமல் கூட இது போல ஒரு படம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

E.H said...

this movies is in my personal top ten list.

free time kedacha...

intha padathayum parunga

Grave of the Fireflies

Anonymous said...

hey please help which tamil font should I use to read the blog

- Muthu Kumar

Devilish Angel said...

Seems to be a nice film...

Murali said...

Hello Dubuks

Thanks for introducing me to this film. I have not seen it yet. Have added to my netflix list :)

Murali
KS, USA

Anonymous said...

என்னை பாதித்த பல படங்களில் மிகவும் பாதித்த சில படங்களில் இதுவும் ஒன்று. க்ளைமேக்சில் நிஜமாகவே கண்கள் மங்கலாக, நெஞ்சும் தொண்டையும் அடைத்தது. முடிந்தால் Sean Penn நடித்து Jessie Nelson Direct செய்த I Am Sam (2001) பார்க்கவும்.

Trailer link : http://www.youtube.com/watch?v=EROTbDCr5ag

விமரிசனம் எளிமை...அருமை.

Anonymous said...

ஆர்வ்த்தில் கேட்கிறேன். முடிவில் அப்பா மகன் இருவ்ருக்கும் ஒன்றும் ஆகாது அல்லவா?

Anonymous said...

i have not seen the film.nalla cinemavai arimugam seiyyum ungal muyarchi thodarattum.sila samayam nalla puthagatahiyum,padathaiyum pparka padikka vaipillamal poividukirathu.thanks.
nivi.

Anonymous said...

as i was suffreing from fever......
sorry. unga padam parthom. PASANGA super.music eppadi pidichinga. really nice
-isthri potti

VV said...

I saw this movie some 3 years back... after recommendation from some people...

Awesome movies...

What is it thats lost when you speak?
awesome one...

KRP said...

பார்த்துருவோம்....

அன்புடன்
கே ஆர் பி

http://visitmiletus.blogspot.com/

Anonymous said...

indha padathoda ending unforgettable.


samee bathula naan rasithadhu
THE DEPARTED.. goram, vulgar dialogues, violence ellam irundhadhu.. aanalum attagaasamaana padam

Anonymous said...

innaaba, pudhu varsathukku paayaasam saaptu innuma thoonginu keera? thalaivaru onnal mudiym thambikku minnadiye thoongine-rukkatha thambinnu oru padam kamchirukkare.. aththa paakaliya neeyi? urgenta oru post poduba.

eththini dhabathaan indha 'vaaika aiganathu' postingaye padchinukkeerathu? eniku patchi solra indha pakkathu voottu anjaan-glass payale enna kaduppadikiranbaa

Dubukku said...

யோகன் - நீங்கள் அளித்த தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன. மிக்க நன்றி. நீங்கள் சொல்வது மாதிரி நல்ல திறமைசாலி. அந்தப் பையனும் நன்றாக நடித்திருந்தார்.

சின்ன அம்மிணி - ஆமாம் அந்தக் காட்சியை நானும் மிக ரசித்தேன். அதே போல் அவர் நாயகியைக் காதலிக்கும் போது நடக்கப் போவதை முன்னமே சொல்வாரே அதுவும் மிக மிக ரசித்தேன். ஐய்யைய்யோ அந்த கடைசி முடிவை சொல்லவேண்டாம் என்று நினைத்து தான் விட்டிருந்தேன். நான் அது தெரியாமல் தான் பார்த்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்களே :))

கொத்ஸ் - இதை கண்டிப்பாக பாருங்க சூப்பரா இருக்கும். படம் அலுப்பே தட்டாது போகும்.

பஸ்பாஸ் - வாங்கண்னே. பாரஸ்ட் கம்ப் பார்த்தாச்சு. பிடித்திருந்தது. மற்றவை பார்க்கவில்லை. லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்.

ராதா - ஓ அப்பிடியா...அந்த படம் எப்படி? நீங்க பார்த்திருக்கீங்களா??

துளசி- இதே பெயரில் ரெண்டு மூனு படம் இருக்குன்னு நினைக்கிறேன். அதுக்காகவே நான் சரியான படத்தை பார்க்கனும்ன்னு இருந்தேன் :))

அமெட்சூர் யோகி - இதைப் பார்க்கும் அனைவருக்குமே இந்த உணர்ச்சிகள் இருக்கும்ன்னு நினைக்கிறேன். இயக்குனரின் வெற்றி.

அம்பி - ஹீ ஹீ ஹீ ஹீ,....

சக்ரா- எனக்கு அடுத்த நாளே இதை திரும்பக் குடுக்க வேண்டியிருந்ததால் குடுத்துவிட்டேன். அருமையான படம்.

கேர்ல் ஆஃப் டெஸ்டினி - ரொம்ப உண்மை அந்தக் காட்சி ரொம்ப டச்சிங். எனக்கு முடிவு தெரியாததால் நான் அவர் பிழைத்துவிடுவார் என்றே நினைத்தேன். நான் எழுத நினைத்தது "பிழியப் பிழிய அழும் காட்சிகளோ எதுவும் கிடையாது" சொற் பிழையாகிவிட்டது :)) நல்லா சமாளிக்கிறேனா??:)

அனந்து - உங்க (இத்தாலிய நண்பி) பரிந்துரை பரிசீலனையில் உள்ளது :))) நீங்க சொன்ன படமும் லிஸ்டில சேர்த்துக்கிறேன். ரொம்ப நன்றி.

வீரா - உண்மையிலேயே நான் "பிழியப் பிழிய அழும் காட்சிகளோ எதுவும் கிடையாது" என்று தான் சொல்ல நினைத்தேன். மாற் எழுதிவிட்டென். :)

அருண் - ஆமாங்க ஒவ்வொரு ஃபிரேமும் சூப்பரா இருக்கும்.

கண்ணன் - உணமை. திரைக் கதை தான் நான் மிகவும் சிலாகித்தது. நடிப்பும் அட்டகாசம் இல்ல?

ஆணி - விகடன் பக்கம் போய் வருடக் கணக்கில் ஆச்சு. அதான் மிஸ்பண்ணிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

கிர்பால் - ஆமாங்க பயங்கர அழுத்தமாய் சொல்லியிருப்பார் இல்ல

குழம்பி - உண்மையாகவே இப்போ தான் பார்த்தேன். அட நான் ரொம்ப சின்னப் பையன் ங்க..அவ்வளவு உலக சினிமா ஞானம்லாம் கிடையாது.இந்த மாதிரி வேற நல்ல படங்கள் இருந்தாலும் கண்டிப்பா சொல்லுங்க.


தீபா கௌதம் - வாங்க. உங்க பாராட்டுக்கும் மிக்க நன்றி. சாரி நான் உங்களுக்கு பதில் போடறதுக்கு கொஞம் நாளாகிவிட்டது. ஆமாங்க என் சின்னப் பெண் அப்பிடியே அப்பாவ கொண்டிருக்கா :)))) உங்க வாழ்த்துக்களை வீட்டில் எல்லாருக்கும் சொல்லியாச்சு. மிக்க நன்றி. நானும் உங்க வலைப் பக்கம் வருகிறேன். (சார்லாம் வேண்டாம் சும்மா டுபுக்குன்னே கூப்பிடுங்க)

லதா - என்னங்க நீங்களும் சார் மோர்லாம்...சும்மா டுபுக்குன்னே கூப்பிடுங்க. ஆமாங்க நம்ம தலைவரும் கலக்குவார்ங்க..மஹாநதில செய்யலையா? கமலுக்கு சரியான தீனி இன்னும் கிடைக்கலைன்னு தான் நானும் நினைக்கிறேன்.

ஈ.ஹெச் - ரொம்ப நன்றிங்க. அதையும் லிஸ்டுல சேர்த்தாச்சு. ஆனா படம் ரொம்ப அழுவாச்சி போல??? பரிந்துரைக்கு மிக்க நன்றிங்க..கண்டிப்பா பார்க்கிறேன்.


முத்துக்குமார் - எந்த தமிழ் யுனிகோட்னாலும் ஓ.கே. விண்டோசோட லதா பாண்ட் வருங்களே??

மைதிலி - ஆமாங்க ரொம்ப நல்ல படம் நீங்களும் பாருங்க

முரளி - சூப்பர் படங்க,....பார்த்துட்டு நீங்களும் சொல்லுவீங்க...

இராமச்சந்திரன் - தல மிக்க நன்றி. நீங்களும் அந்த படத்தை நிறைய தடவ சொல்லிட்டீங்க...லிஸ்டில இருக்கு. டிஸ்க் தான் மாட்ட மாடேங்குது. அதுக்குத் தான் வெயிட்டிங்:)))

யோகி - நானும் அப்பிடி நினைத்துத் தான் பார்த்தேன். வேண்டாம் அது தெரியாமல் பாருங்கள். ரொம்ப ஆர்வமாய் இருந்தால் இங்கேயே சின்ன அம்மினி சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

நிவி - ரொம்ப நல்ல படங்க. அதுல இம்ப்ரெஸாகித் தான் போஸ்ட் போட்டது. நன்றின்னு பெரிய வார்த்தையெல்லம் சொல்லாதீங்க...நீங்களும் நல்ல படம் இருந்தா சொல்லுங்க சும்மா கிவ் அன்ட் டேக் தானே...அம்புட்டுத்தேன் :)))

இஸ்திரி பொட்டி - அடடா லேட்டா வந்தது மட்டுமில்லாம இன்கம்ளீட் வேற...டைரக்ட்டர் பத்தி ஒன்னும் சொல்லவே இல்லையே :))) மீசிக் எனக்கு அதுவா வந்தது இல்லைங்க...நெட்டுல சுட்டது தான் :)) (பிடிச்சிருக்கு படம்)

வெங்கடேஷ் - ஆமாங்க சூப்பர் படம். நான் இப்போ தான் பார்த்தேன். அந்த கேள்வி விடையை நான் கெஸ் பண்ணிவிட்டேன் :))

கேஆர்பி - ஆமாங்க மிஸ் பண்ணாதீங்க

பி.கே - படதுல ஒவ்வொரு பிரேமும் ரசிச்சு பார்த்தேன். டிபார்ட்டெட்-ம் லிஸ்டுல சேர்த்துட்டேன் :)) மிக்க நன்றி.

Post a Comment

Related Posts