Friday, July 06, 2007

மரண பயம்

"மரண பயம் அவன் கண்களில் தெரிந்தது" -இந்த வரிகளை கதைகளில் படிக்கும் போதெல்லாம் ரொம்ப யோசிக்காமல் காதைக் குடைந்துவிட்டு அடுத்த வரிக்கு தாவிவிடுவேன். ரொம்ப ஃபீலிங்காகயெல்லாம் யோசித்தது கிடையாது. சமீபத்தில் "குப்பி" படம் பார்த்தேன். நல்ல திரைக்கதையுடன் அருமையாக எடுத்திருந்தார்கள். படம் பார்த்துமுடித்த பிறகும் அதை அசை போடவைத்த அழுத்தமான படம். அதைப் பற்றி பிறகு வேறொரு பதிவில். ஆனால் நேற்று தான் மரண பயம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். இதை சும்மா சென்சேஷனிஸத்துக்காக இங்கே சொல்லவில்லை உண்மையாவே உணர்ந்து கொண்டேன். லண்டனில் மற்றும் இங்கிலாந்து முழுவதும் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தீவிரவாதம் குண்டு வைத்தல் என்று களேபரமாக இருக்கிறது. இந்த நிலையில் நகரமெங்கும் கண்காணிப்பு மிகத் தீவரமாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆபிஸுக்கு லேட்டாக கிளம்பினேன். "மைல் எண்ட்" ஸ்டேஷனில் சென்ட்ரல் லைனில் அவசர அவசரமாக மாறும் போது எதுவும் உறைக்கவில்லை. லண்டன் அண்டர்கிரவுண்ட் ட்ரெயின்களில் அதி வேகத்தில் போகக்கூடிய ட்ரெயின்களில் சென்ட்ரல் லைனும் ஒன்று என்பதால் பொதுவாகவே பீக் நேரத்தில் நல்ல கூட்டம் இருக்கும். நேற்று அவ்வளவாக இல்லாவிட்டாலும் உட்கார இடம் கிடைக்காமல் மிதமான கூட்டத்துடன் இருந்தது. உட்காருபவர்களுக்கு நடுவில் இருக்கும் கம்பியைச் சுற்றி அணைத்த மாதிரி கையைக் கோர்த்துக் கொண்டு எண்டமூரி வீரேந்திரநாத்தின் "இரவே உருவானவள்" புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ட்ரெயின் நல்ல வேகம் பிடித்து இந்திர லோகத்து அப்சரஸ் ஹரிப்ரியா தேவராஜனுடன் பேச ஆரம்பித்தது விறுவிறுப்பாக போய்கொண்டிருந்தபோது "டொம்" என்று பாம் வெடித்தது போன்ற சத்தத்துடன் ட்ரெயினை தூக்கிப் போட்டது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்துடன் கம்பியில் இடித்துக் கொண்டு தூக்கிவீசப்பட்டேன். ட்ரெயினில் நின்று கொண்டிருந்த முக்கால் வாசி பேரும் இதே மாதிரி இடம் பெயர்ந்திருந்தார்கள். சென்ட்ரல் லைனின் டணல் மிகக் குறுகலாகக இருக்கும் ட்ரெயினுக்கு வெளியே ஒரு முழத்திற்கு மட்டுமே இடைவெளி இருக்கும். இவ்வளவு குறுகலான டணலில் ட்ரெயின் தாறுமாறுமாக இடித்துக்கொண்டு போக ஆரம்பித்தது. டெரெயினுக்குள்ளே ஒரே புகை மண்டலமாக ஆகிவிட்டது. இதில் தூசு வேறு கலந்து பயங்கர நெடி வேறு. மொத்தம் நாற்பத்தைந்து நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை தான் இருக்கும். ட்ரைவர் மிகக் கஷ்டப்பட்டு ட்ரெயினை ஒருவழியாக நிப்பாட்டி விட்டார். நான் ட்ரைவர் கேபினுடன் கூடிய முதல் கேரேஜில் இருந்ததலால் அவர் கேபினில் இருக்கிற எல்லா அலாரமும் அடிப்பது கேட்டது. இந்த நாற்பத்தைந்து வினாடி முழுவதும் ஒரே கூச்சலும் கூப்பாடுமாக இருந்தது. நிறைய பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள். எனக்குப் கேரேஜில் புகை நிரம்பியவுடன் மரண பயம் வந்துவிட்டது. அகல பாதாளத்தில், கதவுகள் பூட்டப்பட்டு இறங்கக் கூட முடியாத ஒரு சூழலில், கதவை உடைத்து இறங்கினாலும் வெளியே ட்ராக்கில் மின்சாரம் இருக்கும் அபாயத்தில், ட்ரெயினில் தீப்பிடித்தால் சந்தேகத்துக்கு இடமின்றி முடிவு என்ன என்று தெரிந்திருந்தது.

மக்களால் தீயைப் பார்க்க முடியாவிட்டாலும் அடுத்த காரேஜில் தீப்பிடித்திருக்குமோ என்ற நினைப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே இருந்த கதவு வழியாக அடுத்த காரேஜிற்கு போக ஆரம்பித்தார்கள். அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு கிலி பிடித்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த களேபரத்தில் எங்கள் கேரஜில் ஒரு சின்ன கதவு எப்படியோ தானாகவே திறந்திருந்தது. அதன் பயனாக இருந்த புகை மூட்டம் அடுத்த பதினைந்து நிமிடங்களில் குறைந்தது. இருந்த மயான சூழலில் அழுகைகளையும் விசும்பல்களையும் தவிர யாரும் வாயைத் திறக்கவில்லை. யாரோ கீழே விழுந்திருந்த என் புத்தகத்தை கையில் திணித்தார்கள்.

ட்ரைவர் ஒலிபெருக்கியில் பேச ஆரம்பித்தார். அவர் குரலில் நடுக்கம் தெளிவாக தெரிந்தது. "உங்களைப் போலவே நானும் ஆடிப் போயிருக்கிறேன். ட்ராக்கில் ஏதோ இருந்ததால் ட்ரெயின் தடம்புரண்டிருக்கிறது. நான் கண்ட்ரோல் ரூமிற்கு சொல்லியிருக்கிறேன். அவர்கள் தடங்களில் இருக்கும் மின்சாரத்தை துண்டித்து எமர்ஜென்சிக்கு சொல்லியிருக்கிறார்கள் உதவி வந்துவிடும். கவலை வேண்டாம் யாருக்காவது மிக மோசமாக காயம் இருந்தால் நான் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லி கொஞ்ச நேரத்தில் வந்தார். அவர் கையில் நடுக்கம் மிக மிக அதிகமாக இருந்தது. தூக்கிப் போட்டதில் யாரோ மோதி சன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யாருக்கும் ரத்த காயம் இல்லாதது ஆறுதலாக இருந்தது.

பிறகு நிலமை கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்தது. மக்கள் பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டார்கள், கையைப் பிடித்துக்கொண்டார்கள். அழுது கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். ஒரு வயதான அம்மாள் மட்டும் அதிர்ச்சியில் பித்து பிடித்தவர் மாதிரி அப்படியே உறைந்து போயிருந்தார். நானும் சிலரும் அவரைத் தேற்ற முயன்றோம். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு போலிஸ்காரகள் வந்தார்கள். எல்லாரையும் நலன் விசாரித்தார்கள். அவர்கள் ட்ரைவரிடம் சென்று அவரி தேற்றினார்கள்.

அப்புறம் மக்கள் சகஜ நிலைக்கு வர ஆரம்பித்தார்கள். அதுவரை இழவு வீடு மாதிரி இருந்தது அப்புறம் கல்யாணவீடு மாதிரி மாற ஆரம்பித்தது. அழுபவர்கள் மூடை மாற்ற ஜோக் அடிக்க ஆரம்பித்தார்கள். வெவ்வேறு ஆங்கிளில் மொபைல் போனில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட்டமாக கதையடிக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு வெள்ளைக்கார மாமி, மற்றும் பாட்டியுடன் அரட்டையடிக்க சேர்ந்து கொண்டேன். வெள்ளக்கார மாமிக்கும் பாட்டிக்கும் நான் பாம் வெடிப்பில் தப்பியது பற்றி சொன்னவுடன் ஒரே ஆச்சரியம். அதைப் பற்றி டாக்குமென்ட்ரியில் நடித்திருக்கிறேன் என்றதும்..ரொம்ப ஈடுபாட்டுடன் பேச ஆரம்பித்தார்கள். இந்த மாதிரி அசம்பாவிதங்களில் என்ன என்ன செய்ய்வேண்டும் என்று டிப்ஸெல்லாம் கேட்க ஆரம்பித்தாரக்ள். உள்ளே தூசி மற்றும் புகையினால் எல்லார் மேலும் கொஞ்சம் கரி படிந்திருந்தது. வெளியே அனேகமாக ஸ்கை மற்றும் பி.பி.ஸிகாரர்கள் இருப்பர்கள் என்று நான் சொன்னதும் மாமி கரியை துடைக்கிற சாக்கில் டச்சப் செய்துகொள்ள ஆரம்பித்தார். நாம முதல் கேரேஜ்ஜில் இருகிறோம், பின்னால் வழியாகத் தான் எவேக்குவேஷனை ஆரம்பிப்பார்கள். நாம் கடைசியில் தான் போவோம் அதற்க்குள் முதலில் வருபவர்களிடம் பேட்டி எடுத்து டெலிகாஸ்டே செய்திருப்பார்கள் என்று நான் சொன்னதும் அவருக்கு பலூனில் காத்து போனது மாதிரி ஆகிவிட்டது. பக்கவாட்டில் இடித்ததால் அவருக்கு இருந்த தோல் வலி ஒருவேளை அதிகமானால் அவரை முதலில் அழைத்துப் போவார்கள், அப்படிச் சென்றால் ஃபோட்டோ பேப்பரில் வர வாய்ப்பு இருக்கிறது என்றதும் அவருக்கு தோல் வலி அதிகரிக்கிற மாதிரி இருந்தது.

அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்தார்கள். எமெர்ஜென்ஸி பொரொசீஜர்களுக்குப் பிறகு இன்னும் ஒரு மணி நேரத்திற்க்குள் எல்லோரையும் வெளியேற்றிவிடுவோம் என்று உறுதியளித்தார்கள். அதை பாட்டியால் ஏதோ ஒத்துக்கொள்ள முடியவில்லை. இவர்களை எல்லாம் எங்க ஊரில் ஒரு கேப்டன் இருக்கிறார் "விஜய்காந்த்" என்று பெயர் அவரிடம் டெரெயினிங் அனுப்பவேண்டும், அவர் மீசையை முறுக்கினால் எதிரிகள் விழுவார்கள், வேட்டியை மடித்துக் கட்டினால் எதிகள் பல்டியடிப்பார்கள், பவர் பாயிண்ட்டில் பாமை வெடிக்காமல் செய்வார், வெப் கேம் வைத்துக்கொண்டு எதிரி நாட்டு ராணுவ தளவாடங்களை கண்காணிப்பார், அவரிடம் சொன்னால் ஒத்த சணல் கயிற்றை கட்டி இந்த ட்ரெயினை இன்னொரு ட்ரெயினை வைத்து இழுத்துப் போட்டுவிட்டு கண்ணடித்துக்கொண்டு டூயட் பாடப் போயிருப்பார் என்று சொல்ல நினைத்து சொல்லவில்லை.

அதற்கப்புறம் ஒரு மணி நேரத்தில் எல்லாரையும் வெளியேற்ற ஆரம்பித்தாரக்ள். டணலில் நடந்து வரும் போது அடுத்த டாக்குமென்ட்ரியில் நடிப்பதற்க்கு என்ன கால்ஷீட் பேசலாம், இந்த முறை எப்படி வித்தியாசமாக நடக்கலாம், ஜூ.வி ஃபோட்டொவுக்கு என்ன சட்டை போடுக் கொள்ளலாம் என்று யோசனை செய்துகொண்டே வந்தேன். வெளியே வந்த போது வழக்கம் போல் போர்களம் போல திரும்பிய பக்கமெல்லாம் போலிஸ் ஆம்புலென்ஸ்...எதிர்பார்த்தது போல பி.பிஸி, ஸ்கை எல்லாம் அப்பீட் ஆகியிருந்தார்கள். யாரோ பேனாவும் பேப்பரும் கையுமாக வருவதைப் பார்த்து பேப்பர்காரனாய் இருக்கும் என்று நான் முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ள, "இருபத்தைந்து ஆக்ஸ்போர்ட் சர்கஸ் பஸ் எந்தப் பக்கம் வரும் தெரியுமா?" என்று கேட்க "போய்யா அந்தப்பக்கம்...நானே இங்க கால்ஷீட் குழப்பத்துல இருக்கேன்..ஆங்....இருபத்தைந்து வரும்... நல்லா வாயில வரும்" என்று கடுப்பாகி... எக்ஸ்பீரியன்ஸுக்கு இந்த உலகத்தில் மதிப்பே இல்லைங்க. அப்புறம் இன்னொரு தொப்பியணிந்த போலிஸ்காரர் வந்து பெயர் மற்றும் அட்ரெஸை எழுதி வாங்கிக் கொண்டார். "லோக்கல் டீ.வியெல்லம் அனுப்பி தொந்தரவு பண்ணிடாதீங்க சார்"ன்னு நான் சொன்னது அவருக்கு புரியவில்லை...தொழிலுக்கு புதுசாக வந்திருக்கும் கத்துக்குட்டியாயிருக்கும் "ஸ்காட்லாந்து யார்ட்" என்று ஏதோ உளறிக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆபிஸுக்கு லீவு சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் "இந்த தரமாவது குடும்பத்தோட தான் நடிப்பேன் இல்லைன்னா கால்ஷீட் இல்லைன்னு கறாரா சொல்லிடுங்க" என்று கறாரா சொல்லிவிட்டார். கால்ஷீட் கேக்கிறதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிச்சிக்கோங்க சொல்லிப்புட்டேன் ஆமா!

மேலும் விபரங்கள் அறிய மேலும் அறிய

39 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒண்ணும் ஆகாம போச்சே! நல்ல வேளை. ஆனா உம்மோட உங்க ஊர் ட்ரெயினில் மட்டும் வரமாட்டேம்பா.

கதிரவன் said...

உங்களுக்கு ரயிலில் 'கண்டம்' இருக்கும் போலத் தெரியுதே. பாத்துப்போங்க !!

சீக்கிரமே அடுத்த படம் நடிக்க வாழ்த்துக்கள் :)

Munimma said...

for some reason, as soon as I heard about the derailment, I thought about you. My sixth sense working overtime I guess. Athey mathiri aayidichu. at least, nothing serious aagalaye, athu varaikkum nallathu.

nalla velai, namma naatu ragasiya (pokkisha)maana gab-tonne paththi sollama irunthiya!

athu enna onnakku london tube asambavithangal ellathulayum ipdi oru eedupaadu? so, interview jooviya illa aaviya? next padathula innum jaasti (bayangara) talentoda velluthu kattu. kudumbathoda paarthu rasikara(?) padama iruntha nalla irukkum.

CVR said...

ரோ.ஆ.F.லா!!
சூப்பரு!! :-))

Anonymous said...

I too had similar experience - This during my school days, when I was going by bus, the bus fell down in a river... After some chaos, nobody hurt and i just jumped out of the bus and went to the road, caught another bus and went on my way... Nevertheless, its frightening.

Radha Sriram said...

படிச்சிட்டேன்,

//"மரண பயம் அவன் கண்களில் தெரிந்தது" -இந்த வரிகளை கதைகளில் படிக்கும் போதெல்லாம் ரொம்ப யோசிக்காமல் காதைக் குடைந்துவிட்டு அடுத்த வரிக்கு தாவிவிடுவேன்//

செம 'hook' ஆரம்பம்......ஒரு நல்ல கட்டுரைய எப்படி ஆரம்பிக்கணும்கரத்துக்கு....அட்டகாசமான example இது......:)

ILA (a) இளா said...

//சொல்ல நினைத்து சொல்லவில்லை//
ஆனாலும் டன் கணக்குல குசும்பு முதுகுல ஏறி இருக்கு,உசுரு தப்புச்சேன்னு பார்க்காம, கால்ஷீட் கைஷீட்டுன்னு..

sriram said...

Hey Ram
Naanum ILA sonnaithi Vazhimozhigiren, Idukkan Varungal Naguga- Romba saridan aannal idallam Romba Kusumbu, aammaa sollitten.
Umakku mattum eyya Trainla ippadi ellam aagudhu?? Unga Tube Train Makkalai MBTA vidam (Massachusetts Bay Tranport Authority, mbta.com) safety training edukka sollunga.
Thangamani Inda post padichaal unga kadai avvalavuthan
a. Accidentla Uyir pozhacha few minutes la kooda kadali podanuma??
b. Instead of thanking God for your existence today, Kaalsheet, JV interview,BBC, SKY Tv- Edukku inda Kusumbu ellam.
c. Having said that, eagerly waiting to see your next action movie (probably unga family movie too) and your next interview in Junior Vikatan.

Ellam, Ivvalavu super Blog naala vanda thirushti, veetla solli suthi poda sollunga, (konjam detaila sollunga, illatti, Ungla suhti thooki pottra poranga)
Endrum Anbudan
Sriram
Pin Kurippu : Oru kaatil Oru Singam, Oru uraikkul Oru Vaal than irukkalam, adanal naan blog ellam arambikkalai, Neengale pannunga, naan padithu rasikkiren. Eppadi namma samalippu.....

PPattian said...

முதல் பாதி : ஐயோ.. பாவம் டுபுக்கு

இரண்டாம் பாதி: Typical In-Form டுபுக்கு. அந்த விஜயகாந்த் பிட்டு சூப்பர்...

எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பியதற்கு மகிழ்ச்சி..

Anonymous said...

சுஜாதா தனக்கு அறுவை சிகிச்சை நடந்தது பற்றியும் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளைப்பற்றியும் எழுதியிருந்தார், உங்கள் கட்டுரை அதை நினைவுறுத்தியது! தனக்கு ஏற்பட்ட மனவலியைக்கூட நகைசுவையாக கூறுவது ஒரு தனிக்கலை. உங்களுக்கு அது நிறைவாக அமைந்திருக்கிறது!

வாழ்த்துகள்... உயிர்தப்பியதற்கும் கட்டுரை எழுதியதற்கும்!

-யு.எஸ்.தமிழன்

பத்மா அர்விந்த் said...

ரங்கா
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நலமாய் இருக்கிறீர்கள் என்று தெரிந்து மகிழ்ச்சி.

Nithya said...

டுபுக்கு,

சூப்பர். சோகத்திலயும் ஒரு சந்தோஷ முடிவா, நக்கலா முடிச்சுட்டீங்க. கலக்கல்ஸ். எப்படியோ ஒண்ணும் பிரச்சன இல்லாம் நலமா இருக்கீங்களே. அதாங்க மகிழ்ச்சி.

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

முதல் பாதிய படிக்கும் போது கொஞ்சம்
நெர்வஸ் + நீங்களே பயந்துடீங்களா? ன்ற ஒரு சந்தேகம்.

//அதுவரை இழவு வீடு மாதிரி இருந்தது அப்புறம் கல்யாணவீடு மாதிரி மாற ஆரம்பித்தது.//

அப்பா...நிம்மதி.

//பி.பி.ஸிகாரர்கள் இருப்பர்கள் என்று நான் சொன்னதும் மாமி கரியை துடைக்கிற சாக்கில் டச்சப் செய்துகொள்ள ஆரம்பித்தார்.//

இந்த சூழ்நிலையில கூட எப்படி தான் இப்படி தோனுதோ?

அடுத்து இந்த கேப்டன் பிட்டு சூப்பரோ சூப்பர்.ஹா ஹா ஹா...

//அடுத்த டாக்குமென்ட்ரியில் நடிப்பதற்க்கு என்ன கால்ஷீட் பேசலாம்//
ஹா ஹா ஹா ஹா.....

//இந்த முறை எப்படி வித்தியாசமாக நடக்கலாம்//

அதாவது நம்ம மலயாள பகவதியொடயா இல்ல மா சக்தியோசயா னா?இல்ல ரெண்டு பேரோடயுமா?ஹி ஹி ஹி ஹி ஜமாய்ங்க...

"இந்த தரமாவது குடும்பத்தோட தான் நடிப்பேன் இல்லைன்னா கால்ஷீட் இல்லைன்னு கறாரா சொல்லிடுங்க" என்று கறாரா சொல்லிவிட்டார்//

இது கொஞ்சம் ஓவர்..ஹி ஹி ஹி ஹி ஹி .....


//

Anonymous said...

periya abathillirinddhu thapii irukirreerkal.kadavulukku nandri.irundhalum ithanai tensiionilum ungalukku ennallam thonudhuunnu malaippa irukku.nagaichuvai rasikka mudhindhalum incidentin theeviram bathikirathu.take care bathirram.
nivi.

Anonymous said...

sir,unga thangamaniya sutthi poda sollunga.idha kettitu avanga reaction ennava irukkum ? unga stylla parikaram sollava?oru varam leevu potttuttu avanga asaipadarathellam samaichhi kodunga?incident marandha madhiriyum aagum thangamani will also feel happy.right sir?
nivi.

நாகை சிவா said...

:-)

சரி விடுங்கண்ணன், உங்க மாதிரி வீரனுக்கு இது எல்லாம் சகஜம்...

துளசி கோபால் said...

நல்லவேளை தப்பிச்சீர்.

கால்ஷீட் கொடுக்கும்போது, நியூஸியில் இருக்கறவர் இதைப்பத்தி
என்ன நினைக்கிறார்னு ஒரு இடைச்செருகல் வேணுமுன்னு கட்டாயம் சொல்லணும்,ஆமா.
என்ன புடவைன்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

ambi said...

அட கடவுளே! இப்ப தான் படிக்கிறேன். நல்ல வேளை யாருக்கும் ஒன்னும் ஆகலை. டேக் கேர். தனி மெயில் விரைவில்.

Sridhar Narayanan said...

எல்லாம் நலமாக முடிந்தது கண்டு மகிழ்ச்சி. பரவாயில்லை... மிகுந்த அனுபவசாலியாகிவிட்டீர்கள் போல. இந்த மாதிரி விபத்துகள் பற்றிய பல டிப்ஸ்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

ஆமாம் இந்த கட்டுரையை ஏன் 'Mic Mohan' என்று வகைப் படுத்தியிருக்கிறீர்கள். Just curious!

Aani Pidunganum said...

Dubuks,
Nallaveh ezhudhirukeenga,
Adhu ennamoh oru raasi ungaluku, 07/07, indha derailment ippadi paarkumbodhu, Edhukum oru pulanvisaranai coat & head torch idhuellam oru bagla vechundu travel pannunga ;)

Anonymous said...

//நான் ஒரு வெள்ளைக்கார மாமி, மற்றும் பாட்டியுடன் அரட்டையடிக்க சேர்ந்து கொண்டேன//

இந்த மாதிரி சான்ஸ் கிடைக்கும் போது ஒரு நல்ல பிகரா தேத்தி கடலை வறுக்காமா(கடலை வறுக்குறதுக்கு கஷ்டபட்டது போனபதிவுகளில் பார்த்தேன்) இப்படி யாரவது வந்து பிளாக்குல பொலம்புவாங்களா?.
:)))))))))))))

ஒரு பாட்டிகூட கடலை போட்டுருந்தீங்க போல?.

dubukudisciple said...

guruve!!!
am happy that nothing happend to you.. illena blog ulagam oru nalla comedy ezhuthalarai miss panni irukum.. sogathulayum comedy ungalal matume mudiyum

Paavai said...

nallapadiya thapicheengale.. what a keen observation on changing emotions during a crisis - fear, panic, nervous humor/laughter, relief .. the way you have captured it is amazing

on another note - raayasam - nedil - it means eshtyle

Anonymous said...

oh! Thank God! you are safe. adheppadi electric train la prachnai na thavaraama aajar aayidreenga? andha situation-layum unga comedy sense fantastic ponga. - umakrishna

Vidya said...

Thank God you are safe! En dhan ippadi mattikkarayo.. I visit you after a long time, and this is what I see. I just dont like it. I do like your humor as always, but not the subject of it this time. Take care my friend! Convey my regards at home. Will call you soon. :-)

Ramc said...

Good to hear that you are safe.

//ஆனால் யாருக்கும் ரத்த காயம் இல்லாதது ஆறுதலாக இருந்தது.//

Engalalukkum aaruthal.

Anonymous said...

hey rams,

Thank God ur safe, i think u got some purana connections with all train incidents...he he he jk :)

Munimma said...

remba bayanthuteenga pola? aalu address-ey kaanum?

Jeevan said...

Bayathulaium kaalsheet nyabagathulaiya irunthukkenga. oru vazhiya anikku officeukku mattam pottachu...:)

Glad you are safe and their was not a big incident happen. How are u after that incident, take care bro!

R. Prabhu said...

hi, I am new to your blog!!! Very Well written. You have a humorous style and a good pitch in delivering the content. Good keep it up!!! And Good to know that you are safe!!!

Anonymous said...

Seekkiram adutha Blog podunga sir...Romba wait panna vekkaadheenga. pala pear inga tensionoda irukkaanga ungalukku yenna aacho yeadhu aacho-nnu !

-Arun.

Kaathambari said...

ada cha.. anniku paathu naan pakkathu flat chinese aunty oda aratai adichutu late ah than tubea pudichaen.. ungala paakama miss pannitanae...

Celia said...

Dubukku saar. Unga real name enna? I saw a person who looks just like you in our company intranet.. Curiousity thaangala.

இலவசக்கொத்தனார் said...

// ஒண்ணும் ஆகாம போச்சே! நல்ல வேளை. ஆனா உம்மோட உங்க ஊர் ட்ரெயினில் மட்டும் வரமாட்டேம்பா.//

சொன்னதுக்காகவே அதே ரயிலில் கூட்டிக்கிட்டுப் போயி அடி வயத்தைக் கலக்கிட்டீரே. நல்லா இருங்கடே!!

Dubukku said...

கொத்ஸ் - :)))) பார்த்தீங்களா சொன்ன அடுத்த வாரமே என் கூட அதே ட்ரெயினில வரவேண்டியதா போச்சு பார்த்தீங்களா :)


கதிரவன் - ஆமாங்க...ரொம்ப நன்றி அடுத்த படத்துக்காக வெயிட்டிங்...

முனிம்மா - நீங்க கேள்விப் பட்டவுடனே என்னான்னு நினைச்சீங்க...:P என்னாது குடும்பத்தோடு பார்த்து ரசிக்கிற படமா...ஏங்க ஏங்க இப்படி என்ன டோட்டல் டேமேஜ் பண்றீங்க...நான் வேற மாதிரி படங்கள்லாம் நடிக்கிறது இல்லீங்க :)))

சி.வி.ஆர் - நன்றிங்கோவ் :)

ஸ்ரீகாந்த் - அட அப்படியா....நீங்க சொல்றது இன்னும் பயங்கரமா இருக்கு ...

ராதா ஸ்ரீராம் - அட என்னங்க என்னென்னமோ சொல்றீங்க அப்படியெல்லாம் இல்லீங்க...இருந்தாலும் உங்க பாராட்டுக்கு நன்றிங்க...நீங்க சொன்னுதுலேர்ந்து நானும் கத்துக்கறேன்

இளா - இன்னும் படம் புக்காகலை ...எனக்கு கைகாலெல்லாம் பரபரங்குது

ஸ்ரீராம் - நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்...சுத்தி போடச்சொன்னா என்னை தான் போடுவாங்க...ஆக்ஸிடென்ட் நடந்த முதல் பத்து நிமிஷத்துக்கு நானும் உதறிக்கிட்டுத் தான் இருந்தேன்...இங்க வந்து தான் சும்மா உதார் விடறேன் :))

PPatian - உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க...

யூ.எஸ்.தமிழன் - ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு. ஆமாங்க சுஜாதா நிறைய கலக்கியிருக்கார்.

பத்மா - ஆஹா உங்க அன்புக்கு ரொம்ப நன்றி பத்மா...

நித்யா - வாங்க மேடம். ஆமாங்க பிரச்சனை இல்லாம முடிஞ்சுது தங்கமணி படிச்சிட்டு வழக்கம் போல தொலைஞ்சு போன்னு விட்டுடாங்க

Dubukku said...

சுமதி - ஆமாங்க கொஞ்ச நேரம் நடுக்கமாகத் தான் இருந்தது. தீ பிடிக்கலைன்னு தெரிஞ்ச அப்புறம் கூலாகிட்டோம் :)) மகா சக்தி/மலையாள பகவதி - புது போஸ்ட் பாருஙக ரெண்டு பேரும் இல்லை

நிவி- ஆமாங்க கடவுளுக்கு நன்றி. இன்னும் உங்களையெல்லாம் இங்க வந்து ப்ளேடு போடனும்ன்னு இருக்கு :))அட ஏங்க...நீங்க போற போக்குல பத்தவைச்சுட்டு போய்டீங்க...இப்போ தான் ஆக்ஸிடென்ட விட பயமா இருந்தது :))

நாகை சிவா - அதே அதே...நாமெல்லாம் யாரு....ரெத்த பூமி பார்த்தவங்க இல்லையா

துளசி - சொல்லிட்டா போச்சு...அதுக்கு நாங்களெல்லாம் நியுஸி வரனுமே..டிக்கெட் அனுப்புங்கக்கா

அம்பி - அடக் கடவுளே எதுக்கு சொன்ன எனக்கு ஒன்னும் ஆகலைன்னா :))

ஸ்ரீதர் - ஆமாங்க செல் போனில் வைத்திருந்த படங்களை காட்டியபோது அங்கிருந்தவர்களும் இதையே தான் சொன்னார்கள். மைக் மோகன் - சும்மா பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கேன்ல அதான் :)

ஆணி - ஆமாங்க...அடுத்தாப்புல அதான் ...அனேகமா baagisthaan காரணமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

Dubukku said...

கரெக்ட்டா பாயிண்ட பிடிச்சீங்க...அதாங்க பெரிய சோகம்....நான் இருந்த கோச்சுல ஒரே பாட்டிங்க தான்....சரி எதுக்கும் இருக்கட்டும்ன்னு வறுத்து வைச்சேன் :))

டுபுக்குடிசைப்பிள் - ஹீ ஹீ ஒருவேளை ஏதாவது ஆச்சுன்னா யாரு ப்ளாக்ல அத சொல்லுவாங்கன்னு வேற யோசிச்சேன் :))

பாவை - உண்மையிலேயே இப்படித் தான் இருந்தது. அந்த முதல் ஜோக் அடிக்கிற வரை தான் மக்கள் பீதியில இருக்காங்க...அதுக்கப்புறம் மெதுவா சகஜத்துக்கு வராங்க...நானும் அந்த பாட்டியும் எங்கயோ மழை பெய்யுது எங்கயோ காத்தடிக்குதுன்னு ஜோக் அடிக்க ஆரம்பிச்சிட்டோம் :))

உமா - ஆமாங்க போன ஜென்மத்துல ட்ரெயின் ட்ரைவரா பொறந்து ட்ரெயின பாடாய் படுத்தியிருப்பேனோ என்னமோ....பழிவாங்குது :))

வித்யா- வாம்மா எப்டியிருக்க....லூஸுல விடு...மேல ஒருத்தர் சொன்ன மாதிரி இதெல்லாம் ஒரு வீரனோட வாழ்க்கையில சகஜம்

ராம்சி - அது உண்மையிலேயே ஆறுதலா இருந்தது. இல்லைன்னா ஜோக்கடிச்சிருக்க முடியாது

அனானி - ஆமாங்க அதே அதே ரொம்ப நன்றிங்க


முனிம்மா - இங்க வேலை ரொம்ப ஜாஸ்தியாயிடிச்சுங்க அதான்...(என்னம்மோ இன்னிக்கி நேத்திக்கு பயப்படற மாதிரி சொல்றீங்க :)) )

ஜீவன் - ஆமாம் ஜாலியா ஆபிஸுக்கு லீவு போட்டுட்டேன்ல :))

ஆர்.பிரபு - ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு . அடிக்கடி வாங்க

அருண் - மன்னிச்சிக்கோங்க கொஞ்சம் லேட்டாகிடிச்சு...ஆபிஸ்ல வேலையெல்லாம் பார்க்கனும்ம்னு அநியாயம் பண்றாங்க

தி"கே" - அட நீங்களும் நம்மூரு தானா...அதுக்கென்ன இன்னொருநாள் சந்திச்சா போச்சு...எப்ப சௌகரியமோ சொல்லுங்க

பிந்து -ஆஹா முழு பெயரையும் கேக்கறீங்களே...அது முழுபக்க எஸ்ஸே மாதிரி இருக்குமே...சுருக்கமா ரெங்கான்னு வெச்சுக்கோங்க...நீங்களும் லண்டன்லயா இருக்கீங்க?

கொத்ஸ் - உமக்கு கருநாக்கு அதுக்கு நான் என்ன பண்ணுவேன் :))

Celia said...

En, london-la unga picture adikadi poduvaangalo?

Inga ungala maadhiriye oruthar photo enga intranet portal-la vandhudhu. Avar name Duraisaamy Rajan. Neengalaa irupeengaloonnu nenachen.

Appu said...

avla ranagalathilyum ungalukku kalsheet kilukiluppu :)

Post a Comment

Related Posts