மன்னிக்கவும் கொஞ்ச நாளாக பயங்கர பிஸி. இருக்கிற வேலையில் இந்த அமைச்சரவை மாற்றத்தை வேற நடத்தித் தொலையவேண்டியது இருந்தது. இது வரை வழிகாட்டும் தெய்வமாக இருந்த ஏஞ்ஜலினா அம்பாள் லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு வாங்கிக் கொண்டு அப்பீட்டாகிறார். இருந்தாலும் இனிமேல் அவ்வப்போது விசிட்டிங் பேகல்ட்டியாக வந்து கௌரவப் படுத்த வேண்டுதல் விட்க்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியும் பொழுதொரு இஞ்ச்சுமாக குண்டாகிக் கொண்டிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு கேபினட் அந்தஸ்தை ஏன் பறிக்கக் கூடாது என்று ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பத் தீர்மாணம் ஏற்றப்பட்டது. அமைச்சரவையில் புதிய அங்கத்தினர் சேர்க்கையும் அங்கீகரிக்கப் பட்டது. அற்புதத் தீவில் பொற்றுபேற்று சாதித்த மல்லிகா கபூருக்கு முக்கிய இலாகா பொறுப்பு ப்ரோபேஷன் முறையில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க சபை கடமைப்பட்டுள்ளது. இதே முறையில் நல்ல சேவை செய்யும் பட்சத்தில் அவருக்கு கூடிய சீக்கிரமே காபினட் அந்தஸ்து வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை "போறுமே (கல்யாணமானதிலிருந்து) நீங்களும் உங்க ரசனையும்...காறித் துப்பறதுக்கு ஒருவாய் போதாது" என்று நிரந்தர எதிர்கட்சி தலைவி மனமார (உஷாராக) புகழ்ந்து அங்கீகரித்தார்.
பார்த்தால் இரண்டு வேளை வயிறார சாப்பாடு போட்டு பஸ்ஸுக்கு காசும் கொடுக்கத் தோன்றுவது போல் இருக்கும் திரிஷாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று கட்சி கொளுகையில் தவறாமல் இருக்கிறது. இதே மாதிரி இருந்தாலும் துள்ளல் நடிப்பில் கொள்ளை கொண்டு கட்சி கொளுகையை கடைபிடிக்கும் அசினுக்கு அடிப்படை அமைச்சர் பதவி வகிப்பதற்க்கு சபை அங்கீகாரம் தெரிவித்தது. கொளுகையை தேசிய அளவில் பரப்பும் முயற்சியாக மாற்றான் தோட்டத்து மல்லிகை ஜெனிலியாவுக்கு கௌரவ அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. முத்தழகு ப்ரியாமணிக்கும் கூடுதல் கௌரவ அமைச்சர் பதவி வழங்கவும் ஓப்புதல் தெரிவிக்கப் பட்டது. சபை தெலுங்கு தேச படைப்புகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதையும் குறிப்பில் சேர்த்தது.
இதே முறையில் ஈயடிச்சான் காப்பி முறையில் எதிர்கட்சியும் மாற்றங்களை கொண்டு வந்து ஸ்ரிகாந்த் பதவி நீக்கம் செய்யப்பட்டு ப்ரித்விராஜ் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதையும் சபையின் ஒற்றர் படைத் தலைவர் தெரிவித்தார். "பரவாயில்லை...கல்யாணமாகறதுக்கு முன்னாடி இருந்த அதே நல்ல ரசனை இன்னும் அப்பிடியே இருக்கு.." என்று சபை கை கொட்டி சிரித்து பாராட்டு தெரிவித்தது.
Wednesday, August 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
படத்தைப் போடய்யா!!
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போடலாமே...:-)
டுபுக்ஸ்,
பதிவு நல்லாத்தான் இருக்கு!
கூட நாலு படங்க சேர்த்திருந்தா நாங்களும் உம்மோட ரசனையைப்பற்றி அறிக்கை விட்டிருப்போம்ல?!
Hey Ram
Late aa vandhuttu ivvalavu short / Mokkaiya oru padhivu pottathu mudal kuttram.
Field la irunthu kaanamal poi sila madangale aana Joe (aduthanga Namma Jyothika) pattri onnume ezhudhathu 2vadhu Kuttram.
Jovukku atleast oru President postavadhu koduthirukkalam.
Endrum Anbudam
Sriram
Guruve!!
nalla thaan iruku pudiya amaicharavai...seri irunga naan innum nalla padangal ellam podaren. neenga innum niraya urupinargalai serthukalam
அண்ணன் காட்டிய வழி தானே தம்பிக்கும்? இரண்டு பேருக்கும் எத்தனை அடி வாங்கினாலும் இப்படித்தான் அலையும்! நறநறநறநற.....
மொக்கையைத் தான் எதிர்பார்த்தேன் என்றாலும் இப்படி வழிவீங்கன்னு நினைக்கலை! :P
படம் பார்த்து தான் நாங்கள் அங்கீகரிப்போம். :)
இருந்தாலும் அற்புத தீவையாவது எனக்கு விட்டு வெச்ருக்கலாம். :p
@கீதா பாட்டி,
அஞ்சலி தேவி, சரோஜா தேவி, குமாரி கமலா எல்லாம் ஏன் இந்த லிஸ்ட்டில் இல்லை?னு கேக்காம இருந்த வரைக்கும் சந்தோஷம். :p
நானுன்டு என் வேலையுண்டு(?) என அமைதியா இருக்கும் என்னை சீண்டுவதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். :))
மந்திரிசபை குரூப் போட்டோ எங்கே? ஹி ஹி :)))
//பார்த்தால் இரண்டு வேளை வயிறார சாப்பாடு போட்டு பஸ்ஸுக்கு காசும் கொடுக்கத் தோன்றுவது போல் இருக்கும் திரிஷாவுக்கு // good description...
இத்தனை பேர் கேட்டதுக்கப்புறமாவது ஃபோட்டோ போட்டிருக்கலாம் :-(
//சபை தெலுங்கு தேச படைப்புகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதையும் குறிப்பில் சேர்த்தது.//
அது எங்க ஏரியா...
ஷ்ரேயா இல்லையா? அய்யய்யோ.. பலபேர் கோவிச்சுக்கப்போறா!
Naan intha avaiel irunthu velinadappu saikerean! Thisha’virkku edam illai enpatha… kadumaiyaga atchipikerean;)
Enna Thala.. Neenga vitta Jollu la india la enga paathalum vellam.. ooray medhakkudhu... Thoo.. idhellam oru pozhappa?? naa konja off aayittadhala.. unga alambal konjam thala thookathhan seyyudhu..katchi peru enna thala?? thala neenga romba nallavaru thala...seruppalum thodappathalum thangamani akka evlo adichaaclum konjam kooda soranaye illama ippa jollu vittu blogla velukkareengalee!!
BTW thala ungala pathi onnum kelvipatten...aadhi kalathu Ramco CIGFA team la neenga periya thillalangadi aasaminu.. unmaya thala??? unga veshatha kalaikka naa ready.. appo neenga readyaa???
Kadavuleuy! Will you ever change, the way you had mixed up the english in tamil script made it really difficult to read this time. Your posts like this remind me of our 'lunch' table talks and laughter :)
listla neriya peru vittupochu, ozhunga thangamanikooda discuss panni yaar yaarunnu decide pannunga.revised lista solrathukku unga thangamani othupaangala, aana neenga evolo adichallaum thanguveenga eena neeega romba nallavurunu unga thangamani solranga.correct???????
nivi.
டுபுக்கரே! எனக்காக சின்ன திரை தீபாவெங்கட் அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் தரனும்ன்னு கேட்டுக்கறேன்! ப்ளீஸ்பா!
//முத்தழகு ப்ரியாமணிக்கும் கூடுதல் கௌரவ அமைச்சர் பதவி வழங்கவும் ஓப்புதல் தெரிவிக்கப் பட்டது. சபை தெலுங்கு தேச படைப்புகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதையும் குறிப்பில் சேர்த்தது//
குரூ...இப்படி எல்லாம் எழுதறதுக்கு நெஞ்சுல நெறைய லெமன் ரைஸ்(அதாங்க மஞ்சா சோறு) வேணும்னு அனுபவப் பட்டு பாத்தா தான் புரியுது.
எதையும் கண்டு அஞ்சாத எங்கள் தலைவன் ப்ளாக் உலகின் மாவீரன் அலெக்சாண்டர் டுபுக்குஜி கி ஜே.
chennaila ennada ipdi mazhai peythenu paathen, ippo puriyuthu. pinkurippu thodapama verum kayya?
அமைச்சரவை மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். என்ன தான் குண்டாகி இருந்தாலும், மீராவின் இடத்திற்கு சப்பை மூக்கு (:P) மல்லிகா கபூரை போடுவதை கடுமையாக கண்டிக்கிறேன். அதே போல, சும்மா சீன் போட்டு வரும் அசினுக்கு பதவி கொடுப்பது வேஸ்ட் என நல்ல எண்ணத்தில் எச்சரிக்கிறேன்.
மற்றபடி, அமைச்சரவை மாற்றங்கள் எடுக்க தாங்கள் மெனக்கெட்டதற்கும், பலபேரை அலசி முடிவெடுக்க நேரம் செலவழித்ததற்கும் பாராட்டுக்கள்! ஆபீஸ் வேலைக்கு நடுவுல இப்படி ஒரு உருப்படியான வேலை (??!!) செய்ய நேரம் எப்படிங்க கெடச்சிது?:-)
http://47d.blogspot.com/2007/08/blog-post.html
ஓய் டுபுக்கு
spelling mistake யா! உம்ம பேரிலே முதல் ரெண்டெழுத்து இடம் மாறிப் போச்சுன்னு நெனைக்கறேன்!!
Achacho...enna na, konjam vadakka kan pathichu mathiri sabaila idam kudukkavilai yenraal, sabaikku veliyel irunthu kuduthu varum aatharavau vaapas vaangappadum....
--ivan
Katchi paer illatha karuvapayal mandram
(quite busy with INFY trainig...)
"பரவாயில்லை...கல்யாணமாகறதுக்கு முன்னாடி இருந்த அதே நல்ல ரசனை இன்னும் அப்பிடியே இருக்கு.." என்று சபை கை கொட்டி சிரித்து பாராட்டு தெரிவித்தது." -
இங்க தான் உங்க பன்ச்... சூப்பர் அப்பு....
Trisha vuku yen amaichar post illanu yenaku therijaganum...
Yeadhaavadhu karumatha post pannunga sir. unga posting padikkaama kai kaal ellaam nadungudhu... Ippadiyaa oru manushana addict aakkuvaanga ? Konjam kashtatha purinjukkongappaa !
:-)
Arun.
//மாற்றான் தோட்டத்து மல்லிகை ஜெனிலியாவுக்கு கௌரவ அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது//
தலைவா
ஜெனிலியாவுக்கு இலாகா இல்லாத அமைச்சரா? :-(
அப்படியே யார் யாருக்கு என்னென்ன இலாகான்னு சபை முடிவெடுக்கலையா?
இன்னுமா படத்தைப் போடலை?
வாக்காளர்கள் தீவிர அதிருப்திக்கு ஆளாகப் போகிறார்கள்! விளைவுகள் இடைத்தேர்தல்-ல தெரிந்து விடும்! :-))
enna thala paathi news thaan pottu irukeenga... Nayanthara ku kudutha amaicharavai pathi sollave illa...
அண்ணாத்தே...கொஞ்சம் குளிர்ச்சியா படத்தையும் போட்டிருந்தா ஜென்ம சாபல்யம் அடைஞ்சிருப்போமே..ப்ளச்...ப்ளச்..
//பார்த்தால் இரண்டு வேளை வயிறார சாப்பாடு போட்டு பஸ்ஸுக்கு காசும் கொடுக்கத் தோன்றுவது போல் இருக்கும் திரிஷாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை //
இதை வன்மையாக கண்ணடிக்கின்றேன்.
போத்தீஸ் விளம்பரத்தை பார்த்த பின்னும் சிம்ரனை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கவில்லையா என்ன?
enna neenga pattukku amaicharavai matrangalai senjuttu holiday la poyitteengala? why there is no post lately? - umakrishna
த்ரிஷாவுக்கு 'ஏழைகளின் பாவனா' என்ற பட்டத்தை அளிக்க சிபாரிசு செய்கிறேன்.
அப்படியே கமலா காமேஷ் இள வயதாக காமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதில் த்ரிஷாதான் நடிக்க வேண்டும் என்றும் அடம்பிடிக்கிறேன்.
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
naanum oru maasama vanthu vanthu eti paakaraen oru posta kooda kaanom.evalavu naalaiku than palasa thirumba thirumba padikarathu?...seekiram yethavathu eluthunga...Eastham la thana irukinga? apparam post keatu veedu thedi vara vediyathu aayidum...aama..sollitaen..
அடி பின்னிட்டீஙகப்பு! முத தடவையா இந்த ப்ளாக மேய்ச்சல் விட்டதிலே சிரிச்சு சிரிச்சு.. அதை ஏன் கேக்கறீங்க:) வீட்ல தங்கமணி சந்தேகமா பாக்க ஆரம்பிசிட்டாங்க.
... பார்த்தால் இரண்டு வேளை வயிறார சாப்பாடு போட்டு பஸ்ஸுக்கு காசும் கொடுக்கத் தோன்றுவது போல் இருக்கும் திரிஷாவுக்கு ...
நெசத்த சொல்லுங்க... நீங்க குஷ்புவுக்குக் கோவில் கட்டுன பரம்பரையைச் சேர்ந்தவர்தானே? :)
யோவ் உம்ம நல்லெண்ணம் புரியுதுய்யா
போடலாம்...ஆனா போட முடியாது புரிஞ்சிக்கோங்கய்யா :)
நீங்க அந்தாண்ட இருந்து அறிக்கைவிட்டுட்டு போய்டுவீங்க...இந்தாண்ட நாங்கல்ல வாங்கணும் :)
ஸ்ரிராம் - ஜோக்கு டாக்டர் பட்டம் வேணா சபை சிபாரிசு செய்யும்....அமைச்சர் பதவி கஷ்டம் :P
டுபுக்குடிசைப்பிள் - அஹா அடியேன் பாக்கியம் படத்தைப் போடுங்க
கீதா- வாங்க ஏதோ கோவம்ன்னு தெரியுது என்னான்னு சொன்னா கேட்டுப்போம் :)) அதவுட்டுடு வயசான காலத்துல எதுக்கு இப்படி உணர்ச்சிவப்பட்டுக்கிட்டு
அம்பி - அடப்பாவி...அற்புதத்தீவுக்கும் வந்துட்டியா... :))
கப்பி பய - இருக்கு இருக்கு பத்திரமா இருக்கு ஹி ஹி
லஷ்மி - நன்றி ஹை :)
வெட்டிப்பயல் - யோவ்...போட்டோ போடறதா..கல்யாணமாகத புள்ளைங்கிறது சரியாத்தேன் இருக்கு...:)
அது நம்ம ஏரியான்னு சொல்லுங்க இனிமே
ப்ளோகேஸ்வரி - பரவாயில்லைன்னு சபை தெளிவா இருக்கு :)
ஜீவன் - அடடா....திரிஷா ரசிகர் மன்றமா நீங்க...ஐய்யோ பாவமே... :P
ராமசந்திரன் - யோவ் தலை தலைன்னு நல்ல மானாவாரியா திட்டிட்டீங்களேய்யா :)) நல்ல டெக்னிக் தான்....ராம்கோ சிக்ஃபாவா....தெய்வமே...யாரு நீங்க....வேஷத்தை கலைக்க என்ன இருக்கு நான் தான் பெயர் ஜாதமே குடுத்திருக்கேனே இங்க அப்புறமென்ன...
வித்யா - லஞ்ச் டைம் அரட்டை நானும் மறக்கவே முடியாது அதுவும் அந்த ஒன் டு திரி..சே அருமையான நாட்கள அவை :)))
நிவி - ஆமாங்க...அவங்களும் இதே தான் சொல்றாங்க..
அபிஅப்பா - உங்கள வெச்சு தான் எங்க ரசனையெல்லாம் தப்பிக்குது :)))))))
கைப்புள்ள - அண்ணே வாங்க...முதல்ல கொஞ்சம் கலவரமாத்தேன் இருக்கும்...கவலப்படாதீக...அப்பிடியே மெயின்டெயின் பண்ணுங்க...அப்புறம் லெமன் ரைஸ் வந்திரும் :))
முனிம்மா - அரசியல்ல இதெல்லாம் ஜகஜமங்க...
நித்யா - வாங்கமேடம். மீராவின் இடத்தில் இல்லீங்க ப்ரோபேஷன் அடிப்படையில் தான் மீரா கபூருக்கு அமைச்சர் பதவி. உங்க பாராட்டுக்கு நன்றி...எங்கெங்க ஆபீஸ் வேலைக்கு நடுவில ...இவ்வளவு நாளாகிடிச்சு
பஸ்பாஸ்- அண்ணே நீங்க இவ்வளவு சீனியரா...குஷ்புவா...என்னங்க அவங்களை மரியாதையில்லாம பெயரச் சொல்றீங்க...மேடம், பெரியம்மான்னு மரியாதையா சொல்லுங்கப்பூ :P
அனானி - வாங்க சாப்பாடு ஆச்சா?..திருப்தியா...??:)
kalias s dasan - அண்ணே வாங்க...என்ன சொல்றீங்கன்னு புரியலையே அப்பூ யாருக்கு சீட் வேணும். இன்பி ட்ரெயினிங்க் நல்ல பண்ணுங்கப்பு வாழ்த்துக்கள் :)
பாலாஜி - வாங்க...இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி :))
சிம்- சாப் - அதான் தெளிவா பதிவுலயே சொல்லிருக்கோம்ல... :))
அருண் - அட மன்னிசிருங்க வேலை ஜாஸ்தியாயிருச்சி...இருந்தாலும் ஓவரா புகழறீங்க :))
கண்ணபிரான் - ஜெனிலியாவுக்கு கூடிய சீக்கிரம் இலாகா ஒதுக்க சபை முடிவு செய்துள்ளது. விளைவுகள் இடைத்தேர்தல் இருந்தா பரவாயில்லை...இங்க வீட்டுல இருந்தா யாரு வாங்குறது :))
ஸ்யாம் - நயன் தாராவா....யாருங்க அது...??
கோபினாத் - நீங்க ஜென்ம சாபல்யம் அடைஞ்சிருப்பீங்க நாங்க?? :)
ஸ்ரிதர் வெங்கட் - வாங்க வாங்க...நம்ம கட்சியா நீங்க...அட சிம்ரனா...அட போங்க சார்
உமா - ஆமாங்க ரொம்ப வேலையாகிருச்சு....அதான்... :))
தருதலை - வாங்க வாங்க...நம்ம கட்சிக்கு இப்போ தான் ஒரு ஆள் சேர்ந்திருக்கு
தி கே - வாங்க மேடம். ஐய்யையோ மன்னிச்சிருங்க...இதோ போட்டாச்சு...நீங்களும் லண்டனா...ஈஸ்ட் ஹாம் வந்தா ஒரு சவுண்டு குடுங்க...
அனானி - வாங்க வாங்க குஷ்புக்கு கோவிலெல்லாம் நாங்க இல்லீங்கோவ்....நான் ரொம்ப சின்னப் புள்ளைங்க
Post a Comment