நண்பர் பஸ்பாஸ் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர். என் மேல் இன்னமும் நம்பிக்கையும் நல்லெண்ணம் கொண்டிருப்பவர். சமீபத்தில் நம்ம நடிப்பில் வெளிவந்து ஓகோன்னு ஓடின படத்தைப் பார்த்து இம்ப்ரெஸாகி அவரது "ஓகோ புரெடெக்க்ஷன்ஸில்" மூன்று படங்களுக்கு நம்மை புக் செஞ்சு பூஜை போட்டு ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் அனுப்பியிருந்தார். என்னடா நம்மை வைச்சு காமெடி பண்ணியிருக்கிறாரே நமக்கு தான் விளம்பரமே பிடிக்காதே (அப்பிடியான்னு கேக்காதீங்க...எனக்கே இன்னும் இந்த விஷயம் தெரியாது) ஒரே யோசனையா இருந்தது. இருந்தாலும் நம்ம பஸ்பாஸின் முயற்சி வீணாகக்கூடாதே என்று இங்கே போட்டுவிட்டேன். என்ன "தாய்லாந்தில் தைப்பூசத்துல" மட்டும் யானை, பாம்பு, ஆடுன்னு எல்லாத்தையோடும் நடிக்கவேண்டியிருக்கும். ஹீரோயினா மீரா ஜாஸ்மின மட்டும் போட்டுட்டா எந்தக் கழுதையோட வேணும்னாலும் நடிக்க ரெடி :)) எதாவது நல்ல ஸ்கிரிப்டு வெச்சிருக்கீங்களா?
இனி Over to BussPass. ஒரிரண்டு இடைச்செருகலைத் தவிர அனைத்தும் பஸ்பாஸின் ஓகோ புரெடெக்க்ஷன்ஸ் சரக்கு.
சுடுவேன்...டா..
ஹீரோ அறிமுகம்:
நீங்க ஒரு பிரபலமான MNC-ல ரொம்ப ரொம்ப நேர்மையான செக்யூரிட்டி ஆபிஸர்... ஓகே.. வாட்ச்மேன். பகல் நேரத்துல ராம்போ கெட்டப்புலயும் பொழுது சாய்ஞ்சா ஒரு கிழிஞ்ச சால்வைய போர்த்திகிட்டு கைல லாந்தர் விளக்கோட காம்பவுண்ட சுத்தி வருவீங்க. என்னதான் வாட்ச்மேன்னாலும் உங்களுக்கு கீழ வேல பாக்குற இன்டெர்ன் வாட்ச்மேன் முதற்கொண்டு சி.ஈ.ஓவோட ஒன்னு விட்ட தங்கச்சி வரைக்கும் எல்லார்க்கும் நீங்கதான் செல்ல பிள்ளை.
வில்லன் அறிமுகம்:
இப்படியாபட்ட உங்களுக்கும் புட்டு மாதிரி தெளிவா இருக்கிற உங்க கேரியருக்கும் இடியாப்ப சிக்கல் மாதிரி வர்றாரு R.சம்பத்குமார். வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடியே R.சம்பத்குமார் ஐடி கார்டு வச்சிருக்கிறத பார்த்து நீங்க பொங்கிடுறீங்க. அவர தடுத்தும் நிறுத்திடுறீங்க. அவரு உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போதே நீங்க சட சடன்னு மாடிக்கு ஓடி போயி.. அங்கிருந்து R.சம்பத்குமார் மேல பாய்ஞ்சி அவர பிரிச்சி மேய்ஞ்சிடுறீங்க.
R.சம்பத்குமாரோட சித்தப்பா V.சம்பத்த்குமார் தான் உங்களுக்கு மிகப்பெரிய எதிரின்னு உங்களுக்கு அப்போ தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல.. ஏன்னா நீங்க தர்ம அடி அடிக்கும் போது நிதானத்த இழக்குற dysfunctional hit-hit syndrome அப்படிங்கிற நோயோட கிரிட்டிக்கல் ஸ்டேஜில இருக்குறீங்க.
ஹி..ஹி..ஹீரோயின் அறிமுகம்.
இப்படி நீங்க வில்லன் மேல தவ்வுறதுக்காக மாடிப்படி ஏறுனீங்க இல்ல... நீங்க டைவ் பண்ணி குதிக்குறதுக்காக ஒரு ஸ்பிரிங் போர்ட் தேவை பட்டது, சுத்திமுத்தி பார்த்துட்டு அந்த வழியா போயிட்டு இருந்த ஹீரோயினோட ஹை ஹீல்ஸ சப்ஸ்டிட்யூட் பண்ணிடுறீங்க. VP of Strategy and Planning'ஆன ஹீரோயின் செருப்பு போடாத காலோட Board meeting அட்டெண்டு பண்ணத Directors பாக்குறாங்க.. காப்பி பிஸ்கட் எடுத்துட்டு வர்ற அஸிஸ்டண்ட் பாக்குறாரு, Live conference'ல Onsite team பாக்குது,ஹீரோயினோட கார் டிரைவர் வாய் விட்டு அழறாரு...
ப்ளாஷ் பேக்
ஒரு நாள் நீங்க மசால் வடைய மானாவாரியா சாப்பிட்டுட்டு பல் குத்திட்டு இருக்குப் போது உங்க நினைவலைகள் பின்னோக்கி பாயுது... நீங்க ஹார்வார்ட் யுனிவர்சிடி'ல PhD Gold medallist. Thesis defense போது Professor கேட்ட கேள்விக்கு நீங்க சம்பந்தம் இல்லாம watchman ஆக போறதையும் ambassador of the economically deprieved, the cornerstone of the society ஆக போறதையும் சொல்லி இருக்குறவங்கள மிரள வச்சத பெருமையோட அசைபோடுறீங்க...
திருப்பம்
ஒரு தடவ, நீங்க V. சம்பத்த்குமார் பார்கிங்க் பெர்மிட் இல்லாம கார் பார்க் பண்ணதுக்காக அவர் சட்டைய பிடிச்சுடுறீங்க. ஆனா அவர் நீங்க கையெழுத்து போட்டு குடுத்த பார்கிங்க் Decal'அ காட்டுறார். வில்லன் பழி வாங்குறதுக்காக ஏமாத்துறாருன்னு தெரிஞ்சும் ஹீரோயின் உங்கள சஸ்பெண்ட் பண்ணிடுறாங்க. இப்பவும் ஹீரோயினோட கார் டிரைவர் வாய் விட்டு அழறாரு...
க்ளைமாக்ஸ்
இவ்ளோ நடந்த பிறகு உங்களுக்கு நரம்பு முறுக்கேறி Scuba diving suit, முதுகுல ஆக்ஸிஜன் டாங்க் மாட்டிக்கிட்டு கைல gloves போட்டுகிட்டு டூப்ளிகேட் சாவி வைச்சி வில்லன் கார்'ல நுழைஞ்சி அவர் கிட்ட இருந்தே பார்கிங்க் பெர்மிட திருடிடுறீங்க. அப்புறம் வில்லன துரத்துறீங்க.
அப்புறம் போலீஸ் வந்துடுது. வில்லன் சிரிச்சிகிட்டே இன்ஸ்பெக்டர் கிட்ட போயி "எங்கிட்ட பெர்மிட் இருக்குது" அப்படிங்குறார். இன்ஸ்பெக்டரும் "Show me..." அப்படிங்குறார். கார தொறந்து பார்த்தா (டான்..டான்) பெர்மிட்ட காணோம். அப்போ ஹீரோ ஆக்ரோஷத்தோட இடது கைல பெர்மிட்ட தூக்கி காமிச்சி. வில்லன பார்த்து வலது கைய நீட்டி சொல்லுறாரு.... "சுடுவேன் டா!"
லொட்டு லொசுக்கு
ஹீரோயினோட on site போறது.. கிராமத்துல இருக்கிற அத்தை பொண்ணுக்கு gmail ID க்ரியேட் பண்ணுறது, நைட் டுட்டி போது குத்து பாட்டுக்கு ஆடுறது.. அப்படீன்னு பல ஐட்டத்த சேர்த்து விட்ருவோம்.
ஹீரொ ராதிரியெல்லாம் கண்ணு முழிச்சு சேட்ல பொண்ணுங்கள கடலை போட பிடிக்க கம்ப்யூட்டர்ல ரொம்ப ட்ரை பண்றது...அதுனாலா காலைல அவரு கண்ணு பொங்கி அவங்க அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் இவரு எண்ணமோ சின்னக் குழந்தை மாதிரி எண்ணை தேய்ச்சு குளிப்பாட்ட எண்ணைய தூக்கிட்டு அவரு பின்னாடி ஓடறது. பின்னாடி அப்பிடியே ஒரு செண்டி சாங்க்.
ஒருதரம் ஹீரோயின் ஏய் வாட்ச்மேன்னு கூப்பிட ஹீரோ பொங்கியெழுந்திடறாரு. "தமிழ் நாட்டுல இருக்கிற அப்பார்ட்மெண்ட்ஸோட எண்ணிக்கை மொத்தம் என்பது லட்சத்தி நாப்பதாயிரத்தி நானூத்தி மூனு இதுல வாட்ச்மேன் இருக்கிற அப்பர்ட்மெண்ட் அறுபத்தியிரண்டு லட்சத்தி ஏழாயிரத்தி ஒன்பது, இதுல வேலைக்கு இருக்கிற வாட்ச்மேன்கள் அம்பது லட்சத்தி ஒன்பதாயிரத்தி பத்து, இதுல யூனிஃபார்ம்ல இருக்கிறவங்க நாலு லட்சத்தி அம்பதாயிரத்தி நூத்தி பதினேழு. இவங்களுக்கு வெய்யிலுண்டா மழையுண்டா, வேலை செய்யும் போது படுத்து தூங்கிறதுக்கு பெட் உண்டா, சேட் செய்யறதுக்கு ப்ராட்பேண்ட் கனெக்க்ஷன் உண்டா, அரட்டை அடிக்கிறதுக்கு செல் போன் உண்டா...வெறும்ன ஒட்டடை அடிக்கிற ஒரு குச்சியக் கைல குடுத்து சுத்திவரச் சொல்லுகிற இவங்கள பத்தி யாராவது கவலப்பட்டிருக்கீங்களா?
நாங்க இந்தக் குச்சியப் பிடிச்சா தான் நீங்க தூங்கி எந்திரிச்சு காலைல பல் தேய்க்கிற குச்சிய பிடிக்க முடியும்,(பி.ஜி.யெம்)
நாங்க ரோந்துக்கு கருப்புப் போர்வைய போத்தினா தான் நீங்க தூங்கிறதுக்கு இழுத்திப் போர்த்திப் படுக்க முடியும்.(பி.ஜி.யெம்)
இனிமே வாட்ச்மேன வாட்ச்மேன்னு யாரும் கூப்பிடாதீங்க...வாட்ச்சார்ன்னு தான் கூப்பிடனும்...இல்லைன்னா நான்...." என்று ஸ்கிரீனைப் பார்க்கிறார்...பேக்கிரவுண்டில் டுமீல்ன்னு சுடுகிற சத்தம். அப்பிடியே தியேட்டர்ல க்ளாப்ஸ்.பிச்சிக்கிது.
Friday, April 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
ha ha ha...... summa solla koodaathu!! ROTFL karpanai!! Dubukku- The Think Tank-nnu neenga peru vechirukkeenga..... aana nanbar'buspass' thaan room pottu think panniruppaaru pola irukku!!
Hi Dubukku, Thank you so much for your Wishes!!
Will check the post later. I wish u too a Happy New Year, have a nice time with you family. convey my wishes to ur Thangamani and kids:)
Oho Productions Buspass-kku oru periya "O" potachchu :)
Dubukku saar, Bayangara 'impressive' Intro scene pola ungalukku, indha padathula?
Hilarious post :)
அல்டிமேட் காமெடி தலைவா :))))
hi dubukku tamil pada thakama .namab madras bashaila superupa
ulagamsutrumvalibi
Sooper. Ippavey ticket reserve senju vechukkareyn. Illa direct to DVD-aa?
Cheers
SLN
Porulaalar (he he) - Akila ulaga Captain Dubukku Rasigar Manram
London
PS: Blood donate pannu-nunellaam solli paduthaatheenga thala.
ஹாய் டுபுக்கு,
உங்களூக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அப்பரமா...உங்கள் The Think Tank-க்கு அர்த்தம் இது தானா?
நல்ல வளமான கற்பனை....
அல்டிமேட் காமடி...
indha kadaiyai yarum thirudi vikkamal irukka erpadu panniteengala illanalum enna courtla case pottu takknu kodeeswaran aidalam ..yarum ungala thavira herova nadikka koodathunu thadai vangidunga
ha haa...first time to ur blog...
lol..
caption " thanni daanki...thanni daanki" vivek dialogue than niyabagam vanthathu unga "think tank" parthathum
ROTFL :) :) :) சூப்பரோ சூப்பர்.. ஆனா ஒரே ஒரு குறை தான்.. உங்களுக்கு ஒரே ஒரு கதாநாயகியா?? ஒரு ரெண்டு மூனு கேளுங்க தல.. :) :)
Hey Dubuks,
Not a aha / oho post, really a so so post, I would be lying if i say that I have enjoyed reading this one. Probably because your sattire is missing which we are so used to in every post of yours.
Anyways, My sincere wishes to you to become a hero soon in a documentary or in a Ra.Ma. Naryanan movie.
Anbudan .... Sriram
hai!!!!
enna idhu.. yaro ezhuthinada ellam eduthu potu irukeenga?? ungaloda touch romba missing.. whenever i am little depressed i used read ur post to get energised.. seri yaru heroine.. heroinoda oru still ellam poda vendama?? sandai podra mathri stillum illa waht is this?? athai ponnu namithava??
Dubuks ,
Adhu enna watchman kanaku othaikudhey, ennanga idhu motham 80lacs and odd , idhula with watchman apts and with uniform watchman add panna engaiyoh pogudhueh, scriptla chinna thappu pola, anyway, it was good posting...
Indha namitha or sangavi podalaam not for herione, just side dance...
ROTFL post. pics are tooo good.
*ahem, அப்டியே மன்னிக்கு எதுனாச்சும் துக்கடா ரோல் உண்டா? கூட்டி பெருக்கற ஆயா, டீ கிளாஸ் தூக்கும் பெண்? இல்ல, உங்க ரேஞ்சுக்கே வாட்ச்மேன் ரோல் தான், அதான் கேட்டேன். :)
எதுக்கும் காப்பிரைட் வாங்கிவசுடுங்க... கேப்டன் இப்படி ஒரு கதையத்தான் ரொம்பநாளா தேடிட்டு இருந்தேன்னு சுட்டுடப் போறாரு!
is-story supera keethu naina! pinisu panneena, ipdika oru thiruttu vcd anpidu enna? ah aan!
ipdika oru kaththa keethu, paeru rangudu aandey raangu kaattade ! summa gilli kanakka toppu takkara engiyo poiduve naina!
நான் ஒரு கத வெச்சுருக்கேன் தல...படத்தோட பேர் தமிழ்ல 'திருவல்லாறு சதுக்கம்'. அதையே இங்லீஷ்ல ' ட்ரஃபால்கர் ஸ்கொயர்'னு எடுக்கிறோம். இந்தில 'ட்ரஃபால்கர் மே ஏக் கிலாடி'ன்னு எடுக்கிறோம். அதையே தெலுங்குல 'மீரே ட்ர்ஃபார்கலு' வாகவும், மலையாளத்தில் 'ட்ர்ஃபார்கலில் ஈ ஆண்குட்டி'யாகவும் டப் பன்னிடுவோம்.படத்தோட பேக் ட்ராப்பே ட்ராஃபால்கர் ஸ்கொயர் தான்.என்ன சொல்ரீங்க....மெயின் லேண்ட் யூரோப் ரைட்ஸ் உங்களுக்கு கொடுத்துடரேன்.
ROTFL...தல அமெரிக்கா திருட்டு விசிடி ரைட்ஸ் எனக்கு குடுத்துடுங்க :-)
Syam, West Coast neenga eduthukonga and naan east coast rights (thirutu VCD right thaan) eduthikkiren.
Hi dubukku,
Something is missing in this post... It was great fun... But, not in your form... Just my view..
Regards,
lkshmi
Nalla kadhai..eppo padatha aarambika poreenga..all the best for ur new career :))
photos soooper :p
Wow! Good script dubukku! Watchman udaiya savaiya puttu puttu vaikeringa! Punch dialogue Super:)
Kuttichuvaru - ஆமா ...நான் சும்மா பேரு மட்டும் தான் வைச்சிருக்கேன்...அவரு கலக்குவாரு :)
Jeevan - டேங்க்ஸ் ஜீவன்...அதானே வந்து படிக்கிறேன்னு சொல்லிட்டு வராமலே போயிட்டீங்களேன்னு பார்த்தேன்.
Kumari - ஆமாங்க...கருப்புபோர்வையும் லாந்தர் விளக்குமா பிச்சிக்கப் போவுது பாருங்களேன் :)
இராம் - நன்றி தல
ulagamsutrumvalibi- ஆமாங்க நம்மள வைச்சு படம் எடுக்கறதுக்குன்னே யோசிச்சதுன்னார். பஸ்பாஸ்.
SLN - நன்றி தல. ஆஹா ஆகிற கலெக்க்ஷன்ல நம்பளையும் கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்.
Sumathi - ஹீ ஹீ பஸ்பாஸ் தாங்க இந்த போஸ்டுக்கு திங்கிக் வாழ்த்த அவருக்கு சொல்லிடறேன் :)
Paavai - இது கூட நல்ல ஐடியாவே இருக்கே...ஆனாலும் இந்தக் கதையில என்னைத் தவிர வேற யாரவது நடிப்பாங்களா என்ன? :P
Anonymous - வாங்க சார்/மேடம்....அடிக்கடி வந்து போங்க..
Ace - இது நியாமான பேச்சு...அண்ணன் ACE தலைமையில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் போராட்டம் அனௌன்ஸ் பண்ணிடுவோம்
Sriram - வாழ்த்துக்களுக்கு நன்றி தல. பஸ்பாஸின் இந்த நக்கல் எனக்கு பிடிச்சது அதான் போட்டேன் :)
dubukudisciple - ஏங்க உங்களுக்கு இந்த கொலவெறி...எனக்கு அத்த பொண்ணு நமீதாவா...தாங்குமா சாமீ....நமக்கெல்லாம் ஏதோ நம்ம லெவலுக்கு மீரா ஜாஸ்மின் தான்..:P
Aani Pidunganum - நான் சயன்ஸுல கொஞ்சம் வீக்குங்க...(அதுக்கு தான் அந்த வியாதி பேரு சொல்லிருக்கோம்ல)
அனேகமா நீங்க கேப்டன் ரசிகராத்தேன் இருக்கனும். கணக்க இவ்வளவு கனகச்சித்தமா பிடிக்கிறீங்க..ஏதோ சின்னப் பையன் மன்னிச்சி விட்ருங்க :)) இருந்தாலும் மொக்கை போஸ்டுன்னு விடாம கூட்டி கழிச்சு கண்டுபிடிச்ச உங்க கடமையுணர்ச்சியை மெச்சினோம்...
Ambi - உனக்கு நாக்குச் சனின்னு நினைக்கிறேன்...வாங்கு வாங்கு அப்புறம் நாங்க எப்போ நீ அடிவாங்குறத பார்க்கிறது :))
Anonymous - ஹீ ஹீ...நன்றிங்க...கேப்டன் எங்க நான் எங்க...
Munimmaa - நன்றி தாயே நன்றி. ஆஹா பட ரிலீஸ் முன்னாடியே இன்னொரு படமா...வெங்கி..ஏகப்பட்ட பணம் கொட்டுதேய்யா...
dagulmama - ஆமா இதுல நமக்கு ஏமி ரோலு ஹை? அத்த சொல்லவே இல்லீயே...ஹீரோகாருவா? அப்பிடீன்னா ரைட்ஸ் எனக்கே எனக்கா...ஆஹா...வரேவா...சால சந்தோஷமுலு
Syam - உங்கூர்ல தான் பயங்கர போட்டி...அதனால அந்த ரைட்ஸ் ஏலம் விடப்படும் :))
Sriram - நீங்களுமா :)
Lakshmi - வாங்க வாங்க...
நம்ம பஸ்பாஸ் நக்கலு பிடிச்சிருந்தது..அதான் ...:)
MS.C - நன்றி ஹை.எது அந்த ஆடு கூட நிக்கிறதா...கரீக்ட்டா சொல்லுங்க :))
Jeevan - நன்றி ஹை ஜீவன்.
Post a Comment